விசுகு

பட்டது + படிச்சது + பிடித்தது - விசுகு

Recommended Posts

பட்டது + படிச்சது + பிடித்தது - 203
 
நாம் படைத்த தேசத்தை எப்படி யாரால் இழந்தோம்???
 
2003 இல் தாயகம் சென்றிருந்த போது தாண்டிக்குளத்தில் வாகனம் நின்றதும் எல்லை காப்பாளர்களால் எங்களது பெட்டிகளை சோதனை செய்யணும் என்று கேட்கப்பட்டது. நாங்கள் 7 பேர். 5 பெரிய பெட்டிகள். அவர்கள் அமைத்திருந்த மேசைகளில் பெட்டிகளை திறந்து வைத்து விட்டு மர நிழலில் நின்று கொண்டோம்.
ஒவ்வொரு பெட்டியாக ஒவ்வொரு பொருளாக சோதனை செய்தபின் கூப்பிட்டார்கள்.
அண்ணை உங்களது ஒரு பெட்டியில் 3 போத்தல் வெளிநாட்டு மதுபானம் இருக்கு. உங்களுக்கு ஒரு போத்தல் தான் அனுமதி மிச்சம் 2 போத்தலுக்கும் வரி கட்டணும் என்றார்கள். நான் எவ்வளவு என்று சொல்லுங்கோ கட்டுறன். ஆனால் நாங்க 7 பேர் இந்த 5 பெட்டியும் எங்கட தான் தம்பியவை என்றதும் அப்ப ஒவ்வொரு பெட்டிக்குள்ள ஒவ்வொரு போத்தலை வைத்துக்கொண்டு போங்கோ. வரி கட்டத்தேவையில்லை என்றதும் பெட்டிகளை நாங்களே அடுக்கத்தொடங்கினோம்.
 
பக்கத்தில ஒரே சத்தம். என்ர பெட்டியை திறக்க சோதனையிட நீங்க யார்? உங்களுக்கு அந்த அதிகாரத்தை யார் தந்தது?? என்ர பெட்டியை தொடக்கூடாது என்று வேர்க்க விறுவிறுக்க சண்டை பிடித்துக்கொண்டிருந்தார் ஒருத்தர்.
 
கொஞ்ச நேரம் நின்று பார்த்தன். பக்கத்தில போய் தம்பி எங்க இருந்து வாறீங்க என்று கேட்டா சுவிசில இருந்து என்றார். எனக்கு பத்திக்கொண்டு வந்துது. பிரான்சிலிருந்து நாங்க சுவிசுக்குள்ள வரக்குள்ள குளிருக்குள்ளயும் மழைக்குள்ளையும் எங்களை தவிக்க விட்டுட்டு சுவிசின் எல்லைக்காறர்கள் எங்கட பத்திரங்களை வாங்கிக்கொண்டு போய்விட்டு பல மணி நேரம் கழித்து அவனா கொண்டு வந்து தருமட்டும் நாங்க எல்லாத்தையும் பொத்திக்கொண்டு தானே நிற்கிறனாங்கள். நீங்களும் தானே?இங்க மட்டும் எங்கட ஆட்கள் எண்டவுடன் நீளுதாக்கும் என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே பொறுப்பாளர் வந்து விட்டார். நான் புறப்பட்டு விட்டேன்.
 
செய்தி : இந்த முறை தேர்தலில் கோத்தபாய வெல்லணும் என்பதற்காக வெளிநாடுகளிலிருந்து தமது சொந்த செலவில் சிறீலங்கா வந்து வாக்களித்த 4 லட்சம் சிங்களவர்கள்.
 • Like 2
 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites
7 hours ago, விசுகு said:

செய்தி : இந்த முறை தேர்தலில் கோத்தபாய வெல்லணும் என்பதற்காக வெளிநாடுகளிலிருந்து தமது சொந்த செலவில் சிறீலங்கா வந்து வாக்களித்த 4 லட்சம் சிங்களவர்கள்.

35 வருடங்களாக என் மனதின் ஒரு மூலையில் பதுங்கியிருந்த வரட்டுக்கௌரவம் எரிந்து சாம்பலாகி விட்டது.

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites
On 11/18/2019 at 2:30 PM, விசுகு said:
பட்டது + படிச்சது + பிடித்தது - 202
 
 
 
 
 
சிறுபான்மை இனம் என்பது முதலில் தன்னை தங்கவைக்கணும்.
இருப்பதையாவது காப்பாற்றணும்.
 
தமிழினம் இதைத்தான் கூட்டமைப்பினரிடமும் சரி
வடமாகாண முதலமைச்சராக இருந்த விக்கினேசுவரனிடமும் சரி எதிர்பார்த்தது.
ஆனால் அவர்கள் தத்தமது அரசியலை அல்லது
பிரபாகரனாலேயே முடியாது போன போராட்டத்தை செய்கிறார்களே தவிர.....????????????
 

இதைத்தான் நான்   நெடுக  சொல்லிக்கொன்டு இருக்கிறேன்.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

பட்டது + படிச்சது + பிடித்தது - 204

அவர்கள் சொல்லிச்சென்றதென்ன???

ஒவ்வொருமுறையும் மாவீரர் வணக்க நிகழ்வுக்கு சென்று வரும் போதெல்லாம் மனசு கனக்கும்.

பிரான்சிலே இத்தனை ஆயிரம் தமிழ் மக்கள் இருக்கிறார்களா? என்ற வியப்பு மேலோங்கும்.
ஏனெனில் போராட்ட காலத்தில் எத்தனை பேர் உடன் நின்றார்கள் எத்தனை பேர் பங்களித்தார்கள் என்று எனக்குத்தெரியும்.
அந்த நேரத்தில் ஓடி ஒழிந்தவர்கள் அல்லது மதில் பூனையாக இருந்தவர்கள்                                                                 இப்பொழுது வந்து பூ வைப்பதும் மாலை போடுவதும் சாதாரணமாக வருடாவரும் துவசம் போன்ற நிகழ்வாகிப்போகப்போகிறதா?

மாவீரர் நாளை வணக்க நிகழ்வாக செய்வதும்                                                                                                                               அதற்கு மக்கள் கூடுவதும் நாம் ஒன்றையும் மறக்கவில்லை உங்களை நெஞ்சிலிருத்தி வைத்திருக்கின்றோம் என்பதை மட்டும் சொல்வதாக இருக்கலாம்.

ஆனால் அவர்கள் சொல்லிச்சென்றதென்ன??
அதை நோக்கிய எமது நகர்வு என்ன??
அவர்கள் கேட்டது மாலையா?? மக்களுக்கான நிம்மதியான வாழ்வா??

இந்நாளில் அவர்களுக்காக குனிந்த எமது தலைகளை மீண்டும் நிமிர்த்தி உறுதி எடுத்துக்கொள்வோம்.
எம் மக்களுக்கான நிம்மதியான வாழ்வு கிடைக்கும்வரை உம்மை நெஞ்சிலிருத்தி
எம்மாலானதை செய்வோம் என்று.

வீரவணக்கம் மாவீரரே....

L’image contient peut-être : une personne ou plus et personnes qui marchent
L’image contient peut-être : une personne ou plus
L’image contient peut-être : intérieur
L’image contient peut-être : une personne ou plus, personnes sur scène, personnes debout et intérieur
L’image contient peut-être : une personne ou plus
 
 
4

Share this post


Link to post
Share on other sites
பட்டது + படிச்சது + பிடித்தது - 205
 
தலைவரின் தன்நம்பிக்கை
 
சில நாட்களாக தலைவரது கெத்து என அவரது பத்திரிகையாளர் சந்திப்பின் காணொலியின் ஒரு பகுதி உலகம் முழுவதும் பரவவிடப்பட்டுள்ளது.
 
முதல்க்கேள்வியின் தொடர்ச்சி தான் இந்தக்கேள்வியும் பதிலும்...
 
கேள்வி ஒன்று : ராஜீவ் காந்தியை கொன்றது நீங்க தானே??
 
பதில் : அது ஒரு துன்பவியல் சம்பவம்
(இதனை பலரும் தலைவர் அக்கொலையை மறுக்கின்றார் என்கின்றனர். உண்மையில் என் மக்களைக்கொன்றார் அவரைக்கொன்றோம்.வேற வழியில்லாமல் போச்சு. இது தான் அதன் அர்த்தம்)
 
அதனைத்தொடர்ந்த கேள்வியே இன்ரபோல் மூலம் உங்களைக்கைது செய்ய முனைப்பு நடக்கிறதே.
 
பதில்: நடக்கக்கூடியதை பேசுவோமா.
அதற்கொரு சிரிப்பு..
அந்த சிரிப்பில் ஆயிரம் அர்த்தங்கள்
 
இதற்கு முன்னர் இன்னொரு வரலாற்றையும் பார்க்கணும்.
 
இந்திய இலங்கை ஒப்பந்த காலகட்டத்தில் தலைவர் இவ்வொப்பந்தத்தை மறுத்தாகவும் அதற்கு ராஜீவ் காந்தி நாலு சறம் கட்டிய பொடியளை வைத்திருக்கும் நீ என் சொல்லுக்கு கட்டுப்படமாட்டாயா என கேட்டதாகவும் அதற்கு தலைவர் நாலு சறம் கட்டிய பொடியள் தான் என்னுடன். முடிந்தால் எனது நிலத்தில் என்னை விட்டு விட்டு மீண்டும் என்னை பிடி பார்க்கலாம் என்றதாகவும் விடப்பட்ட பிரபாகரன் பின்னர் எந்த சந்தர்ப்பத்திலும் பிடிபடவே இல்லை என்பதும் சறம் கட்டிய 4 பொடியளை துரத்திய ராஜீவ் காந்தி தான் இறந்து போனார் என்பதும் வரலாறு.
 
அந்த சிரிப்பில் இந்த வரலாறும் சேர்ந்தே இருக்கிறது.
 
 
 

Share this post


Link to post
Share on other sites
பட்டது + படிச்சது + பிடித்தது - 206
 
சீமானின் பேச்சுக்களும் அது சார்ந்த உபாதைகளும்.....
 
சீமானின் பேச்சுக்கள் சார்ந்து உன்னிப்பாக கவனிப்போர் சிலர் பெரும் கவலை கொள்கின்றனர். அவர் தமிழீழத்தை தரம் தாழ்த்தி விட்டதாகவும் தலைவரைக்குறித்து ஏத்தி இறக்கிப்பேசி அவரது மதிப்பை கேள்விக்குறியாக்கி விட்டதாகவும் பொங்குகின்றனர்.
 
இங்கே ஈழத்தமிழர்களுக்கு குளப்பம் என்ன என்றால் சீமான் ஈழம் பிடித்து தருவார் என இவர்கள் நம்புவது தான் என்று தோன்றுகிறது. இல்லை இல்லை என்று சொன்னாலும் இவர்கள் தூய்மையான சீமானை தூய்மையான நாம் தமிழர் கட்சியை எதிர் பார்க்கின்றனர். அதில் சிறு தூசி விழுந்தாலும் பொங்குகின்றனர். அதுவே இவர்களது சீமானது முழுப்பேச்சையும் மனப்பாடம் செய்யவும் பல மணித்தியாலப்பேச்சுக்களில் வரும் ஒரு சில செக்கன்களே ஆன கருத்தைக்கூட ஆராய்ந்து பகுத்து ஒப்பிட்டு பொங்க முடிகிறது.
 
ஆனால் இப்போது ஈழத்தில் தூய்மையான கட்சியோ தலைவர்களோ இல்லையென்பதும் அதை தாயகத்தில் எவரிடமும் எதிர்பாராதவர்கள் தான் சீமானிடமும் நாம் தமிழர் கட்சியிடமும் இதை எதிர்பார்ப்பதினூடாக சீமானையும் நாம் தமிழர் கட்சியையும் இவர்கள் தமக்குத்தேவையான முக்கிய இடத்தில் வைத்திருப்பது தெரிகிறது.
 
ஆனால் ஈழம் சார்ந்து சீமானுக்கு எந்த பாகமும் கிடையாது. நீண்ட தூர நோக்கில் சீமானும் நாம் தமிழர் கட்சியும் ஈழத்தில் நடந்த கொடூரங்களை தமிழகத்தில் பரப்புவதும் தமிழகத்தில் தமிழர் ஆட்சி வரச்செய்வதும் தான். அதை அவர்கள் தம்மால் முடிந்தவரை செய்வதாகவே தெரிகிறது. ஏன் எம்மவரைவிட அதிக உழைப்பை தருவதாகவே தெரிகிறது.
 
பிரபாகரன் பயங்கரவாதி என்னைக்கொல்ல வந்தார் என்பவரை நம்பும் நாம் பிரபாகரன் என் தலைவன் என் தெய்வம் என்பவனை தூற்றுகின்றோம். அது தான் இன்றைய காலம்????? இன்றைய தமிழரின் நிலை???
 • Like 1

Share this post


Link to post
Share on other sites
7 minutes ago, விசுகு said:
பட்டது + படிச்சது + பிடித்தது - 206
 
சீமானின் பேச்சுக்களும் அது சார்ந்த உபாதைகளும்.....
 
சீமானின் பேச்சுக்கள் சார்ந்து உன்னிப்பாக கவனிப்போர் சிலர் பெரும் கவலை கொள்கின்றனர். அவர் தமிழீழத்தை தரம் தாழ்த்தி விட்டதாகவும் தலைவரைக்குறித்து ஏத்தி இறக்கிப்பேசி அவரது மதிப்பை கேள்விக்குறியாக்கி விட்டதாகவும் பொங்குகின்றனர்.
 
இங்கே ஈழத்தமிழர்களுக்கு குளப்பம் என்ன என்றால் சீமான் ஈழம் பிடித்து தருவார் என இவர்கள் நம்புவது தான் என்று தோன்றுகிறது. இல்லை இல்லை என்று சொன்னாலும் இவர்கள் தூய்மையான சீமானை தூய்மையான நாம் தமிழர் கட்சியை எதிர் பார்க்கின்றனர். அதில் சிறு தூசி விழுந்தாலும் பொங்குகின்றனர். அதுவே இவர்களது சீமானது முழுப்பேச்சையும் மனப்பாடம் செய்யவும் பல மணித்தியாலப்பேச்சுக்களில் வரும் ஒரு சில செக்கன்களே ஆன கருத்தைக்கூட ஆராய்ந்து பகுத்து ஒப்பிட்டு பொங்கவும் முடிகிறது.
 
ஆனால் இப்போது ஈழத்தில் கூட தூய்மையான கட்சியோ தலைவர்களோ இல்லையென்பதும் அதை தாயகத்தில் எவரிடமும் எதிர்பாராதவர்கள் தான் சீமானிடமும் நாம் தமிழர் கட்சியிடமும் இதை எதிர்பார்ப்பதினூடாக சீமானையும் நாம் தமிழர் கட்சியையும் இவர்கள் தமக்குத்தேவையான முக்கிய இடத்தில் வைத்திருப்பது தெரிகிறது.
 
ஆனால் ஈழம் சார்ந்து சீமானுக்கு எந்த பாகமும் கிடையாது. நீண்ட தூர நோக்கில் சீமானும் நாம் தமிழர் கட்சியும் ஈழத்தில் நடந்த கொடூரங்களை தமிழகத்தில் குக்கிரமங்கள் வரை பரப்புவதும் தமிழகத்தில் என்றாவது ஒருநாள் தமிழர் ஆட்சி வரச்செய்வதும் தான். அதை அவர்கள் தம்மால் முடிந்தவரை செய்வதாகவே தெரிகிறது. ஏன் எம்மவரைவிட அதிக உழைப்பை தருவதாகவே தெரிகிறது.
 
பிரபாகரன் பயங்கரவாதி என்னைக்கொல்ல வந்தார் என்பவரை நம்பும் நாம் பிரபாகரன் என் தலைவன் என் தெய்வம் என்பவனை தூற்றுகின்றோம். அது தான் இன்றைய காலம்????? இன்றைய தமிழரின் நிலை???

 

Share this post


Link to post
Share on other sites
Quote

செய்தி : இந்த முறை தேர்தலில் கோத்தபாய வெல்லணும் என்பதற்காக வெளிநாடுகளிலிருந்து தமது சொந்த செலவில் சிறீலங்கா வந்து வாக்களித்த 4 லட்சம் சிங்களவர்கள்.

தமிழர்களுக்கு ஒரு தனிபிரதேசம் தேவை என ஒரு சர்வஜன வாக்கு நடாத்தி வெளிநாட்டில் உள்ள புலம் பெயர் தமிழர்களும் வாக்களிக்கலாம் எனும் தேவை வருமானால் விசுகண்னா நீங்கள் போய் வாக்களிக்க மாட்டீர்களா?

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites
6 minutes ago, nunavilan said:

தமிழர்களுக்கு ஒரு தனிபிரதேசம் தேவை என ஒரு சர்வஜன வாக்கு நடாத்தி வெளிநாட்டில் உள்ள புலம் பெயர் தமிழர்களும் வாக்களிக்கலாம் எனும் தேவை வருமானால் விசுகண்னா நீங்கள் போய் வாக்களிக்க மாட்டீர்களா?

முதலாவது  ஆளாக  நிற்பேன்

அங்க  வைச்சு உங்க  வாய்க்கு கற்கண்டு போடுவன்

Edited by விசுகு

Share this post


Link to post
Share on other sites
பட்டது + படிச்சது + பிடித்தது - 207
 
உப்பின் அருமை...
 
ஒன்று இல்லாத போதே அதன் அருமை தெரியும் என்பதற்காக இந்த முதுமொழி எம்மூரில் பழக்கத்திலுள்ளது.
 
சில விடயங்களை காணக்கிடைத்தபோது ஒன்று இருக்கும் போது அதை வளர்க்கவோ தட்டிக்கொடுக்கவோ முயலாத ஏன் அதையும் தாண்டி அதற்கு இடைஞ்சல் கொடுக்கவும் செய்யும் நாம் அது இல்லாமல் போனபின் அதன் தாக்கத்தை அல்லது அதன் வெற்றிடத்தை உணர்கின்றோமா என்றநிலையை சில நாட்களாக காணக்கூடியதாக இருந்தது.
 
பிரான்சிலே மிகவும் தரமாகவும் அதிக பணம் செலவிட்டும் அதிக பணப்பரிசில்களை கலைஞர்களுக்கு கொடுத்து உற்சாகப்படுத்தியும் விருது பெற்ற தரமான தமிழக இயக்குநர்களை வரவைத்து ஊக்கமூட்டியும் France - புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தால் வருடாவருடம் 8 வருடங்களாக நடாத்தப்பட்ட நாவலர் விருதுக்கான குறும்படப்போட்டிக்கும் இந்தளவு விளம்பரங்களையும் உற்சாகங்களையும் பேட்டிகளையும் கலைஞர்கள் தந்திருந்தால்.........?????????😢😢😢

Share this post


Link to post
Share on other sites
பட்டது + படிச்சது + பிடித்தது - 208
 
என்கவுண்டர்......
 
நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லாமல் மரணதண்டனையை காவல்த்துறையோ அரச பாதுகாப்புப்படையோ தாமே தீர்மானித்து செயற்படத்துவது தான் இந்த என்கவுண்டர்.
 
இது வரவேற்றத்தக்கது தான். உண்மையில் 100வீதம் குற்றம் செய்தது நிரூபிக்கப்பட்டு குற்றம் செய்தவர்களால் இந்த சமூகத்துக்கு மீண்டும் கொடூரங்கள் நிகழலாம் என்ற பயமிருப்பின் இதை செய்தாக வேண்டியது தான்.
 
பிரான்சில் கூட பயங்கரவாதத்தாக்குதல்களை செய்வோர் கால அவகாசம் எடுத்து பொது மக்களிலிருந்து துரத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு தீர்த்துக்கட்டப்படுவது வழக்கம்.
 
இதற்கு இவர்களது பயங்கரவாதச:செயல்களிலிருந்து திருத்தமுடியாமை சிறைகளில் இடப்பற்றாக்குறை பராமரிப்புச்செலவு என்பன கணக்கிலெடுக்கப்படலாம்.
 
ஆனால் இங்கே காவல்த்துறையின் பொறுப்பு அல்லது கடமை என்னவெனில் குற்றம் சாட்டப்பட்டவரை நீதி மன்றத்தில் நிறுத்தவது மட்டுமே. அதை மீறி அவர்களே நீதியை கையிலெடுக்கிறார்கள் என்றால் அவர்களுக்கே நீதியின் மேல் நம்பிக்கையற்றுப்போய் விட்டது என்று தான் அர்த்தம்.
 
என்னைப்பொறுத்தவரை என்கவுண்டருக்கு ஆதரவானவன்.
 
ஆனால் அது பழி வாங்கலாகவோ தனி ஒருவரின் கோபதாபங்களுக்கு தீனி போடுவதாகவோ ஆகிவிடக்கூடாது. பொது மக்களின் நன்மை கருதி என்றால் வரவேற்கத்தக்கது தான்.
Edited by விசுகு
 • Like 1

Share this post


Link to post
Share on other sites

பட்டது + படிச்சது + பிடித்தது - 209

எமது இறப்பை எம்மால்  அறியமுடியும்???

எனக்கு  கனவுகள் நினைவில்  இருப்பதில்லை.  அவ்வாறு  ஒரு  சில நினைவில்  வந்தாலும்  கனவுகளை  மனைவி  நம்புவதால் அவளிடம்  சொல்லக்கூடிய  கனவுகளையே  சொல்வதுண்டு.

எனது  தகப்பனார் இறந்த  சில  நாட்களில்  அழகாக  உடுத்தியிருந்த  அவரை  ஒரு  கோயிலுள்  கண்டேன். அத்துடன்  எனது  சின்னத்தார் மற்றும்  செல்லண்ணர் இருவரையும்  அதே  இடத்தில்  கண்டேன்.  எனது  தகப்பனாரை கன  காலத்துக்குப்பின்  கண்ட  சந்தோசத்தில் மனைவியிடம்  இதை  சொன்னேன்.  அவரும்  அதை  அப்பொழுது  பெரிதாக  எடுக்கவில்லை.

அப்புறம் எனது  சின்னத்தார் இறந்து  போனார். 

போன  மாதம் செல்லண்ணரும் இறந்து போனார்

நேற்று  மனைவி  கேட்டார்  அப்பா  உங்களுக்கு  அந்தக்கனவு  ஞாபகம் இருக்கா?  என்று.

எந்தக்கனவு?? என்றதும் உங்கள்  அப்பா  சின்னத்தார்  செல்லண்ணர்  எல்லோரையும் ஒன்றாக  கண்டீர்களே

அந்தக்கனவு??

ம்ம்ம்  ஞாபகம்  வருகுது  என்றபோதே அது  இவளைப்பாதிக்கப்போகிறதே  என்பதும்  ஓட  ஆரம்பித்தது.

சாவு என்பது  நல்லதொரு  விடயம்

அது ஒரு  ஓட்டத்தின் முடிவு  அதை  ஆனந்தமாக  பார்க்கணும்

நான்  இப்பொழுது  இருப்பதைவிட

இறப்பின்  பின்  குடும்பத்துக்குள்ளும் வெளியிலும்  அதிகம்  பேசப்படுவேன் 

தேவைப்படுவேன்.

அது  தான் என் வாழ்வின்  தேட்டம் என்றேன்.

கண் கலங்கியிருந்தாலும் தலை  ஆட்டினாள்.

(எல்லாவற்றையும்  எழுதிச்செல்வோம்)

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

பட்டது + படிச்சது + பிடித்தது - 210

பிரான்சின் வேலை நிறுத்தங்களும்  எம்மவர் பார்வையும்

பிரான்சில் தொடர்ந்து  நடைபெற்றுவரும் வேலை  நிறுத்தப்போராட்டம் பெரும்  பொருளாதார தாக்கத்தையும்  நாட்டில் அமைதியின்மையையும் தாக்கியுள்ளபோதும்  அது  தொடரும்  போன்றே தெரிகிறது.

இதில்  எம்மவர் அதிலும் பிரான்சில்  வாழாதோரது  கருத்துக்களையும் நையாண்டிகளையும்  பார்க்கும்  போது அறியாமையின் உச்சம் புரிகிறது

இரு  விடயங்களை நாம் மறக்கக்கூடாது

ஒன்று: இவ்வாறான  போராட்டங்கள்  எமக்கும்  சேர்த்துத்தான்.

(உலகம்  முழுவதும் அநேகமாக  நாம்  அனுபவிக்கும்  உரிமைகளும்  சலுகைகளும்  ஏதோ  ஒரு  நாட்டில் இவ்வாறான  உச்ச தியாக போராட்டங்களால் கிடைத்தவையே)

இரண்டு : மார்கழி மாசத்தில்  இவ்வாறான  போராட்டங்களை அவர்கள்  செய்வதற்கான  காரணம் 13 ம் மாதச்சம்பளம்  வரும்  என்பதாலேயே.  காரணம்  மற்ற  மாதங்களில் செலவுக்கு  தாக்குப்பிடிக்க  முடியாத  அன்றாடக்காச்சிகளே  போராட்டத்தை  முன்னெடுக்கிறார்கள்

மேலும் ஏன் நிலத்துக்கு கீழ் பணி  புரியும் ரயில்வே  ஊழியர்கள் இதனை  மும்மரமாக  எதிர்க்கின்றனர்  என்ற  கேள்விக்கு :

உலகத்தில்  அதி  பயங்கர தண்டனை  என்றால் அது ஒரு மனிதனை ஒளியற்ற நிலத்தீன் கீழ் அறைக்குள் வைத்திருப்பது  தான். இந்த  ஊழியர்கள் தமது  வேலைக்காலம் முழுக்க அதற்குள்  தான் இருக்கிறார்கள்.அதை  இன்னும் நீடித்தால்???

அரசு ஏன் இறங்குதில்லை?? என்றால் அடுத்த வீட்டுக்காறர்களின் அழுத்தம். நீ பின்வாங்கினால் நாங்களும் பின் வாங்கணும். திட்டத்தை குப்பையில்போடணும்?
 

ஈழத்தவருக்கு அதிக அதிகாரம் கொடுத்தால்  இந்திய மாநிலங்கள்  கேட்குமே?  ஈழத்தவர் படாததா????

Edited by விசுகு

Share this post


Link to post
Share on other sites
பட்டது + படிச்சது + பிடித்தது - 211
 
கொரோனா வைரஸ் காய்ச்சல்
 
இது பற்றி கனக்க செய்திகளும் பீதியூட்டுதல்களும் வந்து கொண்டிருக்கின்றன.
 
அதனால் இது பற்றி எழுத வேண்டியிருக்கிறது.
 
 
இன்றைய உலக மற்றும் வாழ்வியல் சூழலில் எம்மால் தனித்து வாழ்ந்துவிட முடியாது. எனவே வேலை இடங்கள் மற்றும் போக்குவரத்துக்களின் போது கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்கள்.
 
அடிக்கடி கைகளை கழுவுதல்
கைக்குட்டைகளை அடிக்கடி மாற்றுதல்
தொண்டையில் வறட்சி ஏற்படாதபடி அடிக்கடி தண்ணீர் குடித்தல்
கைகளை மூக்கிலோ கண்ணிலோ வாயிலோ தேவையற்று படாமல் பார்த்துக்கொள்ளல்
மற்றவர்களின் மூச்சுக்காற்று எம்மீது படாமல் கொஞ்சம் தள்ளியிருத்தல்
 
அதையும் மீறி
வருத்தத்தின் அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக அறிவிக்கப்பட்டிருக்கும் தொலைபேசி எண்ணுடன் தொடர்பு கொள்ளுங்கள்.
 
பயமோ அல்லது நடுக்கமோ வேண்டாம்.
 
இந்நோயால் பீடிக்கப்பட்டவர்களில் இறந்தவர்கள் எத்தனை வீதம் தெரியுமா???
100 க்கு 2 வீதம் மட்டுமே....
Edited by விசுகு

Share this post


Link to post
Share on other sites

பட்டது + படிச்சது + பிடித்தது - 212

இன்று எனது 2வது மகனின் பிறந்தநாள்.

இவனது ஆசிரியர்கள் இவனை அதி புத்திசாலித் தற்கொலையாளன் என்பார்கள். ஒரு நாளைக்கு சில நிமிடங்களாவது வீட்டிலும் படித்தால் இவன் எங்கோ போய் விடுவான் ஆனால் தான் பாசாவேன் அதாவது தன் மீதான அதீத நம்பிக்கையால் வகுப்பில் படிப்பதுடன் சரி இது தற்கொலைக்கு ஒப்பானது என்பார்கள்.
இதனால் படிடா. நீ Bac+3 பாசானால் உனக்கு 100 வீதம் சுதந்திரம் தாறேன் என்றேன். அப்படியே Bac+3 (Engineering) பாசானான். தொடர்ந்து Master படி என்றதும் எனக்கு அண்ணனைப்போல ஒரே இடத்தில் கணணிக்கு முன்னாலிருந்தபடி வேலை செய்ய சரி வராது நான் வேறு படிப்புக்கு போகப்போறன் என்றான். சரியப்பா எனக்கு என்ன படிக்கணும் என்பதில்லை ஆனால் ஏதாவதொன்றை Master 2 வரை படிக்கணும். படித்தான் பாசானான்.

போன யூலை மாதம் ஒரு கடிதத்தை கொண்டு வந்து தந்து உடைத்துப்பாருங்கள் என்றான். திறக்கப்படாதிருந்த அந்தக்கடித்துக்குள் என்ன இருக்கு என்று கேட்டேன். நீங்க என்னிடம் கேட்டது இருக்கு. உடைத்துப்பாருங்கள் என்றான். உடைத்துப்பார்த்தபோது Master 2 பாசாகியதற்கான அத்தாட்சிப்பத்திரம் அதற்குள் இருந்தது.

நன்றி சொல்லிவிட்டு அப்போ அடுத்தது வேலை தேடு என்றேன்.
நீங்க கேட்டதை தந்தாச்சு. இனி எனது வழியில் என்னை விடுங்க என்றான்.

சரியப்பா என்ன செய்யப்போறாய் சொல்லு என்றேன். குறைஞ்சது 6 மாதம் உலகம் சுற்றப்போறன் என்றான்.

சரி முதலாவது நாடு எது என்றபோது கியூபா என்றான். சுற்றப்போய் விட்டான். தற்பொழுது யேர்மனியில்.

சில பிள்ளைகளை வளர்ப்பு மிக மிக சுலபம். எனது மூத்த மகளும் மகனும் அந்தவகை.
சில பிள்ளைகளை வளர்ப்பது சவால். ஒரு தகப்பனுடைய சுய கௌரவத்திலிருந்து கொதிப்படையும் நாடி நரம்பையெல்லாம் சுண்டிப்பார்க்கும் இவன் இன்னொரு வகை. ஆனால் இவனை வளர்த்து என் மடியில் இன்றும் வைத்திருப்பது தான் ஒரு தகப்பனாக எனது அனுபவ வெற்றி. இப்படியான பிள்ளைகள் மூலமே ஒரு தகப்பனும் மிளிரமுடியும்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

Joyeux anniversaire mon bébé. je t'aime.

L’image contient peut-être : 1 personne, plein air
L’image contient peut-être : 1 personne, debout, montagne, plein air et nature
 
 • Like 5

Share this post


Link to post
Share on other sites
17 minutes ago, விசுகு said:

இன்று எனது 2வது மகனின் பிறந்தநாள்.

விசுகு
மகனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

பட்டதாரிக்கு வாழ்த்துக்கள்.

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

விசுகு அண்ணா உங்கள் மகனுக்கு இனிய பிறந்தனாள் வாழ்த்துக்கள்

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

உங்கள் மகனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்........!    💐

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

விசுகு, உங்கள் மகனுக்கு... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் உரித்துக்காட்டும். :)

 

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

விசுவின் மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites
8 hours ago, விசுகு said:

பட்டது + படிச்சது + பிடித்தது - 212

இன்று எனது 2வது மகனின் பிறந்தநாள்.

இவனது ஆசிரியர்கள் இவனை அதி புத்திசாலித் தற்கொலையாளன் என்பார்கள். ஒரு நாளைக்கு சில நிமிடங்களாவது வீட்டிலும் படித்தால் இவன் எங்கோ போய் விடுவான் ஆனால் தான் பாசாவேன் அதாவது தன் மீதான அதீத நம்பிக்கையால் வகுப்பில் படிப்பதுடன் சரி இது தற்கொலைக்கு ஒப்பானது என்பார்கள்.
இதனால் படிடா. நீ Bac+3 பாசானால் உனக்கு 100 வீதம் சுதந்திரம் தாறேன் என்றேன். அப்படியே Bac+3 (Engineering) பாசானான். தொடர்ந்து Master படி என்றதும் எனக்கு அண்ணனைப்போல ஒரே இடத்தில் கணணிக்கு முன்னாலிருந்தபடி வேலை செய்ய சரி வராது நான் வேறு படிப்புக்கு போகப்போறன் என்றான். சரியப்பா எனக்கு என்ன படிக்கணும் என்பதில்லை ஆனால் ஏதாவதொன்றை Master 2 வரை படிக்கணும். படித்தான் பாசானான்.

போன யூலை மாதம் ஒரு கடிதத்தை கொண்டு வந்து தந்து உடைத்துப்பாருங்கள் என்றான். திறக்கப்படாதிருந்த அந்தக்கடித்துக்குள் என்ன இருக்கு என்று கேட்டேன். நீங்க என்னிடம் கேட்டது இருக்கு. உடைத்துப்பாருங்கள் என்றான். உடைத்துப்பார்த்தபோது Master 2 பாசாகியதற்கான அத்தாட்சிப்பத்திரம் அதற்குள் இருந்தது.

நன்றி சொல்லிவிட்டு அப்போ அடுத்தது வேலை தேடு என்றேன்.
நீங்க கேட்டதை தந்தாச்சு. இனி எனது வழியில் என்னை விடுங்க என்றான்.

சரியப்பா என்ன செய்யப்போறாய் சொல்லு என்றேன். குறைஞ்சது 6 மாதம் உலகம் சுற்றப்போறன் என்றான்.

சரி முதலாவது நாடு எது என்றபோது கியூபா என்றான். சுற்றப்போய் விட்டான். தற்பொழுது யேர்மனியில்.

சில பிள்ளைகளை வளர்ப்பு மிக மிக சுலபம். எனது மூத்த மகளும் மகனும் அந்தவகை.
சில பிள்ளைகளை வளர்ப்பது சவால். ஒரு தகப்பனுடைய சுய கௌரவத்திலிருந்து கொதிப்படையும் நாடி நரம்பையெல்லாம் சுண்டிப்பார்க்கும் இவன் இன்னொரு வகை. ஆனால் இவனை வளர்த்து என் மடியில் இன்றும் வைத்திருப்பது தான் ஒரு தகப்பனாக எனது அனுபவ வெற்றி. இப்படியான பிள்ளைகள் மூலமே ஒரு தகப்பனும் மிளிரமுடியும்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

Joyeux anniversaire mon bébé. je t'aime.

L’image contient peut-être : 1 personne, plein air
L’image contient peut-être : 1 personne, debout, montagne, plein air et nature
 

பிறந்தநாள் வாழ்த்து.

சில பிள்ளைகள் பெற்றாரால் வளர்க்கப்படுகிறன.

சில பிள்ளைகள் பெற்றாரை வளரச் செய்கிறன.

பொதுவாக நீங்கள் பல விடயங்களில் பழமைவாதியாக இருந்தாலும், அரிதாக உங்களில் சில முற்போக்கு கருத்துகளை அண்மை காலத்தில் கண்டு சந்தோசமும், வியப்பும் அடைந்துள்ளேன். இவற்றில் சிலதில் உங்கள் மகனின் பாதிப்பு இருந்ததாய் நீங்களே எழுதியும் உள்ளீர்கள்.

உங்களை மேலும் மேலும் புடம் போட வாழ்த்துகள்😂

 

 

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites
பட்டது + படிச்சது + பிடித்தது - 213
 
ஒரு இனத்தின் பண்பாடுகளும் அதன் மரபுகளும்.....
 
ஒரு இனத்தின் வளர்ச்சியை அல்லது அதனது வரலாற்றுக்காலத்தை கணிக்க அல்லது தெரிந்து கொள்ள அதனுடைய பண்பாடுகள் பழக்கவளக்கங்களை பார்த்தாலே போதுமானது.
 
தமிழினத்தின் வரலாற்றையும் அதனுடைய வேரையும் தேடவேண்டுமாயின் அதனது நடைமுறை வாழ்க்கை முறை மற்றும் தீர்க்கதரிசனமான காலங்கடந்த தூரநோக்குப்பார்வை என்பனவற்றையும் பார்க்கமுடியும். அவ்வாறு பார்க்கும் போது இவ்வாறான முடிவுகள் அனுபவத்தின் அடிப்படையில் அல்லது பாதிப்புக்களின் அடிப்படையில் வகுக்கப்பட்டு காலம் காலமாக வந்து கொண்டிருப்பதை காணமுடிகிறது. அப்படியாயின் தமிழினத்தின் வரலாறும் அதன் காலமும் எண்ணிலடங்காத நீண்ட தூரத்தை கொண்டதாக அமைவதை பார்க்கின்றோம்.
 
ஒரு சிறு உதாரணம்:
அனைத்துக்கோயில்களிலும் கோபுரம் இருப்பது சார்ந்தும் அதற்கு கோடிக்கணக்கான பணம் செலவு செய்யப்படுவது சார்ந்தும் எனக்கும் வருத்தமிருந்தபோது ஆராய்ந்தபோது அது ஏன் கட்டப்படுகிறது என்பதற்கு பதில் கிடைத்தது. இயற்கை அல்லது நோய்கள் மூலம் பெரும் மனித அழிவுகள் வரும் போது எஞ்சிய மக்களை காப்பாற்றுவதற்காக அக்கோபுரத்தின் உச்சியில் தானியங்களும் விதைகளும் மூலப்பொருட்களும் சேமித்து வைக்கப்பட்டதாக அறிய முடிந்தது.
 
அப்படியாயின் இந்த இனத்தின் வரலாற்றில் எத்தனை இயற்கை அல்லது நோய்கள் மூலம் பெரும் மனித அழிவுகளை சந்தித்து இம்முடிவுக்கு வந்திருக்கவேண்டும்????
 
இன்று கொரோனா வைரசின் தாக்கத்தினால் உலகமே கதிகலங்கி அனைத்தும் பதுக்கப்படும் நிலையிலும்
தமிழரின் வணக்கமுறை மஞ்சல் தெளிப்பு முற்றத்து துளசி முதல் முற்றத்தில் தண்ணீரில் முகம் கைகால் கழுவி உள் நுழைதல்வரை அவனது நீண்ட வரலாற்றையும் அனுபவத்தையும் பறைசாற்றி நிற்கிறது.
 
தன்னை அறியாது சாதி மதம் என தனக்குள் உள்நுழைய அனுமதித்தவற்றால் பிரிந்து பலமிழந்த தமிழன் அதிலிருந்து தான் தன் அழிவை தானே தேடிக்கொண்டான். தன்னை அறியாது தூங்குகின்றான். இத்துடன் தற்கொழுது அகதியாய் வந்தவன் என் நாடு பெரிது உன்நாடு சிறிது என மேலும் மேலும் பிரிகின்றான் தான் வாழ்வதே வாடகை வீடென்றறியாமல்.....???
 • Like 2

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)

பட்டது + படிச்சது + பிடித்தது - 214                                                          முடிந்ததும் முடியாததும்..                                                                      கொரோனா வேரசின் தாக்கம் என்னைச் சுற்றி அதிகரித்தபடியே இருக்கிறது. அது என்னை என் குடும்பத்தையும் கூட எந்த நேரத்திலும் தாக்கலாம்.                                       அரசு வீட்டிலேயே இருக்கும்படி உத்தரவிடுகிறது. கண்ணுக்கு தெரியாத எதிரியுடன் போர் வெளியே வந்தால் இரையாவீர்கள் என்று அறிவுறுத்தியபடியே இருக்கிறார்கள்.               இறப்பு வீட்டிற்கு கூட போகமுடியவில்லை. ஏன் நாளைக்கு என் தாயாருக்கு ஏதும் நடந்தால் கூட இதே நிலை தான்.    ஒவ்வொரு நிமிடமும் எத்தனை பேர் இறந்தனர் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அறிவித்தபடியே இருக்கிறார்கள்    ஆனால் இவை எதுவும் எனக்கு எந்த பயத்தையோ கண்களில் கசிவையோ தரவில்லை. ஏன் இவ்வாறு இரும்பு மனதாகியது என் இதயம் என்று நானே என்னை கேள்வி கேட்பதுண்டு.  பதில் முள்ளிவாய்க்கால். எதிரியை உங்களுக்கு தெரிந்திருந்தது. நாங்கள் அவனை தேடி போகவில்லை. எமது ஊர் வீடு பங்கர் என் தேடித் தேடி வந்து அழித்தான். முழுமையாக சாகாத எமது குஞ்சுகளைக்கூட காப்பாற்ற அனுமதியாது துண்டுகளை ஏவி விரட்டி விரட்டிக்கொன்றபோது இதே வீதிகளில் மாதக்கணக்கில் பட்டினி கிடந்து அழுது புரண்டு கெஞ்சி கிடந்தோம். பாராது இருந்தது மட்டுமல்ல உங்களில் சிலர் விரைந்து அழித்து முடி என ஆயுதமும் ஆதரவும் கொடுத்தீர்கள். கட்டையில் போகையிலும் கண்ணீரை நிறுத்த முடியாத நீங்கள் தந்த இந்த வலிக்கு மருந்தை இனியாவது தாருங்கள். அதுவரை உலகில் நடக்கும் எந்த இயற்கை அழிவும் எம்மனதில் எந்த சலனத்தையும் ஏற்படுத்தாது. ஏனெனில் அதை உங்களால் தடுக்க முடியாது. ஆனால் முள்ளிவாய்க்காலை ???

Edited by விசுகு
 • Like 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.