Jump to content

மட்டு அம்பாறை மாவட்ட துணைத் தளபதி லெப்.கேணல் றீகன் அவர்களின் நினைவு நாள்


Recommended Posts

11112_1500182820_jui.JPG

16.07.1990 அன்று மட்டக்களப்பு மாவட்டம் பாலையடிவெட்டைப் பகுதியில் சிறிலங்கா படையினருடனான மோதலில் வீரச்சாவைத் தழுவிய மட்டக்களப்பு – அம்பாறை மாவட்ட துணைத்தளபதி லெப்.கேணல் றீகன் அவர்களின் 27 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டங்களில் சிறிலங்கா, இந்தியப் படைகளிற்கு எதிராக பல்வேறு வெற்றிகரத் தாக்குதல்களை வழி நடாத்தியவர் தளபதி லெப்.கேணல் றீகன் அவர்கள்.
இவரின் தாக்குதல்களினால் பல நூறு சிறிலங்கா, இந்தியப் படையினர் உயிரிழந்தும், காயமடைந்தும் களமுனைகளிலிருந்து அகற்றப்பட்டிருந்தனர்.
தென் தமிழீழத்தின் புகழ் பூத்த தளபதிகளான கேணல் ரமேஸ், கேணல் ரமணன், கேணல் ராம் ஆகியோர் லெப்.கேணல் றீகன் அவர்களின் படையணியில் இருந்து அவரினால் வளர்த்தெடுக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
16.07.1990 அன்று பாலையடி வெட்டைப்பகுதியில் எதிர்பாராதவிதமாக சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற மோதலில் லெப்.கேணல் தளபதி றீகன் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.
தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.

http://battinaatham.com/description.php?art=11112

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த லெப்.கேணல் தளபதி றீகன் உட்பட வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!

மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம் !!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மட்டு அம்பாறை பெயர் சொல்லும் தளபதிகளில் இவரும் ஒருவர்  வீரவணக்கம் 

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

லெப்டினண்ட் கேணல் றீகனுக்கு வீர வணக்கம்.

Link to comment
Share on other sites

  • 3 years later...
  • கருத்துக்கள உறவுகள்

‘மட்டக்களப்பின் போராட்ட வரலாற்றில் ஒரு தனி அத்தியாயம் -லெப். கேணல் றீகன்

மட்டக்களப்பு, பாலையடி வெட்டையில்; முன்னேறிவந்து நிலை கொண்டுள்ள படையினரைத் தாக்க புலிகள் திட்டமிட்டனர்.

கடைசி வேவு பார்த்து, இராணுவத்தின் பலம் – பலவீனத்தை அறிந்துவர, தளபதி றீகன் இன்னுமொரு போராளியையும் கூட்டிக்கொண்டு ஸ்தலத்திற்குச் செல்கிறான்.

இடைவழியில், இன்னொரு இராணுவ அணியை எதிர்பாராதவிதமாக எதிர்கொள்ள நேரிடுகிறது.

மோதல் வெடித்தது – றீகனுக்கு குண்டடிபடுகிறது.

இவர்கள் இருவர்; எதிரியோ கும்பலாக இருந்தான். இயலுமானவரை பின்னால் வந்தார்கள். இரத்தம் ஓடிக்கொண்டே இருந்தது. ஒரு அளவுக்குமேல் றீகனால் நகர முடியவில்லை.

கூடப்போன போராளியால், தளபதியை நீண்டதூரம் தூக்கிக்கொண்டு தப்பி ஓட முடியவில்லை. மிகவும் சிரமப்பட்டான்.

றீகன் சொன்னான்; “இனி என்னால வர ஏலாது. நீயும் நிண்டால் சாக நேரிடலாம். ஆயுதங்களும் பிடிபட்டுவிடும்; என்னை விட்டிட்டு, எல்லாத்தையும் கொண்டு நீ ஓடு.”

‘மட்டக்களப்பின் போராட்ட வரலாற்றில் ஒரு தனி அத்தியாயம்; அந்தப் பிராந்தியத்தின் இரண்டாவது தளபதி. தன்னந்தனியனாகச் செத்துக்கொண்டிருக்க, எப்படி இடை நடுவில் அநாதரவாக விட்டுவிட்டுச் செல்லலாம்……?’ அந்தப் போராளி உறைந்து போய் நின்றான்.

ஆனாலும் வேறு வழி எதுவுமே அற்ற நிலை.

 

FXdvkqUPa9cpUpeiQoQT.jpg

 

 

தன்னிடமிருந்த எம் 16 கிரனைட் லோஞ்சரையும், இடுப்பில் கட்டியிருந்த பிஸ்டலையும் கழற்றிக்கொடுத்து – சிறப்புத் தளபதியிடம் சொல்ல வேண்டிய சில இரகசியத் தகவல்களையும் காதோடு சொல்லிவிட்டு, குப்பியைத் தன் வாயில் செருகிக்கொண்டே, “போட்டு வா” என்று வழியனுப்பிவைத்தான் அத்தளபதி.

spacer.png

 

விதைக்கப்பட்டது வீரமும்தான் தொகுப்பிலிருந்து…

விடுதலைப்புலிகள் இதழ் (கார்த்திகை 1993).
 

https://www.thaarakam.com/news/6d7fdff5-abe9-470a-9240-d82cdbbccd6a

 

 

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.