Jump to content

சர்வதேசத்திற்கு காணொளி விற்பனை செய்யும் நோக்கில் வித்தியா வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு கொலை// வித்தியா படுகொலை வழக்கின் செய்திகள்


Recommended Posts

வித்தியா படுகொலை வழக்கின் முக்கிய சாட்சிப் பதிவு ; மன்றிலிருந்து ஊடகவியலாளர்கள் வெளியேற்றம்

புங்குடுதீவு வித்தியா படுகொலை வழக்கு இன்றைய தினம் 2 ஆவது நாளாக சாட்சிப் பதிவுகள் யாழ். மேல் நீதிமன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள ட்ரயல் அட்பார் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது வழக்கின் மிக முக்கிய சட்சியான உதயசூரியன் சுரேஸ்கரன் என்பவரது சாட்சிப்பதிவின் போது மன்றிலிருந்து ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் ட்ரயல் அட்பார் நீதிமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

Untitled-1_copy.jpg

இம் முக்கிய 5 ஆவது சாட்சியான உதயசூரியன் சுரேஸ்கரன் என்பவர் இவ் வழக்கின் 12 ஆவது சந்தேக நபராவார்.

இவர் சட்டமா அதிபரின் நிபந்தனையுடனான மன்னிப்பின் அடிப்படையில்  அரசதரப்பு சாட்சியாக மாற்றப்பட்டதுடன் இவரது சாட்சியினை மையமாகக் கொண்டு இவ் வழக்கின் எதிரிகளான குற்றவாளிகளை நிரூபிக்கப்போவதாக வழக்குத்தொடுநர் தரப்பினால் ஏற்கனவே மன்றில் குறிப்பிட்டிருந்தது.

இவ்வாறான நிலையில் குறித்த 5 ஆவது சாட்சியான உதயசூரியன் சுரேஸ்கரனின் சாட்சிப் பதிவுகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கையில், குறித்த சாட்சி தான் இந்த நீதிமன்றில் சாட்சியளிப்பதன் ஊடாக தனது குடும்பத்திற்கு அச்சுறுத்தல், பாதிப்பு ஏற்படுமென பகிரங்கமாக மன்றில் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து மன்றானது சாட்சியின் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அளிக்கப்படுமென தெரிவித்திருந்த போதும் பின்னர் ட்ரயல் அட்பார் நீதிமன்ற 3 நீதிபதிகளின் ஏகமனதான முடிவின்படி அவரது சாட்சிப்பதிவை மேற்கொள்வதற்காக மன்றிலிருந்த ஊடகவியலாளர்களும் பொதுமக்களும் வெளியேற்றப்பட்டனர்.

http://www.virakesari.lk/article/21329

Link to comment
Share on other sites

  • Replies 184
  • Created
  • Last Reply

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் பின்னணி ஒரு தலை காதலா ?

 
 
வித்தியாவை கடத்த 20 ஆயிரம் ரூபாய் பேரம் பேசப்பட்டதாகவும் , அதற்கு பின்னர் நடந்தவைகளை திறந்த மன்றில் கூறினால் தனது குடும்பத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படும் என ஐந்தாவது சாட்சியான அரச சாட்சியான உதய சூரியன் சுரேஷ் கரன்  ரயலட் பார் முன்னிலையில் சாட்சியம் அளித்துள்ளார்.
 
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு விசாரணைகளின் இரண்டாம் நாள் சாட்சி பதிவுகள்,  இன்றைய தினம் வியாழக்கிழமை  யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதியின் இரண்டாம் மாடியில் மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும்  மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில்  ” ரயலட் பார்  முறைமையில் நடைபெற்றது.
 
பிரதி சொலிஸ்டர் ஜெனரல் வழக்கை நெறிப்படுத்தினார். 
 
இன்றைய வழக்கு விசாரணைகளின் போது  பிரதி சொலிஸ்டர் ஜெனரல் குமார் இரட்ணம் தலைமையில் அரச சட்டவாதிகளான நாகரத்தினம் நிஷாந்த், ஷகிப் ஸ்மாயில் , லக்சி டீ சில்வா மற்றும் மாலினி விக்னேஸ்வரன் ஆகியோர் முன்னிலையாகி இருந்தனர்.
 
எதிரிகள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி உட்பட 5 சட்டத்தரணிகள் முன்னிலை. 
 
1ம் ,2ம் , 3ம் , 5ம் மற்றும் 6ம் எதிரிகள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சரங்க பாலசிங்க மற்றும் சட்டத்தரணி  மஹிந்த ஜெயவர்த்தன ஆகியோரும் 5ம் எதிரியின் சார்பில் சட்டத்தரணி  ஆறுமுகம் ரகுபதியும் 4ம், 7ம் , மற்றும் 9ம் எதிரிகள் சார்பில் சட்டத்தரணி சின்னராசா கேதீஸ்வரன் ஆகியோர் முன்னிலையாகி இருந்தனர். அத்துடன் மன்றினால் 9 எதிரிகள் சார்பில் நியமிக்கப்பட்ட சட்டத்தரணி விக்னேஸ்வரன் ஜெயந்தாவும் முன்னிலை ஆகி இருந்தார்.
 
எதிரிகள் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.
 
எதிரிகளான பூபாலசிங்கம் இந்திரகுமார்,  பூபாலசிங்கம் ஜெயக்குமார்,  பூபாலசிங்கம் தவக்குமார் , மகாலிங்கம்  சசிதரன் , தில்லைநாதன் சந்திரகாசன் , சிவதேவன் துஷாந்த் , பழனி ரூபசிங்கம் குகநாதன் , ஜெயதரன் கோகிலன் , மற்றும் மகாலிங்கம் சசிக்குமார் ஆகிய ஒன்பது எதிரிகளும் மன்றில் முற்படுத்தப்பட்டனர்.
 
அதனை தொடர்ந்து இன்றைய தினம் இரண்டாம் நாள் சாட்சி பதிவுகள் ஆரம்பமானது, அதன் போது இந்த வழக்கின் ஐந்தாவது சாட்சியும் சட்டமா அதிபரினால் நிபந்தனைகளுடன் பொது மன்னிப்பு வழங்கப்பட்ட அரச சாட்சியுமான உதயசூரியன் சுரேஷ்கரன் சாட்சியம் அளித்தார்.
 
அவர் தனது சாட்சியத்தில் குறிப்பிடுகையில் ,
 
நான் புங்குடுதீவு 10ஆம் வட்டாரத்தை சேர்ந்தனான். பல வருடங்களாக கொழும்பில் கடை ஒன்றில் வேலை செய்தேன். இந்த வழக்கு தொடர்பில் கொழும்பு 4ஆம் மாடியை சேர்ந்த புலனாய்வு துறையினர் முதலில் என்னை கைது செய்து விசாரணை செய்த பின்னர் விடுவித்தனர். பின்னர் மீண்டும் நான் சில நாட்களில் கைது செய்யப்பட்டேன்.

 

 
இந்த வழக்கு தொடர்பில் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நீதிவானின் சமாதான அறையில் எனது வாக்கு மூலத்தை வழங்கி இருந்தேன்.
 
ஒரு தலை காதல். 
 
கொலை செய்யப்பட்ட வித்தியாவை எனக்கு தெரியும். அவரது குடும்பத்தினரையும் எனக்கு நன்கு தெரியும். வித்தியா எவரையும் காதலித்தாரா என்பது எனக்கு தெரியாது. ஆனால் பெரியம்பி என அழைக்கப்படும் துஷந்த் (6ஆவது எதிரியான சிவதேவன் துஷந்த்) என்பவர் வித்தியாவை காதலிப்பதாக கூறினார்.
 
அதனால் நானும் பெரியம்பியும் வித்தியா பாடசாலை செல்லும் நேரம் பாடசாலையால் வீடு திரும்பும் நேரங்களில் தினமும் வித்தியாவின் பின்னால் பெரியம்பியின் மோட்டார் சைக்கிளில் சென்று வருவோம். அவ்வேளைகளில் வித்தியாவுடன் பெரியம்பி கதைக்க முற்படுவார்.ஆனால் வித்தியா கதைக்க மாட்டார். வித்தியா சில வேளைகளில் அவரின் அண்ணாவுடன் மோட்டார் சைக்கிளில் பாடசாலை சென்று வருவார். அண்ணா இல்லை என்றால் சைக்கிளில் சென்று வருவார்.
 
பெரியம்பியும் நானும் கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் வித்தியாவின் பின்னால் மோட்டார் சைக்கிளில் சென்று வந்தோம். அவ்வேளைகளில் அவருடன் கதைக்க முற்பட்டால் அவர் கதைப்பதில்லை. ஒரு நாள் தன்னுடன் கதைக்க வேண்டாம் எனவும் கூறி இருந்தார்.
 
வித்தியா செருப்பால் எறிந்தார். 
 
கொலை செய்யப்படுவதற்கு ஒன்று ஒன்றரை மாதங்களுக்கு முன்பு  ஒருநாள் வித்தியா பெரியம்பிக்கு செருப்பால் எறிந்து பேசி இருந்தார். அப்போது நான் சொன்னேன் ‘அந்த பிள்ளைக்கு விருப்பம் இல்லை போல அந்த பிள்ளையை விடு ‘ என
 
காலையில் கள்ளு குடிப்போம். 
 
நாங்கள் புங்குடுதீவில் மாப்பிளை ( நடராஜா புவனேஸ்வரன் ) என்பவரிடம் கள்ளு வாங்கி குடிப்போம். அவர் சீவல் தொழில் செய்பவர். அவரின் வீட்டுக்கு நானும் என்னுடன் கொழும்பில் இருந்து வந்திருந்த சந்திரஹாசன் , நிஷாந்தன் , கண்ணா மற்றும் சசி என்போரும் கள்ளு குடிக்க போறனாங்க. காலையில் பத்து மணிக்கு முன்னர் நாம் கள்ளு குடிக்க போயிடுவோம்.
 
போதையில் வித்தியா வீட்டுக்கு சென்றனர். 
 
சம்பவ தினத்திற்கு சில நாட்கள் முன்னர் மாப்பிள்ளை வீட்டில் கள்ளு குடித்த பின்னர் , மதியம் 12 மணி போல பெரியம்பியும் நானும் கடற்கரை வழியாக வித்தியாவின் வீட்டுக்கு சென்று இருந்தோம். நான் வீட்டுக்கு சற்று தொலைவில் நின்று கொண்டேன். பெரியம்பி மாத்திரம் வீட்டுக்கு சென்று பார்த்து விட்டு ஒருவரும் வீட்டில் இல்லை என வந்து கூறினான்.
 
அன்று பின்னேரம் மீண்டும் கள்ளு குடிக்க போனோம். அப்போது எம்முடன் சந்திரஹாசனையும் அவரது வீட்டுக்கு சென்று அழைத்து சென்றோம். நாங்கள் கள்ளு குடித்துக்கொண்டு இருந்த நேரம். அங்கே தவக்குமார் மற்றும் ரவி ஆகியோர் வந்திருந்தனர். அவர்களுடன் சேர்ந்து கள்ளு குடித்தோம்.
 
அந்நேரத்தில் தவக்குமாருக்கும் ரவிக்கும் , பெரியம்பி வித்தியா தனக்கு செருப்பால் எறிந்து போட்டாள் என கூறினான். அதற்கு ரவி ‘ நீ வித்தியாவை காதலிக்கிறியா ? ‘ என கேட்டான். அதற்கு பெரியம்பி ஓம் என்று சொன்னான்.
 
வித்தியாவை தூக்கி தாரேன்.
 
பின்னர் போகும் போது ரவி, பெரியம்பிக்கு சொன்னான் “ஏதேனும் உதவி தேவை என்றால் சொல்லு, வித்தியாவை தூக்கி தாறது என்றால் தூக்கி தாரேன் ” என சொன்னான். அதற்கு ரவி தேவை என்றால் சொல்லுறேன் என சொன்னான்.
 
அதன் பிறகு இரண்டு மூன்று நாள் கழித்து நாங்கள் மாப்பிள்ளை வீட்டில் கள்ளு குடித்துக்கொண்டு இருந்த போது அங்கே வந்த ரவியிடம் வித்தியாவை தூக்கி தர சொல்லி பெரியம்பி கேட்டான். அப்போது அந்த இடத்தில் நானும் பெரியம்பி ரவி சந்திரஹாசன் மற்றும் தவக்குமார் ஆகியோர் இருந்தோம்.
 
வித்தியாவை கடத்த 20 ஆயிரம் பேரம்.
 
வித்தியாவை தூக்கி தாறது என்றால் எனக்கு 20 – 23 ஆயிரம் ரூபாய் பணம் தர வேண்டும் என ரவி பெரியம்பிக்கு கூறினான். அதற்கு பெரியம்பி தான் சம்பளம் எடுத்த உடனே பணத்தை தருகிறேன் என கூறினான்.
 
அதன் படி ரவிக்கு பெரியம்பி பணம் கொடுத்தான். வித்தியாவை தூக்கி தர கூறி என தனது சாட்சியத்தை அளித்தார். அதன் போது எவ்வளவு பணம் ரவிக்கு கொடுக்கப்பட்டது என பிரதி சொலிஸ்டார் ஜெனரல் குமார் இரட்ணம் சாட்சியம் இடம் கேள்வி எழுப்பிய போது ,  இந்த கேள்விகளுக்கு நான் பதில் அளித்தால் எனது அம்மா மற்றும் தங்கைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என  ” ரயலட் பார் ” முன்னிலையில் கூறினார்.
 
சாட்சியத்திற்கு பாதுகாப்பு வழங்க முடியும். 
 
அதன் போது  ” ரயலட் பார் ” நீதிபதிகளில் ஒருவரான மாணிக்கவாசகர் இளஞ்செழியன் , பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சியங்களின் பாதுகாப்பு சட்டங்களின் கீழ் சாட்சியத்திற்கான பாதுகாப்பை வழங்க முடியும். எனவே சாட்சியத்தை தொடர்ந்து தெரிவிக்கமாறு கூறினார்
 
அதன் போது ரயலட் பாரின் தலைமை நீதிபதியான பாலேந்திரன் சசிமகேந்திரன் சாட்சியத்திடம் ” நீராக விரும்பி தான் சாட்சியம் அளிக்க வந்துளீரா . சட்டமா அதிபரின் நிபந்தனைகளுடன் கூடிய பொது மன்னிப்பின் அடிப்படையில் சாட்சியம் அளிக்க வந்துள்ளீரா என வினாவினார்
 
அத்துடன் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் வாக்கு மூலத்தை பதிவு செய்த பின்னர் ,உமக்கோ , குடும்பத்திற்கோ அச்சுறுத்தல் ஏற்பட்டதா ?எனவும் வினாவினார்.
 
அதற்கு சாட்சி ‘ ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நீதிவானின் சமாதான அறையில் வாக்கு மூலம் அளித்தேன். அதனால் நான் வாக்கு மூலம் அளித்தது எவருக்கும் தெரியாது என கூறினார்.
 
ரகசிய சாட்சி பதிவு. 
 
அதனை அடுத்து ” ரயலட் பார் ” நீதிபதிகள் மூவரும் ஏக மனதாக முடிவெடுத்து ஊடகவியலாளர்கள் மற்றும் பொது மக்களை வெளியேற்றி இரகசியமாக  குறித்த சாட்சியத்தின் சாட்சி பதிவுகளை மேற்கொண்டனர்.

http://globaltamilnews.net/archives/31345

Link to comment
Share on other sites

 

வித்தியா கொலை வழக்கு: பார்வையாளர்கள் நீதிமன்றிலிருந்து வெளியேற்றப்பட்டு சாட்சியம் பதிவு

Link to comment
Share on other sites

எதிரிகளை அடையாளம் காட்டினார் – புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் கண்கண்ட சாட்சியம்.

 

judgement.png

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மாணவி  “ஐயோ விடுங்கடா , விடுங்கடா ” என குழறி அழ அவரின் வாயை பொத்தி அவரை பற்றைக்குள் இழுத்து சென்றனர் என மாணவி கொலை வழக்கின் 03ஆவது சாட்சியமான கண்கண்ட சாட்சியமான நடராஜா புவனேஸ்வரன் சாட்சியம் அளித்து உள்ளார்.

 
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு விசாரணைகளின் இரண்டாம் நாள் சாட்சி பதிவுகள்,  இன்றைய தினம் வியாழக்கிழமை  யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதியின் இரண்டாம் மாடியில் மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும்  மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில்  ” ரயலட் பார்  முறைமையில் நடைபெற்றது.
 
அதன் போது வழக்கின் மூன்றாவது சாட்சியமான மாப்பிள்ளை என்று அழைக்கப்படும் நடராஜா புவனேஸ்வரன் மாலை 4 மணியளவில் தனது சாட்சியத்தை அளித்தார்.
 
நான் சீவல் தொழில் செய்கிறவன். பெரியாம்பியும் சுரேஷ்கரன் ஆகிய இருவரும் வழமையாக என் வீட்டுக்கு வந்து கள்ளு வாங்கி குடிக்கிறவர்கள். ஒருநாள் தான் வித்தியாவை காதலிப்பதாகவும் , அவரையே திருமணம் செய்ய போவதாகவும் பெரியாம்பி என்னிடம் கூறினார்.
 
சம்பவ தினத்திற்கு முதல் நாள் 12ஆம் திகதி  என்னை வித்தியா பாடசாலை செல்லும் வழிக்கு பெரியாம்பியும், சந்திரஹாசனும் அழைத்து சென்றனர். அன்றைய தினம் வித்தியா வேறு ஒரு மாணவியுடன் வந்ததால் ஒன்றும் கதைக்கவில்லை.
 
பற்றைக்குள் மறைந்து இருந்தோம்.
 
மறுநாள் 13ஆம் திகதி (சம்பவ தினத்தன்று) மீண்டும் வித்தியா பாடசாலை செல்லும் வழியில் ஆலடி சந்திக்கு அருகில் வித்தியாவுக்காக காத்திருந்தோம். வித்தியா வரும் வேளை என்னையும் சுரேஷ்கரனையும் அருகில் இருந்த பற்றைக்குள் ஒளிந்து இருக்குமாறு பெரியாம்பியும் சந்திரஹாசனும் கூறினார்கள். நாமும் பற்றைக்குள் மறைந்து இருந்தோம்.
 
அவ்வேளை அந்த இடத்திற்கு ரவியும் , தவக்குமாரும் வந்திருந்தார்கள். அந்நேரம் வித்தியா பாடசாலை சீருடையுடன் காலில் சப்பாத்துடன் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார். அவருடைய சைக்கிள் முன் கூடைக்குள் குடை ஒன்றும் இருந்தது.
 
சைக்கிளில் வந்த வித்தியா அவர்கள் அருகில் வந்ததும் சந்திரஹாசனும் , பெரியாம்பியும் மறித்தனர். பின்னர் சந்திரஹாசன் பெரியாம்பி ரவி , மற்றும் தவக்குமார் ஆகிய நால்வரும் வித்தியாவை பிடித்து இழுத்து சென்றனர். அப்போது வித்தியா கத்தினார். உடனே பெரியாம்பி வாயை பொத்தினார்.  வித்தியாவின் மூக்கு கண்ணாடியையும் பெரியாம்பியே கழட்டி எடுத்தான். பின்னர் நால்வருமாக வித்தியாவை பற்றைகள் ஊடாக பாழடைந்த வீட்டுக்குள் இழுத்து சென்றனர்.
 
குழறி அழுதார். 
 
அப்போது பெரியாம்பி வித்தியாவிடம் ‘ நான் உன்னை காதலிக்கிறேன். உனக்கு விருப்பமில்லையா ” என கேட்டான். அப்போது வித்தியா “ஐயோ விடுங்கடா , விடுங்கடா ” குழறி அழுது கொண்டு இருந்தார். மீண்டும் பெரியாம்பி வித்தியாவின் வாயை பொத்தினான்.
 
வித்தியாவின் ஆடைகளை கலைந்தனர். அப்போது நான் “பாடசாலை பிள்ளையடா விடுங்கடா விடுங்கடா ” என கத்தினேன். அப்போது பெரியாம்பி கத்தியை காட்டி மிரட்டினான்.
 
நால்வர் வன்புணர்ந்தனர். 
 
பின்னர் வித்தியாவை வன்புணர்ந்தனர். முதலில் பெரியாம்பியும் (துசாந்த்) பிறகு சந்திரஹாசனும் , தொடர்ந்து செந்தில் (தவக்குமார் ) பிறகு ரவியும் (ஜெயக்குமார்) என மாறி மாறி வன்புணர்ந்தனர். அதனை பெரியாம்பியும் சந்திரஹாசனும் மாறி மாறி வீடியோ எடுத்தனர். அவர்கள் பெரிய டச் மொடல் போனில தான் வீடியோ எடுத்தனர். அந்த வீடியோவை சுவிஸ்குமாருக்கு கொடுக்க வேண்டும். அவர் இதனை வெளிநாட்டுக்கு கொண்டு போக போகிறார் என பேசிக்கொண்டார்கள்.
 
பின்னர் வித்தியா மயங்கிய நிலையில் அவரை வன்புணர்வுக்கு உட்படுத்திய (பாழடைந்த வீடு) இடத்தில் இருந்து கைத்தாங்கலாக நால்வரும் தூக்கி வந்து சுமார் 50 மீற்றர் தூரத்தில் உள்ள அலரி மரம் ஒன்றில் வித்தியாவை கட்டினார்கள். அவரின் ஆடைகளை அவரின் உடலின் மீது போட்டார்கள். பின்னர் பாடசாலை சீருடையின் இடுப்பு பட்டியினால் கைகள் இரண்டையும் ஒன்றாக கழுத்துக்கு பின்னால் வைத்து கட்டினார்கள். பாடசாலை பையின் நாடாவால் ஒரு காலை இழுத்து மரத்துடன் கட்டினார்கள். சப்பாத்து நூல்களினாலும் கட்டினார்கள்.
 
இவ்வளவு சம்பவமும் ஒன்று , ஒன்றேகால் மணித்தியாலங்கள் நடைபெற்றது. அதன் பின்னர் நான் 8.30 மணியளவில் சீவல் தொழிலுக்காக சென்று விட்டேன். 09.15 மணியளவில் பெரியாம்பியும் , சந்திரஹாசனும் சுரேஷ்கரனும் என் வீட்டுக்கு வந்து கள்ளு வாங்கி குடித்தார்கள். பிறகு பின்னேரமும் கள்ளு வாங்க வீட்டுக்கு  வந்தார்கள் அன்றைய தினம் மழை பெய்தமையால் நான் தொழிலுக்கு போகவில்லை. அதனால் கள்ளு இல்லை என கூறி அவர்களை அனுப்பி விட்டேன்.
 
சுவிஸ் குமாரை எனக்கு அறிமுகப்படுத்தியது பெரியாம்பி தான். அவர் வெளிநாடு கொண்டு செல்வதற்காக தான் இந்த வீடியோவை எடுத்ததாக பெரியாம்பி எனக்கு கூறினான்.
 
ஊர்காவற்துறை போலீசில் செல்வாக்கு உள்ளவர்கள். 
 
இந்த சம்பவங்கள் தொடர்பாக நான் பொலிசாரிடம் சொல்லவில்லை. ஏனெனில் இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் ஊர்காவற்துறை பொலிசாருடன் நெருங்கிய தொடர்பினை கொண்டவர்கள். அது மட்டுமின்றி பணபலம் படைத்தவர்கள். அதனால் சம்பவம் குறித்து நான் சொல்லவில்லை. இந்த சம்பவம் இடம்பெற்ற சில காலத்தின் பின்னர் எனக்கு தொலைபேசி மூலம் மிரட்டலும் விடுக்கப்பட்டு இருந்தது என தனது சாட்சியத்தில் தெரிவித்தார்.
 
எதிரிகளை அடையாளம் காட்டினார். 
 
அத்துடன் எதிரி கூண்டில் நின்ற 6ஆவது எதிரியான பெரியாம்பி என அழைக்கப்படும் சிவதேவன் துஷாந்த் , 5ஆவது எதிரியான சந்திரகாசன் என அழைக்கப்படும் தில்லைநாதன் சந்திரஹாசன் , 3ஆவது எதிரியான செந்தில் என்று அழைக்கப்படும் பூபாலசிங்கம் தவக்குமார் 2ஆவது எதிரியான ரவி என அழைக்கப்படும் பூபாலசிங்கம் ஜெயக்குமார் 9ஆவது எதிரியான சுவிஸ் குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் , 4ஆவது எதிரியான சசி என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் 7ஆவது எதிரியான நிஷாந்தன் என அழைக்கபப்டும் பழனி ரூபசிங்கம் குகநாதன் மற்றும் 8ஆவது எதிரியான கண்ணன் என்று அழைக்கப்படும் ஜெயதரன் கோகிலன் ஆகிய எதிரிகளை சாட்சி தனது சுட்டு விரலால் சுட்டிக்காட்டி அடையாளம் காட்டினார். அத்துடன் மாணவியின் சைக்கிளை , முன் கூடையையும் , சீற்றையும் வைத்து அடையாளம் காட்டினார்.
 
அதனை தொடர்ந்து 03ஆவது சாட்சியத்தின் சாட்சியம் முடிவுறுத்தப்பட்டு நாளைய (வெள்ளிக்கிழமைக்கு) மூன்றாம் நாள் சாட்சி பதிவுக்காக வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

http://globaltamilnews.net/archives/31347

Link to comment
Share on other sites

23 hours ago, நவீனன் said:
ஊர்காவற்துறை போலீசில் செல்வாக்கு உள்ளவர்கள். 
 
இந்த சம்பவங்கள் தொடர்பாக நான் பொலிசாரிடம் சொல்லவில்லை. ஏனெனில் இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் ஊர்காவற்துறை பொலிசாருடன் நெருங்கிய தொடர்பினை கொண்டவர்கள். அது மட்டுமின்றி பணபலம் படைத்தவர்கள். அதனால் சம்பவம் குறித்து நான் சொல்லவில்லை. இந்த சம்பவம் இடம்பெற்ற சில காலத்தின் பின்னர் எனக்கு தொலைபேசி மூலம் மிரட்டலும் விடுக்கப்பட்டு இருந்தது என தனது சாட்சியத்தில் தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நடக்கும் 90% ஆன சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு உறுதுணையாகவும் உந்துதல் சக்தியாகவும் இருப்பது அங்கு நிலைகொண்டிருக்கும் சிங்கள-பௌத்த போலீஸ் ------ சிங்கள-பௌத்த முப்படைப் ------ தான்!

மக்கள் பொங்கி எழாமலும், முதலமைச்சர் விக்னேஸ்வரன் போன்ற சில சட்டவியலாளர்களின் வழிகாட்டலும் இல்லாமல் இருந்திருந்தால் வித்தியாவை நாசம் செய்த காடையர்களை சிங்கள-பௌத்த போலீஸ் ---- சிங்கள-பௌத்த முப்படைப் ---- அவர்களுக்கு உடந்தையாக இருந்த சில சட்டத்தரணிகளும் காப்பாற்றியிருப்பார்கள்! 

Link to comment
Share on other sites

வித்தியா கூட்டு வன்புணர்வின் பின் கொலை : துஷாந்தின் தலைமையிலேயே அரங்கேறியது

 
வித்தியா கூட்டு வன்புணர்வின் பின் கொலை : துஷாந்தின் தலைமையிலேயே அரங்கேறியது
 

“6ஆம் எதிரி சிவ­தே­வன் துஷாந்­தின் தலை­மை­யி­லேயே மாணவி வித்­தியா கடத்­தப்­பட்டு கூட்டு வன்­பு­ணர்­வுக்­குட்­ப­டுத்­தப்­பட்டு, படு­கொலை செய்­யப்­பட்­டார்.

துஷாந்த் திரு­ம­ணம் முடிப்­ப­தா­கக் கூறி வித்­தி­யா­வைக் கடத்­திச் சென்று பாழ­டைந்த வீட்­டுக்­குள் வைத்து நண்­பர்­க­ளு­டன் கூட்டு வன்­பு­ணர்­வுக்­குட்­ப­டுத்­தி­விட்டு வித்தியாவை கூட்­டா­கவே கொலை செய்­த­னர். அவர்­க­ளின் திட்­டத்­தின் பின்­ன­ணி­யில் சுவிஸ் குமா­ரும் இருந்­துள்­ளார்”

இவ்­வாறு தீர்ப்­பா­யம் முன்­னி­லை­யில் 2 முக்­கிய சாட்­சி­கள் நேற்றுச் சாட்­சி­ய­ம­ளித்­த­னர். மேல் நீதி­மன்ற நீதி­பதி பாலேந்­தி­ரன் சசி­ம­கேந்­தி­ரன் தலை­மை­யில் மேல் நீதி­மன்ற நீதி­ப­தி­கள் அன்­ன­லிங்­கம் பிரே­ம­சங்­கர், மாணிக்­க­வா­ச­கர் இளஞ்­செ­ழி­யன் ஆகி­யோர் அடங்­கிய தீர்ப்­பா­யத்­தின் இரண்­டாம் நாள் அமர்வு நேற்­றுக் காலை 9.30 மணி­ய­ள­வில் யாழ்ப்­பா­ணம் நீதி­மன்­றக் கட்­ட­டத் தொகு­தி­யின் 2ஆவது மாடி­யி­லுள்ள திறந்த மன்­றில் கூடி­யது.

வழக்­குத் தொடு­னர் சார்­பில் பிரதி மன்­றா­டி­யார் அதி­பதி பி. குமா­ர­ரட்­ணம் தலை­மை­யில் அரச சட்­ட­வா­தி­கள் நாக­ரத்­தி­னம் நிஷாந்த், ஷகிப் ஸ்மாயில் , லக்சி டீ சில்வா மற்­றும் மாலினி விக்­னேஸ்­வ­ரன் ஆகி­யோர் முன்­னி­லை­யாகி இருந்­த­னர்.

1ம் ,2ம் , 3ம் , 5ம் மற்­றும் 6ம் எதி­ரி­கள் சார்­பில் அரச தலை­வர் சட்­டத்­த­ரணி சரங்க பால­சிங்க மற்­றும் சட்­டத்­த­ரணி மகிந்த ஜெய­வர்த்­தன ஆகி­யோ­ரும் 5ஆம் எதி­ரி­யின் சார்­பில் சட்­டத்­த­ரணி ஆறு­மு­கம் ரகு­ப­தி­யும் 4ஆம், 7ஆம் , மற்­றும் 9ஆம் எதி­ரி­கள் சார்­பில் சட்­டத்­த­ரணி சின்­ன­ராசா கேதீஸ்­வ­ரன் ஆகி­யோர் முன்­னி­லை­யாகி இருந்­த­னர். அத்­து­டன் மன்­றி­னால் 9 எதி­ரி­கள் சார்­பில் நிய­மிக்­கப்­பட்ட சட்­டத்­த­ரணி விக்­னேஸ்­வ­ரன் ஜெயந்­தா­வும் முன்­னிலை ஆகி­யி­ருந்­தார்.

எதி­ரி­க­ளான பூபா­ல­சிங்­கம் இந்­தி­ர­கு­மார், பூபா­ல­சிங்­கம் ஜெயக்­கு­மார், பூபா­ல­சிங்­கம் தவக்­கு­மார் , மகா­லிங்­கம் சசி­த­ரன் , தில்­லை­நா­தன் சந்­தி­ர­கா­சன் , சிவ­தே­வன் துஷாந்த் , பழனி ரூப­சிங்­கம் குக­நா­தன் , ஜெய­த­ரன் கோகி­லன் , மற்­றும் மகா­லிங்­கம் சசிக்­கு­மார் ஆகிய ஒன்­பது எதி­ரி­க­ளும் மன்­றில் முற்­ப­டுத்­தப்­பட்­ட­னர்.

இரண்­டாம் நாள் சாட்சி பதி­வு­கள் ஆரம்­ப­மா­னது, அதன் போது இந்த வழக்­கின் ஐந்­தா­வது சாட்­சி­யும் சட்­டமா அதி­ப­ரால் நிபந்­த­னை­க­ளு­டன் பொது மன்­னிப்பு வழங்­கப்­பட்ட அரச சாட்­சி­யு­மான உத­ய­சூ­ரி­யன் சுரேஷ்­க­ரன் சாட்­சி­யம் அளித்­தார். அவர் தனது சாட்­சி­யத்­தில் தெரி­வித்­த­தா­வது:

நான் புங்­கு­டு­தீவு 10ஆம் வட்­டா­ரத்தை சேர்ந்­த­னான். பல வரு­டங்­க­ளாக கொழும்­பில் கடை ஒன்­றில் வேலை செய்­தேன். இந்த வழக்கு தொடர்­பில் கொழும்பு 4ஆம் மாடியை சேர்ந்த புல­னாய்வு துறை­யி­னர் முத­லில் என்னை கைது செய்து விசா­ரணை செய்த பின்­னர் விடு­வித்­த­னர். பின்­னர் மீண்­டும் நான் சில நாட்­க­ளில் கைது செய்­யப்­பட்­டேன்.

இந்த வழக்கு தொடர்­பில் ஊர்­கா­வற்­றுறை நீதி­மன்­றில் நீதி­வா­னின் சமா­தன அறை­யில் எனது வாக்கு மூலத்தை வழங்கி இருந்­தேன்.
ஒரு தலை காதல்கொலை செய்­யப்­பட்ட வித்­தி­யாவை எனக்­குத் தெரி­யும்.

அவ­ரது குடும்­பத்­தி­ன­ரை­யும் எனக்கு நன்கு தெரி­யும். வித்­தியா எவ­ரை­யும் காத­லித்­தாரா? என்­பது எனக்கு தெரி­யாது. ஆனால் பெரி­யம்பி என அழைக்­கப்­ப­டும் துஷாந்த் (6ஆவது எதி­ரி­யான சிவ­தே­வன் துஷாந்த்) என்­ப­வர் வித்­தி­யாவை காத­லிப்­ப­தாக கூறி­னார்.

அத­னால் நானும் பெரி­யம்­பி­யும் வித்­தியா பாட­சாலை செல்­லும் நேரம் பாட­சா­லை­யால் வீடு திரும்­பும் நேரங்­க­ளில் தின­மும் வித்­தி­யா­வின் பின்­னால் பெரி­யம்­பி­யின் மோட்­டார் சைக்­கி­ளில் சென்று வரு­வோம். அந்­த­வே­ளை­க­ளில் வித்­தி­யா­வு­டன் பெரி­யம்பி கதைக்க முற்­ப­டு­வர். ஆனால் வித்­தியா கதைக்க மாட்­டார்.

வித்­தியா சில வேளை­க­ளில் அவ­ரின் அண்­ணா­வு­டன் மோட்­டார் சைக்­கி­ளில் பாட­சாலை சென்று வரு­வார். அண்ணா இல்லை என்­றால் சைக்­கி­ளில் சென்று வரு­வார்.

பெரி­யம்­பி­யும் நானும் கிட்­டத்­தட்ட மூன்று மாதங்­கள் வித்­தி­யா­வின் பின்­னால் மோட்­டார் சைக்­கி­ளில் சென்று வந்­தோம். அந்த வேளை­க­ளில் அவ­ரு­டன் கதைக்க முற்­பட்­டால் அவர் கதைப்­ப­தில்லை. ஒரு நாள் தன்­னு­டன் கதைக்க வேண்­டாம் என­வும் வித்­தியா பெரி­யம்­பி­யி­டம் கூறி இருந்­தார்.

வித்­தியா செருப்­பால்  எறிந்­தார்

கொலை செய்­யப்­ப­டு­வ­தற்கு ஒன்று ஒன்­றரை மாதங்­க­ளுக்கு முன்பு ஒரு­நாள் வித்­தியா பெரி­யம்­பிக்கு செருப்­பால் எறிந்து பேசி இருந்­தார். அப்­போது நான் சொன்­னேன் “அந்த பிள்­ளைக்கு விருப்­பம் இல்லை போல அந்த பிள்­ளையை விடு” என்று.

காலை­யி­லேயே கள்­ளுக் குடிப்­போம்

நாங்­கள் புங்­கு­டு­தீ­வில் மாப்­பிளை ( நட­ராஜா புவ­னேஸ்­வ­ரன் ) என்­ப­வ­ரி­டம் கள்ளு வாங்கி குடிப்­போம். அவர் சீவல் தொழில் செய்­ப­வர். அவ­ரின் வீட்­டுக்கு நானும் என்­னு­டன் கொழும்­பில் இருந்து வந்­தி­ருந்த சந்­தி­ர­ஹா­சன் , நிஷாந்­தன் , கண்ணா மற்­றும் சசி என்­போ­ரும் கள்­ளு­கள் குடிக்க போற­னாங்­கள். காலை­யில் பத்து மணிக்கு முன்­னர் நாம் கள்ளு குடிக்க போயி­டு­வோம்.

போதை­யில் வித்­தியா வீட்­டுக்கு சென்­ற­னர்

சம்­பவ தினத்­துக்­குச் சில நாட்­கள் முன்­னர் மாப்­பிள்ளை வீட்­டில் கள்ளு குடித்த பின்­னர் , மதி­யம் 12 மணி போல பெரி­யம்­பி­யும் நானும் கடற்­கரை வழி­யாக வித்­தி­யா­வின் வீட்­டுக்கு சென்று இருந்­தோம். நான் வீட்­டுக்கு சற்று தொலை­வில் நின்று கொண்­டேன். பெரி­யம்பி மாத்­தி­ரம் வீட்­டுக்கு சென்று பார்த்து விட்டு ஒரு­வ­ரும் வீட்­டில் இல்லை என வந்து கூறி­னார்.

அன்று பின்­னே­ரம் மீண்­டும் கள்ளு குடிக்க போனோம். அப்­போது எம்­மு­டன் சந்­தி­ர­ஹா­ச­னை­யும் அவ­ரது வீட்­டுக்கு சென்று அழைத்து சென்­றோம். நாங்­கள் கள்ளு குடித்­துக்­கொண்டு இருந்த நேரம், அங்கே தவக்­கு­மார் மற்­றும் ரவி ஆகி­யோர் வந்­தி­ருந்­த­னர். அவர்­க­ளு­டன் சேர்ந்து கள்ளு குடித்­தோம்.

அந்­நே­ரத்­தில் தவக்­கு­மா­ருக்­கும் ரவிக்­கும் , பெரி­யம்பி வித்­தியா தனக்கு செருப்­பால் எறிந்து போட்­டாள் என்று கூறி­னார். அதற்கு ரவி ‘ நீ வித்­தி­யாவை காத­லிக்­கி­றியா ? ‘ என கேட்­டான். அதற்கு பெரி­யம்பி ஓம் என்று சொன்­னான்.

வித்­தி­யாவை தூக்­கித்­தா­ரேன்

பின்­னர் போகும் போது ரவி, பெரி­யம்­பிக்கு “ஏதே­னும் உதவி தேவை என்­றால் சொல்லு, வித்­தி­யாவை தூக்கி தாறது என்­றால் தூக்கி தாரேன் “ என சொன்­னார். அதற்கு பெரி­யாம்பி தேவை என்­றால் சொல்­லு­றேன் என சொன்­னார்.

அதன் பிறகு இரண்டு மூன்று நாள் கழித்து நாங்­கள் மாப்­பிள்ளை வீட்­டில் கள்ளு குடித்­துக்­கொண்டு இருந்தபோது, அங்கே வந்த ரவி­யி­டம் வித்­தி­யாவை தூக்கி தர சொல்லி பெரி­யம்பி கேட்­டார். அப்­போது அந்த இடத்­தில் நானும் பெரி­யம்பி, ரவி, சந்­தி­ர­ஹா­சன் மற்­றும் தவக்­கு­மார் ஆகி­யோர் இருந்­தோம்.

வித்­தி­யா­வைக் கடத்த ரூபா 20,000 பேரம்

வித்­தி­யாவை தூக்கி தாறது என்­றால் எனக்கு 20 – 23 ஆயி­ரம் ரூபாய் பணம் தர­வேண்­டும் என ரவி பெரி­யம்­பிக்கு கூறி­னார். அதற்கு பெரி­யம்பி தான் சம்­ப­ளம் எடுத்த உடனே பணத்தை தரு­கி­றேன் எனக் கூறி­னார். அதன் படி ரவிக்கு பெரி­யம்பி பணம் கொடுத்­தார். வித்­தி­யாவை தூக்கி தர கூறி என தனது சாட்­சி­யத்தை அளித்­தார்.

அதன் போது எவ்­வ­ளவு பணம் ரவிக்கு கொடுக்­கப்­பட்­டது என பிரதி மன்­றா­டி­யார் அதி­பதி சாட்­சி­யி­டம் கேள்வி எழுப்­பிய போது, இந்த கேள்­வி­க­ளுக்கு நான் பதில் அளித்­தால் எனது அம்மா மற்­றும் தங்­கை­க­ளுக்கு பாதிப்பு ஏற்­ப­டும் என “தீர்ப்­ப­யம் முன்­னி­லை­யில் கூறி­னார்.

சாட்­சிக்கு பாது­காப்பு வழங்க முடி­யும்

நான் இந்த விட­யத்­தைச் சொன்­னால் (மன்­றில் சாட்சி சொல்­வ­த­னால்) என்­னு­டைய அப்பா, அம்­மா­வுக்கு ஏதா­வது பிரச்­சினை வருமா? என்று சாட்சி தீர்ப்­பா­யத்­தி­டம் கேட்­டார். “அப்­படி பிரச்­சி­னை­கள் ஏற்­ப­டாது. நீங்­கள் சுய­மா­கத் தானே வாக்­கு­மூ­லம் அளிக்க வந்­தீர்­கள்? நீங்­கள் நீதி­மன்­றுக்கு உண்­மை­யைச் சொல்­வ­தால்­தான் சட்­டமா அதி­பர் தரப்பு உங்­க­ளுக்­குப் பொது­மன்­னிப்பு வழங்­கி­னார்­கள்” என்று தீர்ப்­பா­யம் சாட்­சிக்கு தெரி­வித்­தது.

“எனக்கு அம்­மா­வும் தங்­கச்­சி­யும்­தான் இருக்­கி­றார்­கள். அவர்­க­ளுக்கு இத­னால் ஏதா­வது பிரச்­சினை வருமோ? என்று பயப்­ப­டு­கின்­றேன்” என்று சாட்­சிக் கூண்­டில் நின்­ற­ப­டியே சுரேஸ்­க­ரன் அச்­சம் வெளி­யிட்­டார்.

“நாங்­கள் கட்­டா­யப்­ப­டுத்­த­வில்லை. ஆனால் சாட்சி சொல்­வ­தாக நீங்­கள்­தான் கூறி­னீர்­கள். உங்­க­ளு­டைய தங்­கைக்­கும் தாயா­ருக்­கும் உரிய பாது­காப்பை மன்று வழங்­கும். எனவே நீங்­கள் பய­மின்றி சாட்­சி­ய­ம­ளிக்­க­லாம்” என்று தீர்ப்­பா­யம் சாட்­சி­யி­டம் தெரி­வித்­தது.

வழக்­குத் தொடு­னர் மற்­றும் எதி­ரி­கள் தரப்பு சட்­டத்­த­ர­ணி­க­ளு­ட­னும் தீர்ப்­பா­யம் கலந்­து­ரை­யா­டி­யது. சாட்­சி­யின் பாது­காப்­புக் கருதி மூடிய மன்­றில் சாட்­சி­யப் பதிவு இடம்­பெ­ற­வுள்­ள­தால் செய்­தி­யா­ளர்­கள் மற்­றும் பார்­வை­யா­ளர்­களை திறந்த மன்­றி­லி­ருந்து செல்­லு­மாறு தீர்ப்­பா­யம் கேட்­டுக் கொண்­டது. பின்­னர் மூடிய மன்­றில் சாட்சி சாட்­சி­ய­ம­ளித்­தார்.

தொடர்ந்து பிற்­ப­கல் 3.30 மணிக்கு 3ஆவது சாட்­சி­யான மாப்­பிள்ளை என்று அழைக்­கப்­ப­டும் நட­ராஜா புவ­னேஸ்­வ­ர­னின் சாட்­சி­யப் பதிவு நடை­பெற்­றது.

“நான் கள்­ளுச் சீவ­ற­னான். பெரி­யாம்­பி­யும், சுரேசும் (சுரேஸ்­க­ரன்), ஆகி­யோ­ரும் வழ­மை­யாக எனது வீட்­டுக்கு வந்து கள்ளு வாங்­கு­வார்­கள். அவ்­வாறே ஒரு­நாள் எனது வீட்­டுக்கு வந்த பெரி­யாம்பி, “வித்­தி­யா­வைக் காத­லிப்­ப­தா­க­வும் அவ­ரைத் திரு­ம­ணம் செய்­யப்­பே­வா­தா­க­வும் என்­னி­டம் கூறி­னார்.

சம்­ப­வம் நடை­பெ­று­வ­தற்கு மூன்று நாட்­க­ளுக்கு முன்பு என்னை வித்­தியா பாட­சா­லைக்­குச் செல்­லும் வழி­யால் கூட்­டிக்­கொண்டு போன­னார்­கள். சம்­ப­வம் இடம்­பெற்ற அன்று வித்­தியா இன்­னொரு பிள்­ளை­யு­டன் பாட­சா­லைக்­குச் சென்­றார்.

ஆல­டிச் சந்­தி­யால்­தான் வித்­தியா வரு­கி­றவா, நான் அவ­ளைக் காத­லிக்­கி­றேன். கலி­யா­ணம் செய்­யப்­போ­கி­றேன் என்று கூறித்­தான் பெரி­யாம்பி என்­னக் கூட்­டிக்­கொண்டு போன­வர். என்­னை­யும் சரேஸ்­க­ர­னை­யும் ஒளிந்­தி­ருந்து பார்க்­கச் சொல்லி பெரி­யாம்பி சொன்­ன­வர். ஜெயக்­கு­மா­ரும் தவக்­கு­மா­ரும் அந்த இடத்­துக்கு வந்­த­வர்­கள்.

வித்­தியா கடத்­தல்

அவர்­கள் இரு­வ­ரும் வித்­தி­யா­வுக்கு அரு­கில் சென்று அவ­ரைக் கட்­டிப்­பி­டித்­த­வர்­கள். பாட­சாலை வெள்­ளைச் சீரூ­டை­யு­டன்­தான் வித்­தியா வந்­த­வர். சப்­பாத்­துப் போட்­டி­ருந்­த­வர். சைக்­கிள் கூடைக்­குள் குடை­யி­ருந்­தது. பெரி­யாம்­பி­யும் சந்­தி­ர­கா­ச­னும் பற்­றைக்­குள் வித்­தி­யாவை இழுத்­துக்­கொண்டு சென்­றார்­கள்.

பின்பு வித்­தியா அணிந்­தி­ருந்த உடுப்­புக்­கள் அனைத்­தை­யும் கழற்­றி­ன­வர்­கள். நான் அங்­கா­லப் பற்­றைக்­குள் நின்று பார்த்­துக்­கொண்டு நின்­ற­னான். சுரேஸ்­க­ர­னும் அவர்­க­ளைப் பாரத்த்­துக்­கொண்டு நின்­ற­வர்.

கத­றக் கதற வன்­பு­ணர்வு

பெரி­யாம்பி வித்­தி­யா­வைப் பார்த்து நான் காத­லிப்­பது உனக்கு விருப்­ப­மில்­லையா? என்று பேசி­னார். அந்த நேரம் வித்­தியா ஐயோ விடுங்­கடா ஐயோ விடுங்­கடா என கத­றி­னார். வித்­தி­யா­வின் வாயைப் பெரி­யாம்பி பொத்­தி­னார். உடுப்­பைக் கழற்­றிய இடத்­தில் இருந்து பிள்­ளையை வன்­பு­ணர்வு செய்த இடத்­துக்கு இழுத்­துக்­கொண்­டும், கைத்­தாங்­க­லா­க­வும் கொண்டு சென்­றார்­கள்.

வித்­தியா கதறி அழு­தும் சந்­தி­ர­கா­ஸூம் பெரி­யாம்­பி­யும் அவரை விட­வில்லை. அந்த நேரம் ஒரு பாழ­டைந்த வீட்­டுக்­குள் வித்­தி­யாவை அவர்­கள் கொண்டு சென்­றார்­கள். செந்­தில், ரவி, பெரி­யாம்பி, சந்­தி­ர­காஸ் இவர்­கள் நான்கு பேரும்­தான் அந்த பாழ­டைந்த வீட்­டுக்­குள் சென்­ற­வர்­கள். நான் அந்த நேரம் கத்­திக்­கொண்டு ஓடத் தயா­ரா­கி­னான். பெரி­யாம்பி கத்­தி­யக்­காட்டி நின்று ஆக்­கள் யாரும் வரு­கி­றார்­களா? எனப் பார்த்­துக்­கொள் என்­றார்.

சுரேஸ்­க­ர­னும் பற்­றைக்­குள் நின்­றார். அந்த வீட்­டுக்­குள் வைத்து பிள்­ளையை மாறி மாறி ஒளிப்­ப­டம் எடுத்­தார்­கள். பெரி­யாம்­பி­யும் சந்­தி­ர­கா­ஸூம் பிடிக்க ஏனை­ய­வர்­கள் ஒளிப்­ப­ட­மும் எடுத்­தார்­கள். முத­லில் வித்­தி­யாவை பெரி­யாம்­பி­தான் வன்­பு­ணர்­வுக்­குட்­ப­டுத்­தி­னார். இரண்­டா­வ­தாக சந்­தி­ர­கா­ஸூம் மூன்­றா­வ­தாக செந்­தி­லும் சந்­தி­ர­காஸ் ஒளிப்­ப­டம் எடுக்க ஜெயக்­கு­மார் வித்­தி­யாவை வன்­பு­ணர்­வுக்­குட்­ப­டுத்­தி­னார்.

பின்­பு­தான் அந்­தப்­பிள்ளை மயங்கி விட்­டது. ஒளிப்­ப­டம் எடுத்து சுவிஸ்­கு­மா­ருக்கு கொடுக்க வேண்­டும் என்­றும் அவர் வெளி­நாட்­டுக்கு கொண்டு போகப் பொறார் என்­றும் அவர்­கள் கதைத்­துக்­கொண்­ட­னர்.

ஓளிப்­ப­டம் எடுத்­த­னர்

பெரிய தொடு­திரை அலை­பேசி கொண்­டு­தான் ஒளிப்­ப­டம் எடுத்­தார்­கள்.பிறகு கைத்­தாங்­க­லாக பிள்­ளைய தூக்­கிக்­கொண்டு வந்து அலரி மரத்­தில கட்­டி­னார்­கள். கூப்­பிடு தூரத்­தில்­தான் நான் நின்­றேன். பிள்­ளை­யின் வெள்­ளைச் சீரூ­டை­யின் சட்­டை­யின் இடுப்­புப்­பட்­டி­யால் கைகள் இரண்­டை­யும் கழுத்­துப்­பக்­க­மாக வளைத்­துக் கட்­டி­னார்­கள். பின்பு கால்­களை விரித்து சப்­பாத்து நூல்­க­ளி­னால் அலரி மரத்து கிளை­க­ளு­டன் கட்­டி­னார்­கள். பின்பு பிள்­ளை­யின் ஆடை­களை அவ­ரது உடம்­பின் மேல் போட்­டார்­கள்.

பிறகு நான் சீவ­லுக்கு போற­துக்­காக வீட்ட போய்­விட்­டேன். பின்­னர் காலை 9.30 மணிக்கு அந்த நான்கு பேரும் கள்­ளுக்­கு­டிப்­ப­தற்­காக வீட்­டுக்கு வந்­தார்­கள். பின்­னே­ர­மும் வந்­தார்­கள். நான் மழை என்­ற­தும் சீவ­வில்லை. சந்­தி­ர­கா­சன், பெரி­யாம்பி மூன்று பேர் வந்­தார்­கள். கள் சீவ­வில்லை என்­ற­தும் திரும்­பிச் சென்­று­விட்­டார்­கள்.சிறிது நாட்­கள் கழித்து என்னை அலை­பேசி மூலம் தொடர்பு கொண்டு மிரட்­டி­னார்­கள். நான் ஊர்­கா­வற்­றுறை நீதி­மன்­றில் இது பற்றி வாக்­கு­மூ­லம் அளித்­தேன்.

சுவிஸ்­கு­மாரை எனக்கு அறி­மு­கப்­ப­டுத்­தி­யது சுரேஸ்­க­ரன்­தான். சுவிஸ்­கு­மா­ரின் மனை­வி­யின் தம்­பி­தான் பெரி­யாம்பி. சுவிஸ்­கு­மார் வெளி­நாட்­டுக்கு கொண்டு போற­துக்­குத்­தான் காணொலி எடுத்­த­தா­கப் பெரி­யாம்பி கூறி­னார்.

எதி­ரிக்­கூண்­டில் 6ஆவது இலக்க எதி­ரி­தான் பெரி­யாம்பி என்று கூறப்­ப­டும் துசாந்­தன், 5ஆம் எதிரி சந்­தி­ர­காஸ்,3ஆம் எதிரி தவக்­கு­மார், 2ஆம் எதிரி ஜெயக்­கு­மார், 9ஆம் எதிரி சுவிஸ்­கு­மார், 4ஆம் எதிரி சசி,7ஆம் எதிரி நிசாந்­தன், 8ஆம் எதிரி கண்­ணன் எதி­ரி­க­ளைச் சாட்சி அடை­யா­ளம் காட்­டி­னார். கூடை­யை­யும் சீற்­றை­யும் வைத்து இது வித்­தி­யா­வி­னு­டைய சைக்­கிள்­தான் என அடை­யா­ளம் காட்­டி­னார்.

http://uthayandaily.com/story/8518.html

Link to comment
Share on other sites

சுவிஸ் நாட்டில் உள்ள மாபியா குழுவுடன் சுவிஸ் குமாருக்கு தொடர்பு – ஆறாவது சாட்சி மன்றில் சாட்சியம் – குளோபல் தமிழ்ச்செய்தியாளர்:-

swisskumar.jpg

குளோபல் தமிழ்ச்செய்தியாளர்

அரச தரப்பு சாட்சியாக தன்னை மாற்ற குற்றபுலனாய்வு துறை அதிகாரி உதவினால் அவருக்கு தான் 2 கோடி ரூபாய் பணம் வழங்க தயார் என தன்னிடம் சுவிஸ் குமார் தெரிவித்ததாக ஆறாவது சாட்சியான  முஹமட் இப்ரான் என்பவர் ரயலட் பார் முன்னிலையில் சாட்சியம் அளித்துள்ளார்.

 
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு விசாரணைகளின் மூன்றாம் நாள் சாட்சி பதிவுகள்,  இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதியின் இரண்டாம் மாடியில் மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும்  மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில்  ” ரயலட் பார்  முறைமையில் நடைபெற்றது.
 
பிரதி சொலிஸ்டர் ஜெனரல் வழக்கை நெறிப்படுத்தினார். 
 
இன்றைய வழக்கு விசாரணைகளின் போது  பிரதி சொலிஸ்டர் ஜெனரல் குமார் இரட்ணம் தலைமையில் அரச சட்டவாதிகளான நாகரத்தினம் நிஷாந்த், ஷகிப் ஸ்மாயில் , லக்சி டீ சில்வா மற்றும் மாலினி விக்னேஸ்வரன் ஆகியோர் முன்னிலையாகி இருந்தனர்.
 
எதிரிகள் சார்பில்  5 சட்டத்தரணிகள் முன்னிலை. 
 
1ம் ,2ம் , 3ம் , 5ம் மற்றும் 6ம் எதிரிகள் சார்பில் சட்டத்தரணி  மஹிந்த ஜெயவர்த்தன மற்றும் சட்டத்தரணி சரங்க பாலசிங்க , ஆகியோரும் 5ம் எதிரியின் சார்பில் சட்டத்தரணி  ஆறுமுகம் ரகுபதியும் 4ம், 7ம் , மற்றும் 9ம் எதிரிகள் சார்பில் சட்டத்தரணி சின்னராசா கேதீஸ்வரன் ஆகியோர் முன்னிலையாகி இருந்தனர். அத்துடன் மன்றினால் 9 எதிரிகள் சார்பில் நியமிக்கப்பட்ட சட்டத்தரணி விக்னேஸ்வரன் ஜெயந்தாவும் முன்னிலை ஆகி இருந்தார்.
 
எதிரிகள் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.
 
எதிரிகளான பூபாலசிங்கம் இந்திரகுமார்,  பூபாலசிங்கம் ஜெயக்குமார்,  பூபாலசிங்கம் தவக்குமார் , மகாலிங்கம்  சசிதரன் , தில்லைநாதன் சந்திரகாசன் , சிவதேவன் துஷாந்த் , பழனி ரூபசிங்கம் குகநாதன் , ஜெயதரன் கோகிலன் , மற்றும் மகாலிங்கம் சசிக்குமார் ஆகிய ஒன்பது எதிரிகளும் மன்றில் முற்படுத்தப்பட்டனர்.
 
அதனை தொடர்ந்து இன்றைய தினம் மூன்றாம் நாள் சாட்சி பதிவுகள் ஆரம்பமானது, அதன் போது குறித்த வழக்கின் ஆறாவது சாட்சியும் சுவிஸ்குமாருடன் சிறையில் தடுத்து வைக்கப்பட்டு இருந்தவருமான முஹமட் இப்ரான் என்பவர் சாட்சியம் அளிக்கையில் ,
 
நான் கணணி மென்பொருள் பொறியியல் துறை சார்ந்தவன். 2014ஆம் ஆண்டு கால பகுதியில் எனது வங்கி அட்டையினை பிறிதொருவருக்கு வழங்கி இருந்தேன் அவர் அதனை மோசடி செய்து பண மோசடியில் ஈடுபட்டு இருந்தார். அந்த வங்கி அட்டைக்கு உரியவன் நான் என்பதனால் எனக்கு எதிராக கொழும்பு கோட்டை நீதிமன்றம் , புத்தளம் நீதிமன்றம் மற்றும் வவுனியா நீதிமன்றில் 11 வழக்குகள் உள்ளன. அவையனைத்தும் நிதி மோசடி வழக்கு. மொத்தமாக 13இலட்ச ரூபாய் நிதி மோசடி செய்தேன் என்பது என் மீதான வழக்கு .
 
நான் கணணி துறையில் ஆர்வம் இருந்ததினால் அது சார்ந்து கற்று இருந்தேன். மென்பொருட்களை பயன்படுத்தியும் , நேரடியாகவும் பிறிதொருவரின் கணணியை என்னால் ஹக் பண்ண முடியும். அதில் எனக்கு அனுபவம் நிறைய உண்டு.
 
அதேபோன்று தொலைபேசியில் அழிக்கப்பட்ட தரவுகளை என்னால் மீள எடுக்க முடியும். அதற்கான மென்பொருள் ஒன்றினையும் நான் தயாரித்து உள்ளேன்.
 
வவுனியா நீதிமன்றில் நடைபெறும் வழக்கு தவணைக்காக என்னை வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைத்து இருந்தார்கள். அந்த கால பகுதியிலையே சுவிஸ் குமாரை எனக்கு தெரியும்.
 
வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த கால பகுதியில் , ஒரு நாள் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவர்கள் சிறைச்சாலைக்கு வந்து இருந்தார்கள். மருத்துவ பரிசோதனை நடைபெற்ற இடம் சிறைச்சாலை அத்தியட்சகரின் அறைக்கு அருகாமையில் இருந்த அறையில், அப்போது அதன் முன் பகுதியில் வித்தியா வழக்குடன் சம்பந்தப்பட்ட நபர்களிடம் குற்றபுலனாய்வு துறையினர் வாக்கு மூலத்தினை பெற்றுக்கொண்டு இருந்தார்கள்.
 
சிறைகூடத்தில் இருந்து மூன்று மூன்று கைதிகளாக தான் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து வருவார்கள். அப்போது நான் முதலாவதாக மருத்துவ பரிசோதனையை முடித்துக்கொண்டு வெளியில் வந்து, என்னுடன் வந்த மற்றைய இவர்களின் மருத்துவ பரிசோதனை முடியும் வரையில் காத்திருந்தேன்.
 
அவ்வேளை வித்தியாவின் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களிடம் IP நிஷாந்த சில்வா அவர்களுடன் வந்த ஏனைய குற்ற புலனாய்வு துறையினர் வாக்கு மூலங்களை பதிவு செய்து கொண்டு இருந்தனர்.  IP நிஷாந்த சில்வா அவ்விடத்தில் நின்று இருந்தார்.
 
அவர் தான் என்னுடைய வழக்கு தொடர்பிலும் விசாரணை செய்தவர். அதனால் நான் ஒரு கணணி மென்பொருள் பொறியியலாளன் என்பது தெரியும். அதனால் என்னிடம் கேட்டார் ” தொலைபேசியில் அளிக்கப்பட்ட தரவுகளை மீள எடுக்க முடியுமா ? ” என கேட்டார். அதற்கு நான் ஆம் என்றேன். அதனை அங்கே வாக்கு மூலம் கொடுக்க இருந்த சுவிஸ் குமார் கேட்டு இருக்க வேண்டும்.
 
மென்பொருளை பயன்படுத்தி தரவுகளை அழித்தார்களா  ?
 
அதன் பின்னர் சுவிஸ் குமார் என்னை சந்தித்து கேட்டார் தொலைபேசியில் அழிக்கப்பட்ட தரவுகளை மீள எடுக்க முடியுமா ? என நான் ஆம் என்றேன். அப்போது திரும்ப கேட்டார் மென்பொருளினை பயன்படுத்தி அழிக்கப்பட்ட தரவுகளையும் எடுக்க முடியுமா ? என அதற்கு நாம் ஆம் என்னால் முடியும் என்றேன்.
 
சாதரணமாக தொலைபேசி பாவிக்கின்றவர்கள். அதில் உள்ள தரவுகளை அழிப்பது என்றால் சாதரணமாக தான் அழிப்பார்கள். மென்பொருள் ஊடாக அழிப்பது என்றால் அதில் எதோ பிரச்சனை இருப்பதாக புரிந்து கொண்டேன்.
 
சுவிஸ்குமார் என்னுடன் இது தொடர்பில் கதைத்த மறுநாள் நான் மகசீன் சிறைக்கு மாற்றப்பட்டுவிட்டேன். கொழும்பு கோட்டை நீதிமன்றில் உள்ள வழக்குக்காக.  நான் வவுனியா நீதவான் நீதிமன்றினால் விளக்க மறியலில் தடுத்து வைக்கப்பட்டு இருந்தமையால் 14 நாட்களுக்கு ஒரு முறை என்னை வவுனியா நீதிமன்றில் முற்படுத்த வேண்டும். ஆனால் அந்த தவணை எனக்கு கொழும்பில் வழக்கு இருந்தமையால் வவுனியாவுக்கு அழைத்து வரவில்லை. அடுத்த தவனைக்கே என்னை அழைத்து வந்தார்கள்.
 
அப்போ என்னை சந்தித்த சுவிஸ் குமார் ஏன் போன தவணைக்கு அழைத்து வரவில்லை ? என கேட்டார். அதற்கு நான் சொன்னேன். கொழும்பில் பிறிதொரு வழக்கு இருந்தமையால் அழைத்து வரவில்லை என . அப்போது சுவிஸ் குமார் கேட்டார் , வழக்குக்காகதான் வரவில்லையா அல்லது குற்ற தடுப்பு புலனாய்வு துறையினரை சந்திக்க போனீயா ? என . அப்போது நான் சொன்னேன் அவர்களை சந்திச்சுட்டு தான் வாறன். அவர்கள் உங்கள் தொலைபேசி பற்றி என்னுடன் கதைத்தார்கள் என சும்மா சொன்னேன். அதற்கு சுவிஸ் குமார் சொன்னார் உன்னை தனியாக சந்திக்க வேண்டும் நான் சந்திப்பது ஏனைய 8 பேருக்கும் தெரிய கூடாது என சொல்லி என்னை தனியாக மறுநாள் சந்தித்தார்.
 
அரச தரப்பு சாட்சியாக மாற 20 கோடி கொடுக்க தயார். 
 
மறுநாள் சுவிஸ் குமாரை நான் தனியாக சந்தித்த போது , அவர் என்னிடம் கேட்டார்  IP நிஷாந்த சில்வாவின் பலவீனம் என்ன என . அதற்கு நான் அது தெரியாது உங்களுக்கு அவரிடம் என்ன வேண்டும் என கேட்டேன். வித்தியா வழக்கில் நாங்கள் மூன்று பேர் சகோதர்கள் நாம் அரச சாட்சியாக மாற வேண்டும் அதற்கு  IP நிஷாந்த சில்வாவுடன் கதைத்து ஏற்பாடு செய்து தருமாறு சுவிஸ் குமார் கேட்டார்.
 
அவ்வாறு செய்தால்  IP நிஷாந்த சில்வாவுக்கு என்ன கொடுப்பீர்கள் என கேட்டேன். 2 கோடி ரூபாய் பணம் கொடுக்க முடியும் என தெரிவித்தார். இவ்வாறு நாம் பேசிக்கொண்டு இருந்த வேளை சுவிஸ் குமாரை யாரோ சந்திக்க சிறைச்சாலைக்கு வந்து இருக்கின்றார்கள் என தெரிவித்து சுவிஸ் குமார் சென்று விட்டார். மீண்டும் என்னை திரும்ப சந்தித்த சுவிஸ் குமார் மூன்று பேரை அரச சாட்சியாக மாற்ற முடியாது. ஒருவரை தான் மாற்ற முடியும் என தெரிவித்து தன்னை மட்டும்  IP நிஷாந்த சில்வாவுடன் கதைத்து அரச சாட்சியாக மாற்றி விடும் படி என்னிடம் கேட்டார். இந்த தகவல் ஏனைய எட்டு பேருக்கும் தெரிய கூடாது என என்னிடம் சொன்னார்.
 
அதன் பின்னர் மறுநாள் என்னை மகசீன் சிறைச்சாலைக்கு அழைத்து சென்று விட்டனர். பின்னர் சிறிது காலத்தில் நான் மீண்டும் வவுனியா சிறைச்சாலைக்கு கொண்டு வந்த போது மீண்டும் சுவிஸ் குமாரை சந்தித்தேன். அப்போது அவருக்கு சொன்னேன்  IP நிஷாந்த சில்வாவுடன் கதைப்பது என்றால் எனக்கு காரணம் தெரிய வேண்டும் என சொன்னேன்.
 
சுவிஸ் நாட்டு மாபியா குழுவுடன் தொடர்பு. 
 
அப்போது சுவிஸ் குமார் சொன்னார் , நான் சுவிஸ் நாட்டில் இருந்தேன். அங்குள்ள மாபியா குழு ஒன்று தெற்காசிய நாட்டு இளம் பெண் ஒருவரை கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி படுகொலை செய்வதனை வீடியோ எடுத்து தருமாறு என்னுடன் ஒப்பந்தம் செய்திருந்தனர்.
 
அதனை தொடர்ந்து நான் இலங்கையில் உள்ள ஒருவருடன் தொடர்பு கொண்டு அது பற்றி கூறினேன். 20 வயதுக்கு உட்பட்ட பெண் பிள்ளை ஒருவர் தேவை என சொன்னேன்.  அவர் ஒரு பெண்ணின் புகைப்படத்தை எனக்கு அனுப்பி வைத்தார். அந்த பெண் ஓகே என்றேன். என சுவிஸ் குமார் என்னிடம் கூறினார் நான் யாருடன் இலங்கையில் உள்ள நபருடன் தொடர்பு கொண்டீர் என கேட்டதற்கு இங்கு எதிரி கூண்டில் ஆறாவது நபராக உள்ளவரை  (சிவதேவன் துஷாந்தன் ) சுவிஸ் குமார் எனக்கு காட்டி இருந்தார்.
 
இதில் ஆறாவதாக உள்ள நபருடன் சேர்ந்து இலங்கையில் உள்ள ஏனையவர்கள் ஏற்பாடு செய்தனர். அதற்காக அந்த பெண்ணின் தாயாருடன் பெரிதொரு வழக்கில் தொடர்புடைய ஏனைய மூன்று பேரையும் தம்முடன் கூட்டு சேர்ந்தனர். என சுவிஸ் குமார் என்னிடம் கூறினார்.
 
பின்னர் மீண்டும் நான் மகசீன் சிறைக்கு கொண்டு செல்லபட்டேன். அங்கே  IP நிஷாந்த சில்வாவிடம் சுவிஸ் குமார் சொன்ன விடயங்களை சொன்னேன். அவர் அங்கு வைத்து எனது வாக்கு மூலத்தை பதிவு செய்தார்.
 
வித்தியாவுக்கு நடந்தது தான் உன் மனைவிக்கும் என மிரட்டல். 
 
அது எப்படியோ சுவிஸ் குமாருக்கு தெரிந்து விட்டது. நான் மீண்டும் வவுனியா சிறைக்கு வந்த போது குற்ற தடுப்பு புலனாய்வு துறையினருக்கு சொன்ன விடயத்தை நீதிமன்றில் சொல்ல கூடாது சொன்னால் ஏனைய வழக்குகளுக்கு போய் வரும் வேளைகளில் உனக்கு உயிர் ஆபத்து ஏற்படும் என என்னை மிரட்டினர். அத்துடன் உன் மனைவிக்கும் வித்தியாவுக்கு நடந்து போன்றே நடக்கும் எனவும் மிரட்டினார்.
 
இந்த அச்சுறுத்தல்கள் தொடர்பில் மகசீன் சிறைச்சாலை உத்தியோகஸ்தர்களுக்கும் , புத்தளம் நீதிமன்றிலும் தெரியபபடுத்தினேன்.
 
கூகிள் ரைவ் மூலம் வீடியோ அனுப்பப்பட்டது. 
 
வீடியோவை தொலை பேசி ஊடாக அனுப்பியுள்ளார்கள். அவர் அதனை கூகிள் டிரைவ் மூலம் வெளிநாட்டுக்கு அனுப்பியுள்ளார்.
 
 
 
அரசியல்வாதியின் தம்பியின் உதவியுடன் தப்பினேன். 
 
நான் யாழ்ப்பாணத்தில் இருந்து அரசியல் வாதியின் தம்பி ஒருவரின் உதவியுடன் தான் தப்பி கொழும்புக்கு வந்தேன். அரசியல் வாதியின் தம்பியே வாகன ஒழுங்குகளை செய்திருந்தார். அதன் ஊடக போலிஸ் உயர் அதிகாரி ஒருவரின் துணையுடன் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு தப்பி வந்து வெள்ளவத்தையில் மற்றுமொரு சுவிஸ் நாட்டை சேர்ந்த ஒருவருடன் தங்கி இருந்த போதே என்னை வெள்ளவத்தை போலீசார் கைது செய்தனர் என சுவிஸ் குமார் என்னிடம் தெரிவித்தார்.
 
ஒருவருக்கு வழக்கில் சம்பந்தம் இல்லை. 
 
ஒருநாள் இந்த வழக்கில் உள்ள அண்ணன் தம்பிகள் மூவரும் இந்த வழக்குடன் சம்பந்தப்பட்டவர்கள் இல்லை போல உள்ளதே என சுவிஸ் குமாரிடம் நான் கேட்டேன். அதற்கு அவர் ஆம் அதில் இருவரே சம்பந்தப்பட்டவர்கள் மற்றைய ஒருவருக்கு இந்த வழக்கில் சம்பந்தம் இல்லை என சொன்னார் ஆனால் அது யார் என்று சொல்லவில்லை என தனது சாட்சியத்தை பதிவு செய்தார்.
 
அதனை தொடர்ந்து எதிரி தரப்பு சட்டத்தரணியான மஹிந்த ஜெயவர்த்தன குறுக்கு விசாரணையின் போது ,
 
சாட்சியத்திடம் இந்த வழக்கின் எதிரிகளை சிறைச்சாலையில் , சித்திரவதைக்கு உட்படுத்தியதை நீர் கண்டீரா என கேட்டார் ? அதற்கு நீதிபதிகள் மூவரும் எதிரிகள் தம்மை சித்திரவதை செய்தனர் என எங்கும் முறைப்பாடு செய்யவில்லை எனவே அந்த கேள்வியை நிராகரிக்கின்றோம் என அறிவித்தனர்.
 
அதனை தொடர்ந்து , சாட்சியத்திடம் ” உமக்கு நிதி தேவைப்பட்டு உள்ளது.  அதனால்  IP நிஷாந்த சில்வாவை தெரியும் என எதிரிகளுக்கு கூறி அவர்களை மிரட்டி அவர்களிடம் இருந்து பணம் பறிக்க முற்பட்டீர் என கூறுகிறேன் என எதிரி தரப்பு சட்டத்தரணி கூறினார்.  அதற்கு சாட்சியம் அவ்வாறு இல்லை என பதிலளித்தார்.
 
அதனை தொடர்ந்து எதிரி தரப்பு சட்டத்தரணி சி. கேதீஸ்வரன் , இந்த எதிரிகளுடன் பணம் கேட்டு முரண்பட்டு உள்ளீர். அது தொடர்பில் நீதிமன்றின் கவனத்திற்கு எதிரிகள் கொண்டு வந்துவிடுவார்களோ எனும் பயத்தின் காரணமாக இவர்களுக்கு எதிராக பொய் சாட்சியம் அளிக்கின்றீர் என சாட்சியத்திடம் கூறினார். அதற்கு சாட்சி அவ்வாறு இல்லை என பதிலளித்தார். அதையடுத்து  6 ஆவது சாட்சியத்தின் சாட்சி பதிவு முடிவுறுத்தப்பட்டது.
 
வழக்கு திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு. 
 
அதனை தொடர்ந்து வழக்கு விசாரணைகளை எதிர்வரும் 03ஆம் திகதி திங்கட்கிழமை காலை 09 மணிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள் அதுவரையில் எதிரிகளை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு இட்டார்கள்.

http://globaltamilnews.net/archives/31411

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குற்றவாளிகளில் சிலர் டக்கிளசின் தாடி சாயலில் போகினம். ஒட்டுக்குழுவின் தோழர்களோ. :rolleyes:tw_angry:

மிகக் கொடுமையான குற்றம் செய்தவர்கள்.. எவ்வளவு சாதாரணமாகப் போகினம். ஆக இது அவர்களுக்கு முதற்குற்றமில்லை என்பது தெரிகிறது.

Link to comment
Share on other sites

சில வகை சம்பவங்களை செய்திளாக எழுதும் போது அதை visual லாக மனக்கண் முன் கொண்டு வருதல் கூடாது. அந்த வகையில் முக்கியமானது பாலியல் வல்லுறவு தொடர்பான செய்திகள்.
'ஆடைகளை களைந்தனர், 'கால்களை **** ' போன்ற விபரிப்புகளை கண்டிப்பாக தவிர்த்தல் வேண்டும்.

நாகரீகமான ஊடகம் ஒன்றுக்கு இருக்க வேண்டிய அடிப்படை பொறுப்புகளில் / ொறுப்புணர்வுகளில் ஒன்று இது

வித்தியா கொலை வழக்கு தொடர்பான தகவல்களை செய்தியாகும் ஊடகங்கள் பலவற்றுக்கு இந்த பொறுப்புணர்வு அறவே இல்லை என்றே தெரிகின்றது. இதே தவறை இசைபிரியா தொடர்பான விடயத்திலும் பலமுறை விட்டு இருந்தனர்

நாம் ஒரு நாகரீகமான சமூகம் அல்ல போலிருக்குது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பத்திரிகைகள் மீண்டும் மீண்டும் வன்புணர்வு  செய்கின்றன.

Link to comment
Share on other sites

சுவிற்­சர்­லாந்தின் மாபியா குழுவின் ஒப்பந்தத்திற்கு இணங்கவே வித்தியாவை கடத்தி கூட்டு வன்புணர்வு செய்து கொலை செய்தோம்

 

சுவிஸ்குமார் தன்னிடம் கூறியதாக வித்தியா படுகொலை வழக்கில் 6 ஆவது சாட்சியான முகமது இப்லார் சாட்சியம்

(ரி.விரூஷன்)

சுவிற்­சர்­லாந்தில் மாபியா குழுவைச் சேர்ந்­த­வர்கள், இளம் பெண் ஒரு­வரை கொடூ­ர­மாக வன்­பு­ணர்வு செய்து கொலை­ செய்யும் வீடியோ ஒன்றை தயார் செய்து தர­வேண்டும் என தன்­னிடம் ஒப்­பந்தம் ஒன்றை செய்­தி­ருந்­த­தற்கு அமை­யவே வித்­தி­யாவை கடத்தி கூட்டு வன்­பு­ணர்வு செய்து கொலை செய்­த­தாக சுவிஸ்­குமார் என்­னிடம் கூறினார். அத்­துடன் பெரிய அர­சி­யல்­வாதி ஒரு­வ­ரு­டைய சகோ­த­ர­ரி­னதும் பொலிஸ் உயர் அதி­காரி ஒரு­வ­ரி­னதும் உத­வி­யு­ட­னேயே யாழ்ப்­பாணம் பொலிஸ் நிலை­யத்­தி­லி­ருந்து கொழும்­புக்கு தான் தப்பிச் சென்­ற­தா­கவும் அவர் என்­னிடம் கூறினார் என்று புங்­கு­டு­தீவு பாட­சாலை மாண­வி­யான சிவ­லோ­க­நாதன் வித்­தி­யாவின் கூட்டுப் பாலியல் வல்­லு­றவு படு­கொலை வழக்கின் 6 ஆவது சாட்­சி­யான முக­மது இப்லார் மூன்று தமிழ்­மொழி பேசும் மேல்­நீ­தி­மன்ற நீதி­ப­திகள் அடங்­கிய ட்ரயல் அட்பார் நீதி­மன்­றத்தில் சாட்­சி­ய­ம­ளித்­துள்ளார்.

குறித்த மாண­வியின் கூட்டுப் பாலியல் வல்­லு­றவு படு­கொலை வழக்­கா­னது யாழ்ப்­பாணம் மேல் நீதி­மன்றில் அமைக்­கப்­பட்­டுள்ள தமிழ் மொழி பேசும் மேல் நீதி­மன்ற நீதி­ப­தி­க­ளான பாலேந்­திரன் சசி­ ம­கேந்­திரன் தலை­மை­யி­லான அன்­ன­லிங்கம் பிரே­ம்­சங்கர், மாணிக்­க­வா­சகர் இளஞ்­செ­ழியன் ஆகிய மூன்று நீதி­ப­திகள் அடங்­கிய ட்ரயல் அட்பார் நீதி­மன்றில் தொடர் விசா­ர­ணை­யாக இடம்­பெற்று வரு­கின்­றது.

நேற்­றைய தினம் தொடர் வழக்கு விசா­ர­ணையின் மூன்­றா­வது நாளாக சாட்சிப் பதி­விற்­காக மன்று கூடி­யி­ருந்­த­போது இவ் வழக்கில் 6ஆவது சாட்­சி­யான முக­மது இப்லார் என்­ப­வ­ரது சாட்சிப் பதி­வுகள் ஆரம்­ப­மா­கி­யி­ருந்­தன. இவ­ரது சாட்­சி­யத்தை அரச சட்­ட­வாதி நாக­ரட்ணம் நிஷாந்­து­டனும் ஏனைய அரச சட்­ட­வா­திகள் குழு­வி­ன­ரு­டனும் சட்­டமா பிரதி சொலி­சிட்டர் ஜெனரல் குமார் ரட்ணம் நெறிப்­ப­டுத்­தினார். இதன்­படி பிரதி சொலி­சிட்டர் ஜென­ர­லு­டைய வினாக்­க­ளுக்கு சாட்சி அளித்த சாட்சிப் பதி­வுகள் பின்­வ­ரு­மாறு;

கேள்வி :– உங்­க­ளு­டைய பெயர் என்ன?

பதில் :– முக­மது இப்லார்

கேள்வி :– வயது என்ன?

பதில் :– 46

கேள்வி :– நீங்கள் இஸ்லாம் மதத்தைச் சார்ந்­த­வரா?

பதில் :– ஆம்

கேள்வி :– உங்­க­ளு­டைய தொழில் என்ன-?

பதில் :– கம்­பி­யூட்டர் சொவ்ற்­வெயார் எஞ்­சி­னி­யறிங்

கேள்வி :– உங்­க­ளது தொழிலில் எவ்­வ­ளவு காலம் அனு­பவம் 

பதில் :– 1991 ஆம் ஆண்­டி­லி­ருந்து இத்­தொ­ழிலைச் செய்து வரு­கின்றேன்.

கேள்வி :– நீங்கள் எப்­போ­தா­வது சிறைக்குச் சென்­றீர்­களா?

பதில் :– ஆம்.

கேள்வி :– எதற்­காக சிறை சென்­றீர்கள்?

பதில் :– எனது வங்கி கட­னட்­டையை வேறு ஒரு­வ­ருக்கு பயன்­ப­டுத்தக் கொடுத்­த­போது அதில் சில மோச­டிகள் இடம்­பெற்­றி­ருந்­தன. அதில் கணக்கு உரி­மை­யாளர் நான் என்­பதால் அது தொடர்பில் கைது செய்­யப்­பட்டு சிறை­சென்றேன்.

கேள்வி :–உங்­க­ளது குற்றச் செயலை யார் விசா­ரணை செய்­தது?

பதில் :– சி.ஐ.டி.

கேள்வி :– உங்­க­ளுக்கு எத்­தனை வழக்­குகள் உண்டு-?

பதில்:– 11 வழக்­குகள் ஆரம்­பத்தில் இருந்­தன. அவற் றில் அதி­க­மான வழக்­கு­களில் இருந்து விடு­த­லை­யாகிவிட்டேன். சி.ஐ.டி.யினர் இரண்டு வழக்­கு­களை தொடுத்­துள்­ளார்கள். அந்த வழக்­கு­களே தற்­போது உள்­ளன.

கேள்வி :– அவ் வழக்­குகள் முடி­வ­டைந்து விட்­டனவா?

பதில் :– ஒரு வழக்கு முடி­வ­டைந்து இரண்டு ஆண்­ டுகள் சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

கேள்வி :– உங்­க­ளது தொழிலில் எவ்­வா­றான அனு­ப­ வத்தைக் கொண்­டி­ருக்­கி­றீர்கள்?

பதில் :– சொவ்ற்­வெயார் ஊடாக ஹக்கிங் செய்ய வேண்டும் என்­பது எனது ஆசை. அதற்­கான மென்­பொருள் ஒன்றை தயார் செய்­தி­ருந்தேன். நான் சிறைக்கு வரு­வ­தற்கு முன்பே இதில் தேர்ச்சி பெற்­றி­ருந்தேன்.

கேள்வி :– நீங்கள் ஹக்கிங் செய்­வது என எதனைக் கூறு­ கின்­றீர்கள்?

பதில் :– ஓர் கணி­னியை முழு­மை­யாக எங்­க­ளது கட்­டுப்­பாட்டில் கொண்­டு­வ­ரு­வது.

கேள்வி :– அதா­வது கம்­பி­யூட்டர் சிஸ்­ரத்தை முழு­மை­ யாக உங்­க­ளது கட்­டுப்­பாட்டில் கொண்­டு­வ­ரு­வது?

பதில் :– ஆம்.

கேள்வி :– கைய­டக்கத் தொலை­பே­சியை உங்­க­ளிடம் தந்தால் அதில் அழிக்­கப்­பட்ட தக­வல்­களை பெற முடி­யுமா? 

பதில் :– ஆம். என்னால் முடியும்.

கேள்வி :– உங்­க­ளது நிபு­ணத்­துவம் தொடர்­பாக குற்றப் புல­னாய்வுப் பிரிவு நிஷாந்த சில்­வா­வுக்கு தெரி­யுமா?

பதில் :– ஆம்.

கேள்வி :– நீங்கள் வவு­னியா சிறைச்­சா­லைக்குச் சென்­ றுள்­ளீர்­களா?

பதில் :– ஆம். வவு­னியா நீதிவான் நீதி­மன்றில் இரண்டு வழக்­குகள் இருந்­தன. அதற்­காக  வவு­னியா சிறைச்­சா­லைக்கு வந்தேன்.  

கேள்வி :– அப்­போது சி.ஐ.டி.யினரைச் சந்­திக்கும் வாய்ப்புக் கிடைத்­ததா?

பதில் :– ஆம்.

கேள்வி :– யாரைச் சந்­திக்கும் வாய்ப்புக் கிடைத்­தது?

பதில் :– ஐ.பி.நிஷாந்த. 2015 வித்­தி­யாவின் கொலை நடந்­ததன் பிற்­பாடு.

கேள்வி :– வித்­தி­யாவின் கொலை தொடர்­பான வழக்கின் சந்­தேகநபர்கள் தடுத்து வைக்­கப்­பட்­டிருந்­தார்­களா?

பதில் :– ஆம். நான் சிறையில் இருக்கும் போது அங்கு வந்­தார்கள்.

கேள்வி :– உங்­க­ளிடம் ஐ.பி. நிஷாந்­தவைப் பற்றி யாரா­ வது கேட்­டார்­களா?

பதில் :– ஆம். சுவிஸ்­குமார் கேட்டார்.

கேள்வி :– அவர் என்ன விசா­ரித்தார்?

பதில் :– நிஷாந்­த­வுக்கு எனக்கு கணினி மற்றும் கைய­டக்கத் தொலை­பே­சி­களை ஹக்கிங் செய்யத் தெரியும் என்­பது அவ­ருக்குத் தெரியும். அதனால் நிஷாந்தன் வவு­னியா சிறைச்­சா­லையில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த சமயம் கைய­டக்கத் தொலை­பே­சியில் அழிந்து போன ஒரு விட­யத்தை மீள எடுக்­க­மு­டி­யுமா எனக் கேட்­டி­ருந்தார். அதற்கு நான் என்னால் முடி­யு­மென கூறினேன். நாங்கள் பேசிக் கொண்­டி­ருந்­ததை சுவிஸ்­குமார் அவ­தா­னித்­தி­ருப்பார் என நான் நினைக்­கிறேன். இதனால் கைய­டக்கத் தொலை­பே­சியில் சாதா­ர­ண­மாக அழித்த ஒரு விட­யத்தை மீள எடுக்­க­லாமா என சுவிஸ்­குமார் என்­னிடம் கேட்டார். மென்­பொருள் மூலம் அழித்­தாலும் மீள எடுக்­க­லாமா எனக் கேட்டார். நான் என்னால் முடி­யு­மென அவ­ருக்கு கூறினேன்.

கேள்வி :– இவ் உரை­யா­டலின் பின்பு என்ன நடந்­தது?

பதில் :– எனக்கு ஓர் சந்­தேகம் இருந்­தது. கைய­டக்கத் தொலை­பே­சி­களில் சாதா­ர­ண­மாக பொது­வான முறை­யி­லேயே ஆவ­ணங்­களை அழிப்­பார்கள். மென்­பொருள் மூலம் ஆவ­ணங்­களை அழித்தால் அதில் ஏதேனும் பிரச்­சினை இருக்­கு­மென நான் நினைத்தேன். சுவிஸ்­குமார் தன்­னு­டைய கைய­டக்கத் தொலை­பே­சியைத் தந்தால் அதில் மென்­பொருள் மூலம் அழிக்­கப்­பட்ட ஆவ­ணங்­களை மீள எடுக்­க­மு­டி­யுமா எனக் கேட்டார். நான் ஆம் என்றேன்.

கேள்வி :– அதன் பின்னர் என்ன நடந்­தது?

பதில் :– நான் கொழும்பு நீதி­மன்­றத்தில் வழக்­கொன்­ றிற்­காக மகஸின் சிறைச்­சா­லைக்குக் கொண்டு செல்­லப்­பட்டேன்.

கேள்வி :– மீண்டும் வவு­னியா சிறைச்­சா­லைக்கு வந்­தீரா?

பதில் :– நான் 14 நாட்­க­ளுக்கு ஒரு­முறை வவு­னியா சிறைச்­சா­லைக்கு கொண்டு வரப்­ப­டுவேன். ஆனால் அந்த முறை கொழும்பு நீதி­மன்றில் வழக்­கொன்று திக­தி­யி­டப்­பட்­டி­ருந்­ததால் தாம­த­மா­கவே வவு­னியா சிறைச்­சா­லைக்கு கொண்டுவரப்­பட்டேன்.

கேள்வி :– அப்­போது சுவிஸ்­கு­மாரைச் சந்­தித்­தி­ருந்­ தீர்­களா?

பதில் :– ஆம்.

கேள்வி :– அவர் உங்­க­ளிடம் என்ன கேட்டார்?

பதில் :– இம்­முறை நீங்கள் தாம­த­மாக சிறைச்­சா­லைக்குக் கொண்­டு­வ­ரப்­பட்­டதன் காரணம் என்ன எனக் கேட்டார். கொழும்பு நீதி­மன்றில் வழக்­கொன்று திக­தி­யி­டப்­பட்­டி­ருந்­த­தா­லேயே தாம­த­மாக கொண்­டு­வ­ரப்­பட்டேன் எனக் கூறினேன். அதற்கு சுவிஸ்­குமார் உண்­மையில் அது­தானா காரணம் அல்­லது சி.ஐ.டி.யினர் சந்­தித்­த­மையா காரணம் எனக் கேட்டார். நான் அவ­ருக்குப் பொய் கூறினேன். ஆம் சி.ஐ.டியி­னரைச் சந்­தித்தேன் என. அதற்கு அவர் என்ன சம்­பந்­த­மாக சந்­தித்­த­தாகக் கேட்டார். நான் சுவிஸ்­கு­மா­ரிடம் கூறினேன் உங்கள் விடயம் பற்றித் தான் சந்­தித்தேன் என்று. இதன் பின்னர் ஏனைய எட்டுப் பேருக்கும் தெரி­யாமல் என்­னோடு தனி­யாகப் பேச­வேண்டும் என சுவிஸ்­குமார் கூறினார்.

கேள்வி :– அதற்­கான சந்­தர்ப்பம் கிடைத்­ததா?

பதில் :– ஆம் கிடைத்­தது.

கேள்வி :– அச்­சந்­திப்பில் என்ன விடயம் பற்றி பேசி­ னீர்கள்?

பதில் :– ஐ.பி.நிஷாந்­தவின் பல­வீனம் என்­ன­வென சுவிஸ்­குமார் என்­னிடம் கேட்டார்.

கேள்வி :– நீங்கள் கூறி­னீர்­களா?

பதில் :– எனக்குத் தெரி­யாது எனக் கூறினேன். என்ன நடக்­க­வேண்­டு­மெனக் கேட்டேன்.

கேள்வி :– அவர் என்ன பதி­ல­ ளித்தார்.?

பதில் :– எனது சகோ­தரன் மூவ­ரையும் அரச தரப்புச் சாட்­சி­யாக மாற்றித் தர­வேண்­டு­மெனக் கூறி னார். இதனைச் செய்தால் நிஷாந் ­த­வுக்கு நீங்கள் என்ன கொடுப் ­பீர்கள் எனக் கேட்டேன். அதற்கு அவர் 2 கோடி தரு­வ­தாகக் கூறி னார். இவ்­வாறு நாம் பேசிக்­கொண்­டி­ருக்­கும்­போது சுவிஸ்­கு­மாரைப் பார்ப்­ப­தற்கு யாரோ வந்­தி­ருந்­தார்கள். அதற்குப் போய்­விட்­டு­வந்து என்­னிடம் கூறினார் மூன்று பேரையும் அரச தரப்புச் சாட்­சி­யாக மாற்­ற­மு­டி­யாதாம். ஒரு­வரை மட்­டுமே மாற்­ற­மு­டியும் என்றும் அந்த ஒரு­வ­ராக தன்னை மாற்றித் தரு­மாறு கேட்­கு­மாறும் இதனை ஏனைய எட்டுப் பேருக்குக் கூற­வேண்டாம் எனவும் சுவிஸ்­குமார் என்­னிடம் கூறினார்.

கேள்வி :– அதற்குக் காரணம் என்ன என நீங்கள் கேட்­டீர்­ களா?

பதில் :– தான் சுவிற்­சர்­லாந்­தி­லி­ருந்து வந்­தி­ருப்­ப ­ தாகக் கூறினார்.

கேள்வி :– மீண்டும் சுவிஸ்­கு­மாரைச் சந்­திக்கும் போது அவர் என்ன கூறினார்.

பதில் :– தன்னை அரச தரப்பு சாட்­சி­யாக மாற்­றித்­த­ரு­ மாறு நிஷாந்­த­வுடன் பேசு­மாறே கூறினார்.

கேள்வி :– அதன் பின்னர் என்ன நடந்­தது?

பதில் :– நான் எதற்­காக அரச தரப்பு சாட்­சி­யாக உங்­களை மாற்­ற­வேண்­டு­மெனக் கேட்டேன். அதற்கு அவர் தான் சுவிற்­சர்­லாந்தில் இருந்­த­தா­கவும் அங்கு வீடியோ ஒன்று தேவைப்­ப­டு­வ­தா­கவும் ஓர் இளம் பெண்ணை கொடூ­ர­மாக வன்­பு­ணர்ந்து கொலை செய்­வது போல் வீடியோ தேவைப்­ப­டு­வ­தாக கூறினார்.

கேள்வி :– இவ் வீடியோ தேவை­யென யார் உங்­க­ளிடம் கூறி­யது என சுவிஸ்­கு­மா­ரிடம் நீர் கேட்­டீரா?

பதில் :– ஆம். அங்­குள்ள மாபியா குழு ஒன்றின் மூலம் இந்த ஒப்­பந்தம் கிடைத்­தது என்று கூறினார். அதனால் அவர் ஏனைய எட்­டுப்­பேரில் ஒரு­வ­ருக்கு இது தொடர்­பாக தெரி­வித்­த­தாக என்­னிடம் கூறினார்.

கேள்வி :– யாரிடம் தெரி­வித்­த­தாகக் கூறினார்?

பதில் :– எதிரிக் கூண்டில் நிற்கும் ஆறா­வது எதி­ரி­யி டம் தெரி­வித்­த­தாகக் கூறினார். (சாட்சி ஆறா­வது   எதி­ரியை அடை­யாளம் காட்­டு­கின்றார்) 

இதன்­போது மன்­றா­னது குறித்த சாட்­சி­யிடம் நீங்கள் அடை­யாளம் காட்­டிய ஆறா­வது எதி­ரி­யி­டம்தான் சுவிஸ்­குமார் கூறி­ய­தென்­பது எப்­படி உங்­க­ளுக்குத் தெரியும் என வினவி­யது. இதற்குச் சாட்சி சுவிஸ்­குமார் குறித்த நபரை வவு­னியா சிறைச்­சா­லையில் வைத்து தனக்கு அடை­யாளம் காட்­டி­ய­தாகக் கூறினார்.

தொடர்ந்து சாட்சி சாட்­சி­ய­ம­ளிக்­கையில்,

ஆறா­வது எதிரி வித்­தி­யாவைப் பற்றி தன்­னிடம் கூறி­ய­தா­கவும் தான் எந்த வடி­வத்தில் இருக்­க­வேண்­டு­மென கூறி­னேனோ அதே வடி­வத்தில் வித்­தியா இருப்­ப­தாக அவர் தன்­னிடம் கூறி­ய­தாக சுவிஸ்­குமார் எனக்குக் கூறினார்.

கேள்வி :– அவர் கூறிய வடி­வ­மென்ன?

பதில் :– 20 வய­துக்குக் குறைந்த இளம் பெண்­ணாக இருக்­க­ வேண்டும்.

கேள்வி :– அதன் பின்பு என்ன கூறினார்?

பதில் :– ஸ்ரீலங்­காவில் இருந்­த­வர்­க­ளிடம் ஏற்­பாடு செய்­த­தா­கவும் அதன் பின்பு தான் சுவிற்­சர்­லாந்­தி­லி­ருந்து வந்­த­தா­கவும் சம்­பவம் நடந்த அன்று தானும் இன்னும் மூன்று பேரும் கொழும்பில் இருந்­த­தா­கவும் கொழும்பில் இருந்­த­தற்கு ஆதா­ர­மாக சிசி­டிவி கமெ­ராவில் பதி­யப்­படும் வகை­யி­லான இடங்­களில் இருந்­த­தா­கவும் கூறினார். அப்­போது புங்­கு­டு­தீவில் வித்­தி­யாவை தனக்குத் தேவை­யான விதத்தில் செய்து முடித்­த­தா­கவும் கூறினார்.

கேள்வி :– சுவிஸ்­கு­மா­ருக்கு வித்­தி­யாவைத் தெரி­யுமா?

பதில் :– ஆறாம் எதிரி வித்­தி­யாவின் புகைப்­படம் ஒன்றை அனுப்­பி­ய­தாக சுவிஸ்­குமார் என்­ னிடம் கூறினார்.

கேள்வி :– அதன் பின்னர் நீங்கள் என்ன செய்­தீர்கள்?

பதில் :– கொழும்பு நீதிமன்றில் வழக்­கொன்­றிற்­காக மகஸீன் சிறைச்­சா­லைக்கு கொண்­டு­செல்­லப்­பட்டேன். அங்­கி­ருந்து ஐ.பி.நிஷாந்­த­வுக்கு தகவல் அனுப்­பினேன்.

கேள்வி :– ஏன். நிஷாந்­த­வுக்கு தகவல் அனுப்­பி­னீர்கள்?

பதில் :– எனக்கு விபரம் தெரிந்த காலத்­தி­லி­ருந்து எந்தத் தவறும் செய்­ய­வில்லை. தற்­போது நான் சிறை யில் இருப்­பதும் வேறு­றொ­ருவர் செய்த தவ­றுக்கே. எனக்கு முன்னால் தவ­றொன்று நடப்­பதை நான் அனு­ம­திக்கமாட்டேன்.

கேள்வி :– ஐ.பி. நிஷாந்த உங்­களை சந்­தித்­தாரா?

பதில் :– இல்லை. ராஜ­ப­க் ஷவும் வே­றொ­ரு­வ­ருமே வந்­தார்கள். அவர்­க­ளிடம் சுவிஸ்­குமார் எனக்­குக்­கூ­றி­யதை அவர்­க­ளிடம் கூறினேன். அதன்­பின்னர் ஐ.பி.நிஷாந்த வந்­த­போது அவ­ரி­டமும் இதனைக் கூறினேன்.

கேள்வி :– அவர்கள் என்ன செய்­தார்கள்.

பதில் :– மகஸீன் சிறைச்­சா­லையில் வைத்து என்­ னிடம் வாக்­கு­மூலம் எடுத்­தார்கள்.

கேள்வி :– இது தொடர்­பாக நீதி­மன்றில் வாக்­கு­மூலம் ஏதேனும் கொடுத்­தீர்­களா?

பதில் :– ஆம். ஊர்­கா­வற்­றுறை நீதி­மன்றில்.

கேள்வி :– மீண்டும் சுவிஸ்­கு­மாரைச் சந்­தித்­தீரா?

பதில் :– ஆம்.

கேள்வி :– அவர் அப் போது என்ன செய்தார்?

பதில் :– மிகவும் கோப­மாக இருந்தார். என்னை அச்­சு­றுத்­தினார். நீதி­மன் றில் நீ இது தொடர்­பாக கூறினால் உனது மற்­றைய வழக்­கு­க­ளுக்குச் செல்லும் போது உயிர் ஆபத்து ஏற்­ப­டுத்­தலாம் எனக்­கூறி அச்­சு­றுத்­தினார். எனது குடும்­பத்தார் தொடர்­பிலும் அச்­சு­றுத்தல் விடுத்தார்.

கேள்வி :– குடும்­பத்­தா­ருக்கு என்ன செய்­யப்­போ­வ­தாக கூறினார்?

பதில் :– முன்னர் சுவிஸ்­குமார் தொடர்பில் பேசும் போது வித்­தி­யாவை வன்­பு­ணர்வு செய்­யும்­போது அந்த இடத்தில் தான் இருந்­தி­ருந்தால் தானே முதலில் அவளை வன்­பு­ணர்ந்­தி­ருப்பேன் எனக் கூறி­யி­ருந்தார். அது­போல எனது மனை­விக்கும் நடக்கும் என்றும் கூறி அச்­சு­றுத்­தினார்.

கேள்வி :– ஏன் முதலில் தான் வித்­தி­யாவை வன்­பு­ ணர்ந் தி­ருப்பேன் எனக்­கூ­றினார்?

பதில் :– பிள்­ளையின் உட­லைப்­பார்க்­கும்­போது ஆசை வந்த­தாக கூறினார்.

கேள்வி :– ஊர்­கா­வற்­றுறை நீதி­மன்றில் எங்கே வைத்து வாக்­கு­மூலம் கொடுத்தீர்?

பதில் :– நீதி­வா­னது சமா­தான அறையில்

கேள்வி :– வித்­தி­யாவை வன்­பு­ணர்வு செய்து கொலை செய்­யும்­போது எடுக்­கப்­பட்ட வீடியோ தொடர்­ பாக ஏதேனும் கூறி­னாரா?

பதில் :– ஆம். அதனை கூகுள் ரவைவ் மூலம்

  சுவி­ஸுக்கு அனுப்­பி­ய­தாகக் கூறினார்.

கேள்வி :– உமது அனு­ப­வத்­தின்­படி கூகுள் ரவைவில் அனுப்­பு­வது தொடர்­பாக கூற­மு­டி­யுமா?

பதில் :– ஆம். கூகுள் ரவை­வினை மின்­னஞ்சல் கணக்­கொன்றின் ஊடாக செயற்­ப­டுத்த முடியும். அவ் கூகுள் ரவைவின் ரக­சிய இலக்­கங்கள் தெரிந்தால் யாரும் எங்­கி­ருந்தும் அதனை திறந்து பார்க்­க­மு­டியும்.

கேள்வி :– வித்­தி­யாவை கொலை செய்­தமை தொடர்­ பாக ஏதேனும் கூறி­னாரா?

பதில் :– ஆம். வித்­தி­யாவை கொலை செய்த இடத்­திற்கு அண்­மையில் கடற்­படை முகாம் ஒன்று இருப்­ப­தா­லேயே அதற்கு அண்­மை­யாக வித்­தி­யாவை வன்­பு­ணர்வு செய்து கொலை செய்து போட்­ட­தா­கவும். இத­ னூ­டாக கடற்­ப­டை­யினர் பக்கம் இதனை திசை திருப்ப முயற்­சித்­த­தா­கவும் கூறி­யி­ருந்தார்.

கேள்வி :– சுவிஸ்­குமார் யாழ்ப்­பாணத்­தி­லி­ருந்து தப்பிச் சென்­றது தொடர்­பாக ஏதேனும் கூறி­னாரா?

பதில் :– ஆம். யாரோ ஒரு பெரிய அர­சியல் வாதியின் சகோ­தரர் உடைய உத­வி­யுடன் பொலிஸ் நிலை­யத்­தி­லி­ருந்து வைத்­தியசாலைக்குச் சென்­ற­தா­கவும். பின்னர் அந்த அர­சியல்வாதியின் சகோ­தரர் ஏற்­பாடு செய்­தி­ருந்த வாக­னத்தில் பொலிஸ் உயர் அதி­காரி ஒரு­வ­ரு­டைய உத­வி­யுடன் கொழும்பு சென்­ற­தாக கூறினார்.

கேள்வி :– சுவிஸ்­கு­மாரை அடை­யாளம் காட்ட முடி­யுமா?

பதில் :– ஆம். (சாட்சி எதி­ரிக்­கூண்டில் நிற்கும் 9

           ஆவது எதி­ரியை அடை­யாளம் காட்­டினார்)

இதனைத் தொடர்ந்து குறித்த சாட்­சி­யினை எதி­ரிகள் தரப்பு சட்­டத்­த­ர­ணிகள் குறுக்கு விசா­ரணை செய்­தி­ருந்­தார்கள். இதன்­படி 1,2,3,6 ஆகிய எதி­ரிகள் சார்பில் முன்­னி­லையான சட்­டத்­த­ரணி மகிந்த ஜெய­வர்தன குறுக்கு விசா­ரணை செய்­யும்­போது,

கேள்வி :– சாட்­சி­யா­கிய நீரும் கிரி­தரன் என்­ப­வரும் எதி­ரிக்­கூண்டில் நிற்­ப­வர்­களின் எனது கட்­சிக்­கா­ரரை அடித்து வாக்­கு­மூ­லத்தைப் பதிந்து அவர்­க­ளது கையொப்­பத்தை பெற்­றுள்­ளீர்கள் என நான் கூறு­கின்றேன்.

பதில் :– இல்லை.

கேள்வி :– ஐ.பி.நிஷாந்த சில்­வா­வுடன் நெருக்கமாக காண்­பித்து இவர்­க­ளிடம் பணம் பறிக்க முயற்சித்துள்ளீர்.

பதில் :– இல்லை.

கேள்வி :– இத்திட்டம் வெற்றியளிக்காததால் ஐ.பி. நிஷாந்த சில்வா தயார் செய்த பொய் வாக்குமூலத்தை ஊர்காவற்றுறை நீதிமன்றில் கூறியுள்ளீர்.

பதில் :– இல்லை.

இதன் பின்னர் ஐந்தாவது எதிரியின் சார்பில் முன்னி லையான சட்டத்தரணி கேதீஸ்வரன் குறுக்கு விசார ணை செய்யும் போது,

கேள்வி :– வவுனியா சிறைச்சாலையில் இவ் எதிரிகளிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலம் பதியும் போது நீர் அவ்விடத்திற்கு போக முடியுமா?

பதில் :– வாக்குமூலம் பதிவுசெய்யும் சிறைச்சாலையின் தலைமை அறைக்கு அண்மையாகவே கைதிகளை பரிசோதனை செய்யும் வைத்தியர்கள் வருவதுண்டு. அச்சமயம் வைத்தியர்கள் பரிசோதனை செய்வதற் காக நானும் மேலும் இருவருமாக அங்கு சென்றிருந் தோம். நான் முதலாவதாக பரிசோதனைக்குச் சென்று பரிசோதனை முடித்து வெளியே வந்திருந்தேன். ஏனைய இருவருக்கும் பரிசோதனை முடிந்த பின்பே மூன்றுபேரையும் ஒன்றாகவே சிறைக்கூண்டுக்கு அனுப்புவார்கள். அச்சமயத்தில் மற்றைய இருவர் வரும்வரை நான் வெளியில் நின்றபோது நிஷாந்த சில்வாவும் அவ்விடத்தில் நின்றார். ஏனைய அதிகாரி கள் அவர்களிடம் வாக்குமூலம் பதிவுசெய்து கொண்டி ருந்தார்கள். இதன்போதே நிஷாந்த சில்வாவிடம் நான் பேசியிருந்தேன்.

இதனைத் தொடர்ந்து குறித்த சாட்சி இவ்வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவதாக மன்றானது கட்டளை யிட்டது.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-07-01#page-6

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொந்த இனத்தை கொலை செய்து 
அதை ரசித்து வாழ கருணா ஈப்பிடிப்பி  புளட் 
என்று ஒரு கும்மல் இருக்கும்போது 

எங்கோ இருக்கும் இளம் சிறு பெண்களை 
துன்புறுத்தி கொலை செய்வதை ரசிக்க  ஒரு மாவீயா கும்பல் 
இருக்குது என்பது எனக்கு ஆச்சரியமாக இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே பதிவு செய்யும் பலரும், நிழலி உட்பட தீர்ப்பு வழங்கிக் கொண்டு இருக்கின்றனர்.

தவறு என்பேன்.

நடந்த ஒரு குருரத்தினை, வைத்து நீதிமன்றில் நிறுத்தப் பட்டவர்கள் மீது வெறுப்பை உமிழ்ந்ததின் விளைவினை ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பார்த்தோம். செய்தவர்கள் தப்பிவிட, மாட்டியவர்கள் தண்டனை அனுபவிக்கும் குரூரம்.

இவர்கள் தான் இதை செய்தார்களா? அல்லது செய்தவர்கள் தப்பி விட்டார்களா என்பதை அறிய தீர்ப்பு வரும் வரை பொறுத்திருக்க வேண்டும்.

இந்த விசாரணையின் நோக்கமே அதுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Maruthankerny said:

சொந்த இனத்தை கொலை செய்து 
அதை ரசித்து வாழ கருணா ஈப்பிடிப்பி  புளட் 
என்று ஒரு கும்மல் இருக்கும்போது 

எங்கோ இருக்கும் இளம் சிறு பெண்களை 
துன்புறுத்தி கொலை செய்வதை ரசிக்க  ஒரு மாவீயா கும்பல் 
இருக்குது என்பது எனக்கு ஆச்சரியமாக இல்லை. 

அதுகளையே  நாங்க   மறந்திட்டமாம்

 மன்னிச்சிட்டமாம்...??tw_cry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, நிழலி said:

சில வகை சம்பவங்களை செய்திளாக எழுதும் போது அதை visual லாக மனக்கண் முன் கொண்டு வருதல் கூடாது. அந்த வகையில் முக்கியமானது பாலியல் வல்லுறவு தொடர்பான செய்திகள்.
'ஆடைகளை களைந்தனர், 'கால்களை **** ' போன்ற விபரிப்புகளை கண்டிப்பாக தவிர்த்தல் வேண்டும்.

நாகரீகமான ஊடகம் ஒன்றுக்கு இருக்க வேண்டிய அடிப்படை பொறுப்புகளில் / ொறுப்புணர்வுகளில் ஒன்று இது

வித்தியா கொலை வழக்கு தொடர்பான தகவல்களை செய்தியாகும் ஊடகங்கள் பலவற்றுக்கு இந்த பொறுப்புணர்வு அறவே இல்லை என்றே தெரிகின்றது. இதே தவறை இசைபிரியா தொடர்பான விடயத்திலும் பலமுறை விட்டு இருந்தனர்

நாம் ஒரு நாகரீகமான சமூகம் அல்ல போலிருக்குது

நாமும் (யாழில் )செய்தியை இணைக்கும் பொழுது அந்த பெண்ணின் நிழற்படத்தை பிரசுரிக்காமல் விட்டால் நல்லது என நினைக்கிறேன் யாழ் ஒரு முன்னுதாரணமாக இந்த விடயத்தில் செயல்படலாம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வழக்கினூடாக இன்னொரு விசயம் நுட்பமாக உள்நுழைக்கப்பட்டு நகர்த்தப்படுகிறது..

அதாவது..

கடற்படை மீது பழிபோட வேண்டும் என்ற நோக்கில்.. அது கடற்படை முகாமுக்கு அருகில் செய்யப்பட்டது..

மாவியாக் கும்பலுக்காக...  தமிழ் குழுக்கள் பாலியல் வன்கொடுமை.. கொலை வீடியோக்களை தயாரித்தன...

நாளை.. இதை எல்லாம் கூட்டிக் கழித்து.. முன்னைய வன்கொடுமைகளும் இப்படித்தான் நடந்திருக்கும்.. போர்க்குற்றக்காணொளிகளும் இப்படியே தான் தயாரிக்கப்பட்டிருக்கும்.. என்றும்.. கூறி வைக்கலாம்.

இதன் மூலம்.. கொடும் மனித இனப்படுகொலைகளைப் புரிந்த சிங்களப் படைகளுக்கு வெள்ளையும் அடிக்கலாம்.. இந்த வழக்கின் முக்கியத்துவம்.. கருதி இது இங்கு நுழைக்கப்பட்டிருக்கவும் கூடும்.

இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால்..

இந்தக் கொலைக்குற்றவாளிகள்.. சொறீலங்கா... அரசியல்.. பாதுகாப்புப் பிரிவுகளோடு நன்கு தொடர்பில் இருந்திருக்கிறார்கள்.. என்பது தான். அவர்களை பாதுகாக்க சிங்கள பாதுகாப்புப் பிரிவுகள் உதவி வழங்கியும் உள்ளன.

ஆகவே இந்த வழக்கு விசாரணைகளும் அதன் போக்கும்.. சரியாகக் கண்காணிக்கப்படுவதோடு.. இந்தக் கொடுமை நடக்கக் காரணமாக இருந்தவர்களும் அவர்களை பாதுகாக்க நின்றவர்களும்.. அவர்களுக்கு பாதுகாப்பளித்தவர்களும்.. அவர்களின் பின்புலத்தில் இயங்கவர்களும் எந்தப் பாகுபாடுமின்றி.. விசாரணை முடிவில் தண்டிக்கப்பட வேண்டும். அதை இந்த விசாரணை அமையம் செய்யுமா...??!:rolleyes:

Link to comment
Share on other sites

வித்தியா படுகொலை வழக்கின் தொடர் விசாரணை: மேலும் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின

 

 

 
 

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை தொடர்பில் இடம்பெற்று வரும் ட்ரையல் அட்பார் விசாரணைகளில் இன்று 11 பேரின் சாட்சியங்கள் பதிவுசெய்யப்பட்டன.

இது தவிர வித்தியா கொலை வழக்குடன் தொடர்புடைய 36 சாட்சியங்களில் ஐவரின் சாட்சியங்களை பிரதி சொலிஸ்டர் ஜெனரல் குமார் ரட்ணம் விடுத்த வேண்டுகோளின் பிரகாரம் நீதிபதிகள் குழு வழக்கிலிருந்து இன்று விடுவித்துள்ளது.

இதேவேளை மாணவி வித்தியாவின் சடலம் காணப்பட்ட நிலை தொடர்பில் இன்று சாட்சியமளிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலை வழக்கின் தொடர் விசாரணை நான்காவது நாளாக இன்று (03) யாழ். மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இன்றைய விசாரணையின் போது முதலாவதாக 09 ஆம் இலக்க சாட்சியாளரான சிறுவனொருவன் சாட்சியமளித்துள்ளார்.

குறித்த சாட்சியம் சிறுவன் என்பதால் அவர் சாட்சியமளிப்பதற்கு தகுதியானவரா என்பது தொடர்பில் ஆராய்ந்ததன் பின்னரே சாட்சியம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

விசாரணைகளின் இடையில் சிறுவனுக்கு தலைச்சுற்று ஏற்பட்டமையால் சுமார் பத்து நிமிட இடைவேளையின் பின்னர் மீண்டும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வித்தியாவின் கொலை நடைபெற்ற இடத்திற்கு அருகில் இரண்டாம் இலக்க எதிரியை தான் கண்டதாகவும், அலரிமரம் நிறைந்த பற்றைக்காட்டிலிருந்து முனகல் சத்தமும் கேட்டதாக ஒன்பதாம் இலக்க சாட்சியாளர் மன்றில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் இரண்டு நாட்களுக்கு பின்னர் பாடசாலை அதிபரிடமும், குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளிடமும் தான் தெரிவித்திருந்ததாகவும் சிறுவன் சாட்சியமளித்துள்ளார்.

இதேவேளை, சம்பவ தினத்தன்று குறித்த பகுதியில் நின்று கொண்டிருந்த எதிரியையும் மன்றில் இன்றைய தினம் சிறுவன் அடையாளங் காட்டியுள்ளதுடன், அவர் அணிந்திருந்த ஆடையையும் அடையாளங் காட்டியுள்ளார்.

அரச பகுப்பாய்வு திணைக்களத்திலிருந்து மன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்த பொதியிலிருந்த ரீ-சேட் ஒன்றை அடையாளங் காட்டிய சிறுவன், அன்றைய தினம் இரண்டாம் எதிரி இதையே அணிந்திருந்ததாகவும் கூறியுள்ளார்.

சம்பவம் நடந்த இடத்தில் எவ்வித சத்தமும் கேட்கவில்லை எனவும், அங்கு எவரையும் காணவில்லை எனவும், பற்றைக் காட்டிற்கு முன்னாள் உள்ள அம்மன் கோவிலடியில் வித்தியாவை தான் கண்டதாகவும் சாட்சியமளித்துள்ளார்.

இதனை தொடர்ந்து நான்காம் இலக்க சாட்சியாளரிடம் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வித்தியாவின் சடலம் காணப்பட்ட இடத்தில் இரண்டு பேரை மறுநாள் காலை கண்டதாக நான்காம் இலக்க சாட்சியாளர் மன்றில் கூறியுள்ளார்.

இரண்டாம் மற்றும் மூன்றாம் இலக்க எதிரிகளையே தான் கண்டதாகவும், அவர்களில் இரண்டாம் இலக்க எதிரி தன்னுடைய தங்கையின் கணவர் எனவும் சாட்சியாளர் கூறியுள்ளார்.

குறித்த இரண்டு எதிரிகளையும் அவர் இன்றைய தினம் மன்றில் அடையாளங் காட்டியுள்ளார்.

இதனை தொடர்ந்து வித்தியாவின் சடலத்தை முதலில் கண்ட 07 ஆம் இலக்க சாட்சியாளர் சாட்சியமளித்துள்ளார்.

வித்தியாவின் அண்ணாவுடன் தானும் அவளை தேடிச் சென்றதாகவும், சம்பவ தினத்திற்கு முதல் நாள் வித்தியாவை தான் கண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

பஸ்ஸிலிருந்து இறங்கி சைக்கிளை எடுத்துக் கொண்டு போகும் போது அந்த இடத்தில் நிறுத்தியிருந்த வேனிலிருந்து சுவிஸ் குமார் உள்ளிட்ட 6 பேர் வித்தியாவை பார்த்துக் கொண்டிருந்ததாகவும் 07 ஆம் இலக்க சாட்சியாளர் தெரிவித்துள்ளார்.

சுவிஸ் குமார் உள்ளிட்ட 4 பேரை மாத்திரமே தனக்கு அடையாளம் தெரியும் எனவும், ஏனைய இருவரும் யாரென தெரியாது எனவும் கூறியுள்ளார்.

குறித்த 4 எதிரிகளையும் அவர் இன்று மன்றில் அடையாளங் காட்டியுள்ளார்.

இதேவேளை, வித்தியாவின் சடலத்தை கண்டவுடன் வித்தியாவின் அண்ணன் மயங்கி விழுந்ததை அடுத்து தான் ஊர் மக்களுக்கு அறிவித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வித்தியாவின் இரண்டு கால்களும் அகலமாக இழுத்து அலரி மரத்தில் பட்டியால் கட்டப்பட்டிருந்ததாகவும், கைகள் இரண்டும் பிடரிப்புரமாக வைத்தி தலைமுடியுடன் கும்பிடு கட்டு கட்டப்பட்டிருந்ததாகவும், காதுகளில் புழுக்கள் வந்துக் கொண்டிருந்ததாகவும் ஏழாம் இலக்க சாட்சியாளர் கூறியுள்ளார்.

முகம் மூடியிருந்த போது அது வித்தியாதான என்பதை எவ்வாறு அடையாளம் கண்டீர்கள் என நீதிபதிகள் வினவியுள்ளனர்.

வித்தியாவின் அண்ணன் தான் கண்டு சொன்னார் என சாட்சியாளர் கூறியுள்ளார்.

பிரதிவாதிகள் சார்பில் ஆஜராகியிருந்த சட்டத்தரணிகள் சாட்சியாளரிடம் குறுக்கு கேள்விகளை தொடுத்துள்ளனர்.

சுவிஸ் குமார் கறுப்பு கண்ணாடி அணிந்திருந்ததால் அவர்தான் என்பதை எவ்வாறு அடையாள கண்டீர்கள் என கேட்டுள்ளனர்.

அவர்கள் இருந்த வேன், தான் நின்ற இடத்திலிருந்து 15 அடி தூரத்தில் மாத்திரமே இருந்ததாகவும், அதில் சுவிஸ் குமார் சாரதிக்கு அருகில் இருந்ததாகவும் சாட்சியமளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து புங்குடுதீவிலுள்ள 15 ஆவது இலக்க சாட்சியாளர் சாட்சியமளித்திருந்தார்.

தான் வேலனைக்கு சென்ற போது குறித்த பகுதியில் 05 ஆம் இலக்க எதிரியை கண்டதாகவும், சரத்துடன், சிவப்பு நிற ரீ-சேட்டுடன் அவர் அந்த பகுதியில் அவசர அவசரமாக சென்றதை கண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

05 ஆம் இலக்க எதிரியை கண்ட இடத்திலிருந்து சுமார் 200 மீற்றர் தொலைவிற்குள் வித்தியாவின் சடலம் காணப்பட்டதாகவும் அவர் தனது சாட்சியில் குறிப்பிட்டுள்ளார்.

வித்தியாவின் சடலத்தை தாங்கள் பார்த்துக் கொண்டிருந்த போது 05 ஆம் இலக்க எதிரி அங்கு வந்து சுமார் 10 நிமிடங்கள் சடலத்தை பார்த்துக் கொண்டிருந்ததாகவும் 15 ஆம் இலக்க சாட்சியாளர் தனது சாட்சியத்தில் தெரிவித்துள்ளார்.

சிவலோகநாதன் வித்தியா கூட்டு வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கு யாழ். மேல் நீதிமன்றத்தில் ட்ரயல் அட்பார் முறையில் விசாரிக்கப்படுகிறது.

ட்ரயல் அட்பார் விசாரணை, மேல் நீதிமன்ற நீதிபதிகளான மாணிக்கவாசகர் இளஞ்செழியன், அன்னலிங்கம் பிறேம்சங்கர் ஆகியோருடன் பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில், இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

விசேட வழக்கு தொடுநரான சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் குமார ரட்ணம் மற்றும் யாழ். மேல் நீதிமன்ற அரசதரப்பு சட்டத்தரணி நிஷாந்த் நாகரட்ணம் ஆகியோர் இந்த வழக்கில் ஆஜராகியுள்ளனர்.

 

http://newsfirst.lk/tamil/2017/07/வித்தியா-படுகொலை-வழக்கி/

Link to comment
Share on other sites

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு மரபணு பரிசோதனை உள்ளிட்ட முக்கிய அறிக்கைகள் ரயலட் பாரிடம் பாரப்படுத்தப்பட்டது.

 

புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட முன்னர் ஆலடி சந்தியில் சுவிஸ் குமார் கறுத்த கண்ணாடி அணிந்தவாறு டெல்பின் ரக வாகனத்தில் இருந்து வித்தியாவை பார்த்து கொண்டு இருந்தார். அப்போது அவருடன் வாகனத்தில் ஆறு பேர் இருந்தனர் அவர்களும் வித்தியாவையே பார்த்தனர். என குறித்த வழக்கின் 7ஆவது சாட்சியான ஞானேஸ்வரன் இலங்கேஸ்வரன் சாட்சியம் அளித்துள்ளார்.

 
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு விசாரணைகளின் நான்காம் நாள் சாட்சி பதிவுகள்,  இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதியின் இரண்டாம் மாடியில் மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும்  மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில் நீதாய விளக்கம் ( ரயலட் பார் )  முறைமையில் நடைபெற்றது.
 
பிரதி சொலிஸ்டர் ஜெனரல் வழக்கை நெறிப்படுத்தினார். 
 
இன்றைய வழக்கு விசாரணைகளின் போது  பிரதி சொலிஸ்டர் ஜெனரல் குமார் இரட்ணம் தலைமையில் அரச சட்டவாதிகளான நாகரத்தினம் நிஷாந்த்,  லக்சி டீ சில்வா மற்றும் சட்டத்தரணி  மாலினி விக்னேஸ்வரன் ஆகியோர் முன்னிலையாகி இருந்தனர்.
 
எதிரிகள் சார்பில்  5 சட்டத்தரணிகள் முன்னிலை. 
 
1ம் ,2ம் , 3ம் , 5ம் மற்றும் 6ம் எதிரிகள் சார்பில் சட்டத்தரணி  மஹிந்த ஜெயவர்த்தன , எம். என். நிஷாந்த  மற்றும் சட்டத்தரணி சரங்க பாலசிங்க , ஆகியோரும் 5ம் எதிரியின் சார்பில் சட்டத்தரணி  ஆறுமுகம் ரகுபதியும் 4ம், 7ம் , மற்றும் 9ம் எதிரிகள் சார்பில் சட்டத்தரணி சின்னராசா கேதீஸ்வரன் ஆகியோர் முன்னிலையாகி இருந்தனர். அத்துடன் 8ஆம் எதிரி சார்பிலும் மன்றினால் ஒன்று தொடக்கம் 9 வரையிலான எதிரிகள் சார்பில் நியமிக்கப்பட்ட சட்டத்தரணி விக்னேஸ்வரன் ஜெயந்தாவும் முன்னிலை ஆகி இருந்தார்.
 
எதிரிகள் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.
 
எதிரிகளான பூபாலசிங்கம் இந்திரகுமார்,  பூபாலசிங்கம் ஜெயக்குமார்,  பூபாலசிங்கம் தவக்குமார் , மகாலிங்கம்  சசிதரன் , தில்லைநாதன் சந்திரகாசன் , சிவதேவன் துஷாந்த் , பழனி ரூபசிங்கம் குகநாதன் , ஜெயதரன் கோகிலன் , மற்றும் மகாலிங்கம் சசிக்குமார் ஆகிய ஒன்பது எதிரிகளும் மன்றில் முற்படுத்தப்பட்டனர்.
 
அதனை தொடர்ந்து இன்றைய தினம் நான்காம் நாள் சாட்சி பதிவுகள் ஆரம்பமானது.
 
DNA அறிக்கை உட்பட ஆவணங்கள் பாரப்படுத்தப்பட்டன. 
 

இன்றைய வழக்கு விசாரணையின் போது , குறித்த வழக்கின் மரபணு பரிசோதனை அறிக்கை , மொரட்டுவா பல்கலைகழக கணணி விஞ்ஞான பீடத்தின் அறிக்கை உட்பட வழக்குடன் தொடர்புடைய ஆவணங்கள் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றினால் நீதாய விளக்கத்திற்கு  (ரயலட் பார்)    பரப்படுத்தப்பட்டது.

 
குற்ற பத்திரிகையில் திருத்தம். 
இன்றும் 02 சாட்சியங்கள் , 02 சான்று பொருட்கள் இணைப்பு. 

 

 
அதனை தொடர்ந்து வழக்கு விசாரணைகள் காலை 9.30 மணியளவில் ஆரம்பமானது. அதன் போது பிரதி சொலிஸ்டர் ஜெனரல் குமார் இரட்ணம் குற்ற பத்திரிகையில் , திருத்தம் செய்வதற்கு மன்றின் அனுமதியினை கோரினார்.
 
அதற்கு மன்று அனுமதித்ததை அடுத்து , புதிதாக  மாணவி கொலை நடைபெற்ற கால பகுதியில் யாழ்ப்பான போலிஸ் நிலைய பொறுப்பதிகாரியான ரஞ்சித் பாலசூரியா உட்பட இரண்டு போலிஸ் சாட்சியங்களையும் இரண்டு சான்று பொருட்களையும் இணைத்து கொள்ள அனுமதி கோரினார். அதனையும் மன்று ஏற்றுக்கொண்டது.
 
இன்றைய தினம் சேர்த்துக்கொள்ளப்பட்ட இரண்டு புதிய சாட்சியங்களுடன் இந்த வழக்கில் 51 சாட்சியங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து சாட்சி பதிவுகள் ஆரம்பமானது.
 
சாட்சியத்தின் தகுதி மன்றினால் பரிசோதனை. 
 
அதன் போது குறித்த வழக்கின் 09ஆவது சாட்சியமான , மணிவண்ணன் தனுராம் சாட்சியம் அளிக்கையில் , குறித்த சாட்சியம் 13 வயது சிறுவனாக காணப்பட்டதனால் , மன்றானது சாட்சியத்தின் தகுதியினை பரிசோதனை செய்யுமுகமாக , சிறுவனின் முழுப்பெயர் , தாய் , தந்தையின் முழு பெயர்கள் , கல்விகற்கும் பாடசாலை , வயது எதற்காக இங்கே (மன்றுக்கு ) வந்துள்ளீர் போன்ற கேள்விகளை சாட்சியத்திடம் கேட்டது. அதற்கு சாட்சியம் உரிய பதில்களை வழங்கியதை அடுத்து சாட்சி மன்றில் சாட்சியம் அளிப்பதற்கு தகுதியுடையது என மன்று தீர்மானித்து சாட்சி பதிவுகள் மேற்கொள்ளப்பட்டன.
 
சாட்சிக்கு தலைச்சுற்று. 10 நிமிடம் விசாரணை ஒத்திவைப்பு. 
 
அதன் போது குறித்த சாட்சியம் சாட்சி அளிக்கையில் , நான் புங்குடுதீவில் வசிக்கின்றனான். புங்குடுதீவு மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கிறேன். நான் தினமும் வீட்டில் இருந்து சின்ன ஆலடி பகுதி (மாணவி படுகொலை செய்யபப்ட்ட இடத்திற்கு அருகில் உள்ள பகுதி ) ஊடாக தான் பாடசாலை செல்வேன்.
 
இவ்வாறாக குறித்த சாட்சியம் சாட்சி வழங்கி கொண்டு இருந்த வேளை தனக்கு தலைச்சுற்று ஏற்பட்டு உள்ளதாக மன்றிலே சாட்சியான சிறுவன் தெரிவித்தான். அப்போது மன்று காலையில் சாப்பிடவில்லையா ? என சிறுவனிடம் கேட்ட போது இல்லை என சொன்னதை அடுத்து வழக்கு சுமார் பத்து நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டு , சிறுவனுக்கு உணவு வழங்கப்பட்ட பின்னர் மீண்டும் சாட்சி பதிவுகள் தொடர்ந்தன.
 
“ம் … ம் .. ” என சத்தம் கேட்டது .
 
சிறுவன் தொடர்ந்து சாட்சியம் அளிக்கையில் ,  சம்பவ தினம் நானும் என்னுடன் ஒரே வகுப்பில் கல்வி கற்கும் சக மாணவனான தனுஜனும் துவிச்சக்கர வண்டியில் சென்றோம்.  அது தனுஜனின் சைக்கிள். அவன் தான் ஓடினான். நான் பின்னால் இருந்து சென்றேன்.
 
செல்லும் போது சின்ன ஆலடிக்கு அருகில் தனுஜனின் செருப்பு கழன்று வீதியில் வீழ்ந்து விட்டது. அவன் சிறிது தூரம் சென்று சைக்கிளை நிறுத்தினான். நான் பின்னால் இருந்து இறங்கி சென்று செருப்பை எடுத்து வர சென்றேன்.
 
அந்த நேரம் வீதி ஓரமாக அலரி மரங்கள் உள்ள பகுதியில் ரவிமாமா (இரண்டாம் எதிரியான பூபாலசிங்கம் ஜெயக்குமார்) மஞ்சள் கலர் ரீ.சேர்ட்டுடன் நின்றார். அப்போது “ம் .. ம் .. ” என சத்தம் கேட்டது நான் முதலில் பேய் என்று பயந்தேன். ஏனெனில் அந்த வீதியில் சனநடமாட்டம் இருப்பதில்லை. வழமையாக பாடசாலை செல்லும் போது , சின்ன ஆலடி பகுதிக்கு கிட்ட வந்ததும் வேகமாகவே செல்வோம்.
 
அன்றும் அந்த சத்தத்தை பேய் என்று பயந்தாலும் , அது மாடு கத்தும் சத்தம் போன்று இருந்தது. மன பயம் இருந்ததினால் செருப்பை எடுத்து தனுஜனிடம் கொடுத்ததும் அவன் போட்டுக்கொண்டு நாங்கள் இருவரும் அந்த இடத்தில் இருந்து பாடசாலைக்கு சென்று விட்டோம்.
 
மறுநாள் 14 ஆம் திகதி நான் பாடசாலை செல்ல அம்மாவுடன் சென்ற போது ஊரில் உள்ள ஒருவர் அம்மாவிடம் வித்தியா அக்கா இறந்த விடயத்தை சொன்னார். அம்மாவுடனே என்னிடம் சொன்னார் , இத வீட்ட ஓடிப்போய் அண்ணாவுக்கு சொல்லு என நான் வீட்ட போய் அண்ணாவுக்கு சொன்னேன். பின்னர் நான் பாடசாலையும் செல்லவில்லை.
 
சம்பவம் நடந்து சில நாட்களின் பின்னர் நான் பாடசாலை சென்ற போது அதிபர் கேட்டார் நீங்கள் பாடசாலை வரும் போது எதனையும் கண்டீர்களா ? என நான் அப்போது “ம் .. ம் .. ” என்ற சத்தம் கேட்ட விடயத்தை அதிபரிடம் சொன்னேன். அது தொடர்பில் வேறு யாருக்கும் பிறகு சொல்லவில்லை. பின்னர் குற்ற தடுப்பு புலனாய்வு பிரிவினருக்கே சொன்னேன். என சாட்சியம் அளித்தான்.
 
அதையடுத்து சாட்சியான சிறுவனிடம் பிரதி சொலிஸ்டர் ஜெனரல் ரவிமாமா என்பவரை அடையாளம் காட்ட முடியுமா என சாட்சியான சிறுவனிடம் கேட்டார்.
 
எதிரியையும் ரீ. சேர்ட்டையும் அடையாளம் காட்டினார். 
 
அதற்கு சிறுவன் ஆம் என பதிலளித்து எதிரி கூண்டில் நின்ற இரண்டாம் எதிரியான  பூபாலசிங்கம் ஜெயக்குமாரை சாட்சி கூண்டில் நின்று அடையாளம் காட்டினான்.
 
அதையடுத்து அன்றைய தினம் ரவிமாமா போட்டு இருந்த ரீ. சேர்ட்டை அடையாளம் காட்ட முடியுமா ? என கேட்டதற்கு சிறுவன் ஆம் என பதிலளித்தான். அதனை அடுத்து மன்றினால் சான்று பொருளான ரீ. சேர்ட்ட சிறுவனிடம் காட்டிய போது சிறுவன் மஞ்சள் நிற ரீ. சேர்ட்ட அடையாளம் காட்டினான்.
 
அதனை தொடர்ந்து குறித்த சாட்சியம் முடிவுறுத்தப்பட்டு , சாட்சி விடுவிக்கப்பட்டது.
 
எதனையும் காணவில்லை. 
 
தொடர்ந்து பத்தாவது சாட்சியான இலங்கேஸ்வரன் தனுஜன் சாட்சியமளிக்க முற்பட்ட வேளை, குறித்த சாட்சியம் 13 வயதுக்கு உட்பட்ட சிறுவன் என்பதனால் சாட்சி அளிக்க தகுதி உடையவரா என மன்றானது பரிசோதித்து , குறித்த சாட்சியம் சாட்சி அளிக்க தகுதியுடைய சாட்சியம் என மன்று தீர்மானித்து சாட்சியமளிக்க அனுமதித்தது.
 
அதனை தொடர்ந்து குறித்த சிறுவன் சாட்சியம் அளிக்கையில் ,
 
நானும் தனுராமும் 13ஆம் திகதி பாடசாலைக்கு சென்று கொண்டிருந்தோம். எனது சைக்கிளில் நான் தான் அவனை பின்னுக்கு ஏற்றிக்கொண்டு சென்றேன்.
 
சின்ன ஆலடி எனும் பகுதியில் ,  சைக்கிள் பெடல் கட்டை இல்லாததால் அது சறுக்கி எனது செருப்பு கழன்று விழுந்து விட்டது. நான் சைக்கிளை நிறுத்தி , சைக்கிளை பிடித்துக்கொண்டு இருந்த போது , தனுராம் தான் சென்று செருப்பை எடுத்து வந்தான். பின்னர் நாங்கள் செருப்பை போட்டுக்கொண்டு பாடசாலைக்கு சென்று விட்டோம். என சாட்சியம் அளித்தான்.
 
 அதன் போது , பிரதி சொலிஸ்டர் ஜெனரல் சாட்சியத்திடம் செருப்பு கழன்று விழுந்த இடத்தில் எதனையாவது அவதானித்தீரா ? என கேட்ட போது சாட்சியான சிறுவன் இல்லை என பதிலளித்தான். அதனை தொடர்ந்து குறித்த சாட்சியம் முடிவுறுத்தப்பட்டு , சாட்சி விடுவிக்கப்பட்டது.
 
தங்கையின் கணவனே இரண்டாம் எதிரி. 
 
அதனை தொடர்ந்து 04 ஆவது சாட்சியான , பாலசந்திரன் பாலசந்திரன் சாட்சியம் அளிக்கையில் ,
 
நான் 13ஆம் திகதி காலை 8.47 மணியளவில் கடைக்கு சென்ற போது வித்தியா கொலை நடந்த இடத்திற்கு அருகில் , பூபாலசிங்கம் ஜெயக்குமார் மற்றும் பூபாலசிங்கம் தவக்குமார் ஆகிய இருவரும் நின்று கொண்டு இருந்தனர்.
 
அதில் ரவி என்று அழைக்கபப்டும் பூபாலசிங்கம் ஜெயக்குமார் எனது தங்கையின் கணவன். மற்றையவரான பூபாலசிங்கம் தவக்குமார் , ஜெயக்குமாரின் சகோதரன்.
 
சம்பவ இடத்தில் இருந்து 15 அடி தூரத்தில் நின்று இருந்தார்கள்.
 
மறுநாள் 14 ஆம் திகதி தான் வித்தியா இறந்த செய்தி தெரியும். வித்தியா எனக்கு கிட்டத்து சொந்தமும் கூட , வித்தியாவின் உடல் மீட்கப்பட்ட இடத்திற்கு சுமார் 15 அடி தூரத்தில் தான் முதல் நாள் ஜெயக்குமார் மற்றும் தவக்குமார் ஆகியோரை கண்டேன். என சாட்சியம் அளித்தார்.
 
அதன் போது பிரதி சொலிஸ்டர் ஜெனரல் அவர்களை அடையாளம் காட்ட முடியுமா என கேட்ட போது சாட்சி எதிரி கூண்டில் நின்ற இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிரிகளை சாட்சி அடையாளம் காட்டினார். அதனை யடுத்து சாட்சியம் முடிவுறுத்தப்பட்டு சாட்சியம் விடுவிக்கப்பட்டது.
 
வித்தியாவை தேடி சென்றேன். 
 
அதனை தொடர்ந்து வழக்கின் 07ஆவது சாட்சியமான ஞானேஸ்வரன் இலங்கேஸ்வரன் சாட்சியம் அளிக்கையில் ,
 
நான் வித்தியா வீட்டுக்கு அருகில் தான் வசிக்கிறேன். 14ஆம் திகதி காலை வித்தியாவின் அம்மாவும் சகோதரனும் , வித்தியாவை நேற்றில் இருந்து காணவில்லை. என தெரிவித்து தேடி பார்க்க சென்றார்கள். அவர்களுடன் நானும் சென்றேன்.
 
வித்தியா பாடசாலை செல்லும் வழியில் உள்ள கிணறுகள் , கேணிகளில் தாய் தேடிக்கொண்டு வந்தார். நான் வீதியோரமாக பற்றைகளுக்குள் தேடி சென்றேன். வித்தியாவின் அண்ணா ஆட்கள் அற்ற வீட்டு பகுதிகளை தேடி சென்றோம். அப்போது திடீரென்று வித்தியாவின் அண்ணா ஐயோ வித்தியா வித்தியா என கத்தினான்.
 
அந்த இடத்திற்கு நான் சென்றேன். அப்போது வித்தியாவின் அம்மாவும் அங்கு வந்து விட்டார். அவர் உடனே என்னிடம் , வித்தியாவின் சடலம் கிடக்கிறது தொடர்பில் ஊருக்குள் சென்று செல்லுமாறு கூறினார். நான் சென்று ஊரில் உள்ளவர்களை அழைத்து வந்தேன்.
 
சுவிஸ் குமாரை கறுத்த கண்ணாடியுடன் கண்டேன். 
 
வித்தியாவை சம்பவ தினத்திற்கு முதல் நாள் 12ஆம் திகதி (மாணவி கொலை செய்யபப்ட்டது 13ஆம் திகதி சடலம் மீட்கப்பட்டது 14 ஆம் திகதி) ஆலடி சந்தியில் கண்டேன்.
 
அன்றைய தினம் வீட்டு தேவைக்கு பொருட்கள் வாங்க என ஆலடி சந்தியில் உள்ள கடைக்கு சென்று இருந்தேன். அப்போது வித்தியா பஞ்சாபியுடன் பஸ்ஸில் இருந்து இறங்கி வந்து கடைக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சைக்கிளை எடுத்துக்கொண்டு சென்றார்.
 
அந்த நேரம் கடைக்கு எதிரே வீதியின் மறுபுறத்தில் , டொல்பீன் ரக வாகனத்தில் , முன் ஆசனத்தில் (சாரதி ஆசனத்திற்கு அருகில்) சுவிஸ்குமார் கறுத்த கண்ணாடி அணிந்தவாறு இருந்தார். மற்றைய ஆசனங்களில் சசிதரன் , சந்திரஹாசன் , கண்ணன் ஆகியோர் இருந்தனர். இவர்களுடன் மேலும் இருவரும் இருந்தனர். அவர்களை யார் என்று தெரியாது. மொத்தமாக வாகனத்தில் ஆறு பேர் இருந்தனர்.
 
வித்தியாவை பார்த்துக்கொண்டே நின்றனர். 
 
அவர்கள் அனைவரும் பஸ்சினால் வந்து இறங்கி சைக்கிள் எடுத்துகொண்டு சென்று வித்தியாவையே பார்த்துக்கொண்டு இருந்தனர். என சாட்சியம் அளித்தார்.
 
அதனை அடுத்து பிரதி சொலிஸ்டர் ஜெனரல் , சுவிஸ் குமார் சசிதரன் , சந்திரஹாசன் , கண்ணன் ஆகியோரை அடையாளம் காட்ட முடியுமா என கேட்டார். சாட்சி ஆம் என பதிலளித்து எதிரி கூண்டில் நின்ற 09 ஆம் எதிரியான சுவிஸ் குமார் என அழைக்கபப்டும் மகாலிங்கம் சசிக்குமார் , 04ஆம் எதிரியான மகாலிங்கம் சசிதரன் , 05ஆம் எதிரியான தில்லைநாதன் சந்திரஹாசன் மற்றும் 08ஆம் எதிரியான கண்ணன் என அழைக்கபப்டும் ஜெயதரன் கோகுலன் ஆகியோரை அடையாளம் காட்டினார்.
 
அதனை தொடர்ந்து 4ம், 7ம் , மற்றும் 9ம் எதிரிகள் சார்பில் சட்டத்தரணி சின்னராசா கேதீஸ்வரன் குறுக்கு விசாரணையின் போது , சாட்சியிடம் , வாகனம் எவ்வளவு தூரத்தில் நின்றது என கேட்டார் அதற்கு சாட்சி சுமார் 15 அடி தூரத்தில் நின்றது என பதிலளித்தார். அதையடுத்து 15 அடி தூரத்தில் கறுத்த கண்ணாடி அணிந்து இருக்கும் நபர் எங்கே பார்க்கின்றார் என்பதனை கூற முடியாது என நான் 9 எதிரி சார்பில் கூறுகிறேன் என சட்டத்தரணி கூறியதற்கு சாட்சி இல்லை நான் பார்த்தேன் அவர்கள் வித்தியாவை தான் பார்த்தார்கள். என சாட்சியம் அளித்தார். அதை தொடர்ந்து நீங்கள் எவ்வளவு நேரமாக கடையில் நின்றீர்கள் என சட்டத்தரணி கேட்டதற்கு , கடையில் ஆட்களாக இருந்தமையால் , ஒரு மணித்தியாலம் கடையில் நின்றேன் அப்போது வாகனத்தை பார்த்தேன். அவர்கள் நின்றார்கள் என சாட்சியம் அளித்தார். அதையடுத்து சாட்சியம் முடிவுறுத்தப்பட்டு சாட்சி விடுவிக்கப்பட்டது.
 
ஒற்றையடி பாதையில் எதிரியை கண்டேன். 
 
அதனை தொடர்ந்து வழக்கின் 15 ஆவது சாட்சியான செல்வராசா சதானந்தரூபிணி சாட்சியம் அளிக்கையில் ,
 
நான் சம்பவ தினமான 13ஆம் திகதி காலை 7.30 மணிக்கும் 8 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் எனது சைக்கிளில் வேலணை பிரதேச செயலகத்திற்கு சென்று கொண்டு இருந்தேன். அப்போது நான் சென்று கொண்டிருந்த வீதியில் ஒரு இடத்தில் உள்ள ஒற்றையடி பாதை ஊடக , சந்திரஹாசன் சரம் ஒன்றினை மடித்துக்கட்டியவாறு வேகமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அவர் போய் கொண்டிருந்த தூரம் எனக்கும் அவருக்கும் இடையில் ” தம்பி ” என கூப்பிட்டால் கேட்கும் தூரம் தான் அப்போது இருந்தது.
 
அவர் சென்ற ஒற்றையடி பாதை ஊடாக சுமார் 200 மீற்றர் தூரம் சென்றால் , வித்தியாவின் சடலம் கிடந்த இடத்திற்கு செல்ல முடியும். அதற்காக அவர் அங்கு தான் சென்றார் என நான் உறுதியாக சொல்ல மாட்டேன்.
 
பின்னர் மறுநாள் வித்தியாவின் சடலம் கிடக்கின்றது என்ற செய்தி அறிந்து நானும் அயலவர்கள் சுமார் 10 பேரும் சடலம் கிடந்த இடத்திற்கு சென்றோம்.
 
அப்போது அந்த இடத்திற்கு சந்திரஹாசனும் வந்திருந்தார்.  அவர் அந்த இடத்தில் சுமார் 10 நிமிடங்கள் நின்று விட்டு சென்று விட்டார் என சாட்சியம் அளித்தார். அதனை தொடர்ந்து சாட்சியம் முடிவுறுத்தப்பட்டு சாட்சி விடுவிக்கப்பட்டது.
 
அதனை தொடர்ந்து வழக்கு விசாரணை மதிய போசன இடைவேளைக்காக ஒத்திவைக்கப்பட்டது.
 
இடது கண்ணில் பார்வை குறைபாடு இருந்தது.  

 

 

 

மதிய நேர இடைவேளைக்கு பின்னர் மீண்டும் மன்று கூடிய போது  18ஆவது சாட்சியான கண் வைத்திய நிபுணர் வைத்தியர் முத்துசாமி மலரவன் சாட்சியமளித்தார். அதன் போது ,

 

 
தான்  புங்குடுதீவு மாணவியின் ஒரு கண்ணில் பார்வை குறைபாடு இருந்தமையால் , அவருக்கு சிகிச்சை அளித்து கண்ணாடிக்கு சிபாரிசு செய்து இருந்தேன்.
 
எனது சிகிச்சை (கிளினிக்) நிலையத்திற்கு வந்த குற்ற தடுப்பு பிரிவு போலீசார் ஒரு கண்ணாடியினை தந்தார்கள். அதனை பரிசோத்தித்து பார்த்த போது அது என்னால் சிபாரிசு செய்யப்பட்டு எனது நோயாளி ஒருவருக்கு கொடுத்த கண்ணாடி என தெரிந்து கொண்டேன்.
 
அந்த கண்ணாடியை வித்தியா எனும் மாணவிக்கு வழங்கி இருந்தேன். அவருக்கு வலது கண் நூறு வீதம் பார்வை திறன் கொண்டது இடது கண் 70 வீதமே பார்வை திறன் கொண்டது. இடது கண் கருவிழி மாற்று சத்திர சிக்கிசை செய்தமையால் 70 வீதமே பார்வை திறன் கொண்டது. என சாட்சியம் அளித்தார்.
 
அதனை தொடர்ந்து பிரதி சொலிஸ்டர் ஜெனரல் வித்தியாவின் மருத்துவ பதிவேடு மற்றும் கண்ணாடி வழங்குவதற்கான சிபாரிசு கடிதம் ஆகியவற்றை அடையாளம் காட்ட முடியுமா என கேட்ட போது ஆம் என பதிலளித்து அவற்றை மன்றில் அடையாளம் காட்டினார்.
 
அதன் பின்னர் வித்தியாவற்கு வழங்கப்பட்ட கண்ணாடியை அடையாளம் காட்ட முடியுமா என பிரதி சொலிஸ்டர் ஜெனரல் கேட்டதற்கு கண்ணாடியை பரிசோதித்து பார்த்தே கூற வேண்டும். (தனது அனுபவத்தின் அடிப்படையில் கண்ணாடியை மன்றில் வைத்து பரிசோதனை செய்தார்) என கூறி கண்ணாடியை பரிசோதித்து வலது பக்க வில்லை சாதாரண வில்லையாகவும் , இடது பக்கம் உருளை வில்லையும் பொருத்தப்பட்டு உள்ளமையால் அது வித்தியாவிற்கு வழங்கபட்ட கண்ணாடி என அடையாளம் காட்டினார்.
 
அதையடுத்து குறித்த சாட்சியம் முடிவுறுத்தப்பட்டு , சாட்சி மன்றினால் விடுவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இன்றைய தினம் அழைக்கப்பட்ட ஏனைய சாட்சியங்களின் சாட்சி பதிவுகள் இடம்பெற்றன.
 
வழக்கு ஒத்திவைப்பு. 
 
குறித்த சாட்சியங்களின் சாட்சி பதிவுகள் இரவு 7 மணி வரையில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மன்றனாது வழக்கு விசாரணைகளை நாளைய தினத்திற்கு ஒத்தி வைத்தது. அதுவரையில் எதிரிகளை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு இட்டது.

http://globaltamilnews.net/archives/31695

Link to comment
Share on other sites

வித்தியா பாலியல் வல்லுறவு கொலை வழக்கு : சிரேஷ்ட சட்ட விரிவுரையாளர் தமிழ்மாறன் இன்று சாட்சியம்

 

 

புங்­கு­டு­தீவு பாட­சாலை மாணவி சிவ­லோகநாதன் வித்­தி­யாவின் கூட்­டுப்­பா­லியல் வல்­லு­றவு படு­கொலை வழக்கின் முக்­கிய சாட்சிப் பதி­வொன்று இன்­றைய தினம் யாழ்ப்­பாணம் மேல்­நீ­தி­மன்றில் அமைக்­கப்­பட்­டுள்ள ரயல்அட்பார் நீதி­மன்றில் இடம்­பெ­ற­வுள்­ளது. 

court.jpg

குறித்த மாண­வியின் கூட்டு பாலியல் வல்­லு­றவு படு­கொலை வழக்­கா­னது யாழ்ப்­பாணம் மேல் நீதி­மன்றில் அமைக்­கப்­பட்­டுள்ள மூன்று தமிழ் மொழி பேசும் மேல் நீதி­மன்ற நீதி­ப­தி­க­ளான பாலேந்­திரன் சசி­ம­கேந்­திரன் தலை­மையில் அன்­ன­லிங்கம் பிரே­ம்­சங்கர், மாணிக்­க­வா­சகர் இளஞ்­செ­ழியன் ஆகியோர் அடங்­கிய ரயல்அட்பார் நீதாய விளக்க நீதி­மன்றில் தொடர் விசா­ர­ணை­யாக இடம்­பெற்று வரு­கின்­றது.

இத் தொடர் வழக்கு விசா­ர­ணையில் ஐந்­தா­வது நாளான இன்று கொழும்பு சட்ட பீடத்தின் சிரேஷ்ட சட்ட விரிவுரையாளர் வி.ரி. தமிழ்மாறன் சாட்சியமளிக்கவுள்ளார். குறித்த மாணவியின் கொலைச் சம்பவம் இடம்பெற்றதைத் தொடர்ந்து பொது மக்களால் இவ்வழக்கின் 9 ஆவது சந்தேக நபரான சுவிஸ்குமார் சுற்றிவளைக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார். 

பின்னர் இவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அங்கிருந்து தப்பித்து கொழும்பு சென்றிருந்தார். 

இச் சம்பவம் தொடர்பில் இன்றைய தினம் சாட்சியமளிக்கவுள்ள வி.ரி.தமிழ் மாறனுக்கும் தொடர்புகள் இருப்பதாக அன்றைய காலப்பகுதியில் பரவலாக கூறப்பட்டுவந்திருந்தமையும் இந்நிலையில் அவர் வழக்குத் தொடுனர் தரப்பு சாட்சியாக இன்று சாட்சியமளிக்கவுள்ள மையும் குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/21468

Link to comment
Share on other sites

ஊர்காவற்றுறை முன்னாள் பொறுப்பதிகாரிக்கு கடும் எச்சரிக்கை!!

 
 
ஊர்காவற்றுறை முன்னாள் பொறுப்பதிகாரிக்கு கடும் எச்சரிக்கை!!
 

புங்குடுதீவு வித்தியா கொலைச் சம்பவம் நடைபெற்ற சமயம் ஊர்காவற்றுறை பொறுப்பதிகாரியாக இருந்த உப பொலிஸ் பரிசோதகர் குயின்ரஸ் ரோனால் பெரேரா தீர்ப்பாயத்தில் மழுப்பலான வகையில் சாட்சியமளித்ததை அடுத்து அவரைத் தீர்ப்பாயம் கடுமையாக எச்சரித்தது.

இன்று தீர்ப்பாயத்தில் வித்தியா கொலைச் சம்பவம் நடைபெற்றபோது ஊர்காவற்றுறை பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றியவர் சாட்சியம் வழங்கினார். இவரே இந்த வழக்கின் முதன்மை விசாரணை பொலிஸ் அதிகாரியாவார். அவரிடம் பிரதி மன்றாடியார் அதிபதி விசாரணைகளை மேற்கொண்டார்.

முதல் 8 சந்தேகநபர்கள் தொடர்பாக திருப்திகரமாகச் சாட்சியங்கள் வழங்கிய பொலிஸ் அதிகாரி 9 ஆவது சந்தேகநபரான சுவிஸ்
குமார் தொடர்பில் மழுப்பலான முறையில் சாட்சியம் வழங்கினார்.

9ஆவது சந்தேகநபரைத் தான் கைது செய்யவில்லை என்றும், அவரைப் பற்றித் தனக்கு எதுவும் தெரியாது என்றும், அவரை மன்றில்
முற்படுத்தவில்லை என்றும் அவர் தொடர்ந்து தெரிவித்தார்.

அதை அவதானித்த நீதிபதிகள் கடும் தொனியில் அவரை எச்சரித்தனர்.

“உமது பகுதியில் நடைபெற்ற இந்தப் பாரதூரமான சம்பவம் நடைபெற்றபோது நீரே பொறுப்பதிகாரி. 9 ஆவது சந்தேகநபரைக் கைது செய்யுமாறு கோரப்பட்டபோது நீர் கைது செய்யவில்லை. வெள்ளவத்தைப் பொலிஸாரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டபோது குற்றச் செயல் தொடர்பான பொலிஸ் அறிக்கை அவர்களால் கோரப்பட்டது. நீர் அது தொடர்பான விவரங்கள் இல்லை என்று தெரிவித்துள்ளீர்.

ஊர்காவற்றுறை நீதிமன்றில் சந்தேகநபரை முற்படுத்த தவறியதாலேயே மக்கள் கொதிப்படைந்து யாழ்ப்பாண நீதிமன்றைத் தாக்கினர்.  நீதிமன்றைத் தாக்கியமைக்கும் உமது செயற்பாடே காரணம்.

9ஆவது சந்தேகநபர் தொடர்பான விவரங்களை நீர் நீதிமன்ற விசாரணைகளில் மறைத்துள்ளீர். 8 சந்தேக நபர்களைக் கைது செய்த  நீர் மிகப் பாரதூரமான ஒரு கொலைக்குற்றம் நடந்த வேளையில் 5.19.2015 அன்று பொலிஸ் நிலையத்தில் இருந்து விடுமுறை பெற்று மகரகம நீதிமன்றத்துக்கு சென்றது பாரதூரமான பொறுப்பற்ற செயல். மகரகம நீதிமன்றத்துக்கு சென்ற வழக்கு இலக்கத்தை ஒப்படைக்க வேண்டும்.”- கடும் தொனியில் நீதிபதிகள் எச்சரித்தனர்.

9 ஆவது சந்தேகநபருக்கும் உமக்கும் ஏதாவது தொடர்புண்டா என்றும் நீதிமன்று சந்தேகம் எழுப்பியபோது பொலிஸ் அதிகாரி அதை மறுத்தார்.

மதிய உணவின் பின்னர் விசாரணைகள் தொடரவுள்ளன.

http://uthayandaily.com/story/9352.html

Link to comment
Share on other sites

சந்தேகநபர்களை மக்கள் அடித்தே கொன்றிருப்பர் – பொலிஸார்

 
சந்தேகநபர்களை மக்கள் அடித்தே கொன்றிருப்பர் – பொலிஸார்
 

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் 4 முதல் 8 வரையான சந்தேகநபர்கள் சித்திரவதைக்கு உட்டுத்தப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டை பொலிஸார் மறுத்தனர்.

சந்தேகநபர்களைப் பொது மக்கள் அடித்துச் சாகடிக்கும் நோக்கில் இருந்தனர். பொலிஸார் தமது உயிரைப் பணயம் வைத்து சந்தேகநபர்களின் உயிரைக் காப்பாற்றினார்கள்.

புங்குடுதீவில் வீதித் தடை ஏற்படுத்தி காரைநகர் கடற்படை முகாமில் வைத்து சந்தேகநபர்கள் பாதுகாக்கப்பட்டனர். ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்துக்கு சந்தேகபர்களைக் கொண்டு செல்ல முயன்றபோது புங்குடுதீவில் இருந்து பல பஸ்களில் மக்கள் வர முற்பட்டதால் அங்கும் சந்தேகநபர்களுக்கு பாதுகாப்பிருக்கவில்லை. அதனால் சந்தேகநபர்களை காரைநகர் கடற்படை முகாமில் வைத்து பாதுகாத்தோம் என்று பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.

http://uthayandaily.com/story/9390.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, நவீனன் said:

அதனால் சந்தேகநபர்களை காரைநகர் கடற்படை முகாமில் வைத்து பாதுகாத்தோம் என்று பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.

ம்ம்ம்ம்ம்ம்ம்:rolleyes:

Link to comment
Share on other sites

வீ.ரி.தமிழ்மாறனிடம் சாட்சியப் பதிவு ஆரம்பம்

 
வீ.ரி.தமிழ்மாறனிடம் சாட்சியப் பதிவு ஆரம்பம்
 

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்குத் தொடர்பான சாட்சியப் பதிவுகள் தீர்ப்பாயத்தில் நடைபெற்று வருகின்றன.

சட்டத்தரணியும் கொழும்பு பல்கலைகழகத்தின் சட்ட பீடாதிபதியுமான வீ.ரி.தமிழ்மாறன் 25 ஆவது சாட்சியாக அரச தரப்பால் அழைக்கப்பட்டுள்ளார். அவரின் சாட்சியம் வழங்கல் தற்போது தீர்ப்பாயத்தில் ஆரம்பமாகியுள்ளது.

இந்த வழக்கின் 9ஆவது சந்தேகநபரான சுவிஸ்குமார் தப்பிச் செல்ல உதவினார் என்று முன்னர் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த நிலையில் அவர் தற்போது அரச தரப்பால் சாட்சியாக அழைக்கப்பட்டுள்ளார்.

மேலதிக விவரங்கள் விரைவில்

http://uthayandaily.com/story/9415.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.