Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

அடிப்பியா..? அப்பன் மவனே.. சிங்கம்டா!


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

அடிப்பியா..? அப்பன் மவனே.. சிங்கம்டா!     vil-heureux.gif

1940ல் வெளிவந்த 'சகுந்தலை' படத்தில் வரும் இந்த நகைச்சுவை காட்சி திரையுலகில் சாகாவரம் பெற்ற மிகவும் முக்கியமான காட்சியாக இன்றளவும் பேசப்படுகிறது.

இரண்டு செம்படவர்கள் ஒரு மீனுக்காக சண்டை போட்டுக் கொள்கிறார்கள். ஒரு கட்டத்தில் ஒருவர் மற்றவரை அடிக்க ஆரம்பிக்கிறார். அடிபட்டவர் திருப்பித் தாக்காமல் "அடிப்பியா, அப்பன் மவனே, சிங்கம்டா..!" என்று தனது வீரத்தைப் பறை சாற்றுவார். முதலாமவர் மறுபடியும் அடிப்பார். அப்போதும் பதிலாக இதே வசனம்தான். ஆனால் அடிபட்டவரின் குரல்பாவத்தில் வேறுபாடு. இப்படி அடிப்பவர் அடித்துக்கொண்டே இருக்க அடிபடுபவர் மறுபடியும், மறுபடியும் இதே பதிலை வேறுவேறு பாணியில் சொல்ல, கடைசியில் அது அழுதுகொண்டே சொல்வதுபோல் முடியும்.

இலங்கை வானொலியில் இந்த ஒலிச்சித்திரத்தை அடிக்கடி கேட்டுள்ளேன்.. என்.எஸ்.கிருஷ்ணன் மற்றும் டி.எஸ்.துரைராஜ் நடித்த இக்காட்சி அருமையான நகைச்சுவை யாழ் உறவுகளுக்காக..!

 

 

Link to post
Share on other sites
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Similar Content

 • Topics

 • Posts

  • கும்மானால் கிரான் சங்கக்கடைக்கு முன்னால் 2000 ஆண்டில் சுட்டுக் கொல்லப்பட்டார். கொழும்பிற்கு ஒருவரை கூட்டி செல்ல மறுத்ததற்காக.   பி.கு: இதற்கும் பொட்டம்மானுக்கும் தொடர்பு என்டு மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடாதீர்கள்.
  • ஜனாதிபதியின், பொது மன்னிப்பின் கீழ்... சிறைக்கைதிகள் விடுதலை சிறைகளில் கொரோனா தொற்று பரவுவதைக் கருத்திற் கொண்டு கைதிகள் சிலரை ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யத் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி 600 கைதிகள் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார். தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை குறித்தும் பலர் கோரிக்கை விடுத்து வருகின்ற நிலையில் கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கப்படாது என சிறைச்சாலை ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார். http://athavannews.com/ஜனாதிபதியின்-பொது-மன்னி-5/
  • இராமேஸ்வரம் அக்னித் தீர்த்தக் கரையில் மாவீரர் நாள் நினைவுகூரல்! மாவீரர் நாளான இன்று தமிழகத்தின் இராமேஸ்வரம் அக்னித் தீர்த்தக் கடல் கரையில் மெழுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சியினர் ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில் பெருந்திரளானோர் கலந்துகொண்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர். இந்திய நேரப்படி, இரவு ஏழு மணியளவில் பாடல் இசைக்கப்பட்டு கண்ணீர் மல்க மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இராமநாதபுரம் மாவட்ட நாம் தமிழர் கட்சி மாவட்டச் செயலாளர் கண் இளங்கோ இந்நிகழ்வை முன்னெடுத்தார். இந்த நினைவுகூரலில், தமிழகத்தின் இராமநாதபுரம், திருப்புல்லாணி, திருவாடனை, முதுகுளத்தூர், கடலாடி, ஆர்.எஸ்.மங்கலம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இதேவேளை, விடுதலைப் போராட்டத்தில் உயிர்த் தியாகம் செய்த மாவீரர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நாம் தமிழர் கட்சியினர் தமிழகம் முழுவதிலும் உள்ள பல்வேறு பகுதிகளில் அஞ்சலி நிகழ்வை நடத்தியுள்ளனர். http://athavannews.com/இராமேஸ்வரம்-அக்னித்-தீர்/
  • ஈரானிய உயர்மட்ட அணுசக்தி விஞ்ஞானி கொல்லப்பட்டார்!   ஈரானிய உயர்மட்ட அணுசக்தி விஞ்ஞானி மொஹ்சென் ஃபக்ரிசாதே (Mohsen Fakhrizadeh) கொல்லப்பட்டுள்ளார் என ஈரான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கிழக்கு தெஹ்ரானின் புறநகர்ப் பகுதியான அப்சார்ட்டில் அவரது வாகனத்தில் வைத்து அவர் இன்று பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் அதிகாரிகள் ஃபக்ரிசாதேவின் மரணத்தை உறுதிப்படுத்தியுள்ளதுடனர் தாக்குதல் நடத்தியவர்கள் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். குறித்த ஈரானிய விஞ்ஞானி பாதுகாப்பு அமைச்சின் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு அமைப்பின் தலைவராக தற்போது பணியாற்றியுள்ளார். இதேவேளை, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு செய்தியாளர் மாநாடொன்றில் குறித்த ஈரான் விஞ்ஞானியின் பெயரை நினைவில் கொள்ளவேண்டும் என தெரிவித்திருந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. அத்துடன், கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஈரானிய அணு விஞ்ஞானிகளைக் குறிவைத்து தொடர்ச்சியான கொலைகளை இஸ்ரேல் மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படுகிறது. இந்நிலையில், இந்தக் கொலை குறித்தும் இஸ்ரேல் மீது சந்தேகம் எழுந்துள்ளதுடன் விஞ்ஞானியின் கொலை குறித்து கருத்துக்கூற இஸ்ரேல் மறுத்துள்ளது. http://athavannews.com/ஈரானிய-உயர்மட்ட-அணுசக்தி/
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.