Jump to content

பட்டது + படிச்சது + பிடித்தது - விசுகு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பட்டது + படிச்சது + பிடித்தது - 69

மொழி கடந்து.......

தேரே மேரே பீச் மேன்...கேசா ஹையே பந்தன்...அஞ்சானா...
மேனே நஹி ஜானா...துமே நஹி ஜானா...

இந்தப்பாடலை எனது பருவ காலத்தில் முழுமையாக பாடமாக்கி பாட முடிந்தது

கானமும் காட்சியும்அமைந்து விட்டுவிட்டால் மற்றதெல்லாம்......???

(நெடுக சீரியசா பேசப்படாது காண்)

 

 

Link to comment
Share on other sites

  • Replies 339
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் விசுகர்!

ஒரு காலத்தில் ஈழத்தமிழன் கிந்தியையும் இந்தியாவையும் நேசித்தது போல் உலகில் யாருமே நேசித்திருக்கமாட்டார்கள்.

சிங்களவர் கூட  இந்தியாவை   இவ்வளவு நேசித்ததில்லை.

எமக்கெல்லாம் அருவரியிலிருந்தே காந்தித்தாத்தா,நேரு மாமா என்று பால்சோறு போல் ஊட்டி ஊட்டி சொல்லித்தந்தார்கள்...

சிங்கள பள்ளிகளில் அரசமர வருகையை தவிர  இந்தியாவைப்பற்றி ஏதாவது சொல்லிக்கொடுப்பார்களா? ஆனால் நாம் இந்தியாவை உலகின் பிறப்பிடமாக பார்த்தோம். அயல் நாடாக பார்க்காமல் பக்கத்து வீடாக பார்த்தோம்.

தேனீர்கடைகளில் கிந்தி பாடல்கள் அலறும்.

அந்த இசையுடன்  வடையும்  தேனீரும் சேர அமிர்த மழை பொழிவது போல் ஒரு பிரமையுடன் இருந்தோம்.

சிங்கள திரைப்படங்களை விட கிந்தி படங்களை விரும்பி பார்த்தோம். கிந்தி பாடல்களை கிரமமாக கேட்டோம் ரசித்தோம். 

ஆனால் இன்று?????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பட்டது + படிச்சது + பிடித்தது - 70

 

ஐ நா சபை அமர்வுகள் நிறுத்தம்

இன்று மனித உரிமை பேரவையின் கூட்டத்தாெடர்

ஐநாவில் நடந்து வரும் நிலையில்

மிக முக்கிய விவாதங்கள் நடைபெறுவதற்காக

பல நாடுகளில் இருந்தும் பிரதிநிதிகள் அங்கு குவிந்துள்ள நிலையில்

இன்று திடீரென அமர்வுகள் நிறுத்தப்பட்டுள்ளன.

காரணம் ஐநா பணியாளர்கள் சம்பள உயர்வு காேரி

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

 

இவர்கள் உலகப்பிரச்சினைக்கும்

எமது பாதுகாப்புக்கும் தீர்வு தருவார்கள் என

நாம் தற்பொழுதும் நம்புகின்றோம். நம்புவோம்1f625.png?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 71
 
எம்மவர்கள் தெரிந்து கொள்ளவேண்டியது
 
பிரான்ஸ் முன்னாள் அதிபர் சர்கோசியை
கைது செய்த போலீசார் நேற்று அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
 
இது செய்தி
 
இதில் வல்லரசாகும் கனவுடனுள்ள இந்தியாவும்
உலகமே வெட்கித்தலைகுனியும் கொலை கொள்ளை ஊழல் மற்றும் காட்டுமிராண்டித்தனங்களை செய்து விட்டு
ஐனநாயகம் பேசும் சிறீலங்கா போன்ற நாடுகள் கவனிக்கவேண்டியது பல உண்டு.
 
சார்கோசியின் வழக்கு சார்ந்தோ
அவரது கைது சார்ந்து
பிரெஞ்சு அரசோ அல்லது எதிரணிகளோ
ஏன் சார்கோசியின் கட்சி கூட வாய் திறக்கவில்லை.
ஒருத்தரும் எவரையும் குற்றம் சாட்டவில்லை.
சட்டம் மட்டுமே தனது வேலையை செய்கிறது.
 
இதுவே
இந்தியாவிலோ சிறீலங்காவிலோ
முன்நாள் ஐனாதிபதிக்கு எதிராக நடந்தால்??
நடக்குமா என்ன???
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 72
 
என் தலைமுறையில் நடந்தது
தற்போதைய தலைமுறைக்கும் வருகுதா??
 
80 களின் இறுதியில்
ஒரு காலத்தில் தனது தொகுதியான காங்கேசன்துறையில்
அதிகூடிய வாக்கு வித்தியாசத்தில் வென்ற அமிர்தலிங்கம் அவர்கள்
தனது தொகுதியில் நின்றால் அன்றைய நிலையில் தோற்றுவிடுவேன் என அஞ்சி
வடபகுதியிலேயே கூட தேர்தலில் அந்த மக்களை சந்திக்கமுடியாமல்
கிழக்கில் நின்று அந்த மக்களாலும் நிராகரிக்கப்பட்ட நிலையில்
தமிழ் மக்கள் நினைத்தோம் மக்களின் தீர்ப்புக்கு மதிப்பளித்து
அரசியல் வாழ்விலிருந்து அமிர் அவர்கள் ஒதுங்கி விடுவார் என.
 
ஆனால் பதவி ஆசை காரணமாக
நிஐமண முறையை பயன்படுத்தி அவர் மீண்டும் பாராளுமன்றம் புகுந்தபோது
இவர் ஆபத்தானவர்
முற்றுமுழுதாக மக்களிலிருந்து அகற்றப்படணும் என்ற முடிவுக்கு  தமிழ் மக்கள்  வந்தனர்.
 
தற்போதைய உள்ளூராட்சி தேர்தலின் பின்னர்
மக்கள் ஆணையை கேலி செய்யும் முகமாக நடக்கும்
விலை பேசுதல்கள் குழிபறிப்புக்கள் மூலம்
பதவியையும் அதிகாரத்தையும் தங்கவைத்துக்கொள்ள
நடக்கும் முயற்ச்சிகளை பார்க்கும் போது....??
மீண்டும் மீண்டும்????
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 73
 
துரத்துதல் = கரம் பிடித்தல்
 
மற்றய இடங்களைப்பொறுத்தவரை விபரம் தெரியாது.
எனவே அது பற்றி பேசாமல் விடுவோம்.
எனது ஊரில் உள்ளுராட்சி தேர்தலில் நின்ற
கூட்டமைப்பின் அனைத்துக்கட்சி வேட்பாளர்களது ஒரே கனவு
அல்லது குறி ஈபிடிபியை எமது பகுதியிலிருந்து துரத்துதல் என்பதாகத்தான் இருந்தது.
 
இன்றுவரும் தகவல்களின் படி
தாயகத்தின் மற்றய பகுதிகளைப்போல
எமது பகுதியிலும் ஈபிடிபியுடன் கரம் கோர்த்தே முடிவுகள் எட்டப்பட்டுள்ளன
பதவிகள் பகிரப்பட்டுள்ளன.
 
உண்மையில் அவர்கள் கரம் பிடிப்போம் என்பது தான்
மக்கள் காதுகளில் துரத்துதல் என கேட்டிருக்குமோ???
 
எல்லா மக்கள் காதிலும் ஒரே மாதிரியாக எப்படி???
ஒன்றுமே புரியல....☹️☹️☹️
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 74
 
நாம் தமிழர் + மதிமுக = முறுகல் நிலை
 
நாம் தமிழருக்கும்
மதிமுகவுக்குமிடையிலான முறுகல் மற்றும் கொள்கைகள் சார்ந்த பிடுங்குப்பாடுகளில்
ஈழத்தமிழர்கள் நாம் தலையிடவோ கருத்து வைக்கவோ தேவையில்லை என்பது தான் எனது நிலைப்பாடு.
 
வை கோ அண்ணையிடம் எப்பொழுதுமே நன்றிக்கடனுண்டு.
அதே நேரம் 2009க்கு பின்னர்
வை கோ அண்ணனைவிட அதிகம்
எமது அவலங்களை மூலை முடுக்கெல்லாம் கொண்டு சென்ற சீமானையும்
நன்றிக்கடனுடனேயே பார்க்கின்றேன்.
 
எனவே இது அவர்களது பிரச்சினை.
அவர்களது கொள்கை சார்ந்த (தமிழர் - திராவிடர்)
பிளவுகளால் வரும் இடிபாடுகளுக்குள் ஈழத்தமிழர்கள் செல்லவேண்டியதில்லை.
சென்றால் தேவையற்று ஏதாவது ஒரு பகுதியை பகைக்கவேண்டி வரும்.
அதிகம் ஈழத்தமிழர்பால் அன்பு கொண்ட இளைஞர்கள் கூட்டம் இருபகுதியிலுமுண்டு.
 
ஆட்களை பகைத்து
கட்சிகளை பகைத்து
அதன் மூலம் முதுகில் குத்து வாங்கிய வரலாறுகள்
எம் கண் முன்னே தானே நடந்தன....
 
எமக்கு எல்லோரும் தேவை என்ற
காலத்தின் தேவை உணர்ந்து அமைதியாக பொறுமையாக நடப்போமாக.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, விசுகு said:
பட்டது + படிச்சது + பிடித்தது - 74
 
நாம் தமிழர் + மதிமுக = முறுகல் நிலை
 
நாம் தமிழருக்கும்
மதிமுகவுக்குமிடையிலான முறுகல் மற்றும் கொள்கைகள் சார்ந்த பிடுங்குப்பாடுகளில்
ஈழத்தமிழர்கள் நாம் தலையிடவோ கருத்து வைக்கவோ தேவையில்லை என்பது தான் எனது நிலைப்பாடு.
 
வை கோ அண்ணையிடம் எப்பொழுதுமே நன்றிக்கடனுண்டு.
அதே நேரம் 2009க்கு பின்னர்
வை கோ அண்ணனைவிட அதிகம்
எமது அவலங்களை மூலை முடுக்கெல்லாம் கொண்டு சென்ற சீமானையும்
நன்றிக்கடனுடனேயே பார்க்கின்றேன்.
 
எனவே இது அவர்களது பிரச்சினை.
அவர்களது கொள்கை சார்ந்த (தமிழர் - திராவிடர்)
பிளவுகளால் வரும் இடிபாடுகளுக்குள் ஈழத்தமிழர்கள் செல்லவேண்டியதில்லை.
சென்றால் தேவையற்று ஏதாவது ஒரு பகுதியை பகைக்கவேண்டி வரும்.
அதிகம் ஈழத்தமிழர்பால் அன்பு கொண்ட இளைஞர்கள் கூட்டம் இருபகுதியிலுமுண்டு.
 
ஆட்களை பகைத்து
கட்சிகளை பகைத்து
அதன் மூலம் முதுகில் குத்து வாங்கிய வரலாறுகள்
எம் கண் முன்னே தானே நடந்தன....
 
எமக்கு எல்லோரும் தேவை என்ற
காலத்தின் தேவை உணர்ந்து அமைதியாக பொறுமையாக நடப்போமாக.

உங்களின் கருத்துதான் என் கருத்தும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 75
 
தமிழகத்தில் தமிழ் மக்கள் விரும்பாத எதையும் இனி திணித்துவிடமுடியாது
 
இந்தநிலை தற்பொழுது அங்கு வந்திருப்பது மகிழ்ச்சி தருகிறது
 
இப்படியொரு நிலை தமிழகத்தில் வரவேண்டும் என்பதே தமிழர்களது கனவாக இருந்தது
 
தமிழகம் தமிழர்களது கைகளில் வந்தால் மட்டுமே உலகத்தமிழருக்கு ஒரு ஒளிவிளக்கு கிடைக்கும்.
கேட்க ஒரு நாதி இருக்கும்.
 
கைது செய்யப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டிருப்பதும் ஆறுதல் தரும் விடயமாகும்.
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 76
 
எனது ஊர்
 
காலமும் நேரமும் உயிரும் இருக்கும் போது சிலவற்றை பதிந்துவிடவேண்டும் என்பதே அவா.
 
அந்தவகையில் இன்று எல்லோராலும் அவரவர் பிறந்த ஊர் பற்றி பேசப்படுகிறது.
எனது ஊர் பற்றியும் பேசணும் என்று தோன்றுகிறது.
 
கிழக்கு மாகாணத்திலே முரளிதரன் புலிகளுக்கிடையில் பிளவை உருவாக்கியபோது
அதை தடுத்த தலைவர் பிரபாகரன் அவர்கள்
ஒரு பேட்டியில் கேள்விக்கு பதிலளிக்கும் போது சொல்கிறார்.
தனது ஊரை நேசிப்பவனே தனது தாயகத்தை நேசிப்பான்.
ஆனால் அது பிரதேச வெறியாக மாறிவிடக்கூடாது.
முரளிதரன் அங்கு தான் தவறு செய்தார் என்கிறார்.
( இயக்கத்துக்கு துரோகம் செய்ததிலிருந்து நான் முரளிதரனை இயக்கப்பெயர் கொண்டு எழுதுவதில்லை)
 
அந்தவகையில் எனது ஊர் சார்ந்த பற்று என்பதே எனது அடிப்படை.
அதுவே நான் எனது தாயகத்தை நேசிப்பதற்கான முதல் அடி.
 
எனது ஊரை எனக்கு மிகவும் பிடிக்கும்.
காரணம் எமது ஊரவரின் உழைப்பு முயற்ச்சி அத்துடன் விருந்தோம்பல்.
 
இன்றும் பிரான்சிலே ஒரு திருமணவீடும் சரி
சாவீடும் சரி நிறைந்து வழிகிறது என்றால்
அவ்வழியால் போவோர் கூட்டத்தை பார்த்தே
இது புங்குடுதீவு மக்களின் கூட்டமாக இருக்கும் என்கிறார்கள் என்றால்
அதற்கு எமது இந்த விருந்தோம்பலே முதற்காலணி.
 
மிகவும் தூரத்திலும்
தனித்தும் உள்ள ஒரு தீவை
உலகிலுள்ள எந்த தமிழருக்கும் தெரிகிறது என்றால்
அதற்கு அம்மண்ணின் மக்களின் வளர்ச்சியும் பொது சேவைகளுமே காரணம்.
 
தாயகம் செல்லும் அநேக தமிழர்கள்
எமது ஊருக்கும் சென்று வருகிறார்கள்.
அதற்கு எமது மீது உள்ள பற்றும்
சிலருக்கு எம்மை எவ்வாறு தூற்றலாம் என்பதை தேடும் காரணங்கள் இருந்தாலும்
எமது ஊரைப்பார்ப்பதும் அவர்களது தாயக பயணத்தின் ஒரு பாகமாக வந்திருக்கிறது என்பது மகிழ்வு தருகிறது.
 
90களில் போரின் தீக்கு சிக்காது ஓடத்தொடங்கிய எனது ஊர்மக்கள்
30 ஆண்டுகாலம் கடந்து மீண்டும் ஊர் திரும்புகிறார்கள்.
திரும்பும் அவர்கள் பணபலத்துடன் மட்டுமல்ல உலக நவீன அறிவியலை உள்வாங்கி திரும்புகிறார்கள்.
 
இன்னும் சில  வருடங்களில்
எனது ஊர்பூத்து குலுங்கும்.
மற்ற ஊர்களுக்கெல்லாம் எடுத்துக்காட்டாக திகழும் என்பதை மட்டும்
எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 77
 
இன்று சிரிப்பு நாளாம்
சிரிப்போம் சிந்திப்போம்
 
ஒரு மரண ஊர்வலம் சென்று கொண்டிருந்தது.
பாடை கட்டி அதில் இறந்தவரை வைத்து தூக்கி சென்று கொண்டிருந்தார்கள்.
ஒரு வயதான தாயும் அவரது மகனும் தமது வீட்டில் நின்றபடி பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
 
இதைப்பார்த்த மகன் தாயிடம் சொன்னார்.
நான் இப்படி செய்யமாட்டேன் விலையுயர்ந்த பெட்டி வாங்கி அதில் தான் உன்னை கொண்டு செல்வேன் என.
 
தாய் சொன்னார்
தம்பி இவ்வாறே என்னையும் பாடை கட்டி திறந்தபடி கொண்டு செல்
பெட்டிக்குள் வைத்துப்பூட்டினால்
அம்மாவுக்கு மூச்சு விடுவது சிரமமாக இருக்குமல்லவா.???
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படிக்காத பணக்கார தந்தை, மெததப்படித்த மகனுடன் காம்பிங் சென்றார்.

பொழுது சாய்ந்ததும், ரென்ற் அமைத்து அசதியில் தூங்கி விட்டனர்.

சிறிது நேரத்தின் பின் மகனை எழுப்பினார் தந்தை.

வானத்தில் என்ன தெரிகிறது, மகனே என்றார் தந்தை.

பல கோடி நட்சத்திரங்கள் தெரிகின்றன, என்றார் மகன்.

அதிலிருந்து புரிவது என்ன மகனே, என்றார் தந்தை.

இந்த பூமியைப் போல பல கோடி கோள்கள் இந்த பிரபஞ்சத்தில் உள்ளன... இது குறித்து ஆய்வுகள் இன்னும் நடந்து.....

சொல்லி முடிவதற்கிடையே, கன்னத்தில் விழுந்தது அறை.

மடயனே, நம்ம ரென்ற யாரு களவாடிக்கொண்டோடி விட்டார்கள்.

ஏட்டுச் சுரக்காய் கறிக்குதவாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 78
 
தலைவர் பற்றிய பேச்சும் அரசியலும்....
 
 
தலைவரது இருப்பு சார்ந்து அரசியல்வாதிகள் பேசுவது நல்லதல்ல.
அவை சுயநலமானவை.
காலம் நேரம் பார்த்து தத்தமது தேவைக்கமைய பாவித்துக்கொள்வதற்கு
தலைவர் கருவேப்பிலையல்ல.
 
இது விடயம் சார்ந்து பேசுபவர்கள் பேச முற்படுபவர்கள்
மிக மிக பொறுப்புடன் நடந்து கொள்வார்கள் என எதிர் பார்ப்போம்.
 
தலைவரது இருப்பு சார்ந்து
ஆய்வுகளும் நேரடி சாட்சிகளும் பதியப்பட்டு
உண்மையை மக்கள் முன்வைக்கவேண்டிய பொறுப்பு தாயக மக்களுக்குண்டு.
அதை அவர்கள் செய்யவேண்டிய காலம் வந்து விட்டதாகவே
அண்மைய பேச்சுக்களும் பிரதியிடல்களும் சொல்லி நிற்கின்றன.
 
தலைவர் வீரமரணமடைந்திருந்தால்???
மாவீரர் நாளில் அதற்கான மதிப்பை அவருக்கு தர தாயக தமிழர்கள் தயங்கக்கூடாது.
 
தேசியத்தலைவர் ஒருவர்தான்
அவர் இருந்தால் தலைவர்
இறந்திருந்தால் கடவுள்.
 
இதை எவராலும் ஈடு செய்யவோ பிரதிப்படுத்தவோ முடியாது. இயலாது.
 
Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 79
 
Un Lock
 
தம்பி நிரு. பிரெஞ்சு கலை பண்பாட்டுக்கழகத்தால்
ஒரு குறிக்கோளோடு வளர்த்தெடுக்கப்படட ஈழத்தின் பிள்ளை.
அவரது திறமை, தாயகப்பற்று மற்றும்
எமது இனத்துக்கு நடந்த கொடுமைகளுக்கு நீதி கேட்கும் தன்மை சார்ந்து
அவர் மீது தனிப்பாசமுண்டு.
 
அந்தவகையில் வாருங்கள்
வந்து உங்கள் வருகையை பதிவதனூடாக
எமது வலியை உறுதிப்படுத்துவதனூடாக
ஈழத்திரைப்படத்துறையை அடுத்த கட்டங்களுக்கு நகர்த்துவதற்கான
ஆதரவுக்கரத்தை வலுப்படுத்துங்கள் என்ற கோரிக்கைக்கு
வலு சேர்க்கும் முகமாகவே நானும்
எனது மகனையும் அழைத்துக்கொண்டு சென்றிருந்தேன்.
 
ஆனாலும் வழமைபோல்
எமது ஈழத்து கலைஞர்கள் செய்யும் தவறான
அளவுக்கதிகமான பேச்சு மற்றும் அதிக விளம்பரம் ஊடாக
அதிக எதிர்பார்ப்பை வளர்த்துவிடல் சார்ந்து ஒரு பயம் இருந்து கொண்டேயிருந்தது.
 
 
நாங்கள் நாவலர் குறும்படப்போட்டியை நடாத்துவதாலும்
நாவலர் தெரிவு நிர்வாகக்குழுவில் நான் இருப்பதாலும்
இது போன்ற பல குறும்படங்களை
புலம் பெயர் தேச
அதிலும் பிரெஞ்சு தேச எமது கலைஞர்கள் ஏற்கனவே தந்திருக்கிறார்கள்.
நான் பார்த்து பிரமிப்பும் பெருமிதமும் அடைந்திருக்கின்றேன் .
அந்த கலைஞர்களையும் இங்கு நினைவு கூறுவதே சரியானது.
 
எதிர்பார்த்தபடியே எமது தொண்டைக்குள் சிக்கியிருக்கும்
முள் போன்ற கருயை
அப்படியே தூக்கி வெளியே போட்ட போதும் போதாது என்ற மனநிலையே இருந்தது.
 
இருந்தபோதும் கருவுக்கும் அதை தொட்ட துணிவுக்கும் வாழ்த்துக்களை சொல்லாமல் இருக்கமுடியாது.
அதேநேரம் படப்பிப்பு நடந்த இடங்கள் எமது மண்ணோடு ஒட்டவில்லை. மற்றும் விவாதத்துக்கு ஆளான சோபா சக்தி இந்த படத்துக்கு தேவையே இல்லை.
 
மேலும் சிலவற்றை சொல்லாமல் விடுவது தவறான பாதைகளை தொடர்ந்து திறந்துவிடும் என்பதால் இதையும் சொல்லவேண்டியிருக்கிறது.
 
திரையிடலின் பின் மேடையில் இடம்பெற்ற கருத்துக்கூறல்கள் மற்றும் பேச்சுக்கள் அநாகரிகமானவை.
 
ஒரு குறும்படத்துக்கு (10 நிமிடங்கள்) 10€ கொடுத்து 2000 மக்கள் வந்திருந்த கூட்டத்தை பார்த்து உங்களிடம் 10€வுக்கு பிச்சை எடுத்தோம் என்றார்கள். எங்கள் முகத்தில் காறித்துப்பியது போலிருந்தது. அடுத்து சாதி பற்றியும் பேசினார்கள். அவரவர் தத்தமது தனிப்பிரச்சினைகளை வந்திருக்கும் மக்கள் மீது பார்வையாளர்கள் மீது திணிப்பது நல்ல பாதையன்று.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பட்டது + படிச்சது + பிடித்தது - 80

இப்படித்தான்.......

70களின் இறுதியில் இப்படித்தானே உலகத்தமிழர் மாநாட்டில் தொடக்கி வைத்தார்கள்

அதனைத்தொடர்ந்து இன்பம் செல்வமென இப்படித்தானே வீதி வீதியாக சுட்டுவிட்டு பார்க்கும்படி போட்டு போனார்கள்.

இப்படித்தானே இப்படித்தானே முள்ளிவாய்க்கால்வரை உந்தி தள்ளினார்கள்

எம்மை அழித்த விதத்தில்
உங்களுக்கு எச்சரிக்கை தந்தார்கள்

புரிகிறதா தமிழகமே
ஏன் போராடினாய் எனக்கேட்கும் உறவுகளே புரிகிறதா ??

போராடினாலும் 
ஏன் கண்ணை மூடி கதவை மூடி
சும்மா இருந்தாலும் சாவு நிச்சயம் என்றநிலை புரிகிறதா தாய் தமிழகமே...

என்ன செய்யப்போகிறாய்?
எதனை தெரிவு செய்யப்போகின்றாய்??

தமிழன் என்று சொல்லி
தலைகுனிந்து நின்று
கழுத்தறுக்கும்வரை.......???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 81
 
புறக்கணிப்பு
 
HNB இன் மனிதாபிமானமற்ற செயலை கண்டித்து
தமிழ்மக்கள் அவ்வங்கியை புறக்கணிக்க தொடங்கியிருப்பது வரவேற்கத்தக்கது.
இதனூடாக அவர்களுக்கோ அல்லது அதே போன்ற மற்றவர்களுக்கோ
இழப்போ பெரும் பாதிப்போ வருமா என்ற கேள்வியை தாண்டி
இவ்வாறு நடந்தால் தமிழ் மக்கள் ஒற்றுமையாக
இது போன்ற எதிர்ப்புக்களை தொடங்குவார்கள் என்ற ஒரு படிப்பினை வந்தாலே போதுமானது.
அது இனி இவ்வாறு முடிவெடுக்கும் போது தடுக்கும் வல்லமை கொண்டது.
 
அந்தவகையில் எனது தொழிலிருந்து இலங்கைக்கு பணம் அனுப்பும் போது
இனி HNB யை முற்றாக தடுத்துவிடுவேன் என்பதை இங்கு அறிவிக்கின்றேன்.
பல லட்சம் வெளிநாட்டுப்பணம் வங்கிகளுக்கு செல்வது தடை செய்யப்பட்டால்
அது அவர்களது பணச்சுழற்சியை பெருமளவு பாதிக்கும்.
 
நன்றி அனைவருக்கும்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 82
 
ரஐனியின் அரசியல் தத்துவம்
 
ஒரு அரச காவலர் அல்லது இராணுவம் சீருடையில் இருக்கும்போது அவரை தாக்கக்கூடாது
தாக்கினால் நீ சமூகவிரோதி அல்லது பொறுக்கி அல்லது பயங்கரவாதி.
 
இதைத்தான் ஈழம் சார்ந்தும் சொன்னார்கள்
தூத்துக்குடியிலும் சொல்கிறார்கள்
(அவர்களது படத்தில் எல்லாம்
அவர்களே இவை அனைத்தையும் சட்டத்துக்கு புறம்பாக செய்து முடிப்பார்கள்.
அது வேற கதை)
 
நீதி என்பதும் தர்மம் என்பதும் பக்கம் சாராதது
அதற்கு சீருடைகள் போர்க்கமுடியாது
போர்த்தினால் அது உடைக்கப்படும்.
சரி அல்லது பிழை என்ற இரண்டு பக்கம் தான் இருக்கு.
நடுவில் என்று ஒன்று இல்லை
 
ஆனால் மதில் மேல் பூனைகள் தான் இன்று வாழ்கின்றன.☹️
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 83
 
புலிகளை ஆதரிக்கும் பதிவுகளுக்காக மன்னிப்புக் கோரிய கனடாவின் தமிழ் வேட்பாளர் விஜய் தணிகாசலம்
 
 
வரலாறுகளும் தமிழரது வீரம் தியாகம் செறிந்த போராட்டமும்
எம் கண் முன்னே தான் நடந்தது.
அந்தவகையில் ஒவ்வொரு தமிழ்க்குடிமகனுக்கும்
அதை கையாளும் அல்லது தவிர்க்கும் உரிமையுண்டு.
மாற்றாக தமிழரது போராட்டத்தை காட்டிக்கொடுக்கும்
அல்லது அதை பயங்கரவாதம் என்பதாக பிரசாரப்படுத்துதல் தான் தமிழருக்கு ஆபத்தானது.
 
கனடாவின் தமிழ் வேட்பாளர் விஜய் தணிகாசலம்
தனது கட்சிக்கு ஒரு முகமும்
தமிழ் மக்களுக்கு இன்னொரு முகமும் காட்டி
தமிழர்களின் நம்பிக்கை பெற்று தேர்தலில் வென்றிருக்கின்றார்.
 
இங்கே எனது கவலை எல்லாம்
தம்பி விஜய் தணிகாசலத்தின் மனதில்
புலிகள் சார்ந்து தான் அறிவித்த அறிவித்தல் தான்
தன்னை வெல்ல வைத்தது என்ற நினைப்பு வந்து விடக்கூடாது என்பதே.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பட்டது + படிச்சது + பிடித்தது - 84

ஒரு காட்சிப்பதிவின் தாக்கம் மிக மிக அதிகம்

நடுத்தர வர்க்கம் அல்லது

மத்திய வாழ்வு என்ற சொல் அடிக்கடி பாவிக்கப்படுவதை பார்த்திருக்கின்றோம்.

எம்மில் அநேகமானவர்கள் இந்த நடுத்தர வர்க்கத்தினர் தான்.

நேற்று எனது வாகனத்துக்கு முன்னுக்கு சென்று கொண்டிருந்த

இந்த வாகனத்தை பார்த்ததும் நடுத்தர வர்க்கத்தின்  வாழ்வு  முறைக்கு

இதைவிட உதாரணத்தை பதியமுடியாது என்று தோன்றியது.

நீங்களும் பாருங்களேன்.

L’image contient peut-être : voiture et plein air
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 85
 
சிங்களத்தின் நிகழ்ச்சி நிரல்
 
விசுவமடுவில் இராணுவ அதிகாரிக்கான பிரியாவிடை சார்ந்து
ஆளமாக சிந்திக்கணும் தமிழ் மக்கள்.
 
இது ஒரு இராணுவ அதிகாரியின் குண செயல் காரியங்கள் சார்ந்ததல்ல.
 
முள்ளிவாய்க்காலுக்கு பின்னர்
தமிழ் மக்களை யுத்தத்தால் வெல்லலாம்
ஆனால் அவர்களின் மனங்களை வெல்லமுடியுமா என்று
அன்று எழுந்த கேள்விக்கான விடையிது.
 
இதன் தொடர்ச்சியாக அடுத்த தேர்தலில் சிங்களவர்கள்
அந்தப்பகுதியில் தேர்தலில் நின்று வெல்லமுடியும்??
 
இனியாவது தமிழ் பிரதிநிதிகள்
தமது சுயநல மற்றும் ஊழல் நிலைகளிலிருந்து விலகி
தமிழ் மக்களின் நலன் சார்ந்து தூர நோக்குடன் சிந்தித்து செயலாற்றணும்.
 
அல்லாதுவிடில் அடுத்த முறை
அம்மக்களின் வாக்குகள் தேசியக்கட்சிகளுக்கே செல்லும்.
பின்னர் வாயிலும் வயிற்றிலும் அடித்து அழுதாலும்.....????
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 86
 
தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பு இல்லை.
சுவிஸ் குற்றவியல் நீதிமன்றம்
 
விடுதலைப்புலிகள் குற்றங்களை தடுப்பவர்களேயன்றி
குற்றங்களை செய்பவர்களோ
அல்லது குற்றங்களுக்கு துணை போறவர்களோ கிடையாது என்பது
தமிழர்களுக்கு நன்கு தெரிந்த விடயம் தான்.
 
ஆனால் இந்த தீர்ப்புக்கு உறுதுணையாக இருந்த சுவிஸ் வாழ் தமிழர்களைநாம் கனம் பண்ணணும்.
 
எத்தனையோ கோடி பணம்
மக்களிடம் நம்பிக்கை மற்றும் வாக்குறுதி அடிப்படையில்
சேர்க்கப்பட்ட நாடுகளில் சுவிஸ் முதலிடம் பெறுகிறது.
இங்கே கணவன் மனைவிக்கு கூடதெரியாமல் பணங்கள் கைமாறப்பட்டன.
2009க்கு பின் முற்றுமுழுதாக நிலைமைகள் தடுமாற்றமடைந்த வேளைகளில்
உண்மையான நிதிநிலமை ஒவ்வொருவரையும் தாக்கிய வேளையில்
அம்மக்கள் அனுபவித்த அனுபவித்துக்கொண்டிருக்கின்ற வேதனைகள் சுமைகள் கொஞ்ச நஞ்சமல்ல.
 
ஆனாலும் இந்த தீர்ப்புக்கு
புலிகளுக்காக உழைத்த நபர்களை எந்த நிலையிலும் விட்டுக்கொடுக்கக்கூடாது
காட்டிக்கொடுக்கக்கூடாது என்ற
அந்த மக்களின் பெரும் நெஞ்சார்ந்த தியாகமான முடிவே காரணம்.
ஒரு சிலரைத்தவிர அனைத்துமக்களதும் ஒத்துழைப்பு கிடைக்காது இருந்திருந்தால்
தீர்ப்பு பாரதூரமாக இருந்திருக்கும். அது புலிகளுக்கு மட்டுமன்றி ஈழத்தமிழினத்துக்கே உலை வைத்திருக்கும்.
 
நன்றி சுவிஸ் வாழ் தமிழீழச்சொந்தங்களே...
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 87
 
அகதிகள் தினம்
 
இன்று அகதிகள் தினம் என்கிறார்கள். எவ்வளவு கேவலம் இது.
 
அகதிகள் ஒரு போதும் உருவாகுவதில்லை
உருவாக்கப்படுகிறார்கள்.
ஆனால் அகதிகளை உருவாக்கியவர்களே
அதை ஒரு நாளாக அறிவித்து ஞாபகம் கொள்கிறார்கள்.
 
நானும் ஒரு அகதி தான்.
அகதியாக உருவாக்கப்பட்டவன்.
என்னை அகதியாக்கிவனை நான் ஒரு போதும் மறந்ததில்லை.
மன்னிப்பதில்லை.
என்ன காரணத்துக்காக அவர்கள் என்னை அகதியாக்கினார்களோ
அதை மேலும் மேலும் என்னுள் வலுவாக்குவேன்.
வளர்ப்பேன்.
அதை என் பேரனுக்கும் பூட்டனுக்கும் ஊட்டியே சாவேன்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 88
 
உரு படம்
 
போன வாரம் உரு படம் பார்க்கப்போயிருந்தேன்.
 
தாயகத்திலுள்ள ஈழத்து சினிமாவின் வில்பன்னர்களாலும்
அபிமானிகளாலும் இப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது என்பதை
அறிந்து சென்றதைவிட உணரமுடிந்தது.
 
தாயக கருவை
தாயகத்திலிருந்தபடி
உருவாக்குவதன்பது கடினமானது அல்லது
முடியாது என்ற எனது கணிப்பை உருமாற்றிய படமிது
 
குறும்படம் என்பதை தகர்த்து
பெரும் விருட்சமாக
அது எம்மை ஆட்கொள்கிறது.
இயலாமையால் வலிக்க வைக்கிறது
அழ வைக்கிறது
 
எதை யாரை பாராட்டுவது என்று தெரியவில்லை.
அந்தளவுக்கு எல்லோரும் பிரகாசிக்கின்றனர்.
 
ஆனால் முடிவில் எனக்கு உடன்பாடில்லை.
மௌனித்ததன் பின் இனி தமிழ்மக்கள் தடியை எடுப்பார்கள் என்பதாக
கற்பனை செய்யக்கூட முடியவில்லை.
 
ஆனாலும் ஒரு பொறிதான் எல்லாவற்றிற்கும் முன்னகர்வாக இருந்திருக்கிறது
 
வாழ்த்துக்களும் நன்றிகளும்.
 
Gnanadas Kasinathar
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 89
 
புலிக்கொலை
 
ஒரு புலியை பல பேர் சேர்ந்து அடித்து துன்புறுத்தி கொன்றிருக்கிறார்கள்.
அதற்கு முன்னர் அப்புலி பல மக்களை காயப்படுத்தியதாக கொல்லமுயன்றதாக சொல்கிறார்கள்.
அப்படியானால் கொல்லப்படவேண்டியது தான்.
 
ஆனால் கொல்லப்பட்ட முறை தான் தவறு.
செல்பி எடுக்க துணிவோ வீரமோ இருந்தால் தன்னந்தனியாக தாக்கி கொன்றிருக்கவேண்டும்.
அதைத்தான் தமிழர்கள் வீரம் என்பர்.
 
பலபேர் அதிலும் கோரமான ஆயுதங்களுடன் தன்னந்தனியே நின்ற புலியைக்கொன்றுவிட்டு
தை வீரம் என்பது கேலிக்கு மட்டுமல்ல காற்றுப்புகா இடத்திலெல்லாம் புகுந்து வீரம் புரிந்த தமிழரை இகழ்வதாகும்.
 
 
என்னவோ தெரியவில்லை நேற்றிரவு நித்திரை வரவில்லை.
இந்த புலி இழப்பும் வலிக்கிறது. இனி மேலாவது புலிகள் மீது எம் போன்றவர்களின் அக்கறையையும் கவனத்தில் எடுங்கள் செல்பிக்காரர்களே...
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஏன் தமிழகத்தில் கேரளாவில் பாஜாகவினால் வெற்றி பெறமுடியவில்லை. அங்கு வேறு இயந்திரமா உபயோகிக்கிறார்கள்?  😀
    • த‌வ‌றுக்கு ம‌ன்னிக்க‌னுன் அண்ணா🙏..............நான் நினைத்தேன் 2013கால‌ க‌ட்ட‌த்தில் சொன்ன‌து என்று......................
    • அவர் இப்பவே யப்பான் துணைமுதல்வர்தான். எத்தனையோ கிண்டல்கள்>கேலிகளுக்கு மத்தியில்தான் சீமான் தமிழ்நாட்டின் 3வது கட்சியாக வளர்ந்துள்ளார்.ஏனைய கட்சிகள் எல்லாம் கூட்டணி அமைத்துத்தான் போட்டி போடுகின்றன. ஒருவருக்கும் தனித்து நிற்க தைரியமில்லை. இன்று சீமான் கூட்டணிக்கு இணங்கினால் மற்றைய கட்சிகளை விட அதிக இடங்களில் போட்டிய முடியும். நக்கல் செய்பவர்கள் நையாண்டி செய்பவர்கள் நாம்தமிழர்களுக்கு எதிராக சின்னத்தை முடக்கி சதிசெய்தவர்கள் எல்லோயைும் மீறி நாம் தமிழர்வளர்ந்து கொண்டிருக்கிறது என்ற யதார்த்தம் எல்லோருக்கும் தெரியும். அது யாழ்களத்தின் நாம்தமிழர் கட்சி எதிர்ப்பாளர்களுக்கும் நன்னு தெரியும். சீமான் பேச்சில் எங்காவது குறை கண்டு பிடித்து நக்கல் செய்வர்கள் மற்றைய கட்சிகள் 100 வீதம் உத்தமமான மக்கள் சேவை செய்யும் கட்சிகள் என்று நிளனத்து கொள்கிறார்கள் போலும்.தடைகளைத்தாண்டித்தான் வளரணும். 
    • நான் அண்ண‌ன் சீமானை ஆத‌ரிக்க‌ முழு கார‌ண‌ம் எம் தேசிய‌ த‌லைவ‌ர் மேல் இருந்த‌ ப‌ற்றின் கார‌ண‌மாய்............2009க்குபிற‌க்கு  ப‌ல‌ த‌டைக‌ளை தாண்டி இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளுக்கு த‌லைவ‌ர‌ ப‌ற்றி எவ‌ள‌வோ சொல்லி இருக்கிறார் இவ‌ர் ம‌ட்டும் இல்லை என்றால் க‌லைஞ‌ர் செய்த‌  வேத‌னைக‌ளை கொடுமைக‌ளை  சாத‌னை என்று மாற்றி சொல்லி இருப்பின‌ம் திராவிட‌ கும்ப‌ல்............கால‌மும் நேர‌மும் எப்போதும் ஒரே மாதிரி இருக்காது அண்ணா...........இன்னும் 10வ‌ருட‌ம் க‌ழித்து இந்த‌ உல‌கில் என்ன‌னென்ன‌ மாற்ற‌ம் வ‌ரும் என்று உங்க‌ளுக்கும் தெரியாது என‌க்கும் தெரியாது..................சீன‌ன் பாதி இல‌ங்கையை வாங்கி விட்டான் மீதி இல‌ங்கையை த‌ன் வ‌ச‌ப் ப‌டுத்தினால் அதுயாருக்கு ஆவ‌த்து..............இதோ பிர‌பாக‌ரனின் ம‌க‌ள் வ‌ந்து விட்டா ஈழ‌த்து இள‌வ‌ர‌சியின் தோட்ட‌ சிங்க‌ள‌ இராணுவ‌த்தின் மீது பாயும் என்று சொன்ன‌ காசி ஆன‌ந்த‌னை ஏன் இன்னும் ம‌த்திய‌ அர‌சு அவ‌ரை கைது செய்ய‌ வில்லை.................இப்ப‌டி ப‌ல‌ சொல்லிட்டு போக‌லாம் கால‌ நீர் ஓட்ட‌த்தில் மாற்ற‌ங்க‌ள் மாறி கொண்டே இருக்கும்...............    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.