யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
விசுகு

பட்டது + படிச்சது + பிடித்தது - விசுகு

Recommended Posts

பட்டது + படிச்சது + பிடித்தது - 169
 
தமிழர்கள் நல்லவரா? கெட்டவரா??
 
அண்மையில் நடக்கும் சம்பவங்களை பார்த்தபோது இப்படி கேட்டக்தூண்டியது.
 
பா.இரஞ்சித் என்ற ஒரு திடீரென முளைத்த கொம்பு ஒன்று
விடுதலைப்புலிகள் மீது விமர்சனம் இருக்கு என்று
குடையை வீட்டுக்குள் பிடித்தபடி துள்ளுது.
 
இன்னொன்று இந்திய இலங்கை இனப்படுகொலையை
அப்படியே முழுமையாக விழுங்கிவிட்டு
தோசைக்கான மாவின் புளிச்சல் அளவியல் கணக்கெடுத்து வாங்கிக்கட்டுது...??
 
நாம நல்லவர்கள் தானே?
இவர்கள் மீது எமது விரல் கூட படாதிருக்கே..???

Share this post

Link to post
Share on other sites
பட்டது + படிச்சது + பிடித்தது - 170
 
இலங்கையில் பட்டினியால் தற்கொலைகளும் நாம் வளர்த்த கனவு தேசமும்..
 
2003இல் 2 மாத ஓய்வில் குடும்பமாக தாயகம் சென்றிருந்தோம்.
இந்த 2 மாதத்தில் இலங்கையின்
முக்கியமாக தமிழர் தாயகத்தினை முழுமையாக என் பிள்ளைகளுக்கு காட்டினேன்.
 
இதன் காரணமாக கண்டி வீதியை அடிக்கடி கடக்க வேண்டி வந்தது.
இதற்காக இபோச தாயக வாகனச்சேவை உட்பட அனைத்து போக்குவரத்து வாகனங்களையும் பயன்படுத்தினோம்.
 
வாகனத்தில் ஏறியதும்
எனது கடைசி மகள் (அப்போது 3 வயது)
பிச்சைகாரர்களுக்கு போடுவதற்கென சில்லறை கேட்டு வாங்கி வைத்துக்கொள்வாள்
(வழமையாக அவர்கள் வருவதால்).
 
அன்றும் அவ்வாறு தான்
பயணம் செய்த வாகனம் தாண்டிக்குளத்தை கடந்து ஓமந்தை அடைந்த போது
அவளது கையிலிருந்த பணத்தை காட்டி
ஏனப்பா இந்த இடத்தில் ஒருத்தரும் காசு கேட்பதில்லை என்று கேட்டாள்.
அப்பொழுது தான் நாமும் அதை உணர்ந்தோம்.
தாண்டிக்குளத்துக்கும் ஓமந்தைக்குமிடையில்
பல இடங்களில் வாகனத்தை நிறுத்தி
சாப்பிட்டு சாமி கும்பிட்டு இளைப்பாறி சென்ற போதும் எவருமே ஏறவில்லை....
 
அப்பொழுது அவளுக்கு நான் சொன்னது :
இங்கு தான் போர் நடந்தது. (அதற்கு சாட்சியாக தலையற்ற பனைகளை காட்டினேன்)
இங்கு தான் அநாதரவானவர்கள் அங்கவீனர்கள் எல்லாவற்றையும் இழந்தவர்கள் அதிகம்.
ஆனால் அவர்களையெல்லாம் சுமக்க தலைவர் இங்கு தான் இருக்கிறார்.
அவர் எல்லோரையும் பார்த்துக்கொள்கிறார் என்று.
 
எவ்வாறு நாம் ஒரு தேசத்தை கனவு கண்டோமோ
அவ்வாறானதொரு கனவு தேசத்தை
தலைவர் உருவாக்கி நடாத்தியதை கண்ணால் கண்டேன்

Share this post

Link to post
Share on other sites
பட்டது + படிச்சது + பிடித்தது - 171
 
கல்முனையும் செருப்பும் - வாக்குறுதியுடன் மீண்டும் மீண்டும் கூட்டமைப்பும்
 
உண்மையில் நான் கூட்டமைப்பின் மிகவும் ஆழமான ஆதரவாளன்.
எனக்கு தலைவர் பிரபாகரனாலேயே முடியாததை
இவர்களால் சிங்களத்திடமிருந்து எதையும் வாங்கித்தரமுடியாது என்று தெரியும்.
வரலாறும் போராட்டமும் எம் கண் முன்னே தான் நடந்தது.
 
அந்தவகையில் தலைவரால் முன் மொழியப்பட்டு
இருக்கும் அமைப்புக்களில் வலுவான அமைப்பு என்ற ரீதியில்
இன்றும் கூட்டமைப்புக்கு ஆதரவுண்டு.
 
ஆனால் அவர்கள் தம்மை தங்கள் வலுவை உணர்ந்ததாக தெரியவில்லை.
அதற்கான பதில் தான் கல்முனை செருப்படி.
 
கொடுத்த வாக்குறுதிகளையே நிறைவேற்ற முடியாத
அடுத்தடுத்து இழுத்தடிப்பு வாக்குறுதிகளை கொடுத்துக்கொண்டிருக்கும் கூட்டமைப்பு
தம்மை உணர்ந்திருந்தால்
இன்னொரு வாக்குறுதியுடன் மக்கள் முன் செல்வார்களா???
 
உன்னை உணர்......

Share this post

Link to post
Share on other sites
பட்டது + படிச்சது + பிடித்தது - 172
 
இந்திய பாராளுமன்றில் தமிழ் வாழ்க முழக்கம்
 
நன்றாக பாருங்கள்.
கிட்டத்தட்ட இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்ததிலிருந்து
இதே கட்சிகள் தான் இந்திய பாராளுமன்றத்தில் சத்தியப்பிரமானம் எடுக்கிறார்கள்.
தமிழகத்தையும் ஆழ்கிறார்கள்.
எதற்காக அப்பொழுதெல்லாம் தோன்றாத அல்லது தேடப்படாத ஒன்று
இப்பொழுது தூக்கப்படுகிறது.
 
வேறொன்றுமில்லை. பயம்.
இனி தமிழகத்தில் இது தான் மந்திரம்.
இது தான் விரும்பப்படும் கவனிக்கப்படும் விடயம்.
 
நினைத்தபடி எல்லாமே சரியாகவே நகர்கிறது.
 
இந்த பயத்தை உருவாக்கியவன் ஒருவனே. அவன் சீமான்.
நன்றி சீமானுக்கு......

Share this post

Link to post
Share on other sites
பட்டது + படிச்சது + பிடித்தது - 173
 
தள்ளி நின்று விளையாடுங்கள்...
 
விஜய் தொலைக்காட்சி வருடாவருடம் நடாத்தும் பிக்பாஸ்-3 நிகழ்ச்சி ஆரம்பமாக இருக்கிறது. இந்நிகழ்ச்சியில் மட்டுமல்ல விஜய் தொலைக்காட்சியின்
பல நிகழ்ச்சிகளிலும் கால் பதிக்கும் பிரபலமாக இருந்து காணாமல் போனவர்கள்
பிரபலமாக உயர ஆசைப்படுபவர்கள்
இந்நிகழ்ச்சிகளில் முகம் காட்டுவதினூடாக
தம்மை மக்கள் முன் கொண்டு செல்ல முயல்கிறார்கள்.
 
அந்தவகையில் ஈழத்தமிழரும் இதில் தலை காட்டுவதை
பெரும் முன்னெடுப்பாக நினைத்து முயல்கிறார்கள்
 
இதில் ஈழத்தமிழ் சிலரும் பிரபலமாகி வருகிறார்கள்.
அதில் முதன் முதலாக பிரேம் கோபாலும் (நானறிந்தவரை) அதன் தொடர்ச்சியாக பலரும் தொடர்கிறார்கள்.
 
இந்தமுறை பிக்பாஸ்-3 தொடங்குமுன்னே
எமது பிரதேசவாதிகள் சிலர் கொய்யோ முறையோ என அழத்தொடங்கிவிட்டார்கள்.
 
காரணம் இருக்கு. அதில் பங்கெடுக்கும் ஒருவர் புங்குடுதீவை சேர்ந்தவர்.
அவர் வரும் முன்பே
தன்னை தன் நிலைப்பாடை மகிரங்கப்படுத்தும் முன்பே
கண்டதாலும் எறிதல் தொடங்கிவிட்டது.
 
ஏற்கனவே ஒரு காணொலி எடுத்தாலும்
எம் மண்ணை அவுசுடன் ஒப்பிடவேண்டிய தேவை எழுந்துள்ள நிலை
கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ள நிலையில்
இது போன்ற எறிதல்கள் தொடர்வது
எம்மை குறிகிற வட்டத்துக்குள் அடைக்கும் முயற்ச்சியாகவே பார்க்கப்படும்.
புங்குடுதீவாமே அதனால் நிச்சயமாக தாயகத்தை காட்டிக்கொடுப்பார்
போன்ற பதிவுகளையும் பார்க்கமுடிகிறது.
 
வேண்டாமே.
நாங்கள் நூறு தடவை எதையும் சொல்வதில்லை.
நல்லவர்களுக்கு மட்டுமே எம்மால் நல்லவர்களாக இருக்கமுடியும்.

Share this post

Link to post
Share on other sites
8 hours ago, விசுகு said:

யார் அந்த ஆணா அண்ணா புங்குடுதீவு?...அந்த பெண் சக்தி டிவியில் அறிவிப்பாளாராம் என்று எங்கேயோ வாசித்தேன்...நிகழ்சசி தொடங்க முன்னரே போட்டி தொடங்கிட்டுதா?...அநேகமாய் இந்த இருவரில் ஒருவர் தான் முதலாவதாய் வருவார் 

Share this post

Link to post
Share on other sites
37 minutes ago, ரதி said:

யார் அந்த ஆணா அண்ணா புங்குடுதீவு?...அந்த பெண் சக்தி டிவியில் அறிவிப்பாளாராம் என்று எங்கேயோ வாசித்தேன்...நிகழ்சசி தொடங்க முன்னரே போட்டி தொடங்கிட்டுதா?...அநேகமாய் இந்த இருவரில் ஒருவர் தான் முதலாவதாய் வருவார் 

ஆம் ஆண் புங்குடுதீவை சேர்ந்தவராம் பெண் சக்தி ரிவி அறிவிப்பாளர் திருகோணமலையை சேர்ந்தராம் வரட்டும் வாய்ப்புக்களை பெறட்டும்

Share this post

Link to post
Share on other sites

இவர்கள் இருவரினதும் பெயர் என்ன?

Share this post

Link to post
Share on other sites
பட்டது + படிச்சது + பிடித்தது - 174
 
வாழ்க்கை மிக அற்புதமானது - பக்கத்து வீட்டுக்காறனை பார்த்து உன் வாழ்வை நீ அமைக்காதவரை....
 
ஒருவரை பார்த்தவுடன் அவரை நாம் எடை போடமுடியாது. வாழ்வு எப்பொழுதும் இனிமையாக இராது. ஓடிக்கொண்டிருக்கும் அல்லது துரத்திக்கொண்டிருக்கும். நாம் ஓடிக்கொண்டிருப்பதால் அல்லது வாழ்வு எம்மை துரத்திக்கொண்டிருப்பதால் மற்றவர்களெல்லாம் இந்த துரத்தலற்று ஓட்டமற்று வாழ்கிறார்கள் என தப்புக்கணக்கு போடுவதும் அவரைப்போல வாழ எம்மை வாழ்வை மாற்றுவதுமே எல்லா சிக்கல்களுக்கும் காரணமாகிவிடுகிறது.
 
என் வாழ்வில் பலரை பார்த்திருக்கின்றேன். ஒருவனை அடுத்த பல வருடங்களுக்கு நடுவீதியில் நிற்கும் அளவுக்கு செய்து விட்டு தங்கள் வாழ்வை எள்ளவும் விட்டுக்கொடாது அதே பகட்டு வாழ்வை தொடர்வார்கள்.
 
அகள பாதாளத்தில் விழுவதென்பார்களே அது தான் இது.
அதற்குள் புகந்தபின் இது தான் நிலை.

  • Like 1

Share this post

Link to post
Share on other sites

பட்டது + படிச்சது + பிடித்தது - 175

ஒருவரைப்பார்த்தவுடன் நாம் எடுக்கும் முடிவுகள்???

இவரது திருமணத்துக்கு நான் சென்றிருந்தேன்.
மிகப்பெரிய தாடி மீசையுடன் தான் இவர் தாலி கட்டினார்.
அப்பொழுது இதை பற்றி பக்கத்தில் இருப்பவருடன் பேசினோம். அவர் பல காலமாக இப்படித்தான். தாடியை மட்டும் குறைக்கவே மாட்டார் என்றார்கள். திருமணத்தின் போதாவது கொஞ்சம் குறைத்திருக்கலாம். இது அதிகம் என்பதாகத்தான் எமது பேச்சிருந்தது.

இது பற்றி எனது மக்களிடமும் சொன்னேன்.
ஆனால் யாருக்குமே இவர் இந்தப்போட்டிக்காகத்தான் இந்தளவுக்கு வளர்த்து வைத்திருக்கிறார் என்பது தெரிந்திருக்கவில்லை.

இப்படித்தான் நாம் பின்னால் எதையாவது பேசி விட்டுப்போகின்றோம். ஆனால் உண்மை???

safe_image.php?w=540&h=282&url=http%3A%2
ILAKKIYAINFO.COM
 
பிரான்ஸ் தலைநகர் பரிஸில், தாடி வைத்திருப்போருக்கான பிரத்யேக சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.

Share this post

Link to post
Share on other sites
Posted (edited)
பட்டது + படிச்சது + பிடித்தது - 176
 
கனடாவில் ஈழத்தமிழனின் ஊடக வரலாற்று பதிவு " IBC தமிழா"
 
கனடாவில் IBC தமிழின் ஊடக நிகழ்வு நடந்து முடிந்திருக்கிறது.
 
இந்த நிகழ்வுக்கான செலவை தனியே செய்த ஊடகத்தின் அதிபர்
அது தனக்கு இத்தனை லட்சம் நட்டத்தை தரும் என அறிந்தே செய்திருக்கிறார்.
அவரது கணிப்புப்படி 20 லட்சம் டொலர்கள் நட்டம் வரும் என கணித்ததாக தகவல்கள் சொல்கின்றன.
 
20 லட்சம் டொலர்கள் நட்டத்தை முன் கூட்டியே அறிந்தும்
இவ்வளவு பணத்தை செலவளிக்கும் அல்லது இழக்க தயாராக உள்ள அதே அதிபர்
ஊரிலுள்ள வறுமைக்கோட்பாட்டுக்கு கீழே உள்ளவர்களை சந்தித்து
மற்றவர்களுக்கு அதை அறிவித்து வருகின்றமை தான் முரணாக உள்ளது.
 
இதில் இன்னொரு வேடிக்கை என்னவெனில்
ஏதாவது ஒரு நிகழ்வுக்கு அல்லது மக்கள் நலன் சார் திட்டங்களுக்கு
ஒரு ஈரோ அல்லது 5 ஈரோக்கள் டிக்கற் எடுக்கும்படி கேட்டாலே
தனது வீட்டில் உலை வைத்தே பல மாதம் என சினுங்கும் பல கலைஞர்கள்
விமானம் ஏறி அங்கு சென்றிருப்பது.
 
வேசம் என்பது இது தானோ????
Edited by விசுகு

Share this post

Link to post
Share on other sites
6 hours ago, விசுகு said:

இது உண்மையா?...நட்டம் வரும் என்று தெரிந்தும் எதற்காக துணிந்து இறங்கினார்? புகழுக்காகவா?..இன்றைய கால கட்டத்தில் ஏதோ ஒரு சுய நலம் கருதியே செய்வார்கள்..இந்த காசை ஊரில் இருக்கும் வறிய கிராமங்களை அபிவிருத்தி செய்ய கொடுத்திருக்கலாமே?

கனடாக்காரர் யாராவது  இந்த விழாவுக்கு போன செலமன்

Share this post

Link to post
Share on other sites

பட்டது + படிச்சது + பிடித்தது - 177

மகனிர் மட்டும்...

ஊரில பெரியவர்கள் சொல்வார்கள்.

ஆயிரம் ஆண்களை ஒரு இடத்தில் பல காலம் வைக்கமுடியும்.

ஆனால் 2 பெண்களை ஒரே இடத்தில் ஒரு நாள் வைத்திருக்கமுடியாது கூடாது என்று

சரி போலத்தான் கிடக்கு..

சத்தியமா நான்
Vijay TV பார்ப்பதில்லை.

Aucune description de photo disponible.
 
Share this post

Link to post
Share on other sites
5 minutes ago, விசுகு said:

ஆனால் 2 பெண்களை ஒரே இடத்தில் ஒரு நாள் வைத்திருக்கமுடியாது கூடாது என்று

ஊரில முன்னர் வேலியில் நின்று கதைக்கிறதால வாற பிரச்சனை.சமைத்து போட்டு வேற வேலையும் இல்லைத் தானே.
இப்ப அப்படியா பெண்களெல்லாம் ரொம்ப பிஸி.

Share this post

Link to post
Share on other sites
2 minutes ago, ஈழப்பிரியன் said:

ஊரில முன்னர் வேலியில் நின்று கதைக்கிறதால வாற பிரச்சனை.சமைத்து போட்டு வேற வேலையும் இல்லைத் தானே.
இப்ப அப்படியா பெண்களெல்லாம் ரொம்ப பிஸி.

ஒன்று மட்டும் தெரியுதண்ணா

என்னைப்போல  நீங்களும்

சத்தியமா
Vijay TV பார்ப்பதில்லை :grin::grin::grin::grin:

Share this post

Link to post
Share on other sites
பட்டது + படிச்சது + பிடித்தது - 178
 
புலிகளை அழித்தால் உங்களுக்கு தீர்வு தருவேன் - வாக்குறுதியை மறந்த அரசு
 
இவ்வாறு சம்பந்தர் ஐயா சொல்லியுள்ளார்.
2009 இறுதிப்போர் நடந்து கொண்டிருந்த போது
வீதியிலிறங்கி போராடிக்கொண்டிருந்த புலம் பெயர் மக்களுக்கு
கூட்டமைப்பு ஏன் மௌனம் சாதிக்கிறது என்ற சந்தேகமும்
கூடவே இதற்குள் பெரும் துரோகமும் இருப்பதாகவும் 
கூட்டமைப்பு தனது மௌனத்தின் மூலம் புலிகளை அழிக்க உதவுகிறது என்பதும் தெரிந்திருந்தது.
 
அதனால் தொடர்ச்சியாக தான் கூட்டமைப்பின் மீது சந்தேகங்களும்
அவர்களது அரசியல்மீது ஒருவித பயமும் வந்திருந்தது.
அதன் அடுத்த கட்டம் தான்
கூட்டமைப்பு மீதான   வெறுப்பும்
புதிய கட்சி பிறப்பும்
விக்கியரை நோக்கி புலம் பெயர் மக்கள் சென்றமையுமாகும்.
 
இப்பொழுது சம்பந்தரே
தங்களுக்கு போர் காலத்தில் புலிகளை அழித்தவுடன்
தமிழருக்கான தீர்வை தருவதாக உறுதியளித்ததாக திருவாய் மலர்ந்தருளியுள்ளார்.
 
இப்போ கேள்வி என்னவென்றால்
உங்களுக்கு வாக்குறுதி தந்தது யார்??
இதை ஏன் நீங்கள் தமிழ் மக்களுக்கு இதுவரை தெரியப்படுத்தவில்லை??
வாக்குறுதிப்படி புலிகளை அழிப்பதற்கு எவ்வாறு நீங்கள் உதவினீர்கள்??
 
கூட்டமைப்பு
தற்பொழுது பிரான்சுக்கு வருவதை தவிர்த்து வருகிறது.
வந்தால் என்னுடைய கேள்விகள் நேரே வைக்கப்படும்.
  • Thanks 1

Share this post

Link to post
Share on other sites

பட்டது + படிச்சது + பிடித்தது - 96

இன்று கரும்புலிகள் நாள்

காலையில் எழும்பும் போதே ஒருவித சோர்வு ஒட்டிக்கொள்ளும் இவர்களின் தியாகங்களுக்கும் ஏதுமற்று போனதே என.

ஒவ்வொரு கரும்புலியும் இறுதியாகச்சொன்ன வார்த்தை தலைவர் கவனம்
புலிகளின் தாகம் தமிழீழத்தாயகம்

உலகில் வரலாறுகளில் இப்படியானவர்கள் இருந்தார்கள் என்று சொன்னால் நம்பமுடிவதில்லை

இவர்கள் எம் கண் முன்னே
திகதி குறித்து
இலக்கை தேடிச்சென்று மாண்டவர்கள்
எமக்கு தடையாக இருந்தவற்றை அகற்றிச்சென்றவர்கள்

உலக வரலாற்றில் இவை அதிசயம்
தமிழருக்கு இவர்கள் பொக்கிசங்கள்

தமிழ் உள்ளவரை
உங்கள் நினைவு இருக்கும் மாவீரரே.

ஒவ்வொரு கரும்புலியும் இறுதியாகச்சொன்ன வார்த்தை தலைவர் கவனம்
புலிகளின் தாகம் தமிழீழத்தாயகம்

அதை காக்க பாதுகாக்க ஒன்றாகணும் தமிழர்கள்.

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு