• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Recommended Posts

கதையும் இறுதி  பாகத்தை      நெருக்குகிறது போல் தெரிகிறது 

Share this post

Link to post
Share on other sites

அடுத்தநாள் அதிகாலை வசந்தி டாக்டருக்கு போன் செய்து வயிறு அதிகம் நோகுறதாக சொல்கிறாள். சற்று நேரத்தில் நிவேதா அங்கு வந்து அவளை பரிசோதித்து விட்டு தேவையான உடுப்புகள் துணிகளை எடுத்துக் கொண்டு தனது காரிலேயே அவளை கிளினிக்குக்கு அழைத்துக் கொண்டு போகிறாள். கதிரும் வீட்டைப் பூட்டிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் பின்னால் போகிறான். போகும்போதே இரு வீட்டாருக்கும் தகவல் போகிறது.கிளினிக்கில் வசந்தியை வராண்டாவில் மெதுவாக நடக்கும்படி சொல்லிவிட்டு நர்ஸிடம் அறையை ஆயத்தப் படுத்தும் படி சொல்கிறாள்.கதிர் ஆதுரத்துடன் அவளின் தோள் பிடித்து கூட நடக்கிறான். அங்கு வந்த நிவேதா வசந்தியிடம், உனக்கு சிரமமாய் இருந்தால் வலி தெரியாமல் இருக்க நாரியில் ஒரு ஊசி போடவா என்று கேட்க வசந்தி மறுத்து இந்த வலியை நான் ரசித்து அனுபவிக்கிறேன் டொக்டர். ஐ வில் மேனேஜ் என்கிறாள். வெரி குட்  இன்னும் சிறிது பொறுத்தால் சுகப்பிரசவமாகிவிடும்.அவள் படுக்கையில் படுக்கவும் பனிக்குடம் உடைகிறது. நீ விரும்பினால் இங்கே இருக்கலாம் என்று நிவேதா கூறவும், அவளின் வேதனை பார்க்க முடியாமல் கதிர் வெளியே வந்து விடுகிறான். அப்போது அவர்களின் பெற்றோர்களும் சகோதரங்களும் வந்து விட்டார்கள். யாராவது கொஞ்சம் வாருங்கள் என்று நிவேதா அழைக்க பார்வதியும் சிவகாமியும் உள்ளே செல்கின்றனர்.நர்ஸ் வசந்தியின் பைலை எடுத்து வந்து டொக்டரிடம் தர வசந்தி பார்க்கிறாள் அது பிங்கும் , நீலமும் இல்லாமல் ஆரஞ்சு மஞ்சள் நிறத்தில் இருக்கு. வசந்தியின் பார்வையில் கேள்வி தொக்கி நிக்க நிவேதா கண்ணடிக்கிறாள். உதிரப்போக்கு அதிகமாகின்றது.ஈனஸ்வரத்தில் முனக அவளை பார்வதி அணைத்து  முந்தானையால் முக வேர்வையை துடைத்து விடுகிறாள்.

 வசந்தியின் ஒரு அலறலில் புதிய மலர் ஒன்று பூமியில் பூக்கிறது. அதன் கிளிக்குரல் கிளினிக்கில் மிதக்கிறது. அதை அப்படியே சுத்திய கொடியோடு அவளின் வெற்று மார்பில் குப்புறப் போட்டு இரு நிமிடத்தில் மீண்டும் வலியெடுக்கிறது, இன்னொரு மொட்டு முகையவிழ்ந்து வெளியே வருகின்றது. சுகப் பிரசவம். பேத்திமார் இருவருக்கும் பேரானந்தம். நர்ஸுடன் சேர்ந்து இருவரும் பிள்ளைகளை அணைத்து எடுத்துக் கொண்டு சுத்தப் படுத்த உள்ளே போகின்றனர்.நிவேதா வெளியே வந்து கதிரிடம் நீ போய் வசந்தியை பார் உன்னைத்தான் தேடுகிறாள் என்று சொல்ல அவன் உள்ளே போகிறான்.அவள் மற்றவர்களிடம் ஆணும் பெண்ணுமாய் இரு பிள்ளைகள் என்று சொல்ல முத்துவேலரும் ராஜசேகரும் காருக்கு போய் என்ன பிள்ளை என்று தெரியாமல் வாங்கிக் கொண்டு வந்த சர்க்கரையையும் கற்கண்டையும் எடுத்து வந்து அங்கு நின்ற எல்லோருக்கும் தருகின்றனர்.கதிர் போய் வசந்தியின் காலடியில் நின்று அவளின் இரு பாதத்தையும் புறாக்குஞ்சுகளைப் பொத்திப் பிடிப்பதுபோல் பிடித்து முகத்தைப் புதைத்துக் கொண்டு கேவுகிறான்.வசந்தியும் எட்டி அவன் முடியைப்பிடித்து இழுத்து தன்னோடு அனைத்துக் கொள்கிறாள்.

கதிர்: வசந்திம்மா குழந்தை உன்னை ரொம்ப கஷ்டப் படுத்திப் போட்டாளா.... !

வசந்தி: குழந்தையா..., இப்ப நீ ரெண்டு பிள்ளைகளுக்கு அப்பாடா. பையன் என்னைப்போல சமர்த்தாய் வந்திட்டான்.... இந்தப் பெட்டைதான் உன்னைமாதிரி என்னை ஒரு வழி பண்ணிட்டாள். 

 கதிர் : நிஜமாவாடி... "ஐ லவ் யு  சோ மச்"நீ கெட்டிக்காரியடி எவ்வளவு வேதனையாய் இருந்திருக்கும் ஆனால் சாதிச்சிட்டாய்  என்று நெற்றியில் முத்தமிடுகிறான்.கண்ணீர் ஒழுக அழுகிறான். என்னங்க இது. அழாதடா எல்லோரும் இருக்கிறார்கள்.... போடி நீ...! 

 வசந்தி: இல்லைடா நீ இவ்வளவு நாளும் மனசுக்குள் பட்ட வேதனை எனக்கு தெரியாதென்று நினைக்கிறியா. உன்னை ஒரு காட்டான் என்று நினைத்துதான் உன்னோடு வாழ வந்தன்.ஆனால் நீயும் மாமா அத்தை மற்றும் எல்லோருடைய அன்பும் என்னை நெகிழ்த்தி விட்டது. நாளாவட்டத்தில் நானே உனக்குள் உருகிப் போனேன். இந்த நிமிஷம் இந்த உலகில் உன்னைவிட எதுவுமே எனக்கு பெரிசில்ல, ஐ லவ் யு டா அவன் கன்னத்தை தடவி விடுகிறாள்.வெளியே இரு பிள்ளைகளையும் எல்லோரும் ஆசையுடன் தொட்டு தொட்டு பார்க்கினம்.மாப்பிள்ளை எங்க, சிவகாமி கேட்கிறாள். அண்ணா உள்ளே அண்ணியுடன் இருக்கிறான் என்று சௌம்யா சொல்ல பொறுங்கோ முதலில் பிள்ளைகளை தேப்பனிட்ட  காட்டிட்டு வாறன் என்று உள்ளே போகிறார்கள்.  

பிள்ளைகளை இருவரும் கொண்டுவந்து இரு பக்கத்தாலும் அவனது இரண்டு கைகளிலும் தருகின்றனர். அவன் முதன் முதலாக இந்தப் பச்சைப் பிள்ளைகளை எப்படித் தூக்குவது என்று தெரியாமல் சிலேட்டில் "அ "எழுத தடுமாறும் சிறுபிள்ளைபோல் தவிக்கிறான். வசந்தியும் அவன் தவிப்பை பார்த்து எதையோ நினைத்து சிரிக்க பையன் அவன் மார்பில் "சூ " அடிக்கிறான். எல்லோரும் சிரிக்கிறார்கள்....!

கதிர் தந்தையுமாகினான்....!

யாவும் கற்பனை....!

ஆக்கம் சுவி .....! tw_blush: 

  • Like 7
  • Thanks 2

Share this post

Link to post
Share on other sites

கதை அருமை வாழ்த்துக்கள் சுவி அண்ணா  ??

இதை ஒரு  திரைபடமா எடுத்தல் தனி தன் கதாநாயகன்  ??

  • Haha 1

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, tharsan1985 said:

கதை அருமை வாழ்த்துக்கள் சுவி அண்ணா  ??

இதை ஒரு  திரைபடமா எடுத்தல் தனி தன் கதாநாயகன்  ??

நான் ரெடி பாஸ்  ஐ யம் வெயிட்டிங்:10_wink:

Share this post

Link to post
Share on other sites
32 minutes ago, தனி ஒருவன் said:

நான் ரெடி பாஸ்  ஐ யம் வெயிட்டிங்:10_wink:

I'm all so?

  • Haha 2

Share this post

Link to post
Share on other sites
5 hours ago, tharsan1985 said:

கதை அருமை வாழ்த்துக்கள் சுவி அண்ணா  ??

இதை ஒரு  திரைபடமா எடுத்தல் தனி தன் கதாநாயகன்  ??

தர்சன் இதை முதலே எனக்கு சொல்லி இருந்தால், வசந்தி அப்பப்ப கதிருக்கு கரண்டியால ரெண்டு போடுறமாதிரி எழுதி இருக்கலாம். இட்ஸ் டூ லேட் ....! tw_blush:

Share this post

Link to post
Share on other sites

கதை அருமை, சுவியர்!

இன்று தான் முழுக்கதையையும் ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன்!

தொடருங்கள்.....!

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
On 02/08/2017 at 2:24 AM, suvy said:

காண்டமோ, அவற்றின் தொழிற்பாடு ஒன்றுதான்.

கதை அருமை .....இனி பயமில்லாமல் இதை பொக்கற்றில கொண்டு திரியலாம் ,முதலுதவிக்கு என்று சொல்லலாம்:10_wink:

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, putthan said:

கதை அருமை .....இனி பயமில்லாமல் இதை பொக்கற்றில கொண்டு திரியலாம் ,முதலுதவிக்கு என்று சொல்லலாம்:10_wink:

புத்தன் துறக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கு போல ?

Share this post

Link to post
Share on other sites

சுவியர் மிக அருமையான ஒரு கதையை தந்ததற்க்கு நன்றி.மிகவம் அனுபவித்து வாசித்தேன்.சரி சரி ஒரு சின்ன ஓய்வு தரலாம்.விரைவில் அடுத்த கதையுடன் வரவும்.இது வேண்டுகோள் இல்லை.அன்புக் கட்டளை.:)

Share this post

Link to post
Share on other sites
52 minutes ago, அபராஜிதன் said:

புத்தன் துறக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கு போல ?

ஆசை யாரை விட்டு வைச்சுது...

Share this post

Link to post
Share on other sites
On 20/07/2017 at 3:31 PM, நிலாமதி said:

 நல்ல  கதை     நன்றி.  மேலும் தொடர்க 

நன்றி சகோதரி....!  tw_blush:

On 21/07/2017 at 7:04 PM, ஜீவன் சிவா said:

யோவ் எவ்வளவு உசத்தியா வெள்ள மனசுடையவர் என்றும் எழுதுறார் - இது போதாதா 

நண்பர்களுடன் எல்லாத்தையுமே பகிரும் வெள்ளை மனசுக்காரர்.

அதுதானே....!  tw_blush:

On 21/07/2017 at 8:25 PM, சுவைப்பிரியன் said:

சுவியர் எனக்கு பிடிக்காத வார்த்தை தொடரும் என்பது.அதை எந்த வடிவத்தில் எழுதினாலும்:)

தொடரும் போடுவது எனக்கும் இஷ்டமில்லை, என்ன செய்வது கதை தானா இளைத்து சுவை. நன்றி கருத்துக்கு....!  tw_blush:

On 21/07/2017 at 10:39 PM, தமிழ் சிறி said:

மிகவும்  ரசிக்கும்...  மறந்து போன,  யாழ்ப்பாண  எழுத்து நடை. சுவி. :110_writing_hand:
மெய்.. மறந்து, கடந்த காலத்துக்கு... போய்  விட்ட, 
முன்னோர்களின்... சொற் பிரயோகங்கள். :grin:
அவர்களை... மீண்டும். கண் முன்னே... கொண்டு நிறுத்திய உங்களுக்கு,  நன்றிகள்...   சுவி.  :) 

நான் யாழ்ப்பாணத்தான் தானே எப்படி மறக்க முடியும் சிறியர்....நன்றி வரவுக்கும் கருத்துக்கும்....!  tw_blush:

On 23/07/2017 at 11:23 AM, putthan said:

முட்டைகோப்பிதான் அந்த காலத்து பூஸ்ட்,கொர்லிக்ஸ் விட்டமின் எல்லாம்....

அந்தக் காலம் மட்டுமல்ல இந்தக் காலத்திலும் அதுதான் பூஸ்ட் . நன்றி புத்ஸ்....!  tw_blush:

Share this post

Link to post
Share on other sites
On 28/09/2017 at 6:59 PM, நவீனன் said:

அடுத்த கதை எப்ப..:rolleyes:

சட்டியில் இருந்தால் அகப்பையிலே வரும் தெரியாதோடி நேக்கு 

எப்போ இருந்தது இப்போ வாரத்துக்கு எதுக்கெடுத்தாலும் சாக்கு......!  tw_blush:

Share this post

Link to post
Share on other sites

சுவியண்ணா இன்றுதான் ஆறுதலாக முழுமையாக வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. வாசிக்குபோது அலுக்கவில்லை. சின்ன சின்ன விடயங்களைக்கூட அழகாகசொல்லி யிருப்பது... உதாரணத்திற்குகோயிலில் எத்தனை முறை வலம்வரவேண்டும் என்பது பலருக்கும் தெரியாது ஆனால் இக்கதையில் நீங்கள் அதை இயல்பான ஓட்டத்தில்சொல்லியிருப்பது மற்றும்லூசு மாமாகொக்கத்தடிப் பகிடி கிப்ஸ் பனியன் சமாச்சாரம் மாமியார் மருமகளுக்குபோட்டு விடும் கோடாலிகொண்டை, சத்தியமாக எனக்குகோடாலிக்கொண்டையென்றால் எப்படி இருக்கும் என்று தெரியாது. முதலுதவியில் நாப்கினும் கொண்டோமும்  எல்லாவற்றையும்தூக்கி  சாப்பிடும் அளவுக்கு கதிர் வசந்தியின் கூடல் சத்தியமாக சொல்கிறேன் அண்ணா நமக்கெல்லாம் சுட்டுபோட்டாலும் இப்படியான சனரஞ்சகமான எழுத்து வராது. வாழ்த்துக்கள். இலக்கியவெளிகளில் மின்னும் தாரகையாக என்றும் ஒளிரும் உங்கள் எழுத்துகள்.

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
On 30.7.2017 at 4:11 PM, suvy said:

பார்வதி: (குடித்து நிமிர்ந்தவளிடம்) பார்வதி சொல்கிறாள் வாழ்க்கையும் இப்ப நீ தண்ணி குடித்தது போலத்தான்.  அது எப்படி அத்தை....! சிறிது கவனித்து பார்த்தால் புரியும்.  "நீ குடிக்கவென்று ஆசையுடன் பார்த்து பருக வந்த நீர் உன்னைக் கடந்து போய் விட்டது. நீ பார்க்காத நீரைத்தான் இரு கைகளிலும் ஏந்திக் குடித்தாய். இப்ப அதுதான் உன் தாகத்தையும் தனித்து உடம்பிலும் உதிரத்திலும் விரவிக் கிடக்கு , உன் வாழ்க்கைபோல்".(பார்வதி எது சொன்னாலும் அதில் பல அர்த்தம் பொதிந்து இருக்கும்).

ஒரு நிமிடம் வசந்தி ஆடிப்போய் விட்டாள்.தனது மனதுக்குள் உள்ளிருந்து பார்த்ததுபோல் அனாசயமாக அந்தத் துன்ப வேரைப் பிடுங்கி எறிகிறாள் இந்தத் தாய்.ஒரு வார்த்தையில் இதைச் செய்வதற்கு ஒரு ஞ<னியால் அல்லது ஞ<னி போல் வாழ்பவர்களால்தான் முடியும். பார்வதிமீது பெரிய மரியாதையும், இனம் புரியாத பாசமும் எழுகின்றது. இந்தத் தாய்க்கு நான் என்ன கைம்மாறு செய்ய முடியும். இவள் பிள்ளையை சந்தோசமாய் வைத்திருப்பதைத் தவிர.....!

அழகான ஒரு திரைப்படம்போல் கதையை  நகர்த்திச் சென்றிருக்கிறீர்கள்.   அடுத்தவரியை ஆவலோடு படிக்கத்தூண்டும் விதமாகத் தழுவிச் செல்கிறது.  ஒரு இளம்  இணையர்களிடையே இளையோடும் எண்ண அலைகளையும் ஊடல் கூடலையும் கூட அழகாக் சொல்லவதில் வல்லவன் நானென்பதுபோல்  வாசகனுக்கும் கதைக்குமிடையே ஒரு உறவை ஏற்படுத்தம் விதமாக எழுதியிருப்பதுஅழகு.  மேலேயுள்ளவை  மீண்டும் மீண்டும் படிக்கதூண்டும் வரிகள். அங்கதம் முதல் தத்துவம் வரைகதைகளிலே   எடுத்தாழும்  உங்கள் பாணிக்கு மேலுமொரு கைதட்டல். மூத்ததலைமுறையிடம்  எமது  அடுத்த தலைமுறை இழந்துவிட்ட உளவியல் ஆற்றுபடுத்தல்கள் என்பது எவளவு  அற்புதமானது. இன்றைய இளங்குடும்பங்கள் இழந்துவிட்ட ஒன்று. இவைகூட மனப்பிரிவுகளைத் தடுப்பன. 

பாராட்டுகள் சுவிரவர்களே. என்னைப்பொறுத்தவரை இவைகளைப் புத்தகவடிவிலே கொண்டுவந்தால் நல்லது. துருசாமி ஒருவகையென்றால்  தாயுமானவன் இன்னொருவகை. தொடரட்டும் உங்கள் ஆக்கப்பணி.

Edited by nochchi
  • Like 1

Share this post

Link to post
Share on other sites
On 13/10/2017 at 4:37 PM, வல்வை சகாறா said:

சுவியண்ணா இன்றுதான் ஆறுதலாக முழுமையாக வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. வாசிக்குபோது அலுக்கவில்லை. சின்ன சின்ன விடயங்களைக்கூட அழகாகசொல்லி யிருப்பது... உதாரணத்திற்குகோயிலில் எத்தனை முறை வலம்வரவேண்டும் என்பது பலருக்கும் தெரியாது ஆனால் இக்கதையில் நீங்கள் அதை இயல்பான ஓட்டத்தில்சொல்லியிருப்பது மற்றும்லூசு மாமாகொக்கத்தடிப் பகிடி கிப்ஸ் பனியன் சமாச்சாரம் மாமியார் மருமகளுக்குபோட்டு விடும் கோடாலிகொண்டை, சத்தியமாக எனக்குகோடாலிக்கொண்டையென்றால் எப்படி இருக்கும் என்று தெரியாது. முதலுதவியில் நாப்கினும் கொண்டோமும்  எல்லாவற்றையும்தூக்கி  சாப்பிடும் அளவுக்கு கதிர் வசந்தியின் கூடல் சத்தியமாக சொல்கிறேன் அண்ணா நமக்கெல்லாம் சுட்டுபோட்டாலும் இப்படியான சனரஞ்சகமான எழுத்து வராது. வாழ்த்துக்கள். இலக்கியவெளிகளில் மின்னும் தாரகையாக என்றும் ஒளிரும் உங்கள் எழுத்துகள்.

அம்மன் கோயிலில் ஐந்து முறை சுற்றி கும்பிடுவது நல்லது என்று காஞ்சி மஹா பெரியவர் சொல்லுவார்.அதைத்தான் குறிப்பிட்டேன் சகோதரி.கோடாலிக் கொண்டை  என்பது காண வேலைகள் செய்யும்போது முடி தோளில் படராமல்  பின்னந் தலையில் உயர்த்திப் போடுவது.அவசரத்துக்கு அள்ளி முடிவது என்பார்களே அந்த மாதிரி...!

Résultat de recherche d'images pour "hairstyle indian village women"

Share this post

Link to post
Share on other sites
On 10/13/2017 at 4:37 PM, வல்வை சகாறா said:

சுவியண்ணா இன்றுதான் ஆறுதலாக முழுமையாக வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. வாசிக்குபோது அலுக்கவில்லை. சின்ன சின்ன விடயங்களைக்கூட அழகாகசொல்லி யிருப்பது... உதாரணத்திற்குகோயிலில் எத்தனை முறை வலம்வரவேண்டும் என்பது பலருக்கும் தெரியாது ஆனால் இக்கதையில் நீங்கள் அதை இயல்பான ஓட்டத்தில்சொல்லியிருப்பது மற்றும்லூசு மாமாகொக்கத்தடிப் பகிடி கிப்ஸ் பனியன் சமாச்சாரம் மாமியார் மருமகளுக்குபோட்டு விடும் கோடாலிகொண்டை, சத்தியமாக எனக்குகோடாலிக்கொண்டையென்றால் எப்படி இருக்கும் என்று தெரியாது. முதலுதவியில் நாப்கினும் கொண்டோமும்  எல்லாவற்றையும்தூக்கி  சாப்பிடும் அளவுக்கு கதிர் வசந்தியின் கூடல் சத்தியமாக சொல்கிறேன் அண்ணா நமக்கெல்லாம் சுட்டுபோட்டாலும் இப்படியான சனரஞ்சகமான எழுத்து வராது. வாழ்த்துக்கள். இலக்கியவெளிகளில் மின்னும் தாரகையாக என்றும் ஒளிரும் உங்கள் எழுத்துகள்.

உங்களின் பாராட்டுக்கு மிகவும் நன்றி சகோதரி........ tw_blush:

On 10/15/2017 at 9:12 PM, nochchi said:

அழகான ஒரு திரைப்படம்போல் கதையை  நகர்த்திச் சென்றிருக்கிறீர்கள்.   அடுத்தவரியை ஆவலோடு படிக்கத்தூண்டும் விதமாகத் தழுவிச் செல்கிறது.  ஒரு இளம்  இணையர்களிடையே இளையோடும் எண்ண அலைகளையும் ஊடல் கூடலையும் கூட அழகாக் சொல்லவதில் வல்லவன் நானென்பதுபோல்  வாசகனுக்கும் கதைக்குமிடையே ஒரு உறவை ஏற்படுத்தம் விதமாக எழுதியிருப்பதுஅழகு.  மேலேயுள்ளவை  மீண்டும் மீண்டும் படிக்கதூண்டும் வரிகள். அங்கதம் முதல் தத்துவம் வரைகதைகளிலே   எடுத்தாழும்  உங்கள் பாணிக்கு மேலுமொரு கைதட்டல். மூத்ததலைமுறையிடம்  எமது  அடுத்த தலைமுறை இழந்துவிட்ட உளவியல் ஆற்றுபடுத்தல்கள் என்பது எவளவு  அற்புதமானது. இன்றைய இளங்குடும்பங்கள் இழந்துவிட்ட ஒன்று. இவைகூட மனப்பிரிவுகளைத் தடுப்பன. 

பாராட்டுகள் சுவிரவர்களே. என்னைப்பொறுத்தவரை இவைகளைப் புத்தகவடிவிலே கொண்டுவந்தால் நல்லது. துருசாமி ஒருவகையென்றால்  தாயுமானவன் இன்னொருவகை. தொடரட்டும் உங்கள் ஆக்கப்பணி.

நீங்கள் எல்லாம் பாராட்டும்போது மனம் மகிழ்வாக இருக்கின்றது.....நானும் பொறுமையாக இக் கதையை ஒருக்கால் வாசித்து பார்க்க வேண்டும்......!  ?

Share this post

Link to post
Share on other sites

கனகாலத்துக்கு பின் இந்த கதையை பொறுமையாக வாசிக்கும்போது மனசில் ஒரு நிறைவு......!  🤔

இன்னும் இன்னும் பழைய கதைகளை தேடி வாசிக்க வேண்டும் போல் ஒரு எண்ணம்.....!

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.