விசுகு

பட்டது + படிச்சது + பிடித்தது - விசுகு

Recommended Posts

பட்டது + படிச்சது + பிடித்தது - 51
 
நாம் தமிழர்க்கு 4வது இடம்??
 
இங்கே வெற்றி தோல்வி
எத்தனையாவது இடம்?
என்பவற்றைவிட
தேர்தலின் போது அவர்கள் காட்டிய
நேர்மை
ஒழுக்கம்
பொதுமக்களுக்கு இடைஞ்சல் தராமை
தாமாகவே ஒன்றிணைந்தது
தத்தமது செலவில் ஒன்று கூடியது
மற்றவர்களுக்கு முன்னுதாரணமான நடத்தைகள் தான் பேசப்படுகிறது
போற்றப்படுகிறது
இது இனி
நாம் தமிழரை மேலும் மேலும் தானாகவே வளர்க்கும்

 

 

Share this post


Link to post
Share on other sites
பட்டது + படிச்சது + பிடித்தது - 52
 
சுமந்திரன் - கஜேந்திரகுமார் நேருக்கு நேர்
 
 
நேற்றைய இந்த நேருக்கு நேர் பேட்டியை பலரும் இருவருக்கு இடையிலான போட்டியாக பார்க்கின்றனர். அல்லது இருவருக்கும் இடையிலான சட்ட மற்றும் அறிவுசார்ந்த பலப்பரீட்சையாக பேசி எழுதி மகிழ்கின்றனர்.
 
பொன்னம்பலத்தாரின் பேரனா? அல்லது அரச சட்டத்தரணியா? என்பது எமக்கெதற்கு???
 
உண்மையில் இந்த பேட்டி தமிழர்களுக்கு ஏதாவது நன்மை தருமா? அல்லது இப்பேட்டியினூடாக தமிழினம் எதையாவது கிரகித்து அடுத்த அடுத்த கட்டங்களுக்கு நகருமா என்பது தான் ஆரோக்கியமான தேடுதலாக இருக்கும் இருக்கணும்.
 
--------------------------------------------------------------------------------------
 
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மிகத்தெளிவாக குறிப்பிடுகிறார்
 
சுயநிர்ணயம் என்ற பேச்சே இல்லை
 
சமஸ்டி ஆட்சி இல்லை
 
வடகிழக்கு இணைப்பு இல்லை
 
பிரிக்கப்படமுடியாத தேசம் என்பது மட்டும் மிக மிக உரத்து
 
இறுக்கமாக சொல்லப்பட்டு சிங்கள மக்களின் சந்தேகங்கள் மட்டுமே காப்பாற்றப்பட்டிருக்கு
 
எதற்காக தீர்வு?
 
தமிழரது கோரிக்கைகள்
 
அவர்களது தியாகங்கள்
 
மறைக்கப்பட்டு
 
அதற்காக தீர்வை தருவதைவிடுத்து
 
மீண்டும் மீண்டும்
 
சிங்கள மக்களின் சந்தேகங்களுக்கு உறுதிமொழி வழங்குவதற்கு எதற்கு தீர்வு??

Share this post


Link to post
Share on other sites
பட்டது + படிச்சது + பிடித்தது - 53
 
ரஜனியும் நானும்...
(ரஜனியின் அரசியல் பிரவேசம் பற்றி பேசப்படுவதால்)
 
சிறு வயதிலிருந்து என்னை தெரிந்தவர்களுக்கு நன்கு தெரிந்த ஒருவிடயம் நான் ரஜனியின் பரம ரசிகன் என்பது.
 
ஒரு காலத்தில் அவரைப்போல் பேசுவது
அவரைப்போல் நடப்பது
அவரைப்போல் தலையை கோதிவிடுவது
அவரைப்போல் முறைப்பது
ரஜனியின் படத்தை முதல் காட்சியே பார்ப்பது
அதேபோல் கமலின் படத்தை அவரது ரசிகர்களை நக்கலடிப்பதற்பதற்காகவே முதல்க்காட்சியே பார்ப்பது என
நானும் நண்பர்களும் செய்யும் அட்டகாசங்கள் கொஞ்சநஞ்சமல்ல.
 
இந்த ரசிப்பு பிரான்சுக்கு வந்த பின்னரும் இருந்தது
 
ஒருமுறை
ஒவ்வொரு வருடப்பிறப்புக்கு முன்பே தலைவர் படம் போட்ட கலண்டர் வீட்டில் தொங்கவிடப்பட்டிருக்கும்
வருடப்பிறப்பு அன்று லா சப்பல் கடையிலிருந்து ரஜனியின் படம் போட்ட கலண்டர் ஒன்றை எடுத்து வந்திருந்தேன்.
அதை எடுத்த மகன் (3 வயதிருக்கும்)
ரஜனியின் படம் போட்ட கலண்டரை
தலைவரது படம் முற்றாக மறைந்து போகுமாறு தலைவர் படத்துக்கு மேல் கொழுவினான்.
 
அப்பொழுது தான் உறைத்தது தவறானவர்களை
பிள்ளைகளுக்கு அறிமுகம் செய்கின்றேன் என்று.
தலைவர் பற்றியும் ரஜினி பற்றியும் மகனுக்கு சிறு விளக்கம் கொடுத்துவிட்டு
ரஜினியின் கலண்டரை அகற்றிவிட்டேன்.
 
அன்றிலிருந்து நான் எவருடைய ரசிகனுமில்லை.
எந்த நடிகர் நடிகைகளின் படங்களையும் (Photo) வீட்டுக்கு கொண்டுவருவதில்லை.
தலைவர் படம் மட்டுமே வீட்டில் ஒவ்வொரு அறையிலும் உண்டு.
 
இன்றும் மக்கள் ரஜனி உட்பட எல்லோரது படங்களையும் பார்க்கிறார்கள்
தலைவரை தேடுகிறார்கள்.
Edited by விசுகு
 • Like 2

Share this post


Link to post
Share on other sites
பட்டது + படிச்சது + பிடித்தது - 54
 
 
புலம் பெயர்ந்த
தாயக விடுதலைக்காக புலத்தில் உழைத்த
எம் போன்றோரின் தாயக வருகை
 
 
2009க்கு பின்னர் ஏன் தாயகத்துக்கு வருவதில்லை என
அநேகமான உறவுகள் கேட்பதுண்டு (இங்கும் தாயகத்திலிருந்தும்)
 
எனது பதில்
எம்மவர்களை நினைத்துத்தான் வருவதில்லை என்பதாக இருக்கும்.
 
இதோ உங்களுக்கு ஒரு சாட்சி.
 
 
 
நாங்க எல்லா பின்புலங்களுடனும் தான் இறங்கியிருக்கிறம்
 
பயங்கரவாத தடைச்சட்டம் இன்னும் அமுலில் தான் இருக்கு
 
செஞ்சு காட்டுறம்
 
-கூட்டமைப்பு வேட்பாளர்.

Share this post


Link to post
Share on other sites
பட்டது + படிச்சது + பிடித்தது - 55
 
உள்ளுராட்சித்தேர்தல் களம்
 
தாயகத்தில் உள்ளுராட்சி தேர்தல் தொடர்பாகவும் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள்
அவர்களின் தேர்தல் பிரச்சாரங்கள் மற்றும் வாக்குறுதிகள்
ஆரவாரங்கள்
அடிபிடிகள்
காலை வாருதல்
முகநூல் உட்பட விளம்பரங்களை பார்க்கின்றபோது
எல்லாவற்றையும் சரியாகக்கணித்த தலைவர்
தமிழர்களின் போராட்டம் இதுக்குத்தான் என்பதை மட்டும் கணிக்கத்தவறிவிட்டாரோ என்று எண்ணத்தோன்றுகிறது...☹️☹️☹️
Edited by விசுகு

Share this post


Link to post
Share on other sites
பட்டது + படிச்சது + பிடித்தது - 56
 
 
தைப்பொங்கல்
 
அநேகமான இடங்களில் தைப்பொங்கல் தமிழர் திருநாள்
அது இந்துக்களின் விழா அன்று என்பது போன்ற விவாதங்களும் கண்டனங்களும் போய்க்கொண்டிருக்கின்றன.
 
நான் அறிந்தவரை
நான் படித்தவரை
அது இந்துக்களின் திருவிழா தான்.
 
அதை அவ்வாறே ஏற்றுக்கொள்வதில் அல்லது
இதனடிப்படையில் தொழுவதில் என்ன சிக்கல் உள்ளது என புரியவில்லை.
 
தமிழர்களில் பல மதங்களுமுண்டு.
அவரவர் தத்தமது விழாக்களை பண்டிகைகளை தொழுதல்களை
தத்தம் முறைப்படி செய்து வருகிறார்கள்.
எவரும் எவரது மதங்களையும் மாற்றும்படி அல்லது மருகும்படி கோருவதில்லை.
 
உதாரணத்துக்கு நத்தார் எல்லோராலும் கொண்டாடப்படுகிறது.
அதேபோல் வெசாக் தினமும் எல்லோராலும் கொண்டாடப்படுகிறது.
 
ஆனால் பொங்கல் எப்படி இவ்வாறு பந்தாடப்படுகிறது என புரியவில்லை.
அது தமிழரின் திருநாள் என்றால்
அது பற்றி பெரியவர்களுடன்
அதிலும் இந்துப்பெரியவர்களுடன் மாநாடுகளை நடாத்தி முடிவுகளை எடுப்பதே சரியானது.
 • Like 1

Share this post


Link to post
Share on other sites
9 hours ago, விசுகு said:
பட்டது + படிச்சது + பிடித்தது - 56
 
 
தைப்பொங்கல்
 
அநேகமான இடங்களில் தைப்பொங்கல் தமிழர் திருநாள்
அது இந்துக்களின் விழா அன்று என்பது போன்ற விவாதங்களும் கண்டனங்களும் போய்க்கொண்டிருக்கின்றன.
 
நான் அறிந்தவரை
நான் படித்தவரை
அது இந்துக்களின் திருவிழா தான்.
 
அதை அவ்வாறே ஏற்றுக்கொள்வதில் அல்லது
இதனடிப்படையில் தொழுவதில் என்ன சிக்கல் உள்ளது என புரியவில்லை.
 
தமிழர்களில் பல மதங்களுமுண்டு.
அவரவர் தத்தமது விழாக்களை பண்டிகைகளை தொழுதல்களை
தத்தம் முறைப்படி செய்து வருகிறார்கள்.
எவரும் எவரது மதங்களையும் மாற்றும்படி அல்லது மருகும்படி கோருவதில்லை.
 
உதாரணத்துக்கு நத்தார் எல்லோராலும் கொண்டாடப்படுகிறது.
அதேபோல் வெசாக் தினமும் எல்லோராலும் கொண்டாடப்படுகிறது.
 
ஆனால் பொங்கல் எப்படி இவ்வாறு பந்தாடப்படுகிறது என புரியவில்லை.
அது தமிழரின் திருநாள் என்றால்
அது பற்றி பெரியவர்களுடன்
அதிலும் இந்துப்பெரியவர்களுடன் மாநாடுகளை நடாத்தி முடிவுகளை எடுப்பதே சரியானது.

உந்த பிரச்சனையை கிளப்பி விட்டது சைவத்திலிருந்து மதம் மாறிய அல்லேலூயாகாரர்கள்.

 • Like 2

Share this post


Link to post
Share on other sites
பட்டது + படிச்சது + பிடித்தது - 57
 
நெடுக சீரியசாக இருக்கப்படாது காண்.
 
 
 
 
 • Like 2

Share this post


Link to post
Share on other sites

என்ன மனுசனையா நீங்கள், இவ்வளவு வேலைப்பளுவுக்கிடையிலும் எங்கிருந்து இறக்குகின்றிர்கள் இவைகளை....!  tw_blush:

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
பட்டது + படிச்சது + பிடித்தது - 58
 
பெற்றவர்கள் எம்மிடம் எதை எதிர்பார்க்கிறார்கள்
 
வளர்ந்து திருமணமாகி வாழும் அநேகமான பிள்ளைகளுக்கு
தம்மிடம் பெற்றோர் எதை எதிர்பார்க்கிறார்கள் என்று தெரிவதில்லை.
அவர்கள் எதனால் நிம்மதியாக சந்தோசமாக இருப்பார்கள் என்பதும் புரிவதில்லை.
 
தாம் சொத்து பணம் சேர்த்து
பெற்றோரையும் அதன் மூலம் கவனித்துக்கொண்டால்
அவர்கள் சந்தோசமடைவார்கள் என நினைக்கிறார்கள்.
 
உண்மையில் பெற்றோர்களது சந்தோசம் நிம்மதி என்பது
அவர்களது பிள்ளைகளின் அமைதியான
நிம்மதியான
சந்தோசமான வாழ்க்கையை பார்க்கும் போது மட்டுமே உண்டு.
 
அதை தொலைத்துவிட்டு எதை செய்தும் பலனில்லை.
 • Like 1

Share this post


Link to post
Share on other sites
19 hours ago, suvy said:

என்ன மனுசனையா நீங்கள், இவ்வளவு வேலைப்பளுவுக்கிடையிலும் எங்கிருந்து இறக்குகின்றிர்கள் இவைகளை....!  tw_blush:

ஏதாவது  கண்ணில்  பட்டால்

எனது  உறவுகளுக்கு பகிரத்தான்  அண்ணா..

 

Share this post


Link to post
Share on other sites
பட்டது + படிச்சது + பிடித்தது - 59
 
எமது உடம்பு
 
எம்மில் அநேகர்
அழகாக முகமிருத்தல்
மெலிதான உடம்பிருத்தல்
வெள்ளையாக இருத்தல்
போன்றவைகளே தமக்கிருக்கும் பாக்கியம் என கருதுகிறார்கள்
 
உண்மையில்
இலகுவான சுவாசம்
சீரான ரத்த ஓட்டம்
ஒழுங்காக கழிவு வெறியேறுதல்
என்பவை கிடைக்கப்பெற்றவர்களே பாக்கியசாலிகள்.

Share this post


Link to post
Share on other sites
பட்டது + படிச்சது + பிடித்தது - 60
 
இந்திய உயர் விருதுகள்
 
இசையானிக்கு உயர் விருது கிடைத்திருக்கிறது.
பெருமை கொள்வதைவிட வலி தான் அதிகமாகிறது.
 
தத்தமது கட்சிக்காரன்
தமக்கெதிராக செயற்படாதவன்
இன்னார் ஆட்சிக்கு வந்தால்
இன்னார் இன்னாருக்கு விருது...
 
இதெப்படி திறமைக்கு
மக்கள் விருப்பத்துக்கு கிடைத்த தகுதியாகும்???
 
அவருக்கு இசையானி பெருமையே போதும்
இசையானி
மோடிக்கு நன்றி சொல்வது இசையானியையும் விருதையும் கேலி செய்வதாகும்.
 
இந்திய வல்லரசுக்கனவுக்கு முன்னர்
இது போன்ற அரசியல் கேலிக்கூத்துக்களிலிருந்து வெளியில் வரணும்
 
அது இந்த யென்மத்தில் நடக்காது
வல்லரசுக்கனவும் தான்.

Share this post


Link to post
Share on other sites
பட்டது + படிச்சது + பிடித்தது - 61
 
தாயகத்தின் இன்றைய அரசியல்வாதிகளின் பாதை
 
குடை பிடித்தல்
காலில் விழுதல்
பாதுகாப்பு கெடுபிடி செய்தல்
அதையும் தாண்டி
வாகனங்களில் பொய் சொல்லி மக்களை அழைத்து வந்து கூட்டம் முடிய நடுவீதியில் விடுதல்..
 
எங்கே போகின்றோம்???
நாம் கனவு கண்ட தேசம் என்ன???
எதை நோக்கிப்போகின்றோம்?
மக்களை எந்தவழிக்கு பழக்குகின்றோம்??
தமிழக அரசியல்???

Share this post


Link to post
Share on other sites
பட்டது + படிச்சது + பிடித்தது - 62
 
உள்ளுராட்சி தேர்தல் - தாயகம்
 
தாயக தேர்தல் சார்ந்து தெரிவுகளை செய்வதற்கு
அந்த மக்களுக்கே உரிமையுண்டு.
அது அவர்களின் கைகளில்.
 
தாயக விடுதலை சார்ந்து உழைத்தவன்
அந்த உணர்வுடன் வாழ்பவன் என்ற ரீதியில்
தனியே கூட்டமைப்பை மட்டும் தொடர்ந்து பலப்படுத்துவது
சிங்களத்துக்கு இன்னும் சில காலத்துக்கு தமிழரை ஏமாற்றுவதற்கு
இடமளித்தாகிவிடும் என்ற பயமுண்டு.
 
எனவே இன்னுமொன்றை பலப்படுத்தி
சிங்களத்துக்கு ஒரு செய்தியை
தாயக மக்கள் சொல்லவேண்டும் என்ற எதிர்பார்ப்பு எனக்குண்டு
 
இதுவரை நடந்த தேர்தல்களில்
தாயக மக்கள் சரியாகவே காய் நகர்த்தியுள்ளனர்.
இதையும் பார்க்கலாம்.

Share this post


Link to post
Share on other sites

பட்டது + படிச்சது + பிடித்தது - 63

உள்ளுராட்சி தேர்தல் முடிவுகளும் எம்மவரும்...

கொஞ்ச இளசுகள் வென்றிருக்கு. கிளம்பிட்டனம் சில அதி அக்கறையாளர்கள்.
என்னைவிட கூட்டமைப்பு மீது அக்கறை கொண்டவர் எவருமில்லை.

ஆனால் தவறுகளை திருத்தணும். பார்க்கலாம் எனும் நிலையில் தமிழினம் இருக்க காலம் இடம் தராது.

புலிக்களைவு செய்தமை
இளைஞர்களை உள்வாங்க மறுத்தமை
ஒரு சிலரின் ஐனநாயகமற்ற தனி முடிவுகளுக்குள் தமிழினத்தின் தலைவிதியை ஒப்படைத்தமை

தாயக மக்களின் பயத்தையும் தீர்ப்பையும் 
புரிந்து கொண்டு கூட்டமைப்பு தனது தவறுகளை திருத்தி
அடுத்த தலைமுறையின் வரவை உள்வாங்கி
செயற்படணும். அதுவே எம் இனத்துக்கு இன்று தேவை. அதையே தேர்தல் முடிவுகள் சொல்கின்றன.
தாயக மக்கள் எப்பொழுதும் தெளிவாகவே வாக்களித்துள்ளனர். இம்முறையும் அப்படியே.

அப்புறம் மகிந்த சிங்களப்பகுதிகளில் வந்தது
எப்ப அவர் வராமலிருந்தார்??

Share this post


Link to post
Share on other sites
10 minutes ago, விசுகு said:

 

ஆனால் தவறுகளை திருத்தணும். பார்க்கலாம் எனும் நிலையில் தமிழினம் இருக்க காலம்

ஈ பி டி பி உடன் பேச்சுவார்த்தை நடக்குதாமே?

 

 • Sad 1

Share this post


Link to post
Share on other sites

 

மக்களது எண்ணங்களை  புரிந்து  கொள்ளாமல்

எதிரிக்கு  எதிரி  நண்பன்  என்ற  ரீதியில்

பேயுடனும்   கூட்டுச்சேரும்  தவறான  பாதை...

Share this post


Link to post
Share on other sites
பட்டது + படிச்சது + பிடித்தது - 64
 
யாழ் மாநகரசபைக்கு
ஈபிடிபியுடன் கூட்டமைப்பு சமரசத்துக்கு வந்திருக்கிறது.
தமிழரசுக்கட்சியை பற்றி தெரிந்தவர்களுக்கு
இது ஆச்சரியமான விடயமில்லை.
ஆனால் இனி இந்தக்கூட்டுக்கு
சாணக்கியர்கள் சொல்லப்போகும்
அரசியல் பதில்களையும்
கடந்து போகணுமே என்பது தமிழினத்தின் விதி..
 • Like 1

Share this post


Link to post
Share on other sites
பட்டது + படிச்சது + பிடித்தது - 65
 
கமல் - ரஐனி = அரசியல் பிரவேசம்
 
 
கமலின் அவசர அரசியல் பிரவேசத்தை பார்த்தவர்களுக்கு
அவரது அவசர பிரவேசம் உறைத்ததோ இல்லையோ
இது ரஐனியின் வருகையை தடுக்கும் நடவடிக்கை என்பது மட்டும் புரிந்திருக்கும்.
 
இதைப்புரிந்து கொள்ள பெரிதாக ஒன்றும் தேவையில்லை
அமெரிக்க ரசிய அரசியலை புரிந்தாலே போதும்.
 
எங்காவது அமெரிக்கா
அவசரமாக முன்னேறுகிறது காலடி வைக்கிறது என்றால்
அது இன்னொருவரை தடுப்பதற்காகவே இருக்கும்.
அதே போல் ரசியாவும்.
 
இனி ரஐனியின் அரசியல் பிரவேசம்?????
 • Like 1

Share this post


Link to post
Share on other sites

எப்படி விசுகு இப்படி ........!  tw_blush:

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
பட்டது + படிச்சது + பிடித்தது - 66
 
எல்லாவற்றிற்கும் ஒருவிலை இருக்கு???
 
 
கனடிய பிரதமரின் பெருந்தன்மை கண்டு
இந்தக்கிழமை ஒரே அவரது புகழ்பாடுதல் தான் நடக்கிறது.
ஆனால் போரை செய்கின்ற அமெரிக்காவின் வாலில் தொங்கியபடி தான் கனடா இன்றும் உள்ளது.
போரை நிறுத்தும் அளவுக்கு கனடா வலுவான வல்லரசு தான்.
ஆனாலும் பிரதமர் கண்ணீர்வடித்தபடி
இந்தப்போரில் என் கை சுத்தம் என்பது போல் கை கழுவுகிறார் என்று தான் தோன்றுகிறது.
 
கனடாவில் 25 ஆயிரம் பேரை குடியேற்றுவதென்பது
கனடாவுக்கே தேவையானது. அது வேற விடயம்.
 
முள்ளிவாய்க்கால் நடந்து கொண்டிருந்தபோது
லட்சக்கணக்கான தமிழர்கள் கனடாவின் வீதியெங்கும் திரண்டு அழுத போது வராத பாசம்
இன்றும் கதறக்கதற ஒரு சில ஈழத்தமிழர்களை
அவர்களது விருப்பத்துக்கு மாறாக
சர்வதேச மனிதாபிமான அமைப்புக்களின்
ஆபத்தான பிரதேசம் என்ற கோரிக்கைகளையும் மீறி கனடா நாடு கடத்தியே வருகிறது.
 
இவற்றை பார்க்கும் போது
கனடிய பிரதமரின் எண்ணைய் மற்றும் பணபலம் கொண்ட அரபிய மக்கள் மீதான
பாசஅழுகை மற்றும் மீட்பு நடவடிக்கை என்பது
எல்லாவற்றிற்கும் ஒரு விலை உண்டு என்பதையே மீண்டும் மீண்டும் எடுத்து இயம்புகிறது..

Share this post


Link to post
Share on other sites
On 14.2.2018 at 1:23 PM, விசுகு said:
பட்டது + படிச்சது + பிடித்தது - 64
 
யாழ் மாநகரசபைக்கு
ஈபிடிபியுடன் கூட்டமைப்பு சமரசத்துக்கு வந்திருக்கிறது.
தமிழரசுக்கட்சியை பற்றி தெரிந்தவர்களுக்கு
இது ஆச்சரியமான விடயமில்லை.
ஆனால் இனி இந்தக்கூட்டுக்கு
சாணக்கியர்கள் சொல்லப்போகும்
அரசியல் பதில்களையும்
கடந்து போகணுமே என்பது தமிழினத்தின் விதி..
 
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 5 பேர், புன்னகைப்பவர்கள், பலர் அமர்ந்துள்ளனர், பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர், திருமணம் மற்றும் உட்புறம்
 
எல்லாரும் சந்தோசமாய் இருக்கினம். எல்லாம் சுபமே முடியும்.
 • Like 1

Share this post


Link to post
Share on other sites
பட்டது + படிச்சது + பிடித்தது - 67
 
  பூனைக்கு விளையாட்டாம் - எலிக்கு.....???
 
 
சிரியாவுக்கு விமானம் போனதாம். அதில் தமிழ் விமானியாம்.
அவர் வீர புருசராம் என போய்க்கொண்டிருக்கிறது
எம்மவர் பொழுது போக்கு.
 
நாம் அல்லல் பட்ட
போரால் பாதிக்கப்பட்ட
கொடுக்கமுடியாத விலையையும் தியாகத்தையும்
செய்த இனமா? சந்தேகமாக இருக்கிறது.
 
அப்படி இருந்திருந்தால் அல்லல் படும் ஒரு மக்கள் கூட்டத்தின் இல்லல்களில்
இவ்வாறு
கேலிகளும் கிண்டல்களும் நகைச்சுவை விருந்துகளையும் வைக்கமுடியுமா?
 
நாம் உதவக்கூட வேண்டாம்
இவ்வாறு நகைப்புக்களையாவது தவிர்க்கலாமே????

Share this post


Link to post
Share on other sites

பட்டது + படிச்சது + பிடித்தது - 68

இலங்கை இசுலாமியத்தமிழர்கள் மீதான தாக்குதல்கள் பற்றி...

இலங்கை இசுலாமீய தமிழர்கள் 
தம்மை 
தமது ரத்தங்களை 
தமது உறவை இனம் கண்டிருந்தால்...
இன்று தமிழருக்கென்று ஒரு நாடிருந்திருக்கும்.

இப்பொழுதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை
சிங்களம் சொல்கிறது
யார் உனக்கு தேவையென்று
யார் உனக்கு பகைவன் என்று.

இதுவே உனக்கும்  எனக்கும் கடைசி சந்தர்ப்பம்1f625.png?

வா சகோ
வந்து சேர்
நாம் ஒன்றானால்.....???

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.