• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
ராசவன்னியன்

அதிமுக அமைப்பு செயலாளராக நடிகர் செந்தில் நியமனம்..கோகுல இந்திரா நீக்கம்!

Recommended Posts

அதிமுக அமைப்பு செயலாளராக நடிகர் செந்தில் நியமனம்.. கோகுல இந்திரா நீக்கம்: தினகரன் அதிரடி அறிவிப்பு!

சென்னை: அதிமுக அமைப்புச் செயலாளர் பொறுப்பில் இருந்து கோகுல இந்திராவை நீக்கிவிட்டு நடிகர் செந்திலை அந்த பொறுப்பிற்கு டிடிவி. தினகரன் நியமித்துள்ளார். அதிமுக அணிகள் ஒருங்கிணைந்து செயல்படத் தொடங்கியது முதல் அதிமுகவில் பல்வேறு நிர்வாகிகள் மாற்றத்தை அதிமுக அம்மா அணியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி . தினகரன் வெளியிட்டு வருகிறார். அமைச்சர்கள் காமராஜ், எம்.ஆர். விஜயபாஸ்கர், ராஜ்யசபா எம்பி வைத்திலிங்கம் உள்ளிட்டோரை கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கி அவர்களுக்குப் பதிலாக புதிய நிர்வாகிகளை தினகரன் வெளியிட்டார். இந்நிலையில் இன்று அதிரடியான அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். அதிமுக அமைப்பு செயலாளர் பொறுப்பிலிருந்து கோகுல இந்திரா நீக்கம் செய்யப்பட்டு அந்த பொறுப்பிற்கு நடிகர் செந்தில் நியமிக்கப்பட்டுள்ளார்.

26-1503743419-dinakaran64.jpg

3 மா.செக்கள் மாற்றம்

இதே போன்று அரியலூர் மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து தாமரை எஸ்.ராஜேந்திரன் நீக்கப்பட்டு பெ.முத்தையன் நியமனம் நியமிக்கப்பட்டுள்ளார். விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து குமரகுரு எம்எல்ஏ விடுவிக்கப்பட்டு முன்னாள் எம்எல்ஏ ஞானமூர்த்தியும், சிவகங்கை மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருக்கும் செந்தில்நாதன் விடுவிக்கப்பட்டு உமாதேவன் புதிய செயலாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார்.

பல நிர்வாகிகள் மாற்றம்

அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் பொறுப்பில் இருந்து குமார் எம்பி, அதிமுக மகளிர் அணி இணை செயலாளர் பொறுப்பில் இருந்து கீர்த்திகா முனியசாமி, அதிமுக ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் பொறுப்பில் இருந்து எம்எஸ்.ஆர். ராஜவர்மன் உள்ளிட்டோர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் மதுரை அவனியாபுரம் அதிமுக இலக்கிய அணி இணை செயலாளர் பொறுப்பில் இருந்து ராமலிங்கம் ஜோதியும் நீக்கப்பட்டுள்ளார்.

ஆதரவாளர்களுக்கு பொறுப்பு

கட்சியின் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளவர்களுடன் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்று தினகரன் உத்தரவிட்டுள்ளார். மேலும் புதிய நிர்வாகிகள் பட்டியலையும் அவர் வெளியிட்டுள்ளார். அதில் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச்செயலாளர் பொறுப்பிற்கு கோனேஸ்வரனும், ஜெயலலிதா பேரவைக்கு இணைச் செயலாளர்களாக எஸ்.ஏ.மணிகண்டராஜா, ஜெயராஜ் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எம்ஜிஆர், ஜெ. பேரவையிலும் மாற்றம்

இதே போன்று எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர்களாகக மதுரை புறநகர் மாவட்டத்தை சேர்ந்த ராமலிங்கமும், சங்கர், இரவுசேரி முரகன் உள்ளிட்டோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். துணைச் செயலாளராக தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்த பால மணிமார்பனும் நியமிக்கப்பட்டுள்ளார்.

வளர்மதிக்கு பொறுப்பு

அதிமுக மகளிரணி இணைச் செயலாளர் பொறுப்பிற்கு முன்னாள் அமைச்சர் வளர்மதி நியமிக்கப்பட்டுள்ளார். அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசரை செயலாளராக கே.சி.விஜயும் அறிவிக்கப்பட்டுள்ளார்.

தட்ஸ்தமிழ்

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this  

  • Topics

  • Posts

    • ஊரடங்கு தொடர்பான அறிவிப்பு வெளியானது         by : Jeyachandran Vithushan 19 மாவட்டங்களில் இன்று (புதன்கிழமை) காலை தளர்த்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு மதியம் 2 மணிக்கு அமுலாகும் என்றும் இது எதிர்வரும் திங்கட்கிழமை காலை 06 மணிக்கே மீண்டும் தளர்த்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இருப்பினும் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கு மறு அறிவிப்பு வரும்வரை ஊரடங்கு தொடரும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்தியாவசிய தேவைகள் இன்றி மாவட்டங்களுக்கு இடையே பயணிப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது http://athavannews.com/ஊரடங்கு-தொடர்பான-அறிவிப்/
    • வடக்கில் தனிமைப்படுத்தலில் உள்ள 346 பேரும் சில நாட்களில் விடுவிக்கப்படுவர்- வைத்தியர் கேதீஸ்வரன்         by : Litharsan கொரோனோ தொற்று சந்தேகத்தில் வடக்கு மாகாணம் முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 346 பேருக்கும் தனிமைப்படுத்தல் காலம் முடிவடையும் வரையில் தொற்று இணங்காணப்படாது விட்டால் அவர்கள் வரும் 6ஆம் திகதி விடுவிக்கப்படுவார்கள் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இது குறித்து நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை அவர் கூறுகையில், “உலகை உலுக்கி வருகின்ற கொரோனோ தொற்று இலங்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இதற்கமைய யாழ். மாவட்டத்திலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகல் பலரும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். இதற்கமைய யாழ். அரியாலையில் இடம்பெற்ற சுவிஸ் போதகரின் ஆராதனையில் கலந்துகொண்டவர்கள் உட்பட யாழ். மாவட்டத்தில் 319 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதேபோன்று கிளிநொச்சி, மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ள 346 பேருக்கும் இதுவரை கொரோனோ தொற்று இனங்காணப்படவில்லை. ஆனாலும் தனிமைப்படுத்தும் காலம் முடிவடையும் வரை அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பார்கள். ஆகவே அந்தக் காலத்திற்குள் அவர்களுக்கு தொற்று ஏதும் காணப்படாதவிடத்து எதிர்வரும் 6 ஆம் திகதி அவர்கள் விடுவிக்கப்படுவார்கள்” என்றார். http://athavannews.com/வடக்கில்-தனிமைப்படுத்தல/
    • ஜனாதிபதியின் பொது மன்னிப்பு: யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் கடும் கண்டனம்!        by : Litharsan மிருசுவிலில் எட்டுத் தமிழர்கள் படுகொலைசெய்யப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவச் சிப்பாய்க்கு ஜனாதிபதியால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டமைக்கு யாழ். பல்கலைக்கழக மாணவ ஒன்றியம் வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது. இது குறித்து மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில், “கடந்த 2000ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் திகதி மூன்று சிறுவர்கள் உட்பட எட்டுப் பேரை வெட்டியும் சுட்டும் படுகொலை செய்த கஜபா அணியைச் சேர்ந்த சுனில் ரத்னநாயக்க என்னும் இராணுவச் சிப்பாய் அண்மையில் ஸ்ரீலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்யப்பட்டார். இவர் இந்தக் குற்றத்துக்காக 2015ஆம் ஆண்டு மூன்று நீதிபதிகளைக் கொண்ட நீதிமன்ற அமையத்தினால் குற்றவாளியாக இனங்காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டவர். மேலும் மேல்முறையீட்டின்போது ஐந்து பேர்கொண்ட உயர்நீதிமன்ற அமர்வினால் குற்றவாளியாகக் காணப்பட்டு மரண தண்டனை உறுதிப்படுத்தப்பட்டவர். இவருக்கு வழங்கப்பட்ட இந்தத் தண்டனை இலங்கை நீதித்துறையைப் பொறுத்தமட்டில் புறநடையான ஒன்றாகும். ஏனெனில் தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் குற்றங்கள் இலங்கையில் சாதாரணமாக தண்டனை பெறாத குற்றங்களாகவே காணப்படுகின்றன. ஆகவே புறநடையாக வழங்கப்பட்ட இத்தீர்ப்பும் ஜனாதிபதியினால் இல்லாமல் ஆக்கப்பட்டு இருப்பது இலங்கையில் தமிழருக்கு எதிரான குற்றங்களுக்கு ஒரு போதும் நீதி வழங்கப்படமாட்டாது என்பதை மீளவும் உறுதிப்படுத்துகிறது. அனைத்துலகும் கொரோனா வைரஸ் தாக்கத்தின் அச்சத்தில் உறைந்திருக்கும் சூழ்நிலையைப் பயன்படுத்தி சத்தமில்லாமல் மேற்கொள்ளப்பட்ட இந்த விடுவிப்பு நடவடிக்கையானது எத்தகைய ஒரு அவலமான சூழ்நிலையிலும் சிங்கள பௌத்த பேரினவாதம் தமிழ் மக்களுக்கு எதிரான தனது கருத்து நிலையிலிருந்து ஒரு போதும் விலகப் போவதில்லை என்பதை மிகத்தௌிவாக உணர்த்துகிறது. மக்களின் பாதுகாப்பற்ற அவலமான துன்பமான ஒரு சூழ்நிலையை தனது அரசியல் இலாபத்துக்காகவும் சிங்கள பௌத்த மேலாண்மையை இந்நாட்டில் நிலை நிறுத்துவதற்காகவும் பயன்படுத்திய இந்த இழிசெயல் தமிழ் மக்களாகிய எங்களை மிகுந்த விசனத்துக்கும் கோபத்துக்கும் உள்ளாக்கியுள்ளது. இந்த அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்பில் இருந்து ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை என்பதை இந்நிகழ்வு துல்லியமாக வெளிப்படுத்துகிறது. மேலும் இந்நடவடிக்கை தமிழ் மக்களுக்கான நீதி ஒரு போதும் உள்நாட்டில் கிட்டாது என்கின்ற எமது நிலைப்பாட்டையும் மீள உறுதி செய்கிறது. ஆகவே இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி சர்வதேசத்தின் கரங்களிலேயே இருக்கிறது என்பதை நாங்கள் மீளவும் வலியுறுத்த விரும்புகிறோம். தமிழ் மக்கள் நீதி பெறுவதற்கான ஒரே வழி சர்வதேச குற்றவியல் பொறிமுறைகளே என்பதை நாங்கள் உறுதியோடு வலியுறுத்துகிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 0 Shares Facebook Twitter   http://athavannews.com/ஜனாதிபதியின்-பொது-மன்னி-3/
    • செல்வமகள் திரைப்படப் பாடல்கள் இனிமையானவை. “அவன் நினைத்தானா இது நடக்கும் என்று” என்ற பாடலும் எனக்குப் பிடித்தமான பாடல். குயிலாக நான் இருந்தென்ன குரலாக நீ வரவேண்டும். பாடலை துள்ளல் பாடல்களோடு சேர்க்கலாம்  இந்தப் பாடலில் சுசிலா அம்மாவின் குரல் குயிலாகவே ஒலிக்கும்.   இலங்கை தமில் வர்த்தக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தை நினைவூட்டுகிறது இந்தப் பாடல். புலம் பெயர்ந்து வந்த போது ஜபிசி யும் இதை பிறந்தநாள் நிகழ்ச்சியில் டைட்டில் பாடலாக ஒலிபரப்பியது