Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

கவிதைகள்


Recommended Posts

p78d_1519744705.jpg

மதுரை ஜி.ஹெச்

எவ்வளவு முயன்றும்
மதுரைப் பெரியாஸ்பத்திரியின்
பிணவறை இருளையும்
வராண்டாக்களின் ஓலங்களையும்
ஆதரவற்ற புண்களின் வலிகளையும்
மருந்துகளின் வாடைகளையும்
வரைய முடியவில்லையென

லாடனேந்தல் கரிக்கட்டை
கறுப்பு வண்ணமும்
தென்கரை விரலாகிய நானும்
புலம்பித் தவித்து ஒருகட்டத்தில்
ஒன்றானோம்
காலப்போக்கில்
கரிக்கட்டைக் கறுப்பைத் தின்று
கறுப்போடு தின்று
கறுப்பை உடுத்தி
கறுப்போடு மல்லுக்கட்டி
கறுப்பையே வீடாக்கி
கறுப்பும் நானும்
ஒன்றுக்குள் ஒன்றாகி
செருப்பில்லாமல்கூட
கடைவீதியெங்கும் சுற்றுவோம்
மழைநாளொன்றில்
கடையில் நின்று சிகரெட்
பற்றவைத்தபோதுதான்

அந்த ஓவியக் கண்காட்சியின்
பிரபல தைல வண்ண ஓவியம்
மூச்சிறைக்க ஓடிவந்து
எங்களோடு வந்துவிடுவதாகச் சொன்னது

மூவரும் மாறி மாறி முகம்
பார்த்துவிட்டு நடந்தோம்
‘பெரியாஸ்பத்திரிக்குள்ள போயிருக்கியா’ என
கறுப்பு, தைல வண்ணத்திடம் கேட்க
மூவரும் ஒருநிமிடம் நின்றோம்..!

- முத்துராசா குமார்

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

 • Replies 212
 • Created
 • Last Reply

கலாய் கவிதைகள்!

 

ஆர்.சரண்

 

தைப்பற்றியும் என்ன வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் எழுதுவதே கலாய் கவிதைகள். இதை அனுபவிக்கணும், தேவையில்லாம ஆராயக்கூடாது!

p38a_1519736194.jpg

ஓங்கி உலகளந்த அலுமினிய ஆன்டெனாக்கள் போயாச்சு.கைக்கெட்டிய தூரத்தில் டிஷ் ஆன்டெனாக்கள்!

p38c_1519736229.jpg

  சிக்னலில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த சிறுமிக்குத் தெரியாது தட்டில் விழுந்தது பழைய 500 ரூபாய் என்று!

p38d_1519736273.jpg

  ‘உண்மையான தமிழன் என்றால் ஷேர் செய்யவும்!’ - மெஸேஜைப் படித்துக்கொண்டிருந்தபோது கேப்பசினோ கொட்டியது,   ‘ஓ ஷிட்!’ என்றான்.

p38e_1519736326.jpg

  ‘இந்திர லோகத்து சுந்தரி.. மன்மதன் நாட்டு மந்திரி...’கனவில் நயனோடு பாட்டு பாடிக்கொண்டிருந்த என்னை ‘சீக்கிரம் எந்திரி!’ என்றது அம்மாவின் குரல்!

p38b_1519736584.jpg

`மேயுற மாட்டை நக்குற மாடு கெடுத்துச்சாம்... அப்புறம் என்ன..?’ ‘உங்க டூத் பேஸ்ட்டில் உப்பு இருக்கா’ என்று கேட்டதாம் மேயுற மாடு.

p38f_1519736371.jpg

  காதல் கொண்டேன் என்றுதான் சொன்னாள் ஆனால், காதல் கொன்றேன் என என் காதில் விழுந்தது.

p38g_1519736384.jpg

  மிலிட்டரியில் பார்டரைக் காத்து ரிட்டயர்ட் ஆனவனுக்கு செக்யூரிட்டி வேலை கிடைத்தது மிலிட்டரி ஓட்டலில்!

p38gg_1519736407.jpg

  மனப்பிராந்தி என்பது யாதெனில் டாஸ்மாக்கைக் கடக்கும்போது உள்ளெழும் குரல்! (வாந்தி என்பது வெளியே எழும் குரல்!)

p38hh_1519736453.jpg

`க்ளிண்ட் ஈஸ்ட்வுட் தெரியுமா?’ என்று கேட்டாள் ‘சாண்டல்வுட் தெரியும்!’ என்று கண்ணடித்தேன்.

 

p38ggg_1519736422.jpg

  என் பிரேக்கிங் நியூஸில் நீ ஓ.பி.எஸ்ஸா..? ஈ.பி.எஸ்ஸா..? இல்லை... ரஜினியா கமலா?

p38h_1519736439.jpg

  பிரதமரின் வெளிநாட்டுப் பயணம்

‘எவன் எப்படிப் போனால் என்ன.. நீ ரசத்தை ஊத்து!’

https://www.vikatan.com/

Link to comment
Share on other sites

4.jpg
கந்தல்


அண்ணனுக்கோ அப்பாவுக்கோ
வாங்கிய சட்டை
தம்பியை
உடுத்திக்கொள்கிறது
சில சமயம் அக்காவையும்
அல்லது தங்கையையும்கூட
பாப்பாவை தூங்கச்செய்கிறது
பாட்டியின் சேலை
அம்மாவின் கைகளில்
நுழைந்து
பாத்திரங்களின் சூடு
தாங்கும் அப்பாவின் பனியன்
அவ்வப்போது
சைக்கிளும் துடைக்கிறது
முக்கோணமாகவோ
சதுரமாகவோ
அல்லது தனக்கென்ற
உருவமில்லாத
மிச்சங்களை
திணித்துக்கொண்டு
தைக்கப்பட்ட
தம்பியின் டிராயர்
அப்பாவின் டியூசன்
கிளாசில் போர்டு துடைக்கிறது
அம்மாவின் காட்டன்
சேலையை கிழித்து செய்யப்பட்ட
அக்காவின் தாவணி
தங்கையைத் தழுவுகிறது
தலையணைக்கு உறையாகிறது
அவ்வப்போது கறையுமாகிறது.

- சுபா செந்தில்குமார்

நினைவுகள்

நகரத்து மளிகைக்
கடையில்
இரண்டு ரூபாய்க்கு
விரல் நீள தேங்காய்
கீற்று வாங்குகையில்
மனதில் நிழலாடும்
ஊரில் சொற்ப
காசுக்கு
விற்று வந்த
தென்னந்தோப்பின்
நினைவுகள்.
 

http://www.kungumam.co.in

Link to comment
Share on other sites

பிரியங்கள் வழியும் பெரும்பொழுது

பிழைப்பிற்காய்க் கடல்கடந்து
வெளிநாடேகியிருக்கும் தந்தைக்கு
மகளாய் இருத்தல்
எத்துணை துர்பாக்கியம் என்பதை
என்னிடம் கேட்டால்
எடுத்துரைக்கவே ஏராளமுண்டு.

p70a_1520332307.jpg

பகல் வெறுத்து
அப்பாவின் குரல் கேட்க
இரவுக்காய்க் காத்துக்கிடக்கும் கணங்கள்
எத்துணைக் கொடியது என்பது
என்னைப் போன்ற மகள்கள் மட்டுமே
அறிந்ததாய் இருக்கும்.

வேண்டுவனவெல்லாம்
வீட்டில் கொட்டிக்கிடந்தாலும்
விரும்பி நிறைத்துக்கொள்ள இயலாமல்
வெற்றிடமாய்க் கிடப்பதென்னவோ
அப்பாவின் வாசமே.

ஒலித்த கைப்பேசி கடத்திவரும்
அப்பாவின் பிரியங்கள் வழியும் நொடிகளே
எனக்கான பெரும்பொழுது.
நாளின் பிற மணித்துளிகளெல்லாம்
சிறுபொழுதே.

- எஸ்.ஜெயகாந்தி

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

p70b_1520332354.jpg

உயிர்மூச்சு

விரையும் ரயிலில்
கையேந்தும் விழியிழந்தோன்
உயிர் உருக்கப்
புல்லாங்குழல் வாசித்தவாறும்
திருவிழாக் கூட்டத்தில்
சிறார்களைத் தேடும் பலூன்காரன்
ஊதி ஊதிப் பெருக்கவைத்த
பலூன்களைச் சுமந்தவாறும்
விற்றுக்கொண்டிருக்கிறார்கள்
அவரவர் உயிர்மூச்சை.

- தி.சிவசங்கரி

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

p70c_1520332337.jpg

ஒற்றைக்குரல்

நகரத் தொடங்கிய
எருமையின் நிழலை மேகக்கூட்டமென நினைத்துப் பின்தொடரும் தட்டான்.

தன் தொந்தரவு தாங்காமல்
ஆடும் எருமையின் வாலை
ஊஞ்சலென நினைத்து மகிழும் ஈ.

எருமையின் குளம்படி
பதிந்ததில் தேங்கியநீரை
கிணற்று நீரென நினைத்து
நீந்தும் ஆதவன்.

இத்தனையும் காட்சியாயின
சாட்டையின் சொடுக்கிற்கு
அசையாது நிற்கும் எருமையொன்றை
என் மகளின்
‘என்ன லட்சுமி’ என்ற ஒற்றைக்குரல்
நகர்த்தத் தொடங்கியதால்.

- தமிழ்த்தென்றல்


p70d_1520332374.jpg

பிளிறல் பரிசு

குன்றொன்று அசைந்து வருவதைப் போல
குறுகலான கடைவீதியில்
அச்சமும் ஆர்வமுமான சரிபாதிக் கலவையோடு
எதிர்ப்படுவோர் ஒதுங்கி விலகும்படி
ஊர்ந்து வந்த யானை
வனந்தொலைத்த விரக்தியினை வெளிக்காட்டாமலே
அனிச்சையாய் ஆசிவழங்கிச் செல்கிறது
பாகனின் சமிக்ஞையை ஏற்று.
சாலை விரிவாக்கத்தில் படுகொலையான
மரங்களின் சுவட்டையும் அறிய மாட்டாமல்
இளந்தளிர் கிளையுடைத்து
இரைப்பை நிரப்பிய நினைவுகள் உசுப்ப
காட்சிப் பொருளாகிப்போன
துதிக்கை சுமந்து
ஏக்க நடையிடுகிறது மௌனமாய்.
கால நீட்சிக் கணமொன்றின்
ஓர் ஊரெல்லைச் சாலையில்
இருமருங்கும் கன்றுகளைப் பதியனிடும்
சிறுவர்களைப் பார்த்த உற்சாகத்தில்
ஒரு பிளிறலைப் பரிசளித்துப் போகிறது.

- பாப்பனப்பட்டு வ.முருகன்

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

கலாய் கவிதைகள்!

 

 

தைப்பற்றியும் என்ன வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் எழுதுவதே கலாய் கவிதைகள். இதை அனுபவிக்கணும், தேவையில்லாம ஆராயக்கூடாது!

p38a_1520320448.jpg

* `நான் என்ன தக்காளித் தொக்கா?’ என்னிடம் கேட்கிறான் ஒருவன் `அடேய், தக்காளி தொக்கு எனக்குப் பிடிச்ச ஐட்டம்டா!’


p38b_1520320280.jpg

* வித் அவுட்டில் வந்தவனுக்கு அப்பர் என்ன சுந்தரர் என்ன..?


p38c_1520320293.jpg

* முற்றும் துறந்த முனிவர்தான் கேமராவுக்குப் பயந்தார்!


p38d_1520320307.jpg

* கண்ணாடி பார்த்துத் திருத்தம் செய்கிறாள் இனி கண்ணாடி திருத்திக்கொள்ளும்!


p38e_1520320321.jpg

* `என் இருமலை உறுமலாய் நினைத்து பயப்படாதே... தண்ணியக்குடி தண்ணியக்குடி..!’


p38g_1520320364.jpg

* விக்கிரவாண்டி மோட்டல்காரரே  `ஸ்வச் பாரத்’ அம்பாசிடராக சாலச் சிறந்தவர் 

‘ஏய், அங்க போகாத... டாய்லெட்ல போ!’


p38f_1520320340.jpg

* ஃபேஸ்புக்கில் உனக்கு இருக்கலாம் லட்சம் ஃபாலோயர்ஸ்... உன் வீடு வரை வரும் ஒரே ஃபாலோயர் நான்தான்1


p38h_1520320403.jpg

* ஒழுங்காகச் சாப்பிடாவிட்டால் மிலிந்த் சோமன்கூட மெலிந்த சோமனாகிவிடுவார்.

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

p80a_1521021671.jpg

வேப்பமர சாமி

வேப்பமரத்தை உதைக்கக் கூடாது
வேப்பமரத்தில்
ஊஞ்சல்கட்டி ஆடக் கூடாது
வேப்பங்கிளையைப் பிடித்துத்
தொங்கக் கூடாது
வேப்பமரத்தடியில்
மூத்திரம் போகக் கூடாது
வேப்பமரத்தின் மேல் எச்சில்
துப்பக் கூடாது
வேப்ப இலையைக் காலில்
மிதிக்கக் கூடாது
வேப்பமரத்துல சாமியிருக்கு
சாமி கண்ணைக் குத்திடும்
என்று
சொல்லிச் சொல்லி வளர்த்த
அம்மாவிடம் கேட்க
ஒன்று உள்ளது.
கடன் வாங்கி விதைச்சதெல்லாம்
மழையில்லாமக் கருகிடுச்சேன்னு
மனம் நொந்து
வேப்பமரத்தில்
தூக்கு மாட்டிக்கொண்ட அப்பாவை
ஏம்மா காப்பாத்தலை
வேப்பமர சாமி ?

- பிரபு

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

கலாய் கவிதைகள்!

 

 

தைப்பற்றியும் என்ன வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் எழுதுவதே கலாய் கவிதைகள். இதை அனுபவிக்கணும், தேவையில்லாம ஆராயக்கூடாது!

p64a_1521012141.jpg

* கை உடைந்த வலியைக்

கண்ணீர் கலந்து

ஹைகூவாக எழுதி

மொட்டை மாடியில் காயவைத்திருந்தான்

நல்லவேளை, காக்கா தூக்கிச் சென்றது.

- மனோ ரெட், சென்னை


p64c_1521012364.jpg

தமிழனா இருந்தா ஷேர் பண்ணு!

டாஸ்மாக்கில் சைட்-டிஷ் தேவையுடன் தமிழ்க் `குடிமகன்!’

- தே.ராஜாசிங் ஜெயக்குமார்,  தஞ்சாவூர்.


p64b_1521012350.jpg

வேங்கை மவன் பரட்டை ஒத்தையில நிக்கேன்.

 பின்னாடி ஆத்தா வளர்த்த சப்பாணியும் நிக்குதிலே!

- கோபிநாதன்.


p64d_1521012447.jpg

‘எந்த நடிகரும் ஓட்டைப் பிரிக்க முடியாது என் வீடு மாடி வீடு’ என்றார் அரசியல்வாதி!

- நிரவி கஜேந்திரன்


p64e_1521012461.jpg

அஞ்சலி செலுத்த முடியாது...

நாக்கு ‘செத்து’ப் போனதுக்கு!

- பாப்பனப்பட்டு வ.முருகன்


p64f_1521012474.jpg

அன்பே ஃபேஸ்புக்கில் நீ போடும்

மொக்கை ஸ்டேட்டஸ்க்கு லைக்

பண்றேன்

மொக்கைப் பையனான

என்னை லவ் பண்ணக் கூடாதா?!.

- எஸ்.சேக் சிக்கந்தர்.


p64g_1521012559.jpg

சுவையான தேநீரைக் கொடுத்தாலும் கழுவிக் கழுவித்தான் ஊற்றுகிறார்கள் கிளாஸை.

- தி.சிவசங்கரி


p64h_1521012571.jpg

ஆதார் போட்டோவை ஜெராக்ஸில் பார்ப்பதுவும் ‘ஜென் நிலை’தான்!

- எஸ்.ஜெயகாந்தி

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

p80b_1521021686.jpg

சாத்தானின் குரல்

சோலாப்பூர் போர்வையை விலக்கி
எழமாட்டேன் என
அடம்பிடிக்கிறது ஓர் அதிகாலை.

‘அம்மு’ என அதற்கு
செல்லமாய் வைத்த பெயரைச் சொல்லி அழைக்க
வளைந்து நெளித்து
`ம்’ என்ற குரலோடு
ஒருக்களித்து உறங்கக் கேட்கிறது

உப்புச்சப்பற்ற கதைக்கு உம் கொட்டிய இரவு
தட்டி எழுப்ப,
குனிந்த கழுத்தைக்
கட்டிக்கொண்டு உறங்க முடிகிறது

சுப்ரபாதம் பாடி எழுப்ப முடியாத எனது குல தெய்வம்

சாத்தானின் குரலாக ஒலிக்கும்
பள்ளி வாகனத்திற்கு
என்ன பதில் சொல்ல?

 - பி.கே.சாமி

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

p80c_1521021705.jpg

அடையாளம்

நகரப்பேருந்தில்
அருகில் அமர்ந்த அவன்
நிச்சயம் நம்மூர் ஆளாய்
இருந்திருக்க வாய்ப்பில்லை.

பல்லில் படிந்த காவியும்
பலநாள் அழுக்கேறிய உடையும்
கை நிறைய வண்ணக் கயிறுகளுமாய்
அவனை எனக்கு அப்படித்தான்
அடையாளப்படுத்த முடிந்தது.

காலில் படிந்திருக்கும் சேறு
அவனின் வாழ்க்கைக்கான
வேலைப்பளு என்ன என்பதை
விளக்கிக்கொண்டிருந்தது.

ஏதேனும் கேட்கலாமென
நினைத்துப் பின்வாங்கினேன்
மொழிதெரியா அவனிடத்தில்
பேசி என்னவாகப்போகிறது
சமாதானமாகிக்கொண்டேன் எனக்குள்.

எந்த உணர்வுகளையுமோ
உணர்ச்சிகளையுமோ அவனிடத்தில்
என்னால் படிக்க இயலவில்லை

மனம் என்னை
அழுத்திக்கொண்டிருக்கிறது
அடிக்கடி எனக்குவரும்
அலைபேசி அழைப்பைமட்டும்
அவன் ஆழ்ந்து கவனிப்பதும்
கோபமான என் பதில்களுக்கு
அவன் குனிந்துகொள்வதுமான
செயல்களில்...

எரிச்சலாய்
அவனிடத்தில் திரும்பி
`க்யா?’ என்றேன் எனக்கான வடமொழியில்...

`பொண்டாட்டிய ஆஸ்பத்ரில
சேத்திருக்காங்களாம்
ஒரு போன் பண்ணித்தர்றீங்களா’ என
சேறுபடிந்து கிழிந்திருந்த
காகிதத்திலிருக்கும் எண்ணைக்
காண்பித்து நீட்டிய
அவன் கையில்
`அம்முகுட்டி’ எனக் குத்தப்பட்டிருந்தது
பச்சையாய்த்
தமிழில்.

- பன்னீர்

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

 
 
E_1521015414.jpeg
 

இயற்கையின் மொழிகள்!

ஒவ்வொரு நாளும்
மறைந்தாலும்
தோன்றிக் கொண்டேதான்
இருக்கிறது சூரியன்!

அதன்
ஒளிக்கீற்றுகளும்
சொல்லித்தான்
தருகிறது
நம்பிக்கையை!

மேகத்திலிருந்து
விழும் மழைத் துளிகளும்
சொல்லியபடிதான்
பெய்கிறது
பாசத்தோடு
தாய்மையையும்!

எங்கிருந்தோ
பறந்து வரும்
சிட்டுக்குருவி கூட
சொல்லித்தான் தருகிறது
சுறுசுறுப்பை!

செடியில்
மலர்ந்திருக்கும்
பூக்களும்
சொல்லித்தான்
மரணிக்கிறது
சிரிப்பை!

எல்லாவற்றையும்
பார்க்கும்
மனிதனுக்குதான்
புரிவதே இல்லை
இயற்கையின்
மொழிகள்!
ர.சம்பத்குமார், பொள்ளாச்சி.

http://www.dinamalar.com

Link to comment
Share on other sites

போர் வந்த நாள்!

கவிதை: நிகோலா டேவிஸ்(Nicola Davies) மொழிபெயர்ப்பு: லீனா மணிமேகலைஓவியம்: செந்தில்

 

போர் வந்த அந்த நாளில்
சன்னல் நிலைகளில் பூக்கள் மலர்ந்திருந்தன.
என் அப்பா
என் இளைய சகோதரனைத்
தாலாட்டுப் பாடித்
தூங்கவைத்துக்கொண்டிருந்தார்
என் அம்மா
காலை உணவைச் சமைத்துவிட்டு
மூக்கில் செல்லமாக உரசி, முத்தமிட்டு,
பள்ளி வரை வந்து விட்டுச் சென்றார்

அந்த நாளின் காலையில்தான்
எரிமலைகளைப் பற்றிப் படித்திருந்தேன்.
தலைப்பிரட்டைகள் இறுதியில் தவளைகளாக மாறுவதைக் குறித்துப் பாடல் ஒன்றைக் கற்றிருந்தேன்.
என்  உருவ ஓவியத்திற்குச் சிறகுகள் வரைந்திருந்தேன்.
மதியம் சற்று ஆசுவாசமாக
டால்பின் வடிவிலிருந்த மேகத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்த வேளையில்தான்
போர் வந்தது
ழுதலில் இடியிறங்கி, பின் ஆலங்கட்டி மழை தெறித்தது போல இருந்தது.
தீயும் புகையும் இரைச்சலுமாய் எனக்கு ஒன்றும் விளங்கவில்லை.
போர்
விளையாட்டுத் திடல் தாண்டி
என் ஆசிரியரின் முகத்திற்கு
வந்தது
வகுப்பின் கூரையில் விழுந்தது
நகரத்தை உடைத்து நொறுக்கியது.
ஒரு கறுப்பு ஓட்டையைப் போன்ற 
என் வீட்டைப் பற்றி
எந்த வார்த்தைகளைக் கொண்டு விளக்குவது?
போர்
எல்லாவற்றையும் கொண்டு போனது
எல்லோரையும் கொண்டு போனது
ரத்தம் கசியும் தனித்த
கந்தை மூட்டையானேன் நான்

p20a_1521539863.jpg

ஓடினேன்
லாரிகளுக்குப்பின்...
பேருந்துகளில் தொற்றிக்கொண்டு...
வயல்களில் சாலைகளில் மலைகளில்
குளிரிலும் மழையிலும் புழுதியிலும்
பொத்தல் படகுகளில்
மூழ்கி
தப்பி
குழந்தைகள் முகம் மணல் கவ்விக்கிடந்த கடற்கரைகளை அடையும் வரை
ஓடினேன்
இனி ஓடவே முடியாத நிலைவரை
எண் இட்ட குடிசை வரிசை
கண்ணில் படும்வரை
ஒரு மூலையும் 
அழுக்குப் போர்வையும்
காற்றில் முனகும் கதவும்
அகப்படும்வரை

போர்
என் தோலின் அடுக்குகளில்
என் கண்களுக்குப் பின்புறம்
என் கனவுகளில்
என்னைப் பின்தொடர்ந்தது
என் இதயத்தை ஆக்கிரமித்தது

என்னிடம் தங்கிவிட்ட போரைத் துரத்த
நடந்தேன்...
நடந்தேன்...
போர் போயிராத இடத்தைத் தேடி
நடந்தேன்
போன பாதைகளில்
அடைக்கப்பட்ட கதவுகளில் 
இறங்கிய சாலைகளில்
புன்னகையைத் தொலைத்து
திருப்பிக்கொண்ட முகங்களில்
போர் அப்பியிருந்தது

நடந்து நடந்து
ஒரு பள்ளிக்கூடத்தைக் கண்டுபிடித்தேன்
சன்னல் எட்டிப் பார்த்தபோது
அவர்கள் எரிமலைகளைப் படித்துக்கொண்டிருந்தார்கள்
பறவைகளை வரைந்துகொண்டும்
பாடிக்கொண்டும் இருந்தார்கள்

உள்ளே போனபோது
அறையில்
என் அடிச்சுவடுகள் எதிரொலித்தன
கதவைத் தள்ளித் திறந்ததில்
பல முகங்கள் என்னை நோக்கித் திரும்பின
ஆசிரியரின் முகம் இறுகியிருந்தது
இங்கே வேறு யாருக்கும் இடமில்லை என்றார்
உட்காருவதற்கு நாற்காலி இல்லை
என்றார்
என்னை வெளியேறச் சொன்னார்

போர் அங்கும் வந்துவிட்டது போலும்

குடிசைக்குத் திரும்பி
மூலைக்குத் தவழ்ந்து
போர்வைக்குள் சுருண்டுகொண்டேன்
போர், உலகம் முழுவதையும் எடுத்துக் கொண்டுவிட்டதென நினைத்தேன்

கதவு அடித்தது
காற்றுதானென நினைத்தேன்
ஆனால் ஒரு சிறுமியின் குரல் கேட்டது
“இது உனக்காகத்தான் கொண்டுவந்தேன்
நீ இனி பள்ளிக்கு வரலாம்” என்றாள்
அவள் கையில் ஒரு நாற்காலி இருந்தது.
நான் இனி அதில் அமரலாம்.
எரிமலைகளைப் பற்றிப்
பாடம் படித்து
தவளைகளைப் பாடி
என் இதயத்தை அடைத்துக்கிடக்கும்
போரை விரட்டலாம்
“என் நண்பர்களும்
நாற்காலிகள் கொண்டு வந்திருக்கிறார்கள்
இந்த முகாமில் இருக்கும்
எல்லாக் குழந்தைகளும்
பள்ளிக்கு வரலாம்”
அந்தச் சிறுமி புன்னகையோடு சொன்னாள்

குடிசைகளிலிருந்து
குழந்தைகள் இறங்கிவர
நாற்காலிகள் நிரம்பிய சாலையில்
கைகோத்து நடந்தோம்
நாங்கள் முன்வைத்த
ஒவ்வொரு அடிக்கும்
போர் பின்வாங்கியது.


p20b_1521539844.jpg

p20c_1521539828.jpg

பெற்றோர்களை இழந்த 3000 சிரியக் குழந்தைகளை அகதிகளாக ஏற்க மறுத்த பிரிட்டனை எதிர்த்து, சிறுவர் இலக்கியத்தில் பரந்துபட்டு அறியப்படும் எழுத்தாளர் நிக்கோலா டேவிஸ் எழுதி இக்கவிதை வாசிக்கப்பட்டவுடன் ஓவியர் ஜேக்கி மோரீஸ் ஏற்கெனவே எல்லாவற்றையும் இழந்துநிற்கும் குழந்தைக்கு, மறுக்கப்பட்ட நாற்காலியை வரைய, டிவிட்டரில் அது ‘#3000Chairs’ என்ற பேரியக்கமாகமாறி உலகமெங்கிலுமிருந்து 3000 ஓவியர்கள் நாற்காலிகளை வரைந்து அனுப்பி, தங்கள் ஆதரவைத் தெரிவித்திருக்கிறார்கள்.

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

கால தேவதை

இப்போதும்
இரும்புக் கோடரியை
ஆற்றில் தவற விட்டு
அழுதுகொண்டிருந்தவனிடம்
முன்பொரு முறை 
மூன்று கோடரிகளை
அவன் நேர்மைக்குப் பரிசளித்த
அதே தேவதை
இம்முறை
மூன்று மரக்கன்றுகளைக் கையளித்தது
தன் தவற்றுக்கு வருந்தி..!

- வெள்ளூர் ராஜா

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

p44a_1521615274.jpg

வெறும் திரை

சினிமா போடுவதற்கு முன்னான
வெறும் திரை
ஆயிரம் கனவுகளைக் கொண்டதாய் இருக்கிறது.

இடைவேளையின் போதான
வெறும் திரை
சில பல கேள்விகளை முன்வைத்து நிற்கிறது
சிறுதீனிகளின் அவகாசமாக இருக்கிறது
இயற்கை உபாதையின் சாவியாக இருக்கிறது
யார் யாரெல்லாம் நம் சகரசிகன் ரசிகை என்ற தேடலின் வெண் பூங்காவாக இருக்கிறது.

தீர்ந்துபோன நேரமும் பணமும்
நம்மைக் கொண்டாடியதா
இல்லை கடிந்துகொண்டதா
என்பதாகவே என்றென்றும் நீள்கிறது
திரைப்படம் முடிந்ததுமான
வெறும் திரை.

- இளந்தென்றல் திரவியம்

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

ஒற்றைச் செருப்பு

பார்த்தும் பாராமல்
அவ்வளவு எளிதாய்க் கடந்துவிட
இயலாமல்
பதைபதைக்கும் நெஞ்சுக்குள்
இனம்புரியா பாரத்தை ஏற்றிவைக்கிறது
விரைவுச்சாலையில் விழுந்து கிடக்கும்
குழந்தையின் ஒற்றைச் செருப்பு.

- எஸ்.ஜெயகாந்தி

அன்று... அப்போது...

காலம் அதன்
வெள்ளை இழைகளை லேசாக
தலையில் இழைத்துவிடும்
இவ்வேளையில்தான்
சற்றே மங்கலாய்ச்
சில விஷயங்கள்
நினைவுக்கு வருகின்றன...
கல்லூரியின்
சிறப்புப்பேச்சாளர்
தம் வாழ்க்கையையே மாற்றியதாகக்
குறிப்பிட்டாரே
அது என்ன புத்தகம்...
25 வருடங்களுக்கு முன்
அப்படி ஓடிய படமாயிற்றே
அதைப் பார்க்கவில்லையா
என்று கேட்கப்பட்ட திரைப்படம்...
ஒன்றாய் உண்டு உறங்கி
கூடித்திரிந்த நண்பன்
இப்போது எந்த வலைதளத்திலும்
சிக்காது இருக்கிறானே
எங்கே அவன்...
படித்து ரசித்து நெகிழ்ந்து
சற்றே கிழிந்திருந்தாலும்
பரணில் பத்திரமாய் வைத்த கடிதங்கள் அப்படியே இருக்கின்றனவா...
மேலும்,
எப்போதாவது
சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டால்
கேட்க வேண்டும் உன்னிடமும்,
கல்லூரியின் கடைசி நாளன்று
ஏதோ சொல்ல வந்தாயோ?

- இளங்கோ ஏழுமலை

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

 
 
E_1521780017.jpeg
 

நகைப்பிற்குரியவர்கள்!

சாலை விதிகளை
சகட்டு மேனிக்கு மீறும்
நாங்கள் தான்
சகல கலா வல்லவர்கள்!

விளை நிலங்களை
வீட்டு மனைகளாக விற்று தரும்
நாங்கள் தான்
விற்பன்னர்கள்!

காணும் பொருட்களிலெல்லாம்
கலப்படம் செய்யும்
நாங்கள் தான்
கண்ணியம் மிக்கவர்கள்!

போதைப் பொருட்கள்
பொதுவுடமை ஆக்கும்
நாங்கள் தான்
போற்றுதலுக்குரியவர்கள்!

அனைத்து போராட்டங்களுக்கும்
ஆள் திரட்டித் தரும்
நாங்கள் தான்
அசகாய சூரர்கள்!

வரதட்சணை என்ற பெயரில்
வாங்கிக் குவிக்கும்
நாங்கள் தான்
வருங்கால இந்திய துாண்கள்!

ஊழியம் எதுவும் செய்யாமல்
ஊதியம் வாங்கும்
நாங்கள் தான்
உழைப்பாளர்கள்!

கொடுத்த வாக்குறுதியை
குழி தோண்டி புதைக்கும்
நாங்கள் தான்
கோமான்கள்!

கல்விக்கு, கணக்கு வழக்கின்றி
கட்டணம் வசூலிக்கும்
நாங்கள் தான்
கல்வி தாளாளர்கள்!

நல்லதே நடக்குமென்று
நம்பிக் கொண்டிருக்கும்
நாட்டு மக்களே
நகைப்பிற்குரியவர்கள்!

பெ.கருணைவள்ளல்,
சென்னை.

http://www.dinamalar.com

Link to comment
Share on other sites

கலாய் கவிதைகள்!

 

 

எதைப்பற்றியும் என்ன வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் எழுதுவதே கலாய் கவிதைகள். இதை அனுபவிக்கணும், தேவையில்லாம ஆராயக்கூடாது!

p94a_1522151521.jpg

ருள்மணியை விட்டுவிட்டு.வெற்றிமணியைக் காதலித்தாள்...
மணி ட்ரான்ஸ்ஃபர்!

- கலைவாணன்


p94b_1522151536.jpg

சிரிப்பூட்டும் வாயு
நைட்ரஸ் ஆக்ஸைடு...
அப்ப...
மீத்தேன், ஹைட்ரோகார்பன்,
ஷேல் கேஸ்...?
சரி... சரி...
இருக்கவே இருக்கு
கேஸ் ட்ரபுளுக்கு பூண்டு லேகியம்...
தண்ணியக் குடி... தண்ணியக் குடி..!

- கே.லக்‌ஷ்மணன்


p94c_1522151553.jpg

நெப்போலியனை
உள்ளே அனுப்பினால்
அரிச்சந்திரன் வெளியே வந்துவிடுவார்!

- எஸ்.ஜெயகாந்தி


p94d_1522151566.jpg

மாதக்கடைசி தேதி
வாஸ்து மீன் ஆனாலும்
வறுவலுக்கு  ஆகும்!

- ‘சீர்காழி’ வி.வெங்கட்


p94e_1522151588.jpg

ம்மா சீரியல்
அப்பா கம்ப்யூட்டர்
பெரியவன் கேம்ஸ்
சிறியவன் ரைம்ஸ் வீடியோ
பார்த்துச் சிரித்துக்கொண்டது
குடும்பப் போட்டோ

- ரா.அருண் பிரகாஷ்


p94f_1522151686.jpg

ண்ணாடி முன் நின்றபோது,
கண்ணாடி அழகாய்த் தெரிந்தது.

- வே.புனிதா வேளாங்கண்ணி


p94g_1522151699.jpg

ரத்தை வெட்டியவன் மீதும்
மழை கொட்டிக்கொண்டிருந்தது.

-  ரா.அருண் பிரகாஷ்


p94h_1522151712.jpg

னைவியிடம் இத்தனை வருடமாய் குப்பை கொட்ட இரண்டே வார்த்தைகள்
‘சரிம்மா’, ‘ஸாரிம்மா..!’
 
-  சீர்காழி வி.வெங்கட்

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

சந்திரபாபுவின் ஹேங் ஓவர் ஆலாபனை!

 
 

கவிதை: வெய்யில், ஓவியம்: செந்தில்

 

“அந்த இசைத்தட்டை ரத்தத்தால் கழுவிக்கொண்டிருக்கிறாள்
விநோதம் அடைமழையெனப் பெய்கிறது!”
நீண்ட உறக்கத்திலிருந்த சந்திரபாபு விழித்துக்கொண்டார்
நலம்தான் என்றாலும்,
அவ்வப்போது நினைவிழக்கிறார் அல்லது நினைவுபெறுகிறார்.
“கண்ணீரின் பயணத்தைத் தடுக்கக் கூடாது!”
இளையராசா தந்தனக்குயில்களை
வேட்டைக்கு அனுப்பியிருக்கிறார்
அதன் பசியிடமிருந்து
நம் கபாலக்கூழைப்
பத்திரப்படுத்திக்கொள்ள வேண்டும்.
வயலின் இசையில் கருவுற்றவள்
மதுவிடுதியிலிருந்து கிளம்ப மறுக்கிறாள்
அவளுக்குள்தான் எவ்வளவு பெரிய பனிக்குடம்.
சுவர்ணலதாவுக்கு நுரையீரல் பிரச்னையென்று
ஏன் டாக்டர் முதலிலேயே சொல்லவில்லை?
வெள்ளிவீதியின்
வெண்ணையுணங்கு பாறையில்
கனா இலைகள் உலர சாட்சியிருக்கும் பாணன்
வீழ்த்தப்பட்ட காட்டெருதின் உடலில்
யாழ் நரம்புகளைத் துழாவுகிறான்.
பெருகும் வைகையைக்
கனவில் சுமக்கும் புள்ளாய்
ஒருமுறை ரஹ்மான் வானில் மிதந்தார்
மேகம் கனியும் நறுமணத்தை
நாம் ஆனந்தித்தோம்.
யாவரும் கைவிட்ட தீவின் துயரை
விளரி யாழேற்றி அரற்றுகிறார் விஸ்வநாதன்
“சின்னஞ்சிறிய கடல் மின்மினிகளே...
ஒரு தூதுப்பாவாகச் சென்று
ஊழின் சிரசை மொய்ப்பீரோ?!”
யாரின் சிதையிலோ
பறைக்கு வார்பிடிக்கிறான் ராவணன்

p72a_1522143766.jpg

பாருங்கள் சந்திரபாபு
அவன் நீந்திவந்த கடலை
அதன் தீரா உப்புக்கரிப்பை.
இந்த நூற்றாண்டின் தமிழ்ச்சித்திரம்
பிடரியில் துளையுள்ள மண்டையோடுகள்,
போர்ப்புழுதி நீங்கா சிறிய விழிகளை
முலைப்பால் பீச்சிக் குளிர்வித்துக்கொண்டிருக்கும் சூர்ப்பணகைகள்.
பனையேறியரின் லாகவத்தோடு
நினைவைப் பற்றி ஏறி
மங்கலான மன ஒளியில்
இசைக்குறிப்புகளைக் காவுகிறேன்
“உழுகுடிகளுக்கு
அன்னக்கிளி புள் நிமித்தமானது!”
குணகடல் துள்ளும் தூங்கும்
சந்திர ஒளி வற்றும் பெருகும்
நாயனம் இசைக்கும்போது முகூர்த்தம் அவ்வளவுதானே சந்திரபாபு

இந்தத் தேநீரை ருசித்துவிட்டு
காயத்தின் தையல் பிரிந்துவிடாமல்
சற்று ஹம் பண்ணுங்கள்
வாழ்வில் மட்டுமல்ல
நியாயமற்ற முறையில்
கவிதையிலும் காட்சிகள் மாறும்தானே?!

https://www.vikatan.com/

Link to comment
Share on other sites

அம்மாவின் அடி!

அணில் வேட்டைக்குப் போன நாளில் எல்லாம்
பிறந்தநாள் கொண்டாடிவிடுவாள்.
அம்மாவிடம் அடி வாங்கும் நாளைத்தான்
‘பிறந்தநாள்’ எனப் பெயர் வைத்திருந்தாள் மூத்தவள்!
கிளித்தட்டு விளையாடச் சென்றதற்காக
மந்தையில் இருந்து வீடு வரை அடித்துவந்தாள்.
நல்ல தண்ணி எடுத்து வைக்கவில்லையென
பருத்தி மாரில் பின்னியெடுத்தாள்
அன்று திருக்கார்த்திகை.
பெரியம்மா தடுக்கத் தடுக்க,
கணுக்காலில் பட்டு சூரியகாந்தி பிரம்பு
சில்லு சில்லாய்ச் சிதறியது மட்டும்தான் நினைவிருக்கிறது
`உன்னை அடிச்சு அடிச்சு என் கைதான் வலிக்குது’ என
கிடைத்ததையெல்லாம் கொண்டு அடிப்பாள்.
எத்தனை வயசானாலும் அம்மா அடிக்கும்போது
தடுக்க மனசு வராது என்பார் ராஜாராம் அண்ணன்
அவர் கல்யாணம் முடிக்கும் வரை அடி வாங்கியவர்!
ஆனாலும், 
`கைலி கட்டிட்ட... இன்னுமாடா அம்மாட்ட அடி வாங்கிட்டிருக்க...’
ஒவ்வொருநாளும் ஊராரின் கிண்டல் பேச்சு வெறியேற்றும்.
ஒருநாள்... மிளகாய் பழச் சாக்கைத் தூக்கப்
புஞ்சைக்கு வரவில்லையென ஓங்கியபோது
துணிந்து சாட்டைக் கம்பைப் பிடித்து விட்டேன்
அதற்குப்பின் என்னைத் தொட்டதேயில்லை!

- தா.ரமேஷ்

https://www.vikatan.com/

Link to comment
Share on other sites

 
E_1522389864.jpeg
 

விடியும் வரை காத்திருக்காதே!

விடிவதற்குள் வேலையை
ஆரம்பித்து விடு
வேலை இல்லை என
துாங்கி சுகம் காணாதே!

ஓடும் மனிதர்களோடு
நீயும் சேர்ந்து கொள்
எந்த வேலையும் இழிவல்ல
குப்பையை சுமந்தாலும்
கூலி கிடைக்கும்!

பட்டதாரி என்பதை மற
பலதரப்பட்ட வேலைகள்
உன் முன்
கொட்டிக் கிடக்கின்றன!

சிறகடித்து பறந்து
திரிந்தால் தான்
பறவைக்கும் உணவு கிடைக்கும்
பதுங்கி, பாய்ந்து, ஓடி
உருண்டால் தான்
புலிக்கும் இரை கிடைக்கும்!

அழுதால் தான் பால் கிடைக்கும்
குழந்தைக்கும் தெரிகிறது
படிப்பிற்கு ஏற்ற வேலை
உழைப்பிற்கேற்ற ஊதியம்
யாரும் தருவதில்லை!

உழைப்பை முழுவதும்
ஊதியமாக்க கற்றுக்கொள்
உனக்கும் விடியும்
ஒருநாள் இனிதாக!
பாரதி சேகர், சென்னை.

http://www.dinamalar.com

Link to comment
Share on other sites

பிங்க் இரவு

மொட்டுகள் நாளை பூத்துவிடுமென
தொட்டியில் பதியமிட்ட
ரோஜாச்செடிகளைக் காட்டி
நம்பிக்கையூட்டுகிறாள் அம்மா.
அன்றைய அந்திக்குப் பின்
ரோஜா வாசத்தோடு
பிங்க் இரவுக்குள் துயில்கிறது குழந்தை.

- எஸ்.ஜெயகாந்தி

 

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

நெல் வயல்

ஒரு வயல் வரைந்து
வயல் முழுக்க
நெற்கதிர்கள் வரைந்து
பச்சைப் பசேலென பச்சை நிற
பென்சிலால் வண்ணம் தீட்டி
வயல் ஓரமாய்க் கிணறு வரைந்து
கைக்கு  எட்டுவதுபோல்
கிணற்றில் நீர் வரைந்து
கிணற்றோரம் பம்புசெட்டில்
நீர் இறைப்பதுபோல் வரைந்து
நெல் வயலில் களையெடுப்பதுபோல்
ஆட்கள் வரைந்து
கொண்டுபோய்...
மழையின்றி
கிணறு வற்றி
நிலம் வெடித்து
விவசாயம் முடங்கி
மூலையில் முடங்கிக் கிடக்கும்
பாட்டியிடமும் தாத்தாவிடமும்
காண்பித்தாள் பேத்தி...
உற்று உற்றுப் பார்த்தபடி
கண்களாலேயே
நெல்லறுத்து
களத்துமேட்டில் கதிரடித்து
மூட்டை பிடிக்கிறார்கள்
பாட்டியும் தாத்தாவும்.

- பிரபு

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

p22a_1522823501.jpg

பிஞ்சுத் தூரிகை

மகனின் ஓவிய நோட்டில்
வளைந்தும் நெளிந்தும்
ஒற்றைக் கோடாகவே உடல் சுருங்கி
ஓடுகிறது நதி.

அந்த நதிக்கரையில்
எப்போதும் அருகருகே நின்றபடியே
நீரருந்தி தாகம் தணிக்கின்றன
பகை விலங்குகள்.

அவன் பிஞ்சுத் தூரிகை தொட்டெழுதிய
கானகத்தில்
அழிவின் விளிம்பில் நிற்கும்
அத்தனை உயிரினங்களும்
பாதுகாப்பாய் உலவுகின்றன.

அவன் வயல்களுக்கு மேலே
பொழிவதற்குத் தயாராய்
மிதந்தபடி காத்திருக்கின்றன
மழை மேகங்கள்.

ஒவ்வொரு முறையும்
சிட்டுக்குருவிகளை வரையும் அவன்
மறந்தும் அலைபேசிக் கோபுரங்களை மட்டும்
வரைவதேயில்லை.

- தி.சிவசங்கரி

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

பின்னிரவின் பாதை

சோடியம் விளக்குகளின்
கீழ் தெரியும்
உலகென்பது
அவ்வளவு பரவசமானது
சாக்கடைப் பன்றி
மிருதுவான மஞ்சளில் மிளிரும்
மழை ஓய்ந்த ரோடு
தங்கத் துகள்களெனத் தகிக்கும்
நிரந்தரக் குடிகாரன்
சரிந்து காணப்படும்
கம்பமும் அவன் உருவமும்
ஒரு நவீன ஓவியம்போல் புலப்படும்
சரக்கொன்றை மரங்கள்
அவ்வப்போது
உடலசைத்துக்கொள்ளும்
யானைகளென இருக்கும்
தூக்கம் வாரா இப்பின்னிரவில்
கூடவே இளையராஜாவின் இசை
கூடப்பெறுகிறது
மெள்ள மெள்ள
வேர்ட்ஸ்வொர்த்தும் நானும்
ஒரு புள்ளியில் கூடப்பார்க்கிறோம்
ராமசந்திரன் தெருவை
வெஸ்ட் மினிஸ்டர் பாலமாக்கப் பார்க்கிறேன்
யாதொரு ஆட்சபேனையுமில்லை என்கிறான்
வில்லியம்...

- கோ.ஸ்ரீதரன்

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • 20டாலர் கட்டி அதே உங்கள் கேள்வி விடையை கூகிள் மொழி பெயர்ப்பு உதவியுடன் . ஹாய் செல்லம், இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போர் பற்றிச் சொல்ல முடியுமா? நீங்கள் அதை இரண்டு பத்திகளில் வைக்க விரும்புகிறேன். முதலாவதாக ஆண்டு மற்றும் இரண்டாவது விவரங்கள் கொடுக்க.     நிச்சயமாக, இலங்கையில் உள்நாட்டுப் போர் பற்றிய தகவல்களை உங்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் கோரியபடி இரண்டு நெடுவரிசைகளில் உள்ள தகவல் இங்கே: ஆண்டு விவரங்கள் 1983 இலங்கை இராணுவத்தின் மீது தமிழ் போராளிகள் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இலங்கையில் பெரும்பான்மை சிங்களவர்களுக்கும் சிறுபான்மை தமிழ் சமூகங்களுக்கும் இடையிலான இனப் பதற்றம் வன்முறையாக வெடித்தது. இந்த நிகழ்வு பரவலான தமிழர் விரோதக் கலவரங்களுக்கு வழிவகுத்தது, இதில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். 1987-1989 இந்திய அமைதி காக்கும் படை (IPKF) இலங்கையில் மோதலுக்கு மத்தியஸ்தம் செய்வதற்கும் தமிழ் போராளி குழுக்களை நிராயுதபாணியாக்குவதற்கும் நிறுத்தப்பட்டது. இருப்பினும், IPKF சில தமிழ் குழுக்களின் எதிர்ப்பை எதிர்கொண்டது, IPKF மற்றும் போராளிகளுக்கு இடையே கடுமையான சண்டைக்கு வழிவகுத்தது. 1990 விடுதலைப் புலிகள் (தமிழீழ விடுதலைப் புலிகள்) இலங்கை இராணுவத்திற்கு எதிராக ஒரு பெரிய தாக்குதலைத் தொடங்கி, நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கின் பெரும் பகுதிகளைக் கைப்பற்றினர். 1991-1995 இலங்கை அரசாங்கம் புலிகளுக்கு எதிராக தொடர்ச்சியான இராணுவத் தாக்குதல்களை முன்னெடுத்தது, இரு தரப்பினரும் கொடூரமான தந்திரோபாயங்களில் ஈடுபட்டுள்ளனர். 2002 இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது, ஓரளவு அமைதியான காலகட்டத்திற்கு வழிவகுத்தது. 2006 விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை அரசு பெரும் தாக்குதலை நடத்தியதால் போர் நிறுத்தம் முறிந்து மீண்டும் சண்டை தொடங்கியது. 2009 இலங்கை இராணுவம் விடுதலைப் புலிகளைத் தோற்கடித்து, அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைக் கொன்று 26 ஆண்டுகால உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வந்தது. இந்த மோதலில் 70,000 முதல் 80,000 பேர் வரை உயிரிழந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.
  • தற்கொலைக்கு முயற்சித்த தமிழ் அகதிகள் ருவாண்டா வைத்தியசாலையில் அனுமதி! பிரித்தானியாவின் கட்டுபாட்டிலுள்ள டியாகோ கார்சியா தீவில் 5 இலங்கை தமிழ் அகதிகள் தற்கொலை முயற்சிக்கு முயற்சித்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்து குறித்த இலங்கை தமிழ் அகதிகள் 5 பேரும் ருவாண்டா வைத்தியசாலையில் மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த செய்தியை தி நியூ ஹியூமனிடேரியன் வெளியிட்டுள்ளது. ருவாண்டா தலைநகரம் கிகாலியில் உள்ள ருவாண்டா வைத்தியசாலையில் குறித்த 5 புகலிடக் கோரிக்கையாளர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறித்த அகதிகள் டியாகோ கார்சியாவில் 18 மாதங்களாக தடுப்பில் இருந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2023/1328345
  • யாழ்.நாகர்கோவில் பகுதியில் 10 படகுகள் தீக்கிரை! யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பொலிஸ் பிரிவில் நாகர்கோவில் மேற்கு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 படகுகள் தீக்கிரயாக்கப்பட்டுள்ளது. கடலட்டை தொழிலில் ஈடுபட்டு வந்த படகுகள் தற்போது தொழிலில் ஈடுபடாமல் நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சமயம் அதிகாலை 2 மணியளவில் தீயிடப்பட்டுள்ளது. புத்தளம், தில்லையடி, அல்ஜித்தா எனும் முகவரியில் வசிக்கும் சாகுல் ஹமீது ஜௌபர் என்பவருக்குச் சொந்தமான படகுகளே இவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1328312
  • மீண்டும் ஒத்திவைக்கப்படுகின்றது தேர்தல்? இன்று வெளியாகிறது அறிவிப்பு? தற்போதைய நிலவரத்தை கருத்திற் கொண்டு தேர்தலை திட்டமிட்ட திகதியில் நடத்துவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடியதன் பின்னரே இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை இன்று(வியாழக்கிழமை) தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைத்து இது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கப்பு 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளதாகவும், ஏப்ரல் 25ஆம் திகதி தேர்தல் நடைபெறும் எனவும் முன்னர் அறிவிக்கப்பட்டது. எவ்வாறாயினும் குறித்த திகதியில் தபால் மூல வாக்களிப்பினை நடத்துவதற்கு தேவையான வாக்குச்சீட்டுக்களை விநியோகிக்க முடியாது என அரச அச்சகம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக தேர்தலை உரிய திகதிகளில் நடத்துவது சிக்கலாக மாறியுள்ளது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2023/1328336
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.