யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
விசுகு

பட்டது + படிச்சது + பிடித்தது - விசுகு

Recommended Posts

On 4/16/2019 at 2:55 PM, விசுகு said:
பட்டது + படிச்சது + பிடித்தது - 151
 
இழப்பின் வலியை உணர்ந்தவர்கள் நாம்.....
 
பிரான்ஸ் நாட்டினுடைய இதய பகுதி என அழைக்கப்படும்
பரிஸ் நகரத்தின் 800ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாற்றினை கொண்ட
Notre de Dame (நொர்த் து டம்) என அழைக்கப்படும்
மிகப்பெரிய தேவாலயம் தீக்கிரையாகி இருக்கிறது.
 
நாங்கள் பிரான்சுக்கு வந்த பொழுதுகளில்
சிவனோ முருகனோ அம்மனோ எம்மிடமில்லாத போது
எமது வலிகளை, தேவைகளை முறையிட,
நேர்த்தி வைக்க, ஆறுதலடைய
இந்த இடம் மிகவும் உன்னதமான ஆலயமாக இருந்தது.
 
அந்தவகையில் பிரெஞ்சுக்காரர்களுக்கு மட்டுமல்ல
அனைத்து இன மக்களுக்கும் மதத்தவருக்கும் இது கோயில் தான்.
 
அது இன்று விபத்துக்காரணமாக அழிந்து போயிருக்கிறது.
மனதை மிகவும் சங்கடப்படுத்தும் விடயமாக உள்ளது.
எமது நூலகம்
எமது பாடசாலைகள்
எமது கோயில்கள்
எமது சேர்ச்சுக்கள் குண்டு வீசி தகர்க்கப்பட்டபோது இருந்த அதே மனநிலை இன்றும்.
 
அந்த மக்களின் சோகத்தில் மன உளைச்சலில் நாமும் பங்கெடுக்கின்றோம்.
பிரார்த்திக்கின்றோம்.
 
அதே நேரம் இது விபத்து தவிர்க்கமுடியாதது தடுக்க முடியாதது.
ஆனால் எமது நூலகம்
எமது பாடசாலைகள்
எமது கோயில்கள்
எமது சேர்ச்சுக்கள் குண்டு வீசி தகர்க்கப்பட்டபோது
அதிலும் மக்களை அங்கே பாதுகாப்புக்கருதி ஒதுங்குங்கள் என்ற வேண்டு கோளை விட்டு விட்டு கொத்துக்கொத்தாக கொன்றொழித்த போது
அது திட்டமிட்ட கொலை இன அழிப்பு.
அது தடுத்திருக்கக்கூடியது
தடுத்திருக்கமுடியும். ஆனால் ........??????

கடவுள் தூனிலும் துரும்பிலும் இருப்பார் என்றால் எதற்காக அந்நிய வழிபாட்டுத்தலத்துக்குச் சென்று நேர்த்தியும் வழிபாடும். வீட்டிலிருந்தபடியே செய்தால் பலிக்காதா???

Share this post


Link to post
Share on other sites
15 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கடவுள் தூனிலும் துரும்பிலும் இருப்பார் என்றால் எதற்காக அந்நிய வழிபாட்டுத்தலத்துக்குச் சென்று நேர்த்தியும் வழிபாடும். வீட்டிலிருந்தபடியே செய்தால் பலிக்காதா???

இது  கேள்வி

 கொஞ்ச  நாள் தாங்க  யோசித்து எழுதுறன்

Share this post


Link to post
Share on other sites
பட்டது + படிச்சது + பிடித்தது - 153
 
வளர்ச்சியடைந்த ஈழத்து திரைப்படத்துறை
 
பிரான்சில் கலைஞர்கள் மட்டுமல்ல கலையும் தொழில் நுட்பமும் சேர்ந்து வளர்ச்சியடைந்தது. ஈழத்து சினிமாவுக்கான ஒரு தனிப்பாதையை வகுக்க முடியும் என்றளவுக்கு வளர்ந்த சிலர் ஒன்று சேர்ந்து சங்கம் அமைத்து குறுப்படங்களிலிருந்து பெருந்திரைப்படங்களை நாடி முயற்சிகளை செய்த போது ஈழத்து சினிமாவின் மீது நாட்டம் கொண்ட பலரும் அதற்கு உறுதுணையாக நின்றனர். அந்தவகையில் France - புங்குடுதீவு மக்கள் ஒன்றியமும் நாவலர் குறும்படப்போட்டிகளை நடாத்தியதோடு மட்டுமன்றி பணப்பரிசில்களையும் வழங்கியும் மேலும் அவர்களது முயற்சிகளுக்கு ஒத்துழைப்பும் ஊக்கமும் கொடுத்து தனது நேரங்களை செலவிட்டிருந்தது அதன் அடுத்த கட்டமாக முழுநேர திரைப்படங்களை எம்மவர்கள் இயக்கும் சந்தர்ப்பங்கள் எவ்வழியில் வந்தாலும் அதை பயன்படுத்தணும் என்கின்ற ஏக்கமே ஈழத்தமிழர் அபிமானிகளை பொறுத்து தொடர்ந்து இருந்து வந்தது. அதற்கான முயற்சிகளையும் France - புங்குடுதீவு மக்கள் ஒன்றியமும் செய்து கொடுத்து வந்தது. அந்தவகையில் தமிழகத்திலிருந்து தரம்மிக்க தேசிய விருதுகளை பெற்ற எமது தாயக மக்கள் மீது பற்றுக்கொண்டஇயக்குநர்கள் வரவழைக்கப்பட்டு நடுவர்களாக இருந்தது மட்டுமன்றி விழாவின் அடுத்த நாள் கலந்துரையாடல் பட்டறை ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டு தமிழக இயக்குநர்களுடன் நெருக்கங்களும் ஏற்படுத்தப்பட்டன.
 
சில முழு நீளதிரைப்படங்களை இயக்கவும் தமிழ் தமிழகம் திரைப்படத்தை தாண்டி பிரெஞ்சுப்படங்களில் கூட எம்மவர்கள் திறமை மிளிர்கிறது என மகிழ்ந்திருந்ததோடு அதன் அடுத்த கட்டங்களை எதிர் பார்த்தபடி இருந்த எம்மவர் மேல் எவர் கண் பட்டதோ அல்லது எவர் குறி வைத்தனரோ......???
 
பலரின் நேரங்கள் பணங்கள் ஏக்கங்கள் ஆசைகள் கனவுகளை உள்வாங்கி வளர்ச்சியடைந்த ஈழத்து திரைப்படத்துறை இன்று தமக்குள் கூர் பார்க்கும் நிலையில் வந்து நிற்பது வேதனை தருகிறது. சம்பந்தப்பட்டவர்கள் அமைப்பின் யாப்புக்கு கட்டுப்பட்டு தனிப்பட்ட கோபதாபங்களை பின் தள்ளி ஈழத்து சினிமா வளர்ச்சி ஒன்றையே பிரதான நோக்கோடு கொண்டு தூர நோக்கோடு சிந்தித்து செயற்படணும் என்பதே ஈழத்து சினிமா மீதும் இங்குள்ள எமது கலைஞர்களின் வளர்ச்சியிலும் அக்கறையுடையவர்களின் வேண்டுதலாகும்.

Share this post


Link to post
Share on other sites
பட்டது + படிச்சது + பிடித்தது - 154
 
கொச்சிக்கடையும் நானும்...
 
எந்த திருவிழாவுக்கு போகின்றேனோ இல்லையோ
இந்த நாள் மட்டும் அங்கே விடிய விடிய நிற்பது வழமை.
மிகவும் அமைதியாகவும் இன மத பேதங்களை கடந்த திருவிழாக அது இருக்கும்.
இதில் கலந்து கொள்வது ஒரு வித்தியாசமான அனுபவமாகவும்
பருவ வயதுக்கோளாறுகளை கடந்த ஒரு அபூர்வ மனநிலையை தரும் நாளாக இருக்கும்.
 
101 இலக்க BUSஇல் பாடசாலை செல்வதால்
ஒவ்வொரு நாளும் இதை கடந்து போகும் போது
நெஞ்சில் கைவைத்து வணங்கி செல்வதுண்டு.
பக்கத்தில் பொன்னம்பல வாணேச்சர் கோயில் இருந்தபோதும்
இது ஒரு தனி இடத்தை என் மனதில் பிடித்திருந்தது.
 
 
1983 கலவரத்தின் உச்ச அகோரம் தாங்க முடியாது ஓடி
நாங்கள் முதல் முதலாக அகதியாக சென்ற இடம் இது தான்.
 
அந்த இடத்தையும் தாக்க பலமுறை சிங்களவர்கள் முயன்றபோதும்
அங்குள்ளவர்களால் திருப்பி தாக்கப்பட்டு ஓட விரட்டிய போதும்
எமக்குள் பிரச்சினை வேண்டாம்
தஞ்சம் பகுந்த தமிழர்களை தாருங்கள் என கேட்டு
மீண்டும் தாக்குதல்களும் இறுதியாக புலிகள் புகுந்து விட்டார்கள் என
கபட நாடகமாடி பலரை சுட்டு வீழ்த்திய போதும் எம்மை காத்து நின்ற மண் அது.
 
அப்பொழுது அங்கே வாழ்ந்தவர்கள் 90 வீதம் தமிழை பேசுபவர்களாக இருந்தனர்.
நேற்று நடந்த குண்டு வெடிப்பின் பின்
அங்குள்ள ஒருவருடன் தொலைபேசியில் பேசியபோது
தற்பொழுது இந்நிலை 50க்கு 50 ஆகி இருப்பதாக சொன்னார்.
கண்ணுக்கு புலப்படாத சிங்களத்தின் நிகழ்ச்சி நிரல் இது தான்.
 
குண்டு வெடிப்பு சார்ந்து எதையும் பகிர விரும்பவில்லை.
அண்ணன் தம்பி இருவரும் ஒன்றாக நின்று
பேசித்தீர்க்க வேண்டிய சிக்கலுக்குள்
கண்ட பேய்களையெல்லாம் இழுத்து விட்டு
தம்பிகளுக்கெதிராக வலுப்படுத்தி போதே எம்மவர் சொல்லியது தான்.
இனி எவராலும் உங்களை காப்பாற்ற முடியாத சகதிக்குள் விழுகிறீர்கள் என.
 
தம்பிகள் நல்லவர்களென்றும்
தர்ம யுத்தம் புரிந்தவர்கள் என்றும்
தாம் கொடுத்த வாக்குப்படி இன்றுவரை மௌனித்திருக்கிறார்கள் என்றும்
உங்களுக்கு புலப்பட 310 உயிர்கள் உங்களுக்கு தேவைப்பட்டிருக்கிறது.
 
நாம் என்ன செய்யும்?? சொல்லும்...???
 
ஒன்றை மட்டும் சொல்லமுடியும்
தம்பிகள் இருந்திருந்தால்
இதை  செய்தவர்களுக்கு 
செய்வதற்கு முன் பிரபாகரன் முகம் நிச்சயம் ஞாபகம் வந்திருக்கும்.
இலங்கையின் எந்த பகுதியிலும் அவர்கள் இருந்திருந்தால் இது நடந்திருக்காது
நடக்கவும் இல்லை.
 
 
Edited by விசுகு

Share this post


Link to post
Share on other sites

பட்டது + படிச்சது + பிடித்தது - 155

நான் சொன்னேன் சகோதரா
நீங்க காது கொடுத்து கேட்கலயே

பேய்களும் நரிகளும்
புத்தனின் முகம் போர்த்திய காட்டேறிகளும்
கூட்டாக நிற்குது
என் இனத்தை கூண்டோடு அழிக்குது
கொஞ்சம் உதவுங்கோ என்று
உங்கள் வீதியில் இரவு பகலாக நின்று கதறி அழுதோம் சகோதரா
நீங்க நம்பல

லட்சம் மக்களின் ரத்தம் குடித்தவை
புதைத்த இடத்தில் புத்தர் கோயிலுடன்
கோரப்பல்லுக்கு தொடர் இரை தேடியலையுது
அதை பகிரங்கப்படுத்துங்கள்
என்று பனியும் புயலும் வெயிலும் பாராது
உங்கள் மன்றத்து முன்றலில்
ஒவ்வொரு வருடமும் இருமுறை வந்து
அமைதி வழியில் தவம் செய்தோமே
அப்பவும் நீங்க காது கொடுத்து கேட்கலயே சகோ

உன்னைப்போலத்தான் நானும்
தமிழனாக பிறந்த ஒரே குற்றத்துக்காக
அனைத்தையும் பறித்து
கட்டிய சறத்துடன் இப்படித்தான் ஓட விட்டார்கள் சகோ
உன் வலி எனக்குப்புரியும்
என் வலி இப்பவாவது உனக்குப்புரிகிறதா???
என் இனம் வாழ இனியாவது வழி சொல்வீரா??

L’image contient peut-être : 9 personnes, personnes souriantes, personnes debout
 
 
 
 

Share this post


Link to post
Share on other sites

பட்டது + படிச்சது + பிடித்தது - 156

இவர்களுக்கு எங்களோட என்ன பகை???

1983 யூலை 23 இனக்கலவரம் அகோர தாண்டவமாடத்தொடங்கிய நாள்.

எனது அண்ணரின் கூட்டாளிகளில் இசுலாத்தை தழுவியவர்கள் ஒரு சிலரில் அண்ணரின் தோளில் கை போட்டு கதைக்கும் அளவுக்கு நண்பர் ஒருவர். அன்றும் அவ்வாறே சிரித்துப்பேசியபடி இருப்பதை பார்க்கின்றேன்.

1983 யூலை 25 அண்ணரின் கடை முன் பக்கத்தால் எரியூட்டப்பட                                                                                   மொட்டை மாடியிலிருந்த நாம் (5ம்மாடி)                                                                                                                                       கீழிறங்கி முதலாம் மாடிக்கு வந்தால் பக்கத்திலிருக்கும் வீடுகளின் கூரைகளில் ஏறமுடியும்.

உடுத்த சறத்துடன் நானும் ஒரு பெட்டியுடன் எனது மைத்துணரும்                                                                                   (பெட்டியை கொண்டு சென்றால்                                                                                                                                                தமிழரென்று அடையாளம் தெரிந்து கொள்வார்கள் என்பதால் நான் எதையும் எடுத்து வரவில்லை)
அந்த கூரைகளின் மீது நடக்கின்றோம்.                                                                                                                                                     சிறிது தூரத்தில் இறங்கக்கூடிய ஒரு இடம் வருகிறது.                                                                                                                       அது ஒரு வீட்டின் முற்றம். இறங்குவதற்காக காலை கீழே நீட்டுகின்றேன்.

டேய் இறங்கினா வெட்டுவன் என்ற குரல் வருகிறது கத்தி தேடி ஓடுவதும் தெரிகிறது.                                                       அவன் வேறு யாருமல்ல                                                                                                                                                                              எனது அண்ணருடன் நேற்றுவரை தோளில் கை போட்டு பழகிய                                                                                                  அதே இசுலாமிய நண்பன் தான்.

மீண்டும் சில தூரம் கூரைகளின் மீது நடந்து                                                                                                                                            இருவரும் பிரிந்து                                                                                                                                                                                                   நான் சிங்கள மகாவித்தியாலய மதிலின் ஊடாக உள்ளே இறங்கி                                                                                  சிங்களவன் போல் சறக்கட்டை மாற்றி அவர்களுடனேயே கலந்து கொச்சிக்கடையை அடைந்தேன்.

இன்றுவரை எனக்குப்புரியாத விடயம்
இவர்களுக்கு எங்களோட என்ன பகை???

Share this post


Link to post
Share on other sites
பட்டது + படிச்சது + பிடித்தது - 157
 
இன்னொரு திரிசங்கு நிலையில் தமிழினம்....
 
 
இன்றைய இலங்கை தீவின் நிலையை உற்று நோக்கும் போது
அது தமிழருக்கு தேவையற்ற விடயம்
அல்லது ஏதோ ஒரு வகையில் எம்மை அழித்த இரு பகுதிகளும்
மோதிக்கொள்வது போலிருந்தாலும்
இதற்கும் தமிழினம் பலி கொடுக்கப்படுவதும்
முன் நிறுத்தப்பட்டு பகை மற்றும் அழிவை சந்திக்கும்
ஆபத்தான நிலையே காணப்படுகிறது.
 
தமிழின அழிப்பில் இசுலாமியர்களின் பங்கை உணர்ந்திருக்கும் தமிழினம்
அதற்கு பழி வாங்கத்துடிக்கும் என்பதை
அறிந்து வைத்திருக்கும் நரித்தந்திரமான சிங்களம்
அதற்கு தயாராக உள்ள தமிழர் தரப்பை பாவித்து
குளிர் காய தயங்கமாட்டாது.
இது இலங்கையில் இரண்டாவது இடத்திலிருந்த தமிழினத்தை
மேலும் மேலும் கீழிறக்கி
பேசத்தரயற்ற சனத்தொகையை கொண்ட
இனக்குழுமமாக ஈழத்தமிழினத்தை மாற்ற வழி செய்து விடும்.
 
மிகவும் அவதானமாகவும்
தலைவரால் மௌனமாக்கப்பட்ட ஆயுதங்களின் தூரநோக்கத்தன்மையையும்
தமிழினம் முழுமையாக உணர்ந்து மிக மிக கவனமாக இருக்கவேண்டிய காலமிது.
 
ஆகக்குறைந்தது
தமிழினம் தனது மக்கள் தொகையையும் மண்ணையும் காப்பாற்றியபடி
தலையீடுகளை தவிர்த்து
எமது வாழ்வுண்டு நாமுண்டு என்றிருப்பதே
இன்றைய தேவையும் வரலாறு தரும் பாடமுமாகும்

Share this post


Link to post
Share on other sites

பட்டது + படிச்சது + பிடித்தது - 158

தற்கொடை பற்றிய பேச்சு மீண்டும்.....?

இலங்கையில் நடந்துவரும் அசம்பாவிதங்களின் காரணமாக

தற்கொடையாளிகள் பற்றிய பேச்சு மீண்டும் மீண்டும் அடிபடுகிறது.

தற்பொழுது நடாத்தப்படும் தற்கொலைகளை புலிகளின் தற்கொடையுடன் ஒப்பிடுவதும் நடக்கிறது.

ஒருவர் ஒன்றை தான் அடைவதற்காக

அல்லது தனக்கு அது கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தனது உயிரை மாய்ப்பது தற்கொலையாகும்.

தனக்கென்றில்லாது ஒரு சமூகம்

அல்லது தனது அடுத்த சந்ததி வாழ

அல்லது ஏற்படப்போகும் அழிவை தடுத்து மக்களை காப்பாற்ற

அல்லது தமது நண்பர்களின் இழப்பை குறைக்க

தனது உயிரை கொடுத்தல் என்பது தற்கொடையாகும்.

புலிகள் தாம் வாழவோ தனக்கு சொர்க்கம் கிடைக்கவோ

அல்லது சொர்க்கத்தில் சில சலுகைகள் கிடைக்கவோ

தமது உயிரைக்கொடுத்தவரல்லர்.

 

போங்கப்பா அதுக்கெல்லாம் மனித நேயமும்

உயிர்களை விரும்புதலும் மிக மிக முக்கியம்.

 

அழும் தனது சொந்த குழந்தையின்

அழு குரலுக்கே மனம் கசியாது தனக்கு சொர்க்கம் வேண்டி.......???

Edited by விசுகு
  • Like 1

Share this post


Link to post
Share on other sites
பட்டது + படிச்சது + பிடித்தது - 159
 
பலயீனம்...
 
இலங்கையில் நடந்த தாக்குதல்களுக்கு பலவாறும் உரிமை கோருகிறார்கள்.
நியூசிலாந்துக்காக பழி வாங்கினோம்
சிரியாவில் அழித்ததற்காக பழி வாங்கினோம்
சொர்க்கத்துக்கு போவதற்காக பழி வாங்கினோம்.
 
ஆனால் அதற்காக இலங்கையை ஏன் தேர்வு செய்தார்கள் என்பதை
எவரும் உணர்கிறார்களில்லை
அரசு உட்பட.
 
அரசும்
அவர்கள் சொல்லும் காரணங்களையே சொல்கிறதே தவிர
இலங்கை எதற்காக தேர்வு செய்யப்பட்டது என்பதை
சொல்லவும் இல்லை ஏற்றுக்கொள்ளப்போவதுமில்லை.
 
ஊரில் சொல்வார்கள் இடம் கிடைச்சா எல்லோரும்
............... என்று?????
 
இது தான் நடந்தது.
இலங்கை அந்தளவுக்கு பலயீனமாக இருக்கிறது.
 
உண்மையை உணர்ந்து ஏற்றுக்கொண்டு இனங்கள்
ஐக்கியப்படும்வரை
இது தொடரும் போலத்தான் தெரிகிறது
  • Like 1

Share this post


Link to post
Share on other sites
பட்டது + படிச்சது + பிடித்தது - 160
 
தாயகப்பகுதிகளில் அகதிகளின் குடியேற்றமும் எம்மவர் புரிதலும்
 
நீர்கொழும்புப் பகுதியில் தங்கவைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் மற்றும் மியன்மார், சிரியா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஏதிலிகளை வடக்கு மாகாணத்தில், வவுனியாவிலும் யாழ்ப்பாணத்திலும் தங்க வைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அறிய முடிகின்றது.
 
இதற்கு ஈழத்தவரிடையே ஆதரவும் எதிர்ப்பும் தெரிவிக்கப்படுகிறது.
இதில் ஆதரவு தெரிவிப்போர் ஒரு படி மேலே சென்று
புலத்தில் எம்மவருக்கு தஞ்சம் கொடுக்கப்பட்டதே
தங்க அனுமதியளிக்கப்பட்டதே அதே போல நாமும் நடந்து கொள்ளணும் என்று சொல்கிறார்கள்.
 
உண்மையில் இதுவும் ஒருவகை அறியாமையே.
புலத்தில் அகதிகளை ஏற்றல் அல்லது தங்குமிட அனுமதி தரல் என்பது
எழுந்தமானமாக செய்யப்படுவதல்ல.
 
தத்தமது நாட்டின் குடிப்பரம்பலை மாற்றாதவகையிலும்
தத்தமது குடி மக்களின் வாக்குப்பலத்தை பாதிக்காத வகையிலும்
தத்தமது நாட்டுக்கு தேவைப்படும் மனிதவலுவைத்தரக்கூடியவர்களையும்
இதையும் தாண்டினால் நீண்ட கால அடிப்படையில் கூட தமது பொருளாதாரத்தால் சுமக்கக்கூடியவர்களையும் மட்டுமே
அந்நாடுகள் உள்ளெடுக்கின்றன.
இங்கே ஒரு ஊரில் குடி புகுவதற்கு கூட சில கட்டுப்பாடுகளும்
அனுமதிக்காக காத்திருத்தலும் உண்டு.
சில அடுக்குமாடி குடியிருப்புக்களில்
ஒரு குறிப்பிட்ட வீதப்படி தான் மக்கள் கலப்பு அனுமதிக்கப்படும்.
 
ஆனால் இவை சாதாரண பொது மக்களின் கண்களுக்கு தெரியவருவதில்லை.
அதற்கு பொறுப்பானவர்கள் பார்த்துக்கொள்வார்கள்.
 
இவற்றைக்கொண்டு பார்த்தால்
தாயகத்தில் குடியேற்ற முயற்ச்சிக்கப்படுபவர்கள்
எமது மண்ணுக்கு எந்த வகையிலும் பொருத்தமற்றவர்கள்
தேவையற்றவர்கள்
அந்த பகுதியின் தன்மையை மாற்றக்கூடியவர்கள்..

Share this post


Link to post
Share on other sites

ஆனால் இவர்கள் தற்காலிகமாகவே தங்குவார்கள் என்று எண்ணுகிறேன், ஐ.நா அவர்களை வேறு நாடுகளில் புகலிட தஞ்சம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக வாசித்தேன்.

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

.

22 minutes ago, ஏராளன் said:

ஆனால் இவர்கள் தற்காலிகமாகவே தங்குவார்கள் என்று எண்ணுகிறேன், ஐ.நா அவர்களை வேறு நாடுகளில் புகலிட தஞ்சம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக வாசித்தேன்.

நானும்  பிரான்சுக்கு தற்காலிகமாகத்தான்  வந்து  தங்கினேன்  சகோ.....

Edited by விசுகு

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு