Jump to content

பட்டது + படிச்சது + பிடித்தது - விசுகு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 121
 
வடக்கு கிழக்கு = தமிழர் தேசம்?
 
வடக்கு கிழக்கு என்பது தமிழர் பிரதேசமாயின்
அந்த இரு பகுதி மக்களுக்குமான மன ஒற்றுமை மிகமீக முக்கியம்.
ஆனால் நிஐத்தில் அது தூரவே உள்ளது.
வடக்கிலுள்ளவர்களின் வாழ்வும் கிழக்கிலுள்ளவர்களின் வாழ்வும் வெவ்வேறானவை.
 
அதை புரிந்து கொள்ள இரு பகுதியும் முயலணும்.
 
கிழக்கில் வறுமையும் நில அபகரிப்பும்
ஏன் இதைக்காரணமாக்கி எதிரியின் தூண்டில்களும் அதிகம்.
அத்துடன் பக்கத்து வீட்டக்காறனின் வாழ்வுடன் ஒப்பிடும் நிலையில்
அவ்வாறு நாமும் வாழ்ந்தாலென்ன? என தூண்டும் பக்கத்துவீட்டுக்காறரின் வாழ்வும் ஒரு காரணம்?
அப்படி பக்கத்து வீட்டுக்காறரை பின் பற்றி வாழ மறுப்பவருக்கு கிடைக்கும் அழுத்தங்களும் சுமைகளும் மிகமிக அதிகம்.
 
இந்தநிலையில்
எதிரியை எதிர் கொண்டபடி தமக்குள் சகலதையும் பகிர்ந்தபடி எவ்வாறு இந்த இரு பகுதி மக்களும் தம்மை இணைத்து வாழும் வழியை தேர்ந்தெடுக்கப்போகிறார்கள் என்பதிலேயே இனியும் துரோகங்கள் நிகழாதிருக்க முடியுமே தவிர......?????
 
வியாழன் போனால் வெள்ளி சனி வரும்..
அதையாவது எமதாக்குவோமா????
Link to comment
Share on other sites

  • Replies 339
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 122
 
ஒரு நாட்டின் முதல் குடி மகன் அல்லது முதல் பிரசை
 
எந்த ஒரு நாட்டின் முதலாவது மனிதனாக
அந்த நாட்டின் ஐனாதிபதியே கருதப்படுவார் அழைக்கப்படுவார்.
 
அந்த மனிதர் முன்னுதாரணமாக
மக்களுக்கு எடுத்துக்காட்டாக
மக்கள் பின் பற்றவேண்டியவற்றுக்கு அவரே வழி காட்டியாக இருப்பார்
இருக்கணும்
 
 
அவருக்கு எல்லா மக்களும் சமன்
எந்த கட்சிக்கும் உடையவரல்ல அவர்.
 
ஆனால் சிறீலங்காவில்??
அவர் ஐனாதிபதியாக வந்த முறையிலிருந்து
இன்று அவர் செய்யும் கேலிக்கூத்துக்கள் வரை....???
 
இப்படியும் பார்க்கலாம்
எடுத்துக்கொள்ளலாம்
மக்கள் எவ்வழியோ அதுவே தலைவனின் தேர்வும் வழியும்....
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 123
 
சுமந்திரனின் ஆவேசம்?
 
சுமந்திரனின் ஆவேச பேச்சு பற்றி எல்லா இடமும் பேசப்படுகிறது.
 
சுமந்திரன் இதுவரை தமிழரின் எந்த பிரச்சினை சார்ந்தும்
இவ்வாறு பேசிப்பார்த்தில்லை என்பதைத்தவிர இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது??
 
இந்த ஆவேசமும் கொடிய வார்த்தைகளும்
ஒரு நாட்டின் ஐனாதிபதி என்ற கௌரவத்தை கூட கொடுக்காத அரச வக்கீலின் பேச்சு எப்படி வந்தது??
 
ஆனால் இதில் தமிழர்கள் கவனிக்க வேண்டிய ஒரு விடயமிருக்கிறது.
 
சுயநலம்
மக்களை பொய்சொல்லி ஏமாற்றி வைத்திருந்த குட்டு அம்பலமான நிர்க்கதி நிலமை
அரசியலில் அடுத்து எந்த அடியையுமே வைக்கமுடியாத வெறுமையின் பேச்சு இது.
 
சாணக்கியத்தால் மகிந்தவை தூக்கி விட்டு
மைத்திரியை நாங்க தான் கதிரையில் வைத்தோம் என்பதை தவிர
வேறு எதை தமிழருக்கு இது வரை இவர்கள் செய்ததாக சொல்லி இருக்கிறார்கள்???
 
அதுவும் போனால்...??
அதுவும் இப்படி போனால்??
கோபம் வரும் தானே??
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:
பட்டது + படிச்சது + பிடித்தது - 123
 
சுமந்திரனின் ஆவேசம்?
 
சுமந்திரனின் ஆவேச பேச்சு பற்றி எல்லா இடமும் பேசப்படுகிறது.
 
சுமந்திரன் இதுவரை தமிழரின் எந்த பிரச்சினை சார்ந்தும்
இவ்வாறு பேசிப்பார்த்தில்லை என்பதைத்தவிர இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது??
 
இந்த ஆவேசமும் கொடிய வார்த்தைகளும்
ஒரு நாட்டின் ஐனாதிபதி என்ற கௌரவத்தை கூட கொடுக்காத அரச வக்கீலின் பேச்சு எப்படி வந்தது??
 
ஆனால் இதில் தமிழர்கள் கவனிக்க வேண்டிய ஒரு விடயமிருக்கிறது.
 
சுயநலம்
மக்களை பொய்சொல்லி ஏமாற்றி வைத்திருந்த குட்டு அம்பலமான நிர்க்கதி நிலமை
அரசியலில் அடுத்து எந்த அடியையுமே வைக்கமுடியாத வெறுமையின் பேச்சு இது.
 
சாணக்கியத்தால் மகிந்தவை தூக்கி விட்டு
மைத்திரியை நாங்க தான் கதிரையில் வைத்தோம் என்பதை தவிர
வேறு எதை தமிழருக்கு இது வரை இவர்கள் செய்ததாக சொல்லி இருக்கிறார்கள்???
 
அதுவும் போனால்...??
அதுவும் இப்படி போனால்??
கோபம் வரும் தானே??

தீர்வு இல்லையென்றால் தான் அரசியலில் இருந்து ஒதுங்குவதாக  அறிக்கை விட்டது உண்மையாக போவதை எண்ணி வந்த கடுப்பிலை இப்படி சன்னதம் ஆடியிருக்கிறார் போல் உள்ளது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:
சுமந்திரனின் ஆவேச பேச்சு பற்றி எல்லா இடமும் பேசப்படுகிறது.
 

77 களிலிருந்து  இதே ஆவேச பேச்சுக்களால் தான் ஈழத்தமிழினம் சிக்குண்டு  சிதைந்து போனது.   அதன் சுவடு இன்னும் ஆறவேயில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 124
 
புலம் பெயர்தலும் அவலங்களும் (அனுபவக்கதை)
 
எனது அம்மாவுக்கு 3 அண்ணன்மார். 3 பேரும் அதிபர்கள்.
இதில் மூத்தவர் 50 களில் மலேசியாவுக்கு குடும்பமாக புலம் பெயர்ந்தார்.
அங்கேயும் அதிபராக வேலை செய்தவர்
தொடக்கத்தில் இரண்டு முறை ஊருக்கு வந்து சென்றவர் பின்னர் நிறுத்திக்கொண்டார்.
 
பின்னர் அவரைப்பற்றிய எந்த செய்திகளுமில்லை.
அவருக்கு எத்தனை குழந்தைகள் என்ன பெயர் எதுவுமே தெரியாது.
70களின் இறுதியில் ஒரே ஒரு தங்கையாகிய எனது தாயார் சிரமப்படுகிறார் என அறிந்தாரோ என்னவோ
பணம் அனுப்பியிருந்தார்.
தன்னை பார்க்க வராது பணம் எதற்கு என பணத்தை எனது தயார் திருப்பி அனுப்பிவிட்டார்.
 
எனது வீட்டின் திண்ணையில் அவரதும் அவரது மனைவியாரும்
ஆரம்பத்தில் மலேசியாவில் தனித்தனியே எடுத்த படங்கள் இரண்டு தொங்கிக்கொண்டு இருந்தன.
பணத்தை அம்மா திருப்பி அனுப்பியதை அறிந்த நான்
படங்கள் மட்டும் ஏன் இங்கு வாழ்நாள் பூராகவும் இருக்கணும் என சொல்லியபடி
சுவரில் ஏறி படத்தை களட்டிய போது மாமாவின் படப்பிரேமலிருந்த கண்ணாடி களண்டு
எனது காலில் குத்தியபடி நின்றதால் ஒரு மாதம் படுத்த படுக்கையானேன்.
(அந்த  காயத்தின் தழும்பு  இப்பொழுதும்  எனது  காலில்  உண்டு)
 
அப்பொழுதே மனதில் ஒரு நெருடல்.
மாமாவின் அன்பு உண்மை ஆனால் அவர் ஏதும் சிக்கலில் உள்ளாரா என்று?
 
அதன் பின் நானும் புலம் பெயர்ந்து
இந்த புலம் பெயர் வாழ்வை நானும் சுமக்கத்தொடங்கிபோது
அவர் ஏன் ஊருக்கு வரமுடியவில்லை என்ற உண்மை அனுபவமாய் உறைத்தது.
 
தேடத்தொடங்கினேன்.
நான் மட்டுமல்ல எனது குடும்பமே தேடியது.
அவரது பெயர் மட்டுமே தெரியும்.
எவர் மலேசியாவிலிருந்து
தொலைபேசியிலோ இணையத்திலோ முகநூலிலோ பேசினால் மாமாவை பற்றி விசாரிப்பது வழமை.
ஆனால் எனது தாயார் ஐந்தாவது தலைமுறையை பார்த்தபின்பும் இதுவரை எந்த தொடர்புமில்லை.
இனிப்பார்ப்போமா???
 
நேற்று ஊரிலிருந்து ஒரு அழைப்பு வந்தது.
எம்மை தேடி அவரது மகள் ஊருக்கு போயிருக்கிறார்.
எனது தாத்தாவின் (அம்மாவின் அப்பா) பெயரை மட்டுமே சொல்லி ஊர் முழுவதும் தேடியிருக்கிறார்.
அவரது பெயருடைய வேறு ஆட்களையும் சந்தித்து
இறுதியில் எம்மை கண்டுபிடித்து
அவரது தகப்பனாரின் இரு சகோதரர்களது புதல்விகளின் வீட்டை அடைந்திருக்கிறார்.
3 மாமாக்களும் இறைவனடி சேர்ந்திருப்பது வலித்தாலும் இரத்தம் தேடும். தேடி வரும்.
 
வந்திருக்கிறது. .
அடுத்த அடுத்த தலைமுறைகள் இனி ஒட்டிக்கொள்ளும்.
இனி அது தொடரும்....
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 125
 
முத்தையா முரளிதரனின் அரசியல் பேச்சு
 
முத்தையா முரளிதரன் போன்ற கொழும்பை அண்டி வாழ்பவர்கள் பேசுவது போன்று இவரது பேச்சு இருந்தாலும்
 
இந்தியாவில் ஏன் தமிழகத்தில் கூட
இன்றும் இங்கிருந்து அங்கே போனவர்கள் எதுக்கு தனிநாடு கேட்கணும் என்ற கருத்து இருக்கிறது.
 
அத்துடன் இந்திய ராணுவம் யாழ்ப்பாணத்தை பார்த்து
உங்களுக்கு தனி மலசலகூடம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கிறதே
எதுக்கு தனிநாடு கேட்கிறீர்கள்?? என கேட்டதையும் சேர்த்து பார்த்தால்....?
 
முத்தையா முரளிதரன் பாவம் அப்பாவி என்பதும்
எமது சொந்த வீட்டையும் அவர் இருக்கும் வாடகை வீட்டையும் புரிந்து கொள்ள
அவரால் எப்பொழுதுமே முடியாது என்பதும் தெரியவரும்.
 
முதலில் சுத்தாமல் பந்தை போடப்பழகட்டும்
அதற்கு பின்னர் தமிழர்களின் வீடு பற்றி வகுப்புத்தொடங்கலாம்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 126
 
கார்த்திகை மாதமும் தமிழரும்
 
கார்த்திகை மாதம் என்பது ஈழத்தமிழரின் புனித மாதம்.
இதில் புனித வாரம் தானே? புனித 3 நாட்கள் தானே? மாவீரர் நாள் ஒரு நாள் தானே?
என்ற வாதப்பிரதிவாதங்கள் இருக்கின்றன.
சரி மாதம் வாரம் நாட்கள் என எதையாவது எவராவது முடிந்தவர்கள் செய்யட்டுமே.
இந்த நாட்களில் ஒன்று சேர்ந்து நல்லவை நற்பணிகள் செய்யும் போது எது விரும்பப்படும்? மாதம் தானே?
 
எனவே செய்பவர்கள் எதையாவது செய்யத்துடிப்பவர்கள் செய்யட்டுமே.
மற்றவர் அல்லது முடியாதவர்கள் ஓரமாக ஒதுங்கிக்கொள்வோம்.
 
அதேநேரம் செய்பவர்களும்
மற்றவரால் முடியாமையை நினைத்து கட்டளையிடாதிருப்போம்.
 
ஒருமுறை பொருண்மிய மேண்பாட்டுக்கழகம் சார்ந்த
கலந்துரையாடல் ஒன்றுக்காக
தாயகத்திலிருந்து வந்திருந்த அதன் தலைவர் மற்றும் ஆலோசகர்களுடன்
எனது காரில் சென்று கொண்டிருந்தோம்.
எனது காரில் தனியே தாயகப்பாடல் மட்டுமே இருக்கும் ஒலிக்கும்.
 
அப்போது தெரிந்து கொள்ளக்கேட்கின்றேன்
போராளிகள் எப்பொழுதும் தாயகப்பாடலைத்தான் கேட்கவேண்டும் என்று
ஏதாவது கட்டுப்பாடு இருக்கா என பொருண்மிய மேண்பாட்டுத்தலைவரை யோய் மகேஸ்வரன் (அவுசிலிருந்து வந்திருந்தார்) கேட்டார்.
அப்படியெதும் இல்லையண்ணா என்றார் அவர்.
போராளிகளுக்கே இல்லாதபோது நாம் எதற்கு? என்றபடி
வேறு பாடல்கள் போடமுடியுமா குகதாசன் அண்ணா என்றார்.
எனது காரில் வேறு பாடல் இருக்காது என்றேன் நான்.
 
செய்பவர்கள் செய்யட்டும்
இடைஞ்சல்களும் வேண்டாம்
கட்டளைகளும் வேண்டாம்.
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 127
 
மாவீரர்கள் வாரம் ஆரம்பமாகி இருக்கிறது
 
காந்தி கனவு கண்ட பூமியை
நீங்களே படைத்தீர்கள்
முதலும் இறுதியுமாக
அதை நீங்களே நிர்வகித்தீர்கள்
நீங்கள் இருக்கும் மட்டுமே
அது நிஐமாகியது
 
அந்த பூமியை 2003 இல் நான் தரிசித்தேன்
 
 
மாவீரர்கள் வாரம் ஆரம்பமாகி இருக்கிறது
 
அவர்களை நெஞ்சிலிருத்துங்கள்
அவர்களது வாழ்வை
கனவை முடிந்தவரை கடத்துங்கள்
ஆடம்பரங்களை தவிருங்கள்
 
முடிந்தவரை உதவுங்கள்
உதவ முயல்பவரை ஊக்கப்படுத்துங்கள்
அதுவும் முடியாதெனில்
அமைதி காப்பீர்
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 128
 
மாவீரர்கள் வாரம் ஆரம்பமாகி இருக்கிறது
 
தலைவர் விரல்
காட்டிய வழியில் சென்றீர்
காலம் நேரம் காத்திருந்து
தமிழருக்காய் வெடித்தீர்
தடை தகர்த்தீர்
 
தலைவர் கவனம்
விடைபெறும் போதும்
நீங்கள் சொன்னது
 
எல்லாவற்றையும் தொலைத்தோம்
கையாகாதநிலையில்
கையேந்தி நிற்கின்றோம்
வானத்தை நோக்கி வணங்கியபடி.....
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பட்டது + படிச்சது + பிடித்தது - 129

இன்று மாவீரர் நாள்

இது கொண்டாட்ட நிகழ்வோ அல்லது துயர நாளோ அல்ல.

அஞ்சலி செலுத்தி அவரை ஒரு நிமிடமேனும் தரிசுக்கும் நாள்.

எம்முள் கேள்விகளையும் விடைகளையும் காணும் நாள்.

ஏன் உயிர் துறந்தார்?
என்னன்ன வயசில் சாகத்துணிந்தார்??
எவருக்காக இந்த தியாகம்???
இவரை சாகவிட்டவர்கள் யார்???

விதைத்தோம் என்றால் அறுவடையார் செய்வது???

தாயகம் உட்பட
இந்த முறை மாவீரர் நாள் சொல்லி நிற்கும் செய்தி கனமானது
உறுதியானது

நாங்கள் ஒன்றையும் மறக்கவில்லை
எதையும் மன்னிக்கவுமில்லை
மன்னிக்கப்போவதுமில்லை......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 130
 
மாவீரர் நாள் ஒருங்கிணைப்பும் செயற்பாட்டாளர்களின் சுமைகளும்
 
மாவீரர் நாள் சம்பந்தமான நிகழ்ச்சித்தயாரிப்புக்களும்
ஒழுங்குகளும் மனித நேய செயற்பாட்டாளர்களின் பல மாத கால உழைப்பின் பெறுபேறாகும்.
இதை பலரும் உணர்வதில்லை.
 
ஏதோ மாவீரர் நாளன்று அங்கு சென்று பாரத்துவிட்டு
வெளியில் வந்து பலவாறும் விமர்சனம் வைக்கும் போது
மிகுந்த ஆத்திரம் வரும் எனக்கு.
ஏனெனில் அந்த செயற்பாட்டாளர்களுடன் அதிகம் இருந்தவன் நான்.
 
மாவீரர் நாள் நிகழ்ச்சிகள் எல்லாம் நிறைவடைந்து
மண்டபத்தை மீளவும் முறைப்படி திருப்பி ஒப்படைக்கும்படியாக ஒழுங்கு படுத்தி
வாடகைக்கு, கடனுக்கு எடுத்த பாத்திரங்களிலிருந்து பதாதைகள்வரை
மீண்டும் கொண்டு போய் உரிய இடங்களில் சேர்த்து
இறுதியாக ஒலி அமைப்புக்கு உதவும் அருள் அண்ணையை கொண்டு போய் அவரது வீட்டில் விடும் போது
அடுத்த நாள் விடிந்திருக்கும். அப்படியே அடுத்த நாள் வேலைக்கு போன நாட்களுமுண்டு.
 
இதையெல்லாம் தாண்டி குறைகள் இருப்பின்
சம்பந்தப்பட்டவர்களின் காதில் நேரடியாக சொல்வதே சரியான ஒழுங்காகும்
 
அதைத்தான் உண்மையில் சரியான தேவையான ஆலோசனைகளை வழங்குபவர்கள் செய்யணும்.
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 132
 
பிரான்சில்போராட்டக்காரர்களின் (Gilets Jaunes) பல கோரிக்கைகளும் வலுப்பெற்று ஏற்கப்பட்டு வருகிறது
 
சாதாரணமாக இணைய மூலம் ஒன்றான மக்கள் போராட்டம் எழுச்சி கண்டு
அரசையும் அதன் பாதுகாப்புத்துறையையும் ஆட்டம் காண வைத்து
ஐனாதிபதி மக்றோனுக்கு பெரும் பின்னடைவையும் கொடுத்து நிற்கிறது
 
பிரான்சின் கடந்த சில வருட வரலாற்றில்
மக்களின் தீர்ப்புக்களை (தேர்தலில்) ஆட்சிக்கு வருவோர் உணராத நிலை இருந்து வந்தது.
ஒவ்வொரு முறையும் மக்கள் மாறி மாறி அரசை அமைத்த போதும்
இன ரீதியாக சிந்திக்கும் சக்திகளை சரியாக கையாண்டு கட்டுப்படுத்தி வந்தபோதும்
அதை ஆட்சிக்கு வருபவர்கள் தமக்கான வெற்றி என்றும்
மக்களின் தீர்ப்பை சரியாக கணிப்பிடாது இருந்து வந்திருப்பதையே காண்கின்றோம்.
 
அதன் தாக்கம் உடைத்துக்கொண்டு புறப்பட்டு எழுச்சியாக பிரகாசித்து நிற்கிறது.
 
சாதாரண ஒன்று கூடல்களாக ஆரம்பித்து
எதிர்ப்பாக வலுத்து அதுவும் கவனிக்கப்படாததால்
இன்று வன்முறையாக பொருளாதார இலக்குகளை முடக்குவதாக வலுப்பெற்று நிற்கும்போது தான்
அரசும் அதன் நிர்வாகமும் முழி பிதிங்கி நிற்கிறது.
 
இந்த மக்களின் எழுச்சிகளால் கிடைக்கப்பெற்ற
அத்தனை வசதிகள் சலுகைகள் சுதந்திரங்கள் பாதுகாப்பு அத்தனையையும் அனுபவித்தபடி
எம்மவர் சிலர் வீதிகளில் இறங்கி பிச்சை எடுக்கிறார்கள் என
அம்மக்களை வசை பாடி தம்மை அறிவாளிகள் என முகநூலில் நிறுவ முயல்வதையும் காணக்கூடியதாக உள்ளது
 
அது சரி தன் இனத்தின் எழுச்சியையே கேலி செய்து ஒதுங்கி நின்றவர்களுக்கு இது.....????
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 133
 
மக்களால் ஒரு தலைவன் இனம் காணப்படுதல்
 
ஒரு தலைவன் மக்களால் இனம் காணப்படுவதற்கு அல்லது ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு
அம்மக்களின் கோரிக்கைகள் அல்லது சிக்கல்களுக்கு
முகம் கொடுத்து நல்ல தீர்வு தரும் சந்தர்ப்பங்கள் வரவேண்டும்.
அப்படியான சந்தர்ப்பங்களில் சரியான தீர்வை வைத்து
அல்லது அம்மக்களின் சிக்கல்களை களைந்து வழி அமைப்பவனே தலைவராக வரலாறுகளில் பதியப்படுவர்.
 
அந்தவகையிலே பிரான்சில் ஏற்பட்ட எழுச்சியை தொடர்ந்து
அம்மக்களின் அபிலாசைகளை புரிந்து கொண்டு உள் வாங்கி
தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள
பிரெஞ்சு ஐனாதிபதி மக்கிறோனுக்கு நல்லதொரு சந்தர்ப்பம் வாய்த்துள்ளது.
அதை அவர் சரியாக பயன்படுத்திக்கொண்டு சிறந்த தலைவராக தன்னை நிலைநிறுத்திக்கொள்வாரா???
 
 
இன்று இரவு 20.00 மணிக்கு அவரது குரலில் தெரியும்???
Link to comment
Share on other sites

  • 5 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 134
 
நோர்வே பிரதி மேயரின் இலங்கைப்பயணமும் ஈழத்தமிழரும்...
 
நோர்வே பிரதி மேயரான ஈழப்பெண்
இலங்கை சென்றார்
சிறீலங்கா ஐனாதிபதியை சந்தித்தார்
யாழ்ப்பாணம் சென்றார்
தமிழ்ப்பெண்களுடன் கலந்துரையாடினார்
கொழும்பில் ஒரு பத்திரிகைக்கு பேட்டியளித்தார்...
 
இதைப்பற்றி
அப்பெண்ணின் பூர்வீகம்
சுய பழக்கவழக்கங்கள்
அவரது தனிப்பட்ட வாழ்வு சார்ந்த புகைப்படங்கள் என
பலவாறும் ஈழத்தமிழரால் எழுதப்பட்டு வருகிறது
 
இதிலே தற்பொழுதும் வெற்றி யாருக்கு என்று தூரநோக்கில் பார்த்தால்
அது அமைதியாக காய் நகர்த்தும் சிங்களவருக்கே..
 
இப்படித்தான்
புலத்தில் அரசியல் செய்யும்
அல்லது அரச தனியார் நிறுவனங்களில் முக்கிய பதவிகளில் பணி புரியும்
பலரும் எம்மை தேடி வந்தபோது
அவர்களின் ஒவ்வொரு செயலையும் ஒவ்வொரு சொல்லையும் பிடித்து தூக்கி வைத்து நையப்புடைத்தோம்.
முடிவு ஒன்றில் அவர்கள் ஒதுங்கி விட்டார்கள்
அல்லது தமது புல அரசியலை மட்டும் செய்கிறார்கள்
அத்தோடு சிங்களத்தை வெளியில் அம்பலப்படுத்துவதை நிறுத்திவிட்டார்கள்.
இது தான் சிங்களத்தின் வெற்றி.
நாமாகவே அவர்களுக்கு அவற்றை செய்து கொடுக்கின்றோம்.
 
புலத்துக்கும் தாயகத்துக்குமான இடைவெளி என்பது பலவகைப்பட்டது.
அதில் எது பெரிது எது சரி என்பதை வகைப்படுத்த முடியாது.
தலைமுறை இடைவெளியைப்போல
இதையும் ஏற்றுக்கொண்டு
எமக்குத்தேவையானவற்றுக்கு எம்மவரை எவ்வாறு பயன்படுத்தி
மண்ணையும் மக்களையும் காப்பாற்றி வைத்திருக்கப்போகின்றோம் என்பதே தற்போதைய நிலை.
 
தேசியத்தலைவர்
புலத்தின் அடுத்த தலைமுறையை அழைத்து பேசி ஊக்கப்படுத்தினார்
அவர்களிடம் தமிழருக்கான செயற்பாடுகளை எதிர்பார்த்தார்.
ஆனால் நாம் இன்று அவர் வளர்த்து விட்டவற்றைக்கூட .....????
 
 
ஒன்று மட்டும்தெரிகிறது எமக்கு வேறு எதிரி தேவையே இல்லை......
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பட்டது + படிச்சது + பிடித்தது - 135

ஊர் இரண்டு பட்டால்.....???

நேற்று யாழ்ப்பாணத்தில் நடந்த கூட்டம் உட்பட

தாயக அரசியல்வாதிகளின் நிலைப்பாடுகள் சார்ந்தும்

அதற்கான மாற்றீடுகள் அல்லது புடுங்குப்பாடுகள் சார்ந்தும் பேசவேண்டியுள்ளது.

 

கூட்டமைப்பைக்கூட விட்டுவிடலாம்

தமிழரசுக்கட்சிக்குள்ளேயே இரண்டு நிலைப்பாடு தெரிவது வருந்தத்தக்கதும்

கண்டிக்கப்படவேண்டியதுமாகும்.

உண்மையில் சுமேந்திரன்

ஐனநாயகவழியில் நம்பிக்கை வைத்து

சிங்களத்திடம் எதையாவது பெறமுடியும் என முயற்சிப்பாராயின்

அதற்கு நாம் வழிவிடவேண்டும்.

ஏனெனில் அவரது கூற்றை அல்லது நடத்தைகளை நம்புபவர்களும்

அவருக்கு வாக்களித்த மக்களும் எம்முக்குள் இருக்கிறார்கள்.
போர்க்கற்ற விசாரணைக்கு அவர் புலிகளை பலியிடுகின்றார் என்றால்

அவருக்கான பொறுப்பும் பதில் கூறும் கடப்பாடும் அதிகரிக்குமே தவிர

அவர் அதிலிருந்து ஒழிந்தோட முடியாது

அதேநேரம் புலிகளது தொடர்ச்சியாக

ஆயுத மௌனத்துக்கு பின்னர்

தமிழரின் அழிவுகளுக்கான சர்வதேச ஆதரவை வைத்துக்கொண்டு

அதே கொள்கைகளுடன் பயணிப்போர் தத்தமது கடமைகளை தொடர்ந்து செய்யணும்.

அதற்கான மக்கள் ஆதரவை பெருக்கணும்

இதில் இரண்டு பகுதியுமே மற்றவருக்கு இடைஞ்சல் என வாழாதிருப்பதும்

அல்லது ஆளையாள் இடைஞ்சல் செய்வதும்

உண்மையில் சிங்களத்துக்கே நேரத்தை மிச்சப்படுத்தும்.

அதைவிட சர்வதேசம் தூங்க வழி அமைத்து

ஆறிய கஞ்சியாகி ஆபத்து மட்டுமே மிஞ்சும்.

L’image contient peut-être : texte et plein air
 

Commenter

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 136
 
ஒரு தகப்பனின் அதிகாரம் செல்லுபடியற்றதாகும் நிலை
 
 
இப்பொழுதெல்லாம் கட்டளைகளும் கண்டிப்பும் என்னிடமிருந்தல்ல
எனது பிள்ளைகளிடமிருந்து வருகிறது
 
சாப்பாட்டில் கண் வைக்கிறார்கள்
போதும் என்ற நிலை எனது வயிற்றிலிருந்து அல்ல
என் பிள்ளையிடமிருந்து வருகிறது
 
இனிப்புக்குத்தடை
குளிர்பானம் தடை
ஏன் இறைச்சியிலேயே பலவகை தடை
 
வீட்டு வாசலிலே 3 கார்கள் நின்று
என்னைக்கொண்டு போங்களேன் என என்னை அழைக்க
நடந்து போங்கள் என்ற கட்டளை
 
லீவு நாளில் கொஞ்சம் அதிகம் தூங்கும் எனக்கு
ஓடலாம் வாங்கோ என்று மணி அடிக்கிறார்கள்
 
எவ்வளவு மீற்றர் உயரமோ
அதற்கேற்ப நிறை
மற்றதெல்லாம் கரைக்கணுமாம்
 
இதுவரை எந்த வருத்தமோ
எந்த மருந்துமோ அற்ற எனக்கே இப்படியென்றால்...??
 
அவர்களுக்கு அவர்களது அப்பா கன காலம் வேணுமாம்
 
நமக்கு....???
 
எல்லா தகப்பனுக்கும் இந்த நிலை வந்து தான் போகும்????
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 137
 
அரசமைப்பு நிறைவேறாவிட்டால் எதிரானவர்கள் தலைதூக்கிவிடுவர் - சுமந்திரன்
 
கீரைக்கடைக்கும் எதிர்க்கடை வேண்டுமென்று அடிக்கடி சொல்லி வருகின்றோம்.
இதை எதிர் பார்த்து;தான் அதனை சொல்லி வருகின்றோம்.
 
கயேந்திரகுமார் உட்பட சிலரின் செயற்பாடுகளும்
அவர்களது கொள்கைகளும்
இதற்காக பாவிக்கப்படணும் என்பது தான் வேண்டுகோள்.
 
இதை சரியாக பாவித்து
சிங்களத்திடமிருந்து எதையாவது பெற முயல்வது
சாணக்கியமான தந்திரோபாயமே.
 
தமிழர்களது தலைமை
சரியாக சிந்திக்க பயணிக்க தொடங்குகிறதா??
 
பார்க்கலாம்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:
பட்டது + படிச்சது + பிடித்தது - 137
 
அரசமைப்பு நிறைவேறாவிட்டால் எதிரானவர்கள் தலைதூக்கிவிடுவர் - சுமந்திரன்
 
கீரைக்கடைக்கும் எதிர்க்கடை வேண்டுமென்று அடிக்கடி சொல்லி வருகின்றோம்.
இதை எதிர் பார்த்து;தான் அதனை சொல்லி வருகின்றோம்.
 
கயேந்திரகுமார் உட்பட சிலரின் செயற்பாடுகளும்
அவர்களது கொள்கைகளும்
இதற்காக பாவிக்கப்படணும் என்பது தான் வேண்டுகோள்.
 
இதை சரியாக பாவித்து
சிங்களத்திடமிருந்து எதையாவது பெற முயல்வது
சாணக்கியமான தந்திரோபாயமே.
 
தமிழர்களது தலைமை
சரியாக சிந்திக்க பயணிக்க தொடங்குகிறதா??
 
பார்க்கலாம்

இதைத்தான் பல இடங்களில் மறைமுகமாக சொன்னோம். அதற்காக அவர்கள் எமக்கு தந்த பட்டமோ நல்ல பட்டம்.
உங்கள் கருத்திற்கு நன்றி விசுகர்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பட்டது + படிச்சது + பிடித்தது - 138

புலிகள்  மீதான  கை விரல் நீட்டுதல்கள்

 

ஊரில் சொல்வார்கள்

சுட்டு  விரலை  நீ மற்றவரை  நோக்கி நீட்டுகையில்

உன் மற்ற 4 விரல்களும் உன்னை நோக்கியபடி

நாணி  நிற்பதை மறக்காதே என்று

புலிகளை நோக்கி கை  விரல் நீட்டுவதற்கு முன்

நம்மை கொஞ்சம் சுய  பரிசீலனை  செய்யணும் ராசாக்கள்

அதுக்கு ஒரு  தகுதிவேண்டும் காண்

அப்புறம் இப்படித்தான்

அதுக்கும் ஊரில் சொல்வார்கள்

ஆப்பிழுத்த  குரங்கின் நிலை  என்று

இனி

நாங்க  வெளியிட  இல்லை

பேசவே  இல்லை

ஏன் அந்தப்பக்கம்போகவே இல்லை  என்று  சொல்வதைத்தவிர..

 

ஓரமா  போய் விளையாடுங்க...

நிலம்  இப்பவும் சூடாகத்தானிருக்கு

எப்பவும்  உங்களை  விழுங்கலாம்...

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பட்டது + படிச்சது + பிடித்தது - 139

பிடிக்கலை என்றால் பிரிந்து போங்கடா - மனித வாழ்வு எவ்வளவு இனிமையானது

https://www.facebook.com/ModijiSenai/videos/406611253432005/?v=406611253432005

 

 

காஷ்மீரில் தனியாய் சிக்கும் இராணுவ வீரரின் கதியை பாருங்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, விசுகு said:

பிடிக்கலை என்றால் பிரிந்து போங்கடா - மனித வாழ்வு எவ்வளவு இனிமையானது

 

பிரிந்து போக தடுப்பது யார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, ஈழப்பிரியன் said:

பிரிந்து போக தடுப்பது யார்?

தடுப்பது  யார்  என்பது  தெரியுமண்ணா

மிகவும்  மனம்  நொந்து  வந்த  வரிகள்  அவை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

பட்டது + படிச்சது + பிடித்தது - 139

பிடிக்கலை என்றால் பிரிந்து போங்கடா - மனித வாழ்வு எவ்வளவு இனிமையானது

https://www.facebook.com/ModijiSenai/videos/406611253432005/?v=406611253432005

 

 

காஷ்மீரில் தனியாய் சிக்கும் இராணுவ வீரரின் கதியை பாருங்கள்...

காஷ்மீரில் காவல்துறையின் அட்டூழியங்கள்.

DzhF8pbV4AAQzxg.jpg

DzhF8VqUcAAP2Hv.jpg

 

 

 DzhF87JU8AERw8V.jpg  

DzhF9NhVsAABAjE.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 140
 
ஈழத்தமிழரும் இந்தியா பாகிஸ்தான் போரும்...
 
ஈழத்தமிழரின் அழிவில் பாகிஸ்தானின் பங்கென்பது ஆயுத விற்பனை மற்றும் இராணுவ உதவிகள் மட்டுமே. அவை பற்றி பாகிஸ்தான் எந்த ரகசியமோ ஒழிவு மறைவோ செய்தது கிடையாது.
 
ஆனால் இந்தியா செய்தது அத்தனையும் துரோகம் வேசம் நயவஞ்சகம் முதுகில் குத்துதல் மட்டும் தான். உலகிலேயே அதிக கொடுமை என்னவெனில் நண்பனாக அல்லது அதற்கும் மேலாக தாயாக நம்ப வைத்து கழுத்தறுப்பது தான்.
அதை இந்தியா எமக்குச்செய்தது.
 
பாகிஸ்தான் ஒரு போதும் தான் ஏற்றுக்கொண்ட ஒப்பந்தத்தில் கை எழுத்து வை என்று எம்மை மிரட்டியதில்லை. ஆனால் இந்தியா...???
 
அதனால் தான் இந்திரா காந்தி இறந்தபோது MGR மறைந்தபோது பல வாரங்களாக கறுப்பு நாட்களாக சுமந்த ஈழம் அதன் பின் எவருக்கும் துக்க நாளை பற்றி அலட்டிக்கவே இல்லை.
 
பாகிஸ்தானா இந்தியாவா என்றால் பரம எதிரி இந்தியா தான். ஏனெனில் எதிரியை விட துரோகியே மிக மிக ஆபத்தானவன்.
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • பாஜகவோட கூட்டணிவைச்ச வாசனுக்கும் தினகரனுக்கும் மட்டும் அவர் கேட்ட சின்னத்தைக் கொடுத்தது என்ன மாதிரியான தேர்ததல் விதிமுறை?பாஜக இந்த முறை 3 வது இடம் பிடிக்கணும் அதுக்காககத்தான் இந்த குழறுபடிகள்.ஆனால் அது நடக்காது. தேர்தலிலே நிற்காத கமலுக்கு டோர்ச்லைற் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
    • இந்திய‌ அள‌வில் ஏவிம் மிசினுக்கு எதிர்ப்பு கூடுதே அண்ணா அது எத‌ற்காக‌.................ப‌ல‌ர் ஊட‌க‌ங்ளில் நேர‌டியா சொல்லுகின‌ம் ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்ய‌லாம் என்று ஏன் அவ‌ர்க‌ள் மீது தேர்த‌ல் ஆனைய‌ம் வ‌ழ‌க்கு போட‌ வில்லை................இப்ப‌டி கேட்க்க‌ ப‌ல‌ இருக்கு...............யாழிலே வ‌ய‌தில் மூத்த‌வ‌ர்க‌ள் எழுதி விட்டின‌ம் இந்தியாவில் தேர்த‌ல் என்ப‌து க‌ண்துடைப்பு நாட‌க‌ம் என்று அப்ப‌ புரிய‌ வில்லை இப்ப புரியுது...............இப்ப இருக்கும் தேர்த‌ல் ஆனைய‌ம் கிடையாது மோடியின் ஆனைய‌ம்..............ப‌ல‌ருக்கு ப‌ல‌ ச‌ந்தேக‌ம் வ‌ந்து விட்ட‌து த‌மிழ் நாட்டு தேர்த‌ல் ஆனைய‌ம் மேல்..........................
    • வைகோ தனது மகனை அரசியிலில் முன்னிறுத்துவதற்காக நீண்டகாலம் வைகோவிற்கு விசுவாசமாக இருந்த கணேசமூர்த்த்திக்கு  தேர்தலில் இடங் கொடுக்கவில்லை.. திமுக ஒரு இடம்தான் கொடுக்குமென்றால் அதிமுகவுடன் கூட்டணி அமைந்திருந்தால் அவர்கள் கட்டாயம் 2 இடம் கொடுத்திருப்பார்கள்.கூட்டணிமாறுவது வைகோவுக்கு புதிதில்லை.வைகோவைக் திமுகவில் இருந்து வெளியேற்றியதற்காக எத்தனையோ போர் தீக்குளித்தார்கள். வாரிசு அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கியவர் அதே வாரிசு அரசியலைக் கையில் எடுத்தது மட்டுமல்ல யாரை எதிர்த்து கட்சி தொடங்கினாரோ அவரின் காலடியில் கிடக்கிறார். கணேசகமூர்த்தியின் சாவுக்கு வைகோவே பொறுப்பு.
    • தமிழ் தேசியத்தை தனது கட்சியின் கொள்கையாக கொண்டுள்ள சீமான் பிள்ளைகளை தமிழ்வழி கல்வியில் சேர்க்காதது தவறான முன்னுதாரணம்.. படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில் என்று வாழும் திராவிடகட்சிகளுக்கும் தனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை தனது சில அண்மைக்கால நடவடிக்கைகள் மூலம் சீமான் வெளிப்படித்தி வருகிறார்.. அவரை நம்பி பின்தொடரும் பல லட்சம் இளைஞர்கள் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் இருக்கும் என்று வந்தவர்கள்.. இலட்சிய பிடிப்புள்ளவர்கள்.. இப்படியான செயல்களை அவர்களை வெறுப்பேற்றும்.. நமக்கெதுக்கு வம்பு.. நம்மூர் அரசியலே நாறிக்கிடக்கு.. தமிழக உறவுகள் தம் அரசியலை பார்த்துக்கொள்வார்கள்..
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.