Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

?கல்லறைகளைத் தின்னும் பேய்கள்!!!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

20914708_10155051362748002_3927579281587

 

கல்லறைகளைத் தின்னும்
பேய்கள் அல்ல நாங்கள்!
செத்தவன் மேல் வன்மம்
தீர்க்கும் நாய்கள் அல்லவே நாங்கள்!
கல்லறைகளை கிண்டும்
பன்றிகள் அல்லவே நாங்கள்!

கற்பை தின்றதும்...
கழுத்தை வெட்டியதும்....
சுட்டுக்கொன்றதும்....
குழந்தையை பிய்த்து எறிந்ததும்...
ஆசுப்பத்திரியில் அடிச்சுக்கொன்றதும்..
"புள்டோசரால்" ஏத்திக்கொண்டதும்...

நீங்கள் மறந்திருப்பியள்
நாங்கள் மறக்கவில்லை!

அடிச்ச அடியின் தழும்புகள் மாறவில்லை.
வலிச்ச வலிகளும் மறக்கவும் முடியவில்லை!

நாங்கள் கல்லறை தின்னும் பேய்கள் அல்ல!
கல்லறைகள் மீது போர்தொடுக்கும்
மோடையர்களும் அல்லர்!

உங்கள் கல்லறைகள் எங்கள் மண்ணில் பத்திரமாகவே இருந்தது!
இனியும் இருக்கும்!

தமிழனின் பண்பு அப்படி!
"அவன்" வளர்த்த வளர்ப்பு அப்படி!

முள்ளிவாய்க்காலில் உங்களின் "நெய்வாசம்" வந்தது!

எங்களின் முதுகில குத்தியது உங்களின் "வக்கிரம்"!
நீங்கள் செய்தது துரோகத்தின் "உக்கிரம்"!

எங்கள் கல்லறைகளைத் திண்டவர்;
உங்கள் கல்லறையை துடைக்கிறார்.
நீங்கள் செய்த உதவிக்காய்
வாலை ஆட்டுறார்!

யாழ்ப்பாணம் என்பது வீரத்தின் "விளைநிலம்"!
வடிவாப்பார்...
நீங்கள் மீண்டுமொருமுறை குனிந்து நிற்பதே;
அந்த மண்ணின் "மகத்துவம்"!

நல்லூரின் வீதியில் பார்த்திபன்
இப்பவும் பசியோடுதான் இருக்கிறான்.

காந்திகூட அவனின் தியாகத்துக்கு கீழதான்!

கனதூரம் இல்லை...
வந்தனியள் "அவனின்" காலிலும் விழுந்துவிட்டுப்போங்கள்!
அப்பதான் காந்தியின் ஆத்மா சாந்தியாகும்!

#தமிழ்ப்பொடியன்

FB

 

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.