Jump to content

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் மட்டுமின்றி அவர்களின் பரம்பரைகளும் அங்கு மீள்குடியேறுவதற்கான உரிமையினை கொண்டிருக்கின்றனர்..


Recommended Posts

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் மட்டுமின்றி அவர்களின் பரம்பரைகளும் அங்கு மீள்குடியேறுவதற்கான உரிமையினை கொண்டிருக்கின்றனர்..

 
 

%255BUNSET%255D

NFGGஊடகப் பிரிவு

முல்லைத்தீவு மாவட்ட முஸ்லீம் மக்களின் மீள்குடியேற்ற விடயங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்றினை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) தமிழ் தேசிய கூட்டமைப்பின்(TNA) தலைமைத்துவத்துடன் மேற்கொண்டது.

இச்சந்திப்பில் TNA சார்பாக அதன் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமாகிய இரா.சம்பந்தன் அவர்களும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் ( பா.உ) அவர்களும் கலந்து கொண்டிருந்ததுடன், NFGG சார்பாக அதன் தவிசாளார் பொறியியலாளர் அப்துர்ரஹ்மான் பொதுச்செயலாளர் நஜா முஹம்மட் மற்றும் தலைமைத்துவ சபை உறுப்பினர் முஜிபுர்ரஹ்மான், சட்டத்தரணி இம்தியாஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மீள்குடியேறும் முல்லைத்தீவு மாவட்ட முஸ்லீம் மக்களுக்கான காணி ஒதுக்கீடு தொடர்பில் அண்மைக்காலமாக தெரிவிக்கப்பட்டுவரும் எதிர்ப்புக்கள் தொடர்பில் இச்சந்திப்பின் போது விசேடமாக கவனம் சொலுத்தப்பட்டது. l990ல் முஸ்லிம்கள் வடக்கில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டபோது முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து ஏறத்தாள 1700 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டனர். கடந்த 27 வருடங்களில் இவர்கள் கிட்டத்தட்ட 4500 குடும்பங்களாக மாறியுள்ளனர். இவர்கள் அத்தனை பேருமே தமது பாரம்பரிய வாழ்விடமான முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேறுவதற்கான அடிப்படை உரிமைகளை கொண்டவர்கள் ஆவர். இவர்களில் ஏறத்தாழ 3020 குடும்பங்கள் ஏற்கனவே மீள்குடியேறியுள்ளனர். இவர்களில் சொந்தக் காணிகளை கொண்டிருந்த கிட்டத்தட்ட 1500 குடும்பத்தினரை தவிர மிகுதியான 1520 குடும்பங்களுக்கு காணிகள் வழங்கப்பட வேண்டியுள்ளது. இவர்கள் தாம் நிரந்தரமாக வாழ்வதற்கான அரச காணிகளை கோரி ஏற்கனவே விண்ணப்பித்துள்ளனர்.

கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற மூன்று காணிக் கச்சேரிகளில் இவை பரிசீலிக்கப்பட்டு முதல்கட்டமாக கிட்டத்தட்ட 920 எண்ணிக்கையான குடும்பங்களுக்கு அரச காணிகளை ஒதுக்குவதற்கான அங்கீகாரமும் வழங்ப்படது. அதன்படி , முறிப்பு என்ற பகுதியில் காணிகளை வழங்குவதற்கான முயற்சிகள் பிரதேச செயலகத்தினூடாக மேற்கொள்ளப்பட்ட போதிலும் பின்னர் அது நடைபெறவில்லை. அதற்கு மாற்றீடாக, கூழாமுறிப்பு என்ற இடத்தில் காணிகளை பங்கீடுவதற்கான முயற்சி தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட போது இதற்கான கடும் எதிர்ப்பை TNA கட்சியின் மாகாண சபை உறுப்பினர் ஒருவரின் தலைமையிலான அணியினர் தொடர்சியாக தெரிவித்து வருகின்றனர். மட்டுமின்றி இம்மீள்குடியேற்றம் தொடர்பாக முஸ்லீம்களுக்கு எதிரான இனவாத கருத்துக்களை பரப்பும் வகையில் ஆர்ப்பாட்டங்களும், பேரணிகளும் நடத்தப்பட்டன. இந்நிலைமை தொடர்ந்தால் , தமிழ் – முஸ்லீம் மக்களுக்கு இடையிலான உறவில் அபாயகரமான பாதிப்புகள் மீண்டும் உருவாக்கக் கூடிய நிலை காணப்படுகிறது.

வடக்கில் நடைபெற உள்ள தேசிய மீலாத் தின நிகழ்ச்சித்திட்டத்தின் ஊடக முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேறும் மக்களுக்காக வீட்டுத்திட்டம் ஒன்று அமைக்கப்பட உள்ள நிலையில் இந்த காணி பகிர்வினை தாமதிக்காமல் மேற்கொள்வது அவசியமாகும்.

இந்த நிலைமைகளை எடுத்துக்கூறிய NFGG பிரதிநிதிகள், TNA தலைமைத்துவம் நேரடியாக இதில் தலையீடு செய்து நீதியான முறையில் இது தீர்க்கப்படுவதற்கான உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையினை TNA யிடம் முன்வைத்தனர்.

மேலும் கடந்த 20l3 ம் ஆண்டு வட மாகாண சபை தேர்தலின் போது TNA – NFGGக்கு இடையில் செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையிலும் வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்ற விடயம் தெளிவாக வலியுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக 90களில் வெளியேறிய குடும்பங்களுக்கு மட்டுமின்றி அவர்களின் பரம்பரையினரும் வடக்கில் மீள்குடியேறுவதற்கான அத்தனை உரிமைகளையும் கொண்டுள்ளனர் என்ற விடயம் TNA – NFGG உடன்படிக்கையில் மிகத்தெளிவாக வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த விடயங்களையும் TNA தலைமைத்துவத்திடம் NFGG பிரதிநிதிகள் மிக தெளிவாக எடுத்துரைத்தனர்.

NFGG யினால் முன்வைக்கப்பட்ட நியாயங்களை TNA தலைமைத்துவம் ஏற்றுக் கொண்டனர். குறிப்பாக வடக்கில் இருந்து வெளியேறிய மக்களுக்கும் அவர்களது சந்ததியினர் அத்தனை பேருக்கும் வடக்கில் மீள்குடியேறுவதற்கான உரிமை இருக்கிறது என்ற அடிப்படை நியாயத்தினையும் அவர்கள் ஏற்றுக் கொண்டனர். இது தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட பாராளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்களோடு கலந்துரையாடி சுமுகமான தீர்வு ஒன்றினை விரைவாக எட்டுவதற்கான நடவடிக்கை மேற்கொள்வதாகவும் NFGG யிடம் அவர்கள் உறுதியளித்தனர்.

http://www.madawalanews.com/2017/07/blog-post_273.html?m=1

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடடா... லாஜிக்படி அப்ப நாமளும் போய் காடழித்து காணி பிடிக்கலாமே....

சம்பந்தர் கிழக்கு பகுதி... 

முதலில் தமிழருக்கு அங்கு, முக்கியமாக மட்டக்களப்பு பகுதியில், அவர்களால் இழைக்கப்படும் காணி தொடர்பான அநீதிகள் பற்றி பேசிமுடிவெடுக்க வேண்டும்.

சுமண தேரரிடம், தமிழர்கள் போகுமளவுக்கு பிரச்சனை உள்ளது.

வடக்கே தமிழர்களின் காணிகள் படையினரால் அபகரிக்கப்பட்டு உள்ளது. அதனை திருப்பிப் பெற போராடுகிறார்கள்.

போராட்டத்தை கைவிட்டு அவர்களும் காடழித்து காணி பிடித்து குடியேற முடியாதா? ஏன் செய்யவில்லை?

கிழக்கில் ஏழ்மை நிலையில் உள்ள தமிழர் நிலங்களை பணம் வீசி வாங்க முடியும் என்றால் வடக்கிலும் பணத்தை கொடுத்து காணிகளை வாங்கலாமே.

வில்பத்துவில் காடழித்து மாட்டிக் கொண்டபின், முல்லைத்தீவில் கைவரிசை. அங்கும் எதிர்ப்பு வந்தவுடன் இப்போது சம்பந்தர் ஐயா.

புலத்திலிருந்து திரும்பும் தமிழர்கள், பணம் கொடுத்தே காணிகள், வீடுகளை, கொழும்பு, யாழ்ப்பாணம் எங்குமே வாங்குகிறார்கள். அவர்களும் எமது குடும்பங்களும் பெருகி விட்டன. அங்கு வந்து குடியேற சகலருக்கும் உரிமை உண்டு, எங்களுக்கும் காணிவேண்டும் என்ற இந்த லாஜிக் பேசினால் நிலைமை என்ன? 

முக்கியமாக இந்தியாவில் இருக்கும் அகதிகள் காணி கிடைக்குமாயின் நிச்சயமாக திரும்பி வருவர்.

முதலில் படையினரது ஆக்கிரமிப்பில் உள்ள காணிகளை மீட்ட துணை நில்லுங்கள். அந்த காணிகள் விற்பனைக்கு வரும். வாங்குங்கள். கொக்கிளாய் பகுதி சிங்கள குடியேற்றங்களை சேர்ந்தே எதிருங்கள்.

காடழிப்பு சகலருக்குமே ஆபத்தானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தளத்தில் பிடிச்ச காணிகளில் யாரை குடியமர்த்துவது.. புத்தளத்தில் பிறப்பிக்கப்பட்ட பரம்பரைகள்.. அங்கு குடியிருக்கலாம்.

வடக்குக் கிழக்கில் முன்னர் வாழ்ந்திராத பிரதேசங்களில் ஒரு அடியில் தன்னும் முஸ்லீம்கள் குடியமர இடமளிக்க முடியாது. அதுதான் நிலைப்பாடு. அது தவறும் அல்ல. முன்னர் வாழ்ந்த பிரதேசங்களுக்குள் பெருக்கி எடுத்த பரம்பரைகளோடு வாழலாமே தவிர.. அடுத்தவர் காணி பிடிச்சு வாழ முடியாது. அதற்கு வடக்குக் கிழக்கில் இடமில்லை. tw_angry::rolleyes:

Link to comment
Share on other sites

56 minutes ago, nedukkalapoovan said:

புத்தளத்தில் பிடிச்ச காணிகளில் யாரை குடியமர்த்துவது.. புத்தளத்தில் பிறப்பிக்கப்பட்ட பரம்பரைகள்.. அங்கு குடியிருக்கலாம்.

வடக்குக் கிழக்கில் முன்னர் வாழ்ந்திராத பிரதேசங்களில் ஒரு அடியில் தன்னும் முஸ்லீம்கள் குடியமர இடமளிக்க முடியாது. அதுதான் நிலைப்பாடு. அது தவறும் அல்ல. முன்னர் வாழ்ந்த பிரதேசங்களுக்குள் பெருக்கி எடுத்த பரம்பரைகளோடு வாழலாமே தவிர.. அடுத்தவர் காணி பிடிச்சு வாழ முடியாது. அதற்கு வடக்குக் கிழக்கில் இடமில்லை. tw_angry::rolleyes:

நீங்கள் நாட்டு நடப்பை அவதானிப்பது இல்லை போலும், அவர்கள் என்னவென்றால் தமிழ் மக்களை வன்னியில் குடியேற்றியதே தாங்கள் தான் என்று சொல்லீனம். அதை விட தமிழர் தான் பன்றிகள் போல் குட்டி போட்டு இப்ப தம்மை விரட்டுரமாம் எண்டு கதை விடுகீனம்.

அது மட்டுமல்ல வவுனியா மாவட்டத்தில் வேகமாக மத மாற்றமும் நடக்குது. கிழமைக்கு ஒரு பெண்ணாவது மதம் மாறுகிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, Dash said:

நீங்கள் நாட்டு நடப்பை அவதானிப்பது இல்லை போலும், அவர்கள் என்னவென்றால் தமிழ் மக்களை வன்னியில் குடியேற்றியதே தாங்கள் தான் என்று சொல்லீனம். அதை விட தமிழர் தான் பன்றிகள் போல் குட்டி போட்டு இப்ப தம்மை விரட்டுரமாம் எண்டு கதை விடுகீனம்.

அது மட்டுமல்ல வவுனியா மாவட்டத்தில் வேகமாக மத மாற்றமும் நடக்குது. கிழமைக்கு ஒரு பெண்ணாவது மதம் மாறுகிறார்.

கொழும்பில்.. வீதிகளில் கிடந்து குப்பை வாழ்க்கை வாழுவதும் இதே கூட்டம் தான் தெமட்டகொட.. கிரான்ஸ்பாஸ் பக்கம் போய் பார்த்தால் தெரியும். 

இது அரசியலுக்கான.. சித்து விளையாட்டு. அநேக வகைதொகையின்றி பிள்ளைகளைப் பெற்றுவிட்டு வசதி இன்றி வறுமையில் எத்தனையோ முஸ்லீம் குடும்பங்கள் வாழ்கின்றன. அவர்களை எல்லாம் இஸ்லாமிய அடிப்படைவாத மதவெறிப் பயங்கரவாதிகள் கண்டுகொள்வதில்லை. அவர்களை நோக்கி சவுதி.. பாகிஸ்தான் காசும் கொடுப்பதில்லை.

இது தமிழர் நிலத்தில் இனச்சுத்திகரிப்புக்கு என்று வழங்கப்படும் நிதியில் நடப்பதால்.. பணம் பலவாறும் வீசப்படுகிறது. அதில் எங்கடையள் சிலது சிக்குப்பட்டாலும்.. இப்போ தமிழ் மக்கள் மத்தியில் இவர்களின் உள்நோக்கம்.. இனச்சுத்திகரிப்பு நோக்கங்கள் விளங்கப்பட்டு வருகுது.

1990 இல் இவர்களை வெளியேற்ற வேண்டிய சூழல் வந்ததை உணராமல்.. புறுபுறுத்த தமிழ் மக்களும் இப்ப இவர்களின் உள்நோக்கத்தை கண்டு நல்லாவே விளங்கிக் கொண்டிருக்கிறார்கள். அதுமட்டும் போதாது.. இவர்களின் திட்டமிட்ட ஆக்கிரமிப்பு.. இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகள்.. தமிழர் நிலத்தில் தடுத்து நிறுத்தப்பட மக்கள் தான் காத்திரமாகவும் உறுதியாகவும் செயற்பட வேண்டி இருக்குது. அதனை தமிழ் மக்கள் உணர்ந்து செயற்பட்டால் போதும். நிச்சயம் புலம்பெயர் உறவுகளின் உதவி அவர்களுக்கு தானே வந்து சேரும். 

Link to comment
Share on other sites

21 minutes ago, nedukkalapoovan said:

கொழும்பில்.. வீதிகளில் கிடந்து குப்பை வாழ்க்கை வாழுவதும் இதே கூட்டம் தான் தெமட்டகொட.. கிரான்ஸ்பாஸ் பக்கம் போய் பார்த்தால் தெரியும். 

இது அரசியலுக்கான.. சித்து விளையாட்டு. அநேக வகைதொகையின்றி பிள்ளைகளைப் பெற்றுவிட்டு வசதி இன்றி வறுமையில் எத்தனையோ முஸ்லீம் குடும்பங்கள் வாழ்கின்றன. அவர்களை எல்லாம் இஸ்லாமிய அடிப்படைவாத மதவெறிப் பயங்கரவாதிகள் கண்டுகொள்வதில்லை. அவர்களை நோக்கி சவுதி.. பாகிஸ்தான் காசும் கொடுப்பதில்லை.

இது தமிழர் நிலத்தில் இனச்சுத்திகரிப்புக்கு என்று வழங்கப்படும் நிதியில் நடப்பதால்.. பணம் பலவாறும் வீசப்படுகிறது. அதில் எங்கடையள் சிலது சிக்குப்பட்டாலும்.. இப்போ தமிழ் மக்கள் மத்தியில் இவர்களின் உள்நோக்கம்.. இனச்சுத்திகரிப்பு நோக்கங்கள் விளங்கப்பட்டு வருகுது.

1990 இல் இவர்களை வெளியேற்ற வேண்டிய சூழல் வந்ததை உணராமல்.. புறுபுறுத்த தமிழ் மக்களும் இப்ப இவர்களின் உள்நோக்கத்தை கண்டு நல்லாவே விளங்கிக் கொண்டிருக்கிறார்கள். அதுமட்டும் போதாது.. இவர்களின் திட்டமிட்ட ஆக்கிரமிப்பு.. இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகள்.. தமிழர் நிலத்தில் தடுத்து நிறுத்தப்பட மக்கள் தான் காத்திரமாகவும் உறுதியாகவும் செயற்பட வேண்டி இருக்குது. அதனை தமிழ் மக்கள் உணர்ந்து செயற்பட்டால் போது. நிச்சயம் புலம்பெயர் உறவுகளின் உதவி அவர்களுக்கு தானே வந்து சேரும். 

 

இதற்கு விழிப்புணர்வு முக்கியம், இதை வீடு வீடாக செய்ய் வேண்டும், இவர்களால் வரும் ஆபத்துக்களை பற்றி பாடசாலைகள், கோவில்களில் பிரசாரம் செய்யலாம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.