Jump to content

புதிய யாழ்.களம். சில சந்தேகங்கள்.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று  யாழ்.களம்   மாற்றங்களை  செய்து.... 
புதிய  சில முறைகள்  அறிமுகப் படுத்தியதை இட்டு வரவேற்கும் வேளை... :102_point_up_2:
ஒரு சில விடயங்கள் புரியாமல் உள்ளது.

உதாரணத்துக்கு... சிலரின் பெயர் முன்னால், ஆங்கில எழுத்தில்... 
ஒவ்வொரு நிறத்தில் காட்டுகின்றது   ஏன் என்று அறிய விரும்புகின்றேன்.

Sukuthar க்குஎன்று பிங்க்  நிறத்திலும்,
Rajesh க்கு என்று பச்சை  நிறத்திலும்,
babuec 405 க்கு B என்று நாவல  நிறத்திலும் உள்ளதை  நீங்களும் அவதானித்து இருப்பீர்கள்.
பார்க்க... சுவராசியமாக இருந்தாலும், அதன் அர்த்தத்தை  அறியாவிட்டால்,  
இன்று இரவு.. நித்திரை வரமாட்டுது போல இருக்கு.  :grin:

59823005d6a05_.png.15dae49c6e1c75681e057432c37b1fb1.png

மோகன் அண்ணாவுக்கும், கிளியவனுக்கும் ஒரே மாதிரி... மேலே உள்ள அடையாளம் காட்டுகின்றது.

Link to comment
Share on other sites

களத்தில் பெயர்களை ஆங்கிலத்தில் வைத்திருப்பவர்களுக்கு பெயர்களின் முதல் எழுத்து சரியாகக் காண்பிக்கின்றது. தமிழில் வைத்திருப்பவர்களுக்கு சரியாக முறையில் காண்பிக்காது வெறும் பெட்டி மட்டுமே காண்பிக்கின்றது. இவை படங்களை இணைக்காதவர்களுக்கே காண்பிக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பச்சைப்புள்ளியிடும் முறை கலைக்கப்பட்டு ஐந்து விதமான பகுப்புகள் react_thanks.png react_haha.pngreact_confused.pngreact_sad.pngreact_like.png உள்ளதால் குழப்பங்கள்/மன வருத்தங்கள் வரும்போல் தெரிகிறதே!

உதாரணமாக குறிப்பிட்ட உறுப்பினருக்கு குழுவாக சேர்ந்து கும்மலாமென்றால்(by voting 'Sad' icon react_sad.png) அவருக்கு வருத்தமாக இருக்கும்தானே?

இந்த பொத்தானை மட்டும் மறைக்க இயலாதா..?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கால மாற்றத்திற்கு ஏற்ப யாழ் களம்..  பரினமித்து வருவதன் தொடர்ச்சி. இன்னும் தொடரட்டும். tw_blush::213_tiger:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, மோகன் said:

களத்தில் பெயர்களை ஆங்கிலத்தில் வைத்திருப்பவர்களுக்கு பெயர்களின் முதல் எழுத்து சரியாகக் காண்பிக்கின்றது. தமிழில் வைத்திருப்பவர்களுக்கு சரியாக முறையில் காண்பிக்காது வெறும் பெட்டி மட்டுமே காண்பிக்கின்றது. இவை படங்களை இணைக்காதவர்களுக்கே காண்பிக்கும்.

நன்றி... மோகன் அண்ணா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதிதாக அறிமுகப் படுத்தப் பட்டுள்ள  Club பகுதி எனக்கு மிகவும் பிடித்துக் கொண்டது.
நாம் ஆரம்பித்த  அந்தப் பகுதியின்  உரிமையாளராக,  நாமே... இருப்பதில்,  பெருமையாக உள்ளது.
அதில்...  எழுதி பதிந்தவற்றில் திருத்தம்  (Edit) செய்வதற்கான வழி முறைகளை தேடிப் பார்த்தேன் கண்டு பிடிக்க முடியவில்லை. 

முன்பிருந்த களத்தை  விட,  இப்போ.... வாக்கெடுப்பு (Poll) நடத்தும் முறையை  மிகவும் இலகுவாக அமைத்தமை அருமையானது. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

நாம் ஆரம்பித்த  அந்தப் பகுதியின்  உரிமையாளராக,  நாமே... இருப்பதில்,  பெருமையாக உள்ளது.

உண்மை.. மிகவும் சுவாரசியமாக உள்ளது.. யாழ் களத்திற்குள்ளே நாம் உருவாக்கும் பகுதிக்கு நாமே உரிமையாளராக, நிர்வாகியாக, இருப்பது புதுவித அனுபவமாக உள்ளது..

1 hour ago, தமிழ் சிறி said:

அதில்...  எழுதி பதிந்தவற்றில் திருத்தம்  (Edit) செய்வதற்கான வழி முறைகளை தேடிப் பார்த்தேன் கண்டு பிடிக்க முடியவில்லை.

இல்லை, திருத்தம் செய்யும் வசதி உள்ளதே..!

நேற்றிரவு முதல் இப்பகுதியில் பிரித்து மேய்ந்துவிட்டேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓ...மானிடனே !

ஒவ்வொரு ஆண்டு கழிகையிலும்..,

உனது பொலிவு கொஞ்சம் குன்றுகின்றது!

எட்டிப் பார்க்கும் நரை முடி ஒரு பக்கம்,,,

எள்ளி நகையாடும்...சுருக்கங்கள் மறு பக்கம்...!

அடி வயிறு கொஞ்சம் முன்னுக்கு வர...,

உள்ளே இருக்க வேண்டிய மூக்கின் முடிகள்...,

கொஞ்சம் வெளியே எட்டிப்பார்க்க..,

அதை மறைக்க ...

நீ படும் பாடு...,

சொல்லில் வடிக்க இயலாது!

யாழ்..,

என்ற கள்ளியைக் கொஞ்சம் பார்!

காலம்..,

அவளைத் தின்று விடவுமில்லை!

அவளின் இளமையைக்,

கொன்று விடவுமில்லை!

மாறாக...,

இன்னும்...இன்னும்...,

வளம் பெறுகிறாள்!

சத்தியமாய்ச் சொல்கிறேன்!

அவள் மீது எனக்குப் பொறாமையில்லை!

ஆசை மட்டும் தான் !

களக் கட்டமைப்பில் பங்கெடுத்த அனைவருக்கும்....வாழ்த்துக்களும்...வணக்கங்களும்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புங்கையூரன் said:

மிகச் சரியாக சொல்லிவிட்டீர்கள் புங்கை. நானும் ஆமோதிக்கிறேன்......! tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, புங்கையூரன் said:

ஓ...மானிடனே !

ஒவ்வொரு ஆண்டு கழிகையிலும்..,

உனது பொலிவு கொஞ்சம் குன்றுகின்றது!

எட்டிப் பார்க்கும் நரை முடி ஒரு பக்கம்,,,

எள்ளி நகையாடும்...சுருக்கங்கள் மறு பக்கம்...!

அடி வயிறு கொஞ்சம் முன்னுக்கு வர...,

உள்ளே இருக்க வேண்டிய மூக்கின் முடிகள்...,

கொஞ்சம் வெளியே எட்டிப்பார்க்க..,

அதை மறைக்க ...

நீ படும் பாடு...,

சொல்லில் வடிக்க இயலாது!

யாழ்..,

என்ற கள்ளியைக் கொஞ்சம் பார்!

காலம்..,

அவளைத் தின்று விடவுமில்லை!

அவளின் இளமையைக்,

கொன்று விடவுமில்லை!

மாறாக...,

இன்னும்...இன்னும்...,

வளம் பெறுகிறாள்!

சத்தியமாய்ச் சொல்கிறேன்!

அவள் மீது எனக்குப் பொறாமையில்லை!

ஆசை மட்டும் தான் !

களக் கட்டமைப்பில் பங்கெடுத்த அனைவருக்கும்....வாழ்த்துக்களும்...வணக்கங்களும்! 

பத்தொன்பதற்குள்ளயே நரை எட்டிப் பாக்குதோ புங்கையண்ணா..உங்களுக்கு இல்ல யாழுக்குத் தான் 19 தானே..எனக்கும் யாழ் மேல் பிரியம் மட்டுமே.?✔️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதிய மாற்றம் அருமையாக இருக்கிறது. ஆக்கங்கள் தெளிவாகவும் நேர்த்தியாகவும் தெரிகின்றது. சபாஷ் !!பல ஆங்கில முன்னோடி இணையதள வடிவமைப்பைவிடவும் எங்கள் யாழ்களம் கண்ணை கவரும் வகையில் இருக்கின்றது என்பது என்னுடைய அவதானிப்பு. :100_pray:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் களம் களை கட்டியுள்ளது மெனக்கெட்ட அன்பர்கள் அனைவருக்கும்  மிக்க நன்றிகளும் வாழ்த்துக்களும் 

படங்கள் நேராக இணைக்க முடியவில்லை என்ன காரணம் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டுமா ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, புங்கையூரன் said:

யாழ்..,

என்ற கள்ளியைக் கொஞ்சம் பார்!

காலம்..,

அவளைத் தின்று விடவுமில்லை!

அவளின் இளமையைக்,

கொன்று விடவுமில்லை!

மாறாக...,

இன்னும்...இன்னும்...,

வளம் பெறுகிறாள்!

சத்தியமாய்ச் சொல்கிறேன்!

அவள் மீது எனக்குப் பொறாமையில்லை!

ஆசை மட்டும் தான் !

களக் கட்டமைப்பில் பங்கெடுத்த அனைவருக்கும்....வாழ்த்துக்களும்...வணக்கங்களும்! 

நாம்,  சொல்ல விளைந்த...  வார்ததைக்கு, சொற்கள்...   கிடைக்காமல்,  
மூளையை  கசக்கிப் பிழிந்து கொண்டிருந்த நேரத்தில்....
அழகிய சொற்களை தேர்ந்தெடுத்து   கவிதையாக.... பிரசவித்த.
புங்கையூரானின்,  திறமைக்கு..... பாராட்டுக்கள். :)

கவிதையின்,  முதல் பகுதியை.... மேற்கோள்  காட்டவில்லை. ஏனென்றால்...   
நாம்.... மட்டும், தனியாக இல்லை.... கன  ஆட்கள்,  இங்கு  இருக்கினம்... என்ற ஆறுதலை தந்தது. :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ராசவன்னியன் said:

உண்மை.. மிகவும் சுவாரசியமாக உள்ளது.. யாழ் களத்திற்குள்ளே நாம் உருவாக்கும் பகுதிக்கு நாமே உரிமையாளராக, நிர்வாகியாக, இருப்பது புதுவித அனுபவமாக உள்ளது..

இல்லை, திருத்தம் செய்யும் வசதி உள்ளதே..!

நேற்றிரவு முதல் இப்பகுதியில் பிரித்து மேய்ந்துவிட்டேன்

அந்த.. இராணுவ ரகசியத்தை, 
எங்களுக்கும்... சொல்லித் தாருங்களேன், வன்னியன் சார். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, தமிழ் சிறி said:

அந்த.. இராணுவ ரகசியத்தை, 
எங்களுக்கும்... சொல்லித் தாருங்களேன், வன்னியன் சார். :grin:

கீழேயுள்ள படத்தில் விளக்கியுள்ளேன், தமிழ் சிறி..!

one1f.jpg

6 minutes ago, ராசவன்னியன் said:

கீழேயுள்ள படத்தில் விளக்கியுள்ளேன், தமிழ் சிறி..!

படத்தில் சிறு திருத்தம்..

திரியின் தலைப்பை திருத்த "Edit this Forum" என்ற இடத்தில் சொடுக்கவும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, ராசவன்னியன் said:

கீழேயுள்ள படத்தில் விளக்கியுள்ளேன், தமிழ் சிறி..!

one1f.jpg

படத்தில் சிறு திருத்தம்..

திரியின் தலைப்பை திருத்த "Edit this Forum" என்ற இடத்தில் சொடுக்கவும்..

மிக அருமையான விளக்கத்தை... படங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளீர்கள்,  வன்னியன்.
இது,  எனக்கு மட்டுமல்ல.... பலருக்கும்,  நிச்சயம்  பிரயோசனப் படும் என நம்புகின்றேன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ராசவன்னியன் said:

உண்மை.. மிகவும் சுவாரசியமாக உள்ளது.. யாழ் களத்திற்குள்ளே நாம் உருவாக்கும் பகுதிக்கு நாமே உரிமையாளராக, நிர்வாகியாக, இருப்பது புதுவித அனுபவமாக உள்ளது..

ராஜ வன்னியன், அண்ணை....
"நமக்கு... நாமே.. திட்டம்."  என்பது போல்..... 
எங்கடை...  "கொம்பனிக்கு"  நாங்களே.... பொறுப்பு  என்னும்  போது, 
ஏனோ... தானோ... என்று, எழுத முடியாமல்,
பல பக்கம்,  யோசிக்க வேண்டிய..... சிந்தனைகளும், மனதில்... மின்னல் போல், வந்து போகின்றது. உண்மை. :)

இப்படி... சின்ன,  "பெட்டிக்  கடை"  திறந்த, எமக்கு....
19 வருடமாக....  உலகத் தமிழர்களை  இணைத்து வந்த, யாழ். கள பொறுப்பாளர்கள்....
அனைவரையும்...மேய்க்க, எவ்வளவு கஸ்ரப்  பட்டு இருப்பார்கள். 
:shocked:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 பதிவிடும்போது நிறம் தீ டடலில்   நிறம் தெளிவாக ( டார்க் ) வர என்ன செய்யவேண்டும் ..

.எனக்கு மங்கலாக இருக்கிறது ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிலாமதி said:

 பதிவிடும்போது நிறம் தீ டடலில்   நிறம் தெளிவாக ( டார்க் ) வர என்ன செய்யவேண்டும் ..

.எனக்கு மங்கலாக இருக்கிறது ..

கண்ணாடி போட வேண்டும்:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நந்தன் said:

கண்ணாடி போட வேண்டும்:grin:

நிலாமதி அக்காவின், கேள்விக்கு...
இது.. தான்... பதிலா... நந்தன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதிய மாற்றம் அருமையாக இருக்கிறது. ஆக்கங்கள் தெளிவாகவும் நேர்த்தியாகவும் தெரிகின்றது. ஏனைய இணையங்களுக்கு எந்த விதத்திலும் குறைவானதல்ல யாழ் இணையம் என்பதினை கவர்ச்சிகர இளமையான தோற்றம் தொட்டு நிற்கின்றது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"ரிப்போட்"   பொத்தானை, காணவில்லை மோகன் அண்ணா. :)

ரகுநாதன்... போட்ட , தலைப்பிற்கு... இரண்டு பதில்களை எழுதினேன்.
இன்னும்.... அது,  வெளியிடப் படவில்லை.  காரணம் என்னவோ..... தெரியவில்லை.
ஆனால்.... "ரிப்போட்  பொத்தான்", காணாமல் போனது உண்மை. :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, தமிழ் சிறி said:

"ரிப்போட்"   பொத்தானை, காணவில்லை மோகன் அண்ணா. :)

ரகுநாதன்... போட்ட , தலைப்பிற்கு... இரண்டு பதில்களை எழுதினேன்.
இன்னும்.... அது,  வெளியிடப் படவில்லை.  காரணம் என்னவோ..... தெரியவில்லை.
ஆனால்.... "ரிப்போட்  பொத்தான்", காணாமல் போனது உண்மை. :grin:

பேரன்புடையீர்,

முறைப்பாடு பொத்தான் உள்ளது..

தங்கள் மீது 'மாதிரி முறைப்பாடும்' :grin: எழுதி அதை அனுப்பாமல் அதன் பிரதியை இங்கே பதிகிறேன்..! :grin:

ஆனால் முறைப்பாடு பொத்தானை அழுத்தி அனுப்பினாலும், அது நிர்வாகத்தின் பார்வைக்கு சென்றடைகிறதா? என்பது மில்லியன் டாலர் கேள்வி..!

report.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12.8.2017 at 1:41 PM, ராசவன்னியன் said:

பேரன்புடையீர்,

முறைப்பாடு பொத்தான் உள்ளது..

தங்கள் மீது 'மாதிரி முறைப்பாடும்' :grin: எழுதி அதை அனுப்பாமல் அதன் பிரதியை இங்கே பதிகிறேன்..! :grin:

ஆனால் முறைப்பாடு பொத்தானை அழுத்தி அனுப்பினாலும், அது நிர்வாகத்தின் பார்வைக்கு சென்றடைகிறதா? என்பது மில்லியன் டாலர் கேள்வி..!

report.png

நன்றி... மோகன் அண்ணா,  ராஜவன்னியன்.
முன்பு இடது பக்கம் இருந்த மாதிரி ஒரு நினைவு.
அதுதான்.. அந்தத் தெரிவை காணவில்லை என...  நினைத்து விட்டேன்.
சிரமத்திற்கு,  மன்னிக்கவும். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சற்று நாட்கள் வரை இருந்த திருத்த/அழகு படுத்தும் பொத்தான்களை (Format tools) இப்பொழுது காணோம்..!

Eg: Color palette, Alignment (Righ, Center, left) etc.

யாராவது மீட்டுக் கொணர்க..!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.