Jump to content

தந்தையுமானவன்.....!


suvy

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்நேரத்தில் முத்துவேலுவும் திவாகரனும் வருகின்றார்கள். முத்துவேலு திவாகரனை தனது ஒன்றுவிட்ட அண்ணன் என்று அறிமுகப் படுத்துகிறார்.அவர் இராணுவத்தில் பெரிய பதவியில் இருப்பதாக சொல்கிறார்.அப்பா நீங்கள் இந்தக் கலவரத்தில் எங்க இருந்தனீங்கள்.என்று ராஜசேகர் வினாவ, நான் அப்பொழுது இங்கில்லை பயிற்சிக்காக வேறுநாட்டில் இருந்தேன்.அப்பொழுது தேன்மொழி வந்து மாமா உங்கள் இருவருக்கும் கோப்பி போட்டுக் கொண்டு வரட்டே, வேண்டாம் பிள்ளை ஒரே வெக்கையாய் கிடக்கு. கொஞ்சம் பொறுங்கோ எண்ட தேன்மொழி கொக்கத்தடியை எடுத்து அருகே நின்ற செவ்விளனி மரத்தில் இருந்து ஒரு குலையை வெட்டி விழுத்தி இரண்டு இளநியை கொடுவாக்கத்தியால் சீவிக் குடுக்க இருவரும் சந்தோசமாய் வாங்கிப் பருகினம்.அப்போது முத்துவேலர் மெதுவான குரலில் திவாகரனிடம் ஏண்ணே ! உன்ர மோனுக்கு இந்தப் பிள்ளையை கேட்டால் என்ன...! கொஞ்சம் யோசித்த திவாகரன் அவனுக்கு சாதகம் பொருந்தினால்தான் செய்யலாம். ஏதும் பிரச்சனையே, உனக்கு சொன்னால் என்ன அவனுக்கு செவ்வாய் குற்றம் இருக்கு. பொம்பிளை அமையிறது கஸ்டம்.  பொறு எதுக்கும் கேட்டுப் பார்ப்பம் என்று சொல்லி தள்ளி இருந்த ராஜசேகரைப் பார்க்க அவரும் யோசனையுடன் மனைவியைப் பார்க்கிறார்.பார்வதியும் அர்த்த புஷ்டியுடன் புருசனைப் பார்த்தபடி சொல்கிறாள், பிள்ளைக்கும் செவ்வாய் குற்றம் இருக்கு. அதுதான் வந்த ரெண்டு சம்பந்தம் தள்ளிப் போட்டுது. எதுக்கும் ரெண்டு சாதகத்தையும் நல்ல சாத்திரிட்ட  காட்டி சரியெண்டால் பிள்ளைகளிடமும் கேட்டுக் கொண்டு மேற்கொண்டு கதைப்பம். முத்துவேலரும் பகிடியாக அண்ணே இந்தக் கல்யாணம் முழுதும் என்ர பொறுப்பு. சீதனம் எண்டு ஒரு வெள்ளிச்சல்லியும் தரமாட்டன். இப்பவே சொல்லிப்போட்டன். திவாகரனும் உங்களிட்ட யார் சீதனம் கேட்டது.  அந்தக் கொக்கத்தடியை மட்டும் கொண்டுவந்தால் போதும். வீட்டில நிறைய தென்னை நிக்குது என்று சொல்ல சௌம்யாவுக்கு  சிரிப்பை அடக்க முடியவில்லை.விழுந்து விழுந்து சிரிக்கிறாள். பின்பு மூன்று ஆண்களும் பார்வதியிடம் சாதகத்தை வாங்கிக் கொண்டு காரில் போகிறார்கள்.  

சற்றுநேரத்தில் மோட்டார் சயிக்கிளில் வந்த  மகேஷை கதிர் கைகொடுத்து வரவேற்கிறான். அவனும் இவர்களுடன் உரையாடலில் கலந்து கொள்கிறான். வசந்தியும் சுகந்தியும் கூட அங்கு வந்து அமர்கிறார்கள்.சௌம்யா அந்த மாமாக்கள்போல மிமிக்கிரி செய்து மிலிடரி அங்கிள் சரியான லூசு அண்ணி, கொக்கத்தடி கொண்டு வரட்டாம் என்று சிரிக்க வசந்திக்கு மனசு சிறிது ரிலாக்ஸ் ஆகுது. பெரியவங்களை பகிடி பண்ணாதே ஒருநாளைக்கு யாரிட்ட  வாங்கிக் கட்ட போறியா தெரியாது...என்கிறாள். அவளும் கொஞ்சம் அடங்க , மகேஸைப் பார்த்து நீங்கள் சொல்லுங்கோ தம்பி, உவள் விசாரி கிடக்கிறாள். எப்பவும் விளையாட்டுதான்.  நீங்கள் சம்பந்திக்கு சொந்தமோ..., ஓம் அன்ரி வசந்திக்கு ஒன்று விட்ட அண்ணன் முறை வேணும். அப்ப உங்கட அப்பா அம்மா கலியாணத்துக்கு வந்தவையே. நீங்கள் மாப்பிள்ளை பொம்பிளை கார் ஓடிக் கொண்டு வந்தது தெரியும். எனக்கு அன்ரி அம்மா இல்லை, எல்லாம் அப்பாதான் நான் கே.கே. எஸ்  ஸ்டேசனில  இன்ஸ்பெக்டராய் இருக்கிறன். அப்பா என்ன செய்யிறார் ஊரோடதானோ..., ஓம்... யாரது (வசந்தியும் சுகந்தியும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்து தமக்குள்ள சிரித்துக் கொள்ள)  இவ்வளவு நேரமும் சௌம்யா சொன்ன லூசு அங்கிள்ன்ர மகன்தான் நான் என்கிறான். கோட்டதுதான் தாமதம் சௌம்யாவும் தேன்மொழியும் எல்லோரையும் இடறி விழுத்துக் கொண்டு வீட்டுக்குள் ஓட வசந்தி உட்பட எல்லோரும் சிரிக்கினம்.மகேஷ் மட்டும் ஒன்றும் புரியாமல் திகைத்து நிக்கிறான்.....!

வருவார்....!

Link to comment
Share on other sites

  • Replies 68
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இப்படியே சனிக்கிழமை போகிறது. ஞ<யிறு  காலை எல்லோரும் அருகில் இருந்த கோவிலுக்கு போய் விட்டு பின் பெண்ணின் வீட்டுக்கு செல்கிறார்கள்.அங்கு பெண்கள் தடபுடலாய் விருந்து சமைக்க ஆண்கள் மாப்பிள்ளையுடன் சென்று நாட்கடைச் சாமான்கள் வாங்கி வருகிறார்கள்.பின்பு பந்தலின்கீழ் பாய் விரித்து எல்லோரும் விருந்து உண்ணுகின்றனர்.அதில் ஆடு,கோழிகடலுணவுகள் மற்றும் ஆண்களுக்கு மறைவாக குடிவகைகளும் தாராளமாக பரிமாறப் படுகின்றன. பலரும் தாம்பூலம் தரித்து ஓய்வாக கதைத்துக் கொண்டிருக்கையில் திவாகரன் முத்துவேலரிடம் இயல்புடன் மாப்பிள்ளை என்ன வேலை செய்கிறார் என கேட்கிறார். முத்தரும் சிவகாமியும் என்ன சொல்வதென்று தடுமாற கதிர் சொல்கின்றான், நான் அங்கிள் நாளைக்குத்தான் முதன்முதலாக ஒரு வேலைக்கு சேர போகின்றேன். எங்கே என்ன வேலை தம்பி.அது ஒரு வெளிநாட்டுடன் சேர்ந்து சிறிய யந்திரங்கள் தயாரிக்கும் பெரிய கொம்பனி.இண்டர்வியூ எல்லாம் முடிந்து என்னை நாளை காலை 9:00 மணிக்கு வேலை பொறுப்பெடுக்க வரச்சொல்லியிருக்கினம்.முதல்நாள் முதல் அனுபவம் என்றபடியால் எனக்கு ஒரே பதட்டமாய் இருக்கு . கொம்பனி யாழ்ப்பாணத்தில் அரியாலையில் இருக்கு என்று முகவரி தந்திருக்கினம் என்கிறான்.பெண் வீட்டாருக்கு ஒரே சந்தோசமாய் இருக்கு. இதை அவர்கள் எதிர்பார்க்கவேயில்லை. ராஜசேகர் பார்வதியரை நினைக்க பெருமையாய் இருக்கு, இதுவரை தங்களிடம் சீதனமோ வேறு எதுவுமோ ஒருவார்த்தை கேட்கவில்லை. அந்நேரத்தில் எவ்வளவும் சீர்செனத்தி செய்ய முத்துவேலர் தயாராக இருந்தார். பின்பு வசந்தியும் நாளைக்காலை கதிருடன் சேர்ந்து போவதென்றும் அங்கு தங்குமிட வசதிகள் சரியில்லாவிட்டால் அவளை மீண்டும் வீட்டுக்கு கூட்டி வருவதென்றும் முடிவாகின்றது. எட்டத்தில் நின்று இவர்களின் உரையாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்த வசந்திக்கு அது வசதியாய்ப் படுகுது. வீட்டில நின்டு  வேண்டாத கேள்விகள் கேட்டு வேதனைப் படுத்தும் நூறு ஊர்ப் பிசாசுகளைவிட இந்த ஒரு பேயோடு போய் குடித்தனம் பண்ணுவது மேல் என்று நினைக்கிறாள்.

வெளியே மேகம் கறுத்திருக்கு லேசாக இடியும் மின்னலுமாய் இருக்கு. மகேஷ் கதிரைப் பார்த்து நீ ஒன்றுக்கும் யோசிக்காதே கதிர் நான் என் ஜீப்பில் உங்களைக் கூட்டிக் கொண்டுபோய் அங்க விட்டு கூட இருந்து எல்லா ஒழுங்கும் செய்துபோட்டு வாறன் என்று சொல்ல, திவாகரன் குறுக்கிட்டு நோ...நோ... நீங்கள் என்னோடுதான் வரவேண்டும். நான் காம்பில் இருந்து ஹெலிகேப்டரில பத்து நிமிசத்தில் கொண்டுபோய் கொம்பனி வாசலில் விடுகிறன், இது உங்களுக்கு என்னுடைய கிப்ட் என்கிறார்.எல்லோருக்கும் மகிழ்ச்சி. ஆனால் கதிர் மட்டும் அங்கிள் இது முதல்நாள் முதல் வேலை நான் சரியா 9:00 க்கு அங்கு இருக்க வேண்டும். விடு மாப்பிள்ளை உன்னை 8:30 க்கே  அங்கு இறக்கி விடுகிறன் என உத்தரவாதம் கொடுக்கிறார். 

திங்கள் காலை எல்லோரும் நேரத்துக்கு எழுந்து ஆயத்தப் படுகின்றனர். வசந்தியும் ஒரு சூட்கேசில் தனது சாமான்களை எடுத்துக் கொண்டு மறக்காமல் சார்ஜர்ஸ் தப்லட் டையும் எடுத்து வருகின்றாள்.அதை பார்த்ததும் கதிரும் தங்களது மடிக்க கணணியை எடுத்து பெட்டியில் வைக்க  தங்கை சௌமியின் முகம் கறுக்குது. 

சௌமி: அண்ணா..., பிளீஸ் அதை தந்துட்டு போண்ணா....! அவர்கள் வீட்டில் எல்லோருக்கும் பொதுவாக அது ஒன்றுதான் இருக்கு.

கதிர்: பொறடி சௌமி நான் அங்கு போய் ஒன்று வாங்கிவிட்டு இதை குடுத்து விடுகிறேன்.

சௌமி: அம்மா.... அதை விட்டிட்டு போக சொல்லம்மா. அண்ணா ஒரு ஆள்தானே. நாங்கள் மூன்றுபேர் இங்க இருக்கிறம் என்று சண்டை போடுகிறாள்.

பார்வதி: அவன் இப்ப கொண்டு போட்டு பிறகு குடுத்து விடட்டும் பேசாமல் இருடி....!

சௌமி: அண்ணா பிளீஸ்.... கந்தசஷ்டி கவசத்தில் கூட நீ எனக்கு உதவுவாய் என்று சொல்லியிருக்கண்ணா...!

வசந்தி: அதில எங்கடி சொல்லி இருக்கு. சும்மா அவிட்டு விடாத....!

சௌமி: உண்மைதான் அண்ணி, "சிஸ்டருக்கு  உதவும் செங்கதிர்வேலன் "என்று இருக்குதா இல்லையா...! எல்லோரும் கை தட்டி சிரிக்க 

உடனே வசந்தி அதை எடுத்து அவளிடம் குடுத்து விட்டு அவளை அணைத்துக் கொள்கிறாள்....! அதன்பின் சௌமியையும் கணணியையும் காணவேயில்லை. மகேஷ் தகப்பனுடன் காரில் வருகிறான். முத்துவேலர் அவர்களுக்கு தேவையான பொருட்களை தனது டிராக்டரில் ஏற்றிக் கொண்டிருக்கிறார்.அதுவும் அரியாலைக்கு போக தயாராகின்றது. மகேஷின் காரில் கதிரும் வசந்தியும் எல்லோரிடமும் விடை பெற்றுக்  கொண்டு  பலாலி காம்புக்கு போகிறார்கள்.அங்கு ஹெலிகாப்டர் தயாராய் நிக்கிறது. மழை வேறு தூறிக் கொண்டிருக்கு....!

வருவார்....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திவாகரன், கதிர் வசந்தி மூவரும் ஏறியதும் அந்த யந்திரப் பறவை விசிறி சுத்தி மேலெழுந்து பறக்கின்றது. கீழே மரங்களும் வயல்களும் சோலைகளாய்த் தெரிய கோயில் கோபுரங்கள் தனியாகத் தெரிகின்றன. கதிர் ஒவ்வொன்றயும் ஆர்வமாய் பார்த்து கன்னத்தில் போட்டுக் கொள்கிறான்.சற்று நேரத்தில் பாஷையூர் அந்தோனியார் சர்ச்சும் அருகே அமைதியான கடலும் தெரிகின்றது.இரவு மழையில் நிலமெல்லாம் சேறும் சகதியுமாக இருக்கின்றது.அரியாலையில் அவனது கம்பெனிக்கு மேலால் கெலிகாப்டர் பறக்கின்றது. பைலட் அதை இறக்குவதற்கு வாகான இடம் பார்க்கிறார். எங்கும் தென்னகளும் வேறு மரங்களும் குளங்களும் குட்டைகளுமாய் கிடக்கு. இந்த ஆரவாரத்தில் இவனது கந்தோரில் இருந்தும் சிலர் வெளியே வந்து பார்த்து பின்பு சந்தோசமாய் கை அசைக்கின்றனர். கதிரும் கை அசைக்கின்றான்.அப்போது ஹெலியை விரைவாக கொண்டுவரச்சொல்லி போன் வருகின்றது. உடனே திவாகரன் பைலட்டிடம் அதை முத்தவெளியில் இறக்குமாறு சொல்லிவிட்டு, இன்னொரு போன் போட ஒரு இனிமையான குரல் எஸ் சேர், நான் ஏதாவது உதவி பண்ணனுமா என்று கேட்கின்றது. ஓம் ஒரு அவசரமான வேலை. நீங்கள் உங்கள் டாக்சியில் முத்தவெளிக்கு வாங்கோ, அங்கு எனது உறவினர்கள் இருப்பார்கள்,அவர்களை அவர்கள் சொல்லும் இடத்துக்கு கூட்டிப் போய் விடவேண்டும். நாம் பின்பு சந்திக்கலாம். ஓ.கே.சேர் நான் அருகில் தான் இருக்கிறேன் உடனே அங்கு வருகின்றேன். என்று சொல்ல ஹெலியும் வந்து இவர்கள் இருவரையும் இறக்கி விட்டு செல்கின்றது.சற்று நேரத்தில் ஒரு சிகப்பு வோல்க்ஸ் வேகன் டாக்சிஒன்று வந்து இவர்கள் அருகே நிக்கின்றது. அதில் சாரதி ஆசனத்தில் இருந்து ஹைகீல்ஸ் சூ, கருப்பு டைட்டான லெக்கின்ஸ் ஸ்லீவ்லெஸ் டீ சேர்ட், சாப்ளின் தொப்பி சகிதம் ஒரு அழகான பெண் கதவைத் திறந்து ஸ்டைலாக  இறங்கி கதவை பின்னங்காலால் அடித்து சாத்திவிட்டு முன்னாள் வந்து கார் அருகே நிக்கிறாள். இடது கை விரலிடுக்குகளில் பத்தவைக்காத ஒரு சிகரெட்டும் லைட்டரும் இருக்கு. அவளது இயல்பான தோரணையைப் பார்த்து வசந்தியும் தனக்குள் "வாவ் வெரி ஸ்மார்ட்" என்று சிலாகிக்கிறாள்.கதிரும் காரின் அழகையும் கால்களின் எடுப்பையும் பார்த்து "ஸ்விட் டுவின்ஸ்" என்று முணுமுணுக்க , சற்றுமுன் என்னை அழைத்த ஜெனரலின் உறவினர் நீங்களா என்று வினாவ எஸ் நாங்கள்தான் என்று வசந்தி சொல்ல, ஐ யாம் ஸ்னேகா, நைஸ் டு மீட் யு என்று அறிமுகமாகின்றாள்.

( ஏற்கனவே வாந்தி என்னும் கதையில் அறிமுகமான அதே ஸ்நேகாதான்.அன்று காற்றில் பறந்த சருகு அவள். இன்று இலக்கு வைத்து இறங்கி அடிக்கும் பருந்து.யாழ்ப்பாணத்தில் இரு விடுதிகள் சொந்தமாக இருக்கு. வாடகைக்கார் ஓட்டுவது தனது வசதிக்கு.அதில் எவரும் நினைத்தபடி ஏறிவிட முடியாது.பெரிய பெரிய அதிகாரிகள், பிரமுகர்கள், வெளிநாட்டில் இருந்து வரும் சீமான்கள் மட்டுமே அவளது கஸ்டமர்ஸ்.)

ஐ யாம் வசந்தி, மீட் மை ஹஸ்பண்ட் கதிர் . நாங்கள் உடனே கந்தோருக்குப் போகவேண்டும். கதிரும் நான் 9: 00 மணிக்கு கந்தோரில் இருக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டு இரண்டு சூட்கேசையும் எடுத்துக் கொண்டு வைக்க பின்னால் போகின்றான். உடனே ஸ்னேகா தடுத்து , அங்கு இல்லை அண்ணா, இந்த வண்டியில்  சாமானை முன்னால்தான் வைக்க வேண்டும் என்று சொல்லி சென்று போனட்டைத்  திறந்து விடுகிறாள். பின் இருவரும் முன் இருக்கையை நகர்த்தி பின்னால் ஏறி அமர்கின்றனர். மணிக்கூட்டு கோபுரத்தில் நேரம் 10 :10 காட்டுது. எங்கையண்ணா போகவேனும் என்று ஸ்னேகா கேட்க கதிரும் தனது போனில் இருந்து விலாசத்தை காட்டுகிறான்.அவள் அதை வழிகாட்டியில் பதிந்து விட கார் வேகமெடுத்து தார்ரோட்டில் வழுக்கிக் கொண்டு போகுது.

அவனது கந்தோரில் மேலதிகாரி ஜீவரட்ணம் தனது உதவியாளர் சுதனிடம் கதிரின் வேலைக்கான ஒப்பந்தத்தில் சில திருத்தங்கள் சொல்லி  செய்து கொண்டுவரச்சொல்லி விடுகிறார். அந்த உதவி அதிகாரியும் என்ன சார் கதிருக்கு 80,000 ரூபாய் சம்பளமும், குவாட்டர்ஸ் அறையும்தானே குடுக்க வேண்டும். நீங்கள் அதை ஒரு லட்சமாக்கி அப்பார்ட்மெண்டும் அலவுட் பண்ணி இருக்கின்றிர்கள். ஓம் சுதன். பார்த்தனிர்தானே சுன்னாகத்தில் இருந்து ஹெலியில் வாறதை, வாறவர்  இராணுவம், போலீஸ் எல்லாத்துலயும் நல்ல செல்வாக்கு உள்ளவர் போல் இருக்கு. அது எமது கம்பெனியின் வளர்சிக்கு உறுதுணையாய் இருக்கும் அதுதான். ம்... இவருக்கும் ஹெலியில் போக ஆசை வந்திட்டுதுபோல என்று புறுபுறுத்துக் கொண்டு போய் புது அப்பாயிண்ட்மெண்ட் அடிக்கிறார்.....!

ஸ்னேகாவின் கார் கொட்டடி சந்தி வழியால் நாவாந்துறை தாண்டி ஓட்டுமடத்தில் திரும்பி காக்கைதீவால் செல்கையில் வசந்தி சொல்கிறாள் இப்ப நீங்கள் தவறான வழியில் செல்கிறீர்கள் போல....! என்ன அக்கா சொல்லுறீங்கள், நான் இதுவரை ஜி. பி. எஸ் சில் அடித்தது பிழைத்ததில்லை. இன்னும் முப்பது நிமிடத்தில் இடம் வந்து விடும். மண்ணாங்கட்டி...! இஞ்ச குடு அதை பார்ப்பம் என்று அதை கண்ணாடியில் இருந்து பிடுங்கி பார்க்கிறாள். அதில் அரியாலைக்கு பதில் அராலி எண்டு பதிந்திருக்கு. அடி பாவி மூண்டு கி. மீட்டர் தூரத்தில இருக்கிற இடத்துக்கு முப்பது கி. மீட்டருக்கு கொண்டு வந்திட்டியே  திருப்படி வண்டியை என்று வைய ஸ்னேகாவும் வாங்கிப் பார்த்துவிட்டு  ஓ .. காட் ஸ்பெல்லிங் மிஸ்ஸாயிட்டுது. என்று கூலாக சொல்லிவிட்டு கல்லுண்டாயில் சடனா பிரேக் பிடித்து, "யு" டர்ன் போட்டு மீண்டும் வந்தவழியே திரும்ப கதிரும் நான் ஒரு முட்டாள் பேசாம பஸ்சில வந்திருக்கலாம், 9 :00 மணிக்கு அங்கிருக்க வேணும் என்று முணுமுணுக்க வசந்தியும் உடனே இனி 9 : 00 மணி நாளைக்குத்தான் வரும் இப்ப 11 : 00 மணி. கொஞ்சம் பேசாமல் இருக்கிறியா....!

வருவார்....! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 22.07.2017 at 11:05 AM, suvy said:

இந்தக் கதையை வாசித்து வரும் அனைவருக்கும் எனது பணிவான நன்றிகள்.....!   tw_blush:

இதில் குழப்பமில்லை சுவை...., கலியாணம் வெள்ளிக் கிழமை.வீட்டில் செய்யத்தான் பந்தல் எல்லாம் போட்டிருக்கின்றார்கள். ஆனால் வியாழன் பகலே நண்பர்களுடன் பிரசினைப்பட்டு குழம்பி விடுகிறது. அதன்பின் தந்தை மும்மரமாக வரன் தேடுகின்றார்.கடைசிவரை யாரும் கிடைக்காத சமயத்தில்தான் முருகனைப் பிரார்த்தித்து உன் கோயிலில் செய்கிறேன் என்று சரணாகதி அடைகிறார்.வெள்ளி மதியம்போல்தான் மாப்பிள்ளை அமைகின்றது. மல்லாகமும் சுன்னாகமும் 2/3 கி.மீ துரம்தானே.அதுதான் அவர் முன்பே போய் ஒழுங்கு பண்ணியதும் பெண் வெளிக்கிடடபடி காரில் வருகிறாள்.அதன்பின் கடைக்குப்போய் எல்லாம் வாங்கிக்கொண்டு போகின்றனர்.....!

பி.கு அநேகமாய் கையில் சிறு குறிப்புகள் வைத்துக் கொண்டுதான் எழுதுகிறேன். சிலசமயம் தவறுகளும் வரலாம். சுட்டிக்காட்டுவதை வரவேற்கிறேன்.சுவை...! இடைக்கிடை விமர்சனம் வந்தால்தான் கதையில் மசாலா கலந்த பிரியாணி, இல்லாட்டில் வெண்பொங்கள்தான். இது தனிக்கும் ஜீவனுக்கும்.....!  tw_blush:

அதெல்லாம் சரி இவையின்ட ஊடல் முடிஞ்சு தாம்பத்தியம் தொடங்கியாச்சா :unsure:சொல்லவே இல்லை.tw_angry::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சத்தியமா  வாசிக்க நேரமில்ல  தல , பச்சை மட்டும் போடுகின்றேன்.மகன் 11+ பரீட்சையில்  இங்குள்ள பிரபலமான  தனியார்  பாடசாலைக்கு (dulwich college) கொலர்சிப்பில்  பாசாகியுள்ளார்.அவரின் இதர தேவைக்கு  ஓடி ஓடி உழைக்க வேண்டியுள்ளது.tw_anguished:

Link to comment
Share on other sites

3 hours ago, நந்தன் said:

மகன் 11+ பரீட்சையில்  இங்குள்ள பிரபலமான  தனியார்  பாடசாலைக்கு (dulwich college) கொலர்சிப்பில்  பாசாகியுள்ளார்.

உங்கள் மகனுக்கு வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நந்தன் said:

சத்தியமா  வாசிக்க நேரமில்ல  தல , பச்சை மட்டும் போடுகின்றேன்.மகன் 11+ பரீட்சையில்  இங்குள்ள பிரபலமான  தனியார்  பாடசாலைக்கு (dulwich college) கொலர்சிப்பில்  பாசாகியுள்ளார்.அவரின் இதர தேவைக்கு  ஓடி ஓடி உழைக்க வேண்டியுள்ளது.tw_anguished:

ஒரு பெற்றோராக இதற்கு நீங்கள் பெருமைப் படலாம்.வாழ்த்துக்கள் உங்களுக்கும் மகனுக்கும்....,எனது இரண்டாவது மகனும் (கடைசி) சென்றமாதம்தான் எஞ்சினியரிங் பாஸாகி டிப்ளோமா எடுத்து விட்டார்......! tw_blush:

13 hours ago, சுவைப்பிரியன் said:

அதெல்லாம் சரி இவையின்ட ஊடல் முடிஞ்சு தாம்பத்தியம் தொடங்கியாச்சா :unsure:சொல்லவே இல்லை.tw_angry::)

சுவை என்ன விளைளையாட்டு இது, அவை அவசரக் கலியாணம் செய்து முழுசா மூண்டு நாள்கூட முடியவில்லை. அதுக்குள்ளே அவசரப்பட்டால் எப்படி...., எப்படியும் மீனாட்சி சரவணனுக்கு முதல் முத்தம் குடுப்பதற்குமுன் கதிர் வசந்தியின் முதல்லிரவை முடிச்சு வைக்க  முயற்சிக்கிறேன், போதுமா....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கார் வேகமெடுத்து எல்லா வேகத்தடைகளையும் தாண்டி வாகன நெரிசலுக்குள் புகுந்து வெளியேறி வேகமாய் வர இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த போலீசார் அவள் காரை முந்தி சென்று மறிக்க அவள் கார் கண்ணாடியை சற்று கீழிறக்கியதும் பார்த்து சிரித்து கையசைத்து விட்டு சென்று விடுகின்றார்கள்.கார் அவனது கந்தோருக்குள் வந்து நிக்க நேரம் 12 : 20. எல்லோரும் மத்திய உணவுக்கு சென்று விட்டார்கள். மேலதிகாரி மட்டும் இவர்களுக்காக அங்கு நிக்கின்றார்.காரின் இருந்து விரைவாக இறங்கிய கதிர் அவர் முன் சென்று சாரி சார். பாதை தவறி விட்டது. பின்னால் வசந்தியும் வந்து நிக்கிறாள்.இட்ஸ் ஓ.கே கதிரவேல். உங்களுக்கு இனிய திருமண நல் வாழ்த்துக்கள் என்று வஸந்தியையும் பார்த்து சொல்லி விட்டு இந்தாருங்கள் உங்கள் அப்பாயின்மென்ட் ஓடர். மற்றும் இது உங்களது அப்பார்ட்மண்டின் சாவி. அது பக்கத்தில் பாஷையூரில் இருக்கிறது. கடலுக்கு முன்னால்  ஸி வியூ அப்பாட்மென்ட். நீங்கள் களைத்திருக்கின்றிர்கள், இன்று போய் ஓய்வெடுத்து விட்டு நாளை காலையில் வரவும் என்கிறார்.ஓடரையும், திறப்பையும் கையில் வாங்கிய கதிர் ரெம்ப நன்றி சார். இப்ப வீட்டில் இருந்து சாமான்களுடன் ட்ரக்டர்  வரும் நாங்கள் காத்திருந்து போய் சாமான்களை இறக்க வேண்டும். டோன்ட் வொரி கதிர். அது ஒன்பதேகாலுக்கு வந்துவிட்டது. எமது ஸ்டாவ் ஒருத்தர் கூடப் போய் எல்லாவற்றையும் அரேஞ் பண்ணிட்டார். டிரக்ட்டரும் போய் விட்டது. ஓ... மீண்டும் நன்றி சார். என்றவன் தயங்கி சார் இந்த ஆர்டரில் தவறுதலாய் சம்பளம் ஒரு லட்ஷம் போட்டிருக்கு என்று இழுக்க அதெல்லாம் கரக்டாய் இருக்கு கதிர்வேலன் கோ அண்ட் என்ஜோய் என்று சொல்லிக் கொண்டு  உள்ளே போகிறார். அவர்கள் மீண்டும் காரிலேறி அப்பார்ட்மெண்டுக்கு வருகின்றனர்.கதிர் பர்ஸைத் திறந்து ஸ்னேகாவிடம் பணத்தைக் குடுக்க அவளும் இப்ப வேண்டாம் அண்ணா, வீணாக என்னால் வேறு தாமதமாகி விட்டது. அடுத்து வரும் சவாரிகளில் வாங்கிக் கொள்கிறேன் என்று தனது விசிட்டிங் காட்டையும் குடுத்துவிட்டு வஸந்தியைப் பார்த்து கூல்பேபி என்று கண்ணடித்து விட்டு போகிறாள்.

இறக்கி வைத்த சாமான்களை ஒழுங்கு படுத்துவதிலும் குசினி சாமான்களை அடுக்கி வைப்பதிலும் அன்றைய மாலை கழிந்தது.பின்பு இருவரும் முன்னால்  இருந்த கடற்கரையில் உலாவிவிட்டு அங்கு தள்ளி இருந்த கடையில் பாணும் பழங்களும் வாங்கிவந்து சாப்பிட்டுவிட்டு கட்டிலின் ஓரங்களில் படுத்துவிட்டனர். அவளுக்கு தூக்கம் வரவில்லை. தனது தப்லட்டை நோண்டிக் கொண்டிருக்கிறாள். சமையலுக்கு ஒருத்தரை ஏற்பாடு பண்ணுவோம் என்று கதிர் சொன்னபோது வசந்தி மறுத்து விட்டாள். கதிரும் பஸ்ஸிலே வேலைக்கு போய் வந்து கொண்டிருந்தான். சில நாட்களில் நடந்தே வந்துவிடுவான். மதியம் வீட்டுக்கு வரும்போது பார்சல் சாப்பாடு வாங்கிவந்து இருவரும் சாப்பிடுவார்கள். சில நாட்களில் டவுனுக்கு பஸ்ஸில் போய் சாப்பிட்டுவிட்டு இரவுக்கும் பார்சல் கட்டி வருவார்கள்.இப்படி போய்க்கொண்டிருந்த நேரத்தில்....!

அன்று வசந்தியிடம் இருந்து போன் வந்திருந்தது, கதிர் இன்று நீங்கள் வீட்டுக்கு சாப்பிட வாங்கோ. நான் சமைத்திருக்கிறன். ஏண்டி நீ சமைப்பியாஅல்லது அம்மா மாமி யாராவது வந்திருக்கினமா....! இஞ்சபார் சொன்னா வாறதை விட்டிட்டு சும்மா விழல் ஞ<யம் கதைக்கிறாய். ஆ ....இப்ப சரி , நீ அதீத மரியாதை காட்ட பயந்திட்டன். என்று சொல்லி போனை வைக்கிறான். அன்று கம்பெனி அவனுக்கு ஒரு மடிக்கணணியும் கைத்தொலைபேசியும் வழங்கியிருந்தது. கம்பெனி அலுவல்கள் சம்பந்தமான விடயம் என்பதால் தனியான பாஸ்வேர்ட் எல்லாம் செட்பண்ணி கொடுத்திருந்தது. அவற்றுடன் வீட்டுக்கு வந்தவன், வசந்தியை தேட ஹாலில் அவளைக் காணவில்லை. பாத்ரூமில் சவர் சத்தம் கேட்கிறது அவள் சமைத்துவிட்டு குளித்துக் கொண்டிருக்கிறாள் போல, என்று நினைக்க வசந்தியும் ஒரு டவலை சுற்றிக் கொண்டு பாத்ரூம் கதவைத் திறக்க சுவரில் இருந்த பல்லி அவள்மேல் விழ வீல் என்று கத்துகிறாள்.கத்திய வேகத்தில் சுத்திய டவல் சுருண்டு விழ, என்ன ஏது என்று ஓடிவந்த கதிர் துண்டை எடுத்து அவளை போர்த்திவிட்டு விசாரிக்கிறான். பல்லி விழுந்திட்டுது என்கிறாள்.

ஏண்டி பாம்பை பார்த்து பயந்தாள் ஒரு ஞ<யம் இருக்கு, நீ பல்லிக்கு பயந்து பாப்பிள்ளை மாதிரி ஓடி வாறாய்  ஞ<யமா. அவள் மீண்டும் உள்ளே சென்று குளித்துவிட்டு வருகிறாள்.கதிர் போனில் பல்லி விழும் பலன் பார்க்கிறான். அது எங்கேடி விழுந்தது. முதல் நெஞ்சில் விழுந்து பின் கையில் விழுந்து ஓடிற்று. என்ன போட்டிருக்கு. ம்.... மார்பு  தனலாபம் என்று போட்டிருக்கு. உனக்கு பணம் வர போகுதடி. கை --- மரணம். என்னடி கைக்கு மரணம் என்று போட்டுருக்கு. வசந்தியும் அது சரிதானேடா... அவசரமாய் ஓடிவந்த உன் காலில மிதிபட்டு பல்லி செத்துக் கிடக்கு...,  ஓ.....!

வருவார்....!

 

Link to comment
Share on other sites

19 hours ago, நந்தன் said:

சத்தியமா  வாசிக்க நேரமில்ல  தல , பச்சை மட்டும் போடுகின்றேன்.மகன் 11+ பரீட்சையில்  இங்குள்ள பிரபலமான  தனியார்  பாடசாலைக்கு (dulwich college) கொலர்சிப்பில்  பாசாகியுள்ளார்.அவரின் இதர தேவைக்கு  ஓடி ஓடி உழைக்க வேண்டியுள்ளது.tw_anguished:

வாழ்த்துக்கள் நந்தன் 

4 hours ago, suvy said:

அவற்றுடன் வீட்டுக்கு வந்தவன், வசந்தியை தேட ஹாலில் அவளைக் காணவில்லை. பாத்ரூமில் சவர் சத்தம் கேட்கிறது அவள் சமைத்துவிட்டு குளித்துக் கொண்டிருக்கிறாள் போல, என்று நினைக்க வசந்தியும் ஒரு டவலை சுற்றிக் கொண்டு பாத்ரூம் கதவைத் திறக்க சுவரில் இருந்த பல்லி அவள்மேல் விழ வீல் என்று கத்துகிறாள்.கத்திய வேகத்தில் சுத்திய டவல் சுருண்டு விழ, என்ன ஏது என்று ஓடிவந்த கதிர் துண்டை எடுத்து அவளை போர்த்திவிட்டு விசாரிக்கிறான். பல்லி விழுந்திட்டுது என்கிறாள்.

அம்புட்டுதானா இல்லை சுவியர் மிச்சத்தை சபை நாகரீகம் கருதி மறைச்சிட்டாரா 

பல்லி வேற எங்கயோதான் ஓடியிருக்கு :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/22/2017 at 2:35 PM, suvy said:

இது தனிக்கும் ஜீவனுக்கும்.....!  tw_blush:

நாங்கள் இருவரும் சின்ன பிள்ளைகள் தானே அடிக்கடி உங்க கிட்ட சந்தேகங்களை கேட்டு அறிந்து கொள்வோம் முட்டைக்கோப்பி  ஒரு ரெட் புல் போல  ஒரு உந்து சக்தி  ஆனால் பச்சை முட்டை உவாக் உவாக் :10_wink:

On 7/28/2017 at 7:03 AM, நந்தன் said:

சத்தியமா  வாசிக்க நேரமில்ல  தல , பச்சை மட்டும் போடுகின்றேன்.மகன் 11+ பரீட்சையில்  இங்குள்ள பிரபலமான  தனியார்  பாடசாலைக்கு (dulwich college) கொலர்சிப்பில்  பாசாகியுள்ளார்.அவரின் இதர தேவைக்கு  ஓடி ஓடி உழைக்க வேண்டியுள்ளது.tw_anguished:

வாழ்த்துக்கள் அண்ணே  இன்னும் உசார் பண்ணுங்கள் பொடியனை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாப்பாட்டு மேசையில் அழகிய மேசை விரிப்பு போட்டு எல்லாம் சிறிய கிண்ணங்களில் மூடிவைத்திருக்கு. பாசுமதி அரிசியில் சாதம்,வானத்தில் நட்ஷத்திரங்கள் போல் கடைந்த கீரையில் சின்ன சின்ன றால்கள் மின்னுகின்றன, ஒரு சைஸ்சான மீன்கள் பிஃரை பண்ணி வைத்திருக்கு.பருப்பு தாளித்து பெருங்காய வாசனையுடன்,மீன்குழம்பு தக்காளி கலரில், ஒரு பிளேட்டில் முழுறால் மூஞ்சி உடைக்காமல் பிரட்டலாய்,தலை போட்ட சொதி,மற்றும் ஈரபிலாக்காய் குழம்பு, வெள்ளரி+தக்காளி+வெங்காயம்+ ப.மிளகாய்+ தயிர் கலந்த சம்பல். கதிருக்கு சந்தேகம் தீரவில்லை.அறைகளிலும் பால்கனியிலும் ஓடி ஓடி பார்க்கிறான்.அங்கு யாரும் இல்லை. இவள் ஒரு பிராடு, பக்கத்தில் யாரையாவது கூப்பிட்டுக்கூட ஆக்கியிருக்கலாம். சொல்லடி உண்மையாகவே நீதானா சமைத்தனி. பின்ன கடையிலா வாங்கி வைத்திருக்கிறன். வா வந்து சாப்பிடு.என்று சொல்லி இரண்டு வாழை இலைகளை விரித்து பரிமாற, அசத்துறாயடி, வாழை இலைகூட வாங்கி வந்திருக்கிறாய்.இதில் சாப்பிடுவது எனக்கு ரொம்பப் பிடிக்கும். மண்ணாங்கட்டி ஜன்னலுக்க வந்து நிண்டுது நறுக்கிக் கொண்டு வந்திட்டான். அந்த உணவுகளின் சுவை வித்தியாசமாய் இருக்கு. யாழ்ப்பாண சமையல் போலவே இல்லை. அப்படி அவன் சாப்பிட்டதும் இல்லை.குழம்புகூட  தூள் குறைவாய் இருக்கு,ஆனால் உறைப்பு தூக்கலாய் இருக்கு. சாப்பிட்டு முடியும்போது அவள் எழுந்து போய் பிரிட்ஜில் இருந்து இரண்டு கப்பில் கஜு, பிளம்ஸ் தூவிய வனிலா ஐஸ்கிரீம் வித் கிரீம் பிஸ்கட் அலங்கரித்தபடி கொண்டுவந்து வைக்கிறாள். கதிருக்கு எல்லாமே கனவுபோல் இருக்கு. இதுபோன்ற ஒரு அழகுடன் கூடிய விருந்தை அவன் அனுபவித்ததே இல்லை. எல்லாம் முடிந்ததும் கதிர் தான் கொண்டுவந்த மடிக்கணணியையும், போனையும் அவளிடம் தந்துவிட்டு போய் கட்டிலில் படுத்துக் கொள்கிறான். வசந்தியும் அந்த போனில் அவனது வீட்டாருடன் கதைத்து விட்டு தனது வீட்டாருடன் கதைக்கும்போது, சிவகாமி சொல்கிறாள் பிள்ளை இந்தக்கிழமை கார் அனுப்பிறன் நீயும் மாப்பிள்ளையும் வீட்டுக்கு வாருங்கோ என்ன... ஓம் அம்மா என்று சொல்லி போனை வைக்கிறாள்.பின்பு அறைக்குள் வந்தவள் அவனருகே கட்டிலில் சாய்ந்து இருந்துகொண்டு சொல்கிறாள். தான் கண்டியில் இருந்து படிக்கும்போது சிங்கள மாணவிகளுடன் ஒரே அறையில் தங்கியதாகவும்,அப்போது சமையல் செய்யப் பழகியதாகவும்...!அவனுக்கு சந்தோசமாய் இருக்கிறது. அதுதான் இவளது சமையல் வித்தியாசமாய் இருக்கு. மிளகாய் தூள் குறைத்து மிளகுத்தூள் அதிகம் சேர்த்திருக்கிறாள்.ஆனால் வெளிக்காட்டவில்லை.

அன்று காலை, போயா விடுமுறை. கந்தோர் லீவு. அவன் விழிப்பும் உறக்கமும் அற்ற நிலையில் படுத்திருக்கிறான். ஏனோ அவசரமாக எழுந்த வசந்தி லைட்டைப் போட்டு அலுமாரி சூட்கேஸ் என்று எல்லாத்தையும் உருட்டி பிரட்டி என்னவோ தேடுகிறாள்.இங்கனதானே வைச்சன் எங்க போய்த் துலைஞ்சுதோ தெரியேல்ல. இதுவேற சனியன் மாசத்துல அமாவாசை பறுவம் வருதோ இல்லையோ டானென்று வந்து தொலையும்.இவளின் ஆரவாரத்தை கண்டுக்காதமாதிரி கிடக்கிறான் கதிர்.தேடி அலுத்தபின் அலுமாரியில் இருந்து கையிலகப்பட்ட அவனின் "கிப்ஸ்" பெனியனை எடுத்துக் கொண்டு பாத்ரூமுக்குள் போக அடியேய் அது என்ர பனியன் குடுடி என்று இவன் எழும்ப கதவு அறைந்து சாத்தப் படுகின்றது.

இப்போதெல்லாம் அவனுக்கு சாப்பாடு கட்டுற வேலையில்லை. அவளே மிக நன்றாக சமைத்து விடுகிறாள். பெரும்பாலும் வீட்டுக்கு வர கந்தோர் மிதிவண்டியை பாவிக்கிறான்.அவளும் மிச்ச நேரத்தில் முன் பால்கனியில் நின்று கடலைப் பார்ப்பது, வெய்யில் அடித்தால் பக்கத்து பால்கனியில் இருந்து புக்ஸ் படிப்பாள்.அந்த பால்கனியின் அடுத்த பக்கம் ஒரு பெரிய தென்னந்தோப்பு.அதுக்கும் அப்பார்ட்மெண்டுக்கும் இடையில் ஒரு மார்பளவு காம்பவுண்ட் சுவர் உண்டு. அந்தத் தோப்பில் சிலர் பல வேலைகள் செய்து கொண்டிருப்பார்கள். கயிறு திரித்தல், கிடுகு பின்னுதல், அலவாங்கை நிலத்தில் நட்டு வைத்து குவிந்து கிடக்கும் தேங்காய்களை அதன்மேல் குத்தி உரித்தல் போன்ற வேலைகள் செய்வினம்.அவளும் தினமும் அங்கே இருந்து அவர்களைப் பார்ப்பதால் அப்பப்போ சிறு புன்னகை மூலம் தொடங்கிய பரிச்சயம், இப்போ பார்த்ததும் கையசைப்பது வரை வந்து விட்டது. சிலரது பெயர்கள் கூட வசந்தி தெரிந்து வைத்திருந்தாள்.

வருவார்....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த வார விடுமுறைக்கு வீட்டில் இருந்து வந்த காரில் ஏறி சுன்னாகத்துக்கு கதிரின் வீட்டுக்கு போகின்றார்கள்.அக்காவும் தம்பி, தங்கையும் வந்து வரவேற்கிறார்கள்.குசலம் விசாரித்தபின் எங்கே மாமா மாமி என்று வசந்தி கேட்க அவர்கள் வாழைக்கு பாத்தி கட்டிக் கொண்டிருக்கினம். நீங்கள் இருங்கோ இப்ப கூப்பிடுறன் என்ற தேன்மொழியை கதிர் தடுத்து தானே தோட்டத்துக்கு போகிறான், சற்று பின்னால் வசந்தியும் வருகிறாள். கதிரும் சேர்ட்டைக் கழட்டி அங்கிருந்த கம்பில் மாட்டிவிட்டு காற்சட்டையை ஆடுதசைக்குமேல் மடித்துவிட்டு தாயிடம் இருந்து மண்வெட்டியை வாங்கி பாத்தியை கட்டுகிறான்.

பார்வதி: எட தம்பி நான் உன்னை ஒன்று கேட்கவேணும் ஒளிக்காமல் சொல்லு, நீங்கள் சந்தோசமாய் இருக்கிறீங்களா, உனக்கு ஒன்றும் வருத்தமில்லையே என்று கேட்கிறாள்.

கதிர்: சீ...சீ அப்படி ஒன்றும் பெரிதாய் இல்லையம்மா, இப்பதான் வேலை கிடைத்திருக்கு. கொஞ்ச காலத்துக்கு பிஃறியா திரிந்திருக்கலாம் என்று தோண்றிச்சுது. அவ்வளவுதான் நீங்கள் யோசிக்காதையுங்கோ.

பார்வதி: உன் ஆதங்கம் எனக்கு புரியாமல் இல்லை. ஆனால் என்னட்டையும் இரண்டு குமர் இருக்கு. அதுதான் நாங்கள் அந்தப் பிள்ளையையும் பெற்றதுகளிண்ட மனவேதனையையும் தான் நினைத்தோம் என்று சொல்ல கேட்டுக்கொண்டே வசந்தியும் அங்கு வருகிறாள். பின்பு கதிர் வாய்க்காலில் மண்வெட்டியையும் கால் கையையும் கழுவ, இஞ்செரப்பா பிள்ளையள் வந்திருக்கினம் நீங்களும் கெதியா வாங்கோ என்று குரல் கொடுத்துவிட்டு, முன்னால பார்வதியும் வசந்தியும் பாத்தியின் இரு மருங்கிலும் சமாந்தரமாக நடந்து வருகின்றனர்.

வசந்தி: தயக்கத்துடன் அத்தை என்மீது ஒன்றும் வருத்தமில்லையே....! ஏன் பிள்ளை கேட்கிறாய்...! அது வந்து......எல்லாம் கனவு மாதிரி முடிந்து விட்டது.

பார்வதி: அது கிடக்கட்டும் விடு பிள்ளை.வாழ்க்கை என்றால் முன்ன பின்னதான் இருக்கும். நீ ஒண்டையும் யோசிக்காதே. இப்ப கிடைத்த வாழ்க்கையை சந்தோசமாய் ஏற்றுக்கொள் பிள்ளை, அது போதும்.

வசந்தி: என்னால் இன்னும் சகஜமாக வரமுடியவில்லை அத்தை.

பார்வதியும் கொஞ்சம் இரன தண்ணிப் பம்பை நிப்பாட்டிப் போட்டு வாறன்.

வசந்தி: சற்று பொறுங்க அத்தை, தண்ணியைப் பார்க்க ஆசையாய் இருக்கு குடிச்சுட்டு விடுகிறன். பம்மில் பாய்ந்து வரும் நீரை இரு கைகளாலும் ஏந்தி ஆசைதீரக் குடிக்கிறாள்.

பார்வதி: (குடித்து நிமிர்ந்தவளிடம்) பார்வதி சொல்கிறாள் வாழ்க்கையும் இப்ப நீ தண்ணி குடித்தது போலத்தான்.  அது எப்படி அத்தை....! சிறிது கவனித்து பார்த்தால் புரியும்.  "நீ குடிக்கவென்று ஆசையுடன் பார்த்து பருக வந்த நீர் உன்னைக் கடந்து போய் விட்டது. நீ பார்க்காத நீரைத்தான் இரு கைகளிலும் ஏந்திக் குடித்தாய். இப்ப அதுதான் உன் தாகத்தையும் தனித்து உடம்பிலும் உதிரத்திலும் விரவிக் கிடக்கு , உன் வாழ்க்கைபோல்".(பார்வதி எது சொன்னாலும் அதில் பல அர்த்தம் பொதிந்து இருக்கும்).

ஒரு நிமிடம் வசந்தி ஆடிப்போய் விட்டாள்.தனது மனதுக்குள் உள்ளிருந்து பார்த்ததுபோல் அனாசயமாக அந்தத் துன்ப வேரைப் பிடுங்கி எறிகிறாள் இந்தத் தாய்.ஒரு வார்த்தையில் இதைச் செய்வதற்கு ஒரு ஞ<னியால் அல்லது ஞ<னி போல் வாழ்பவர்களால்தான் முடியும். பார்வதிமீது பெரிய மரியாதையும், இனம் புரியாத பாசமும் எழுகின்றது. இந்தத் தாய்க்கு நான் என்ன கைம்மாறு செய்ய முடியும். இவள் பிள்ளையை சந்தோசமாய் வைத்திருப்பதைத் தவிர.....!

அன்று அங்கு தங்கி விட்டு அடுத்தநாள் மல்லாகத்தில் வசந்தியின் வீட்டுக்கு போகிறார்கள். கேட்டைத் திறந்து உள்ளே போனவர்களுக்கு ஒரே ஆச்சரியம். போர்டிகோவில் ஒரு புத்தம் புதிய ஹோண்டா மோட்டார் சைக்கிள் இரு ஹெல்மட்டுடன் மாலையோடு  நிக்குது. இவ்வளவு நாட்களுக்குள் கதிர் மீது நல்ல மரியாதை ஏற்பட்டிருக்கு முத்துவேலருக்கு. அவசரத்தில் பார்த்த மாப்பிள்ளை என்றாலும்கூட தான் எவ்வளவுதான் தேடினாலும் இப்படி ஒரு மாப்பிள்ளை எடுத்திருக்க முடியாது எனும் நினைவு ஆழமாய் அவருக்கும் சிவகாமிக்கும்  இருக்குது. எல்லாம் அந்த முருகன் செயல்.அவனைப் பற்றி அரசால் புரசலாய் அவனது சினேக வட்டத்தில்  விசாரித்து பார்த்தபோதிலும் நல்ல தகவல்களே அவருக்கு கிடைத்தன. பல தடவைகள் சம்பந்தி வீட்டுக்கு போய் இருப்பார். அங்கும் அவர்களது பண்பான வரவேற்பும் பிள்ளைகள் தரும் மரியாதையும் அவருக்கு மிகவும் பிடித்திருந்தன.மேலும் சமயத்தில் தங்களது மானத்தைக் காப்பாற்றியவர்கள். இவர்களுக்கு எவ்வளவு செய்தாலும் தகும். இவர்கள் சாடைமாடையாய் சீதனம் பற்றி கதைத்த போதிலும் அவர்கள் மறுத்து நீங்கள் உங்கள் பிள்ளைக்கு செய்யிறதை நாங்கள் தடுக்க மாட்டம் என்று சொல்லி விட்டார்கள். அதன் பிரதிபலிப்புதான் வாசலில் நிக்கும் ஹோண்டா.

முத்துவேலர் ஹோண்டாவின் சாவியை எடுத்து வந்து கதிரிடம் தர அவன் தயக்கத்துடன் தகப்பனைப் பார்க்கிறான்.அவர் தலை அசைக்க வாங்கிக் கொள்கிறான்.இது யாருக்கும் தெரியாமல் நடந்தாலும் வசந்தி மட்டும் கவனித்து விடுகிறாள்.அவளுக்கு கதிரை நினைக்க பெருமிதமாய் இருக்கு. அடுத்தநாள் காலை அவர்கள் ஹோண்டாவில் விரைவாக பாஷையூருக்கு வந்து விட்டார்கள்.அவளை வீட்டில் இறக்கி விட்டுட்டு அவன் நேராக கந்தோருக்கு போகிறான். தாய் காலையிலேயே சமைத்து குடுத்திருந்தாள்.அதனால் வசந்திக்கு இன்று சமையல் வேலையும் இல்லை........!

வருவார்....!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீதி  எங்க ஏன் இன்னும்  எங்களை சந்திய கடந்த முன்னை நாள் காதலியை கண்டு  யோசிக்க வைக்கிறது போல  யோசிக்க வைக்கிறீங்க சாமி  நின்று கொண்டு பார்க்க வேண்டியதா கிடக்கு சாமி  கதையின் மீதியை :104_point_left::unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்று கந்தோரில் மின்சார பிளக்குகள் பொருத்தும் வேலைகள் நடைபெறுவதால் அவனை அடுத்த நாள் வரச்சொல்லி அனுப்பி விட்டார்கள்.கதிரும் இன்றைக்கு பின்னேரம் வசந்தியும் விரும்பினால் ஏதாவது சினிமாவுக்கு போகலாம் என்ற திட்டத்துடன் வீட்டுக்கு வருகின்றான்.வீடு கழுவி விட்டிருப்பாள் போல சுத்தமாய் இருக்கு. நல்ல சந்தனக் குச்சி வாசனையும் மணக்குது. என்ன இன்றைக்கு போனதும் வந்திட்டீங்கள்.லீவா...! சீ  லீவெல்லாம் இல்லை அங்கு வயரிங் வேலை நடக்குது அதுதான் என்று கூறியபடியே ஆடை களைந்து சறத்துக்கு மாறுகிறான். அப்பா வாங்கோ சாப்பிடலாம் என்று சொல்லி இருவரும் எதிரெதிர் அமர்ந்து சாப்பிட்டபின் அவன் ஹாலில் வெய்யில் தடுக்க திரைச் சீலைகளை இழுத்து விடிட்டிட்டு அறைக்குள்ளும் ஷாட்டரை முடி பாஃனைப் போட்டு கட்டிலில் படுத்துக் கொள்கிறான். சற்று நேரத்தில் குசினி வேலைகளை முடித்துவிட்டு ஈரக் கையை சட்டையில் துடைத்தபடியே வந்த வசந்தியும் தனது தப்லட்டுடன் வந்து கட்டிலில் சாய்ந்து அமருகின்றாள். 

  புழுக்கம் அதிகமானதால் பாஃன் காற்றில், அவன் வெறும் மேலுடன் குப்புறப் படுத்து கண்ணயர்ந்து விட்டான்.எதேச்சையாக அவன் பக்கம் திரும்பியவள் கண்களை அகற்றாமல் அவனையே வெறித்துப் பார்க்கிறாள்.சுருள்முடி காற்றில் அசைகிறது.பின்கழுத்தடியில் "ப" வடிவில் சவரம்.இரு தோள்களும் சிறகுவிரித்த செம்பருந்துபோல் விரிந்து கிடக்கு.உறுதியான நீளமான கைகள்.ஊளைச் சதை சிறிதுமற்ற அகன்ற முதுகு.அதில் நேர் வகிடுபோல் முதுகெலும்பும் அதை பட்டும் படாமல் முடிய தசைகள் சிறிது கீழே நாரியுடன் சேர்ந்து மீண்டும் விரிந்து ....., லூசான சாறத்தை காற்று அலைக்கழிக்க வெள்ளி அருணாக்கொடி மினுங்குகிறது. பாதித் தொடையை சாரம் மூடியிருக்க மிதிக்க கால்களில் கருமுடிகள் விரவிக்கிடக்கின்றன.கணுக்காலில் இருந்து பின் குதிப் பாதம் நல்ல சிவப்பாக இருக்கின்றது.அது அந்த ஊர் செம்மண் தந்த கொடை. தன்மீது அவள் பார்வை ஊருவதை உணர்ந்தோ என்னவோ அவன்சற்று திரும்பி நேராக படுக்கிறான்.சீரான பாதங்கள்.அழகாக நகங்கள் வெட்டிய கால்விரல்கள்.வஜ்ஜிரம் போன்ற தொடைகள், ஓநாய் வயிறும் சுழிந்த நாபியும், புடைத்து நிக்கும் விலாவும் உரோமம் நிறைந்து சோப்பு டப்பாவை ஒட்டிவிட்டதுபோல்  மார்பும்,கழுத்துல டைமன் செயினும்  குவிந்திருக்கும் கழுத்து எலும்பு எல்லாம் இவன் தினமும் உடற்பயிற்சி செய்வதை சொல்கின்றன.மின்விசிறி சுத்தியும் அவன் கழுத்திலும் நெற்றியிலும் வியர்வை முத்துக்கள் அரும்பியிருக்கு. முரட்டு உதடுகள் கொஞ்சம்  திறந்திருக்கு.சுவாசம் சிறு சிணுங்கலுடன் உள்ளே வெளியே....!மெலிதான அரும்பு மீசை கீழிறங்கி குறுந்தாடியுடன் இணைந்து வழிகிறது. கண்கள் சற்று உள்வாங்கி இருந்த போதிலும் இமைகளின் அடர்த்தி அதை நிவர்த்தி செய்து விடுகிறது. ஒரு நூல் எடுத்து முறுக்கி இரு கை விரல்களிலும் பிடித்துக்கொண்டு உருட்டி உருட்டி அந்த இமைகளின் அனாவசியமான முடிகளை அகற்றினால் இன்னும் அழகாக இருக்கும் என்று நினைக்கிறாள்.நெற்றியில் அசைந்து ஆடும் சுருள் முடி.எல்லாம் சேர்ந்து ஒரு இனம்புரியாத சுகம் அவள் மனதிலும் உடலிலும் விரவி முகம் மந்தகாசமாய் மலர்கிறது. அவள் இதுநாள் வரை ஒரு ஆண்மகனை இவ்வளவு நெருக்கத்தில் வெட்கத்தைவிட்டு அணுவணுவாய் ரசித்தது கிடையாது. அதுக்கு இவன் எனக்கே எனக்குரியவன் என்ற உள்மனதின் எண்ணம்கூட காரணமாய் இருக்கலாம்.அடிவயிற்றில் வைத்த ஐஸ்கியூப் உருகி நழுவி உருண்டோடுவது போல் ஒரு ஜில்லிப்பு சிலிர்த்து அடங்குகிறது.

அவள் சிறிது ஒருக்களித்து திரும்ப அவன் அருன்டு விழித்து கொள்கிறான்.பேசாமல் தூங்குவதுபோல் கிடக்க உணர்சிகள் தூங்காமல்...,உடலில் உஷ்ணம்,அப்போது தெரியவில்லை அன்று பல்லி விழுந்ததும் அவளை அப்படிப் பார்த்தது....இப்போது பாழும் மனம் லஜ்ஜை இன்றி ரசிக்கின்றது.இது தவறு, எழும்பலாம் என்று கண்திறந்தால், திறந்த கண்களின் முன்னே திரட்சியான கால்கள். திகைத்து நிமிர்ந்தால் கவர்ச்சியான கலசங்கள். அவனுக்கு அடிவயிற்றில் ஆம்லட் போட்டதுபோல் உடலில் நீர் வற்றி தொண்டை வறண்டுகண்டும் காணாதது  ஒருவாறு அப்படியே எழுந்து சரத்தை இழுத்து இடுப்பில் செருக அவள் மறுபுறம் திரும்பிக் கொள்கிறாள்.

கதிர்: பின்னேரம் சினிமாவுக்கு போவோமா....!

வசந்தி: நீ வேணுமெண்டால் போ, நான் வரவில்லை....!

கதிர்: ஏன் .....!

வசந்தி: என்ர அப்பா சைக்கிள் சாவியை தந்தால் நீ வாங்க வேண்டியதுதானே, எதுக்கு மாமாவைப் பார்க்க அவர் தலை ஆட்டினாப் பிறகுதானே வாங்கினனி.எனக்கு தெரியாதென்று நினைச்சியா. இரண்டு பேரும் நல்லா நடிக்கிறீங்கள் ...!

கதிர்: போடி நான் என்னெண்டு உடனே வாங்கிறது....!

வசந்த: ம்... அப்ப பெரிய கெப்பர் விட்டிட்டு பிறகு ஸ்டைலா ஓடிக் கொண்டு வந்தனிதானே...!

கதிர்: பின்ன தந்த சைக்கிளை தள்ளிக் கொண்டே வாரது. நீ மட்டுமென்ன போற வாற எல்லோருக்கும் கையை ஆட்டி ஆட்டிக் கொண்டு வரேல்ல....!

சும்மா ஊடலாய் ஆரம்பித்த சண்டை நுள்ளுப்பட்டு,கிள்ளுப்பட்டு,பிடுங்குப்பட்டு, இடிபட்டு, கடிபட்டு,அவர்களை அறியாமலே வேறோர் உலகத்துல கொண்டுபோய் சேர்க்கிறது.கண்டும் காணாத மாதிரி, தெரிஞ்சும் தெரியாத மாதிரி,உணர்ந்தும் உணராத மாதிரி என்னன்னவோ நடக்கின்றது. ஏடு தொடக்கிய பையன் சிலேட்டில் "அ "கிறுக்குவதுபோல் எதுவும் வசப்படவில்லை அவனுக்கு. இது போதும், இல்லை ...இன்னும் இன்னும் வேண்டும் என்று நினைத்த நேரம்,

நிலம் பிளந்தாள் பூகம்பம்...!

கடல் பொங்கினாள் சுனாமி ....!

காற்று குமுறினால் சூறாவளி ...!

அக்கினி ஆவேசமானால் எரிமலை....!

ஆகாசம் .......... அது....சே அவசரத்துக்கு ஒண்டும் ...வரமாட்டேங்குது.....!

அவள் பொங்கினாள்... அம்மா என்றொரு ஈனஸ்வரம். அதன்மேல் கதறியது காளை, சிதறியது சினைப்பை ,சிலிர்த்தன தேகங்கள், சிந்தின முத்துகள்.

வசந்தி எழுந்து போர்வையால் போர்த்திக் கொண்டு பாத்ரூம் போக அவன் சாரத்தை எடுத்து போர்த்திக் கொள்கிறான்.அதில் கறை தென்பட அவள் தனக்குள் அநியாயத்திற்கு கற்போட வாழ்ந்திருக்கிறான்.அத்தை அடக்கமாய்த்தான் பையனை வளர்த்திருக்கிறாள்.

நன்றாக அலுப்பு போக குளித்துவிட்டு கவுன் ஒன்றை போட்டுக்கொண்டு ஈரமுடி தோளில் புரள வந்தவள், குசினிக்குள் சென்று நாலு முட்டை எடுத்து அடித்து கோப்பியுடன் கலந்து சீனி தூக்கலாய் போட்டு இரண்டு பவுலில் கொண்டுவந்து அவனை எழுப்பி ஒன்றைத் தருகிறாள்.கதிரும் எழுந்து அவள் முகம் பார்க்க வெட்கப் பட்டு மறுபுறம் முகம் திருப்பிக் கொண்டு வாங்கிக் கொள்கிறான்.வசந்தியும் தனது கோப்பியுடன் பால்கனிக்கு வந்து கதிரையில் இருந்து சிறிது சிறிதாக ஊதி ஊதிக் குடிக்கிறாள்.பக்கத்து தோப்பில் பெண்கள் சிலர் கயிறு திரிக்க சிலர் அலவாங்கில் தேங்காயை குத்தி குத்தி உரித்து போடுகின்றனர்.இவளைக் கண்டதும் சிலர் கையசைக்க வசந்தியும் கையசைக்கிறாள்....!

வருவார்....!

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தா அந்தா என்று நான்கைந்து மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது.அன்று ஒரு சனிக்கிழமை, கதிரும் வீட்டில் வேலை செய்து கொண்டிருக்கிறான். அப்போது பக்கத்து தோப்பில் இருந்து இரைச்சல் கேட்க இருவரும் பால்கனிக்கு வருகின்றனர்.அங்கு ஒரு பெண்ணுக்கு காலில் கத்தி வெட்டி இரத்தம் ஒழுகுது. அக்கா திரேசாவுக்கு காலில் கத்தி வெட்டிட்டுது உங்களிடம் ஏதாவது மருந்து இருக்கா எனக் கேக்கிறார்கள். இருக்கு... இதோ வருகிறேன் என்று ஓடிப்போய் முதலுதவிப் பெட்டியை எடுத்துக் கொண்டு இறங்கி வர, பின்னால் கதிரும் வருகிறான்.வசந்தி குறுக்கே ஓடி அந்த மார்பளவு காம்பவுண்டுச் சுவரை ஒரு ஜம்பில் கடக்கிறாள். நல்லகாலம் சுடிதாரில் இருந்ததால் சுலபமாய் கடந்திட்டாள். கவுன் அணிந்திருந்தாள் கிழிந்திருக்கும்.கதிர் வாசல் கேட்டால்  ஓடி வருகிறான். அப்போது தற்செயலாய் வந்த கார் ஒன்று அவனை உரசினாற் வந்து நிக்கிறது. அதன் கண்ணாடியை இறக்கிய ஸ்னேகா என்ன கதிர் ஓடுகிறாய் ஏதும் பிரச்சினையா.....ஓம் ஸ்னேகா.... அவளும் காருடன் தோட்டத்துள் சென்று வண்டியை நிறுத்திவிட்டு இறங்கி வருகிறாள். பிட்டான டெனிம் ஜீன்சும் டைட்டான பிளாக் பெனியனும் போட்டிருக்கிறாள்.

அந்தப் பெண் தெரேசாவின் கால் பெருவிரலில் இருந்து இரத்தம் ஓடுது.அவள் தென்னையில் சாய்ந்திருக்கிறாள்.வசந்தி மெடிக்கல் ஸ்டூடன்ட் என்றபடியால் விரைவாக செயல்பட்டு அவளது காலை உயரமாக தூக்கி தனது தொடையில் வைத்துக் கொண்டு முதலுதவிப் பெட்டியை திறக்கிறாள். திறந்தவள் திகைத்துப் போனாள். இந்தக் கோதாரியைத் தானே அண்டைக்கு தேடினேன், இது இங்கே எப்படி வந்தது.என்று யோசிக்க, என்னடி ரத்தத்தைக் கண்டு பயந்துட்டியா என்று கேட்டுக் கொண்டே வந்த கதிரும், பெட்டிக்குள் இருந்த நாப்கின்னில் ஒன்றை எடுத்து ஸ்பிரிட்டை கொட்டி துடைத்துவிட்டு இன்னொன்றை எடுத்து விரலைச் சுத்தி இறுக்கிப் பிடித்துக் கொண்டு ஓட்டுவதற்கு பிளாஸ்ட்ரைத் தேடுகிறான்.அது இல்லை. அப்போது பின்னால் நின்ற ஸ்னேகா தனது ஜீன்ஸ் பாக்கட்டில் இருந்து ஒரு பக்கட்டை எடுத்து பல்லால் கிழித்து அந்த சிறிய பலூனை அந்த விரலின்மேல் போட்டு இழுத்து விட அது பாந்தமாய் இறுக்கிப் பிடிக்கிறது. இவங்களின் முதலுதவியைப் பார்த்து வசந்திக்கு திகைப்பின் மேல் திகைப்பாய் இருக்கின்றது. ஆனாலும் சுதாகரித்துக் கொண்டு உடனே ஹாஸ்பிட்டல் போகவேணும் என்று சொல்ல அந்தப் பெண் ஐயோ வேண்டாமக்கா, ஊசி போடுவினம்.அதுதான் அண்ணா பலூன் போட்டிருக்கு தண்ணி உள்ள போகாதுதானே.இதுவே போதும் என்கிறாள். நீ கொஞ்சம் ஷட் அப் பண்ணுறியா,பென்சிலின் போடாவிட்டால் ஏற்பு வைத்திடும் என்கிறாள் வசந்தி. திரேசாவும் அவள் இங்கிலீஷில் தனக்கு ஏதோ நல்லது சொல்கிறாள் என்று பேசாமல் இருக்கிறாள்.அப்படியே அந்தப் பெண்னும் வசந்தியும் காரில் ஏறிக்கொண்டு கதிரிடம் வீட்டைப் பூட்டிவிட்டு அங்க வாங்கோ என்று சொல்ல கார் கடற்கரை வீதியில் கடுகதியாய் போகின்றது.

பல்கலைக்கழக விரிவுரையாளர் பூதத்தம்பி மாணவ மாணவியர் நால்வருடன் அந்த வார்டில் அவர்களுக்கு பிரத்தியோக பிராக்டிக்கல் வகுப்பு எடுத்துக் கொண்டு வருகிறார்.அப்போது கங்காணி கந்தையா ஒரு பெண்ணை வீல்சேரில் இருத்தி தள்ளிக் கொண்டுவர அருகே ஒரு பெண்ணும் வருகிறாள்.

பூதம்: இது என்ன கேஸ் கந்தையா...!

கந்தையா: இவாவுக்கு காலில கொடுவாக்கத்தி வெட்டிப்போட்டுது....!

காயம் ஆழமோ....!

தெரியேல்ல, பார்த்தாதான் தெரியும்.....!

அப்பா இதை நாங்கள் பார்க்கலாமா கந்தையா....!

அதுக்கென்ன ஐயா, நீங்கள் பாருங்கோ. நான் டாக்குத்தரிட்ட சொல்லிப்போட்டு ஊசிமருந்தும் எடுத்துக் கொண்டு வாறன். அந்தப் பெண்ணைக் காட்டி இவாவும் ஒரு மருத்துவ மாணவி, பட்டதாரி.கண்டியில் படிச்சவ,நோயாளிக்கு முதலுதவி அளித்து அழைத்து வந்தது இவதான். ..., 

பக்கத்து அறைக்கு போய் கட்டிலில் நோயாளியை படுக்க வைக்கிறார்கள். காயத்தை அவிழ்க்கப் போன பூதத்தம்பி "கொஞ்சம் பொறுங்கோ எல்லோரும் என்று தடுத்து கால் சீலையை சிறிது மேலே தூக்கி விட்டு தனது ஆப்பிள் போனில் கமராவை ஆன் பண்ணி காலை அப்படியே படமெடுக்கிறார்.பின் அந்தக் காண்டத்தையும்,நாப்கின்னையும் மிகக் கவனமாய் பிரித்தெடுத்து அருகில் வைத்து அவற்றையும் படமெடுக்கிறார். மாணவர்கள் மிக உன்னிப்பாக கவனித்து குறிப்பெடுத்து கொள்கிறார்கள்.பின் வசந்தியை பார்த்து உன் பேர் என்னம்மா....!

வசந்தி....வசந்தி கதிர்வேலன்  சேர்.....!

எங்க படிச்சனீர்......!  கண்டில சேர்......!

அதுதானே பார்த்தேன், இங்கு படிக்கும் மாணவர்களுக்கு இதுபோல எல்லைதாண்டியெல்லாம் யோசிக்க வராது. அவசர உதவிக்கு சமயோசிதமாய் செயல்பட்டு நல்ல முதலுதவி செய்திருக்கிறாய்.( அப்போது அங்கு கதிர் கையில் மாலு பண்ணும், பேப்பர் கப்பில் கோப்பியும் கொண்டுவந்து திரேசாவிடம் குடுக்க அவள் அவனை நன்றியுடன் நோக்கி வாங்கிக் கொள்கிறாள்).

பின் லெக்சர் குடுக்கிறார்: பாருங்கள் பிள்ளைகளே, வசந்தியைப்போல் இடத்துக்கும் நேரத்துக்கும் ஏற்றவாறு முடிவெடுத்து செயல்படவேண்டும். பொதுவாக பெண்கள் தங்கள் பைகளில் நாப்கின் வைத்திருப்பினம். காண்டம் இருக்காது. இந்தப்பெண் இரண்டையும் தன்னுடன் வைத்திருந்ததால்தான் அவசரகாலத்தில் அவசரஉதவி செய்ய முடிந்தது.காண்டமோ, நாப்கின்னோ அவற்றின் தொழிற்பாடு ஒன்றுதான். ஒன்று ஒழுகும் திரவத்தை உறிஞ்சுதல் , இன்னொன்று ஒழுகும் திரவத்தை தடுத்தல் அவ்வளவுதான்.இந்த பேஸிக்கை புரிந்து கொண்டால் நீங்களும் வசந்திபோல் அவற்றின் தேவைகளைத் தாண்டியும் பற்பல தேவைகளுக்கு பயன்படுத்த முடியும். என்று சொல்லிவிட்டு ஒரு மாணவியிடம் இருந்து வெள்ளைக் கவுனை வாங்கி வசந்தியை அணியக் கொடுத்து தனது ஸ்டெதாஸ் கோப்பை அவள் தோளில் போட்டு படமெடுத்துக் கொண்டு, அவளது போன்நம்பரையும் வாங்கிக் கொண்டு மாணவர்களுடன் போகிறார். பின் வசந்தியும் கந்தையாவும் சேர்ந்து அந்தப் பெண்ணுக்கு மருந்திட்டு ஊசி போட்டு , அவளை ஆட்டொவில் ஏற்றி அனுப்பிவிட்டு தங்கள் சுபாஷ்கபேயில் சாப்பாடு கட்டிக் கொண்டு வீட்டுக்கு போகிறார்கள்....!

வருவார்....!

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்ச நேரத்துக்குள்ள வேருக்க வச்சு விக்கல் வர வச்ச்சிட்டியளே துருசாமி  அந்த விபரிப்பை சொன்னன் :10_wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்தநாள் மேசையில் அந்த முதலுதவிப் பெட்டி திறந்து கிடக்கிறது. வசந்தி அந்த நாப்கின் பக்கட்டை தூக்கிக் காட்டி நிஜமாவே இது என்னெண்டு உனக்கு தெரியாதா... , விசர் கதை கதைக்கிறாய்,தெரியாமலா அந்தப் பெண்ணில் காலுக்கு கட்டுப் போட்டனான்.எதோ உனக்குத்தான் எல்லாம் தெரியும் என்று பீத்திக்காதை.டாக்டர் திமிரு....  சரி...சரி விடு..., கறுமம்  கறுமம் என்று தலையில் அடித்துக் கொண்டவளுக்கு சட்டென்று பொறி தட்டினாற் போல் ஒரு யோசனை. நான் இதை எப்படி கவனிக்காமல் விட்டேன். பீரியட் நாள் தள்ளிப் போகுது என்று கணக்கு பார்க்கிறாள். அப்படியே கூகிளில் அருகில் உள்ள லேடி டாக்டரை தேடுகிறாள்.

வசந்த்: ஹலோ மேடம், நான் வசந்தி பேசுகிறேன், உங்களை சந்திக்க நேரம் தர முடியுமா... நான் தனியாக பேச வேண்டும்.

டாக்டர்: ஹலோ நான் டாக்டர் நிவேதா, அதுக்கென்ன தாராளமாய். கிழமை நாட்களில் கிளினிக்கில் வந்து பார்க்கலாம். அவசரமென்றால் வீட்டில் வந்து பார்க்கலாம். நம்பர் சேவ் பண்ணிட்டன்.விலாசம் சொல்லு.வசந்தி விலாசம் சொல்ல என்ன பாசையூர் அப்பார்ட்மெண்டா, நீங்கள் எத்தனையாவது மாடி.....

மூன்றாம் மாடி மேடம்.

நான் முதலாம் மாடி, புதிதாக வந்து கப்பிள் நீங்கள்தானா அது. இப்ப வீட்டில்தான் இருக்கிறன். விரும்பினால் இப்பகூட நீ வரலாம்.

சரி மேடம், தேங்ஸ்... உடனே வருகிறேன். வா கதிர் என்று அவனை இழுத்துக் கொண்டு லிப்டில் இறங்கி அவளிடம் போகிறாள். யாரடி இவ நண்பியா... இல்லைடா லேடீடாக்டர்..... ஏன் உனக்கு ஏதாவது செய்யுதா...., ஒன்றுமில்லை சும்மா இருடா ஒரு சின்ன செக்கப். கதவு திறக்கிறது. டாக்டர் ஒரு இளம்பெண் மிக அழகாய் இருக்கிறாள். உள்ளே அழைத்துப் போகிறாள்.

டாக்: லாஸ்ட் பீரியட் எப்ப வந்தது ஞ<பகம் இருக்கா...,

வசந்தி: கதிர் ஒருநாள் உன்ர புது பனியனை தூக்கிக் கொண்டு ஓடினேன் நினைவிருக்கா. 

கதிர்: அதுக்கு பிறகு நான் அதை காணவே இல்லையடி. கலியாணத்துக்கு அம்மா வாங்கி தந்தது.

வசந்தி: போதும். எப்ப என்று சொல்லு.

கதிர்: முதல்நாள் நீ சமைத்தனி, அன்று போயாவிடுமுறை.நான் படுத்திருக்க நீ களவெடுத்துக் கொண்டு போனனீ. ( இவர்கள் சண்டையை நிவேதா ரசிக்கிறாள்).

வசந்தி போனில் காலண்டர் பார்த்து சரியாக சொல்கிறாள். 

டாக்டர் அவளை அறைக்குள் அழைத்து செல்கிறாள்.அங்கு சில செக்கப்புகள் செய்துவிட்டு இருவரும் வெளியில் வருகின்றனர்.கதிர் கவலையுடன் இருக்கிறான். பின் கதிர் விசா கார்ட்டால் பணம் கட்டியவுடன் வசந்தி மெதுவாக அவன் கையைப் பிடித்தது வெளியே கூட்டி வருகின்றாள். என்னடி வீட்டுக்குப்போகாமல் ரோட்டுக்கு வாராய். பேசாமல் வா கடற்கரையில கொஞ்சம் நடப்பம் என்று வீதி தாண்டி வந்து கடலோரமாய் நடந்து வருகிறார்கள்.சற்று தூரத்தில் அந்தோனியார் தேவாலயம் தெரிகிறது. அதைப் பார்த்துக் கொண்டே கையெடுத்து கும்பிடுறாள். கையில் இனிப்பு இல்லாததால் மெதுவாக அவனது தலையை தன்னை நோக்கி இழுத்து உதட்டில் அழுந்த முத்தமிட்டு, கன்னத்தோடு கன்னத்தை இழைஞ்சு கொண்டு நீ அப்பாவாகப் போகிறாயடா..... உண்மையை சொல்லடி , பகிடி இல்லைத்தானே. கெஞ்சலுடன் பார்க்கிறான். அவன் கையைப் பிடித்திருந்த அந்த ஸ்பரிசம் அது உண்மைதான் பொய் இல்லை என்கிறது. சற்று தனது ஆடையை விலக்கி அவன் கையை தனது வயிற்றில் வைத்து பிடிக்கிறாள். கதிரால் உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியவில்லை.அப்படியே மண்டியிட்டு அமர்ந்து அவள் வயிற்றில் முத்தமிட்டு கன்னத்துடன் ஒட்டிக் கொள்ள கண்ணீர் கன்னத்திலும் வயிற்றிலுமாய் உருண்டோடுகிறது. அவன் தலை முடிக்குள் விரல்களால் கோதிக் கொண்டே, ப்ளீஸ் அழாதடா கதிர்.ஆனந்தக் கண்ணீர் அவள் கண்களிலும்....! 

பின் இருவரும் தேவாலயத்துக்குள் சென்று ஒரு மெழுகுவர்த்தி ஏற்றிவைத்து எந்த வேண்டுதலும் இன்றி மௌனமாக அருகருகே மண்டியிட்டு அமர்ந்திருக்கின்றனர்.புனித அந்தோனியாரின் ஒரு கரம் சிலுவை தூக்கி ஆசிர்வதிக்க ஒரு கரத்தில் பாலகன் இயேசு அவர்கள் மேல் புன்னகை சிந்துகிறார்....! இருவரும் வெளியே வந்ததும் வசந்தி இரு வீட்டாருக்கும் தகவல் சொல்கிறாள்....!

வருவார்....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 01.08.2017 at 6:24 PM, suvy said:

அண்ணா பலூன் போட்டிருக்கு தண்ணி உள்ள போகாதுதானே.இதுவே போதும் என்கிறாள். நீ கொஞ்சம் ஷட் அப் பண்ணுறியா,

வருவார்....!

 

 

வசந்தி ரொம்ப பிக் பொஸ் பார்ப்பா போல் இருக்கு:unsure::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்தநாள் மதியம்போல் ஒரு காரில் முத்துவேலர், சிவகாமி ,சுகந்தி, ராஜசேகர், பார்வதி,எல்லோரும் வந்து இறங்குகிறார்கள்.மகேசும் தேன்மொழியும் சௌம்யாவும் ஒரு காரில் வருகின்றனர்.அவர்களது ஜாதகம் பொருந்திய படியால் அவர்கள் சில சமயங்களில் தனியாக கதைப்பதையோ எங்காவது போய் வருவதையே அவர்கள் தவறாக எடுத்துக் கொள்வதில்லை. வசந்தியை ஓரு அலுவலும்  செய்ய விடாமல் வந்தவர்களே சமைத்து சாப்பிட்டு குசலம் விசாரித்து புறப்படுவதற்காக வெளியே வருகின்றனர். அப்போது சுகந்தி வந்து தமைக்கையிடம் அக்கா உனது தப்லட்டை எடுத்துக் கொண்டு போகவா என்று கேட்க எங்கேயோ நிண்ட கதிர் ஓடிப்போய் அதை எடுத்து வந்து சுகந்தியிடம் குடுத்து பரவாயில்லை நீ கொண்டுபோ தேவையென்றால் பிறகு எடுக்கலாம் என்கிறான்.வசந்தி பேசாமல் நிக்கிறாள்.பின் அவர்கள் காரிலே போக இவர்கள் கையசைத்து விடை கொடுக்கின்றனர்.

என்னடி உன்ர தப்லட்டை சுகந்திட்ட குடுக்கேக்க நீ தடுக்கக்கூட இல்லை....,

அது தேவை இல்லடா....!

அப்ப சரி....!

வசந்தி: அதுதான் உன் கணனி இருக்குது தானே....,  

கதிர்: ஓ....  மகராணி அந்த எண்ணத்தில்தான் கம்முனு இருந்திங்களோ.அது நீ பாவிக்க ஏலாது. அதுக்கு ஸ்பெஷல் பாஸ்வேர்ட் எல்லாம் இருக்கு.

வசந்தி: அதை விடு , அதெல்லாம் அப்பவே நான் ஹேக் பண்ணி எடுத்திட்டன்.ஆமா அது யாரடா ஜுலி ...., எவனோ ஒரு தறுதலை  ஓவியாவின்ர படத்தைப் போட்டு ஜுலி எண்டு சொன்னால் ஜொள்ளு விட்டுக் கொண்டே பின்னாலே போய் கமெண்ட்ஸ் குடுப்பியா.

கதிர்: என்னடி சொல்லுறாய். உனக்கெப்படித் தெரியும்.

வசந்தி: அது அப்படித்தான். நேற்று விட்ட டோஸில  அந்தத் தொடர்பே பிளாக் பண்ணியாச்சுது.

கதிர்: எப்படி பாஸ்வேர்ட் சுட்டணி.

வசந்தி: அது நீ கொண்டு வந்த ரெண்டாம் நாளே எடுத்திட்டன்.என்று சொல்லிக் கொண்டே வீட்டை நோக்கி ஒயிலாக நடக்கிறாள்.

கதிர்: அடக் கடவுளே, இவள் ஒரு பிராடு....பிராடு. அம்மா முன்ன பின்ன தீர விசாரிக்காமல் இந்தப் பாழுங்கிணத்தில என்னைத் தள்ளி விட்டிட்டியேம்மா.பின்னால் ஓடிப்போக லிப்ட் மூடுகிறது. அவன் படிகளில் ஏறிப் போகிறான்.

இரு மாதங்கள் ஓடிப் போய் விட்டன. அன்று டாக்டர் நிவேதா அவர்களை கிளினிக்குக்கு ஸ்கேன் பண்ணிப் பார்க்க வரச்சொல்லி இருந்தாள். கதிரும் தாயின் ஆலோசனைப்படி இப்பல்லாம் வசந்தியை மோட்டார் சைக்கிளில் ஏற்றுவதில்லை.ஸ்னேகாவை வரச்சொல்லி இருந்தான்.வசந்தியும் வேளைக்கே எழுந்து சமைத்து விட்டு வெளிக்கிட்டு வர ஸ்னேகாவும் வீட்டுக்கே வந்து விட்டாள்.அன்று அவள் ஒரு சிகப்பு கவுன் அணிந்திருந்தாள்.அதன் மேற்பகுதி மார்பை மறைக்காமல் எடுப்பாகக் காட்டிட, சின்ன இடையில் கோல்ட் கலர் பட்டன்கள் பொருத்திய பெல்ட் இறுக்கிப் பிடிக்க கீழே சரிவாக அந்தக் கவுன் தைக்கப் பட்டிருந்தது.அது ஒருபக்கம் தொடை வரையும்,மறுபக்கம் முழங்காலுக்கு சற்று கீழேயும் இறங்கி குடைவெட்டில் இருந்தது. அத்துடன் சிகப்பு ஹீல்சும் போட்டிருந்ததால் நடக்கையில் அவளது கால்களும் பின்னழகும் எடுப்பாய் தெரிகிறது.

வசந்தி: பிசாசாடி நீ ... என்னென்ன விதம் விதமாய் அழகழகாய் ட்ரஸ் பண்ணுகிறாய்....!

ஸ்னேகா: போடி நீ ஒன்னு. நான் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் என் தொழிலுக்காக இப்படி கவர்ச்சியாக ஆடை அணிவது அவசியமானது.நீ இதுக்கு ஆசைப்படாத. மூவரும் நடந்து காருக்கு வருகின்றனர்.கதிர் பின்னால் ஏற முன்னால் வசந்தி ஏறுகின்றாள்.ஸ்னேகா சாரதி ஆசனத்தில் அமர, ஸ்காட் விலகி கால்கள் அழகாய் இருக்கின்றன.அதை ரசிக்கும் நிலையில் கதிர் இல்லை. கார் புறப்படுகின்றது கிளினிக்குக்கு. உள்ளே போனதும் நர்ஸ் அவர்களை அழைத்துக் கொண்டு ஒரு தனி அறைக்குப் போகிறாள்.அங்கு நிவேதாவும் வருகிறாள்.அங்கு கட்டிலில் வசந்தி படுத்ததும் அவளது அடிவயிற்று ஆடையை ஒதுக்கி விட்டு ஒரு களிம்பை பூசி அதன் மேல் ஒரு கருவியை வைத்து அழுத்தி இழுக்க எதிரில் இருந்த திரையில் கருப்பையில் இருக்கும் சிசுவின் அசைவுகள் தெரிகின்றன.அதை வசந்தியும் கதிரும் ஆர்வமாய் பார்க்கின்றனர்.முதன் முதல் வயிற்றில் அசையும் அந்த சின்னஞ்சிறு ஜீவனைப் பார்க்கையில் நெஞ்சுக் குழிக்குள் ஏதோ உருளுகின்றது.அவர்களின் கண்கள் குளமாக வசந்தியின் காதோரம் ஈரமாகின்றது. ஸில்லி யு போத் என்ற டாக்டர் அவர்களை அழைத்துக் கொண்டு தனது அறைக்கு வருகிறாள்.

நிவேதா: பிள்ளை நல்ல பொசிசனில் இருக்குது. வளர்ச்சியும் சரியாய் இருக்கு . கவலைப்படத் தேவையில்லை.

வசந்தி: என்ன குழந்தை என்று தெரிந்து கொள்ளலாமா டாக்டர்.

நிவே: நோ....நோ அதை சொல்ல எங்களுக்கு அனுமதி இல்லை. பிள்ளை பிறந்தபின் தான்  நீங்கள் அதை தெரிந்து கொள்ள முடியும்.

கதிர்: எங்களுக்கு என்ன குழந்தையென்றாலும் சரியே.... ஒரு ஆர்வத்தில் ...... பின் இருவரும் சரி டாக்டர் நாங்கள் கிளம்புகிறோம்.என்று எழுந்து கொள்கிறார்கள். அப்போது ஒரு நர்ஸ் வந்து டாக்டர்  இந்த ரிப்போட்டை எந்த பைலில் வைப்பது என்று கேட்க நிவேதாவும் ஒரு பிங்க் கலர் பைலை குடுத்து இதில் வைத்துவிடு என்கிறாள். வசந்தி ம்கூம் என்று கனைத்து நிவேதாவைப் பார்த்து கண்ணடித்துக் கொண்டே வெளியே வருகிறாள்.

வருவார்....!

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கதை போல உள்ளது....சுவியர் !

இன்னும் வாசிக்கவில்லை....இந்தச் சனி, ஞாயிறு...கட்டாயம் வாசிப்பேன்!

அதன் பின்னர்..எனது கருத்தை எழுதுகின்றேன்!

துருச்காமியையே இன்னும் ஜீரணித்து முடிக்கவில்லை!

தொடருங்கள்....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, புங்கையூரன் said:

நல்ல கதை போல உள்ளது....சுவியர் !

இன்னும் வாசிக்கவில்லை....இந்தச் சனி, ஞாயிறு...கட்டாயம் வாசிப்பேன்!

அதன் பின்னர்..எனது கருத்தை எழுதுகின்றேன்!

துருச்காமியையே இன்னும் ஜீரணித்து முடிக்கவில்லை!

தொடருங்கள்....!

தாமதமாய் வந்தாலும் சரியான நேரத்துக்கு வந்துவிட்டீர்கள், இன்றோ நாளையோ கதிர் தந்தையாகி விடுவார்......!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இடைக்காலத்தில் கதிர் பலப்பல சிறிய இயந்திரங்களை வடிவமைத்து விட்டிருந்தான். சில தயாராகி விற்பனைக்கும் வந்து விட்டன. உதாரணமாக சவர்கார கம்பெனிக்கு தேவையான யந்திரங்கள், தும்பு அடிக்கும் மெஷின், தேங்காய் உரிக்கும் மெஷின்,கீழிருந்தே நண்டு போல் கால் பதித்து கிரெய்ன் போல் உயர்ந்து ரிமோட் மூலம் இயங்கும் தேங்காய்/ பனங்காய் பறிக்கும் யந்திரம்.கிளட்ச்சுடன் கூடிய கயிறு திரிக்கும் யந்திரம் போன்றவை அவற்றுள் சில. இவைகள் பாரம் குறைவாகவும், கடினமான பைபரில் செய்யப்பட்டு தேவையான இடங்களுக்கு விரைவாகவும், சுலபமாகவும் நகர்த்தக் கூடியதாக இருக்கின்றன.இவற்றை வடிவமைக்கும்போது வசந்தியின் ஆலோசனைகளும் பெரும் உதவியாய் இருந்திருக்கு.இதனால் கம்பெனியில்  அவனது மதிப்பு பன்மடங்கு உயர்ந்திருக்கு. மேலும் இரு மாதங்கள் சென்று விட்டன.வசந்தியின்வயிறு நன்றாகப் பெருத்து தாரா மாதிரி வீட்டிற்குள் வளைய வருகிறாள்.அப்பப்ப கதிர் அவளைக் கேலி செய்தாலும் முழு வேலைகளையும் தானே இழுத்துப் போட்டு செய்கிறான்.அவர்களுக்கு திரேஷாவும் தினமும் வந்து ஒத்தாசையாய் இருக்கிறாள்.வசந்தியும் அவளுடன் நல்ல நட்பாகி விட்டாள்.சம வயதுடையவர்கள் ஆதலால் இருவரும் விவஸ்தையின்றி ஜாலியாய் கதைப்பினம். கதையில் கவர்ச்சி கவுச்சியாய் அடிக்கும்.

வசந்தி: திரேசா இந்தத் தென்னை மட்டைகளில் இருந்து நேரடியாகவே கயிறு திரிப்பீர்களா...!

திரேசா: இல்லம்மா.... அது சரிவராது. உரித்த மட்டைகளை நாங்கள் கடற்கரை சோற்றுக்குள் புதைத்து வைப்போம். சுமார் ஐந்தாறு மாதங்கள் புதைந்திருந்த மட்டைகளை வெளியே எடுத்து கல்லில் வைத்து கட்டையால்  அடித்து பதப்படுத்தி உலரவிட்டு பின்புதான் கயிறு திரிக்க சரியாய் வரும்.

வசந்தி: புதைத்த மட்டைகளில்  உங்களுடையது என்று எப்படி எடுப்பீர்கள், வேறுயாரும் எடுக்க மாட்டார்களா. நாட்பட்ட மட்டைகளை எப்படித் தெரியும்.

திரேசா: அந்த சேற்றுப் பகுதிகளில் அந்தந்த குடும்பங்களுக்கு என்று சொந்தமான நிலங்கள் உண்டு.அவை பரம்பரை பரம்பரையாக வருபவை. அங்கு முறைவைத்துப் புதைத்து வருவதால் எந்தத் தொகுதி மட்டைகள் எப்ப புதைத்தது என்று அந்தந்தக் குடும்பங்களுக்கு தெரியும்.

இதிலே இவ்வளவு விடயங்கள் இருக்கா.... இன்னும் எவ்வளவோ இருக்கு.....!

அன்று கதிர் உள்ளே வரும்போது பெரிய தபால் கட்டுடன் வருகிறான். அதிலொரு பெரிய கவரில் மருத்துவ சஞ்சிகை ஒன்றும் வசந்தியின் பெயரில்  ஒரு காசோலையும் இருக்கு.பிரித்துப் பார்த்தால் அன்று பேராசிரியர் பூதத்தம்பி எடுத்த படங்களும் வசந்தியின் படமும் அவரது கட்டுரையுடன் பிரசுரமாகி இருந்தது.தொடர்ந்து தமது சஞ்சிகைக்கு பயனுள்ள மருத்துவ குறிப்புகள் எழுதி அனுப்பும்படி கேட்டிருந்தார்கள்.கதிரும் மறக்காமல் அந்தக் காசோலையுடன் கிளம்ப, திரேசாவும் உள்ளே வருகிறாள். அப்போது வசந்திக்கு சிவகாமியிடம் இருந்து போன் வருகின்றது. பிள்ளை...நீ ஆசையாய் வளர்த்து வந்த ஆடு இன்னும் சில நாளில் குட்டி ஈனப் போகுது.எக்கணம் நீ முந்துறியோ அது முந்துதோ தெரியாது. பின் வசந்தியும் தனது படமும் கட்டுரையும் சஞ்சிகையில் வந்ததை சொல்லிவிட்டு வைக்கிறாள். இன்று முழுதும் நல்ல செய்திகளாக இருப்பதால் சந்தோசமாக இருக்கு.அவற்றை திரேசாவிடமும் பகிர்ந்து கொள்கிறாள். திரேசாவும்  சமையல் செய்துகொண்டு கதைக்கிறாள். திரேசா நீ விடு ஒழுகுது ஓலை போட்டு வேய வேண்டும் என்று சொன்னாய் அல்லவா. பிறகு நான் கொஞ்சம் பணம் தருகிறேன் நீ அதை சரிப்பண்ணிக் கொள் என்று சொல்கிறாள். அத்தோடு தனது மார்பை அழுத்திக் கொள்ள முகத்தில் வலி தெரிகின்றது.

என்னம்மா ஏதாவது செய்யுதா ஏன் ஒரு மாதிரி இருக்கிறீங்கள். நெஞ்ச்சு வலிக்குது திரேசா அதுதான்..... பொறுங்கம்மா வாறன் என்று உள்ளே போன திரேசா சுடுசோற்றை பொட்டலமாய் கட்டி எடுத்து வந்து வசந்தியின் மார்பில் ஒத்தடம் குடுத்து மேலும்பல சிருஷ்சைகள் செய்ய வலி சிறிது குறைந்து விட்டது. சரியம்மா நான் போட்டு வாறன். மீண்டும் வலித்தால் அண்ணா வந்ததும் அப்படி செய்ய சொல்லுங்கள். ஏண்டி இதுக்கு வேற வழி இல்லையா....! ஏன் இருக்குதே என்று சொல்லி ஜன்னலால் செபாஸ்டியன் என்று சத்தமாய் கூப்பிட , அது யாருடி செபஸ்டியன், அவன் ஏன் இங்க என்று கேட்க , என் புருஷன்தான் இந்த விஷயத்தில் கில்லாடி என்றதுதான்...அடி செருப்பால என்று மேசையில் இருந்த தக்காளியை எடுத்து அவளுக்கு எறிய அது சாத்திய கதவில் பட்டு தெறிக்கிறது.

டாக்டர் குறித்த திகதிக்கு இன்னும் இருப்பது நாட்கள் வரை இருக்குது. கதிர் செற்ரியில் இருந்து கணனியில் வேலை செய்து கொண்டிருக்கிறான். வசந்தி வேதனையுடன் நடமாடுவது போலத் தோன்றுகின்றது. என்னடி ஏதாவது செய்யுதா. கிளினிக்குக்கு போவமா, என்று கேட்க அவள் நெருங்கி வந்து அவன் காதோரமாய் குனிந்து கிசுகிசுக்கிறாள். சிறிது நேரம் நிசப்தம். வயிற்றில் இருக்கும் குழந்தையின் அசைவை அவனது மார்பு உணருகின்றது. என்னடி உன் வயிறு இப்படித் துடிக்கிறது..... பின்ன நீ அவளிண்ட சாப்பாட்டை முழுங்கினால் கோபம் வராதா, அதுதான் உதைக்கிறாள். இப்ப சிறிது சுகமாய் இருக்குது. அப்போது வீட்டில் இருந்து போன் வருகிறது. வசந்தி உனது ஆடு கிடாய் குட்டி போட்டு விட்டது. நாங்கள் இப்ப கடும்புப் பால் காய்ச்சிக் குடிக்கிறம்.நீ பக்கத்தில் இல்லாததுதான் வருத்தம். கேட்க சந்தோசமாய் இருக்குது அம்மா. அவைகளை கவனமாய் பார்த்துக் கொள் அம்மா.போனை ஆப் செய்து கொண்டு, இங்க உன்ர மருமோனும் என்று சொல்ல கதிர் போனைப் பறித்து அங்கால போட்டுவிட்டு எழுந்து கொள்கிறான்......!

நாள் நெருங்குகிறது.....!

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அட… இந்திய வியாதி, அமெரிக்காவிற்கும் தொற்றி விட்டதா.
    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.   CSK, RR, KKR, SRH 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.      #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) KKR     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) CSK     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) RCB 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team KKR 5)    மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator SRH 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 KKR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி)   SRH 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) GT 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)   RIYAN PARAG   11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) JASPRIT BUMRAH 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kohli  15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RCB 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Sunil Narine   19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) KKR 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH
    • ரம்பின் விசாரணை நடக்கும் நீதிமன்றம் அருகில் ஒருவர் திக்குளித்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் பற்ற எரிந்த போது அருகில் நின்ற பொலிசாரும் மக்களும் சேர்ந்து தீயை அணைத்துள்ளனர். https://www.cnn.com/politics/live-news/trump-hush-money-trial-04-19-24#h_6e59fcb889c2bb3a38b4b05fffa573ae
    • ஈரானின் தாக்குதல் ஓரிரவில் முடிந்துவிட்டது. ஆனால் அதன் அதிர்வு இப்போதும்  வெள்ளை மாளிகையை குலுக்கிக்கொண்டிருக்கிறதாம்,........பக்கவிழைவாக இருக்குமொ?  😁
    • "Jesus refulsit omnium" ["Jesus, light of all the nations"] என்ற பழைய பாடலின் என் தமிழ் மொழிபெயர்ப்பு  கி பி 340 இல் இருந்து தான் நத்தார் மார்கழி திங்கள் 25 ஆம் நாள் கொண்டாடப் படுகிறது.  உலகின் ஆரம்பகால லத்தீன் பாடல்களில் ஒன்றான இந்தப் பாடலின் [Saint Hilary of Poitiers, around the 4th century (368] ஆங்கில மொழிபெயர்ப்பை [English Translation by Kevin Hawthorne] நான் தமிழில் தருகிறேன்.    "உலக நாடுகளின் அன்பு இரட்சகர் உலர்ந்த தொட்டிலில் பிரகாசித்த கதையை குடும்பம் ஓங்கிட தெம்பை கொடுக்க கேளுங்கள் அதை நம்பிக்கை கொண்டு!"   "வானத்தில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை கானத்தில் நிற்பவருக்கும் வழி காட்டிட மூன்று ஞானிகள் அறிகுறி அறிந்து அன்பு தெய்வத்தை தேடி வந்தனர்!"   "காடுமலைகள் தாண்டி மழலையை பார்த்திட மேடுபள்ளம் நடந்து பரிசுடன் வந்தனர் பாலகன் மேலே விண்மீன் நிற்க இலக்கு உணர்ந்து விழுந்து வணங்கினர்!"   "ஆத்மபலம் கொண்ட பரிசு கொண்டுவந்து கந்தல்களில் மறைந்திருந்த பாலகனை காட்டி உண்மை ஆண்டவனுக்கு சாட்சி பகிர்ந்து மண்ணுக்கும் விண்ணுக்கும், அடையாளம் காட்டினர்!"     [தமிழ் மொழி பெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   "Jesus, devoted redeemer of all nations, has shone forth, Let the whole family of the faithful celebrate the stories The shining star, gleaming in the heavens, makes him known at his birth and, going before, has led the Magi to his cradle Falling down, they adore the tiny baby hidden in rags, as they bear witness to the true God by bringing a mystical gift"     [Translation by Kevin Hawthorne, PhD]     
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.