Jump to content

தந்தையுமானவன்.....!


suvy

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தந்தையுமானவன்.....!

அன்று நல்ல முகூர்த்தநாளாக இருக்க வேண்டும். சந்நதி முருகன் ஆலயத்தில் வள்ளி அம்மன் ஆலய முன்றலில் அன்று இருபது திருமணங்கள் வரை நடந்தன.எதிர்பாராமல் அவசரம் அவசரமாக இருபத்தியொராவது திருமணமாக கதிர்வேலுக்கும் வசந்திக்கும் திருமணம் நடக்கின்றது. விதி மிகவும் விசித்திரமானது.

அன்று காலை சுன்னாகத்தில் ஒரு பனங்கூடலுக்குள் மென்பந்தில் நண்பர்களுடன் கிரிக்கட் விளையாடும் போதோ அல்லது மத்தியானம் அம்மா திட்டிக் கொண்டு சாப்பாடு போடும்போதோ ( இது அம்மாவின் டெக்னிக்,தான் திட்டாது விட்டால்,அப்பா ஆரம்பித்து அவன் சாப்பிடாமல் வெளியே போய்விடுவான்). அதனால் அம்மா முந்திக் கொண்டு அவனைப் பேசிக்கொண்டு தாராளமாய் சாப்பாடு போடுவாள். அவர்களுக்கு தெரியாது அன்று அங்கு கதிர்வேலுக்கு கல்யாணம் நடக்குமென்று.

அப்போது சயிக்கிளில் ஓடியபடியே படலையை திறந்து கொண்டு கார்த்திக் வந்து இறங்குகின்றான். கையில் ஒரு போத்தலில் காய்ச்சலுக்கு கட்டயடி ஆஸ்பத்திரியில் வாங்கிய கலர் மருந்து இருக்குது.அம்மா கேட்க்கிறாள், என்னடா வடிவாய் சொல்லி மருந்து மாத்திரை வாங்கினியா. ஓமனை, யூரின் டெஸ்ட் பண்ண வேணும் என்று சொன்னவை. நாளைக்கு காலைமை வாறன் என்று சொல்லிட்டு வந்தனான். கிடாய்க்கு புண்ணாக்கு தீத்திக் கொண்டிருந்த அப்பா, அதென்னடி பிள்ளை யூரினாம் என்று பக்கத்தில் குலை கட்டிக் கொண்டிருந்த மூத்தவள் தேன்மொழியிடம் கேட்க அவளும் அது ஐயா சோதிக்கிறதுக்காக மூத்திரம் கேட்டிருக்கினம். உடனே மகனிடம் குறுக்கிட்டு... ஏண்டா அத அங்கன பேஞ்சு குடுத்திட்டு வாரத விட்டிட்டு இஞ்சை என்ன அலுமாரிக்கை கிடக்கெண்டு எடுத்துக் கொண்டு போக வந்தனியே...! அவனுக்கு முகம் உர் என்று வருகுது. அம்மா உடனே ஏன்டா அவர் கேட்கிறதில என்ன தப்பு. எனை நீயும் சேர்ந்து விசர்க்கத கதையாதையனை. அதுக்கு விடிய வெறும் வயித்தோடதான் போய்க் குடுக்க வேண்டும். அதுதானே பார்த்தேன் நீ விடிய காய்சசாலோட பழஞ்சோறையும் சாப்பிடேக்கை நினைச்சனான். தங்கை சௌம்யா மெதுவாய் சிரிக்கிறாள். உரத்து சிரித்தால் குட்டு விழும் என்று அவளுக்கு தெரியும்.

வருவார்.....!    

Link to comment
Share on other sites

  • Replies 68
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, நவீனன் said:

எப்ப இனி..:unsure: தொடருங்கள்

பொறுத்தருள்வீர்கள் வாசகர்காள்....! கடந்த நான்கு நாட்களாக ஒரு பூ புனிதநீராட்டுவிழா, ஒரு பிறந்தநாள் விழா, ஒரு 31ம் நாள் விழா, போன்ற விழாக்களில் நாங்கள் வீழ்ந்து கிடந்தது விழாமல் எழுந்து வந்ததால் இன்று ஆடிப்பிறப்பில் ஆடிக் கொண்டிருக்கிறோம்.(மூன்றுநாள் வீட்டில் குசினி குளோஸ்). அடுத்த தொடர்சிக்கான குறிப்புகள் தயார் நிலையில் இருப்பதால் அவர் கெதியாய் வருவார்......!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதிர்வேலு "விளையும் பயிரை முளையிலே தெரியும்" என்பதற்கேற்ப சிறுவயது முதலே துறு துறு என்று இருப்பான். குரும்பையில் தேர் கட்டி இழுத்து, பாம்பனில் இருந்து பிரான்தன் வரை பட்டங்கள் நுணுக்கமாய் கட்டி,சயிக்கிளில் சாகசம் செய்து, மோட்டாரில் வித்தைகள் செய்தெ வளர்ந்தான்.சமீபகாலத்தில் தொழில்நுட்பக் கல்லூரிக் கண்காட்சியில் அவன் தனியாகவும், குழுவாகவும் செய்த சில உபகரணங்கள் ஆசிரியர்களாலும், பார்வையாளர்களாலும் வெகுவாகப் பாராட்டி பரிசில்களும் கொடுக்கப் பட்டன. அங்கு வருகை தந்திருந்த ஒரு பெரிய கம்பெனியின் உயரதிகாரி ஒருவர் தனது சக அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து அவனுக்கு தங்களது கம்பெனியில் வேலை போட்டுத் தருவதாக கூறியிருந்தார். அதன்படி சிலநாட்களுக்கு முன்பு கணனி வீடியோ மூலம் அவனுக்கு இண்டர்வியூ நடாத்தியிருந்தார்கள். இன்று அவனது மெயிலில் ஒரு நல்ல சம்பளத்துடன் வேலை தருவதாகவும் வரும் திங்கட் கிழமை காலை 09:00 மணிக்கு அலுவலகம் வந்து பொறுப்பேற்க வேண்டும் என்றும் தகவல் வந்திருந்தது. 

இந்த நல்ல செய்தியை கதிர் வீட்டில் சொன்னதும் எல்லோருமே மிகவும் சந்தோசப் பட்டார்கள்.கொஞ்சம் கொஞ்சமாக அவனுக்கு தம்மையுமறியாமல் மரியாதை தரத் தொடங்கியிருந்தார்கள். மதியம் சாப்பிட்டு எல்லோரும் ஓய்வாக முற்றத்தில் இருந்து கதைக்கும் பொழுது தமக்கை தேன்மொழி தாயிடம் அம்மா, தம்பிக்கு தொடக்க சம்பளமே என்பதினாயிரம் ருபாய்யம்மா.அவள் முருகனுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும் என்று நேர்ந்து கொள்கிறாள். அதுமட்டுமல்ல பலவிதமான அலவன்ஸ், தங்குவதற்கு குவாட்டர்ஸ் எல்லாம் குடுக்கினமாம்.அப்பா ராஜசேகரம் ஏதோ வேலை செய்வதுபோல் இருந்தாலும் இவர்களின் பேச்சுகளை காது கொடுத்து கேட்டுக் கொண்டிருந்தார்.சௌம்யாவும் கார்த்தியும் நிலத்தில் கோடு கீறி  பசுவும் புலியும் ஆடிக் கொண்டிருக்கின்றனர்.சௌம்யா அளாப்பி அளாப்பி அவனைத் தோற்கடித்துக் கொண்டிருக்கிறாள்.

இந்நேரத்தில் வாசலில் புழுதிமண் பறக்க ஒரு கார் வந்து நிக்கிறது. அதிலிருந்து நான்கு ஆண்களும் மூன்று பெண்களுமாக ஏழு பேர் இறங்கி பாடலை திறந்து கொண்டு பதற்றமாக வருகின்றனர். வந்தவர்களில் ராஜசேகரத்துக்கு நன்றாகத் தெரிந்தவர்களும் நண்பர்களுமான இருவர் அவரைத் தனியாக கூட்டிக்கொண்டு போய் தனியாகக் கதைக்கின்றனர்.சற்று நேரத்தில் வந்த மற்றவர்களும் சேர அம்மா பார்வதியையும் அழைத்து கதைக்கின்றனர்.பின்னால் இன்னுமொரு காரும் வந்து நிக்க , அம்மாவும் அப்பாவும் அங்கு போய் காரினுள் பார்க்கிறார்கள். பின் இருக்கையில் ஒரு பெண் மணப்பெண் கோலத்தில் கண்ணீரும் கம்பலையுமாய்  உட்க்கார்ந்திருக்க பக்கத்தில் இரண்டு பெண்கள் அவர்களும் சோகமாய் இருக்கினம். சிறிது நேரத்தில் அம்மா வந்து கதிரைப் பார்த்து இஞ்சை ஒருக்கால் வா தம்பி என்று அவனைக் வீட்டுக்குள் கூட்டிக் கொண்டுபோய் அவனிடம், தம்பி கேட்க்கிறேன் என்று குறை நினைக்காதையனை நீ யாரையாவது விரும்பிறியோடா ..., என்ன கதையம்மா கதைக்கிறாய்.அப்படி ஒன்றும் இல்லையனை. எனக்கு இப்பதான் வேலை கிடைத்திருக்கு, நான் வேலைக்கு போகணும், அப்பாவும் பாவம் எவ்வளவு நாள்தான் கஸ்டப் படுவார். முதல்ல அக்காவுக்கு கலியாணம் கட்டி வைக்கவேணும்.என்று சொல்கிறான்.(மனதுக்குள் நானா லவ் பண்ண மாட்டன் என்கிறன், ஒன்றும் சரியா செட் ஆகேல்ல. பார்த்த ஒன்றிரண்டும் பாட்டாவை தூக்கி காட்டிட்டு போகுதுகள்). பார்வதிக்கு அவன் சொல்வதை கேட்க வலு சந்தோசமாய் இருக்கு. என்ரை வளர்ப்பு சோடை போகேல்ல பிள்ளை எவ்வளவு பொறுப்பாய் கதைக்கிறான்.

இல்லடா கதிர் ஒரு நல்ல சம்பந்தம் வந்திருக்கு.அவையும் எங்கட உறவுகள்தான்.பக்கத்தில மல்லாகத்து ஆட்கள். அப்பா வழி சொந்தம்.அதிகம் புழக்கமில்லாததால விட்டுப் போச்சு. அவர்களின் பெண்ணுக்கு இன்று கலியாணம் நடக்க வேண்டியது , ஏனோ குழம்பிப் போச்சு. பின்புதான் யார் யாரிடமோ விசாரிச்சு எங்களைத் தேடி வந்திருக்கினம். அதுக்கில்லை அம்மா, அக்கா இன்னும் கட்டாமல் இருக்கிறா. அதோட நான் வாறகிழமை வேலைக்கு போறன் என்ட  உடனே அவைக்கு கண் தெரிஞ்ச்சுட்டுதாக்கும். உதை நான் சொல்லாமல் விடுவேனோடா, ஆனால் உனக்கு வேலை கிடைச்சது ஒண்டும் இன்னும் அவைக்குத் தெரியாது. இப்ப தங்கட மானத்தைக் காப்பாத்தினால் போதும் ஏன்டா நிலையில இருக்கினம். அக்காவின்ர கலியாணத்துக்கும் தங்கள் உதவி செய்யிறம் என்று வேறை சொல்லினம். அதோட பெட்டைக்கு ஒரு தங்கைதான், வேற பிள்ளையளும் இல்லை. நிறைய சொத்து பத்தும் இருக்கு. தானா வரேக்க செய்யலாம்தானே என்று கொப்பரும் நினைக்கிறார். அப்போது அங்கு ராஜசேகரமும் வருகிறார். என்னப்பா கதைத்தனியே, உவர் என்ன சொல்லுறார். அவனப்பா ஒருத்தரையும் விரும்பேல்ல. என்ற பிள்ளையெல்லோ. தமக்கையைப் பற்றித்தான் யோசிக்கிறான்....!

வருவார் .....!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாவும், பின்ன சரி எல்லோரும் கெதியாய் வெளிக்கிட்டு வாங்கோ, சுன்னாகத்தில் என்ற சிநேகிதன்ர கடையில ஒரு கூறைச்சேலையும் தாலியும் எடுத்துக் கொண்டு போவம்.பிறகு கொடிக்கு மாத்தலாம் என்று சொல்லிய படி ராஜசேகரமும் வேலியால விடுப்பு பார்த்துக் கொண்டிருந்த அயலவர்களையும் அவனது நண்பர்களையும் அழைத்து விஷயத்தை சுருக்கமாகச் சொல்லிவிட்டு, நாங்கள் சந்நிதிக்கு போயிட்டு வாறம் நீங்களும் முடிந்தளவு வீட்டை கொஞ்சம் அழகு படுத்தி விடுங்கோ. ஞ<யிற்று கிழமை எல்லாருக்கும் சொல்லி விருந்து வைக்கிறன் என்று சொல்லி விட்டு பொம்பிளை வீட்டுக்காரர்  இரண்டு காரிலும் இவர்கள் ஒரு காரிலுமாக சுன்னாகத்துக்கு செல்கின்றார்கள்.

ராஜசேகரத்தின் நண்பன் இரத்தினத்தின் கடைக்கு முன்னாள் கார்கள் வந்து நிக்கின்றன. வரும்போதே போனில் தகவல் சொல்லியதால் இரத்தினமும் கடையில் வந்து நின்று எதிர்கொண்டு வரவேற்று உள்ளே அழைத்து போகின்றார். மணப்பெண் வசந்தி காரிலேயே இருந்து கொள்கிறாள். கூறை எடுக்கும்போது மணமகள் வருவது வழக்கமல்ல. அரக்கு கலரில் கூறையும் அதற்கேற்ற ரெடிமேட் பிளவ்ஸும் எடுக்கின்றார்கள்.மாப்பிள்ளைக்கும் வேட்டி சட்டை ,மற்றவர்களுக்கும் ஆடைகள் எல்லாம் எடுக்கின்றார்கள்.

கடை இரத்தினம்: உங்களுக்கு என்ன தாலி வேணும் ராஜு . இரண்டு கொம்பு, மூன்று கொம்பு, பிள்ளையார் தாலி, அம்மன்தாலி எல்லாம் உண்டு.

ராஜசேகர்: இது எதிர்பாராமல் நடக்கும் திருமணம். சாதகப் பொருத்தம் ஒன்றும் பார்க்கேல்ல என்று சொல்ல,பார்வதியும் அதனால அந்த துர்க்கை அம்மனை நினைத்து ஒரு அம்மன் தாலி தாங்கோ என்கிறாள்.

இரத்தினம்: மெத்தச் சரியாய் சொல்லிட்டீங்கள், கொடி எத்தனை பவுனில என்ன மாதிரி கொடி  வேணும்.

ராஜசேகர்: என்னென்ன கொடிகள் இருக்கு.

இரத்தினம்: மின்னல் கொடி, வயிரக்கொடி எல்லாம் இருக்கு.

பார்வதி: வயிரக்கொடி சோர்ந்து வர கனகாலம் செல்லும், மின்னல் கொடி என்றால் இப்பத்தைய பிள்ளைகளுக்கு பரவாயில்ல, சங்கிலி மாதிரிக் கழுத்தில கிடைக்கும்.

இரத்தினம்: முடிச்சுக்குத்தி எப்படி வேணும். இரண்டு கைகள் பிடிக்கிற மாதிரியும் இருக்கு. அதுதான் இப்ப அதிகம் வாங்கிக் கொண்டு போகினம்.

பார்வதி: அது வேண்டாம் அண்ணை, வேதக்காரர் போடுறது. எங்களுக்கு தண்டில பூவும், கொடியும்  சிகப்பு கல்லும் வைத்து சுரை பூட்டுறதாய் தாங்கோ.

இரத்தினம் : நீங்கள் நல்ல விவரமாய்தான் இருக்கிறியள். 

ராஜசேகர்: எல்லாமா தாலியுடன் சேர்த்து ஒரு பதினைந்து பவுன் போதும். பிறகு காசுகள் வளையம் என்று சேர எப்படியும் ஒரு இருபத்தியொரு பவுன் வரும்.

சில நிமிடத்தில் எல்லாவற்றையும் அழகிய பெட்டியில் வைத்து கொண்டுவந்து தருகின்றார் இரத்தினம்.

ராஜசேகரும் இந்தா இரத்தினம் இதில ஐம்பதாயிரம் ரூவா இருக்கு, வார கிழமை வாங்கி திறந்ததும் கணக்கு முடிக்கிறன் என்று சொல்ல சம்பந்தி முத்துலிங்கம் தோற்பையில் இருந்து பணம் எடுத்து இந்தாங்கோ சம்பந்தி இப்ப இதை வைத்து கணக்கை முடியுங்கோ என்று முன்வர ராஜு தடுத்து அது முறையல்ல முத்து இது என் நண்பன்ர கடைதான்,அது மட்டுமல்ல தாலி கூறை எல்லாம் மாப்பிள்ளைதான் எடுக்க வேண்டும். பணம்  இருக்கட்டும் என்று சொல்லி மறுத்து விடுகின்றார்.

ராஜு தந்த பணத்தில் இரத்தினம் ஒரு நூறு ரூபாயை மாட்டும்  எடுத்துக் கொண்டு ராஜு நீ உனது அலுவல்கள் எல்லாவற்றையும் முடித்துவிட்டு வசதியான நேரம் வந்து குடுத்தால் போதும் என்று சொல்கின்றார்.

ரொம்ப நன்றிடா ரத்தினம் என்று ராஜு சொல்கிறார்.

முத்துலிங்கமும் பக்கத்தில் இருந்த வீடியோ கடைக்காரரிடம் கதைக்க அவர்களும் ஒரு மோட்டார் சைக்கிளில் கமராக்கள் சகிதம் இவர்களுடன் புறப்பட தயாராகி விட்டனர்.

எல்லோருமாக கார்களிலும் மோட்டார்  சயிக்கிளிலும் சந்நிதி நோக்கி விரைகின்றனர்....!

வருவார் ......!

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:11_blush:  கெதியா  முடித்து வைங்க நல்ல நேரம் முடியப்போதில்லை தம்பி தாலி கட்டியவுடன் :11_blush:

Link to comment
Share on other sites

1 hour ago, தனி ஒருவன் said:

:11_blush:  கெதியா  முடித்து வைங்க நல்ல நேரம் முடியப்போதில்லை தம்பி தாலி கட்டியவுடன் :11_blush:

யோவ் அவசரக்குடுக்கை கொஞ்சம் அமத்தி வாசியப்பா :grin:

சுவியர் இப்பதான் பிரான்சுக்கு போயிட்டு வந்திருக்காரு 

பூனைக்குட்டி வெளியில வராமலா போகும் // வெயிட் அப்பா வெயிட் :grin::grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்று கோவிலில் நிறைய சனம் கூடியிருக்கு. சுற்றிவர இருக்கும் அன்னதான மடங்களில் எல்லாம் ஜே...ஜே என்று ஒரே கூட்டமாய் இருக்கு. எல்லோரும் முன்னாலே விநாயகரையும் முருகனையும் வணங்கிவிட்டு வள்ளியம்மன் சந்நிதிக்கு வருகின்றனர். அருகே சிலர் உரு வந்து ஆடிக் கொண்டிருக்கின்றனர். அங்கு இவர்கள் தங்களது முறை வந்ததும் போய் நிக்கின்றனர். கோவில் மேளம் கெட்டிமேளமாய் முழங்க,வீடியோவும் கேமராக்களும் ஒளிர பூசாரியார் அம்மன் பாதத்தில் தாலியை வைத்து பூசை செய்து எடுத்துக் கொடுக்க ராஜசேகர் பார்வதி தம்பதிகளின் சிரேஷ்ட்ட புத்திரன் கதிர்வேலுவுக்கும் முத்துவேலு சிவகாமி தம்பதிகளின் புத்திரி வசந்திக்கும் திருமணம் ஜாம் ஜாம் என்று நடந்தேறுகின்றது.முத்துவேலரும் சிவகாமியும் அம்மன் சந்நிதியில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து குலுங்கி குலுங்கி அழுகின்றனர்.வசந்திக்கு கண்ணீரே வரவில்லை. எல்லாம் வேறு யாருக்கோ நடப்பதுபோல சிலைபோல் பார்த்துக் கொண்டிருக்கிறாள். பார்வதி மட்டும் அவர்களுக்கு ஆறுதல் சொல்லி அனைத்து எழுப்புகின்றாள். அக்கா இந்த நன்றியை எங்கள் வாழ்நாள் முழுதும் மறக்க மாட்டம் என்று பார்வதியின் தோளில் சாய்ந்து அழுகின்றாள்.

பின்பு எல்லோரும் ஒருவாறு மனம் சமாதானமடைந்து முருகன் கோயிலை மூன்றுதரமும், அம்மன் கோயிலை அஞ்சு தரமும் சுற்றிக் கும்பிட்டு விட்டு மடத்துக்கு போய் வயிறார சாப்பிடுகின்றார்கள்.வசந்தியும் கதிரும் ஏதோ பெயருக்கு சாப்பிட்டுவிட்டு வருகினம்.வெளியே முத்துவேலரின் சோமசெட் கார் சரங்களாலும் பூக்களாலும் அலங்கரித்தபடி நிக்கின்றது. அதில் மாப்பிள்ளை மணப்பெண்ணுடன் இன்னுமிருவர்தேன்மொழியும் ,சுகந்தியும் பின்னால் ஏறி இருக்க முன்னால் மகேசு( போலீஸ் உத்தியோகத்தில் இருப்பவர், உறவினர்)கார் ஓட்ட அருகே கார்த்திக் இருக்கிறான்.  மற்ற கார்களிலும் எல்லோரும் பங்கிட்டு ஏறியதும் முத்துவேலர் வந்து மகேஷிடம் தம்பி எங்கட கார் முன்னுக்கு போகட்டும், நீ இரண்டாவதாய் வா. பொம்பிளை மாப்பிளைக்கார் முன்னுக்கு போக வேண்டாம் என்று சொல்ல சரி சித்தப்பா நாங்கள் பின்னாலேயே வருகிறோம் என்று சொல்கின்றான். எல்லோரும் சுன்னாகத்துக்கு மாப்பிள்ளை வீட்டுக்கு செல்கின்றார்கள்.

காரினுள் கதிரின் மடியில் இருக்காத குறையாய் வசந்தி ஒருக்களித்துக் கொண்டு அமர்ந்திருக்கிறாள்.கதிர் கூச்சத்தில் அவளின் பக்கமே திரும்பவில்லை.மற்றப்பக்கம் வெளியே பார்த்தபடி இருக்க கழுத்தும் வலிக்கத் தொடங்கிட்டுது. சூல்கொண்ட கருமேகத்திலிருந்து நிலம் நோக்கி முதலாவது மழைத்துளி விழுவதுபோல் வசந்தியின் கண்களில் இருந்து ஒவ்வொரு துளி கன்னத்தில் உருண்டு மடியில் மறைகின்றது. கண்ணை கட்டி காட்டில் விட்டது போல் இருக்கு. நான் என்ன தவறு செய்தேன், எங்கே தவறு செய்தேன் எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது முருகா. நானா கலியாணம் கேட்டேன்.என்வாழ்வில் சதி செய்து போட்டாயே  என்று மனதினுள் குமுறுகிறாள்.

வசந்தி ஒரு பல்கலைக்கழக பட்டதாரி. மருத்துவபீட மாணவி. சமீபத்தில்தான் அவள் பட்டமளிப்பு  விழாவில் பங்கேற்று பதக்கமும் சான்றிதழ்களும் பெற்றிருந்தாள். இனி கொழும்பில் பயிற்சியுடன் நல்ல வேலை தேடவேண்டும். அதற்காக பல கிளினிக்குகள் ஆஸ்பத்திரிகளுக்கு விண்ணப்பம் செய்திருக்கின்றாள். அதுவரை பெற்றோருடன் இருப்பதற்காக மல்லாகத்துக்கு வந்திருக்கிறாள். மிகவும் தைரியமான பெண். எதிலும் துணிந்து முன்னாள் இறங்கி விடுவாள். பின்விளைவுகள் பற்றி அலட்டிக் கொள்ள மாட்டாள்.சென்ற வாரம்தான் சிவகாமி வானம்பாடிபோல் திரிந்த வசந்தியிடம் வந்து, பிள்ளை உனக்கு ஒரு நல்ல மாப்பிள்ளையோடு சம்பந்தம் வந்திருக்கு. அவர் வெளிநாட்டில்தான் வேலை செய்கின்றார். கலியாணம் கட்டியபின் இரண்டொரு மாதத்தில் உன்னையும் தன்னோடு அழைத்துக் கொண்டு போவாராம்.என்று சொல்கிறாள்.....!

வருவார்....!

Link to comment
Share on other sites

4 minutes ago, suvy said:

கலியாணம் கட்டியபின் இரண்டொரு மாதத்தில் உன்னையும் தன்னோடு அழைத்துக் கொண்டு போவாராம்.என்று சொல்கிறாள்.....!

வருவார்....!

வருவார் ..........................:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டொரு மாதத்தில் உன்னையும் தன்னோடு அழைத்துக் கொண்டு ....

 

 என்று தீரும் இந்த வெளிநாட்டு மோகம் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

பிள்ளை உனக்கு ஒரு நல்ல மாப்பிள்ளையோடு சம்பந்தம் வந்திருக்கு. அவர் வெளிநாட்டில்தான் வேலை செய்கின்றார். கலியாணம் கட்டியபின் இரண்டொரு மாதத்தில் உன்னையும் தன்னோடு அழைத்துக் கொண்டு போவாராம்.என்று சொல்கிறாள்....

ஓ அப்ப இதுவும் வெளிநாட்டு பார்சலாக இருந்திருக்கிறது  ஆப்பை கொடுத்திருக்கிறான் போல   ஹாஹாஹா தொடரட்டும்  சுவியர்  கொஞ்சமா கழுவி ஊத்துங்க  வெளிநாட்டைப்பற்றி:11_blush: 

 

3 hours ago, ஜீவன் சிவா said:

யோவ் அவசரக்குடுக்கை கொஞ்சம் அமத்தி வாசியப்பா :grin:

சுவியர் இப்பதான் பிரான்சுக்கு போயிட்டு வந்திருக்காரு 

பூனைக்குட்டி வெளியில வராமலா போகும் // வெயிட் அப்பா வெயிட் :grin::grin:

அதெல்லாம் முடியாது  ஒட்டு மொத்த கதையும் வந்தாகணும்:104_point_left: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்மா நான் படிச்ச படிப்புக்கு கொஞ்ச காலம் வேலை செய்ய வேணும் அம்மா. வெளிநாடு என்று போய் விட்டால் நீங்கள் இவ்வளவு நாளும் பட்ட கஷ்டமும் என்ற படிப்பு பட்டம் எல்லாமே வீணாய் போய்விடும் என்று எவ்வளவோ சொல்லியும் முத்துவேலு சிவகாமியின் வெளிநாட்டு மோகம் அவளைத் திருமணத்துக்கு சம்மதிக்க வைத்தது. பின்பு மாப்பிள்ளை முகுந்தனும் அங்கு அடிக்கடி வரத் தொடங்கினான்.அவனை எல்லோருக்கும் பிடித்திருந்தது.முகுந் அடிப்படையில் மிகவும் நல்லவனாகவும் பெரியவர்களுக்கு மரியாதை தருபவனாகவும் இருந்தான். அவளது வீட்டுக் காரில் சாரதியோடு மேலும் ஓரிருவர் கூட வர அவர்கள் கடற்கரை சினிமா நண்பர்கள் வீடு என சுற்றித் திரிந்தார்கள். அப்படித்தான் ஒருநாள் கே.கே.எஸ் ஜெற்றியோடு அண்டிய கடற்கரையில் அவர்கள் காலாற நடந்து கொண்டிருக்கையில் இரு சிறு நண்டுகள் ஒன்றையொன்று இழுத்துக் கொண்டு ஓடி விளையாடுவதை ரசித்துக் கொண்டிருக்கையில்,முகுந்தும் தான் முன்பு ஒரு பெண்ணை காதலித்ததும், பின் அது பெயிலியராகி வேறு ஒரு பெண்ணை விரும்பியதையும் அதுவும் தவறிப் போய் விட்டது என்றும் பகிடியாகவும் சீரியஸாகவும் சொல்லிக் கொண்டு வந்தான். ஆனால் அவன் எதிர்பார்த்தபடி அதை வசந்தி சீரியசாக எடுக்கவில்லை. இப்ப இதெல்லாம் சாதாரணமான ஒன்று என்பதுபோல் மெல்லிய சிரிப்புடன் நிறுத்திக் கொண்டாள். 

அப்படியே வசந்தியிடமும் நீரும் யாரையாவது விரும்பியிருந்தனீரா என்று கேட்க அவளது மௌனத்தைப் பார்த்து பரவாயில்லை சொல்லும் நான் ஒன்றும் நினைக்க மாட்டன் என்கிறான். வசந்தியும் அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை என்று சொல்கிறாள். என்ன நீர் இதெல்லாம் சகஜம்தானே அத்துடன் நீர் நல்ல அழகாய் இருக்கின்றீர் காதலிக்காமல் இருந்தால்தான் ஆச்சரியம் என்று கூற அவளும் நிறைய யோசித்து நான் யாழ்ப்பாணத்தில் ஏ.எல் படித்துக் கொண்டிருந்த பொழுது இன்னொரு கல்லூரி மாணவனை விரும்பினேன். அப்போது நாங்கள் படத்துக்கும், பார்க்குக்கும், கடைவிதிகளுக்கும் போய் வருவோம். அப்போ நீங்கள் டேட்டிங் போனதில்லையா, நான் ஒருத்தியுடன் மட்டும் போய் இருந்தேன். செம ஜாலியாய் இருந்தது. அவள் குறுக்கிட்டு நோ  நோ அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. இந்த ஒரு வாரமாக உங்களோடு எப்படி பழகித் திரிகின்றேனோ அப்படித்தான். ஆனால் இப்ப நினைத்தால் சிரிப்பாக இருக்கின்றது. அவனும் ஒரு விடலைப்பையன் நானும்கூட ... நண்பர்களுக்கு கெத்து காட்டத்தான் அப்படி நடந்துகொண்டோம் போல் தோன்றுகின்றது. அப்ப பின்பு நீங்கள் சந்திக்கவில்லையா.... இல்லை, ஆண்டு இறுதி விடுமுறை வந்து விட்டது. நான் பேராதனைக்குப் போய் விட்டேன். அங்கு ஒரு சிநேகிதமும் இல்லையா. இல்லை நான் மிகவும் தெளிவாய் இருந்தேன். அதனால் மாலைவேளைகளில் பல மாணவிகள் டான்ஸ் வகுப்புகளுக்கு செல்லும்போது நாங்கள் ஒரு சிலர் மட்டும் கராத்தே வகுப்புகளுக்கு போனோம். அதில் நான் முதலாவது கறுப்புப் பட்டியும் எடுத்திருக்கின்றேன். இன்னும் வீட்டுக்கு தெரியாது. தங்கச்சி சுகந்திக்கு மட்டும் தெரியும் என்றுசொல்லும்போது மற்றவர்களும் வர சம்பாஷணை அத்துடன் முடிவடைந்து எல்லோரும் காரில் வீட்டுக்கு திரும்புகின்றனர். 

இன்னும் இருநாட்களில் கலியாணம். வீட்டின் முன்னால் பந்தல் எல்லாம் போட்டு அமர்க்களமாய் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. காலைநேரம் முகுந்தின் பெற்றோர்களும் நண்பர்களுமாக கார்களிலும் மோட்டார் சயிக்கிளிலும் வந்து இறங்குகின்றனர். பெற்றோர்கள் உள்ளே செல்ல முகுந்தும் நண்பர்களுடன்சேர்ந்து கொள்கின்றான். மச்சான் அசல் இடமடா இது. வரேக்கை பார்த்தோம் பனைகள் எல்லாம் பால் சுமந்து நிக்குதடா.ஓமடா என்று சொல்லி எல்லோரும் வெளியே போகின்றார்கள். முத்துவேலுவும் அவர்கள் தங்குவதற்கு மேல்மாடியை ஒதுக்கி விடுகின்றார். அது அவர்களுக்கு எல்லாத்துக்கும் வசதியாய் இருக்கும்.போனவர்கள் இரவு சாமம்போல் நிறை போதையுடன் வீட்டுக்கு வருகிறார்கள். முகுந்தன் மட்டும் நிதானத்துடன் இருக்கிறான். அவனும் வசந்தியும் சேர்ந்து அவர்களை ஒருவாறு மாடியில் படுக்க வைக்கின்றார்கள். சொறி வசந்தி. தப்பா நினைக்காதே அவர்கள் சந்தோசத்தில்..... பரவாயில்லை முகுந்... இட்ஸ் ஓ கே. நீங்களும் இப்ப கீழே வரவேண்டாம். என்று சொல்லி விட்டு இறங்கிப் போய்விடுகிறாள்.

அடுத்தநாள் காலையிலேயே வீட்டின் பின் முற்றத்தில் வாங்கும் மேசைகளும் போட்டு நண்பர்கள் ஜாலியாக கதைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது காரில் இருந்து சில பாரின் குடிவகைகளை கொண்டுவந்து மேசைமேல் வைத்து கொஞ்சம் கொஞ்சமாய் குடித்துக் கொண்டிருக்கிறார்கள். முகுந்தின் தாய் வந்து எட பிள்ளையள், கனக்க குடிக்காதையுங்கோ. நீங்கள் நேற்று குடிச்சதே இன்னும் முறியேல்ல. இந்தக் கலியாணம் நல்லபடியாய் நடக்க வேணும் போதும் எழும்புங்கோ என்று மெதுவாய் சொல்லிவிட்டு போகிறாள். அவர்களின் டேஸ்ட்டுக்காக விசேஷமாய் செய்த கறியையும் பொரியலையும் வசந்தி கொண்டுவந்து மேசையில் வைத்து விட்டு போகும்போது அவர்களில் ஒருத்தன் கண்னைச் சிமிட்டிக் கொண்டு என்ன சிஸ்டர் நீங்கள் பெரிய ஆள், டேட்டிங் எல்லாம் போய் இருக்கிறீங்களாமே, செமையா இருந்ததா என்கிறான்.  அவள் ஒரு நிமிடம் ஆடிப் போய் விட்டாள். நீங்கள் என்ன சொல்லுறிங்கள். எங்களுக்கு எல்லாம் தெரியும். முகுந் எல்லாம் சொல்லிப் போட்டான். நேற்று முழுதும் எங்கட ஹிரோயினே நீங்கள்தான். மற்றவன் .... எண்டாலும் முகுந்தனுக்கு பெரிய மனசுடா... சிலர் ஆமா...ஆமா என்கின்றனர்.

வசந்தி: ப்ளீஸ் இப்படியெல்லாம் கதைக்காதையுங்கோ சரியில்லை என்கிறாள்.

நண்பர்: உள்ளதைத்தானே சொல்கிறோம். சும்மா சிலிர்ப்புக் காட்டுறியள்.

முகுந்தன்: டேய் தயவுசெய்து பேசாமல் இருங்கோடா. வசந்தி நீ முதல்ல இங்கிருந்து போ என்கிறான். அவள் கிளம்ப....!

ஒரு நண்பன்: உதட்டை கோணலாக நெளித்தபடி டேட்டிங் ஒருத்தனோடு மட்டுந்தானா கல்லூரிக்கு ஒண்டு யுனிக்கு ஒண்டா என்கிறான்.

வசந்தி: முகுந் இவர்களை பேசாமல் இருக்கச் சொல்லு. மாடிக்கு கூட்டிக் கொண்டு போ. ஆட்கள் பார்க்கினம்.

அவர்களும் ஏதேதோ உளற முகுந்தாலும் அவர்களை சமாளிக்க முடியவில்லை. நிலைமை விபரீதமாய் போவதை உணர்ந்த இரு நண்பர்கள் முகுந்தனுடன் சேர்ந்து மற்றவர்களை அடக்க முயன்றபோதும் முடியவில்லை.

சத்தம் கேட்டு முத்துவேலரும் முகுந்தின் பெற்றோரும் வந்து விட்ட னர். 

முத்துவேலர் முகுந்தனிடம் மாப்பிள்ளை முதல்ல இவர்களை இங்கிருந்து போகச் சொல்லுங்கள். நாளைக்கு கலியாணத்துக்கு வந்தால் போதும் என்று சொல்ல முகுந்தனும் அது எப்படி மாமா... அவர்கள் எனது நண்பர்கள். அப்படி நீங்கள் நினைப்பதுபோல் அவர்களும் நினைக்க வேண்டாமா....! மாறி மாறி கதைவளிப்பட அங்கு வந்த சிவகாமி வேண்டாம், நானும் நேற்றில் இருந்து பார்க்கிறன் எங்க கண் முன்னாலேயே என்ர பிள்ளையை இவ்வளவு வேதனைப் படுத்துகிறீர்களே நாளைக்கு கண்காணாத தேசத்திலே என்ர பிள்ளை தனது கஸ்டத்தை சொல்லி ஆறத்தன்னும் யார் பக்கத்தில் இருக்கப் போகினம்.... செய்த செலவு எங்களோடையே போகட்டும், நீங்கள் எல்லோரும் போகலாம் என்கிறாள். அதுக்கு மேல் அங்கு யாரும் நிக்கவில்லை. முகுந்தனின் தாய் மட்டும் உதுக்குத்தான் உவங்களை கூட்டி வராதே என்று அப்பவே சொன்னனான். காலமை கூட சொல்லிட்டுப் போனன்,கேட்டாங்களா என்று புறுபுறுத்துக் கொண்டு போகிறாள்.

வருவார்.....!

 

  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 நல்ல  கதை     நன்றி.  மேலும் தொடர்க 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டு மாப்பிள்ளைமாரை கொஞ்சம் உசத்தியா எழுதுங்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, putthan said:

வெளிநாட்டு மாப்பிள்ளைமாரை கொஞ்சம் உசத்தியா எழுதுங்கோ

ம்கும் எப்படி எழுதுவது ??:10_wink:

Link to comment
Share on other sites

7 hours ago, putthan said:

வெளிநாட்டு மாப்பிள்ளைமாரை கொஞ்சம் உசத்தியா எழுதுங்கோ

யோவ் எவ்வளவு உசத்தியா வெள்ள மனசுடையவர் என்றும் எழுதுறார் - இது போதாதா 

நண்பர்களுடன் எல்லாத்தையுமே பகிரும் வெள்ளை மனசுக்காரர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவியர் எனக்கு பிடிக்காத வார்த்தை தொடரும் என்பது.அதை எந்த வடிவத்தில் எழுதினாலும்:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் திருமணத்துக்காக முத்துவேலர் நிறைய செலவு செய்திருந்த போதிலும் அவர் அதை பற்றிச் சிறிதும் கவலைப்பட வில்லை.மகள் எதோ ஒரு பெரும் இக்கட்டில் இருந்து தப்பினதே போதும் என்றிருந்தது. ஆனாலும் இந்த முகூர்த்தத்துக்கு மகளுக்கு எப்படியாவது ஒரு வரன் பார்த்து கலியாணம் செய்யவேண்டும் என்ற எண்ணம் சிறு விதையாக மனதில் தோன்றி ஆலமரமாய் வளர்ந்து நிக்குது.தனது நண்பர்கள் தரகர்கள் எல்லோரிடமும் மாப்பிள்ளை தேடச் சொல்லி விட்டார். ஆனாலும் மனம் சமாதானமடையவில்லை. முருகனிடம் உளமார பிரார்த்தித்துக் கொள்கிறார். ஒரு நல்ல பிள்ளையை எனக்கு மருமகனாய்க் கொடு, உன்னுடைய சந்நிதியிலேயே இந்தத் திருமணத்தை நடத்துகிறேன் என்று வேண்டிக் கொள்கின்றார்.நம்பிக்கை இழந்த நேரத்தில் ஒரு உறவினர் மூலமாக சுன்னாகத்தில் தமது உறவுக்குள்ளேயே இப்படி ஒரு பையன் இருக்கிறான் என்பதை அறிந்து வந்து கதைத்து இந்தத் திருமணம் சந்நிதி ஆலயத்தில் நடந்தேறியது.யோசித்த வசந்திக்கு தலைசுற்ற கண்களில் இருந்து தாரை தாரையாக கண்களில் இருந்து கண்ணீர் வடிகின்றது. எப்போதும் தமக்கை கூடவே இருக்கும் சுகந்திக்கு அவளை பார்க்க பாவமாக இருக்கின்றது.ஆதரவாக அவள் கைகளைப் பற்றிக் கொள்கிறாள்.

மாப்பிள்ளையின் வீட்டில் அவசரத்துக்கு ஏற்றாற் போல் கூட்டி மெழுகி கோலம் போடப்பட்டிருக்கு. வீட்டில் அயலவர்களும் அவனது நண்பர்களும் கூடியிருக்கின்றனர்.இவர்கள் காரில் இருந்து இறங்கி வந்ததும் வாசலிலேயே நிறுத்தி வைத்து ஆரத்தி எடுத்து வீதியில் கொட்டிவிட்டு அவர்களை வீட்டுக்குள்ளே அழைத்து செல்கின்றனர். அங்கு எல்லோருக்கும் சுடச்சுட பால்தேத்தண்ணியும், வடையும் பரிமாறப் பட்டது. பின் எல்லோரும் கலைந்து போக வசந்தியின் தாயார் சிவகாமியும் தங்கச்சி சுகந்தியும் மாப்பிள்ளை வீட்டில் நிற்பது என்று முடிவெடுத்து தங்குகிறார்கள்.மற்றவர்கள் முத்துவேலருடன் மல்லாகத்துக்கு கிளம்பி விட்டனர். 

ஓர் அறை சாந்தி முகூர்த்தத்துக்கு தயாராகி விட்டிருந்தது. கட்டிலில் புது விரிப்புகள், புதுத் தலையணைகளும் போடப்பட்டிருந்தன. அதன்மேல் உதிர்த்த மல்லிகை, ரோஜா இதழ்களும்  தூவப்பட்டிருந்தன.அருகே மேசையில் பால், திராட்சை, தோடை, வாழைப்பழங்களும் கடலை உளுந்து வடைகள் மற்றும் செம்பில் தண்ணீரும் வைக்கப் பட்டிருக்கு.  கதிரின் தாயார் பார்வதி அவனிடம் வந்து அவ எங்களுடன் அறிமுகமில்லாத புதுப் பொண்ணு, கொஞ்சம் பதமாய் நடந்துகொள் என்று சொல்லி அவனை அறைக்குள் தள்ளாத குறையாக அனுப்பிவிட்டு கதவை சாத்திக் கொண்டு வருகிறாள். பெண்ணின் தாயார் சிவகாமி மகளை தனியாக கூட்டிக் கொண்டு போய் ஒரு நூல் புடவையும் சட்டையும் குடுத்து நீ அறைக்குள் போனதும் இதை மாத்திக் கட்டிக்கொள்.நீ படிச்சனி உனக்கு நான் அதிகம் சொல்லத் தேவையில்லை.பார்த்து இதமா நடந்துகொள். நாங்கள் வெளியிலதான் இருப்பம். ஏதாவது தேவையென்றால் கூப்புடு என்று சொல்லி அவளையும் அறைக்குள் கொண்டுபோய் விட்டிட்டு வெளியே கதவை சாத்தி விட்டார்கள்.

கதிர் கட்டிலின் ஒரு ஓரத்தில் குழப்பமான சிந்தனையில் அமர்ந்திருக்கின்றான்.உள்ளே வந்த வசந்தியிடம் இதுவரை அடங்கியிருந்த கோபமும்,தனது கையாலாகாத்தனமும் கழிவிரக்கமும் ஒருங்கேசேர தனது நெற்றிச்சுட்டி,ஒட்டியாணம், சடைநாகம் எல்லாவற்றையும் இழுத்து அறுக்காத குறையாய் கழட்டி மேசைமேல் எறிகிறாள்.சடைநாகம் கழட்டிய வேகத்தில் கூந்தல் அவன் முகத்தில் அடிக்க அவன் அதை கண்டுகொள்ளவில்லை. எவனோ ஒரு காட்டான் அங்கிருக்கிறான். முந்தாநாள் எவனோ ஒருத்தனோட கடற்கரையில் கைகோர்த்து நடக்கிறன், இப்ப இவனோட கட்டிலில் இருக்கவேணும். இவன் பெயர் கூடத் தெரியாது. இவனோடு முதலிரவாம். என்ன கொடுமை இது. இந்த அப்பா அம்மாவுக்கு விவஸ்தையே கிடையாதா. என்னைப்  பற்றி என் மனசைப் பற்றி சிறிதும் புரிந்து கொள்ளவில்லையே. மவனே...! கிட்டவந்து பார், இந்த பழம் நறுக்கும் கத்தியால குத்தி கொன்னு போட்டுருவன். நினைக்க நினைக்க ஆவேசம் வருகுது....!

வருவார்....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14.7.2017 at 9:14 PM, suvy said:

தந்தையுமானவன்.....!

அன்று நல்ல முகூர்த்தநாளாக இருக்க வேண்டும். சந்நதி முருகன் ஆலயத்தில் வள்ளி அம்மன் ஆலய முன்றலில் அன்று இருபது திருமணங்கள் வரை நடந்தன.எதிர்பாராமல் அவசரம் அவசரமாக இருபத்தியொராவது திருமணமாக கதிர்வேலுக்கும் வசந்திக்கும் திருமணம் நடக்கின்றது. விதி மிகவும் விசித்திரமானது.

அன்று காலை சுன்னாகத்தில் ஒரு பனங்கூடலுக்குள் மென்பந்தில் நண்பர்களுடன் கிரிக்கட் விளையாடும் போதோ அல்லது மத்தியானம் அம்மா திட்டிக் கொண்டு சாப்பாடு போடும்போதோ ( இது அம்மாவின் டெக்னிக்,தான் திட்டாது விட்டால்,அப்பா ஆரம்பித்து அவன் சாப்பிடாமல் வெளியே போய்விடுவான்). அதனால் அம்மா முந்திக் கொண்டு அவனைப் பேசிக்கொண்டு தாராளமாய் சாப்பாடு போடுவாள். அவர்களுக்கு தெரியாது அன்று அங்கு கதிர்வேலுக்கு கல்யாணம் நடக்குமென்று.

அப்போது சயிக்கிளில் ஓடியபடியே படலையை திறந்து கொண்டு கார்த்திக் வந்து இறங்குகின்றான். கையில் ஒரு போத்தலில் காய்ச்சலுக்கு கட்டயடி ஆஸ்பத்திரியில் வாங்கிய கலர் மருந்து இருக்குது.அம்மா கேட்க்கிறாள், என்னடா வடிவாய் சொல்லி மருந்து மாத்திரை வாங்கினியா. ஓமனை, யூரின் டெஸ்ட் பண்ண வேணும் என்று சொன்னவை. நாளைக்கு காலைமை வாறன் என்று சொல்லிட்டு வந்தனான். கிடாய்க்கு புண்ணாக்கு தீத்திக் கொண்டிருந்த அப்பா, அதென்னடி பிள்ளை யூரினாம் என்று பக்கத்தில் குலை கட்டிக் கொண்டிருந்த மூத்தவள் தேன்மொழியிடம் கேட்க அவளும் அது ஐயா சோதிக்கிறதுக்காக மூத்திரம் கேட்டிருக்கினம். உடனே மகனிடம் குறுக்கிட்டு... ஏண்டா அத அங்கன பேஞ்சு குடுத்திட்டு வாரத விட்டிட்டு இஞ்சை என்ன அலுமாரிக்கை கிடக்கெண்டு எடுத்துக் கொண்டு போக வந்தனியே...! அவனுக்கு முகம் உர் என்று வருகுது. அம்மா உடனே ஏன்டா அவர் கேட்கிறதில என்ன தப்பு. எனை நீயும் சேர்ந்து விசர்க்கத கதையாதையனை. அதுக்கு விடிய வெறும் வயித்தோடதான் போய்க் குடுக்க வேண்டும். அதுதானே பார்த்தேன் நீ விடிய காய்சசாலோட பழஞ்சோறையும் சாப்பிடேக்கை நினைச்சனான். தங்கை சௌம்யா மெதுவாய் சிரிக்கிறாள். உரத்து சிரித்தால் குட்டு விழும் என்று அவளுக்கு தெரியும்.

வருவார்.....!    

மிகவும்  ரசிக்கும்...  மறந்து போன,  யாழ்ப்பாண  எழுத்து நடை. சுவி. :110_writing_hand:
மெய்.. மறந்து, கடந்த காலத்துக்கு... போய்  விட்ட, 
முன்னோர்களின்... சொற் பிரயோகங்கள். :grin:
அவர்களை... மீண்டும். கண் முன்னே... கொண்டு நிறுத்திய உங்களுக்கு,  நன்றிகள்...   சுவி.  :) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவியர் எனக்கு ஒரு சின்ன குழப்பம்.கதையின் படி பாத்தால் மணப்பந்தலில் தான் கலியானம் கனைசி நேரத்தில் குளம்மபின மாதிரி எல்லோ இருக்குது.ஆனால் இறுதியாக வந்த பதிவைப்பாக்கும் போது அப்படி தெரியவில்லையே.மற்றும் ஏன் மணப்பெண் கோலத்தில் வந்தா:rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கதையை வாசித்து வரும் அனைவருக்கும் எனது பணிவான நன்றிகள்.....!   tw_blush:

28 minutes ago, சுவைப்பிரியன் said:

சுவியர் எனக்கு ஒரு சின்ன குழப்பம்.கதையின் படி பாத்தால் மணப்பந்தலில் தான் கலியானம் கனைசி நேரத்தில் குளம்மபின மாதிரி எல்லோ இருக்குது.ஆனால் இறுதியாக வந்த பதிவைப்பாக்கும் போது அப்படி தெரியவில்லையே.மற்றும் ஏன் மணப்பெண் கோலத்தில் வந்தா:rolleyes:

இதில் குழப்பமில்லை சுவை...., கலியாணம் வெள்ளிக் கிழமை.வீட்டில் செய்யத்தான் பந்தல் எல்லாம் போட்டிருக்கின்றார்கள். ஆனால் வியாழன் பகலே நண்பர்களுடன் பிரசினைப்பட்டு குழம்பி விடுகிறது. அதன்பின் தந்தை மும்மரமாக வரன் தேடுகின்றார்.கடைசிவரை யாரும் கிடைக்காத சமயத்தில்தான் முருகனைப் பிரார்த்தித்து உன் கோயிலில் செய்கிறேன் என்று சரணாகதி அடைகிறார்.வெள்ளி மதியம்போல்தான் மாப்பிள்ளை அமைகின்றது. மல்லாகமும் சுன்னாகமும் 2/3 கி.மீ துரம்தானே.அதுதான் அவர் முன்பே போய் ஒழுங்கு பண்ணியதும் பெண் வெளிக்கிடடபடி காரில் வருகிறாள்.அதன்பின் கடைக்குப்போய் எல்லாம் வாங்கிக்கொண்டு போகின்றனர்.....!

பி.கு அநேகமாய் கையில் சிறு குறிப்புகள் வைத்துக் கொண்டுதான் எழுதுகிறேன். சிலசமயம் தவறுகளும் வரலாம். சுட்டிக்காட்டுவதை வரவேற்கிறேன்.சுவை...! இடைக்கிடை விமர்சனம் வந்தால்தான் கதையில் மசாலா கலந்த பிரியாணி, இல்லாட்டில் வெண்பொங்கள்தான். இது தனிக்கும் ஜீவனுக்கும்.....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ஜீவன் சிவா said:

யோவ் எவ்வளவு உசத்தியா வெள்ள மனசுடையவர் என்றும் எழுதுறார் - இது போதாதா 

நண்பர்களுடன் எல்லாத்தையுமே பகிரும் வெள்ளை மனசுக்காரர்.

அப்படியா சொல்லுறார்..அதுதானே பார்த்தேன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கட்டிலின் ஒரு ஓரத்தில் குத்துக்காலிட்டு முழங்காலுக்குள் முகத்தைப் புதைத்து மௌனமாய் விசும்பி விசும்பி அழுகிறாள். மேனி குலுங்குகிறது. எதிர் ஓரத்தில் இருந்த கதிர் தனக்குள் இப்ப இவள் என்னத்துக்கு அழுகிறாள்.உண்மையில் நானெல்லோ அழவேனும் என்று நினைத்தவன், ம்....ம்.... அவளுக்கும் என்ன என்ன பிரச்சினைகளோ தெரியேல்ல, கொஞ்சம் அழட்டும் பிறகு கதைப்பம் என்று விடுகிறான். வசந்தியும் அலுத்து விம்மல் தணிந்ததும்  இந்தா பொண்ணு உனக்கு என்னென்ன பிரச்சினைகளோ எனக்கு தெரியாது. அப்படித்தான் எனக்கும், உன் பேர் கூட எனக்கு இன்னும் தெரியாது.காலையில் விளையாடிட்டு இருந்தஎன்னை இழுத்து வந்து கலியாணம் பண்ணிவைத்து இப்ப கட்டில்ல வந்து நிக்குது.

வசந்தி: நான் பொம்பிளை எதையும் எதிர்த்து சொல்ல முடியவில்லை. நீ ஆம்பிளைதானே இந்தக் கலியாணம் வேண்டாம் என்று சொல்லியிருக்கலாம்தானே.

கதிர்: இஞ்சபார் இவவின்ர கதையை, நான் என் வேண்டாம் என்று சொல்ல வேண்டும்.நாங்களா உன் விடு தேடி வந்தனாங்கள்.

வசந்தி: சரி எங்களிலதான் பிழை, கொஞ்சம் பேசாமல் இருக்கிறியா....!

கதிர்: இந்த சும்மா கோபப்படாமல் யோசித்துப் பார், இப்ப நான் இல்லை என்றாலும் இன்னொருத்தனுக்கு நீ கழுத்தை நீட்டத்தான் போற. நானா இருக்கப்போய் என்ர கற்பையும் காப்பாத்தி உன்னையும் காப்பாத்திக் கொண்டு இருக்கிறன்.

அவன் சொல்வதிலும் உண்மை இருக்குதுதான்....!

இந்த இடத்தில ரகு மட்டும் இருக்க வேணும் .....!

வசந்தி: அது யார் ரகு .....!

கதிர்: முழுப்பெயர் ரகுவரன்....! அவள் பகிடியை ரசிக்கவில்லை. சரி இந்தா நீ காலையில் இருந்து வடிவாய் சாப்பிட்டு இருக்க மாடடாய், கோயிலிலும் சரியா சாப்பிடேல்லை. என்று சொல்லி பலகாரத் தட்டை அவளுக்கு அருகே நகர்த்தி விட்டு தோடம்பழத்தை எடுத்து கத்தியால் தோல் சீவுகிறான். அவள் எனக்கு ஒண்டும் வேண்டாம் என்று தட்டத்தை அவனிடம் தள்ளிவிட கத்தி அவள் விரலில் பட்டு ரத்தம் கொட்டுது. உடனே மறுகையால்  விரலைப் பொத்திப் பிடிக்க கதிர் கலவரமாகி பதற்றத்துடன் அருகில் கிடந்த துணியால் சுத்திப் பிடிக்க சிறிது நேரத்தில் ரத்தம் கட்டுப்பட்டு விட்டது. சொறி தெரியாமல் பட்டு விட்டது. என்று சொல்லிவிட்டு பிளாஸ்கில் இருந்த பாலை ஊற்றி இதையாவது குடித்துவிட்டு படு என்கிறான். இம்முறை அவள் மறுக்காமல் வாங்கிக் குடித்துவிட்டு மறுபுறம் திரும்பி ஒருக்களித்துப் படுத்துக்க கொள்கிறாள். அவனும் சிறிது பால் அருந்திவிட்டு ஓரமாய் படுக்கிறான்.

எப்ப தூங்கிப் போனார்கள் என்றே தெரியாது.வெளியே பேச்சுக் குரல்கள் கேட்க வசந்தி எழுந்து நேரத்தைப் பார்க்கிறாள். ஒன்பது மணி. அவள் எழுந்த அசுமாத்தத்தில் கதிரும் எழுந்து வேட்டியை சரிசெய்து கொள்கிறான். அவன் கதவைத் தட்ட தாய் பார்வதி வந்து கதவைத் திறக்கிறாள்.அவன் வெளியே போனவுடன் பார்வதியும் சிவகாமியும் உள்ளே வருகிறார்கள். வெளியேறப்  போன மருமோளைத் தடுத்து அலுமாரியில் இருந்து தேன்மொழியின் சடடை ஒன்றை எடுத்து மாத்திக்க சொல்லி குடுத்துவிட்டு, கலைந்திருந்த தலைமுடியை வழித்து கையால் சுற்றி ஒரு கோடாலி கொண்டை போட்டுவிட்டு கலைந்திருந்த திலகத்தையும் விரலால் சரிப்பண்ணி அவள் உச்சியில் முத்தமிட்டுவிட்டு போய் குளிச்சுட்டு வானை என்று சொல்லி அனுப்பிவிடுகிறாள்.வெளியேறிய வசந்திக்கு எல்லோரும் தன்னையே புன்சிரிப்புடன் பார்ப்பதுபோல் இருக்கு. 

பார்வதியும் சிவகாமியும் அங்கு கட்டில் விரிப்பிலும் பூக்களிலும் ஆங்காங்கே கறைகள் படிந்திருப்பதைக் கண்டு கண்களால் பேசிக் கொள்ளினம். எவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும் இப்பத்தைய பொடி பொட்டைகள் விவரமாய்தான் இருக்கினம் என்று சிவகாமி சொல்ல பார்வதி தலையசைத்து ஆமோதிக்கிறாள். 

கிணத்தடிக்கு வந்த சிவகாமி இருவரையும் பார்த்து கிடாரத்தில சுடுதண்ணி பதமான சூட்டில விளாவி விட்டிருக்கிறன், கெதியாய் தோய்ஞ்ச்சுட்டு வாங்கோ என்று சொல்லிப் போட்டுவர அவன் பம்செட்டிலும் அவள் சுடுதண்ணிரிலும் தோய்ஞ்சிட்டு வருகினம்.வீட்டுக்குள் வந்தவர்களிடம் பார்வதி இரண்டு கிண்ணத்தில் முட்டை கோப்பி வார்த்துக் குடுக்க இருவரும் ஒன்றும் பேசாமல் வாங்கிக் குடிக்கிறார்கள்......!

வருவார்....!  

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, suvy said:

முட்டை கோப்பி வார்த்துக் குடுக்க இருவரும் ஒன்றும் பேசாமல் வாங்கிக் குடிக்கிறார்கள்......!

முட்டைகோப்பிதான் அந்த காலத்து பூஸ்ட்,கொர்லிக்ஸ் விட்டமின் எல்லாம்....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்! ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.   https://thinakkural.lk/article/299459
    • வடக்கு மீனவர்களின் ஓயாத போராட்டம் ஜே.ஏ.ஜோர்ஜ் “அது ஒரு சனிக்கிழமை, நான் எனது வலைகளை எடுப்பதற்காக கடலுக்கு சென்றேன். வலை நிறைய மீன்களை எதிர்பார்த்து சென்ற எனக்கு அங்கு அதிர்ச்சியே மிஞ்சியது. ஏனென்றால் நான் விரித்து வைத்திருந்த வலைகள் அங்கு இல்லை.  எனது வலைகளை இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை சேதப்படுத்தி விட்டனர். ஆனால் இது முதல் முறையாக நடக்கும் சம்பவம் இல்லை” -  இவ்வாறு தனது கதையை கூறும் மீனவரான ரெஜினோல்ட் தனது கடந்த கால அனுபவங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய தனது போராட்டம் தீவிரமடைந்திருப்பதாக கூறுகின்றார். 20 ஆண்டுகளாக தனது வாழ்க்கைக்காக கடல் அலைகளுடன் போராடி வரும் ரெஜினோல்ட் மட்டுமன்றி வடமாகாண மீனவர்களில் அதிகளவானவர்கள் தற்போது இவ்வாறு கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். இலங்கை கடற்பரப்பிற்குள் இழுவை படகுகளை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் முன்னெடுக்கும் மீன்பிடி நடவடிக்கைகளே இந்த நெருக்கடிக்கு காரணமாக உள்ளது. நெடுந்தீவைச் சேர்ந்த ரெஜினோல்ட் தனது தந்தையுடன் இணைந்து நீண்டகாலம் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில், திருமணத்துக்கு பின்னர் தற்போது தனியாக தொழில் செய்கின்றார். “நான் என் படகை மோட்டார் இல்லாமல் பயன்படுத்துகிறேன். மோட்டார் ஒன்றை வாங்க என்னிடம் போதுமான பணம் இல்லை. அதனால் என்னால் அதிக தூரம் செல்ல முடியாது. கடந்த காலங்களில் மீன்பிடிக்க பாரம்பரிய வலைகளைப் பயன்படுத்தினேன். இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை எனது வலைகளை சேதப்படுத்தி விட்டனர். எனவே, இப்போது மீன்பிடிக்க சிறிய வலையைப் பயன்படுத்துகிறேன். இதனால், முன்பு போல் மீன் பிடிக்க முடியவில்லை. கடலில் இரண்டு மூன்று மணி நேரம் மாத்திரமே செலவிட முடிகின்றது. எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.  எனது மூத்த மகன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். அவர்களுக்காக நான் பல செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. பொருட்களின் விலை முன்பை விட அதிகமாக உள்ளது. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவது இப்போது மிகவும் கடினமாக உள்ளது” என்கிறார் ரெஜினோல்ட். அமெரிக்க பாதுகாப்பு பல்கலைக்கழகம் 2008ஆம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஏற்பாடு செய்திருந்த செயற்குழு கூட்டத்தில் கலாநிதி சனத் டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையின்படி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல் எல்லை மூன்று கடல் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கில் வங்காள விரிகுடா, நடுவில் பாக்கு நீரிணை, தெற்கில் மன்னார் விரிகுடா என இந்த கடல் எல்லைகள் உள்ள நிலையில், பாக்கு நீரிணை ஊடாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சராசரி தூரம் சுமார் 32 கிலோமீற்றர்கள் என அறிக்கை கூறுகிறது. கச்சதீவில் இருந்து இந்தியாவின் ராமேஸ்வரம் வரையிலான தூரம் சுமார் 14 கடல் மைல்கள், அதாவது சுமார் 26 கிலோமீட்டர்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து கச்சத்தீவு வரை சுமார் 60 கிலோமீட்டர் தொலைவான கடற்பரப்பில் தனது அதிகாரத்தை கொண்டுள்ள இலங்கை கடற்படை, சர்வதேச கடல் எல்லையை தாண்டி இலங்கை கடலுக்குள் நுழையும்  இந்திய இழுவை படகுகள் குறித்து அவ்வப்போது  நடவடிக்கை எடுத்து வருகிறது. எவ்வாறாயினும், இலங்கை  கடற்பரப்புக்குள் இந்திய இழுவை படகுகள் பிரவேசிப்பது  நாளாந்தம் இடம்பெறுவதாக வடபகுதி மீனவ சங்க தலைவர்கள் கூறுகின்றனர். “இது ஒரு தீவிரமான பிரச்சினை. இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை உள்ளிட்டவர்கள் தேவையான நடவடிக்கை எடுக்காதமையே இந்த பிரச்சினை தொடர்வதற்கு முக்கிய காரணமாக உள்ளது.  ஏராளமான இந்திய இழுவை படகுகள் இலங்கை கடல் பகுதிக்குள் நுழையும் நிலையில், கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்படும் இந்திய இலுவை படகுகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை எடுத்து இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மீன்பிடி அமைச்சு நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் இழுவை படகுகள் வடபகுதி மீனவர்களுக்கு சொந்தமானதை படகுகளை விட பெரியவை. அவை தினமும் வடக்கு கடல் பகுதிக்குள் நுழைவதால், ஏராளமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் வடபகுதி மீனவர்களின் வருமானம் பாதிக்கப்படுவதுடன், இந்திய இழுவை படகுகளால் இலங்கை மீனவர்களின் வலைகளுக்கு சேதம் ஏற்படுகின்றது. அத்துடன், எமது மீன்பிடி வளம் பறிபோகிறது. எமது மீனவர்களுக்குச் சொந்தமான படகுகளை சேதப்படுத்திய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன”- என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார். அத்துடன், இந்தியாவில் இருந்து இழுவை படகுகள் வருவதை தடுக்கும் வகையில் இலங்கையில் சட்ட அமைப்பு இருப்பதாகவும் எனினும், அவற்றால் நடைமுறையில் இலங்கை மீனவர்களால் எந்தவித பயனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை என, அன்னராசா சுட்டிக்காட்டினார். 1979 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க கடற்றொழில் (வெளிநாட்டு மீன்பிடி படகுகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டத்தின் 04ஆவது பிரிவின்படி, அனுமதியின்றி மீன்பிடி தொடர்பான நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு மீன்பிடி படகுகளை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடாது என்று கூறுகிறது. அத்துடன், இலங்கை கடற்பரப்பிற்குள் வெளிநாட்டுப் படகுகள் பிரவேசித்தால், மீன்பிடிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், அந்தப் படகில் உள்ள மீன்பிடி சாதனங்களை முறையான முறையில் தடுத்து வைக்க வேண்டும் என்று சட்டத்தின் 05வது பிரிவு கூறுகிறது. வெளிநாட்டுப் படகுகளை நிறுத்தவும், சோதனைகளை நடத்தவும், பிடியாணையுடன் அல்லது இல்லாமலும் படகுகளைக் கைப்பற்றவும், தனிநபர்களைக் கைது செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  2018 ஆம் ஆண்டில், இந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டதுடன், இலங்கையில் உள்ள ஆயுதப்படைகளின் தளபதிகள் மற்றும் அதன் அமுலாக்கத்துக்காக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைவர் ஆகியோருக்கு பொறுப்பை வழங்கும் கூடுதல் சரத்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. வெளிநாட்டுப் படகுகள் மூலம் இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்தால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். இந்த குற்றம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பொறுப்பான அமைச்சருக்கு விதிமுறைகளை உருவாக்கும் திறன் உட்பட விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1981 ஆம் ஆண்டு இந்தச் சட்டத்தின் கீழ் இலங்கைக் கடற்பரப்பில் நுழைவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான நடைமுறைகளை கோடிட்டுக் காட்டும் விதிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மீன்பிடி அமைச்சு மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் என்பன மீள தவிர்க்க முடியாத பொறுப்பைக் கொண்டுள்ளன. இந்திய மீனவர்கள் வட கடலில் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை முற்றாக நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் 2023 ஜனவரி 24 ஆம் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.  மேலும், 2023ல் சட்டவிரோத வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் மற்றும் மீனவர்கள் குறித்து அந்தந்த நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், இந்திய இழுவை படகுகளினால் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண போதிய நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் இன்னமும் தவறியுள்ளதுடன், இதனால் பிரச்சினை தொடர்ந்து மோசமாகி வருகிறது. இவ்விடயம் தொடர்பில் வினவிய போது கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கே.என். குமாரி சோமரத்ன, இந்த பிரச்சினைக்கு இரு நாடுகளுக்கிடையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவிக்கின்றார். “இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த விடயம் தொடர்பில் மீண்டும் ஒருமுறை கலந்துரையாடலை ஆரம்பிக்குமாறு வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். வெளிவிவகார அமைச்சரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதை நாம் அறிவோம். இப்பிரச்சினை தொடர்பாக தற்போதுள்ள சட்டங்களில் திருத்தம் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. தற்போது, முதல் தடவை கைதுக்கான தண்டனை மற்றும் மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டதற்கான தண்டனையை சட்டம் குறிப்பிடுகிறது, ” என்று அவர் கூறுகின்றார். இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கடற்படையின் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு ஏன் பணிப்புரை வழங்கப்படவில்லை என வினவியபோது, அந்தச் சட்டம் இன்னமும் அமுலில் உள்ளதாகவும், அதன்படி தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செயலாளர் தெரிவித்தார். இது இவ்வாறாக இருக்கும் நிலையில், இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் எண்ணிக்கை 150க்கும் அதிகமாகும். இது அதிக எண்ணிக்கையாக தெரிந்தாலும், நாளாந்தம் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களின் வருகையுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவு என மீனவ சங்கத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்களை கண்காணிப்பதற்காக வடக்கில் ‘கடல் காவலர்கள்’ எனப்படும் தன்னார்வ குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை கடற்றொழில் அமைச்சர் சமர்ப்பித்துள்ளார். இதேவேளை, இந்திய மீன்பிடி பிரச்சனையால் நாளாந்தம் 350 மில்லியன் ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக அமைச்சு மதிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், தற்போதைய கடற்றொழில் அமைச்சர் வடக்கில் உள்ள மீனவர்களின் வாக்குகளால் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதாகவும், கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அவர் போதிய தலையீடுகளை மேற்கொள்ளவில்லை என வடமாகாண மீனவர் சங்க தலைவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். வடக்கில் உள்ள எழுவைத்தீவு, அனலைத்தீவு, நெடுந்தீவு உள்ளிட்ட, மீன் பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மக்கள் வசிக்கும் தீவு பகுதிகள் இன்னும் இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பிலேயே உள்ளதை எம்மால் நேரடியாக காண முடிந்தது. இந்த தீவுகளின் கடற்படையினரின் சோதனை சாவடி அல்லது முகாம் இன்னும் செயற்பாட்டிலேயே உள்ளது. இவ்வாறு வடக்கின் கடற்பரப்பை சுற்றி ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் இலங்கை கடற்படையினர், இந்திய மீனவர்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதை தடுக்க  உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து வடபகுதி மீனவர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். இலங்கை கடற்படையினர் நினைத்தால் இந்திய மீனவர்களை இலங்கை கடல் வளத்தை சுரண்டாமல் இலகுவாக தடுத்து நிறுத்த முடியும் என்பதே வடபகுதி மீனவர்கள் நம்பிக்கையாகும். ஆனால், அது இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது அந்த மீனவர்கள் நிலையை நேரில் பார்க்குத்போது தெளிவாக புலப்படுகின்றது.   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வடக்கு-மீனவர்களின்-ஓயாத-போராட்டம்/91-336077
    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
    • அமெரிக்கா ஏதோ ஒரு விதத்தில் பங்கு எடுக்கும், எடுக்க வேண்டிய நிலை, இஸ்ரேல் ஈரானுக்கு திருப்பி அடித்தால் . (மற்ற திரியில் சொன்னனது போல , இஸ்ரேல் க்கு தெரியும், அமெரிக்கா, மேற்கு பாதுகாப்புக்கு எப்போதும் வரும் என்று. அதை மேற்கும், மீண்டும், மீண்டும் சொல்லுகின்றன. இதுவே பங்கு எடுப்பது. அமெரிக்கா செய்வது, இஸ்ரேல் ஐ பாதுகாப்பத்தற்கு ஈரானின் ஏவுகணனைகளை தடுப்பது act of  war,)   ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேல் இன் தாக்குதல் , மேற்கு, குறிப்பாக US க்கு தெரிந்து (அதன் மூலம் 5 கண்கள் உளவு நாடுகளுக்கு - 5 eyes intelligence community தெரிந்து), US ஆமோதித்து, அனுமதித்து  நடத்தப்பட்ட தாக்குதல். ஏனெனில், இஸ்ரேல் இப்படியானவற்றை அமெரிக்காவிடம் சொல்லாமல் செய்வதில்லை. மேலும், France க்கும்  உச அறிவித்து இருக்கும், ஏனெனில், சிரியா பிரான்ஸ் இன் காலனித்துவம்  கீழ் இருந்தது. மற்றது, பிரச்னை வந்தால் செக்யூரிட்டி கவுன்சில் இல் பிரான்ஸ் இந்த உதவி தேவை, ஆனால், இந்த காலனி என்பதே பிரதான  காரணம். இது செக்யூரிட்டி கவுன்சில் இல் எழுதப்படாத  விதி- காலனித்துவ அரசுகளே, முனைய காலணிகளின் இப்போதைய அரசுக்கள் சார்ந்த  விடயத்தில் முன்னுரிமை உள்ளது என்பது .  எனவே, மேற்கு ஆகக்குறைந்தது மறைமுக பங்குதாரர் (கனடா தூதரகத்தை காலி செய்தது அநேகமாக இந்த 5 eyes வழியாகத் தான் இருக்கும்) இஸ்ரேல் சொல்லியது தாக்குதலுக்கு மிகச் சிறிய நேரத்துக்கு முதல் என்று (வேண்டும் என்று) அமெரிக்கா கசிய விட்டு, சில செய்திகள் காவுகின்றன. அனால், தாக்குதலை இஸ்ரேல் 2 மாதமாக திட்டமிட்டது என்று பின் செய்து வந்தது.  கேக்கிறவன் கேணையனாக இருந்தால் ... என்ற அமெரிக்காவின் கதை. (அப்படி US  இடம் சொல்லாமல் இஸ்ரேல் செய்தது, Sinnai மீதான தாக்குதல், கைப்பற்றலும்  , ஆனால், அது பெரிய யுத்தத்தின் ஒரு பகுதி, Egypt முதல் தாக்கி இருந்தது). அமெரிக்காவுக்கு முதலே (ஏற்ற காலத்தில் ) தெரியும் என்றது, newyork times வெளியிட்டு உள்ள இன்னொரு செய்தியானா, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் ஈரானின் எதிர்பபை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அதிகாரிகள் அவர்களின் வாயால் சொன்னதாக என்ற செய்தியில்   இருந்து தெரிகிறது.   இதனால் தான் மேற்கு, ஈரானை தடுக்க முனைந்தது. முடியாமல் போக, அது தடுத்தது. un இன் பகுதி charter ஐ குழிதோண்டி புதைத்தன அமெரிக்காவும், அதன் வாலுகளும்.  இதை மேற்கு rule based என்று சொல்லும் என்று நினைக்கிறன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.