Jump to content

பித்தலாட்ட பிக்பாஸ். - ஒரு டெக்னிகல் அலசல்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für பிக்பாஸ்

பித்தலாட்ட  பிக்பாஸ். - ஒரு டெக்னிகல் அலசல்.

பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிப்பரப்பான நாள் முதல் வாத பிரதிவாதங்கள் சமூக வளைத்தளங்களில் எழ துவங்கிவிட்டன. பிக்பாஸ் நிகழ்ச்சியில் உள்ளவர்களின் உளவியல் வரை ஆய்வு செய்து முடித்துவிட்டார்கள். அதிலும் நான் மதிக்கும் பல முகநூல் பிரபலங்கள் தினம் தினம் அதுப்பற்றி பதிவு எழுதி, சமூக, வரலாறு, சாதி வரை அலசுவதை பார்க்கும்போது, கண்ணை கட்டுகிறது.

இங்கு எல்லோருமே அறிந்த விவகாரம், 100 நாள் அந்த வீட்டுக்குள் யாரும் நுழைய முடியாது. அந்த 15 பேர் மட்டும்மே இருப்பார்கள் என்பதே. அவர்களை கேமராக்கள் கண்காணித்து தினமும் நடைபெறும் விவகாரத்தை தொகுத்து இரவில் விஜய் டிவி தனது பார்வையாளர்களுக்கு வழங்கிறது. அதில், காயத்திரி சாதி வெறியோடு பேசுவதும், ஓவியா தன் போக்கில் இருப்பதும், பரணி சுவர் ஏறி குதித்து தப்ப ஓட முயல்வதும், கஞ்சா கறுப்பு கோபப்படுவதும், ஜூலி அழும் உளவியலை பலர் எழுதிவிட்டார்கள். நான் அதுப்பற்றி எழுதப்போவதில்லை. இது, பிக்பாஸ் பார்வையாளர்களுக்கு தெரியாமல் பிக்பாஸ் டீம் நடத்தும் நாடகத்தை, வெளிச்சம் போட்டு காட்டவே இந்த கட்டுரை.


பிக்பாஸ் வீட்டுக்குள் யாரும் செல்ல முடியாது என்பதே சுத்தமான. வடிக்கட்டிய பொய். ஒவ்வொரு நாளும் கேமராமேன்கள் உட்பட பலர் வீட்டுக்குள் போய்விட்டு வருகின்றனர் என்பதே உண்மை.

பிக்பாஸ் வீட்டில் நடப்பது எல்லாமே முன்கூட்டியே எழுதப்பட்டு, எடுக்கப்படும் ஸ்கிரிப்ட் ஒர்க். ஸ்கிரிப்டே கிடையாது என்பவர்கள் ஒன்றைப் புரிந்துக்கொள்ள வேண்டும். சினிமா பிரபலங்கள் தங்கள் இமேஜை டெவலப் செய்ய, அதைக் காத்துக்கொள்ள என்னன்ன செய்வார்கள் என்பது திரைத்துறைக்குள் இருப்பவர்கள் நன்றாக அறிந்த விஷயம். சினிமாவுக்குள் நுழையும் முன் கார்ப்பரேஷன் வாட்டரை குடித்து வாழ்ந்தவர்கள், சினிமாவுக்குள் சிறு வாய்ப்பு கிடைத்து நுழைந்ததும் குடிக்கறது மினரல் வாட்டர், கொப்பளிக்கிறது பன்னீர் என வாழ்வார்கள், வாழ வைக்கப்படுவார்கள். அவர்களைச் சுற்றி கேமராக்கள் உள்ளன, அவர்கள் பேசுவதைத் துல்லியமாக பதிவு செய்யும் மைக் உள்ளது. அது தினமும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்ற நிலையில், தங்களது இயல்பான குணத்தை காட்டவே மாட்டார்கள், மனதில் உள்ளதை வெளிப்படையாக பேசக் கூடமாட்டார்கள். அப்படியிருக்க நிகழ்ச்சியில் குரோதமாக நடந்துக்கொள்கிறார்கள் என்றால் அது பக்கா ஸ்கிரிப்ட் ஒர்க் என்பதை உணர்ந்துக்கொள்ளுங்கள்.

பிக்பாஸ் டெக்னிக்கல் அலசல்.

பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த ஞாயிறன்று சிறந்த போட்டோ - வீடியோ கலைஞரான நண்பரை பார்த்தபோது, டெக்னிக்கலாக இதன் பல விவரங்களை தெரிவித்தார்.

பிக்பாஸ் வீட்டுக்குள் 30 கேமராக்கள் உள்ளன. 30 கேமராக்கள் 24 மணி நேரமும் ரெக்கார்டிங் செய்கின்றன என்றால் அதை எடிட் செய்ய குறைந்தது 30 பேர் தேவை. அதை ஒன்றரை மணி நேர வீடியோவாக சுருக்க 2 நாட்களாவது தேவைப்படும். 40 பேர் எடிட்டிங் அறையில் உள்ளார்கள் என வைத்துக்கொண்டாலும் ஒருநாள் நிச்சயம் தேவை. அதோடு, ஆடியோவைக் கேட்க, எடிட் செய்ய வேண்டும். அதோடு எடிட் செய்யப்பட்ட வீடியோவுக்கு நிகராக, வாய்சை எடிட் செய்து சேர்க்க வேண்டும். இதுயெல்லாம் ஒரே நாளில் சாத்தியமில்லாத விவகாரம்.

அதற்கடுத்து, பிக்பாஸ் வீட்டில் வைக்கப்பட்டுள்ள மேராக்கள் எல்லாம் உயரத்தில், டைனிங் டேபிளில் வைக்கப்பட்ட Fixed Camaras. இந்த கேமராக்கள் லெப்ட், ரைட், கீழே, மேலேதான் சுழலும்.

செட் போடப்பட்டுள்ள வீட்டில் லைட் செட்டிங் என்பது உயரத்தில் பிக்ஸ் செய்து வைத்திருப்பது போல்தான் தெரிகிறது. சுவர்களில் லைட் இருப்பது போல் தெரியவில்லை. ஆனால், ஒளிபரப்படும் வீடியோவில் முகங்கள் தெளிவாக தெரிகின்றன. அதோடு, கட் ஷாட், குளோசப் ஷாட் நிறைய வருகின்றன. அதுமட்டும்மல்ல ஒளிபரப்படும் காட்சிகளில் 80 சதவிதம் மேனுவல் புரோகிராமில் எடுக்கப்பட்ட வீடியோவாகத்தான் உள்ளன.

பிக்பாஸ் வீட்டுக்குள் இந்த 15 பேரோடு கேமராமேன்களும், லைட்டிங் ஆட்களும் இருப்பதற்கான சாத்தியம் 200 சதவிதம் உண்டு. அதுப்பற்றி உறுதியாக கூறக் காரணம், பிக்பாஸ் வீட்டுக்குள் 2 பேருக்கு மேல் உட்கார்ந்து பேசும்போது குளோசப் ஷாட்கள் நிறைய வருகின்றன. பிக்சடு கேமராவில் குளோசப் ஷாட் எடுத்தால் படம் கிளாரிட்டி வராது. ஒருவர் திரும்பும் பக்கம்மெல்லாம் பிக்சடு கேமரா உடனுக்குடன் திரும்பாது. அடுத்ததாக பிக்ஸ் செய்யப்பட்டுள்ள கேமராக்கள் அனைத்தும் ஆட்டோமேட்டிக் ரெக்கார்டிங் ஆப்சனில் இருக்கும். ஆட்டோமோடுவில் உள்ள ஒரு கேமரா தன் லென்ஸ்க்கு அருகே எந்த பொருள் உள்ளதோ அதைத்தான் தெளிவாக படம் பிடிக்கும். மேன்வல் புரோகிராம்மை பொருத்தவரை இரண்டு பேர் நிற்கிறார்கள் என்றால் நாம் யாரை படம் பிடிக்க வேண்டும் என செட்டிங் செய்கிறோம்மோ அவர்களை மட்டும்மே தெளிவாக படம் பிடிக்கும்.

சினேகன், காயத்ரி, சக்தி உட்கார்ந்து பேசிக்கொண்டு உள்ளார்கள். அவர்களை ஒரு கேமரா படம் பிடித்துக்கொண்டு இருக்கிறது. குறுக்கே வையாபுரி நடந்து போகிறார். ஆனால் கேமரா உட்கார்ந்திருப்பவர்களைத்தான் தெளிவாக காட்டுகிறது. லென்ஸுக்கு அருகே கடந்து சென்ற வையாபுரியை அவுட் ஆப் போகஸ்சில் காட்டுகிறது. இப்படி நடக்க ஆட்டோமோடில் உள்ள கேமராவில் சாத்தியமல்ல. கேமராமேன்கள் உட்கார்ந்து ஆபரேட் செய்யும் கேமராக்களில் மட்டும்மே சாத்தியம்.

அதேபோல் தலைக்கு மேல் லைட் செட்டிங் செய்யப்பட்டுள்ளது என்றால் கண்ணுக்கு கீழே, தாடைக்கு கீழே கறுப்பு அடிக்கும், அதாவது நிழல் படரும். அப்படி காட்சிகள் உள்ளன. ஆனால், குளோசப் ஷாட்டில் பாருங்கள் யார் முகத்திலும், தாடைக்கு கீழே நிழல் தெரியாது. அதற்கு காரணம், லைட் முகத்துக்கு நேராக இருந்தால் அந்த வெளிச்சம் தெரியாது. உதாரணத்துக்கு நாம் பாஸ்போட் போட்டோ எடுக்க ஸ்டூடியோவுக்கு சென்றால் நம்மை உட்கார வைத்து நம் முகத்துக்கு நேராக, சைடாக லைட் போட்டு வைத்து முகத்தில் நிழல் எங்கும் படாதபடி செய்துதான் போட்டோ எடுப்பார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் இதேதான் நடக்கிறது.

டெக்னிக்கலாக இப்படி இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம். அதனால் தான் உறுதியாக கூறுகிறேன் பிக்பாஸ் வீட்டுக்குள் அதில் நடிப்பவர்கள் மட்டும்மல்ல உள்ளே ஒரு பெரிய டீமே உள்ளது. அதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியை முன் வைத்து அடித்துக்கொள்ளாமல் போய் பிள்ளைகளோடு விளையாடி பொழுது போக்குங்கள்.

- ராஜ் ராஜ்ப்ரியன். - (தற்ஸ்  தமிழிலிருந்து..) 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: 2 Personen, Personen, die lachen, Text

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சிறப்பான பதிவுகளைத் தேடி எடுத்துத் தருகிறீர்கள் நன்றி பிரியன்..........!  👍
    • ஹிந்தி மொழிக்கு எதிராக‌ போராடி ஆட்சிய‌ பிடித்த‌ திராவிட‌ம் உத‌ய‌நிதியின் ம‌க‌ன் எந்த‌ நாட்டில் ப‌டித்து முடிந்து விட்டு த‌மிழ் நாடு வ‌ந்தார்..................ஏன் உற‌வே புல‌ம்பெய‌ர் நாட்டில் த‌ங்க‌ட‌ பிள்ளைக‌ள் ஆங்கில‌த்தில் க‌தைப்ப‌து பெருமை என்று நினைக்கும் ப‌ல‌ர் இருக்கின‌ம் யாழில் இனி ப‌ழைய‌ திரிக‌ளை தேடி பார்த்தா தெரொயும்...............நான் நினைக்கிறேன் சீமானின் ம‌க‌னுக்கு த‌மிழ் க‌தைக்க‌ தெரியும்.................இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ர் ம‌ற்றும் அவ‌ரின் ம‌க‌ன் உத‌ய‌நிதி இவ‌ர்களுக்கு ஒழுங்காய் த‌மிழே வாசிக்க‌ தெரியாது.........ச‌ரி முத‌ல‌மைச்ச‌ர் ஜ‌யாவுக்கு வ‌ய‌தாகி விட்ட‌து ஏதோ த‌டுமாறுகிறார் வாசிக்கும் போது உத‌ய‌நிதி அவ‌ரின் அப்பாவை விட‌ த‌மிழின் ஒழுங்காய் வாசிக்க‌ முடிவ‌தில்லையே உற‌வே...............சீமானின் ம‌க‌ன் மேடை ஏறி த‌மிழில் பேசும் கால‌ம் வ‌ரும் அப்போது விவாதிப்போம் இதை ப‌ற்றி.............என‌து ந‌ண்ப‌ன் கூட‌ அவ‌னின் இர‌ண்டு ம‌க‌ன்க‌ளை காசு க‌ட்டி தான் ப‌டிப்ப‌க்கிறார்............அது சில‌ரின் பெற்றோர் எடுக்கும் முடிவு அதில் நாம் மூக்கை நுழைத்து அவ‌மான‌ ப‌டுவ‌திலும் பார்க்க‌ பேசாம‌ இருக்க‌லாம்............ஒரு முறை த‌மிழ் நாட்டை ஆளும் வாய்ப்பு சீமானுக்கு கிடைச்சா அவ‌ர் சொன்ன‌ எல்லாத்தையும் செய்ய‌ த‌வ‌றினால் விம‌ர்சிக்க‌லாம் ஒரு தொகுதியிலும் இதுவ‌ரை வெல்லாத‌ ஒருவ‌ரை வ‌சை பாடுவ‌து அழ‌க‌ல்ல‌ உற‌வே........................
    • உந்தாள் முந்தியும் ஒருக்கால் கம்பி எண்ணினதெல்லோ? 
    • “அந்த மக்களிடம் அற்ப விலைக்கு வாங்கி, புலம் பெயர் மக்களிடம் அறாவிலைக்கு விற்கும் கந்துவட்டி வகை வியாபாரிகளை” இதனை எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள்? உதாரணமாக ஓர் பொருளின் சிறீலங்கா v பிரித்தானிய விலையை கூறுங்கள். எனக்கு தெரிந்தவர்களிடம் அதனை விசாரித்து கூறுகிறேன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.