Jump to content

பிரமணர்கள் தமிழரல்ல, என்பது விதண்டாவாதம் மட்டுமல்ல, வெறும் மோசடி!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

"பிராமணன் வீட்டில் பேசுவது தமிழ், தமிழைச் சுத்தமாக உச்சரிப்பதில் வேறு எந்தப் பிரிவினருக்கும் பின் தங்கியவர்கள் அல்ல பிராமணர்கள். தமிழ் வளர்ச்சிக்குப் பெரிதும் தொண்டு புரிந்தவர்கள் பிராமணர்கள். அமெரிக்காவில் வளர்கின்ற தன் வீட்டுக் குழந்தைகள் கூடத் தமிழ் கற்காமல் இருந்து விடக் கூடாதென்று முனைபவர்கள் பிராமணர்கள், தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் பிராமணர்கள்.

ஆனாலும் தமிழர்கள் வேறு, பிராமணர்கள் வேறு, என்ற பிரசாரம் இடைவிடாது நடத்தப்படுகிறது. வீட்டிலே தெலுங்கு பேசுகிற லட்சக்கணக்கானவர்கள், தெலுங்கைத் தாய் மொழியாகப் பிரகடனம் செய்பவர்கள், கழகங்களிலே இருப்பதால் அவர்கள் தமிழர்கள், உருது மொழியைத் தாய் மொழியாக ஏற்கிற ஒருபகுதி முஸ்லீம்கள் கூட தமிழ் நாட்டில் வாழ்வதால் அவர்கள் தமிழர்கள், ஆனால் பிராமணன் மட்டும் தமிழன் அல்ல.

இந்த வக்கிரமான வாதத்திற்குக் கூறப்படுகிற காரணம் என்ன? பிராமணன் சமஸ்கிருதத்தை ஏற்கிறான் என்பது தான். லத்தீன் மொழியில் ஒதப்படுகிற சொற்களைக் கிறிஸ்தவர்கள் ஏற்றாலும் அவர்கள் தமிழர்களே, அரபு மொழியில் பெயரும் வைத்துக் கொண்டு, அரபு மொழியில் ஓதப்படுகின்ற விடயங்களை முஸ்லீம்கள் ஏற்றாலும் அவர்கள் தமிழர்களே, ஆனால் சமஸ்கிருத மொழியில் ஒதப்படுகின்ற மந்திரங்களை ஏற்பதால், பிராமணன் தமிழன் அல்ல, பிதற்றல் அல்லவா?

சமஸ்கிருதம் இந்நாட்டின் மொழி, தமிழ் மன்னர்களும் போற்றி வளர்த்த மொழி, பல அருமையான காவியங்களை வழங்கிய மொழி.சமக்கிருதத்தை மதிப்பதால், பிராமணன் தமிழன் அல்ல என்று ஆகி விடுவானா? அப்படியானால் ஆங்கிலத்தை மதிப்பதாலும், கற்பதாலும் ஒருவன் தமிழனல்ல என்று ஆகி விடுமே?

அப்படிப் பார்த்தால் இன்று தமிழ்நாட்டில் தமிழர்கள் இருக்க மாட்டார்களே. பிராமணன் வீட்டில் பேசுகிற தமிழ் ஏளனத்துக்குரியது. மற்ற சாதியினர் பேசுகிற தமிழ் எப்படிப் பட்டதாக இருந்தாலும் அது கேலிக்குரியதல்ல, இப்படியான ஒரு நியாயம் இன்று நிலை நிறுத்தப்பட்டு வருகிறது.

அகத்துக்காரர் (அகம் = வீடு - சங்கத்தமிழ்) என்பது மருவி ஆத்துக்காரர் என்றும், அகத்துக்காரி மருவி, ஆத்துக்காரி என்றும் பிராமணர்கள் வீட்டில் பேசப்படுவது கேவலம், ஆனால் ஊட்டுக்காரர், ஊட்டுக்காரி, அப்புச்சி, ஆச்சி போன்றவை கேலிக் குரியவை அல்ல.அவர்கள் என்பது மருவி "அவா" என்று பிராமணனால் பேசப்படுவது மட்டம், ஆனால் அதுவே 'அவுக" என்றும் "அவனுங்க" என்று கூறப்படுவது தவறல்ல, இது நியாய வாதமா அல்லது நியாயமற்ற துவேசவாதமா?

பேசிக்கொண்டிருக்கிறான் என்பதை பேசினுகுறான் என்று சொன்னால் தவறில்லை, பேசிகிட்டிருக்கான் என்று சொன்னால் குற்றமில்லை ஆனால் "பேசிண்டிருக்கான்" என்று சொன்னால் அது ஏளனத்திற்குரியது, ஏனென்றால் அது பிராமணன் பேச்சு. எந்த மொழியானாலும் சரி- வெவ்வேறு பகுதிகளில், வெவ்வேறு பிரிவுகளில்-அது சில மாறுதல்களோடு பேச்சு வழக்கிருக்கும்.

அது பேச்சு மொழியின் அழகு.தமிழ்நாட்டிலோ, பல மொழிகள் கலந்த, மெட்ராஸ் பாசை கூட ஏற்புடையது, ஆனால் பிராமணர்கள் வீட்டில் பேசுகிற சில வார்த்தைகள் மிகவும் ஏளனத்திற்குரியவை, என்ற வகையில் திரைப்படங்களிலும், நாடகங்களிலும் சித்தரிக்கப்படுகிறது. துவேசப் பிரச்சாரங்களின் விளைவுகளில் இதுவும் ஒன்று.

"தமில் மொலியில் உல்ல இலக்கியங்கள்" என்று பேசித் தமிலை வலர்க்கிற அறிஞர்கள், "தாய் தடுத்தாலும் தமிளை பளிப்பவனை விடேன்" என்று சவால் விட்டு தமிழைக் காப்பாற்றுகிற தலைவர்கள், தமிளை வாள வைத்து, உளகிளேயே தமிள் மொளி தான் கள் தோண்றி மண் தோன்றா காளத்தில் பிறந்தது" என்பதைப் பறை சாற்றி" எனத் தமிழின் பெருமையை நிலை நாட்டுகிற தமிழ்ப்பற்றாளர்கள்.... ஆகிய தமிழ்க் கொலை நிபுணர்கள் எல்லோரும்- தமிழர்கள், ஆனால்

தமிழைத் தாய்மொழியாகக் கொண்டு , தமிழை ஒழுங்காக உச்சரித்து, வீட்டிலே தமிழில் பேசி, சமஸ்கிருத சுலோகங்களைக் கூறினாலும், அது முடிந்து இறைவனிடம் தனது வேண்டுகோளையும் தமிழிலேயே வைக்கிற பிராமணன் தமிழன் அல்ல!

அவ்வளவு ஏன் தன்னைக் கன்னடியன் என்று வெளிப் படையாகக் கூறி, தமிழைக் காட்டுமிராண்டி பாசையென்று தூற்றிய பெரியார்- தமிழ்த்தலைவர். ஆனால் தமிழைக் கற்று, வீட்டிலும் தமிழைப் பேசி, அதைத் தாய்மொழியாகக் கொண்டுள்ள பிராமணன் தமிழன் அல்ல, இது வாதம் அல்ல, பிடிவாதம் கூட அல்ல- வெறும் மோசடி."

இந்தக் கருத்து சரியானதா? இப்படியான பிராமணர்களை யார் தமிழன் இல்லை என்கிறார்கள்? தம்மைத் தமிழர்கள் என்று அடையாளப்படுத்தும் எவரையும் தமிழர்கள், தமிழன் என்று அரவணைக்கத் தயங்குவதில்லையே?

சமக்கிருதம் கற்கும் பிராமணர்களை, எந்த தமிழரும் வெறுப்பதில்லையே, சமக்கிருதம், தமிழை விடச் சிறந்தது, என்று தமிழை இழிவு படுத்தும் பிராமணர்களை மட்டும் தானே நாம் வெறுக்கிறோம்.

தமிழைப் பேசுவதால் மட்டும், யாரும் தமிழராகி விட முடியுமா, அல்லது தமிழுணர்வுடன்தம்மைத் தமிழர்களாக அடையாளப்படுத்தி, தமிழர்களின் நலன்களில் அக்கறையுள்ளவர்களாகவும் இருக்க வேண்டுமா?

தமிழர்கள் பிராமணர்களைத் தமிழர்களாக ஏற்றுக் கொள்கிறார்களா இல்லையா என்பதை விட, பிராமணத் தலைவர்கள் யாரும் தம்மைத் தமிழர்களாக ஒருபோதும் அடையாளப் படுத்துவதில்லை என்பது தான் உண்மை, அப்படியென்றால், அவர்கள் தானே, நாம் தமிழர்களல்ல என்கிறார்கள் நாங்களல்லவே!

நன்றி: உணர்வுகள் இணையத்திற்கு

Link to comment
Share on other sites

தமிழை நீசமொழி என்றும், பூசிக்கத் தகாதது என்றும் தள்ளாதவர்கள், தமிழை தாய் மொழியாக ஏற்பவர்கள் அனைவருமே அவர்கள் எந்த சாதியாக இருந்தாலும், தமிழர்களே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர்கள் எல்லோரும் பிராமணர்கள் அல்ல, பிராமனர்கள் எல்லோரும் தமிழ்களும் அல்ல , பிராமனர்கள் தெலுங்கு,மராத்தி,ஹிந்தி இப்படி பல மொழிகளிலும் இருக்கிறார்கள், இவர்கள் பிழைக்கவந்தகூட்டம் தமக்குகிடைத்த இடங்களில் கூடாரம் அமைத்து கொண்டார்கள், கூடாரம் அடித்த இடத்தின்மொழியை கற்றுக்கொள்வது ஒன்றும் கஸ்ரமான விடயம் அல்லவே, பிழைப்புக்காக மொழியை கற்றுக்கொண்டாலும் அதை நீசமொழியாகத்தன் பார்ப்பார்கள், தேவமொழியாக அவர்கள் கருதுவது அவர்களது சமஸ்கிரத்தையே.

Link to comment
Share on other sites

சமஸ்கிருதம் இந்நாட்டின் மொழி என்று சொல்லப்படுவது பெரும் மோசடி.

சமஸ்கிருதம் ஐரோப்பிய மொழிகளோடு தொடர்புடையது என்று மொழியியல் வல்லுனர்கள் நிறுவி உள்ளார்கள். அதை "இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பம்" என்று சொல்வார்கள்.

தமிழ் மொழிக்கும் சமஸ்கிருதத்திற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழை நீசமொழி என்றும், பூசிக்கத் தகாதது என்றும் தள்ளாதவர்கள், தமிழை தாய் மொழியாக ஏற்பவர்கள் அனைவருமே அவர்கள் எந்த சாதியாக இருந்தாலும், தமிழர்களே

நிச்சயமாக. அத்தோடு தமிழனைக் காட்டுமிராண்டிகள் என்று திட்டியவர்களையும் தமிழனாகச் சேர்த்துக் கொள்ள முடியாது.

தமிழர் வளர்ச்சிப் பாதையில் முன்னேற வேண்டுமானால், அவனுக்குள் பிரிவினைகள் உருவாக்கின்ற எந்த சக்தியும், முறியடிக்கப்பட்டு, தமிழ் பேசும் அனைவரும் தமிழனாகவே கணித்து, செயற்பட வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சமஸ்கிருதம் ஒரு இறந்து விட்டமொழி, அதை யாரும் பேசுவதில்லை, எந்த மக்களாலும் பேசப்படாத மொழியை இறந்ததாகவே கருதுவார்கள் சமஸ்கிருதம் மந்திரங்களில் மட்டுமே வாழ்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சமஸ்கிருதம் இந்நாட்டின் மொழி என்று சொல்லப்படுவது பெரும் மோசடி.

சமஸ்கிருதம் ஐரோப்பிய மொழிகளோடு தொடர்புடையது என்று மொழியியல் வல்லுனர்கள் நிறுவி உள்ளார்கள். அதை "இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பம்" என்று சொல்வார்கள்.

தமிழ் மொழிக்கும் சமஸ்கிருதத்திற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை.

சமஸ்கிருதம் தமிழோடு சமமொழியல்ல. பிரம்மி தான் தமிழோடு சம காலத்தில் தோன்றியது. அசோகர் காலத்தில் கூட சமஸ்கிருதம் இருந்ததா என்று தெரியவில்லை. அசோகர் பிரம்மி எழுத்துக்களைப் பாவித்து தான் கல்வெட்டுக்கள் அமைத்தார் என்று கூறுவார்கள். அதிலும், கூட பல தமிழ் எழுத்துக்களையும் பாவித்திருந்தார் என்றும் கூறுவார்.

ஆனால் தமிழினின் அசமந்தப் போக்கினால், இன்று தமிழில் வடமொழி கலக்கும் அளவிற்கு மாறிவிட்டது. வெறுமனே தமிழனுக்குள் குத்துவெட்டுக்களை வளர்த்தால், கல்லறைத் தமிழாக மட்டுமே, அது இருக்கப் போகின்றது.

எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திக்காமல், அடைபடும் பலரின் சிந்தனைகளைப் பார்க்க, வரலாற்று ஆதாரமாகக் கல்லறையில் பதிவிடத் தான் அடிபடுகின்றார்கள் போலவும் தோன்றுகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிராமணர்கள் ஒரு நாளும் தங்களை தமிழர் என்று சொல்லுவது இல்லை மனதார...............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிராமணர்கள் ஒரு நாளும் தங்களை தமிழர் என்று சொல்லுவது இல்லை மனதார...............

அது பெரியார் ஊட்டிவிட்ட பிரிவினை வாதத்தால் வந்ததாகவே நான் கருதுகின்றேன். சென்ற நூற்றாண்டின் இறுதிக்காலம் வரை தமிழோடு அவர்கள் வாழ்ந்திருந்தார்கள். கல்கி உற்பட பலர் தமிழ் நூல்களை எழுதியிருந்தார்கள். ஆனால் தமிழருக்குள் பெரியார் உருவாக்கிய பிரிவினை வாதம் இப்படி ஒரு நிலமையைக் கொண்டு வந்து நிறுத்தி விட்டது.

இந்த பழைய கசப்பான சம்பவங்களை மறந்து, தமிழர் என்ற ஓரணிக்குள் தமிழரைத் திரட்ட வேண்டியதே, காலத்தின் பொறுப்பாகும். மீண்டும் மீண்டும் பிரிவினைகளுக்குள் தூபம் போடுபவர்கள் கண்டிகத்தக்கவர்கள்.

------------------------

இந்து ராம் பிராமணர் என்பதால் தான், தமிழீழப் போராட்டத்தை எதிர்ப்பதாகப் பலர் கதை விடுகின்றார்கள். உண்மையில் ராஜிவ் கொலைக்குப் பின்னரான மனக்கசப்பால் தான், அவர் புலிகளுக்கு எதிராக எழுத வெளிக்கிட்டாரே தவிர, பிராமணர் என்பதால் அல்ல.

இதில் இந்து ராமை ஆதரிப்பதாக அர்த்தம் கொள்ளக் கூடாது. உண்மை அது தான். மற்றும்படி, அவர் தமிழீழத்துக்கு எதிராக செய்கின்ற எந்தச் செயலையும் நியாயப்படுத்த முடியாது. அதற்கு எதிரானவனே நான். ஆனால் இங்கே சிலர் தங்களின் பிராமணம் மீதான வெறியை நியாப்படுத்த, புலிகளைப் பாவிப்பதால் தான், இது பற்றிச் சொல்ல வேண்டி ஏற்பட்டது.

ஆனால் மக்கிச சிந்தந்தமும், பகுத்தறிவு வாதியுமாகக் காட்டிக் கொள்ளும் ஜெயக்காந்தன் இதற்கு முற்பட்ட காலத்தில் இருந்தே, புலிகளை எதிர்த்துப் பேசியிருந்தார்.

ஏன் 2001ம் ஆண்டு காலப்பகுதியில், மலேசியாவோ, சிங்கப்பூர் சென்றிருந்த காலத்தில், தான் திருக்குறளை எரித்தாகக் கூறி அங்குள்ளவர்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டார்.

Link to comment
Share on other sites

நமது அன்றாட வாழ்வில், சில சமயங்களில், அறிந்தோ அறியாமலோ யார் சொல்கிறார்கள் என்பதனை வைத்து ஒரு விடயத்தை நாம் மனதிற்கெடுக்காது விட்டுவிடுகின்றோம். இதில் வேடிக்கை என்னவெனில் சில சமயங்களில் பேசுபொருளோடு எமக்கு உடன்பாடு இருந்தாலும் அதைப் பேசுபவர் மீது எமக்குள்ள மட்டமான எண்ணத்தால் பேசுபொருளை மனதிருத்த மறுத்துவிடுகிறோம். இது எமது சமூகத்திற்கு மட்டுமரியதன்று. இது பொதுவான ஒரு மனித சுபாவம்

ஆங்கிலத்தில் பிரச்சாரம் பற்றிப் படிப்பிப்பவர்கள் சொல்வார்கள் legitimize yourself before your cause என்று. அதாவது உங்களின் கருத்தினைக் கேட்பவர் அதற்கு எத்துணை முக்கியத்துவம் கொடுக்கிறார் என்பது அவரது மனதில் உங்களைப் பற்றி அவர் என்ன கருத்தினை வைத்துள்ளார் என்பதைப் பொறுத்துத் தான் அமைகிறது.

நான் இதை ஏன் இங்கு கூறுகிறேன் என்றால், யாழ் களத்தில் சிலர் தமது சுய நம்பிக்கைகளை மற்றையோரில் திணிப்பதற்குப் பகீரதப் பிரயத்னம் செய்து வருகிறார்கள். இதில் பிரச்சினை என்னவெனில், சாதியம் ஒழிப்பு போன்ற இன்றியமையாத விடயங்கள் கூட சில சயம், குறிப்பிடும் இந்த extremists கூறுவதால் சில மனங்களில் பதியாது போகும் ஆபத்து உள்ளது.

சாதியம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதனை அனைவரும் ஏற்றிருந்தால் இன்று அது ஒரு பிரச்சினையாக இருந்திராது. இன்னமும் அது பிரச்சினையாக இருக்கிறது என்றால், சில மனங்கள் இன்னமும் பண்படாது உள்ளது என்பது தான் உண்மை. இந்தப் பண்படுத்தலை முன்னெடுப்பவர்கள் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பது இந்தப்பண்படுத்தலின் விரைவிற்கு அவசியம் என்பது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியது.

உதாரணத்திற்கு ஒரு மதப்பற்றாளர் சாதிவெறியராயும் உள்ளார் என வைத்துக் கொள்வோம். ஒரு வேளை அவரது சாதி வெறியானது அவரது மதற்பற்றிலும் பார்க்க வீரியம் குறைந்ததாயும் இருக்கலாம். இந்நிலையில் மதவெறுப்பு என்ற தளத்தில் நின்று கொண்டு நாம் அவர்களிற்கு சாதி ஒழிப்புப் பிரச்சாரம் செய்தால் நிட்சயம் ஒரு பலனும் நமக்குக் கிடைக்காது.

ஆக, பகுத்தறிவாளர்கள் எனத் தம்மை அடையாளப்படுத்துபவர்கள் தம்மைத் தாமே கேட்கவேண்டிய ஒரு முக்கிய கேள்வி என்னவெனில், சாதியத்தை மதம் வழர்க்கிறது என்பதனால் மட்டுமே தான் நாம் மதத்தை வெறுக்கிறோமா அல்லது உள்ளார மதம் சாதியத்தை வழர்க்கிறதோ இல்லையோ என்பதற்கப்பால் மதநம்பிக்கையும் அழிக்க வேண்டுமென்றொரு தீவிர நோக்கமும் நமக்குள் இருக்கின்றதா என்பதே அது.

Link to comment
Share on other sites

அது எப்படி ராஜீவ்காந்தி கொலைக்குப் பிறகு பிராமண எழுத்தாளர்கள் மட்டும் விடுதலைப்புலிகளுக்கு எதிராக எழுதத் தொடங்கினார்கள்?

ஏன் சுபவீரபாண்டியன், தியாகு போன்ற தமிழ் எழுத்தாளர்கள் எதிராக எழுதவில்லை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது எப்படி ராஜீவ்காந்தி கொலைக்குப் பிறகு பிராமண எழுத்தாளர்கள் மட்டும் விடுதலைப்புலிகளுக்கு எதிராக எழுதத் தொடங்கினார்கள்?

ஏன் சுபவீரபாண்டியன், தியாகு போன்ற தமிழ் எழுத்தாளர்கள் எதிராக எழுதவில்லை?

இந்துப் பத்திரிகைக்கும், நேரு குடும்பத்திற்கும் உள்ள நெருக்கத்தை மறுக்க முடியாது. எனவே ராஜிவ் கொலையின் பின்னர் மாறுவதில் கருத்துண்டு. அத்தோடு அவர்களைத் தமிழர்கள் இல்லை என்று பெரியார் ஒதுக்கி வைத்த விதம், அவர்களை வடநாட்டவரோடு ஒதுங்க வைத்தது மட்டுமல்லாமல், மத்திய அரசின் சிந்தனைகளைத் தான் பிரதிபலித்தன.

சுபவீ, தியாகு, கெளத்தூர் மணி போன்றவர்கள் மத்திய அரசோடு நெருக்கம் கொண்டவர்கள் அல்ல. அதனால் மத்திய அரசின் கருத்தை அவர்கள் பிரதிபலிக்கவில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அங்கால ஒரு தலைப்பில சாதி அழிப்பு என்றாங்க.. இங்கால இன்னொரு பக்கத்தால பிராமணன் தமிழனா என்று கேட்கிறாங்க. என்ன வேடிக்கை மனிதர்கள்..!!! :unsure::rolleyes::rolleyes:

Link to comment
Share on other sites

இந்துப் பத்திரிகைக்கும், நேரு குடும்பத்திற்கும் உள்ள நெருக்கத்தை மறுக்க முடியாது. எனவே ராஜிவ் கொலையின் பின்னர் மாறுவதில் கருத்துண்டு. அத்தோடு அவர்களைத் தமிழர்கள் இல்லை என்று பெரியார் ஒதுக்கி வைத்த விதம், அவர்களை வடநாட்டவரோடு ஒதுங்க வைத்தது மட்டுமல்லாமல், மத்திய அரசின் சிந்தனைகளைத் தான் பிரதிபலித்தன.

சுபவீ, தியாகு, கெளத்தூர் மணி போன்றவர்கள் மத்திய அரசோடு நெருக்கம் கொண்டவர்கள் அல்ல. அதனால் மத்திய அரசின் கருத்தை அவர்கள் பிரதிபலிக்கவில்லை

இந்து ராம் ராஜிவ் காந்தி கொலைக்குப் பின்னர் தான் மாறினார் என்றால்,ஆதற்கு முன்னர் அவர் ஆதரித்தாரா? அப்படியாயின் பெரியார் பிராமணரைத் திட்டியதும், ராஜிவ் படுகொலையும் ஒரே நேரத்திலா நடந்தது?உங்கள் லொஜிக் உதைக்குதே? :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூயவனின் மேற்குறிப்பிட்ட பதிவு தமிழ் விரோதி சோ எழுதிய வெறுக்கத் தக்கதா பிராமணியம் என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்டது.

அதை வைத்து வக்காலத்து வங்குகிறார்.

பார்ப்பன எதிர்ப்பு சங்க இலக்கியங்களிலே இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூயவனின் மேற்குறிப்பிட்ட பதிவு தமிழ் விரோதி சோ எழுதிய வெறுக்கத் தக்கதா பிராமணியம் என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்டது.

அதை வைத்து வக்காலத்து வங்குகிறார்.

பார்ப்பன எதிர்ப்பு சங்க இலக்கியங்களிலே இருக்கிறது.

சார் நீங்க காலத்துக்கு காலம் சைவ சமயம் மீது அவதூறான கருத்துக்களை உங்கட இஸ்டத்துக்கு கொண்டி வருகிறீர்கள். அதை யாருமே கண்டுக்கிறதில்ல என்பதற்கு யாழ் களமே சாட்சி. இப்ப கொஞ்சம் முதலில தானே சார் சாதி ஒழிப்பு ஆரம்பிச்சிங்க. அதுக்க பிராமணர் என்று ஏன் சார் எதிர்ப்பை பெரியார் போல ஒரு சாரார் மீது காட்டுறீங்க. ஆங்க உங்களுக்கு சாதி ஒழிப்பு என்ற போர்வைக்குள் இருந்து சைவத்தையும் பிராமணர்களையும் திட்டிட்டு காலம் கழிக்க வேண்டும் என்பது விருப்பம். அப்படித்தானே..! இதை விட்டா நீங்க இங்க எதுவுமே எழுதினதில்லையே சார். :rolleyes::rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனிதரில் அனைவரும் சமம் என்பதுதான் எங்கள் கொள்கை.

பிராமணர்கள் என்பது சாதியைக் குறிக்கும் சொல் அல்ல. பார்ப்பனர்கள் தாங்களைத் தாங்களே சொல்லிக் கொண்டதுதான் அது. ஆனால் அந்த உணர்வு அற்று உண்மையான தமிழ் உணர்வோடு வாழ்பவர்களை நாங்கள் தமிழர்கள் என்றே அழைக்கிறோம். அந்த வகையில் பரிதிமாற் கலைஞர், பாரதி, சுப்பிரமணிய சிவா, சின்னக் குத்துசி, வ.ரா. போன்றவர்கள் மீது எமக்கு நல்ல மதிப்பும் மரியாதையும் உள்ளது.

மற்றும்படி எந்த ஆதிக்கத்தையும் நாங்கள் எதிர்த்தே வருகிறோம்.வெள்ளாள ஆதிக்கமாக இருந்தாலும் சரி, தேவர்சாதி ஆதிக்கமாக இருந்தாலும் சரி அல்லது ஆணாதிக்கம் வர்க்க ஆதிக்கமாக இருந்தாலும் சரி ஆதிக்க வெறியை எந்தச் சவுக்கால் அடித்தாலும் எங்களுக்கு முழுச் சம்மதமே.

சாதிகளற்ற, மதங்களற்ற, பால் வேறுபாடு அற்ற, வர்க்க வேறுபாடு அற்ற தமிழ்த் தேசியம்தான் எங்களின் உயிர்க் கொள்கை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனிதரில் அனைவரும் சமம் என்பதுதான் எங்கள் கொள்கை.

பிராமணர்கள் என்பது சாதியைக் குறிக்கும் சொல் அல்ல. பார்ப்பனர்கள் தாங்களைத் தாங்களே சொல்லிக் கொண்டதுதான் அது. ஆனால் அந்த உணர்வு அற்று உண்மையான தமிழ் உணர்வோடு வாழ்பவர்களை நாங்கள் தமிழர்கள் என்றே அழைக்கிறோம். அந்த வகையில் பரிதிமாற் கலைஞர், பாரதி, சுப்பிரமணிய சிவா, சின்னக் குத்துசி, வ.ரா. போன்றவர்கள் மீது எமக்கு நல்ல மதிப்பும் மரியாதையும் உள்ளது.

மற்றும்படி எந்த ஆதிக்கத்தையும் நாங்கள் எதிர்த்தே வருகிறோம்.வெள்ளாள ஆதிக்கமாக இருந்தாலும் சரி, தேவர்சாதி ஆதிக்கமாக இருந்தாலும் சரி அல்லது ஆணாதிக்கம் வர்க்க ஆதிக்கமாக இருந்தாலும் சரி ஆதிக்க வெறியை எந்தச் சவுக்கால் அடித்தாலும் எங்களுக்கு முழுச் சம்மதமே.

சாதிகளற்ற, மதங்களற்ற, பால் வேறுபாடு அற்ற, வர்க்க வேறுபாடு அற்ற தமிழ்த் தேசியம்தான் எங்களின் உயிர்க் கொள்கை

சார் நீங்கள் எழுதவற்றைக் குறித்துக் கொள்ளுங்க. பிராமணர் என்பது சாதியக் கூறல்ல. நன்றி. முன்னர் இதற்கு முரணான நிலையில் சபேசனுடன் இணைந்து பகர்ந்து கொண்ட கருத்துக்களைப் படிக்கவும். பிராமணர்கள் என்போர் சமயப் பணியாளர்கள் என்ற எமது வாதத்தை எதிர்த்த போது தாங்கள் எடுத்த நிலைப்பாட்டை நோக்கவும். உங்கள் வாயாலேயே சிலதை எடுக்கனும் என்றது எங்கள் நிலைப்பாடு.

சாதி வேறுபாடு மட்டுமல்ல மனிதனை பிரித்தாட்டுகிறது.பிரதேசம் ஏழை பணக்காரன் படித்தவன் படிக்காதவன் முதலாளி தொழிலாளி என்று பல ஏற்றத்தாழ்வுகள் மனிதனை வதைக்கின்றன. அவற்றை உங்கள் தமிழ் தேசியம் அனுமதிக்குமோ..??

மதங்கள் பண்பாடுகள் கலாசாரங்கள் மனிதரின் உரிமை. அதை விரும்பியவர்கள் அடுத்தவர்களுக்கு ஆபத்து உருவாகா வண்ணம் கடைப்பிடிக்கலாம் என்பது உலக அங்கீகாரம் பெற்ற ஒன்று. உங்கள் தமிழ் தேசியம் மதங்கள் அற்றது என்று கூறுகின்றது என்றால் அது உலக அங்கீகாரத்துக்கு அப்பாற்பட்டது.

பால் வேறுபாடு. பால் வேறுபாடு என்பது இயற்கையானது. அதை உங்கள் தமிழ் தேசியம் களைய வேண்டின் நிறைய பால் மாற்று அறுவைச் சிகிச்சைகளைச் செய்ய வேண்டும். :rolleyes::unsure:

எங்களின் நிலைப்பாடு என்பது இனத்துவத்துக்கான அடையாளங்களை மனித உயர் விழுமியங்களை பாதுகாப்பதோடு எந்த விதத்திலும் ஏற்றத்தாழ்வற்ற மனித சமூதாயத்தில் ஆண் பெண் சமூகச் சம உரிமையை நிலைநிறுத்துவதனோடு வளமான மனித இன வளர்ச்சியை வேண்டுதல் என்பதாகும். மதங்கள் மனித ஒழுக்கங்களை வாழ்க்கை நெறிகளைப் போதிப்பனவாக அமைவதோடு அறிவியல் வளர்ச்சி என்பது மனித வளர்ச்சியோடு சமாந்திரமாகப் பயணிக்க வேண்டும் என்பதாகும். இது எங்கள் எதிர்பார்ப்பு. இதை தமிழ் தேசியம் என்று எங்கள் பாட்டுக்கு நாமே வரையறுக்க தயாராகவும் இல்லை. எமது வாதம் எங்கினும் எங்களின் நிலைப்பாடு தொனிப்பதைக் காணலாம். :P :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்கு! நீரும் தூயவனும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்

பால் வேறுபாடு என்று நான் குறிப்பிட்டது அரசியல் சமூகம் போன்ற அனைத்துத் தளங்களிலும் ஆணுக்கும் பெண்ணுக்கும் சம உரிமையை அளிப்பது என்பதே பொருள். உமது மூளை நெடுக்காகச் சிந்திக்காமல் குறுக்காகச் சிந்தித்ததற்கு நானா பொறுப்பு!

தனிப்பட்ட நம்பிக்கை வேறு மத அடிப்படைவாதம் வேறு இது புரியாமல் பினாத்துகின்றீர்கள்.

இந்து மத்தைப் பற்றிச் சற்றச் சிந்தித்துப் பாருங்கள். எவ்வளவு அசிங்கமா இருக்கிறது. அதில் ஏதாவது நல்ல கருத்துக்கள் இருந்தால் சொல்லுங்கள் பார்க்கலாம்.

நான் பெருமையாகச் சொல்ல வில்லை இந்துமதத்தை அக்கு வேறு ஆணி வேறா அலசியவன் . அதில் எங்கு ஒழுக்கத்தைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. இதய சுத்தியுடன் பதில் தாருங்கள். யோக்கியமான ஒரு கடவுளைச் சொல்லுங்கள். உடனே ராமன் என்பீர்கள். அவன்ர சீத்துவக்கேடு உங்களைக் காட்டிலும் எனக்கு நல்லத் தெரியும்

உமது ஆரியப் பாசம் வாழ்க!. அதுதான் தமிழர் திருநாளான பொங்கல் அன்று நீர் வடவர்களுக்கு மாகா சங்கராந்தி வாழ்த்துப் பாடினீர்.

நக்கிற மாட்டுக்கு செக்கேது சிவலிங்கம் ஏது என்று தெரியாது. செக்கை நக்கிய மாடு செக்கோடு சேர்ந்து சிவலிங்கத்தை நக்கலாம் அதற்காக பகுத்தறிவாளர்களான எங்களை நக்கிப் பார்க்க வெளிக்கிட வேண்டாம்

Link to comment
Share on other sites

நெடுக்காலபோவான்! உங்களுக்கு நான் சொல்வதும் இளங்கோ சொல்வதும் விளங்கவில்லை.

இளங்கோ பார்ப்பனரை ஒரு சாதி இல்லை என்கிறார். அவர்களை ஒரு தனிச் சமூகமாகப் பார்க்கிறார். இளங்கோ மறைமுகமாக பார்ப்பனர்களை தமிழர்கள் இல்லை என்று சொல்கிறார். அவர்கள் ஒரு தனி இனம் என்கிறார்.

நான் போனால் போகட்டும் என்று அவர்களை ஒரு சாதி (வேளாளர் போன்று) என்று ஏற்றுக்கொண்டு தமிழினத்திற்குள் உள்வாங்குகிறேன்.

Link to comment
Share on other sites

முதல் எங்கடை சூத்தையைப் பார்த்துட்டு பிறகு பிராமனர் பற்றி கதைப்பம்......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகப் பிராமணர்களுக்கும் ஈழப்பிராமணர்களுக்கும் வித்தியாசமுண்டு. ஈழப்பிராமணர்களில் சிலர் போராளிகளாகவும் மாவீரர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களைக் கொச்சைப்படுத்த வேண்டாம். தமிழகப்பிராமணர்களில் பெரும்பாலோர் தமிழ்த்தேசியத்துக்கு எதிராகவே இருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்து ராம் ராஜிவ் காந்தி கொலைக்குப் பின்னர் தான் மாறினார் என்றால்,ஆதற்கு முன்னர் அவர் ஆதரித்தாரா? அப்படியாயின் பெரியார் பிராமணரைத் திட்டியதும், ராஜிவ் படுகொலையும் ஒரே நேரத்திலா நடந்தது?உங்கள் லொஜிக் உதைக்குதே? :rolleyes:

பெரியார் பிராமணரைத் தமிழரில்லை என்று ஒதுக்கி வைத்ததால் தான், பிராமணர்கள் மத்திய அரசின் சிந்தனைகளுக்கு வடிவம் கொடுத்தார்கள் என்பதே சொல்லவருவது. சொல்லப் போனால், அவர்களைத் தமிழர்களில்லை என்று அன்னியப்படுத்தி வைத்தது பெரியார் தான் என்பதே! தமிழீழத்துக்கு ஆதரவாக இருந்த காலங்களில் அவர்கள் ஆதரவாக இருந்தார்கள். எதிராகப் போன போது எதிரானார்கள்.

ராஜிவைக் கொலை செய்ததில் இந்திய மத்திய கொள்கைவகுப்பாளர்களுக்கு மறைமுகமான உடன்பாடு இருந்தது என்ற கருத்தில் நான் எப்போதும் உறுதியாக இருக்கின்றேன். கடைசியில் எங்கள் மீது காலை வாரித் தாங்கள் தப்பித்துக் கொண்டார்கள். அந்த உண்மையை எப்போது இந்திய மக்களுக்கு உணர வைக்கின்றோமோ, அப்போது தான் அனைத்து மட்ட மக்களின் ஆதரவையும் பெற முடியும். அது தான் எம் தேவையும் கூட.

லொயிக் உதைக்குதோ, என்று பார்க்கு முன்பு, சரியான லொயிக்காகத் தான் விளங்கினீர்களா என்று பார்ப்பது நல்லதே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூயவனின் மேற்குறிப்பிட்ட பதிவு தமிழ் விரோதி சோ எழுதிய வெறுக்கத் தக்கதா பிராமணியம் என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்டது.

அதை வைத்து வக்காலத்து வங்குகிறார்.

பார்ப்பன எதிர்ப்பு சங்க இலக்கியங்களிலே இருக்கிறது.

இளங்கோ!

நான் இதை உணர்வுகள் தளத்தில் இருந்து தான் எடுத்தாகப் போட்டிருக்கின்றேன். அவர் எங்கு எடுத்தார் என்பது முக்கியமல்ல. மேலே சொல்லப்பட்ட விடயங்களுக்கு உமக்குப் பதிலளிக்கத் திரணியிருக்கா என்பது தான் முக்கியம்!

பிராமணர் சொன்னால், நல்லது கெட்டது என்று பார்க்காமல் தூக்கியெறி என்று உம் குரு கற்பித்தால் தான், அதை உம்மால் ஜீரணிக்க முடியவில்லை என்பதை உணர்ந்து கொள்ள முடிகின்றது.

இங்கே, அவர்கள் சொன்னவிடயத்தில் நியாயமுள்ளதாகவே உணர்்கின்றேன். அனைத்து மக்களும் இவ்வாறே நடக்கின்றபோது, பிராமணர்கள் மட்டும் தமிழரில்லை என்று ஒதுக்கி வைக்க வேண்டிய தேவை எங்கிருந்து வந்தது?

எல்லா சமூகமட்டத்திலும் பிரிவினை வாதங்கள் இருக்கின்றன. அதற்காக ஒதுக்கி வைக்க முடியுமா? இப்போதும் கூடத், தலித், வன்னியர் பிரச்சனை தீர்ந்தபாடில்லை.

ஒரு சமூகத்தலைவனாகப் பெரியார் இருந்திருந்தால், என்ன செய்திருக்க வேண்டும்? அந்தப் பிரச்சனைகளை மட்டும் எதிர்த்துப் போராடியிருக்க வேண்டும். அதில்லாமல் ஒட்டுமொத்த சமுதாய எதிர்ப்பு, இன்றைக்கு தமிழனை இப்படி கொண்டு வந்து நிறுத்தியிருக்கின்றது.

நீங்கள் வேண்டுமானால் பெரியாரைப் போற்றுங்கள். பாடுங்கள். ஆனால் இன்றைக்கு காவரிக்காகட்டும், பெரியார் அணைக்காகட்டும், எந்த ஆதரவையும் திரட்ட முடியவில்லை. தமிழ்நாட்டில் கால்பங்கு கூட இல்லாத கேரளத்திடம் மடிப்பிச்சை கேட்கின்ற நிலமைக்கு தமிழனுக்குள் பிரச்சனைகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு! நீரும் தூயவனும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்

பால் வேறுபாடு என்று நான் குறிப்பிட்டது அரசியல் சமூகம் போன்ற அனைத்துத் தளங்களிலும் ஆணுக்கும் பெண்ணுக்கும் சம உரிமையை அளிப்பது என்பதே பொருள். உமது மூளை நெடுக்காகச் சிந்திக்காமல் குறுக்காகச் சிந்தித்ததற்கு நானா பொறுப்பு!

நீங்கள் மட்டும் என்னவாம். சேற்றுக்குட்டையில் ஊறி, அதற்குப் பகுத்தறிவு என்று படம் காட்டவில்லையா?

தனிப்பட்ட நம்பிக்கை வேறு மத அடிப்படைவாதம் வேறு இது புரியாமல் பினாத்துகின்றீர்கள்.

இந்து மத்தைப் பற்றிச் சற்றச் சிந்தித்துப் பாருங்கள். எவ்வளவு அசிங்கமா இருக்கிறது. அதில் ஏதாவது நல்ல கருத்துக்கள் இருந்தால் சொல்லுங்கள் பார்க்கலாம்.

நான் பெருமையாகச் சொல்ல வில்லை இந்துமதத்தை அக்கு வேறு ஆணி வேறா அலசியவன் . அதில் எங்கு ஒழுக்கத்தைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. இதய சுத்தியுடன் பதில் தாருங்கள். யோக்கியமான ஒரு கடவுளைச் சொல்லுங்கள். உடனே ராமன் என்பீர்கள். அவன்ர சீத்துவக்கேடு உங்களைக் காட்டிலும் எனக்கு நல்லத் தெரியும்

ராமன் இருக்கின்ற காலத்தில் கடவுளாக்கப்படவில்லை. அவன் மரணித்த பிறகு தான், அவனது வரலாற்றைக் கேட்டு மக்கள் மதிப்புக் கொண்டார்கள். வழிபடவும் தொடங்கினார்கள்.

அவ்வாறு அவனை வழிபாடு செய்கின்ற மக்களைக் கேட்டால் தெரியும். அவன் ஒரு ஒழுக்கசீலன் என்பதற்காகத் தான், வழிபடுகின்றோம் என்று. மற்றும்ப மக்கள் வேறு ஏதும் குறித்து அக்கறைப்படுவதில்லை. ஒழுக்கத்தைக் கடவுளாக நினைப்பதை உங்களால் பொறுக்க முடியவில்லை. அது தான் காவோலை என்பார்கள்.

இன்றைக்கு எந்தக் கடவுளை வணங்கினாலும் மக்கள், நல்லவற்றைத் தான் வழிகாட்டியாக நினைப்பார்கள். பித்துப்பிடித்த உங்கள் குரு தான, கெட்டவற்றினை வழிகாட்டியாக்கினார்.

தமிழில் காவோலை என்று ஒருத்தனைத் திட்டுவதற்கு அர்த்தம். நல்லதை எல்லாம் விட்டு விட்டு, கெட்டவற்றைத் தான் ஏந்தி வைத்திருக்குமாம். மகாத்மா காந்தி அகிம்சை வழி என்பதற்காக உலகம் அவரைப் போற்றுகின்றது. ஆனால் காவோலைகள் என்ன செய்யுமொன்றால், சிறுவயதில் அவர் புகைப்பிடித்ததையும், திருமணத்தை மட்டும் தான் கதைக்கும். அல்லது தந்தை இறந்த நேரத்தில் உடறவுக்கு மனைவியை அழைத்தது பற்றி தான் நினைக்கும்.

நக்கிற மாட்டுக்கு செக்கேது சிவலிங்கம் ஏது என்று தெரியாது. செக்கை நக்கிய மாடு செக்கோடு சேர்ந்து சிவலிங்கத்தை நக்கலாம் அதற்காக பகுத்தறிவாளர்களான எங்களை நக்கிப் பார்க்க வெளிக்கிட வேண்டாம்

உருப்படியாக ஏதும் இருந்தால் நக்கலாம். பகுத்தறிவாளர்களிடம் நக்குவதற்கு என்ன இருக்கின்றது? அடுத்தவரைப் பற்றி வஞ்சம் கதைப்பதையும், திட்டுகின்ற பிழைப்பையும் தவிர.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தகவலுக்கு நன்றி  இந்த ஊர்  யாழ்பாணத்தில் எங்கே இருக்கின்றது என்பதே எனக்கு தெரியாது.தெரிந்தவர்கள் சொன்னதை வைத்தே சொன்னேன். முன்பு யாழ்கள உறவு தனிஒருவன் சொன்னவர் வீட்டு திட்டம் வந்த போதும் எதிர்ப்பு தெரிவித்து வீடும் கிடைக்காமல் போய்விட்டது.இங்கே உள்ளவர்கள் சென்றுவந்தவர்களும் அப்படியே  சொன்னவர்கள். இப்படியே தொழில்சாலை வேண்டாம் வீடு வேண்டாம் எதிர்த்து கொண்டிருந்தால் தமிழர்கள் வாழ்வதற்கு சிங்கள பிரதேசங்களுக்கு சென்று தான் குடியேறுவார்கள்.
    • நானும் அறிமுகமாகிக்கிறேன்..🙏 கி.பி.2009ல் ஈழம் செய்திகளின் தேடலின் போது யாழுக்கு வந்தேன். அதன்பின் யாழும், உறவுகளும் அன்பால் என்னை கட்டிப்போட்டுவிட்டனர்.😍 தில்லையில் பொறியியல் படித்த, மதுரையை அண்மித்த சிற்றூரை பிறப்பிடமாகக் கொண்ட மூத்த பொறியாளன். வெளிநாட்டில் வசிக்கிறேன். BTW, இந்த சீமந்து தொழிற்சாலையில் 'ப்ராசஸ்' எப்படி? பொலுசன் இல்லாத தொழிற் நுட்பம்தானே? 🙂
    • மிக்க நன்றி, கு.சா🙏  பரிமளம் அம்மணி நலமா? 😋 கரணவாய் பக்கம் போறது இல்லையா? கரணவாய் மூத்த விநாயகர் ஆலயம் உங்களை தேடுது, குசா..😍 ஒரு எட்டுக்கா அம்மணியோட போய் வாங்கோ.😎 அப்படியா? 😮 மிக்க நன்றி, நுணா 🙏 மிக்க நன்றி,  ஈழப்பிரியன் 🙏 --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- யாழ் உறவுகள் அனைவருக்கும் ...
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.