Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

பட்டது + படிச்சது + பிடித்தது - விசுகு


Recommended Posts

மன்னிக்கவும்

Edited by விசுகு
Link to comment
Share on other sites

 • Replies 339
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

பட்டது + படிச்சது + பிடித்தது - 185
 
தமிழர்களுக்கான பெட்டி அடிப்பு
 
ஒரு இனம் விடுதலை பெற வேண்டுமானால் அது ஒற்றுமையாக பலமானதாக இலக்கை நோக்கி பயணிக்கணும் அதற்கு அதனுள் உள்ள பிரிவுகள், பிளவுகள் களையப்படணும்.
 
ஈழத்தமிழரைப்பொறுத்தவரை
அவன் எந்த மதத்துக்கு மாறினாலும் எந்த தேசத்துக்கு புலம் பெயர்ந்தாலும்
கொண்டு திரிபவை மதமும் அது சார்ந்த சாதியமும்.
 
இந்த சாதியத்தில் மேல் சாதி கீழ்ச்சாதி என்று கூட இல்லை
ஒன்றுக்கொன்று மேல் சாதி கீழ்ச்சாதி என வகுத்து
ஒன்றுடன் ஒன்று முரண்பட்டபடியே தான் உள்ளது.
அடுத்த தலைமுறை இதிலிருந்து விலக முயன்று திருமணங்களை தமக்குள் நடாத்தினாலும்
காலப்போக்கில் தாம் உயர்ந்து விட்டதாக கொலரைத்தூக்குவதையே காணமுடிகிறது.
 
அந்தளவுக்கு தமிழரை சூழ்ச்சியால் பிரிப்பதற்கான
இந்த சாதியத்தை முதன்மைப்படுத்தி
பெரும் தந்திரத்தை வகுத்தவர்கள் வென்றிருப்பதை காணலாம்.
 
இதை உணர்ந்தவர்கள்
தலைவர் பிரபாகரனைப்பின்பற்றி
அவரை பலப்படுத்தி
தாயகத்தில் இதனை அழிக்க எடுக்கப்பட்ட முயற்சி கூட
இதே வலையை வகுத்தவர்களால் முறியடிக்கப்பட்டபின்........
 
தமிழரைச்சுற்றி பெட்டி அடிக்கப்பட்டுள்ளதும்
அதனை உடைக்க முயல்பவர்கள் அழிக்கப்படுவதும் அல்லது தோல்வியடைவதும்
ஒரு புறம் நடக்க
அதிலிருந்து தப்ப முயல்பவர்களுக்கு ஒரு பாதை திறந்து விடப்படுகிறது.
இதன் மூலம் விடுதலை என
அவர்கள் அந்த வளியே சென்று
மீண்டும் மதம் சாதி பிரதேசவாதம் என சகதிக்குள் மூழ்குவதை பார்க்கும் போது
இது தான் தமிழர்களுக்கு இன்றைய உலகம் விட்டு வைத்திருக்கும்
ஒரேயொரு வாழ்வியல் என்பது புலனாகிறது.
இப்படியே வாழ்ந்து விட்டு போகவேண்டியது தானா????
Link to comment
Share on other sites

பட்டது + படிச்சது + பிடித்தது - 186
 
நீங்க பணக்காறரா??
 
வருடம் முழுவதும் 7 நாளும் ஓய்வில்லாத வேலை.
அதனால் 8ம் மாதம் வந்தால் தொழிலை பூட்டிவிட்டு ஓவ்வெடுக்கச்செல்வது வழமை.
இந்தமுறை உறவின் திருமணம் மலேசியாவில் நடந்ததால் மலேசியா சிங்கப்பூரில் 3 கிழமை.
 
அதன் பின்னர் பிரான்சில் ஒரு கிராமத்தில் ஒரு கிழமை என ஓய்வு கழிந்தது.
 
ஒரு தம்பி கேட்டார் அந்த மாதிரி வாழ்க்கையை வாழ்கிறீர்கள்.
நீங்க பணக்காறர் தானே என.
 
அவருக்கு நான் சொன்னது:
இந்த இடங்களுக்கு நீங்கள் போகாததால் இந்தக்கேள்வி உங்களிடமிருந்து வருகிறது.
நான் பரிசிலிருப்பதை விட இந்த இடங்களில் செலவு குறைவு.
 
பணக்காறரா என்றால் ஆமாம்.
 
இரவு சாப்பாட்டுக்கு ஒரு பத்து வகை மேசையிலிருக்கு.
அதில் இரண்டையோ மூன்றையோ சாப்பிட்டு விட்டு
அது செமிக்க கொஞ்ச தூரம் நடந்துவிட்டு வந்து படுக்கப்போகின்றேன்.
 
தரவு : உலகத்தில் அரைவாசி மக்கள் இரவு உணவின்றி பசியுடன் படுக்கைக்கு செல்கின்றனர்.
 
Link to comment
Share on other sites

பட்டது + படிச்சது + பிடித்தது - 187
 
ஒன்றுமே புரியலே உலகத்திலே....???
 
இரு நாட்டின் தலைவர்கள்
இருவருக்கும் அவரவர் மொழியைத்தவிர வேறெதுவும் தெரியாது.
 
அவர் சொல்வதை இவருக்கோ
இவர் சொல்வதை அவருக்கோ மொழி மாற்றம் செய்யும் கருவிகளும் பூட்டப்படவில்லை
 
ஆனால் ஏதோ விளங்கிக்கொண்டது போல் எவ்வாறு கை மொழி மூலம் சமாளிக்கிறார்கள் பாருங்கள்.
 
இந்த மொழியும் மக்களை ஐனநாயகம் என்று ஏமாற்றும் திறமையும் இருப்பதால் தான் இரு பெரும் ஐனநாயக நாடுகளின் தலைவர்களாக மிளிர்கிறார்கள்.
 
இவர்களை நம்பி உலகம் உருப்படும் என்கிறார்கள்????
 
 
 
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:
பட்டது + படிச்சது + பிடித்தது - 187
 
ஒன்றுமே புரியலே உலகத்திலே....???
 
இரு நாட்டின் தலைவர்கள்
இருவருக்கும் அவரவர் மொழியைத்தவிர வேறெதுவும் தெரியாது.
 
அவர் சொல்வதை இவருக்கோ
இவர் சொல்வதை அவருக்கோ மொழி மாற்றம் செய்யும் கருவிகளும் பூட்டப்படவில்லை
 
ஆனால் ஏதோ விளங்கிக்கொண்டது போல் எவ்வாறு கை மொழி மூலம் சமாளிக்கிறார்கள் பாருங்கள்.
 
இந்த மொழியும் மக்களை ஐனநாயகம் என்று ஏமாற்றும் திறமையும் இருப்பதால் தான் இரு பெரும் ஐனநாயக நாடுகளின் தலைவர்களாக மிளிர்கிறார்கள்.
 
இவர்களை நம்பி உலகம் உருப்படும் என்கிறார்கள்????
 
 
 

தலைவர் பிரபாகரனுக்கு ஆங்கிலம் தெரியாது என நக்கல் அடித்தவர்களுக்கும், எழுதிக்கொடுத்ததை பார்த்து வாசிக்கின்றார் என கிண்டல் செய்தவர்களுக்கும் இந்த காணொலி சமர்ப்பணமாகட்டும்.

இருந்தாலும் டொனால்ட் ரம்ப் இப்படி சிரித்து மகிழ்ந்ததை நான் இதுவரை பார்க்கவில்லை.

 • Like 1
Link to comment
Share on other sites

2 hours ago, குமாரசாமி said:

தலைவர் பிரபாகரனுக்கு ஆங்கிலம் தெரியாது என நக்கல் அடித்தவர்களுக்கும், எழுதிக்கொடுத்ததை பார்த்து வாசிக்கின்றார் என கிண்டல் செய்தவர்களுக்கும் இந்த காணொலி சமர்ப்பணமாகட்டும்.

இருந்தாலும் டொனால்ட் ரம்ப் இப்படி சிரித்து மகிழ்ந்ததை நான் இதுவரை பார்க்கவில்லை.

சிறு திருத்தம்  அண்ணா

தலைவர்  ஒரு  போதும்  தன்னை  தலைவர்  என்று  சொன்னமில்லை

நாட்டை  ஆள்வேன்  என்றும் சொன்னதில்லை

நாட்டை அடைந்ததும்

அதை  தகுதியானவர்களிடம்  ஒப்படைத்துவிட்டு

துன்பப்பட்ட  மக்களோடு  ஒதுங்கி  விடுவேன்  என்று  தான்  சொன்னார்

அவர்  ஒரு  போராளி.

Edited by விசுகு
 • Like 2
 • Thanks 1
Link to comment
Share on other sites

பட்டது + படிச்சது + பிடித்தது - 188
 
விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனின் லண்டன் வருகையும் எம்மவரும்...
 
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி என்பது
ஈழத்தமிழரின் போராட்டத்தை ஆதரிக்கும் ஏராளமான இளைஞர் கூட்டத்தை
தன்னகத்தே கொண்ட கட்சியாகும்.
இக்கட்சியின் தேர்தல் கால கூட்டுக்களால்
அதன் தலமை தற்பொழுது கொள்கைகளில் பேச்சுக்களில்
நழுவல் போக்கை கடைப்பிடிப்பது அதன் தொண்டர்களுக்கே தலையிடியாக உள்ளது.
 
அந்தவகையிலே திருமாவளவனின்
தற்பொழுதைய பேச்சுக்களையும் செயல்களையும்
தொடர்ந்து பார்த்து வருவோருக்கு
தலைவர் கூற்று சம்பந்தமான திருமாவளவனின் லண்டன் பேச்சு ஆச்சரியமானதல்ல.
அதுவும் தலைவரது எதிராளிகளால் அழைக்கப்பட்ட இடத்தில்
அவர்களுக்கு முன்னால் இதை தெரிவிப்பதே
ஒருவித அரசியல் ரௌடித்தனம் தான்.
 
நசுக்கிக்கொண்டிருந்த காங்கிரசின் ஆட்சியும்
அதற்கு முண்டு கொடுத்தபடி இருந்த திமுகவும்
கொஞ்சம் ஒதுக்கப்பட்டாலும் மூச்செடுத்து விடலாம் என்பது தான்
ஒட்டு மொத்த தமிழர்களின் வேண்டுதலாக இருந்தபோது இவரின் கதை.....????
 
ஆனால் அவரவர் உண்மை முகங்களை
மக்கள் முன்னால் அவரவரே காட்டும் காலப்பகுதி இது.
அதை மக்கள் உணரும் காலப்பகுதியிது.
காட்டிவிட்டு செல்கிறார்.
அவரது கட்சி தொண்டர்கள் இதனை புரிந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கலாம்.
மற்றும்படி தடி எடுத்தவன் எல்லாம் சண்டித்தனம் செய்வது போல
அவரை கேவலப்படுத்துவதோ
அல்லது தமிழகத்திலுள்ள கட்சி சார்ந்த தொண்டர்களின் அடிதடிகளில்
ஈழத்தமிழர்கள் பகடைக்காய்களாவதோ தூர நோக்கில் நல்லதல்ல
Link to comment
Share on other sites

பட்டது + படிச்சது + பிடித்தது - 189
 
பிரபலமாகுதல்
 
ஊரில் ஒரு பழமொழி சொல்வார்கள்.
மாட்டுக்கு மாடு சொன்னால் கேட்காது
மணி கட்டிய மாடு சொன்னால் தான் கேட்கும் என்று.
 
எமது இனம் எம் கண்முன்னால் அழிக்கப்பட்ட போது
எம்மால் முடிந்தவரை வீதிக்கு வந்து குரல் கொடுத்தோம்.
ஆனால் எமது குரலுக்கு செவிசாய்த்தார்களா???
 
எம்மவரின் சொல் எடுபடணும் என்றால் நாம் பிரபலமாகணும்.
இன்றைய தமிழரின் நிலையில் இதை நாம் கவனிக்கணும் வளர்க்கணும்
 
அது படிப்பாக இருக்கலாம்
தொழிலாக இருக்கலாம்
பணமாக இருக்கலாம்
விளையாட்டாக இருக்கலாம்
கலையாகவும் இருக்கலாம்
 
அந்தவகையில்
அதை அடைய முயலும் எம்மவரை முடிந்தவரை ஆதரிப்பதும்
ஆதரவு தேடுவதும்
எமது கடமையாகும்.
 
அதனடிப்படையில்
Bigboss இல் அநேகரின் பாராட்டுக்களையும்
பல கோடி வாக்குகளையும் பெற்று
10 கிழமைக்கும் அதிகமாக
முதலிடத்திலிருக்கும் எமதூரவன் தர்சனையும்
லொஸ்லியாவையும் நாம் மேலும் ஊக்கப்படுத்தணும் வாக்களிக்கணும்.
அவர்களது குரலுக்கு மதிப்பை உண்டாக்கணும்.
 
எம்மவர் அனைவருக்கும் செய்தியை கொண்டு செல்ல
எம்மால் முடிந்ததை செய்யணும்
 
இதுவும் காலத்தின் தேவையே.
 
Link to comment
Share on other sites

பட்டது + படிச்சது + பிடித்தது - 190

காணாமல் போகுதல்

பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினம் இன்று (வெள்ளிக்கிழமை) என்பதால் இங்கு நடக்கும் ஒன்று கூடலுக்கு போகணும். கறுத்த சேட்டை எடுத்து வை என்றேன் மனைவியிடம். என்னப்பா 2 நாளா கால் நடக்க முடியல என்கிறீர்கள் ஒன்று கூடலில் நிற்கமுடியுமா என்றாள் மனைவி. முள்ளிவாய்க்காலில் என் இனம் பெற்ற வலியை நினைப்போம் என்றேன் நான்.

விடிய எழும்பும் போது கால் வலி இன்னும் அதிகமாகி விட்டது. மனைவிக்கு அதை காட்டிக்கொள்ளாமல் கடைக்கு வந்து ஒரு 3 மணிக்கு அங்கு சென்றேன்.

ஒரு 10 பேர் நின்றார்கள். மனம் உடைந்து போனது. சரி வருவார்கள் என 5 மணிவரை நின்றேன் ஒரு 20 பேர் தான். அத்தனையும் 30 வருடங்களாக நான் பார்த்த முகங்கள்.

கேள்வி 1: இந்த 20 பேருக்கும் தான் நாட்டில் காணாமல் போன உறவுகள் இருந்தார்களா?

கேள்வி 2: 2009 இறுதிப்போரிலே ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் காணாமல் போனதாக தமிழர்கள் சொல்வது பொய்யா? (அப்படி ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் காணாமல் போயிருந்தால் அவர்களது உறவுகள் தானும் வராதது ஏன்????)

தரவு 1: இதே சதுக்கத்தில் 2009 இறுதிப்போரின் போது கூடிய தமிழ் மக்களின் தொகை 45ஆயிரம் என பிரெஞ்சு காவல்த்துறையின் அறிக்கை கூறுகிறது.

தரவு2 : இறுதியாக வந்த அஜித்தின் திரைப்படத்தை பிரான்சில் தியேட்டரில் பார்த்த பார்வையாளர்களின் எண்ணிக்கை 35 ஆயிரம்.

அப்போ நாம் முற்றாக காணாமல் போய் விட்டோமா??😢😢😢

 
 
L’image contient peut-être : 3 personnes, personnes debout et plein air
L’image contient peut-être : 3 personnes, personnes souriantes, plein air
 
Edited by விசுகு
 • Like 2
 • Sad 1
Link to comment
Share on other sites

பட்டது + படிச்சது + பிடித்தது - 191
 
பிரபலங்கள் உதிக்கும் சொற்களின் பாய்ச்சல் வலிமை.
 
அண்மையில் பிரபலமாகுதல் பற்றி ஒரு பதிவு போட்டிருந்தேன்.
கொஞ்சம் எதிர்ப்பை தந்த பதிவு அது.
காரணம் என்ன அண்ணை
இந்த நிகழ்ச்சியில் பங்கு பற்றுபவர்களால் கூட நன்மை வரும் என்கிறார் என்று.
 
இதோ நான் எழுதியதற்கு ஒரு சான்று.
 
அமெரிக்க சீரியல் உலகத்தில்
நகைச்சுவையால் தனியிடம் பிடித்த Mindy Kaling தயாரித்து நடிக்கும்,
அடுத்த நகைச்சுவை தொடரில்
கனடாவில் வசிக்கும் இலங்கை தமிழ் யுவதியொருவர் நடித்துள்ளார்.
 
மைத்திரேயி ராமகிருஷ்ணன் என்ற தமிழ் யுவதியே நெட்ஃபிக்ஸ் தொடர்களில்
முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
 
17 வயதான இந்த யுவதி,
பாடசாலையில் நாடகங்களை தயாரித்து நடித்துள்ளார்.
கவனத்தை ஈர்த்த நாடகங்களில் நடித்ததை தொடர்ந்தே,
இந்த மகத்தான வாய்ப்பு அவரை தேடி வந்துள்ளது.
 
இந்திய, அமெரிக்க பின்னணியுடைய ஒரு இளைஞனை அடிப்படையாக வைத்து
தயாரிக்கப்பட்டுள்ள தொடரிலேயே மைத்திரேயி நடித்துள்ளார்.
 
ஊடகமொன்றிற்கு அளித்த போட்டியில்,
லங்கை எனது நாடு அல்லவென குறிப்பிட்டுள்ளார் மைத்திரேயி.
ஆனால் நிச்சயமான தமிழ்தான் எனது கலாச்சாரம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
 
“இலங்கை எங்களை அழிக்க முயன்ற நாடு.
நாங்கள் விருப்பத்தால் அல்ல, சூழ்நிலைகளால் இடம்பெயர்ந்தோம்.
கடந்த பல வருடங்களாக இலங்கை அரசியலை கவனிக்காமல் விட்டுவிட்டேன்.
10 வருடங்களின் முன்னர் பெற்றோருடன்,
போருக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டேன்.
 
போர்க்குற்றம் பற்றிய விழிப்பணர்வை ஏற்படுத்தும் பணியிலும் ஈடுபட்டிருந்தேன்“ என தெரிவித்துள்ளார்.
 
 
குறிப்பு : நான் இங்கே கத்துவது எத்தனை பேரை சென்றடைந்தது (அதுவும் தமிழருக்குள் மட்டும்)
இவரது சொல் எத்தனை மில்லியன் மக்களை (எல்லா மொழியிலும்) சென்றடைந்தது.
இவரும் ஒரு சின்னத்திரை நடிகையே
 • Like 1
Link to comment
Share on other sites

பட்டது + படிச்சது + பிடித்தது - 192
 
வாழ்க்கையின் வழியே பரிசுகள்
 
காலமும் வயதும் வாழ்வும் தனது வழிகளில் ஓடிக்கொண்டிருப்பதால் எதையும் எம்மால் கணித்துவிடமுடிவதில்லை.
 
என்ன செய்தோம் எப்படி வாழ்ந்தோம் வாழ்கின்றோம் என்பதும் எமது இந்த வாழ்வு சார்ந்து இந்த சமூகம் என்ன கணிப்பு வைத்திருக்கிறது என்பது பற்றியும் அறிந்து கொள்ள சில சந்தர்ப்பங்கள் வரும்.
 
எனக்கு வந்தபோது அதுவும் அடுத்த தலைமுறையிடமிருந்து....
 
எனது மகளின் திருமணத்துக்கு எனது மகனுடன் ஒன்றாக படித்து (Ecole d’ingénieurs) பாசாகி வெளியேறி தற்பொழுது சுவிசில் வேலை பார்த்து வரும் எனது மகனின் பிரெஞ்சுக்காற நண்பனும் வந்திருந்தார்.
 
திருமணத்தை முழுமையாக பார்த்தவர் நான் இருந்த இடத்துக்கு முன்னால் வந்து இருந்தபடி இரு கை கூப்பி எனக்கு வணக்கம் சொன்னார். நலம் விசாரித்து முடிய மீண்டும் இரு கை கூப்பி நீங்க ஒரு தங்கக்குடும்பத்தை உருவாக்கியுள்ளீர்கள் என்றார். நான் சிரித்தேன். உங்கள் முகத்தில் இந்த சிரிப்பை இன்று தான் காண்கின்றேன் என்றார்.
 
வேறென்ன வேண்டும் வாழ்வில்.
Edited by விசுகு
Link to comment
Share on other sites

பட்டது + படிச்சது + பிடித்தது - 193
 
நாய்களின் விசுவாசம்
 
நாய்கள் எப்பொழுதும் வளர்ப்பவர்களுக்கே விசுவாசமானவை.
அதன் இனம் கூட அதற்கு எதிரி தான்.
 
இந்த விசுவாசத்துக்காக மனிதர்களால் உதாரணமாக கொள்ளப்படும் நாய்கள்
அதன் இனத்துக்கு எப்பொழுதும் எதிரானவை.
தனது விசுவாசத்தை காட்ட
அவை தன் இனத்தையே கடித்துக்குதறக்கூட ஒரு போதும் பின்னிற்பதில்லை.
 
 
நாய்களில் பல வகையுண்டு.
அதிலும் சில விசமனிதர்களால்
வஞ்சக நோக்கங்களோடு
கிரிக்கட் பந்தை எறிந்து பயிற்சி அளிக்கப்பட்டு வளர்க்கப்படும் நாய்கள்
தாம் மிக உயர்ந்த நாய்கள் என கெத்தாக பந்தா காட்டக்கூடியவை.
அந்த கெத்தை வைத்தே அதன் இனத்துக்கு சாவு மணி அடித்துவிடக்கூடியது.
 
ஆனால் இவற்றிற்கு புரியாத
ஆனால் காலம் கடந்து புரியும் ஒரு விடயம் என்னவெனில்
அவை கட்டப்பட்டிருக்கும் கயிற்றின் அளவு வரையே அவை செல்லமுடியும் என்பதும்
அந்த கயிற்றின் அளவை தீர்மானிப்பது அதன் எஐமானன் என்பதும்...
Link to comment
Share on other sites

பட்டது + படிச்சது + பிடித்தது - 194
 
அப்பா அல்லது குடும்பத்தலைவன்
 
ஒவ்வொரு அப்பாக்களும் ஒவ்வொரு தூண்கள். தனது பிள்ளைகளை தன் தோளுக்கு மேல் வளர்க்கணும் என்பதும் தனக்கு முடியாத அந்த உயரத்துக்கு அவர்களை உயர்த்தும் போது அதில் சறுக்கல் வராமல் இருக்கணும் என்பதும் மாறுபட்ட மிகச்சிரமான பணிகள். அதிலும் பெண் பிள்ளைகளை வளர்ப்பது??? அதிலும் பஞ்சும் நெருப்பும் பக்கத்திலிருக்கையில்??
 
என்ன தான் நாம் சமாதானம் சொன்னாலும் என்னதான் வளர்ச்சியடைந்த நாடுகளில் வாழ்ந்தாலும் ஆண் பிள்ளையையும் பெண்பிள்ளையையும் ஒரே பார்வையில் வளர்ப்பதில்லை வளர்க்கமுடிவதில்லை.
:
அன்பிலோ பாசத்திலோ வளர்ப்பிலோ ஆண் பிள்ளையையும் பெண்பிள்ளையையும் ஒரே பார்வையில் வளர்த்தாலும் கண்டிப்பு சுதந்திரம் இரண்டிலும் வித்தியாசம் இருக்கத்தானே செய்கிறது?
 
ஒரு தகப்பனை குடும்பத்தை தலை குனிய வைக்க பெண் பிள்ளைகளைத்தானே எமது சமூகம் தெரிவு செய்கிறது?
 
இந்த நிலையை மாற்ற நான் உட்பட எல்லோரும் முயல்கிறார்கள். ஆனாலும் கண்ணுக்கெட்டிய தூரம்வரை?????
 
குடும்பத்தின் கௌரவமா அப்பாவா என்றால் அப்பா தோற்றுப்போய் பெண் குழந்தையை கண்ணீரில் விடுவது தானே தொடர்கிறது.
 
Edited by விசுகு
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, விசுகு said:
என்ன தான் நாம் சமாதானம் சொன்னாலும் என்னதான் வளர்ச்சியடைந்த நாடுகளில் வாழ்ந்தாலும் ஆண் பிள்ளையையும் பெண்பிள்ளையையும் ஒரே பார்வையில் வளர்ப்பதில்லை வளர்க்கமுடிவதில்லை.
:
அன்பிலோ பாசத்திலோ வளர்ப்பிலோ ஆண் பிள்ளையையும் பெண்பிள்ளையையும் ஒரே பார்வையில் வளர்த்தாலும் கண்டிப்பு சுதந்திரம் இரண்டிலும் வித்தியாசம் இருக்கத்தானே செய்கிறது?

இங்கே ஒரு தமிழ்க்குடும்பம்.
மூன்று ஆண்பிள்ளைகளுக்கு மத்தியில் ஒரு பொம்புளைப்பிள்ளை.அந்த பொம்புளைப்பிள்ளையை தாய் தகப்பன் என இரண்டடுக்கு பாதுகாப்பில் வளர்த்தார்கள்.அதுமட்டுமல்லாமல் அந்த பொம்பிளைப்பிள்ளை வெளியில் போய்வரும் இடமெல்லாம் அண்ணன் தம்பிகளின் பாதுகாப்பும் பலமாக இருக்கும்.ஆனால் அந்த அண்ணன் தம்பிகளோ நீந்தாத குளங்கள் இல்லை.பூசாத சேறுகள் இல்லை.போடாத வேடங்களும் இல்லை.இத்தனைக்கும் அந்த பொம்புளைப்பிள்ளையை பூ போல் பாதுகாத்தார்கள்.பாதுகாப்பின் பலனாக பொம்புளைப்பிள்ளையை நேரகாலத்திற்கு ஒருவனின் கையில் பிடித்து கொடுத்தும் விட்டார்கள்.அந்த பொம்புளைப்பிள்ளையும்  கடவுளேயெண்டு சீரும் சிறப்புமாக வாழ்கின்றார்.

இதில் ஒரு விடயம் என்னவென்றால் அந்த பொம்புளைப்பிள்ளையின் மூத்த அண்ணாவிற்கு வயது 40தை தட்டப்போகின்றது.தம்பிமாருக்கு கலியாண வயது நடக்கின்றது.
அவர்களுக்கு பொம்புளை யாரும்/ எங்கும் கடல்லையே இல்லையாம்.

 • Like 1
Link to comment
Share on other sites

 • 2 weeks later...
பட்டது + படிச்சது + பிடித்தது - 195
 
கோபுரங்கள்
 
இலங்கையில் தாமரைக்கோபுரமொன்று கட்டி திறந்து வைக்கப்பட்டுள்ளது.
நாங்களும் கட்டி விட்டோமல்ல என்பதோ பிரான்சிலுள்ள கோபுரத்துடன் ஒப்பிடுவதோ பெரிதல்ல.
 
அந்த உயரத்துக்கு நாம் வளர்ந்திருக்கின்றோமா?
 
சட்டம் பாதுகாப்பு நீதி
நாட்டில் வாழும் மக்கள் அனைவருக்கும்
மொழி மதம் பிரதேச வேறுபாடின்றி பாரபட்சமின்றி கிடைக்கிறதா??
 
இரவு நேரம் உட்பட நாட்டின் எந்த மூலையிலும்
ஒரு பெண் தனியே தான் நினைத்தபடி நடமாட முடிகிறதா??
 
ஊழல் லஞ்சம் செலுத்தாமல்
ஒரு சாதாரண குடி மகன் தனது செயற்பாடுகளை கால தாமதமின்றி செய்ய முடிகிறதா??
 
படித்து விட்டு வேலை வாய்ப்புத்தேடி
மக்கள் வேறு நாடுகளுக்கு புலம் பெயர்தல் இல்லாமல் போய் விட்டதா??
 
மருத்துவமும் போக்குவரத்தும் மின்சாரமும்
எல்லா மக்களுக்கும் நாடு முழுவதும் சீராக கிடைக்கிறதா??
 
 
இவை தான் வளர்ச்சி
உயர்ச்சி
 
அப்புறம் கோபுரங்களின் உயரம் குறித்து பேசலாம்
Link to comment
Share on other sites

பட்டது + படிச்சது + பிடித்தது - 196

இன்று திலீபன்
இலட்சிய  வேட்கை  சுமந்து
பசியால் மடிந்த நாள்

கோரிக்கை காந்திக்குத்தான்
அதே காந்தீய வழியில்..

சுதந்திரம் பற்றி தெரிந்தவனுடன்
நாம் பேசியிருக்கணும்
சுதந்திரம்
கொடுக்கப்பட்டவனுடன் பேசியதே தவறு

இது புரிந்தபோது அவனில்லை
அவன் போனதுடன்
காந்தியமும் உலகில் இல்லை

அவனது தியாகமே
அதி உச்சம் இவ்வுலகில்

இனி திலீபன் மட்டுமே உலகில் இருப்பான்
இருக்கின்றான்

L’image contient peut-être : 1 personne, texte
 
 • Like 1
Link to comment
Share on other sites

பட்டது + படிச்சது + பிடித்தது - 196
 
வந்தோரை வாழ வைக்கும் தமிழக மக்கள்
 
தமிழகத்தின் போக்கை
அந்த மக்களின் வரலாற்றை பார்க்கும் போது
எனக்குள் எப்பொழுதும் எழும் கேள்வி
எவ்வாறு இவர்கள் வந்தவர்களுக்கெல்லாம் இடம் கொடுக்கிறார்கள்
தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள்
அதுக்கும் மேலே சென்று தம்மை ஆளக்கூட அனுமதிக்கிறார்கள் என்ற கேள்வி
பலமாக பல காலமாகவே எனக்குள் உண்டு.
அநேகமாக எம்மவர் பலருக்கும் இக்கேள்வி இருக்கக்கூடும்.
 
அண்மையில் TV நிகழ்ச்சி ஒன்றை பார்க்கின்ற போது
அதில் முதலிடத்திலுள்ள 5 பேரில்
3 வெளிநாட்டுத்தமிழர்கள் ஒருவர் பிற மாநிலம் ஒரே ஒரு தமிழ்நாட்டவர்.
 
அதிலும் கலந்து கொண்ட அத்தனை போட்டியாளரும் (தமிழக தமிழர்கள்) சொல்கிறார்கள்
வெளிநாட்டில் சிரமப்பட்ட கொடுமைகளை அனுபவித்த தமிழர்கள் தான் வெல்லணும் என்று.
 
சாதாரணமாக பார்க்கமுடியாத பெரும் மாநிட மனிதாபிமானம் இது. இதை மிக மிக பெரும் அறிவார்ந்த ஒரு இனத்தாலே மட்டுமே தான் சிந்திக்கமுடியும் செயற்படுத்த முடியும்.
 
இவ்வாறு தான் அவர்கள் MGR, கருணாநிதி, யெயலலிதா என இடமளித்தார்கள்.
ஆனால் அவர்கள்?????
Edited by விசுகு
Link to comment
Share on other sites

 • 3 weeks later...
பட்டது + படிச்சது + பிடித்தது - 197
 
ஆமா நாங்க தான் போட்டோம்
 
லட்சம் தடவை சொன்னோம் நாங்க செய்யலை என்று.
நம்பவும் இல்லை குற்றம் சாட்டி கைது செய்தவர்களை விடுதலை செய்யவுமில்லை.
30 வருட சிறை வேதனை வாழ்க்கையே தொலைந்து போய் பல வருசமாச்சு.
 
ஓரு தடவை ஒரேயொரு தடவை
ஆமாய்யா நாங்க தான் செய்தோம் என்பது மட்டும் எப்படி காதில விழுகுது???
 
தலைவரது செவ்வியில் இந்தக்கொலை பற்றிய கேள்விக்கு
மிக பக்குவமாக மிகவும் பொறுமையுடன்
ஒரு ஆயுதப்போரை நடாத்தும் தளபதியாக
அது ஒரு துன்பவியல் சம்பவம் என்றார்.
அடுத்த கேள்வி இதற்காக உங்களை கைது செய்வார்களாம் என்பதற்கு
சிரித்துக்கொண்டே நடப்பதை பேசுவோமா என்பார். அதில் எத்தனை அர்த்தங்கள்?
 
நான் சாதாரண பொது மகன்.
அந்தக்கொலை செய்யப்படவேண்டியதே.
செய்தவர்கள் எவராக இருப்பினும் அவர்கள் என்னவரே.
 
தொடர்ந்து என்னைக்கோபப்படுத்திக்கேட்டால்
ஆமாய்யா நாங்க தான் செய்தோம் இப்ப என்ன?? என்று தான் சொல்வேன்.
அது தான் உண்மையும் கூட.
இப்ப நாங்க சொல்வதை நீங்க கேட்கும் நிலை வந்திருப்பது மட்டும் தெரிகிறது.
நல்ல வளர்ச்சி தான்.
Link to comment
Share on other sites

 • 2 weeks later...
பட்டது + படிச்சது + பிடித்தது - 198
 
பெற்றவர்கள் என்போர்???
 
ஒரு பிள்ளைக்கு தாய் தகப்பனாவதென்பது பெரும் பாக்கியம் மட்டுமல்ல பெரும் பொறுப்பு.
 
அந்த பாக்கியத்தை உணர்பவர்கள் அதன் பொறுப்பை பெரும்பாலும் உணராததால் தான் அநேகமான பிள்ளைகள் தவறுகின்றன.
 
ஒரு பெற்றோரிடம் அன்பும் கண்டிப்பும் இருக்கணும். எதை அனுமதிப்பது எதை அனுமதிக்கக்கூடாது அனுமதிக்கமுடியாது என்ற தெளிவு இருக்ணும்.
 
அந்தவகையில் பிள்ளைகளுக்கு தேவையானவற்றை அனுமதித்தும் தேவையற்றவற்றை ஒதுக்கியும் வைக்க முதலில் பெற்றோர் தெரிந்திருக்கணும்.
 
இது பிள்ளைகளின் பழக்கவழக்கங்களிலிருந்து அவர்களது நண்பர்கள் மற்றும் அவர்கள் பாவிக்கும் வீட்டில் மட்டுமல்ல வெளியிலிருக்கும் பொருட்கள் வரை பொருந்தும்.
 
எனது வீட்டில் ஆபத்தான மருந்துகளோ விசமான திரவங்களோ தேவைக்காக வாங்கிய அன்றே மிகுதி தூர எறியப்படும். அல்லது எனக்கு நித்திரை வராது.
வீட்டில் கண்ணாடியோ கோப்பையோ உடைந்துவிட்டால் அவை முழுமையாக துப்பரவாக்கி நான் நடந்து பார்க்கும்வரை பிள்ளைகள் அவர்களது ரூமுக்குள் வைத்து பூட்டப்படுவர்.
 
அப்படியாயின் எப்படி 300 அடி பள்ளத்தை வளவுக்குள் வைத்தபடி பிள்ளைகளை வெளியில் விடமுடிந்தது????
நான் அங்கிருந்தால் பெற்றவர்களுக்குத்தான் காதாவடியில் போட்டிருப்பேன்.
 
அப்புறம் மாநிலம் காப்பாற்றும் மத்தி வரும் என்ற எதிர்பார்ப்பு வேறு?? எப்ப இவர்கள் வந்தார்கள் காப்பாற்றினார்கள் நம்புவதற்கு?? வெள்ளப்பெருக்கில்??
கடலில் தத்தளித்தபோது??
சுனாமியின் போது???
 
பக்கத்து நாட்டில் 4 சறம் கட்டிய பெடியளைக்கொண்ட இயக்கம் சுனாமி இழப்பை 3 நாளில் சர்வதேச விதிகளுக்கமைய சுகாதாரத்தை பேணி பாதிக்கப்பட்ட மக்களை பேணி நிற்க இவர்கள்???
 
ஆனால் கேட்காமல் காசு கொடுப்பார்கள் அது ரசியாவாக இருப்பினும் பிள்ளையை பாதுகாக்கத்தெரியாத பெற்றோராக இருந்தாலும்??
என்ன ஒன்று பிள்ளையை தூக்கி எங்காவது போட்டுவிட்டு படம் எடுத்து முகநூலில் போட்டால் கோடீசுவரர் ஆகலாம் என்பது முறிக்கிவிடப்பட்டிருக்கு......😢😢😢
Edited by விசுகு
 • Like 1
Link to comment
Share on other sites

பட்டது + படிச்சது + பிடித்தது - 199
 
2 பேய்களுடன் ....
 
தமிழர்கள் 2 பேய்களில் ஒன்றைத்தானே தெரிவு செய்யணும் எனும் கூற்று அடிக்கடி சொல்லப்படுகிறது.
 
திரு சுமேந்திரனும் இதையே முன் வைத்திருக்கின்றார்.
 
நமக்கு இந்த அரசியல் எல்லாம் சரி வராது.
அது இருக்கும் நண்பர்களையும் பகைத்து
ஈழத்தமிழினத்தை சின்னாபின்னமாக்கி
மேலும் மேலும் பலவீனப்படுத்த மட்டுமே உதவமுடியும்.
 
ஆனாலும் சுமேந்திரன் சொன்ன போது தான் உறைத்தது.
 
தமிழருக்கும் இந்தப்பேய்க்கூட்டமைப்பை விட்டால்....???
 
அதிலும் சம்பந்தர் சுமேந்திரன் என்ற
பிசாசுகள் கை காட்டும் பேய்க்கு வாக்களிப்பதை தவிர வேறு வழி?????
 
இதுவும் கடந்து போகும்....😢😢😢
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, விசுகு said:
அதிலும் சம்பந்தர் சுமேந்திரன் என்ற
பிசாசுகள் கை காட்டும் பேய்க்கு வாக்களிப்பதை தவிர வேறு வழி?????
 
இதுவும் கடந்து போகும்....😢😢😢

 ஈழத்தமிழினத்திற்கு கிடைத்த சாபங்களில் இதுவும் ஒன்று.

 • Like 3
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 11/5/2019 at 3:07 PM, குமாரசாமி said:

 ஈழத்தமிழினத்திற்கு கிடைத்த சாபங்களில் இதுவும் ஒன்று.

2009ம் ஆண்டுக்கு பிற‌க்கு , சொறில‌ங்கா அர‌சிய‌லை எட்டி கூட‌ பார்த்த‌து இல்லை தாத்தா , 
எல்லாம் பிராடுக‌ள் என்ற‌ சொல்லுக்கு த‌குதியான‌வ‌ர்க‌ள் ,

எம்ம‌வ‌ர்க‌ள் வ‌ன்னியில்  இருக்கும் போது தான் அந்த‌ நாட்டு அர‌சிய‌லை பின் தொட‌ர்ந்தேன் , 2009ம் ஆண்டுக்கு பிற‌க்கு என் பார்வை த‌மிழ் நாட்டு அர‌சிய‌ல் மேல்  ?

உண்மையை சொல்ல‌ போனால் 
நேர்மையான‌ த‌மிழ் அர‌சிய‌ல் வாதிக‌ளை சிங்க‌ள‌வ‌ன் ச‌மாதான‌ கால‌த்திலே போட்டு த‌ள்ளிட்டான் , ஜோசப் பரராஜசிங்கம் ஜ‌யா தொட்டு இன்னும் ப‌ல‌ர் ?  இப்ப‌ இருக்கும் ஆட்க‌ள் தொப்பி பிர‌ட்டிய‌ல் /

Link to comment
Share on other sites

 • 2 weeks later...
பட்டது + படிச்சது + பிடித்தது - 200
 
இலங்கை ஐனாதிபதித்தேர்தல்??
 
ஏதாவது எழுதலாமே என்றால் முடியல. இது தான் என்று எவராலும் சொல்லமுடியல. இருக்கலாம் நடக்கலாம் வரலாம் தவிர்க்கலாம் முடியலாம் முடியாமல் போகலாம் நடப்பது தான் நடக்கலாம். இப்படித்தான் எல்லோரும் சொல்கிறார்கள்
 
ஒன்று படமெடுத்து ஆடிநிற்கும் பாம்பு இன்னொன்று பழி வாங்குவதற்காக பதுங்கி இருக்கும் பாம்பு. இரண்டுமே நச்சுப்பாம்புகள். அவற்றுடனேயே விரும்பியோ விரும்பாமலோ வாழ்ந்தாக வேண்டியநிலையில் தமிழர்கள்.
 
தமிழர்களின் இன்றைய சூழ்நிலையில் எவரையும் சேர்க்காது விட்டாலும் எவரையும் பகைக்காது பார்த்துக்கொள்வதே இருப்பதையாவது பாதுகாக்க உதவும்.
 
அந்தவகையில் கூட்டமைப்பின் முடிவும் பிரச்சாரமும் பகையைத்தான் தீ மூட்டியுள்ளது. தமிழருக்கு அடிப்பவன் மட்டுமே சிங்கள தேசத்தில் வெல்லலாம் என்ற நிலை இருக்கும்வரை தமிழர்கள் இருந்தாலும் அடிதான் நின்றாலும் அடிதான் குனிந்தாலும் அடிதான்.
 
தன்னைத்தொலைத்த இனம், தனது வலிமை உணராத இனம், தனக்குள் வேற்றுமைகளை காணும் இனம் இப்படித்தான் வாழணும். வாழும்.
Link to comment
Share on other sites

பட்டது + படிச்சது + பிடித்தது - 201
 
நானும் சிறுபான்மை என்பது......???
 
பாடசாலை விடுமுறைகளுக்கு
அண்ணர் கொழும்பில் கடை வைத்திருந்ததால் கொழும்புக்கு செல்வது வழமை.
 
அப்படித்தான் 1977 இலும் சென்றிருந்தேன்.
அப்பொழுது எனக்கு 14 வயது.
கொம்பனித்தெருவிலுள்ள அண்ணருடைய மளிகைக்கடையில்
வேலை செய்யும் மைத்துணர் ஒருவருடன் உரையாடிக்கொண்டிருந்தபோது
அங்கு வந்த ஒரு சிங்கள இளைஞன்
தேங்காய் ஒன்றை எடுத்து தனது சாக்கில் போட்டதை பார்த்து விட்டேன்.
அதை அவனும் கவனித்துவிட்டான்.
 
மைத்துணரிடம் நான் சொல்ல
அவன் புறப்படத்தயாரானபோது மைத்துணர் தேங்காய்க்கு பணம் கேட்டார்.
 
அவன் என்னைத்துரத்தத்தொடங்கினான்.
அங்கு நின்றவர்கள் ஏன் எனது மைத்துணர் உட்பட அவனை தடுக்கவே இல்லை.
ஓடித்தான் தப்பினேன்.
 
அப்பொழுது தான் முதல் முதலாக உணர்ந்தேன்
நான் இந்த நாட்டில் சிறுபான்மையினன் என்பதை.
 
அந்த ஆண்டு நடந்த தேர்தலில்
எமது ஊரில் நடந்த கூட்டணியின் பிரச்சாரக்கூட்டத்தில்
முதன் முதலாக இரத்தப்பொட்டு வைத்து எனது கோபத்தை காட்டினேன்.
 
வரலாறு இப்படித்தான் எழுந்தது. பதியப்பட்டது.
Link to comment
Share on other sites

பட்டது + படிச்சது + பிடித்தது - 202
 
தமிழரை வாட்டும் மூடுமந்திரம்??
 
எல்லாமே திட்டமிட்டபடி...??
மகிந்த ஐனாதிபதி
இடையில் புகுந்து மகிந்தவின் வளர்ப்பு மைத்திரி ஐனாதிபதி
மகிந்தவின் தம்பி கோத்தபாய ஐனாதிபதி
அடுத்தது அனைத்து அதிகாரங்களையும் கொண்ட பிரதமர் மகிந்த
இன்னொரு கால் நூற்றாண்டுக்கு ராஐபக்சக்களே ஆட்சி
 
இதை அறியாமல் உணராமல் தமிழர்களுக்கு வாழ்வில்லை
 
இனியாவது அடுத்த கட்டங்களை உணர்ந்து
ஆதரிக்காவிட்டாலும் தவிர்த்து செல்வதே வாழ வழி.
 
சிறுபான்மை இனம் என்பது முதலில் தன்னை தங்கவைக்கணும்.
இருப்பதையாவது காப்பாற்றணும்.
 
தமிழினம் இதைத்தான் கூட்டமைப்பினரிடமும் சரி
வடமாகாண முதலமைச்சராக இருந்த விக்கினேசுவரனிடமும் சரி எதிர்பார்த்தது.
ஆனால் அவர்கள் தத்தமது அரசியலை அல்லது
பிரபாகரனாலேயே முடியாது போன போராட்டத்தை செய்கிறார்களே தவிர.....????????????
 
ஆனால் எம்மவர்கள் எம்மவர் ஒருத்தர் எடுத்த முடிவை
மற்றவர் குளப்ப அல்லது
அதற்கு மாற்றாக செயற்படுத்தும் செயல்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை
மக்களுக்கு தாம் செய்யவேண்டிய காலத்தின் பணி சார்ந்து சிந்திப்பதே இல்லையே...
இதிலிருந்து தமிழருக்கு விடிவு எப்பொழுது????
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.