விசுகு

பட்டது + படிச்சது + பிடித்தது - விசுகு

Recommended Posts

56 minutes ago, விசுகு said:

             பட்டது + படிச்சது + பிடித்தது - 215                                        1980 ஆரம்ப காலம்.   நான் பாடசாலை விடுமுறையில் ஊர் வந்தால் இவருடன் தான் அதிகம் யாழ்ப்பாணத்தில் சுற்றியதுண்டு. எனக்கு ஒன்று விட்ட அண்ணர் இவர் என்ற போதும் நாங்கள் மிகவும் நெருங்கிய நண்பர்கள். தம்பி என்று இவர் என்னை அழைப்பதே தேனூறும்.                          இவருக்கு சின்னக்கடை பகுதியில் ஒரு பலசரக்கு கடை இருந்தது. அது அதிகாலை நான்கு மணியளவில் திறக்கப்பட்டு பின்னேரம் நான்கு மணியளவில் பூட்டப்படும். அதன் பின்னர் குளித்து விட்டு வெளிக்கிட்டால்  நேரே ஜந்து லாம்புச்சந்தியிலுள்ள வாப்பா கடையில் நல்ல மாட்டிறைச்சி சாப்பாட்டு. (முதல் முதலில் இந்த கடையை எனக்கு அறிமுகப்படுத்தியது இவர் தான்). அதன் பின்னர் செகண்ட் ஷோ படம் பார்த்து விட்டு கடைசி பஸ் இல் என்னை ஏற்றிவிட்டு கடையில் போய் படுத்துக் கொள்வார். அடுத்த நாள் காலையில் எனக்கு யாழ்ப்பாணத்தில் அலுவல் இருக்கு நானும் உங்களுடன் கடையில் தங்குகின்றேன் என்றால் அங்கு உனக்கு வசதி காணாது தம்பி இந்த வாழ்க்கை எங்களோட போகட்டும் நீ நன்றாக படி என்று  கடைசி பஸ்வரை வந்து ஏற்றி அனுப்புவார்.      அங்கேயே சொந்த தொழில் செய்து நன்றாக வாழ்ந்தவர் வெளிநாடு வரவேண்டிய எந்த தேவையும் அற்றவர். அவரது மரணம் ஒரு அண்ணனை நல்ல நண்பனை இழந்த இரட்டிப்பு சோகத்தை தருகிறது. இந்த நேரத்தில் இதை எழுதாமல் விட்டால் எப்போதும் எழுதமுடியாது போகலாம்.   ஆத்ம சாந்திக்கு வேண்டுகிறேன் அண்ணா நண்பா.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                       (புங்குடுதீவு நான்காம் வட்டாரத்தை "பால்குடி" எனும் திரு. சதாசிவம் லோகநாதன் அவர்கள் இன்றையதினம் சுவிஸ் ரப்பேர்ஸ்வில் எனும் பகுதியில் காலமாகி உள்ளார்).    

ஆழ்ந்த அனுதாபங்கள் விசுகு அண்ணா !

Share this post


Link to post
Share on other sites

ஆழ்ந்த அனுதாபங்கள் விசுகு, 

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, விசுகு said:

புங்குடுதீவு நான்காம் வட்டாரத்தை "பால்குடி" எனும் திரு. சதாசிவம் லோகநாதன் அவர்கள் இன்றையதினம் சுவிஸ் ரப்பேர்ஸ்வில் எனும் பகுதியில் காலமாகி உள்ளார்).    

ஆழ்ந்த அனுதாபங்கள் விசுகு.

Share this post


Link to post
Share on other sites

ஆழ்ந்த இரங்கல்கள்.... உங்களின் துயரத்தில் நாங்களும் பங்கு பற்றுகின்றோம் விசுகு .....!

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)

பட்டது + படிச்சது + பிடித்தது - 216.                     

தலைவர் இருப்பு???

மே மாதம் அல்லது கார்த்திகை மாதம் வந்தாலே தலைவர் இருப்பு பற்றியும் பேசத் தொடங்கி விடுவதும் ஒரு சம்பிரதாயமாகி வருகிறது. ஒரு போராளியின் இழப்பை எவ்வளவு தூரம் தமிழர்கள் பெறுமதியாக நினைந்து கனம் செய்கின்றோம் என்பதை உணர்ந்தவர்களுக்கு தலைவரே தனது உயிரையும் கொடுத்து இருந்தால் எவ்வளவு தூரம் தமிழர்கள் பெறுமதியாக எடுத்துக் கொள்வார்கள் அதனை எவ்வளவு தூரம் மரியாதை செலுத்துவார்கள் என்பது நாம் அறியாத தல்ல. 

2009 இலிருந்து என்னிடம் தலைவரின் இருப்பு சம்பந்தமாக கேட்கப்படும் போது எனது பதிலும் வேண்டுகோளும் இவ்வாறு இருக்கும்.

தலைவரை நாம் தான் கடவுள் என்றோம் அவர் தன்னை எப்போதும் அப்படி சொன்னதில்லை. ஆதலால் முள்ளிவாய்க்காலில் எந்த அதிசயமும் நடந்திருக்கமுடியாது. 

தலைவர் இறந்து இருந்தால் அதற்கான முதல் விளக்கேற்றல் தாயகத்தில் இருந்து செய்யப்செய்யப்படணும். தாயகத்தில் தலைவர் இறந்து விட்டார் என அடையாளம் காட்டியதாக சொல்லப்படும் முரளிதரன் உட்பட போராளிகள் கட்சி வரை எத்தனையோ கட்சிகள் உள்ளன. ஆனால் அவர்கள் எவரும் இதுவரையில் அவ்வாறு செய்ய முயற்சிக்கவே இல்லை.

புலத்தில் (பிரான்ஸில்) தலைவர் இருப்பு சார்ந்து இரு பிரிவுகளாக மாவீரர்கள் நாளை செய்த போது அதில் உடன்பாடு இல்லை என்றபோதும் இரண்டுக்கும் சென்று பார்த்தபோது அங்கே எங்கும் தலைவருக்கு வணக்கம் செலுத்தப்படாததை சுட்டிக் காட்டி பின்னர் எதற்கு இரு மாவீரர்கள் நாளை செய்கிறீர்கள் என கேட்டுவிட்டு வந்தேன். 

தாயகத்திலும் முடியாது புலத்திலும் முடியாது என்பதை வைத்து பார்த்தால் மக்கள் மனதில் அவர் வேறு ஒரு வடிவில் வாழ்கிறார் என்பது புரியும்.

தாயக மக்களின் மனநிலைக்கு ஒரு உதாரணம் மூலம் இதனை முடிக்கலாம் என்று நினைக்கின்றேன்.

எனது அண்ணர் கிளிநொச்சியில் வாழ்ந்தவர். அத்தனை இயக்கங்களையும் போர்களையும் வலிகளையும் கண்டவர் எதிர் கொண்டவர். மூத்த மகனையும் மாவீரராக கொடுத்தவர். புலிகளின் அதிதீவிர பற்றாளனாகவும் அவருக்கு நேர்ந்த சில கசப்பான அனுபவங்களால் பிற்காலத்தில் வெறுப்பாளனாகவும் இருந்தபோதும் முள்ளிவாய்க்கால் வரை புலிகளுடன் சென்று தனது வாழ்நாள் தேடுதல்கள் அனைத்தையும் முள்ளிவாய்க்காலில் இழந்து விட்டுவிட்டு வவுனியா முகாம் வரை வந்து சில மாதங்களுக்கு பின்னர் வெளியே வந்தபோது என்ன நடந்தது என்று அவரிடம் கேட்டேன்.

பதில்: நான் என்றாவது ஒருநாள் பிரபாகரனை சந்திப்பேன். அப்போது அவரிடமிருந்து ஒரேயொரு கேள்விக்கு தான் எனக்கு பதில் தெரிஞ்சாகணும். வைத்திருந்த இவ்வளவு ஆயுதத்தையும் ஏன் கடைசிவரை   பாவிக்கவே இல்லை என்பது தான். 

Edited by விசுகு
  • Like 1

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)

பட்டது + படிச்சது + பிடித்தது - 217

இன்று மே 18

ஒரு கனவோடு ஓடிய நாம் அதன் கடைசி அத்தியாயத்தில் அதன் எல்லை மீறிய சுமைகளையும் வலிகளையும்  வஞ்சகங்களையும் துரோகங்களையும்  தாங்க முடியாமல் அந்தக் கனவை இறக்கி வைத்த நாள். 

அதற்காக இந்த நாளில் எம் இனம் கொடுத்த விலை இதுவரை விடுதலைக்காக எந்த இனமும் கொடுக்காதது. 

மாற்று வாழ்வு அல்லது மாற்று வழி தெரியாமல் இன்றும் எம் இனம் தத்தளித்த வண்ணமே உள்ளது. 

ஆனால் எம்மிடையே இன்றும் திருந்தாத சிலர் போராட்டத்தை கடைசி வரை காட்டிக்கொடுத்து விட்டு இன்று தமிழ் மக்கள் மேல் பற்றுள்ளவர்கள் போன்று வேசம் அணிந்து போராட்டத்தை அங்கே முடித்திருக்கலாம் இங்கே நிற்பாட்டி இருக்கலாம் என வேதம் ஓதுவதையும் பார்க்க முடிகிறது.  அமைதியாக தியானித்திருக்கும் எம்மை இன்றைய நாளில் கூட கட்சி ரீதியாக, இயக்க ரீதியாக பார்க்கும் இவர்களுக்கு ஒன்றை மட்டுமே சொல்லமுடியும். நாம் விதைத்து இருக்கிறோம். கொஞ்சம் ஓரமாக நின்று விளையாடுங்க.

Edited by விசுகு

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.