• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
ராசவன்னியன்

கருணாநிதியின் புன்னகை தரிசனம்... உற்சாகத்தில் திமுக தொண்டர்கள்!

Recommended Posts

கருணாநிதியின் புன்னகை தரிசனம்... உற்சாகத்தில் திமுக தொண்டர்கள்

16-1502864222-karunanidhi467-600.jpg

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் புன்னகை தரிசனத்தை எட்டு மாதம் கழித்து பார்த்த தொண்டர்கள் உற்சாகமடைந்தனர். உடன்பிறப்பே என்று முரசொலியில் எழுதினாலும் சரி, மேடையில் அவர் அழைத்தாலும் சரி திமுக தொண்டர்களுக்கு உற்சாகம் கிளம்பிவிடும். விசில் அடித்து கரஒலி எழுப்பி தங்களின் அன்பை வெளிப்படுத்துவார்கள் திமுக தொண்டர்கள். முதுமை காரணமாக உடல் நலம் குன்றியதால் கடந்த டிசம்பர் மாதம் முதலே கருணாநிதியை பொது இடங்களில் காண முடியவில்லை. அவரது அறிக்கைகள், எழுத்துக்களையும் படிக்க முடியாத தொண்டர்கள் சற்றே சோர்ந்துதான் போய்விட்டனர்.

வீட்டிற்குள் கருணாநிதி

திமுக தலைவர் கருணாநிதி கடந்த டிசம்பர் மாதம் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதில் இருந்தே வீட்டிற்குள்தான் இருக்கிறார். குடும்ப உறுப்பினர்கள், முக்கிய அரசியல் கட்சித்தலைவர்கள் தவிர வேறு யாருமே அவரை சந்திக்கவில்லை.

தொண்டர்களின் கவலை

முரசொலி நாளிதழில் கருணாநிதியின் உடன்பிறப்பே கடிதம் காணாத தொண்டர்களின் சோர்வை போக்க அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் புகைப்படத்தை மட்டுமே பதிவேற்றி வந்தார் திமுக செயல்தலைவர் ஸ்டாலின்.

பிறந்தநாள் கொண்டாட்டம்

கருணாநிதியின் பிறந்தநாள் ஜூன் 3ஆம் தேதி கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் அவரது குடும்பத்தினர் கேக் வெட்டி கொண்டாடினர். அவர் கேக் சாப்பிடும் காட்சிகள் அடங்கிய வீடியோ டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றினர்.

ஜொலிக்காத கொண்டாட்டங்கள்

சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்ற வைரவிழா கொண்டாட்டத்தின் போதும் கருணாநிதி வருவார் என்று தொண்டர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அவரில்லாமலேயே விழா கொண்டாடப்பட்டது. இதேபோல முரசொலி பவளவிழாவும் கருணாநிதி இல்லாமலேயே கடந்து போனது. இந்த விழாவிற்கு வந்த தொண்டர்கள் கருணாநிதியின் குரலை கேட்கமலேயே ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

வாழ்த்துக் கடிதம்

முரசொலி பவளவிழா கொண்டாட்டத்திற்கான கருணாநிதி வாழ்த்துக்கடிதம் அனுப்பியிருந்தார். அந்த கடிதத்தைப் படித்து உற்சாகமடைந்தனர் தொண்டர்கள். மழை வந்து தொண்டர்களின் உற்சாகத்தை தடுத்தது.

செயற்கை உணவுக்குழாய் மாற்றம்

இன்று காலையில் கருணாநிதி மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பொருத்தப்பட்டிருந்த செயற்கை உணவுக்குழாயை 6 மாதத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டும் என்பதால் இன்றைக்கு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். செயற்கை உணவுக்குழாய் மாற்றப்பட்டு மீண்டும் அவர் வீடு திரும்பினார்.

தொண்டர்களுக்கு தரிசனம்

கடந்த 8 மாதகாலம் வீட்டிற்குள்ளேயே மருத்துவர்கள், குடும்ப உறுப்பினர்களின் கண்காணிப்பில் இருந்து வந்த கருணாநிதி இன்று தொண்டர்களுக்கு தரிசனம் அளித்தார். அவரின் புன்னகை தரிசனத்தைக் கண்டு தொண்டர்கள் உற்சாக முழக்கமிட்டனர்.

புன்னகை முகம்

தினசரி செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சிகளிலும் அவரது அறிக்கை, பேட்டிகள் முக்கியமாக இடம் பெறும். கடந்த 8 மாதகாலமாக எந்த அறிக்கையும் எழுதவில்லை. இன்று மீண்டும் கருணாநிதியை ஊடகங்கள் படம் பிடித்து ஒளிபரப்பியதும் வெளியூரில் இருந்த தொண்டர்களும், அவரின் புன்னகை முகத்தைப் பார்த்து உற்சாகமடைந்துள்ளனர்

தற்ஸ்தமிழ்

 

விதி வலியது..  terrific.gif

 

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this  

 • Topics

 • Posts

  • உலகப் பிறழ்நிலையை சாதகமாக்கி அசட்டைத் துணிவுடன் தமிழர்கள் மீது தொடரும் தாக்குதல்- துரைராசசிங்கம் சர்வதேசப் பொறிமுறையை இலங்கைக்கு எதிராக தாமதிக்காது செயற்படுத்த வேண்டும் என்ற செய்தியை மிருசுவில் படுகொலை குற்றவாளியின் விடுதலை வெளிப்படுத்துவதாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார். அத்துடன், கொரோனாவினால் உலகமே இயல்பான இயங்குநிலையில் இல்லாததைச் சாதமாக்கிக் கொண்டு அசட்டைத் துணிவுடன் தான் நினைத்ததையெல்லாம் ஜனாதிபதி செய்ய முடியும் என்று காட்டுகின்ற ஒரு அபாய விளக்கு இதுவென அவர் குறிப்பிட்டுள்ளார். மிருசுவில் படுகொலை தொடர்பாக தண்டனை வழங்கப்பட்டவரை ஜனாதிபதி பொது மன்னிப்பில் விடுதலை செய்துள்ளமை குறித்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில், “சிறுவர், சிறுமிகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எட்டுப் பேர் மிருசுவிலில் வன்கொலை செய்யப்பட்டார்கள். உடலங்கள் மலக்குழியில் இட்டு மறைக்கப்பட்டன. இது தொடர்பாக லெப்டினன் கேணல் சுனில் ரட்நாயக்க உட்பட ஆறு பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு அதில் ஐந்து பேர் விடுதலை செய்யப்பட்டதோடு சுனில் ரட்நாயக்கவுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. இந்த வழக்கு உயர் நீதிமன்றத்துக்கு மேன்முறையீடு செய்யப்பட்டு பிரதம நீதியரசர் உள்ளிட்ட ஐந்து நீதியரசர்களால் உறுதிப்படுத்தப்பட்டது. இந்நிலையிலே மரண தண்டனையை எதிர்நோக்கியிருந்த மேற்படி குற்றவாளி இலங்கை ஜனாதிபதியால் பொதுமன்னிப்பின் பேரில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். நமது நாடு உட்பட மொத்த உலகும் கொரோனா வைரஸ் பீதியிலும், துக்கத்திலும் ஆழ்ந்திருக்கின்ற இந்த சந்தர்ப்பத்திலே இச்செய்தி தமிழ் மக்களுக்கு மட்டுமல்லாது நீதி நிலைநிறுத்தப்பட வேண்டும் என்பதில் அக்கறையுள்ள அனைவருக்கும் அதிர்ச்சியாகும்.  சர்வதேச மன்னிப்புச் சபை உள்ளிட்ட மனித உரிமை நிறுவனங்கள் இந்த விடுதலை குறித்து அதிர்ச்சி வெளியிட்டுள்ளன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இராணுவ வீரராக இருந்து இராணுவ சிற்றதிகாரியாகப் பதவியுயர்ந்து பின்னர் பாதுகாப்புச் செயலாளராகவும் இருந்தவர். இராணுவத்தினர் ஒவ்வொருவரும் இறுக்கமான ஒழுக்க விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதும், கடமையின் போதும் அல்லது முகாமில் இருக்கும் போதும் வரம்பு மீறிச் செயற்படுமிடத்து இராணுவச் சட்டத்தின் மூலமாகவே அவ்வாறு செயற்பட்டவருக்குத் தண்டனை வழங்குகின்ற நடைமுறையும் உண்டு. அந்த நடைமுறை சுனில் ரட்நாயக்க உட்பட ஏனைய ஐந்து பேர் தொடர்பாகவும் கையாளப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு அது கையாளப்படாதமையினால், அதையும் மீறி உயர்நீதிமன்றம் வரை சென்று கையாளப்பட்ட விடயமாகும். இவ்விடயங்கள் போர்க்குற்றம் தொடர்பாக உள்நாட்டுப் பொறிமுறைகள் பொருத்தமானதல்ல என்பதை உறுதிப்படுத்துவதாய் அமைகின்றன. ஒட்டுமொத்தமாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் தனது சர்வதேசம் தழுவிய செயற்பாட்டுப் பொறிமுறையை இலங்கை அரசாங்கத்துக்கு எதிராகத் தாமதியாது செயற்படுத்த வேண்டும் என்கின்ற செய்தியையே இந்த கொலையாளி விடுதலை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. தாமதிக்கின்ற ஒவ்வொரு கணமும் தமிழ் மக்கள் மீது தொடர்ச்சியான, வெளிப்படையான தாக்குதல்கள் இடம்பெறும். உலகமெல்லாம் மிகக் கொடுமையான ஒரு நோய் தொடர்பாக கவனம் செலுத்தியும், இயல்பான இயங்குநிலை இல்லாத நிலையிலும் இருக்கின்ற இந்தச் சூழ்நிலையிலே ஜனாதிபதியின் செயற்பாடானது மிகவும் கொடுமையானதும், பயங்கரமானதுமாகும். இன்னொருவகையில் உலகப் பிறழ்நிலையை சாதமாக்கிக் கொண்டு அசட்டைத் துணிவுடன் தான் நினைத்ததையெல்லாம் ஜனாதிபதி செய்ய முடியும் என்று காட்டுகின்ற ஒரு அபாய விளக்காக இச் செயற்பாடு அமைகின்றது. இச் சூழ்நிலையிலே மனித உரிமை ஆணையமும் ஐக்கியநாடுகள் சபையும் இவ்விடயம் தொடர்பில் விரைந்து செயற்படுவது இன்றியமையாததொன்றாகும் என்று தெரிவித்தார். http://athavannews.com/உலகப்-பிறழ்நிலையை-சாதகமா/
  • நாட்டின் சில பகுதிகளில் இன்று காலை தளர்த்தப்பட்டிருந்த ஊரடங்கு மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, புத்தளம், யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களிலேயே இன்று(திங்கட்கிழமை) காலை 6 மணி முதல் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டிருந்தது. இந்தநிலையிலேயே இன்று நண்பகல் 2 மணி முதல் மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது. அத்துடன், மீண்டும் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் நாள் குறித்த அறிவிப்பு இதுவரையில் வெளியிடப்படவில்லை. ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டிருந்த காலப்பகுதியில் மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். இதன்போது மன்னார், வவுனியா, மட்டக்களப்பு மற்றும் மலையத்தின் சில பகுதிகளில் மரக்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டிருந்தாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். நாட்டின் தற்போதைய நிலையினை தங்களுக்கு சாதகமான முறையில் பயன்படுத்தும் சிலர் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். அத்துடன், இவ்வாறானவர்கள் குறித்து அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேவேளை, கொரோனா தொற்று பரவலை மையப்படுத்தி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, புத்தளம், யாழ்ப்பாணம் ஆகிய 6 மாவட்டங்களில் மட்டும் ஊரடங்கானது மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.     http://athavannews.com/ஊரடங்கு-மீண்டும்-அமுல்-ந/
  • மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் 15 வயது சிறுமியொருவர், சிறிய தந்தையினால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது 8 மாத கர்ப்பணியாக இருக்கும் குறித்த சிறுமி, சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளினால் மீட்கப்பட்டு சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலையடுத்து, குறித்த சிறுமியின் வீட்டை முற்றுகையிட்ட அதிகாரிகள் சிறுமியை மீட்டுள்ளனர். கொழும்பில் இருக்கும் சிறியதந்தையின் வீட்டுக்கு தனது தாயுடன் கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் சிறுமி சென்ற நிலையில் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, கர்ப்பமடைந்த சிறுமி, தனது வீட்டுக்குள்ளேயே முடங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டமை பொலிஸாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, சிறிய தந்தையை கைது செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். https://www.ibctamil.com/srilanka/80/140151?ref=imp-news
  • பிறந்தநாள் இன்று பிறந்தநாள் ......!    💐
  • கொரோனா வைரஸ் தொற்றின் முடிவு நெருங்கி விட்டது என்றும் தற்போதைய நிலைமை சிறப்பானதாக மாறிவிடும் என்றும் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி கணித்து உள்ளார். விஞ்ஞானி மைக்கேல் லெவிட்   லாஸ்ஏஞ்சல்ஸ்: கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபே மாகாணம் வுகானில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 199க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.   உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,21,412 ஆக உள்ளது.  தற்போதைய நிலவரப்படி 33,956 பேர் உயிரிழந்துள்ளனர். 1,51,004 பேர் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக உயிர் இயற்பியலாளரும், வேதியலுக்கான  நோபல் பரிசு பெற்றவருமான மைக்கேல் லெவிட் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு  அளித்த பேட்டியில்  கொரோனா வைரஸ் தொற்றின் முடிவு நெருங்கி விட்டது. தற்போதைய நிலைமை சிறப்பானதாக மாறிவிடும்சமூக விலகல் இந்த நேரத்தில் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு அவசியமான ஒரு சக்தியை  உலகிற்கு அளித்துள்ளது.ஏனெனில் சீனாவில் கொரோனா வைரஸ் பரவிய போது, சீனா குறித்து நிபுணர்கள் பல்வேறு கருத்துகளை வெளியிட்டிருந்த போதிலும், மைக்கேல் லெவிட்  துல்லியமான கணிப்புகளை வெளியிட்டிருந்தார்.சீனாவில் 80,000 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்படுவார்கள் மற்றும் 3,250 உயிரிழப்புகள் ஏற்படலாம் என்று மைக்கேல் லெவிட்  மதிப்பிட்டு இருந்தார். அதுபோலவே நடந்து உள்ளது. சீனாவில் 3,277 உயிரிழப்புகள் ஏற்பட்டதுடன், 81,171 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.அவரின் கூற்றின் படியே, சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதுடன், சீனாவில் கொரோனா வைரஸின் மையமாக இருந்த ஹூபே மாகாணம் நீண்ட நாட்களுக்குப் பின் தற்போது இயல்புநிலைக்கு திரும்பி உள்ளது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து மைக்கேல் கருத்துக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.   https://www.maalaimalar.com/news/topnews/2020/03/30113103/1373336/Covid19-epidemic-to-end-soon-predicts-scientist-Michael.vpf