Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

பட்டது + படிச்சது + பிடித்தது - விசுகு


Recommended Posts

பட்டது + படிச்சது + பிடித்தது - 105
 
அரசியல் சாணக்கியர் கலைஞர் அவர்களது தற்போதைய நிலை சார்ந்து...
 
கலைஞர் கருணாநிதி அவர்கள்
எழுத்தாளர் கலைஞர் என்பதைவிட
அரசியல் சாணக்கியர் என்பதே அவரது பெயராகும்.
அந்த சாணக்கியர் தனது சாணக்கிய அரசியலிலிருந்து சறுக்கியது
2009 இல் ஈழத்தமிழரை காப்பாற்ற தவறிய போது தான்.
தமிழ் தமிழ் என பேசி எழுதி வந்த அவரிடம் தமிழீழம் பெற்றுத்தராவிட்டாலும்
தமிழ் மக்கள் அழிவை தடுப்பார் என்ற நம்பிக்கை கடைசி நிமிடம்வரை ஈழத்தவரிடமிருந்தது.
அதைச்செய்யத்தவறியது மட்டுமன்றி அதற்கு நாடகங்கள் போட்டுத்துணைபோன அன்றே
அவரும் அவரது கட்சியும் சாணக்கியமும் தூள் தூளாகிவிட்டது.
தான் மேடைகளில் பேசி உணர்ச்சியேற்றிய அதே தமிழ்
தனக்கெதிராக தமிழ்த்தேசியம் என வெடித்துக்கிளம்பும் என கருணாநிதி
ஒருபோதுமே எதிர்பார்த்திருக்கவேமாட்டார்.
 
இன்று தோல்விகளை சந்தித்து
கூனி குறுகி கடைசி நிமிடங்களை எண்ணிக்கொண்டிருக்கும் அவரை
சிலர் வைகின்றனர்.
அவரது மரணத்தை வரவேற்கின்றனர்.
மரணத்தை வரவேற்பதும் அவருக்கு இந்த வயதில் ஒருவித விடுதலையே.
உண்மையில் என்னைப்பொறுத்தவரை அவர் இன்னும் வாழணும் கூனி குறுகணும்.
தன் கண் முன்னே துரோகத்துக்கான தண்டனையை அனுபவிக்கணும்.
 
அவரது பேச்சில் இன்றும் மயங்கி கிடக்கும் அவரது கட்சியின் கோடானுகோடி தமிழர்கள் மன்னிப்பார்களாக...
Link to comment
Share on other sites

 • Replies 339
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

பட்டது + படிச்சது + பிடித்தது - 106
 
 
கருணாநிதி அவர்கள்
ஏன் ஈழத்தமிழர்களாலும் அவர்கள் பால் அன்புகொண்ட தமிழர்களாலும்
ஏன் இந்தளவுக்கு விமர்சிக்கப்படுகிறார்??
அல்லது அவரது இறப்புக்கூட எதற்காக வரவேற்கப்படுகிறது?
இந்தப்படம் ஒன்றே போதுமானது
 
37896607_651986355180919_727322681166266
Link to comment
Share on other sites

பட்டது + படிச்சது + பிடித்தது - 107
 
புலிகள் சார்ந்து என்னிடம் கேட்கப்படும் கேள்விகள் 3
 
1 - விடுதலைப்புலிகளை ஏன் விமர்சிப்பதே இல்லை?
 
2 - சொத்துக்கள் மற்றும் சேர்க்கப்பட்ட பணம் எங்கே??
 
3 - விடுதலைப்புலிகளுடன் உங்களின் தொடர்பு எப்படிப்பட்டது ?
 
 
ஒன்றுக்கான பதில்:
 
விடுதலைப்புலிகளின் குறிக்கோள் மீது தான் விமர்சனம் வைக்கமுடியும்
அவர்கள் அதை ஒரு போதும் மாற்றிக்கொண்டதில்லை
எதற்காகவும் எந்தநிலையிலும் உயிர் போகினும் அதை விட்டுக்கொடுத்ததில்லை.
எனவே பாதைகள் மீது விமர்சனம் வைக்கமுடியாது.
 
தமிழ்மக்கள் மீது அளவுக்கதிகமான சுமைகளை சுமத்தியது
ஆட்சேர்ப்பு வரி போன்றவற்றை சிலர் குறிப்பிடுவார்கள்
தமிழ் மக்கள் தாய்ப்பசு என்றால் புலிகள் அதன் கன்று.
தாயிலிருந்து பால் வராவிட்டால் நாலு இடி இடிக்கும் கன்று.
அது தாய்க்கு வலிக்குமா என்ன? அப்படித்தான் பார்க்கவேண்டும்.
உண்மையில் இந்த வலியை நாம் தாங்கி பெருசு படுத்தாமல் இருந்திருந்தால்
இன்று சொர்க்க பூமியில் வாழ்வோம்.
 
2009க்கு பின்னர் தலைவர் ஒரு விடயத்தை தெளிவாக அறிவித்தார்.
இனி உங்களது முடிவுகளை நீங்களே எடுங்கள் என்று. அன்றிலிருந்து புலிகள் இல்லை.
இப்போது இருப்பவர்களுக்கு 3 நேரம் பசிக்கும் வயிறும் இருக்கிறது.
அதையும் தலைவர் தீர்க்கதரிசனமாக எப்பொழுதோ சொல்லிவிட்டார்
எனக்குப்பின் இயக்கத்தை உங்களுக்கேற்றாப்போல் பிரித்து பிரித்து விற்றுக்கொள்ளுங்கள் என்று.
அது தான் தற்பொழுது நடக்கிறது.
 • Thanks 2
 • Confused 1
Link to comment
Share on other sites

பட்டது + படிச்சது + பிடித்தது - 108
 
புலிகள் சார்ந்து என்னிடம் கேட்கப்படும் கேள்விகள் 3
 
1 - விடுதலைப்புலிகளை ஏன் விமர்சிப்பதே இல்லை?
 
2 - சொத்துக்கள் மற்றும் சேர்க்கப்பட்ட பணம் எங்கே??
 
3 - விடுதலைப்புலிகளுடன் உங்களின் தொடர்பு எப்படிப்பட்டது ?
 
இரண்டுக்கான பதில்:
 
விடுதலைப்புலிகளின் வலையமைப்பை
முழுமையாக அறிந்தவர் தலைவரைத்தவிர எவருமில்லை.
இன்றுவரை இன்ரபோல் போன்ற அமைப்புக்களாலேயே
இதனை முழுமையாக அறியமுடியவில்லை.
 
தலைவர் ஒரு சுழற்சி முறை வைத்திருந்தார்.
அதன்படி பணத்தை எந்த அலுவலகத்திலும் அமைப்பிலும் இருக்க விடமாட்டார்.
உதாரணமாக 1 லட்சம் ஈரோக்கள் அலுவலகத்தில் சேர்ந்தால்
50 லட்சம் ஈரோக்களைக்கேட்பார். (தேவையும் அப்படித்தானிருந்தது)
அங்க இங்க மாறி கடனெடுத்து அனுப்பி அந்தக்கடன் முடியமுதல்
அடுத்த தொகையை கேட்பார்.
எனவே அலுவலகங்களிலோ இங்குள்ள பிரதிநிதிகளிடமோ பணம் தங்க இடமில்லை.
 
ஆனால் எங்களால் ஒரு காலத்தில் பிரமிப்பாகவும் பெருமையாகவும் பேசப்பட்ட
தலைவரின் வலையமைப்பே இன்று எமக்கு தலையிடியாக வந்துள்ளது.
அதன் அடி நுணி அறிந்தவர் யாருமில்லை?????
 
ஆனாலும் தலைவரின் வளர்ப்பில் என்றும் நம்பிக்கையுண்டு.
அந்த நம்பிக்கை வீண் போகாது என்று இன்றும் நம்புகின்றேன்.
 
 • Thanks 1
Link to comment
Share on other sites

பட்டது + படிச்சது + பிடித்தது - 109
 
கலைஞர் கருணாநிதி அவர்கள் காலமானார் என்ற செய்தி உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.
 
தமிழகத்தை பொறுத்தவரை வரலாற்றில்
மறுக்கப்படமுடியாத தலைவராகவும்
ஈழத்தமிழினத்தைப்பொறுத்தவரை மன்னிக்கப்பட முடியாத துரோகத்தை செய்தவராகவும் செல்கின்றார்.
 
எவருடைய மரணமும் வருந்தத்தக்கதே.
செல்லுங்கள் கலைஞரே.
இனி ஒருமுறை எம் தமிழர் வாழ்வில் மீள வராதீர்கள்.
Link to comment
Share on other sites

பட்டது + படிச்சது + பிடித்தது - 110
 
விதி வலிமையானது
 
விதி மதியைவிட வலிமையானது என்பார்கள் எம்முன்னோர். .
எனக்கு இதில் நம்பிக்கை இருந்ததில்லை.
 
ஆனால் சில அனுபவங்களும் செயல்களும் அதை எம் வாழ்வில் உறுதிப்படுத்தியே செல்கின்றன
 
கலைஞர் அவர்கள் தலைவருடைய தாயார் என்ற ஒரு காரணத்துக்காக
தனது ஆட்சியில் அவருக்கு மருத்துவம் செய்ய மறுத்தார். அலைக்கழித்தார்.
 
ஈழத்தமிழினத்தின் அழிவில்
நாடகமாடி வேசம் போட்டு நரித்தனம் செய்து
எமது மக்களின் ரத்தத்தை வைத்து மத்தியில் பேரம் பேசி சலுகைகளைப்பெற்றார்.
 
இதனால் ஈழத்தவர்கள் அவரது மறைவை கவலையோடு பார்க்கவில்லை
ஆனால் கொண்டாடமுயலவில்லை
 
ஆனால் விதி தலைவரது தாயாரின் பிறந்தநாளில்
கலைஞரை பறித்து இத்தினத்தை கொண்டாட அனுமதிக்கிறது.
இந்தப்பிறந்தநாளை ஈழத்தமிழர் கொண்டாடும் ஒவ்வொரு வருடமும்
கலைஞரும் ......????
Link to comment
Share on other sites

 • 2 weeks later...
பட்டது + படிச்சது + பிடித்தது - 111
 
விடுமுறையில் கற்றவை
 
பொதுவாக ஆவணி மாதத்தில் எங்காவது தங்கி
அவ்விடத்தை பற்றி நேரடியாக பார்த்து கேட்டு அறிவது எனது வழமை.
இம்முறை பிரான்சின் மலையும் அது சார்ந்த பகுதியாகிய குறிஞ்சி நிலப்பகுதியான LA SAVOIE வில்.
 
இதன் வரலாறு எமது தாயகத்துக்கும் ஊருக்கும் பயனுள்ளதாக அமையுமென்பதால்...
 
இரண்டாம் உலகப்போருக்கு பின்னரான காலப்பகுதியில்
இவ்விடத்தை விட்டு மக்கள் தொடர்ச்சியாக வெளியேறியபடி இருந்தனர்.
ஒரு காலப்பகுதியில் மக்களே இல்லாதநிலை ஏற்பட்டது. காரணங்கள்
 
வருடத்தில் அரைவாசிப்பகுதி கடும் குளிர்
மின்சாரம் மற்றும் எரிபொருள் இன்மை
போக்குவரத்து சுகாதார வசதியின்மை
வேலை வாய்ப்பின்மை
கடும் குளிர் காலப்பகுதியில் தண்ணீர் இன்மை
 
இந்தநிலையில் தான் அரசு 1960 இல்
அவசரமாக அம்மக்களின் இடப்பெயர்ச்சியை தடுக்க ஆலோசனைகளையும் திட்டங்களையும் கோரியது.
அவ்வாறான கோரிக்கைக்கு கிடைத்த திட்டம் தான்
பனிச்சறுக்கல்களுக்கான இடமாக இருப்பதால் அதை சுற்றுலா திடலாக அறிவித்து
அது சார்ந்த தொழில்துறைகள் மற்றும் நிறுவனங்களை உருவாக்க ஊக்குவித்தலாகும்.
 
1960 இல் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டமானது
1980களில் பாரீய வளர்ச்சி கண்டு இன்று பனிச்சறுக்கல் காலப்பகுதியில்
இவ்விடத்தில் பல மாதங்களுக்கு முன்பே இடங்களை பதிவு செய்தால் தான்
இடம் கிடைக்குமளவுக்கு வளர்ந்து அங்குள்ள மக்களுக்கும் அரசுக்கும்
பெரும் சுற்றுலா வருமானத்தை தரும் துறையாக வளர்ந்து
அந்த மண்ணையும் மக்களையும் வளம் படைத்த நிலைக்கு கொண்டு வந்துள்ளது.
 
இதைக்காணும் போது எனது ஊரின் இன்றைய நிலையே கண் முன் நின்றது.
அதுவும் மாறும் என்ற நம்பிக்கை வருகிறது.
 
எமதூர் மக்கள் புலமெங்கும்
அரசுகளுக்கு பெருவாரியான வரிகளையும் நன்கொடைகளையும்
கொடுப்பவர்களாக இன்று வளர்ந்துள்ளமையை காண்கின்றோம்.
எனவே இவர்களை எமதூர் சார்ந்து திருப்பும் போது
எமது மண்ணும் ஒருநாள் வளம் படைத்த மக்களையும் மண்ணையும் கொண்டதாக வரும்.
கனவு காண்போம்.
 • Like 3
Link to comment
Share on other sites

 • 2 weeks later...
பட்டது + படிச்சது + பிடித்தது - 112
 
அதிக பேச்சு அல்லது அதிக விளம்பரம்
 
ஒரு விடயத்தை பற்றிய அதிக பேச்சு அல்லது அதிக விளம்பரம்
அந்த விடயத்தின் உண்மைத்தன்மைக்கு மேலாக ஊதிப்பெருதாக்கி
எதிர்பார்ப்பை பன்மடங்கு அதிகரிக்கச்செய்து
எதை சாதித்தபோதும் அதைவிட அதிக எதிர்பார்ப்பை உருவாக்கி
அந்த விடயத்தை சிறுமைப்படுத்தி விடும்.
அது சினிமாவாக இருந்தாலும் சரி பொது அமைப்புக்களாக இருந்தாலும் சரி.
Link to comment
Share on other sites

 • 1 month later...
பட்டது + படிச்சது + பிடித்தது - 113
 
எனது தனிப்பட்ட கருத்து
 
கடந்த சில நாட்களாக சில நேரடியாகவும்
சில தொலைபேசி அழைப்புக்கள் மற்றும் சகல தொடர்புகளாலும்
புங்குடுதீவு அமைப்புக்களின் இன்றைய சில செயற்பாடுகள் சார்ந்து
கேள்விகள் என்னிடம் முன் வைக்கப்பட்டன.
எழுதுவதில்லை என ஒதுங்கியிருக்க முடியாத விடயமிது.
 
சிறீலங்காவின் அரச பிரதிநிதிகள் எவரையும்
புலத்திலுள்ளோர் வரவேற்க ஆதரவளிக்க வேண்டுமாயின்
சிறீலங்கா அரசாங்கம் தமிழருக்கான தீர்வு ஒன்றை முன் வைக்கவேண்டும்.
அதுவே எமக்கான ஆகக்குறைந்த சலுகையும் அரவணைப்புமாகும்.
 
இதய சுத்தி இருந்தால் அதற்கு கால தாமதம் தேவையற்றது.
அவ்வாறு கால தாமதம் தேவையென்றால்
ஐனநாயகமுறையில் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட வடமாகாணசபை உண்டு.
அவர்களின் புலத்தவருடனான செயற்பாடுகள் மற்றும் தொழிற்துறை சார் சந்திப்புக்களுக்கும்
புலத்தவரின் பங்களிப்புக்கள் வடமாகாண சபைக்கு கிடைக்க அவர்கள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு
ஆதரவளித்து ஊக்கமளிக்க வேண்டும்.
 
அதைத்தவிர்த்து அல்லது போக்கு காட்டியபடி தாயகத்தில் என்னவும் செய்யலாம். ஆனால் புலத்தில்???
 
எதையும் எவரும் மறக்கவுமில்லை.
அதை மன்னிக்க மறக்க எதுவும் முன்வைக்கப்படவுமில்லை.
அதற்கான முயற்சிகளும் கண்ணுக்கெட்டியவரை தெரியவுமில்லை.
 
ஆனால் அதை கெடுக்கும் முயற்சிகளும்
எம்முள் பிளவுகளை ஏற்படுத்தும் முயற்சிகளும் முன்னைவிட அதிகமாக...........????
 
 • Like 1
Link to comment
Share on other sites

 • 3 weeks later...
பட்டது + படிச்சது + பிடித்தது - 114
 
தள்ளிவிடல்
 
போன கிழமை அதிகாலை ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.
அவர் எனது மக்களுடன் படித்தவர் தற்பொழுது காவல்த்துறை அதிகாரியாக இருக்கிறார்.
இரவு ஒரு பெண்ணின் அவலக்குரல் தொலைபேசி அழைப்பு வந்து
அவரை காவல்த்துறை அலுவலகத்துக்கு கூட்டி வந்திருக்கின்றோம்.
அவர் உங்கள் தமிழ் மொழி மட்டுமே பேசுகின்றார்
அதனால் எனக்கு உங்களது உதவி தேவை என்றார்.
சரி அவரிடம் அந்த பெண்ணிடமிருந்து என்ன தகவல் வேண்டும் என்பதை கேட்டு தெரிந்து கொண்டு
அந்த பெண்ணிடம் தொலைபேசியை கொடுக்கச்சொன்னேன்.
 
நான் வணக்கம் என்றதும் அந்தப்பெண் ஓ என்று அழத்தொடங்கிவிட்டார்.
சிறிய அவகாசத்தின் பின் நீங்கள் எங்கே வந்திருக்கின்றீர்கள்
இதன் அடுத்த அடுத்த கட்டங்கள் உங்களையும் உங்கள் கணவரையும்
தூரமாக்கிவிடும் என்பது தெரியுமா சகோதரி என்று கேட்டேன்.
தெரியும் எல்லாம் அனுபவித்து
முடியும்வரை பொறுத்து பார்த்துத்தான் வெளியில் வந்திருக்கின்றேன்
இனி அவரை நான் பார்க்கவே மாட்டேன் என்றார்.
உங்களுக்குள் என்ன பிரச்சினை என்றேன்.
குடிக்கிறார் அத்துடன் வாயுக்குள் எதையோ வைத்து சப்புகிறார்
மிருகமாக நடக்கிறார். அடிக்கிறார் உதைக்கிறார் கத்தியால் குத்த வாறார்.
நான் என்ன செய்தாலும் சந்தேகக்கண்ணோடு பார்க்கிறார்
எங்கும் வெளியில் போகக்கூடாது எவருடனும் பேசக்கூடாது.
எனக்காக இல்லை எனது இரு பிள்ளைகளுக்காக (4 மற்றும் 1 வயது) நான் உயிரோடு இருக்கணும்
அதனால் தான் வெளியில் வந்தேன் என்றார் (இவ்வளவும் என்னிடம் அழுதழுது சொல்ல அரை மணித்தியாலம் தேவைப்பட்டது)
 
உங்களுக்கு பிரான்சில் யாரிருக்கிறார்கள்
- எவருமில்லை அவரைத்தவிர எனக்கு எவரையும் தெரியாது.
எப்படி பிரான்சுக்கு வந்தீர்கள்?
- ஊருக்கு வந்து அங்கேயே திருமணம் செய்து அவரே என்னை இங்கு கூட்டி வந்தார்.
 
நான் காவல்த்துறை அதிகாரியிடம் என்ன சொல்லவேண்டும்
- எனக்கு அவரிடமிருந்து பாதுகாப்பும் நிம்மதியாக நானும் பிள்ளைகளும் வாழ ஒரு வீடும் தரச்சொல்லுங்கோ.
 
சரி சொல்கின்றேன் நல்லதொரு அதிகாரியிடம் வந்திருக்கின்றீர்கள்.
நீங்கள் கேட்பதை அவரிடம் சொல்கின்றேன்.
இனியாவது இங்கு மொழியை படியுங்கள் சொந்தக்காலில் நில்லுங்கள். அழுதபடி விடை தந்தார்.
 
அதிகாரியிடம் விடயத்தை சொல்லி உதவும்படி சொன்னேன்.
கணவரை கைது செய்திருக்கின்றோம்.
முடிந்தவரை அவர் கேட்பதை செய்து கொடுக்கின்றோம் என்றவர்
என்னிடம் ஒரு கேள்வியை முன்வைக்கிறார்
 
மொழி தெரியாது
நாடு திசை திக்கு எதுவுமே தெரியாது
எந்த வருமானமும் கிடையாது
ஒருவரை மட்டுமே நம்பி அவரிடம் எப்படி உங்கள் ஆட்கள் ஒரு பெண்ணை கொடுக்கிறார்கள்??
இந்த ஒன்றுமின்மை தான் அவரை தவறு செய்ய தூண்டுகிறது.
 
இதே கேள்வியை உங்களிடம் முக்கியமாக தாயகத்திலுள்ள எனது மக்களிடம் நான் வைக்கின்றேன்.
 
மொழி தெரியாது
நாடு திசை திக்கு எதுவுமே தெரியாது
எந்த வருமானமும் கிடையாது
ஒருவரை மட்டுமே நம்பி அவரிடம் எப்படி உங்கள் ஆட்கள் ஒரு பெண்ணை கொடுக்கிறார்கள்??
Edited by விசுகு
 • Like 6
Link to comment
Share on other sites

பட்டது + படிச்சது + பிடித்தது - 115
 
ஒருவரை தொடர்ந்து ஏமாற்ற முடியுமா?
 
தமிழரை தொடந்து ஏமாற்ற முடியும் என்கிறது சிங்களம்.
தொடர்ந்து ஏமாற்றி வெற்றியும் கண்டு வருகிறது.
 
இந்தமுறை ஆப்பு தமிழருக்கு மட்டுமல்ல சர்வதேசத்துக்கும்  சேர்த்து.
 
மகிந்தவே தொடர்ந்து இருக்கட்டும்
இருக்கும் சாட்சிகளை வைத்து தொடர்ந்து முயற்சிக்கலாம் என்ற போது
நல்லாட்சியை ஏற்போம் என்றவர்களுக்கும் சேர்த்து ஆப்பு இறங்கியிருக்கிறது.
 
சாணக்கியமானவர்கள் சில கோடிகளை சேர்த்ததை தவிர
தமிழர் தலையில் மீண்டும் மீண்டும் அரைத்தல் தொடர்கிறது தொடரும்.
 
இன்னொரு மொந்தையில் சாணக்கியர்கள் வலம் வர தயாராவார்கள்.
வருவார்கள் வெல்வார்கள்.
 
இனி......???
 • Like 2
Link to comment
Share on other sites

பட்டது + படிச்சது + பிடித்தது - 116

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்?

நல்லாட்சியை எமது சாணக்கியத்தால் உருவாக்கியது நாங்கள் தான்.

அதை வேறு எவராலும் செய்திருக்கவே முடியாது என

இதுவரை தமிழ் மக்களுக்கு தாங்கள் செய்த பெரும் தீர்வாக

நெஞ்சை நிமிர்த்தியபடி இருந்தனர் கூட்டமைப்பினர்.

இப்பொழுது அது இல்லை எல்லாமே

மகிந்த மைத்திரியில் நரி விளையாட்டு எனத்தெரிய வருகிறது.

ஏற்கனவே பெரு நரி என்று இருந்த ரணிலுக்கே ஆப்பு இறுக்கியிருக்கிறார்கள்.

இப்போ எதை சொல்லப்போகிறார்கள் சாணக்கியர்கள் தமிழ் மக்களிடம்?? 
தான்தோன்றித்தனமாக இருவர் மட்டுமே                                                                                                                                                                                                                              தமிழரின் தலைவிதியை நிர்ணயிப்பவர்களாக                                                                                                                                                                                                                       இதுவரை நடந்து வந்த நிலையிலிருந்து                                                                                                                                                                                                                     கூட்டமைப்பின் எல்லா கட்சியினருடனும் கலந்தாலோசித்து முடிவு தருகின்றோம் என்பதனூடக

இவர்கள் சொல்ல வருவது பழியை எல்லோர் தலையிலும் போடப்போகின்றோம் என்பதைத்தானே??

நன்மை எமக்கு தீமை உங்களுக்கு??

 • Sad 1
Link to comment
Share on other sites

பட்டது + படிச்சது + பிடித்தது - 117
 
ஒரு நல்ல கனவு?
 
மைத்திரி மகிந்த ரணில் சர்வதேசம் என
நேற்றிரவு ஆட்டம் பார்த்து
களைச்சுப்போய் மூளையே ஊசலாட படுத்தனா.
 
ஒரு கனவு
முப்படைகளும் சுற்றி நிற்க
தலைவர் கம்பீரமா நடந்து வாறார்
என்னை அறியாமலேயே
கையெடுத்து கும்பிட்டன்
கனவு தான் என்று தெரிந்த பின்பும்
அதை கெடுக்க விரும்பாமல்
வாழ்வில் முதல் தடவையாக தொடர்ந்தன் கனவை...
 
நிஐமாய் வருவாயா ராசா....
 
 • Like 2
 • Sad 1
Link to comment
Share on other sites

On 10/27/2018 at 5:10 PM, விசுகு said:
பட்டது + படிச்சது + பிடித்தது - 117
 
ஒரு நல்ல கனவு?
 
மைத்திரி மகிந்த ரணில் சர்வதேசம் என
நேற்றிரவு ஆட்டம் பார்த்து
களைச்சுப்போய் மூளையே ஊசலாட படுத்தனா.
 
ஒரு கனவு
முப்படைகளும் சுற்றி நிற்க
தலைவர் கம்பீரமா நடந்து வாறார்
என்னை அறியாமலேயே
கையெடுத்து கும்பிட்டன்
கனவு தான் என்று தெரிந்த பின்பும்
அதை கெடுக்க விரும்பாமல்
வாழ்வில் முதல் தடவையாக தொடர்ந்தன் கனவை...
 
நிஐமாய் வருவாயா ராசா....
 

     இது உங்கள் கனவு மட்டும் இல்லை பலருடைய கனவும் இதுதான். இந்த கனவு நிறைவேற எனது வாழ்த்துக்கள்

 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On ‎10‎/‎27‎/‎2018 at 4:10 AM, விசுகு said:
பட்டது + படிச்சது + பிடித்தது - 117
 
ஒரு நல்ல கனவு?
 
மைத்திரி மகிந்த ரணில் சர்வதேசம் என
நேற்றிரவு ஆட்டம் பார்த்து
களைச்சுப்போய் மூளையே ஊசலாட படுத்தனா.
 
ஒரு கனவு
முப்படைகளும் சுற்றி நிற்க
தலைவர் கம்பீரமா நடந்து வாறார்
என்னை அறியாமலேயே
கையெடுத்து கும்பிட்டன்
கனவு தான் என்று தெரிந்த பின்பும்
அதை கெடுக்க விரும்பாமல்
வாழ்வில் முதல் தடவையாக தொடர்ந்தன் கனவை...
 
நிஐமாய் வருவாயா ராசா....
 

தலைவரும்,கருணாவும் ஒன்றாக இருந்து சாப்பிடுகின்ற மாதிரி எனக்கும் ஒரு கனவு வந்தது ?

 

 • Like 1
Link to comment
Share on other sites

பட்டது + படிச்சது + பிடித்தது - 118
 
 
என்ர பொடி தனது முகநூலில் போட்டிருக்கு.
 
என்ர அப்பாவும் நானும் விளையாடியதை யார் படம் பிடிச்சது என எழுதியிருக்கிறார்.
(Qui nous a filmé ?)
 

 

Edited by விசுகு
 • Like 1
Link to comment
Share on other sites

1 hour ago, ரதி said:

தலைவரும்,கருணாவும் ஒன்றாக இருந்து சாப்பிடுகின்ற மாதிரி எனக்கும் ஒரு கனவு வந்தது ?

 

உங்களது  கனவும்   பலிக்கட்டும்

அவர் இப்போ இலங்கையின் கோடிசுவரர்களின் வரிசையில்4வது  இடத்திலிருக்கிறார்

இனி  தலைவரோட எல்லாம்  சாப்பிடமாட்டார்

ஆனால் கடைசி நேரத்தில தலைவரோட அவர் போய் சாப்பிட்டிருந்தா....?

தமிழினம்  வென்றிருக்கும்

ஆனால் அவரோட  நான் இருந்து  சாப்பிட்டிருக்கின்றேன்

தோளில்  கை  போட்டு படமும் இருக்கு.

ஆனால்  அதுக்காக  இப்பொழுது  வெட்கப்படுகின்றேன்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, விசுகு said:

ஆனால் அவரோட  நான் இருந்து  சாப்பிட்டிருக்கின்றேன்

 தோளில்  கை  போட்டு படமும் இருக்கு.

ஆனால்  அதுக்காக  இப்பொழுது  வெட்கப்படுகின்றேன்.

வெட்கப்படாதீர்கள் விசுகு ஐயா!

கருணா அம்மானும், டக்ளஸ் தேவானந்தாவும் மகிந்தவின் தலைமையில் தமிழர்களின் காவல் தெய்வங்களாக இருப்பார்கள்.

தோழர் தேவானந்தா பாரிஸ் வரும்போது அவருடன் சேர்ந்து விருந்துண்ண விண்ணப்பம் வைக்கின்றேன்?

 • Haha 1
Link to comment
Share on other sites

2 minutes ago, கிருபன் said:

வெட்கப்படாதீர்கள் விசுகு ஐயா!

கருணா அம்மானும், டக்ளஸ் தேவானந்தாவும் மகிந்தவின் தலைமையில் தமிழர்களின் காவல் தெய்வங்களாக இருப்பார்கள்.

தோழர் தேவானந்தா பாரிஸ் வரும்போது அவருடன் சேர்ந்து விருந்துண்ண விண்ணப்பம் வைக்கின்றேன்?

எதுக்கு

சுத்தி  மூக்கைத்தொடுவான்?

மகிந்தவோட கை  கொடுக்க  எனக்கு  இவர்கள் தேவையில்லை

போன  கிழமையும் ஒரு  அழைப்பு  வந்தது

நாங்க தான் புறக்கணித்தோம்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, விசுகு said:

எதுக்கு

சுத்தி  மூக்கைத்தொடுவான்?

மகிந்தவோட கை  கொடுக்க  எனக்கு  இவர்கள் தேவையில்லை

போன  கிழமையும் ஒரு  அழைப்பு  வந்தது

நாங்க தான் புறக்கணித்தோம்

 விசுகு ஐயா பெரிய கை என்று தெரியும்?

புறக்கணிக்காமல் மகிந்த மாத்தயாவோடும் பேசிப் பாக்கிறதுதானே. சம்சும், சைக்கிள் கோஸ்டி, விக்கி எல்லாரும் ஏறிச் சறுக்கி விழுந்து கிடக்கினம். ஏன் தமிழீழம், சமஸ்டி என்று சறுக்கிற குதிரையில ஏற்வேண்டும்? அபிவிருத்தி, பொருளாதாரம், கைதிகள் விடுதலை எல்லாம் மகிந்த மனம் வைத்தால்தானே கிடைக்கும்?

 • Like 1
Link to comment
Share on other sites

20 minutes ago, கிருபன் said:

 விசுகு ஐயா பெரிய கை என்று தெரியும்?

புறக்கணிக்காமல் மகிந்த மாத்தயாவோடும் பேசிப் பாக்கிறதுதானே. சம்சும், சைக்கிள் கோஸ்டி, விக்கி எல்லாரும் ஏறிச் சறுக்கி விழுந்து கிடக்கினம். ஏன் தமிழீழம், சமஸ்டி என்று சறுக்கிற குதிரையில ஏற்வேண்டும்? அபிவிருத்தி, பொருளாதாரம், கைதிகள் விடுதலை எல்லாம் மகிந்த மனம் வைத்தால்தானே கிடைக்கும்?

கனவு  காணுங்கள்- அப்துல்  கலாம்

Edited by விசுகு
Link to comment
Share on other sites

பட்டது + படிச்சது + பிடித்தது - 119
 
படிப்பில் பிள்ளைகளின் புள்ளிகள்?
 
இந்த பெற்றோர்களுக்கு
அதிலும் தமிழ்ப்பெற்றோர்களுக்கு திருப்தி இருப்பதில்லை.
எவ்வளவு தான் புள்ளிகள் எடுத்தாலும்
அதற்கு மேல் ஏன் எடுக்கவில்லை ஏன் முயலக்கூடாது என்பார்களே தவிர
போதும் என்று ஒரு போதும் சொல்வதில்லையே அப்பா என்றாள் என் மகள்.
சரியான கேள்வி தான். இருந்தாலும் அதற்கொரு காரணம் இருக்குமல்லவா?
 
நீ குழந்தையாக இருக்கும் போது
சிறிது பாலைக்குடித்தவுடன் வேண்டாம் என்பாய்.
அப்படியே விட்டுவிடுவதில்லை நாம்.
இன்னும் கொஞ்சம் கொஞ்சம் என தந்து
உன்னை நிமிர்த்தி தலையில் தட்டி கைகளை மேலே குலுக்கி விடுவோம்.
சாப்பாடு ஊட்டும் போதும் இப்படித்தான்
அம்புலிமாமா கதைகள் சொல்லி இன்னும் கொஞ்சம் ஊட்டிவிடுவோம்.
அது போலத்தான் இதுவும் என ஏன் எடுக்கப்படாது?
 
அது உனது உடல் நலத்துக்கும் சக்திக்கும்
இது உனது எதிர்காலத்துக்கும் வளர்ச்சிக்கும் என்றேன் நான்.
 
சிரித்துக்கொண்டு போனாள்.
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On ‎10‎/‎29‎/‎2018 at 6:27 AM, விசுகு said:

உங்களது  கனவும்   பலிக்கட்டும்

அவர் இப்போ இலங்கையின் கோடிசுவரர்களின் வரிசையில்4வது  இடத்திலிருக்கிறார்

இனி  தலைவரோட எல்லாம்  சாப்பிடமாட்டார்

ஆனால் கடைசி நேரத்தில தலைவரோட அவர் போய் சாப்பிட்டிருந்தா....?

தமிழினம்  வென்றிருக்கும்

ஆனால் அவரோட  நான் இருந்து  சாப்பிட்டிருக்கின்றேன்

தோளில்  கை  போட்டு படமும் இருக்கு.

ஆனால்  அதுக்காக  இப்பொழுது  வெட்கப்படுகின்றேன்.

தலைவரோட இறுதி விருந்து சாப்பிடடவர்கள் எல்லாம் மாண்டு போனார்கள் என்பது தெரியாதோ விசுகு அண்ணா 

On ‎10‎/‎29‎/‎2018 at 6:40 AM, கிருபன் said:

வெட்கப்படாதீர்கள் விசுகு ஐயா!

கருணா அம்மானும், டக்ளஸ் தேவானந்தாவும் மகிந்தவின் தலைமையில் தமிழர்களின் காவல் தெய்வங்களாக இருப்பார்கள்.

தோழர் தேவானந்தா பாரிஸ் வரும்போது அவருடன் சேர்ந்து விருந்துண்ண விண்ணப்பம் வைக்கின்றேன்?

டக்லசை கொலை செய்யத் திரிந்தவர்களே மு.வாய்க்காலின் போது அவரைப் பிடித்து தப்பி வந்தார்கள்...அவர் துரோகி அவரிடம் என்ன உதவி கேட்பது என்று நினைத்திருந்தால் அவ்வளவு பேரும் சிறையிலையே  மாண்டு இருப்பார்கள்.

"தக்கன பிழைக்கும்"

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ரதி said:

தலைவரோட இறுதி விருந்து சாப்பிடடவர்கள் எல்லாம் மாண்டு போனார்கள் என்பது தெரியாதோ விசுகு அண்ணா 

அப்ப இங்கு புலம்பெயர் பாதி செத்து இருக்கணும் .

8 hours ago, ரதி said:

டக்லசை கொலை செய்யத் திரிந்தவர்களே மு.வாய்க்காலின் போது அவரைப் பிடித்து தப்பி வந்தார்கள்...அவர் துரோகி அவரிடம் என்ன உதவி கேட்பது என்று நினைத்திருந்தால் அவ்வளவு பேரும் சிறையிலையே  மாண்டு இருப்பார்கள்.

"தக்கன பிழைக்கும்"

நீங்கள் நினைப்பது  சின்ன பிள்ளைதனமானது    அப்ப சுரேஷ் பிரேமசந்திரன் போன்றவர்கள்  யார் ? 

Edited by பெருமாள்
Link to comment
Share on other sites

பட்டது + படிச்சது + பிடித்தது - 120

சிரிப்பே இவரிடம் தோற்றுப்போகும்.....

எம்மோடு பழகியவர்கள் அதிலும் எமக்கு நம்பிக்கை தந்தவர்கள்

கொல்லப்படுவதென்பது மிகவும் கொடுமையானது.

அப்படித்தான் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறப்பும்.

அவரது சிரித்த முகத்தை மட்டுமே நாம் பார்த்திருக்கின்றோம்.

ஒரு நாள் அவருடன் பேசிக்கொண்டிருந்தபோது

எம்மனதிலிருந்த கேள்வியை நண்பர் ஒருவர் கேட்டுவிட்டார்.

அண்ணா எப்பொழுதும் சிரித்த முகத்துடன் இருக்கிறீர்களே உங்களுக்கு கோபமே வராதா என்று?

அதே சிரித்த முகத்துடன்

ஓ நீங்கள் பார்த்ததில்லை அல்லவா என்றபடி

அவருக்கு பாதுகாப்பாக நின்ற போராளியை திரும்பிப்பார்த்தார்.

அந்த போராளியின் முகத்தில் தெரிந்த இறுக்கம் அவரது இன்னொரு பக்கத்தை எமக்கு உணர்த்தியது.

இன்று அவரது ஞாபகம் வந்து கொண்டே இருக்கிறது.

வீரவணக்கம் அண்ணா மற்றும் அனைத்து போராளிகளுக்கும்.

L’image contient peut-être : 6 personnes, personnes souriantes, texte

 
 
Edited by விசுகு
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.