Sign in to follow this  
ராசவன்னியன்

மதுரையின் வளர்ச்சி..

Recommended Posts

Io6e3BY.jpg


''இனிய முரண் ஏதாவது...?''


"மதுரையில் பெருமுயற்சிக்குப் பிறகு பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டபோது அதற்கு 'மதுரை மீனாட்சி அம்மன் பெயரை வைக்க வேண்டும்’ என ஒரு சாராரும் 'பாண்டிய மன்னனின் பெயரைச் சூட்ட வேண்டும்’ என்று இன்னொரு சாராரும் வாதிட்டனர். ஆனால், காமராஜர் அதனை மறுத்து 'அது மதுரைப் பல்கலைக்கழகம் என்றே இருக்கட்டும். மதுரை என்றாலே எல்லோருக்கும் தெரியும்’ எனப் பெயர் சூட்டினார். பக்தவத்சலமும் அதை ஆமோதித்தார்.

ஆனால், மதுரைப் பல்கலைக்கழகத்துக்கு இப்போது என்ன பெயர் தெரியுமா? 'மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்’. யார் பெயரையும் சூட்ட வேண்டாம் எனச் சொன்ன காமராஜர் பெயரே மதுரைப் பல்கலைக்கழகத்துக்குச் சூட்டப்பட்டது இனிய முரண்தானே?''

-விகடன் இதழில் வெளியான துணுக்கு.

Share this post


Link to post
Share on other sites

மானம் காத்த மதுரை

Tamil_News_large_1052316.jpg

 

நதிக்கரை நாகரிகங்கள் தோன்றிய காலம் முதல் நைல் நதி நாகரிகம், சிந்துநதி நாகரிகம் என உலகம் முழுதும் இருக்கக்கூடியதைப் போன்று, 2000ம் ஆண்டு பழமையான, இன்றும் உயிரோடு இயங்கிக் கொண்டிருப்பது மதுரை, அதன் வைகை நதிக்கரையில் தான்.சில ஊர்கள் காலவரலாற்றில் மறைந்துவிட்டன. பெரிய நகரங்கள் இடம்பெயர்ந்து விட்டன. புராண, வரலாற்று, இலக்கியக் காலம் துவங்கி இன்று வரை திரைத்துறையா... பேச்சுத்துறையா.... எந்தத் துறையிலும் கலை, இலக்கியம் சார்ந்த விஷயங்களில் முன்னோடியாக இருப்பது, மதுரையின் வேர்கள் தான்.மதுரைக்கு நிறைய பெயர்கள் உண்டு. கடம்பவனம், ஆலவாய், நான்மாடக்கூடல், மருதை, மதிரை, மதுரை... சொல்லிக் கொண்டே போகலாம். மதுரையின் பெயர்க்காரணங்களை கல்வெட்டு, புராண, இலக்கிய காலம் தொட்டு ஆதாரமாகச் சொல்லமுடியும்.கல்வெட்டுச் சான்று: தொல்லியல் துறை அறிஞர் வேதாச்சலம் கூற்றுப்படி கல்வெட்டுக்களில் 'மதிரை' என்று தான் கூறப்படுகிறது. அழகர்கோவிலில் உள்ள கல்வெட்டிலும், திண்டுக்கல் நிலக்கோட்டை அருகிலுள்ள அணைப்பட்டி (சித்தர்கள் நத்தம்) கல்வெட்டிலும் 'மதிரை' என்றே குறிப்பிடப்படுகிறது. சிலப்பதிகாரத்தில் பாண்டிய நாடு மதுரைக் காண்டம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. இன்னமும் கிராமப்புறங்களில் சொல்வழக்கில் உள்ள சொல் என்ன தெரியுமா? 'நாங்க மருதக்காரங்க' தான்.

 

இலக்கியத்திலும் எடுத்துக்காட்டு:

பத்துப்பாட்டில் ஒன்றான மதுரைக்காஞ்சியை, இரண்டாம் நூற்றாண்டில் மாங்குடி மருதனார் எழுதினார். இந்தக்காலத்தில் நூல் வெளியீட்டு விழா நடத்துவது போல, அந்தக்காலத்தில் நூல் அரங்கேற்ற விழா நடத்தப்பட்டது. அரங்கம் ஏற்றுக்கொண்டால் தான் நூலாக வெளியிடமுடியும். அத்தகைய சிறப்புமிக்க மதுரைக்காஞ்சியை மாங்குடி மருதனார், திருவோண நன்னாளில் அரங்கேற்றம் செய்தது மதுரையில் தான்.மதுரைக்காஞ்சியில் மதுரையின் இரவும், பகலுமான முழுநாள் நிகழ்வை நேர்முக வர்ணனையாக கூறியிருப்பார் மாங்குடி மருதனார். தூங்காநகரம் என்ற பெயர் தானாக வந்ததில்லை. அங்காடிகள் என்றால் கடைகள்; அல் என்றால் இரவு. மதுரைக்காஞ்சியில் 'அல்லங்காடி' என குறிப்பிடப்பட்டிருக்கும்.புராணமும் புகழ்பாடும்: சிவபெருமானின் 64 திருவிளையாடல்களில் 60 விளையாடல்கள் நிகழ்த்திய இடம் மதுரை தான். வீதிகள் தோறும் திருவிளையாடல் நடந்ததாக கூறப்படுகிறது. ஆதரவற்ற கிழவிக்காக பிட்டுக்கு மண் சுமந்து, மன்னனிடம் பிரம்படி பட்ட சிவபெருமானின் திருவிளையாடல் நடந்ததும் இங்கு தான். மதுரை மக்களுக்காக சிவபெருமானே பிரம்படி பட்டதாக கூறுவதுண்டு. திருவிளையாடல் புராணத்தில் ஆலவாய், கூடல் காண்டம் என்ற பெயர்கள் இடம்பெற்றுள்ளன.


ஏடு நின்ற வரலாறு:

ஏழாம் நூற்றாண்டில் சமண மதம் மேலோங்கி நின்றது. சைவ சமயத்தை நிலைநாட்ட வந்த திருஞானசம்பந்தர், சமணர்களோடு போராடி, அனல்வாதம், புனல்வாதம் செய்தது மதுரையில் தான். எந்தசமயம் உயர்ந்தது என்பதை நிறுவ, தங்கள் மதத்தின் பெருமைகளை திருஞானசம்பந்தரும், சமணர்களும் ஏடுகளில் எழுதி வைகையாற்றில் இட்டனர். ஞானசம்பந்தரின் ஏடு வைகையாற்றில் எதிரேறிச் சென்று சோழவந்தான் அருகே திருவேடகம் என்ற ஊரைச் சேர்ந்தது. அந்த ஊர் இன்றும் திருவேடகம் என்றழைக்கப்படுகிறது. சமணர்களின் ஏடு நீரின் வழியே சென்று திருப்பாச்சேத்தியில் சேர்ந்தது என்பர். ஆற்றோடு போன இடம் திருப்பாச்சேத்தி. அதாவது பாட்டு போய் சேர்ந்த இடம் என்று பொருள்.இப்போதும் நம் வீட்டு திருமணப் பத்திரிகைகளில் 'மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்...' என்ற பாடலை, அச்சிடுவதுண்டு. ஆலவாய் அண்ணலும், அங்கையர்க்கண்ணி குடியிருக்கின்ற, மதுரை மீனாட்சி கோயிலில் வைத்து, திருஞானசம்பந்தர் இப்பாடலை பாடினார். எத்தனை நூற்றாண்டுகளை கடந்து, இந்த உறவு இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.சைவம் மட்டுமல்ல... வைணவத்தில் பெரியாழ்வார் பொற்கிழி பெற்ற இடம் மதுரை. திருவில்லிபுத்தூரில் வடபத்திர சாயியாக காட்சி தரும் பெருமாள், பெரியாழ்வார் கனவில் வந்து, பாண்டியநாட்டின் தலைநகராகிய மதுரை சென்று, 'எது மெய்ப்பொருள் என நிலைநிறுத்துவாயாக' என்று சொன்னாராம். மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில், பெரியாழ்வார் அப்பாடலை பாடிய போது, 'பொற்கிழி' வளைந்து கொடுத்து, 'இதுதான் உண்மையான மெய்ப்பொருள்' என்று காட்டியதாம். அதைத்தான் மெய்காட்டும் பொட்டல் என்றழைத்தனர். இப்போது மேங்காட்டு பொட்டல் என்றழைக்கப்படுகிறது, என்கின்றனர்.

 

தரையில் கை வை:

புராணரீதியாக சொன்னால், தடாதகை பிராட்டியாகிய அன்னை மீனாட்சியை மணமுடித்த சொக்கநாதர், தான் உருவாக்கிய குண்டோதரனுக்கு உணவளிக்கச் சொல்வார். ஆனால் அவனது உணவுப்பசியை தீர்க்கமுடியாமல், அன்னை தவிக்கும் போது, குண்டோதரனை 'தரையில் கை வை' என்றாராம். பொங்கிப் பாய்ந்தது வைகை. குண்டோதரனின் தாகம் தீர்க்க உருவான வைகை நதிக்கு, வேறெந்த நதிக்கும் இல்லாத பெருமையும் உண்டு.''நாரியிடப்பாகருக்கு நஞ்சளித்த பாவியென்று...வாரியிடைப்புகுதாயே வையையே!'' என்று, தனிப்பாடல் கூறுகிறது. இந்தப் பாடலின் அர்த்தம் நம் மதுரையைப் பற்றிய, வைகையைப் பற்றிய பிரமிப்பை ஏற்படுத்தும். தேவர்களும், அசுரர்களும் வாசுகி என்ற பாம்பைக் கொண்டு, பாற்கடலை கடைந்தார்களாம். அப்போது வெளிவந்த நஞ்சைக் கண்டு தேவர்கள் பயந்தோடினர். தேவர்களுக்கு அமிர்தத்தை வழங்கி விட்டு, அந்த நஞ்சை சிவபெருமானே உண்டாராம். 'சிவனுக்கே நஞ்சு கொடுத்தது கடல் தான். எனவே, எந்தக் காலத்திலும் நான் கடலோடு கலக்க மாட்டேன்' என்றதாம், வைகை நதி. தமிழகத்தில் கடலில் கலக்காத ஒரே நதி வைகை தான். வெள்ளம் பெருகினாலும், வைகை நதி ராமநாதபுரம் கண்மாயில் தான் கடைசியாக கலக்கிறது. சிவபெருமானால் உருவாக்கப்பட்ட மானமிகுந்த மதுரையின் புண்ணியநதியாம் வைகையில், இப்போது சாக்கடை கலந்து சங்கடம் தருவது வேதனை கதை.


மதுரையின் பெருமை:

2000ம் ஆண்டுக்கு முந்தைய புலவர்கள் வாழ்ந்த இடம் மதுரை தான். மணிமேகலை நூலை எழுதிய மதுரை கூலவாணிகன் சீத்தலைச்சாத்தன் மதுரைக்காரர் தான். கூலவாணிகம் என்றால் நவதானியம் என்று அர்த்தம். இப்போதும் கீழமாசி வீதிப் பகுதிகளில் நவதானியம் விற்கப்படுகிறது. மதுரையில் இளநாகனார் போன்ற புலவர்கள் வாழ்ந்தனர். கர்நாடக இசையுலகில் அசைக்கமுடியாத இடம் பெற்ற எம்.எஸ்.சுப்புலட்சுமியின் முழுப்பெயர் மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி தான். தூத்துக்குடியில் பிறந்து புதுச்சேரியில் இறந்த, நாடக உலகின் தந்தை சங்கரதாஸ் சுவாமிகள், நாடகம் வளர்த்தது மதுரையில் தான். நாடகக்கலை வளர்த்த மதுரையில் (தமுக்கம் மைதானம்) அவருக்கு சிலை உள்ளது. பாடலுக்கு மணி ஐயர், மதுரை சோமு, நாதஸ்வரத்திற்கு சேதுராமன், பொன்னுசாமி... இவர்களின் பெருமையும் மதுரையைச் சார்ந்தது தான்.மதுரையில் தான் நான்காம் தமிழ்ச்சங்கத்தை பாண்டித்துரை தேவர் உருவாக்கினார். மீனாட்சியம்மன் கோயில் கட்டிய வரலாற்றை எடுத்துக் கூறும் 'கோயில் திருப்பணி மாலை' என்ற நூலை, பின்னாளில் பாண்டித்துரை தேவர் பதிப்பித்தார். இப்போதும் தமிழ்ச்சங்க ரோட்டில் சங்கம் தமிழ்ச்சங்கமாக, செந்தமிழ்க் கல்லூரியாக உள்ளது. தமிழின்பால் கொண்ட பற்றின் காரணமாக தனது பெயரை மாற்றிக் கொண்ட பரிதிமாற் கலைஞர் என்ற சூரிய நாராயண சாஸ்திரி, மதுரைக் கல்லூரிப் பள்ளியில் படித்தவர் தான்.


சினிமாவுக்கு முன்னோடி:

மதுரை சேதுபதி பள்ளியில் ஆசிரியராக பாரதியார் பணியாற்றிய போது, 'தனிமை இரக்கம்' என்ற அவரது கவிதை, விவேகபானு பத்திரிகைக்காக மதுரையில் இருந்து தான் அச்சேறியது. தமிழ் சினிமாவின் முதல் பேசும் படம் காளிதாஸ், 1931ல் வெளிவந்தது. தமிழ் சினிமாவிற்கு பாட்டெழுதிய முதல் மதுரைக்காரர், மதுரகவி பாஸ்கரதாஸ். கோயில், இலக்கியம், இசை, நாடகம், பாட்டு... எல்லாமே மதுரையைச் சுற்றி தான். மதுரைக்காரன் என்று சொல்வதில் பெருமையில்லை. மதுரையின் பெருமையை உணர்ந்து, மதுரையின் பெருமைக்கு காரணமான வைகை நதியின் அருமை உணர்ந்து செயல்படுபவர்கள் தான், உண்மையான மதுரைக்காரர்கள். இதுதான் மதுரைக்கு பெருமை.


பைய... பைய...:

இன்னமும் மதுரைக்காரர்களின் பேச்சில் 'பைய' என்ற வார்த்தை இடம்பெறுவதுண்டு. யாராவது வேகமாக ஓடினாலோ, நடந்தாலோ, தடுக்கி விழுந்தாலோ, 'பைய... பார்த்து போ' என்பார்கள். இந்த வார்த்தையை ஏழாம் நூற்றாண்டிலேயே திருஞானசம்பந்தர் பயன்படுத்தியிருக்கிறார். ஏடுகளின் பெருமையில் திருஞானசம்பந்தரிடம் தோற்றுப் போன சமணர்கள், அவர் மதுரையில் தங்கியிருந்த மடத்திற்கு தீவைக்கின்றனர். 'மன்னனின் ஆதரவு இருப்பது தானே, இந்த நெருப்பிற்கு காரணம். இந்த நெருப்பின் வேகம் மன்னனைச் சென்று சேர வேண்டுமென நினைக்கிறார், திருஞானசம்பந்தர். 'பையவே சென்று பாண்டியர்க்கு ஆகவே' என்று பாடுகிறார். சமணர்கள் மடத்திற்கு வைத்த நெருப்பு, மெல்லச் சென்று பாண்டியனைச் சேரட்டும் என்பதாக அர்த்தம். மதுரை 'தூங்காநகரம்' மட்டுமல்ல... சொற்களால் சாகாநகரம் என்பதும் உண்மை தான்.

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=1052316

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this  

 • Topics

 • Posts

  • அதெப்படி, தமிழ் நாட்டு அரசியல்வாதிகளும் கட்சிகளும் எமது விடுதலைக்குத் தேவை. ஆனால் எமது விடுதலைப் போராட்டத்தை தமிழ்நாட்டு அரசியலுக்குள் இழுக்கப்படாது. 🤔 சீமான் பிரபாகரனையும் விடுதலைப் போராட்டத்தையும் பற்றிப் பேசுவதை நிறுத்திவிட்டால் எமது விடுதலைப் போராட்டத்தை ஆகக் குறைந்தது ஞாபகப்படுத்துவதற்கேனும் வேறு ஒருவரும் இந்தப் பூலோகத்தில் இல்லை.  இதுதான் பலரது தேவையோ ? ☹️  
  • தீயோடு தீயாய் சுடும் கவிதை.......நாடிழந்தவனுக்கு சுடுகாடும் தெருவே.....!  
  • த‌க‌வ‌லுக்கு ந‌ன்றி ப‌க‌ல‌வ‌ன் அண்ணா , நான் கேள்வி ப‌ட்ட‌ ம‌ட்டில் க‌னிமொழி ம‌ற்றும் வைக்கோ இவ‌ர்க‌ளின் தொலைபேசி நிறுத்தி வைக்க‌ ப‌ட்டு இருந்த‌து மே 18க்கு ஒரு வார‌ம் முத‌லே  , அண்ண‌ன் சீமானுக்கு சூசை அண்ணாவுட‌ன் க‌தைக்க‌ என்ன‌ த‌ய‌க்க‌ம் , வைக்கோ க‌ருணாநிதி போல் அண்ண‌ன் சீமான் அப்ப‌ அர‌சிய‌ல் வாதி இல்லை , ப‌ட‌ இய‌க்குன‌ர் , உரிய‌ ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டி பெரிய‌ பொருப்பில் இருந்த‌வ‌ர்க‌ள் சும்மா இருக்க‌ , ஒரு ப‌த‌வி ஒன்றும் இல்லாத‌ அண்ண‌ன் சீமானோடு சூசை அண்ண‌ க‌தைக்க‌ என்ன‌ இருக்கு ,  அப்ப‌டி க‌தைக்க‌ ச‌ர்ந்த‌ப்ப‌ம் அண்ண‌ன் சீமானுக்கு கிடைச்சு இருந்தா க‌தைத்து இருப்பார் , இத‌ என்னால் உறுதியாய் சொல்ல‌ முடியும் ,  இனி ப‌ழைய‌ செய்திக‌ளை கில‌ற‌  பெரிசா விரும்ப‌ வில்லை , 2009ம் ஆண்டு கூடுத‌லா‌ அண்ண‌ன் சீமானின் நாட்க‌ள்  சிறையில் ,  உண்மையை அண்ண‌ன் சீமான் பேச‌ ஏதாவ‌து பொய்வ‌ழ‌க்கு போட்டு அண்ண‌ன் சீமானை உள்ளை த‌ள்ளுவ‌தில் க‌ருணாநிதி ச‌ரியாய் செய‌ல் ப‌ட்டார் , அண்ணன் சீமானின் குர‌ல் ந‌சுக்க‌ப் ப‌ட்ட‌து க‌ருணாநிதியால் 2009ம் ஆண்டு , 2008ம் ஆண்டில் இருந்து 2009ம் ஆண்டு வ‌ர‌ அண்ண‌ன் சீமான் எப்ப‌ சிறைக்கு போனார் எப்ப‌ வெளியில் வ‌ந்தார் என்ர‌ விப‌ர‌ம் ஈசியா எடுக்க‌லாம் , கிடைத்த‌தும் இந்த‌ திரியில் இணைக்கிறேன் ,    உங்க‌ளின் கோவ‌ம் க‌ருணாநிதி  வைக்கோ  ராம‌தாஸ் திருமாள‌வ‌ன்  இவ‌ர்க‌ள் மேல்  தான் இருக்க‌னும் ,  அண்ண‌ன் சீமான் 2009ம் ஆண்டு த‌மிழ‌க‌த்தில் பேசின‌து எல்லாம் வ‌ன்னி த‌லைமைக்கு தெரியும் , நாட‌க‌த்தை அர‌ங் ஏற்றிய‌து திராவிட‌ம் , 2008ம் ஆண்டு இந்த‌ யாழ்க‌ள‌த்தில் நானே ஒரு திரியில் எழுதினேன் க‌ருணாநிதியை ந‌ம்ப‌ வேண்டாம் என்று , அப்ப‌ என்னை பார்த்து சிரித்தார்க‌ள் த‌ம்பி நீ சின்ன‌ பெடிய‌ன் உங்க‌ளுக்கு க‌லைஞ‌ரின் அர‌சிய‌ல் தெரியாது என்று , ச‌ரி அப்ப‌ நான் சின்ன‌ பெடிய‌ன் தான் ஆனால் க‌ருணாநிதி மீதான‌ என‌து க‌ணிப்பு மிக‌ ச‌ரி / உங்க‌ளின் அடுத்த‌ ப‌திலை வாசித்து விட்டு என் ப‌திலை எழுதுகிறேன்   
  • சிங்கங்களை இழக்கும் காடுகள் முகம்மது தம்பி மரைக்கார்   / 2020 ஜூன் 02 அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மரணம், பெரும் அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது. அனைத்து விதமான விமர்சனங்களுக்கும் அப்பால், மலையகத் தமிழ் மக்களின் 'தலைவனாக' அவர் இருந்தார் என்பதை, மறுத்து விட முடியாது. தனது தாத்தாவின் வழியில், அரசியலுக்கு வந்த ஆறுமுகன், மரணத்தில் முந்திக் கொண்டார். அதுவும், நாடாளுமன்றத் தேர்தலொன்றில் போட்டியிடுவதற்காக வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த நிலையில், அவர் இறந்து போனமை, இரட்டிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆறுமுகனின் மரணச் செய்தியைக் கேள்விப்பட்டபோது, முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப்பின் மரணம் நினைவுக்கு வந்தது. 2000ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதி, நடைபெறவிருந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த நிலையில்தான், முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரப், அதே வருடம் செப்டெம்பர் 16ஆம் திகதி ஹெலிகொப்டர் விபத்தில் பலியானார். ஆறுமுகன் இறக்கும் போது, அவருக்கு வயது 55. அஷ்ரப் மரணித்தபோது, அவருக்கு 52 வயது. இருவரின் மரணமும் அகாலமானவை. நடுத்தர வயதில், இருவரும் மறைந்து போனார்கள். அஷ்ரப்பும் ஆறுமுகனும் எங்கு 'முளை'த்தார்களோ, அந்த மண்ணின் மக்கள்தான் அவர்கள் இருவரையும் தத்தமது அரசியல் தலைவர்களாக்கிக் கொண்டனர். அஷ்ரப்பும் ஆறுமுகனும் வேறொரு நிலத்தின் 'வாடகைத் தலைவர்'களாக இருக்கவில்லை என்பதுதான் அவர்களின் பெருமிதங்களாகும். 2000ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான மக்கள் முன்னணியுடன் கூட்டிணைந்து, அம்பாறை மாவட்டத்தில் கதிரைச் சின்னத்தில் முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிட்டது. எம்.எச்.எம். அஷ்ரப், ஏ.எல்.எம். அதாவுல்லா (தற்போதைய தேசிய காங்கிரஸ் தலைவர்) யூ.எல்.எம். முகைதீன் ஆகியோர் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக, அந்தத் தேர்தலில் களமிறங்கியிருந்தனர். ஆனால், தேர்தல் நடைபெறுவதற்கு முன்னராகவே, அஷ்ரப் மரணித்து விட்டதால், அவரின் இடத்துக்கு அவருடைய மனைவி பேரியலை வேட்பாளராக, முஸ்லிம் காங்கிரஸ் நியமித்தது. அந்தத் தேர்தலில், அஷ்ரப்பின் மனைவி உள்ளிட்ட முஸ்லிம் காங்கிரஸின் மூன்று வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர். கிட்டத்தட்ட அதேபோன்ற நிகழ்வுகள்தான், ஆறுமுகன் தொண்டமானின் மரணத்திலும் நடந்துள்ளன. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில், மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொதுஜன பெரமுனவுடன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கூட்டணியமைத்துப் போட்டியிடுகிறது. அதற்கிணங்க, நுவரெலியா மாவட்டத்தில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக ஆறுமுகன் களமிறங்கி இருந்தார். அவரின் திடீர் மரணத்தையடுத்து, அன்னாரின் வேட்பாளர் இடத்துக்கு, அவருடைய மகன் ஜீவன் நியமிக்கப்பட்டுள்ளார். அஷ்ரப்பின் மரணத்தின் பிறகுதான், அவருடைய பெறுமானத்தை அவரின் மண்ணின் மக்கள் முழுவதுமாக உணர்ந்தனர். அஷ்ரப் என்கிற அரசியல் தலைவரின் இழப்பை, முஸ்லிம்கள் இன்னும் வலியுடன் நினைவுகூருகின்றனர். அஷ்ரப்பின் 'இல்லாமை', அவரின் மண்ணுக்கு வாடகைத் தலைவர்களைக் கொண்டு வந்து சேர்த்தது. ஆறுமுகனின் இழப்பால், மலையகத்துக்கு அவ்வாறானதொரு நிலை நேர்ந்து விடக்கூடாது. ஒரு நிலத்தின் மக்களுக்காகப் போராடுவதற்கும், தலைமை வகிப்பதற்கும் அந்த நிலத்தில் பிறந்த ஒருவரால்தான் முழுவதுமாக முடியும் என்பதை, வரலாறு நமக்குக் கற்றுத் தந்திருக்கிறது. நிலமொன்றில் வாழும் மக்களின் கண்ணீரை, வியர்வையை, கோபத்தை மட்டுமல்ல, தூஷண வார்த்தைகளைக் கூடப் புரிந்துகொள்வதற்கு, வாடகைத் தலைவர்களால் முடிவதில்லை. தலைவர்கள், தமது சொந்த நிலத்து மக்களின் வழியாகத்தான், மரணத்தின் பின்னரும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அஷ்ரப்பின் பெயரையும் உருவத்தையும் தவிர்த்து, அவரின் பிறந்தகமான கிழக்கு மாகாணத்தில், 'முஸ்லிம் அரசியல்' இன்றுவரை சாத்தியப்படாமைக்குக் காரணம், அவருடைய நிலத்து மக்களின் மனங்களில், அவர் வாழ்ந்து கொண்டிருப்பதால் ஆகும்.  ஒவ்வொரு தேர்தலிலும், முஸ்லிம்களின் வாக்குகளைப் பெறுவதற்காக, கிழக்கில் அஷ்ரப் நினைவுகூரப்பட்டுக் கொண்டே இருக்கின்றார். அஷ்ரப் உயிரோடிருந்த போது, அவரை எதிர்த்து அரசியல் செய்தவர்கள் கூட, இப்போது அஷ்ரப்பைப் போற்றிப் புகழும் அரசியலைச் செய்ய வேண்டிய நிலை உருவாகியிருக்கிறது. அஷ்ரப்பின் பெயரை வைத்து, ஏமாற்று அரசியலும் தாராளமாகவே நடக்கின்றன. தேர்ந்ததோர் அரசியல் தந்திரியாக,  அஷ்ரப் இருந்தார். அதேவேளை, தனது சமூகத்தையும் குறிப்பாக, தனது நிலத்து மக்களையும் அவர் ஆழமாக நேசித்தார். அதனால், தனது சமூகத்தை அடகு வைக்கும் 'அரசியலை', ஒருபோதும் அவர் செய்யவில்லை. ஆனால், வாடகைத் தலைவர்கள் அப்படியல்ல. தமது கதிரைகளைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, தமக்கு வாக்களித்த சமூகத்தையே, 'விற்றுப் பிழைத்த' வரலாறுகள் ஏராளமுள்ளன. சிறுபான்மை அரசியல் தலைவர்களில், ஆறுமுகன் தொண்டமானுக்கும் 'தந்தை' எனத் தமிழர்கள் அழைக்கும் செல்வநாயகத்துக்கும் மட்டுமே உள்ள பெருமையொன்று பற்றி, முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத், அண்மையில் சிலாகித்து எழுதியிருந்தார். 'அரசியல் கட்சியொன்றின் தலைவராகத் தந்தை செல்வா பதவி வகித்த நிலையில், அவர் அமைச்சராகாமல் அவரின் கட்சிக்குள், அவருக்கு அடுத்த நிலையில் இருந்த செனட்டர் திருச்செல்வத்தை அமைச்சராக்கினார். இவ்வாறே, ஆறுமுகன் தொண்டமான், தான் சாதாரண நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துகொண்டு, கட்சியில் அவருக்கு அடுத்த நிலையில் இருந்த முத்து சிவலிங்கத்தை, ஒருமுறை அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஆக்கினார். அரசாங்கங்களுடன் இணைந்திருந்த, வேறெந்தச் சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்களும், இந்தப் புகழ்மிக்க தைரியமான முடிவை எடுக்கவில்லை. ஆறுமுகன் தொண்டமான், அவருடைய சமூக மக்களுக்குள் அசைக்க முடியாத நம்பிக்கையை வளர்த்திருந்தமையும் மக்கள் மீது அவரும் அவர் மீது மக்களும்  பரஸ்பரம் கொண்டிருந்த செல்வாக்கும் நேசமுமே இந்தத் தைரியமான முடிவை எடுப்பதற்குக் காரணமாக அமைந்திருக்க வேண்டும். தான் வெறும் நாடாளுமன்ற உறுப்பினராக மட்டும் இருக்கத்தக்கதாக, தனது கட்சியிலுள்ள வேறொருவர் அமைச்சரானாலும், தனது தலைமையை அவ்வமைச்சரால் பறித்துக்கொள்ள முடியாது என்ற நம்பிக்கை ஆறுமுகனுக்கு இருந்தமையால், அவர் யுக புருஷராகிறார்'' எனத் தெரிவித்துள்ளார் பஷீர் சேகுதாவூத். ஆறுமுகன் தொண்டமானின் மரணம் ஏற்படுத்தியுள்ள 'வெற்றிடத்தை', மலையகம் முழுமையாகப் புரிந்து கொள்வதற்கான காலம் இன்னுமிருக்கிறது. ஆறுமுகனின் மரணம் காரணமாக, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸில் ஏற்பட்டுள்ள தலைமைப் பதவி நிரப்பப்படும் போது, அந்தக் கட்சிக்குள் பிளவுகள் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளதையும் மறந்து விடலாகாது. அஷ்ரப்பின் மரணத்தை அடுத்து, முஸ்லிம் காங்கிரஸின் தலைமைப் பதவியை நிரப்புவதில் ஏற்பட்ட மிகப்பெரும் தடுமாற்றங்களும் அதன் காரணமாக, இரட்டைத் தலைவர்கள் அந்தக் கட்சிக்கு நியமிக்கப்பட்டமையும் இங்கு கொள்ளத்தக்கது. 'சிங்கங்களின் கர்ஜனைகளால்தான், காடுகள் கம்பீரம் பெறுகின்றன' என்பதை, சிங்கங்களின் இழப்புகள்தான் அநேகமாகப் புரிய வைக்கின்றன. அஷ்ரப்பின் 'இல்லாமை'தான், அவரின் 'இருத்தலின்' அவசியத்தை, கிழக்கு முஸ்லிம்களுக்கு அதிகம் உணர்த்தியது. அதேபோன்று, ஆறுமுகன் இல்லாத மலையக அரசியலில், இப்போதைக்குச் சோபை இருக்கப் போவதுமில்லை. இனி, எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவதற்கும் திட்டுவதற்கும், ஆறுமுகன் இல்லை. எனவே, அவரின் புகழ் பாடுவதன் ஊடாக, அவரின் தொண்டர்களையும் ஆதரவாளர்களையும் வளைத்துப் போடும் அரசியலைச் செய்ய வேண்டிய 'கையறு' நிலைக்குள், எதிர்க்கட்சிகள் தள்ளப்படும் நிலை ஏற்படும். அஷ்ரப் மரணித்த பின்னர், அவருக்கு எதிரான கட்சிகள், இப்படித்தான் நடந்து கொண்டன. எது எவ்வாறாயினும், மலையகத் தமிழர்களின் ஏராளமான தேவைகள், உரிமைகள் மறுக்கப்பட்ட ஒரு சமூகத்தின் தலைவனாக, ஆறுமுகன் தொண்டமான் நிறைவேற்றிக் கொடுத்துள்ளார் என்பதில் கருத்து வேறுபாடுகள் இருக்க முடியாது. ஆனால், சிறுபான்மைச் சமூகங்களை அரவணைக்கும், மனநிலையற்ற தற்போதைய ஆட்சியாளர்களை,  ஆறுமுகன் இல்லாத அரசியலரங்கில், மலையகத் தமிழர் சமூகம் எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றது என்பது, மிக முக்கியமான கேள்வியாகும். இந்தப் பத்தியை எழுதிக் கொண்டிருக்கும் போது, ஆறுமுகன் தொண்டமான் வசமிருந்த சமூக வலுவூட்டல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சுப் பதவியை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பொறுப்பேற்ற செய்தி வெளியாகியுள்ளது. மிகவும் குறைவான, அடிப்படை வசதிகளுடன் வாழ்க்கையைச் சிரமத்துடன் எதிர்கொள்ளும் மலையக மக்கள், சில நன்மைகளை இலகுவில் பெற்றுக் கொள்வதென்றால், அவர்களைச் சார்ந்த ஒருவர் அமைச்சுப் பொறுப்பை வகித்தல் அவசியமாகும். இந்த ஆட்சியில், ஆறுமுகன் மூலம் மலையகத் தமிழர்களுக்கு ஓர் அமைச்சர் கிடைத்தார். அவரின் மறைவுடன் அதுவும் இல்லாமல் போயிற்று. ஒவ்வொன்றையும் இழக்கும் போதுதான், அவற்றின் 'அருமை'கள் புரியத் தொடங்கும். அஷ்ரப் இல்லாமல் போனபோது, முஸ்லிம் சமூகம் தனது கம்பீரத்தை அரசியலரங்கில் இழந்தது. சிறுபான்மை அரசியல் தலைவர் ஒருவர் அகால மரணமடையும் போது, அவர் சார்ந்த அரசியல் கட்சியும் அவரின் சமூகமும் எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கும் எவ்வாறெல்லாம் நடந்து கொள்ளக் கூடாது என்பதற்கும், அஷ்ரப்பின் மரணத்தின் பின்னரான சம்பவங்கள், உதாரணங்களாக இருக்கின்றன. சிந்திக்கத் தெரிந்தோருக்கு, வரலாற்றில் ஏராளமான பாடங்கள் உள்ளன. ஆறுமுகன்: ஓர்மை யாத்திரீகன் (ஆறுமுகன் தொண்டமான் மறைவை அடுத்து, முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத்  எழுதிய குறிப்பொன்றின் சில பகுதிகள்) 01 இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்பது, தொழிற் சங்கம் என்றும் அரசியல் கட்சி எனவும் இரண்டு தடங்களில் பயணிக்கும் அமைப்பாகும். இவ்விரட்டை அமைப்புக்கு, ஆறுமுகன் தலைமை தாங்கத் தொடங்கிய ஆரம்பகாலத்தில், 2003ஆம் ஆண்டு இடம்பெற்ற அவ்வமைப்பின் வருடாந்த பேராளர் மாநாட்டுக்கு, விருந்தினர்களில் ஒருவராக என்னை அழைத்திருந்தார். அவ்வருடம் காங்கிரஸின் தலைவர், செயலாளர் என அதிகாரம்மிக்க இரண்டு பதவிகளுக்கும் ஆறுமுகன் ஒருவரே தெரிவு செய்யப்பட்டிருந்தார். இதற்காகக் கட்சி யாப்பும் மாற்றப்பட்டிருந்தது. அதேவேளை, அமைச்சராகவும் அவர் பதவி வகித்தார். இம்மாநாட்டில் நான் பேசுகையில், ''தொண்டமான் அவர்களுக்கு கட்சியில் தலைவர், செயலாளர் ஆகிய இரண்டு பதவிகளையும் அரசாங்கத்தில் அமைச்சர் பதவியையும் மட்டுமல்ல, கட்சியில் இன்னும் மூன்று பதவிகளை அதிகமாகவும் வழங்கலாம். ஏனென்றால், அவர் 'ஒரு முகன்' அல்ல, 'ஆறு முகன்' அல்லவா''  என்றேன். கூடியிருந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் கட்சி நிர்வாகிகளும் ஒன்று சேரக் கைகளைத் தட்டி ஆரவாரம் செய்து, மகிழ்ச்சியோடு சிரித்தார்கள். பேசி முடித்து, மேடையில் இருந்து இறங்கி வந்து, நண்பர் ஆறுமுகனின் அருகில் அமர்ந்த போது, ''எனக்கு தெரியும், இது குத்திக்காட்டுண்ணு'' என்று கூறி, எனது இடுப்பில், அவரது முழங்கையால் செல்லமாகக் குத்தினார். காலப் போக்கில், அவரோடு இணைந்து செயற்படுகையில், ஆறுமுகன் உண்மையில் ஒரு பன்முக ஆளுமை கொண்டவர் என்பதை, ஐயந்திரிபுற அறிந்துகொள்ள முடிந்தது. இதை இலங்கைக்கே புரியவைத்துவிட்டுப் போயிருக்கிறார். 'பன்மை திரளத் தன்மை சூழ்ந்த' ஓர்மையான யாத்திரீகன் ஆறுமுகன். 02 பெரியவர்  சௌமியமூர்தி தொண்டமான் ஐயாவிடம், அரச அனுமதிப் பத்திரம் உள்ள 'சொட் கண்'  துப்பாக்கி இருந்தது. 1976ஆம் ஆண்டு ஒரு நாள், 12 வயது ஆறுமுகன், அப்போது பொலிஸ் அதிகாரியாகவும் பெரியவரின் அன்புக்குரியவராகவும் இருந்த கந்தசாமி ஐயாவிடம் வந்து, ''ஐயா, துப்பாக்கியால் சுடுவதைப் பார்க்க, எனக்கு ஆசை; சுட்டுக் காட்டுங்கள்'' என்று கேட்டார். கந்தசாமியார் துப்பாக்கியை எடுத்து ளுபு  தோட்டாவைப் புகுத்தி, மரக்கிளையில் நின்ற காகம் ஒன்றைச் சுட்டு வீழ்த்தினார். இதைப் பார்த்த சிறுவன் ஆறுமுகன், ''நானும் சுடணும் நானும் சுடணும்'' என்று அடம்பிடித்துத் துள்ளினான். பெரியவரின் கண்ணுக்குத் தெரியாதபடிக்கு, வேறு ஓர் இடத்துக்குச் சிறுவனை அழைத்துச் சென்று, துப்பாக்கியால் அதிர்வு குறைந்த வகையில், 'பொறி'யும் நாலாம் நம்பர் தோட்டா ஒன்றையும் நிரப்பினார் கந்தசாமி. மரத்தில் இருந்த ஒரு காகத்தைக் காட்டி, இலக்கு வைத்துச் சுடுமாறு கூறி, துப்பாக்கியை ஆறுமுகனிடம் கொடுத்தார். சரியாக காகத்தை இலக்கு வைத்த 'தம்பி', துப்பாக்கியின் குழலை, காகம் இருந்த இடத்துக்கு அப்பால் வலப்புறமாக, ஓர் அடி அளவு நகர்த்தி, 'றிகறை' அழுத்தினார். 'டுமீல்', காகம் கரைந்தபடி எழும்பிப் பறந்தோடிச் சென்றது. ''ஏன் தம்பி, நீங்கள் காகத்தைச் சுடாமல் தப்ப விட்டீங்க''? என்று கேட்ட ஐயாவிடம், ''காகம் பாவம், இப்ப அது, அதுட கூட்டுக்கு பிள்ளைகளப் பார்க்க போயிருக்குமில்ல..'' என்று சொன்னார் தம்பி ஆறுமுகன். இப்படிப்பட்ட இனிய 'உயிரபிமானி'யாக ஆறுமுகன் இருந்தார். ஆறுமுகனின் இழப்பின் பின்னர், மலையகத்து மக்களின் எதிர்காலம் பற்றிய கவலையும் சந்தேகமும் இருந்தாலும், காலத்துக்குக் காலம் யுக புருஷர்களை, தமக்குத் தலைவர்களாகப் பெற்றுவந்த அந்த மக்கள், புதிய தலைவர் ஒருவரை விரைவில் பெறுவது நிச்சயமாகும். வாழுங்காலம் முழுவதும் வாழ்க்கைக்காகப் போராடுகிற, தொழிற் சங்கப் போராட்டங்களுக்குப் பழக்கப்பட்ட தேர்ந்த போராளிகளான அம்மக்கள், தமக்கான புதிய தொண்டரை விரைவில் தெரிவார்கள்.             http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/சிங்கங்களை-இழக்கும்-காடுகள்/91-251265