Jump to content

மண்டைதீவில் படகு விபத்து – 6 மாணவர்கள் உயிரிழப்பு!!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அங்கு அன்றையது போல் இன்றைய இளைஞர்/சிறுவர்கள் இன்றில்லை.நீங்கள் கூறும்/சொல்ல நினைக்கும் அனைத்து விடயங்களுக்கும் இலங்கை அல்லது வடபகுதியில் சாத்தியப்பட நீண்ட காலங்கள் எடுக்குமென நினக்கின்றேன். ஏனென்றால் நாடும் அரசியலும் அந்தமாதிரி.

இனிவரும்  சமுதாயமும் அனுபவங்களும் உலகபரிமாற்றங்களும் நிச்சயம் புதியதொரு உலகத்தை உருவாக்குமென நம்புகின்றேன்.


இங்கிலாந்தில் அடிக்கடி எம்மவரின்  கடல்நீச்சல் மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இங்கிலாந்தில் இல்லாத பாதுகாப்பா? கொடுக்காத எச்சரிக்கைகளா? குப்பை மலிவில் விற்காத பாதுகாப்பு அங்கிகளா? எது இல்லை? இத்தனை வசதிகள் இருந்தும்!!!!!!

எம்மவரின் அநியாயச்சாவுக்கு ஐரோப்பாவில் என்ன குறை?


எம்மவரில் ஒரு பழக்கம் மது அருந்திவிட்டு நீந்துவது? நீந்தத்தெரியாமல் கடல் , ஆறுகளில் நீந்தி/இறங்கி விளையாடுவது?

வெளிநாடுகளில் வாழும் எம்மவரிடம் ஒரு குட்டித்தலைக்கனம் உண்டு.அது என்னவெனில் எம் நாடு நான்கு பக்கமும் கடலால் சூழ்ந்த நாடு.....கடல் கூப்பிடும் தூரத்தில்......ஆனால் நீச்சல் அனுபவமேயிருக்காது. வெள்ளையளும் ஓ...நீங்கள் சிறிலங்காவிலையிருந்து வந்திருக்கின்றீர்கள். அழகான நாடு.கடல்...வெள்ளைமணல்...நல்ல வெய்யில்.....சிறிலங்கனுக்கு நன்றாக நீந்தத்தெரியும் என நினைத்து பப்பாவிலும் ஏற்றுவது வழமை. ஆனால் தனக்கு துண்டற நீந்தத்தெரியாது எண்டது வெள்ளையின் புளுகலை கேட்டவருக்கு மட்டும்தான் தெரியும்.


 கடலோ அல்லது ஆறு குளங்களின் நீர்சுழற்கிகள் கண்ணுக்கு தெரியாதவை.இவையெல்லாம் நீச்சல் பற்றிய வகுப்புகளுக்கு சென்றால் மட்டுமே படிக்க அல்லது அறிந்து கொள்ளலாம். எனவே பள்ளியிலும் நீச்சல்பாடம் முக்கியம்.

நீச்சல்  உடலை வலுவாக வைத்திருக்கவும் சுகாதார ரீதியிலும் சிறந்தது என பலரும் தெரிந்தவிடயம்.

அண்மையில் கனடாவில் கூட ஒரு இளைஞன் ஆற்றோடு அடித்து செல்லப்பட்ட சம்பவம் பல விடயங்களை சொல்லுகின்றது. எவ்வளவுதான் நீச்சல் தெரிந்தாலும்......கடல் அலை , வேகமாக ஓடும் ஆறு,  சுழி இவற்றின் முன் எதுவுமே செல்லாது.

விபத்தும் மரணமும் எங்கும் எதிலும் நடக்கும்.

அது முழங்கால் உயர தண்ணியிலும் நடக்கும்.

சிவனேயென்று வீதியில் செல்லும் போதும் நடக்கும்.

படுத்திருக்கும் படுக்கையிலும் நடக்கும்.


சம்பவத்தில் அகால மரணமைடைந்த  அந்த இளைஞர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களும் அஞ்சலிகளும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான கருத்தை DR.கு.சாமியிடம் இருந்து  கேட்டு   கன  நாளாச்சு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, போல் said:

முன்பு நாங்கள் நீச்சல் பழகுவதில் இருந்த ஆர்வம் இப்போதைய இளைஞர்களிடம் இல்லை

நீச்சல் பழகுமுன் தண்ணியடிக்க பழகி விடும்கள் பிறகெப்படி நீச்சல் வரும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விளையாட்டுத்துறையை ஊக்குவிப்பது பற்றி பேசிக் கொண்ட போதும் எனக்கு அறவே அந்தப் பகுதியை பேசவே விருப்பின்றி இருந்ததிற்கு காரணம்....இப்படியான இறப்புக்களை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்பதே..இம்மாணவர்களின் இறப்பை வைத்து பலரும் பலமாதிரி பேசிக் கொள்கிறார்கள்..எது எப்படியிருப்பினும்:
சம்பவத்தில் அகால மரணமைடைந்த  அந்த இளைஞர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களும் அஞ்சலிகளும்.

Link to comment
Share on other sites

3 hours ago, குமாரசாமி said:

அங்கு அன்றையது போல் இன்றைய இளைஞர்/சிறுவர்கள் இன்றில்லை.நீங்கள் கூறும்/சொல்ல நினைக்கும் அனைத்து விடயங்களுக்கும் இலங்கை அல்லது வடபகுதியில் சாத்தியப்பட நீண்ட காலங்கள் எடுக்குமென நினக்கின்றேன். ஏனென்றால் நாடும் அரசியலும் அந்தமாதிரி.

இனிவரும்  சமுதாயமும் அனுபவங்களும் உலகபரிமாற்றங்களும் நிச்சயம் புதியதொரு உலகத்தை உருவாக்குமென நம்புகின்றேன்.


இங்கிலாந்தில் அடிக்கடி எம்மவரின்  கடல்நீச்சல் மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இங்கிலாந்தில் இல்லாத பாதுகாப்பா? கொடுக்காத எச்சரிக்கைகளா? குப்பை மலிவில் விற்காத பாதுகாப்பு அங்கிகளா? எது இல்லை? இத்தனை வசதிகள் இருந்தும்!!!!!!

எம்மவரின் அநியாயச்சாவுக்கு ஐரோப்பாவில் என்ன குறை?


எம்மவரில் ஒரு பழக்கம் மது அருந்திவிட்டு நீந்துவது? நீந்தத்தெரியாமல் கடல் , ஆறுகளில் நீந்தி/இறங்கி விளையாடுவது?

வெளிநாடுகளில் வாழும் எம்மவரிடம் ஒரு குட்டித்தலைக்கனம் உண்டு.அது என்னவெனில் எம் நாடு நான்கு பக்கமும் கடலால் சூழ்ந்த நாடு.....கடல் கூப்பிடும் தூரத்தில்......ஆனால் நீச்சல் அனுபவமேயிருக்காது. வெள்ளையளும் ஓ...நீங்கள் சிறிலங்காவிலையிருந்து வந்திருக்கின்றீர்கள். அழகான நாடு.கடல்...வெள்ளைமணல்...நல்ல வெய்யில்.....சிறிலங்கனுக்கு நன்றாக நீந்தத்தெரியும் என நினைத்து பப்பாவிலும் ஏற்றுவது வழமை. ஆனால் தனக்கு துண்டற நீந்தத்தெரியாது எண்டது வெள்ளையின் புளுகலை கேட்டவருக்கு மட்டும்தான் தெரியும்.


 கடலோ அல்லது ஆறு குளங்களின் நீர்சுழற்கிகள் கண்ணுக்கு தெரியாதவை.இவையெல்லாம் நீச்சல் பற்றிய வகுப்புகளுக்கு சென்றால் மட்டுமே படிக்க அல்லது அறிந்து கொள்ளலாம். எனவே பள்ளியிலும் நீச்சல்பாடம் முக்கியம்.

நீச்சல்  உடலை வலுவாக வைத்திருக்கவும் சுகாதார ரீதியிலும் சிறந்தது என பலரும் தெரிந்தவிடயம்.

அண்மையில் கனடாவில் கூட ஒரு இளைஞன் ஆற்றோடு அடித்து செல்லப்பட்ட சம்பவம் பல விடயங்களை சொல்லுகின்றது. எவ்வளவுதான் நீச்சல் தெரிந்தாலும்......கடல் அலை , வேகமாக ஓடும் ஆறு,  சுழி இவற்றின் முன் எதுவுமே செல்லாது.

விபத்தும் மரணமும் எங்கும் எதிலும் நடக்கும்.

அது முழங்கால் உயர தண்ணியிலும் நடக்கும்.

சிவனேயென்று வீதியில் செல்லும் போதும் நடக்கும்.

படுத்திருக்கும் படுக்கையிலும் நடக்கும்.


சம்பவத்தில் அகால மரணமைடைந்த  அந்த இளைஞர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களும் அஞ்சலிகளும்.

விபத்தில் மரணித்த அனைவருக்கும் இரங்கல்கள்.

எம்மவர்களிடம் இருக்கும் பாதுகாப்பான பழக்கவழக்க குறைபாட்டை பொருத்தமான இடத்தில் சுட்டிக்காட்டிய இக்கருத்துக்கு நன்றிகள்.

 

Link to comment
Share on other sites

 நான்குபக்கமும் கடலால் சூழப்பட்ட நாட்டில்  ஒருவர் நீச்சல் கற்க வேண்டுமானால் பெற்றோருக்கும் ஆசியருக்கும் தெரியாமல் ரிஸ்க் எடுத்தாலே சாத்தியம். 

சிறு வயதிலேயே நீச்சல் பயிற்சி  பாடசாலையில் அறிமுகப்படுத்தப்படுவதன்  மூலமே இப்படிப்பட்ட அநியாய சாவுகளை தவிர்க்கலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG_0909.jpg

நேற்று.... மீண்டும் ஒரு சோக நிகழ்வு, யாழ்ப்பாணத்தில் நடந்து முடிந்துள்ளது.
உயர்கல்வி படிக்கும் மாணவர்கள், தமது பிரதான சோதனைகளை  எழுதி   முடித்த  மன  அழுத்தத்தையும்,
நண்பனின் பிறந்த நாளையும்  ஒன்று  சேர கொண்டாடுவதற்காக, கடற்கரைக்கு சென்ற போது....
அது அவர்களின் இறந்த நாளாக இருக்கும் என்று, அந்த மாணவர்களோ... பெற்றோர்களோ... யாரும் 
நினைத்தும் பார்த்திருக்க மாட்டார்கள்.  

அவர்கள் அந்தக்  கடலுக்கு  சென்ற இடம், சுற்றுலா பகுதிக்காக ஒதுக்கப் பட்ட இடம் போல் உள்ளது.
இவர்கள் போன நேரம் அந்த இடத்துக்கு பொறுப்பானவர்கள் எவரும் இல்லை.
ஒரு படகு மட்டும், கயிற்றால் கட்டப்  பட்டு இருந்தது.  பொறுப்பானவர்... மதிய  உணவிற்காகவோ,
வேறு அலுவலாகவோ....  அந்த இடத்தை விட்டு, சென்று இருக்கலாம்.
இள ரத்தம்.... இவ்வளவு மினக்கெட்டு வந்தனாங்கள், படகு ஓடாமல் போவது சரிவராது என்று விட்டு,
கயிற்றால்... கட்டியிருந்த படகை அவிட்டு, கடலில்... பயணிக்க,  இவ்வளவு அனர்த்தமும் நடந்து விட்டது. 

Bildergebnis für boat heben von wasser

 

Bildergebnis für boat heben von wasser

ஒரு சைக்கிளை  கூட சங்கிலியால், பூட்டி  வைத்து விட்டுப் போகும், இடத்தில்.....
படகை.... கயிற்றால் கட்டி விட்டு போவது, அதுகும் சுற்றுலா பிரதேசத்தில்,   பொறுப்பற்ற செயல். tw_warning:
அல்லது அந்தப் படகை மேலே கொண்டுவந்து... மற்றவர்கள் தொடாத  இடத்தில்  வைத்து விட்டு அந்த இடத்தை விட்டு, பொறுப்பானவர் சென்றிருக்க வேண்டும். 

இனிமேலும்... இப்படி நடக்காமல், படகை மேலே கொண்டு வரும் பொறி முறைக்கு, அதிக செலவு பிடிக்காது. உள்ளூர் பொறியியலாளர்களே  அதனை சிறந்த முறையில் வடிவமைத்து தருவார்கள். 

ஒரு உயிர்... அந்தக் குடும்பத்துக்கு,  எவ்வளவு முக்கியம் என்பதனை.... 
அரச ஊழியம் செய்யும்... சம்பந்தப் பட்டவர்கள்  உணர்ந்தால்.... இப்படியான  உயிரிழப்புகளை தவிர்க்கலாம்.

அகால மரணம் அடைந்த மாணவர்களுக்கும், அவரின் பெற்றோர்களுக்கும், ஆழ்ந்த இரங்கல்கள்.

Link to comment
Share on other sites

யாழ் படகு விபத்து : மாணவர்கள் 6 பேரும் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியாகியது

 

 

யாழ்ப்பாணம் - மண்டைத்தீவு – சிறுத்தீவு கடற்பரப்பில் படகு கவிழ்ந்ததில் கடலில் மூழ்கி உயிரிழந்த ஆறு மாணவர்களின் மரணத்திற்கான காரணம் யாழ்.பொலிஸாரின் ஆரம்ப கட்டவிசாரணைகளில் இருந்து வெளியாகியுள்ளன.

jaffna-boat-mandaithivu.jpg

பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருவதாவது,

நடைபெற்றுவரும் க.பொ.த. உயர்தர பரீட்சைக்கு தோற்றிய  7 மாணவர்கள்,  அதில் ஒரு மாணவனின் பிறந்த நாளை கொண்டாடும் முகமாக குறித்த கடற்கரைப்பகுதியில் ஒன்று கூடியுள்ளனர்.

குறித்த சமயம் அம் மாணவர்கள் மது அருந்தியிருந்ததால் அதிக மதுமயக்கத்தில் இருந்தனர்.  இந்நிலையில், மாணவர்கள் 7 பேரும் கடற்கரைப் பகுதியில் இருந்த படகொன்றையெடுத்து கடலுக்கள் சென்றுள்ளனர். அவர்கள் பயணித்த படகு பழுதடைந்த நிலையில் காணப்பட்டதுடன் அது பயணத்திற்கு ஏற்ற தரத்தைக் கொண்டிராத வள்ளத்திலேயே மாணவர்கள் ஏறி கடலுக்குள் சென்றுள்ளனர்.

இந்நிலையில் மணவர்கள்  6 பேரின் மரணத்திற்கு,  அவர்கள் பயணித்த படகு உரிய தரத்துடன் இல்லாமையும், குறித்த மாணவர்கள் மதுபோதையில் இருந்தமையுமே காரணம் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

 

இதேவேளை, படகில் ஏறி கடலில் பயணித்த 7 மாணவர்களில் ஒரு மாணவர் மாத்திரம் நீந்திக் கரை சேர்ந்துள்ளார். ஏனைய 6 மாணவர்களும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த மாணவர்கள் யாழ்ப்பாணம் கொக்குவில், நல்லூர், உரும்பிராய் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர். அவர்களின் பெயர் விபரங்கள் வருமாறு,

உரும்பிராயைச் சேரந்த 18 வயதுடைய நந்தன் ரஜீவன், உரும்பிராயைச் சேர்ந்த 17 வயதுடைய நாகசிலோஜன் சின்னதம்பி, கொக்குவிலைச் சேர்ந்த 20 வயதுடைய தனுரதன், நல்லூரைச் சேர்ந்த 20 வயதுடைய பிரவீன், உரும்பிராயைச் சேர்ந்த 17 வயதுடைய தினேஷ், சண்டிலிப்பாயைச்  சேர்ந்த 18 வயதுடைய தனுசன் ஆகியோரே உயிரிழந்தவர்களாவர்.

இச் சம்பவம் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/23721

Link to comment
Share on other sites

யாழ் கடலில் மாணவர்கள் மூழ்கியமைக்கு இதுவே காரணங்கள்

 
யாழ் கடலில் மாணவர்கள் மூழ்கியமைக்கு இதுவே காரணங்கள்

யாழ். கடலேரியில் மண்டைதீவை அண்டிய சிறுத்தீவு பகுதியில் 6 பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி பலியானமைக்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது.

படகு கடலில் மூழ்கிய போது ஏழு மாணவர்களும் மதுபோதையில் இருந்ததாகவும் படகு பாதுகாப்பு தரங்களைக் கொண்டிருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர் தரப் பரீட்சைகளை நிறைவுசெய்த பின்னர் பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்காக படகுப் பயணமொன்றை மேற்கொண்ட போதே இந்த விபத்து ஏற்பட்டிருந்தது.

கடலில் மூழ்கிய ஏழு மாணவர்களில் ஆறு பேர் உயிரிழந்ததுடன், ஒருவர் நீந்திக் கரைசேர்ந்துள்ளார்.

நீந்திக் கரைசேர்ந்த மாணவன் வழங்கிய தகவலின் அடிப்படையில்இ ஏனைய 6 மாணவர்களும் சடலங்களாக மீட்கப்பட்டனர்.

கரையொதுங்கிய மாணவன் யாழ்ப்பாணம் குருநகர் மீனவர்களுக்கு தகவல் வழங்கியுள்ளார்.
அதனைத்தொடர்ந்து யாழ்ப்பாணம் குருநகர் மீனவர்களால் மண்டைதீவு கடற்படையினருக்கு தகவல் வழங்கப்பட்டது.

எனினும் சம்பவ இடத்திற்கு கடற்படையினர் வருகை தருவதற்கு முன்னதாகஇ யாழ்ப்பாணம் குருநகர் மீனவர்கள்இ மிகுந்த போராட்டத்தின் மத்தியில்இ பாதுகாப்பு அங்கிகள் இல்லாத நிலையில்இ 4 மாணவர்களை சடலங்களாக மீட்டனர்.

அதனைத்தொடர்ந்து ஏனைய இரு சடலங்களும் கடற்படையினரால் மீட்கப்பட்டது.

இதில் மூன்று மணி நேர தேடுதலின் பின்னர் ஆறாவது இளைஞனின் சடலம் மீட்கப்பட்டது.

யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரி மாணவர்களான சின்னத்தம்பி நாகசுலோசன்இ லிங்கநாதன் ரஜீவ் மற்றும் ஜெயசாந்த் தினேஸ், யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவன் தேவகுமார் தனுரதன், யாழ்ப்பாணம் பெரியபுலம் மகா வித்தியாலய மாணவன் கோணேஸ்வரன் பிரவீன் மற்றும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மாணவன் தனுஷன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

நண்பன் ஒருவரின் பிறந்த தினத்தை முன்னிட்டு, 18 மாணவர்கள் யாழ்ப்பாணம் மண்டைதீவு கடற்கரைக்கு சென்றதுடன், இதில் 7 பேர் பயணம் செய்த படகே விபத்திற்கு உள்ளாகியுள்ளது.

உயிரிழந்த ஆறு மாணவர்களினதும் சடலங்கள் யாழ் போதானா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

6 சடலங்களும் யாழ் போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்கு ஒப்படைக்கப்பட்டிருப்பதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கடற்படையினருடன் இணைந்து ஊர்காவற்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதனைத்தொடர்ந்து ஏனைய 12 பேரும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

பின்னர் உயிரிழந்த 6 பேரின் உறவினர்களிடமும் பொலிஸாரால் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டது.

இந்நிலையில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன், சம்பவ இடத்திற்கு சென்று நிலைமைகள் தொடர்பில் பொலிசாருடன் ஆராய்ந்தமை குறிப்பிடத்தக்கது.

https://news.ibctamil.com/ta/internal-affairs/Reasons-why-student-drowned-in-Jaffna

 

 

மாணவர்கள் அறுவர் கடலில் மூழ்கிச் சாவு

 
 
மாணவர்கள் அறுவர் கடலில் மூழ்கிச் சாவு
 

மண்­டை­தீவு, சிறுத்­தீ­வுக் கடற்­ப­ரப்­பில் நேற்றுப் படகு கவிழ்ந்ததில் ஆறு மாண­வர்­கள் பரி­தா­ப­க­ர­மாக உயி­ரி­ழந்­த­னர். பிறந்­த­நா­ளைக் கொண்­டா­டச் சென்­ற­வர்­களே இவ்­வாறு உயி­ரி­ழந்­துள்­ள­னர்.

பிறந்­த­நாள்
கொண்­டாட்­டம்

யாழ்ப்­பா­ணத்­தைச் சேர்ந்த மாண­வர்­கள் 18 பேர் நேற்று மதி­யம் மண்­டை­தீ­வுக் கடற்­க­ரைக்­குச் சென்­ற­னர். அவர்­க­ளில் இரு­வ­ரின் பிறந்­த­நாள் கொண்­டா­டவே அவர்­கள் திட்­ட­மிட்­டி­ருந்­த­னர்.
நண்­பர்­கள் மகிழ்ச்­சி­யாக பொழு­தைப் போக்­கி­யுள்­ள­னர். கடற்­க­ரை­யில் கட்­டப்­பட்­டி­ருந்த படகு ஒன்றை அவிழ்த்து எடுத்த அவர்­க­ளில் இரு­வர் அதில் கட­லில் பய­ணிக்க ஆரம்­பித்­த­னர். ஏனை­ய­வர்­க­ளில் ஐந்து பேர் பின்­னர் அதில் ஏறி­னர்.

படகு கவிழ்ந்­தது

அவர்­கள் பய­ணித்த படகு எதிர்­பா­ரா­த­வி­த­மா­கக் கவிழ்ந்­தது. ஏழு பேரும் கட­லில் மூழ்­கி­னர். ஆறு பேர் மூழ்­கிப் போக ஒரு­வர் மட்­டும் நீந்­திக் கரை­சேர்ந்து ஏனை­ய­வர்­க­ளுக்கு சம்­ப­வத்­தைக் கூறி­யுள்­ளார். கரை­யி­லி­ருந்த நண்­பர்­கள் அந்த வழியே பய­ணித்­த­வர்­க­ளின் உத­வி­யு­டன் கடற்­ப­டைக்­குத் தக­வல் தெரி­வித்­த­னர்.

ஊர் மக்­கள் உதவி

3-12.jpg

அதற்­கி­டையே ஊர்­மக்­கள் கட­லில் இறங்­கித் தேடத் தொடங்­கி­னர். ஒரு­வர் உயி­ருக்­குப் போரா­டிய நிலை­யில் மீட்­கப்­பட்டு உட­ன­டி­யாக யாழ். போதனா வைத்­தி­சா­லைக்­குக் கொண்டு செல்­லப்­பட்­டார். ஆனால் துர­திர்ஷ்ட­வ­ச­மாக அவர் சிறிது நேரத்­தில் உயி­ரி­ழந்­தார். கடற்­ப­டை­யி­ன­ரும் தேடு­த­லில் இணைந்து கொண்­ட­னர்.

தொடர் தேடு­தல்

தொடர்ந்து தேடு­தல் நடத்­தப்­பட்­டது. மூழ்­கி­ய­வர்­கள் ஒவ்­வொ­ரு­வ­ராக உயி­ரற்ற நிலை­யில் மீட்­கப்­பட்ட­ னர். நால்­வ­ரின் உடல்­கள் மீட்­கப்­பட்­டன. ஜெய­சாந்தி தினே­ஷின் உடல் நீண்ட தேடு­த­லின் பின்­னர் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. இவ­ருக்கே நேற்­றுப் பிறந்த நாளா­கும்.

உரும்­பி­ரா­யைச் சேர்ந்த சின்­னத்­தம்பி நாக­சி­லோ­ஜன் (வயது -–17), ஜெய­சாந்தி தினேஷ்(வயது–18), உரும்­பி­ராய் கிழக்­கைச் சேர்ந்த லிங்­க­நா­தன் ரஜீ­வன் (வயது-–19), சண்­டி­லிப்­பா­யைச் சேர்ந்த தேவ­கு­மார் தனு­சன் (வயது-–20), யாழ்ப்­பா­ணம் அத்­தி­ய­டி­யைச் சேர்ந்த கோணேஸ்­வ­ரன் பிர­வீன் (வயது-–20), கொக்­கு­வி­லைச் சேர்ந்த தனு­ர­தன் (வயது -– 20) ஆகி­யோரே உயி­ரி­ழந்­துள்­ள­னர்.

விசா­ரணை

நீந்­திக் கரை­சேர்ந்­த­வ­ரி­ட­மும், ஏனை­யோ­ரி­ட­மும் பொலி­ஸார் வாக்­கு­மூ­லங்­க­ளைப் பதிவு செய்­த­னர். இந்­தச் சம்­ப­வம் தொடர்­பான மேல­திக விசா­ர­ணை­க­ளை­யும் மேற்­கொண்­ட­னர். உயி­ரிழந்­த­வர்­களின் உடல்­கள் யாழ்.போதனா மருத்­து­வ­னைக்­குக் கொண்டு செல்­லப்­பட்­டன.

http://newuthayan.com/story/23717.html

Link to comment
Share on other sites

மாணவர்களின் உடல்கள் உறவினர்களிடம் கையளிப்பு

 
மாணவர்களின் உடல்கள் உறவினர்களிடம் கையளிப்பு
 

மண்டைதீவுக் கடலில் நேற்று உயிரிழந்த 6 மாணவர்களின் உடல்களும் இன்று உடற்கூற்றுச் சோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

மண்டைத்தீவு அருகே உள்ள கடற்பரப்பில் படகில் சென்ற மாணவர்கள் படகு கவிழ்ந்ததில் உயிரிழந்தனர்.

http://newuthayan.com/story/23828.html

Link to comment
Share on other sites

இதிலே தவறிழைத்தது முழுக்க முழுக்க மாணவர்களே. தவிர்க்கப்பட்டிருக்கக் கூடிய அநியாய இழப்புக்கள். பெற்றோர் தான் பாவம். கனவுகளுடன் பெத்தெடுத்து பொத்திப்பொத்தி பதினெட்டு வருஷம் வளர்த்து விட, தண்ணியடிச்சுப் போட்டு தெரியாத வேலையில் இறங்குவது எவ்வளவு முட்டாள் தனம். உயர்தரம் மட்டும் படித்த மாணவர்களுக்கு இந்த அடிப்படை அறிவு இல்லாமல் போனது எப்படி? யாழ் குடா நாட்டில் எப்பவாவது படகுகளை பூட்டி வைத்திருக்கிறார்களா? பருத்தித் துறை முதல் தொண்டமானாறு வரை எத்தனையோ நூற்றுக்கணக்கான படகுகள் ஆழம் குறைந்த கடல் பகுதிகளில் எதுவித பாதுகாப்புமின்றி நிறுத்தி வைத்திருப்பார்கள். யாழ்ப்பாண கடல் நீரேரிப் பகுதியிலும், குருநகர் இங்கு துறையில் கூட இதுதான் நிலை. யாரும் அவற்றினுள் ஏறுவதும் இல்லை அவற்றை தொடுவதும் இல்லை.

சிறுவயதிலேயே நீந்தப் பழகுவது நல்லது. யாழ் குடாவில் அந்த வசதிகளோ, முறையான பயிற்றுவிக்கும் நீச்சல் பயிற்றுநர்களோ இல்லை. சும்மா புத்தகப் பூச்சிகளை மட்டுமே உருவாக்காது பாடசாலை மட்டத்தில் நீச்சலைப் பழக்குவது நல்லது. யாழ் குடாநாட்டில் நான் அறிந்தவரை யாழ் மத்திய கல்லூரியில் மட்டுமே நீச்சல் தடாகம் உண்டு. அவர்கள் அதைக் கட்டி "வன்னியிலே பள்ளிக்கூடமே இல்லை இவங்களுக்கு சுவைமிங் பூல் தேவைப்படுது" எண்டு பலரிடம் பேச்சு வாங்கியது நாம் அறிந்ததே. மத்திய கல்லூரியும் அதைப் பாவிக்கிறார்களோ யாராவது விபரம் தெரிந்தவர்கள் தான் கூற வேண்டும்.

ஹாட்டலி பழைய மாணவர்களால் ஹாட்டலி மைதானத்தினுள்ளேயே, தற்போதைய விடுதிக்கு அண்மையில் நீச்சல் தடாகம் அமைக்கும் யோசனை ஒன்று வந்த போது அப்போதைய கல்லூரி நிர்வாகம் உட்பட யாருக்குமே அந்த யோசனை பிடிக்கவில்லை. எத்தனையோ கணனிகள் இருந்தும் கணனி கணனி என்பது மட்டுமே அவர்களுக்கு கேட்க தெரிந்தது.  அந்தக் கணணிகளயையும் உருப்படியா பாவிக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை.

நீச்சல் தெரிந்திருந்தால் இவர்கள் தப்பியிருப்பார்கள் என்று கூற முடியாது ஆனால் தப்பக்கூடிய சாத்தியமாவது அதிகரித்திருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிலருக்கு மக்களில் குறை சொல்லி.. அதிகாரிகளின் குற்றங்களையும்.. கவனயீனங்களையும்.. அசட்டைகளையும்.. வளர்ப்பதே வேலையாப் போச்சுது.

வளர்ந்த நாடுகள் எல்லாம்.. ஒரு சம்பவத்தை வைச்சு.. அது எதிர்காலத்தில் நடக்காமல் இருக்கச் சாத்தியமான நடவடிக்கைகளை எடுக்கும். அல்லது.. scenario வகையில் யோசிச்சு.. பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வதோடு.. மக்களுக்கு சரியான அறிவுறுத்தல்களை வழங்கும்.

ஆனால்.. எம்மவர்கள் என்ன தான் வளர்ந்த நாடுகளில் வந்து குடிபெயர்ந்திருந்தாலும்.. சோறும் கறியும்... புட்டும் தேங்காய்ப்பூவும்.. சாப்பிடுவது போலவே சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.

Image result for brighton beach coast guard

(கடற்கரையில் மக்களின் செயற்பாடுகளைக் கண்காணித்துக் கொண்டிருக்கும்.. உதவி.. முதலுதவி அணி.. பிரிட்டன்)

உலக நாடுகளில் பரந்து வாழும்.. தமிழ் ***** கூட்டம்.. அங்குள்ள நல்ல விடயங்களையாவது தெரிந்து கொண்டு அவற்றை ஊரில் நடைமுறைப்படுத்தினால்.. கூடிய அளவுக்கு எமது மக்களின் அநியாயச் சாவுகளைக் குறைக்கலாம்.

சொறீலங்கா சிங்கள அரச நிர்வாகக் கட்டமைப்பு.. இவற்றை தடுக்கக் கூடிய வினைத்திறனை கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. அதற்கு மக்கள் சாவு பற்றி அக்கறையும் இல்லை. குறிப்பாக தமிழ் மக்கள் அழிவது அதற்கு ஒரு பொருட்டான விடயமே அல்ல. 

எனவே தமிழ் மக்களை நிர்வகுக்கும்.. தமிழ் நிர்வாக அலகுகளான.. மாநகர சபைகள்.. நகர சபைகள்... மாகாண சபைகள் தான்.. இதில் கூடிய கவனம் செலுத்தி.. இப்படியான நிகழ்வுகளை தடுக்கக் கூடிய அனைத்துப் பாதுகாப்பு நடைமுறைகளையும் அமுல்படுத்த வேண்டும். 

அதுவரை மக்கள் இந்தக் கடற்பரப்புக்களை பாவிக்க தடை செய்ய வேண்டும்.

மேலும் மக்களுக்கு சரியான அறிவுறுத்தல்களும்.. கடலுக்குப் போகும் முன் சிறிய நேர முற்காப்புப் பயிற்சியும் வழங்க வேண்டும். 

எப்பவும்.. கண்காணிப்பு.. உதவி.. முதலுதவி அணி ஒன்று தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பது அவசியம். 

இவ்வாறு செய்யப்படின் இவ்வாறான இழப்புக்களை மிக இலகுவாகத் தடுக்கலாம். இது ஒன்றும் அசாத்தியமான விடயமே அல்ல. 

வளர்ந்த நாடுகளில் இருந்தான நல்ல விடயங்களை ஊரில் மக்களின் நலன் கருதி அமுலாக்குவது மிக அவசியம்.

பாதுகாப்பற்ற தொடரூந்து கடவைகளில்.. மக்களை எச்சரிக்கும்.. எச்சரிக்கை கருவிகளை கூட பொருத்தலாம். அவை வளர்ந்த நாடுகளில் பாவனையில் உள்ளன.

பல தடவைகள் இவை இங்கு எடுத்துச் சொல்லப்பட்டும்.. யாரும்.. அதனை கவனத்தில் எடுப்பதில்லை.  கடந்த 8 ஆண்டுகளாக அநியாய விபத்துக்களால்.. எமது மக்கள் அழிந்து வருகின்றனர். இது போர் தந்த இழப்புக்களுக்கு மேலதிகமாக நிகழ்ந்து அல்லது நிகழ்த்தப்பட்டு வருகிறது.. நாட்டை மக்களை நிர்வகிப்பவர்களின்.. அசட்டைத்தனங்களால். :rolleyes:

பொழுதுபோக்க கடலுக்குப் போகும்.. மக்கள் எல்லோருக்கும் நீச்சல் பழக்கி கடலுக்கு அனுப்பத் தீர்மானிப்பதிலும்.. கடற்கரைக்குப் போகும் மக்களை அறிவுறுத்தி.. கண்காணித்து வழிநடத்துவது.. கூடிய சாத்தியமானதும்... இப்படியான விடயங்களை தவிர்க்கக் கூடிய.. உடனடித் தீர்வுமாகும். 

சிந்திப்பதை உருப்படியாக சிந்திக்க கற்றுக் கொள்ள வேண்டியது எம்மவர்கள் செய்ய வேண்டிய முதல் வேலையாகும். படிப்பறிவும் பட்டறிவும் சரியாக சிந்திக்கப் பயன்படாவிட்டால்.. அவை இருந்தும் பயனில்லை. tw_anguished:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் உள்ள பல பாடசாலைகளில் நீச்சல் தடாக வசதிகள் உண்டு. பாடசாலை மட்டத்தில் இவை ஊக்குவிக்கப்பட வேண்டும். என்னுடைய மகள் 8 வயது, சிறுமி நீச்சலில் இதுவரை 15 வரையில் மெடல்கள் எடுத்து இருப்பாள்.  மேலும் இது கொழும்பில் ஓர் பிரபல சர்வதேச பாடசாலை என்பதனால் இதற்குறிய கட்டணங்கள் term fees ல் உள்ளடக்கப்பட்டிருக்கும். 

எம‌க்கு  சிறுவயதில் இத்தகையா வாய்பில்லை எனவே பக்கத்தில் இருக்கும் கடலிலேயே நீந்தி பழகினோம்.

போல் மேலே கூறியவாறு இப்பொழுது உள்ள இளம் சந்ததியிடம் இவைகளில் ஆர்வம் இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தவிர்த்திருக்கப்பட வேண்டிய உயிரிழப்புக்கள்
ஆழ்ந்த இரங்கல்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, tulpen said:

 நான்குபக்கமும் கடலால் சூழப்பட்ட நாட்டில்  ஒருவர் நீச்சல் கற்க வேண்டுமானால் பெற்றோருக்கும் ஆசியருக்கும் தெரியாமல் ரிஸ்க் எடுத்தாலே சாத்தியம். 

சிறு வயதிலேயே நீச்சல் பயிற்சி  பாடசாலையில் அறிமுகப்படுத்தப்படுவதன்  மூலமே இப்படிப்பட்ட அநியாய சாவுகளை தவிர்க்கலாம். 

நான் ஒருக்கால் சாவகச்சேரி சிவன்கோவில் குளத்திலை கூட்டுகளோடை போய் குளிச்சதுக்கு.. 

பள்ளிக்கூடத்திலை சிங்கிள் சாத்து.......வீட்டிலை டபுள் சாத்து :(

Link to comment
Share on other sites

அநியாயமாக உயிர் இழந்த அனைத்து மாணவர்களுக்கும் ஆழந்த அஞ்சலிகள்.

ஒரு காலத்தில் யாழ் மணிக்கூட்டுக் கோபுர அருகிலுள்ள குளத்தை நீச்சல் குளமாக்க முயற்சி எடுக்கப்பட்டது. அது நிறைவேறவில்லை.

Link to comment
Share on other sites

பெற்றோர் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளவேண்டும்; அமைச்சர் க.சர்வேஸ்வரன்!

 

பெற்றோர் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளவேண்டும்; அமைச்சர் க.சர்வேஸ்வரன்!

எமது பிள்ளைகள் தொடர்பில் பெற்றோர், பொறுப்புணர்வுடனும், எச்சரிக்கையுடனும் வழிகாட்டி அவர்களை வளர்க்கவேண்டும் என்று வடக்கு மாகாண கல்வி அமைச்சர், கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் வெளிப்படுத்தியுள்ளார். அத்துடன் பாதுகாப்பற்ற இத்தகைய கேளிக்கை நிகழ்வுகளில் ஈடுபடுவதை அனைத்து இளைஞர்களும் தவிர்க்கவேண்டும் என்றும் அவர் கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.

நேற்றைய தினம் பெரும் சோகத்தினை ஏற்படுத்திய யாழ் மண்டைதீவுக் கடலில் நிகழ்ந்த படகு விபத்து குறித்து வடக்கு மாகாண கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை ஒன்றிலேயே அவர் இந்த விடயத்தினைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவரது அறிக்கையினை இங்கே தருகின்றோம்,

தற்சமயம் க.பொ.த. உயர்தரப் பரீட்சை எழுதிக் கொண்டி ருக்கும் ஆறு மாணவர்கள் நேற்று மாலை மண்டைதீவு கடலில் மூழ்கி பரிதாபமாக மரணித்த பேரவலச் செய்தி அதிர்ச்சியையும் மிகுந்த மன வேதனையையும் அளிக்கின்றது. அதிகரித்துவரும் வீதி விபத்துக்கள், புகையிரதக் கடவை விபத்துககளைத் தடுப்பதற்கான அல்லது குறைப்பதற்கான முயற்சியில் நாம் ஈடுபட்டுக கொண்டிருக்கும் வேளையில் பாதுகாப்பற்ற படகுப் பயணத்தின் மூலம், ஆறு மாணவர்களை நாம் இழந்தது என்பது, மேலும் வேதனையைத் தருகின்ற சம்பவமாகும்.

எமது சமுதாயம் பொதுவாக மக்கள் தொகையிலும், குறிப்பாக ஆண்களின் தொகையிலும் வீழ்ச்சி அடைந்து கொண்டு வரும் வேளையில் கல்வித் தரத்தை மேம்படுத்தி எமது பலத்தை அதிகரிக்க வேண்டிய நிலையில் நாம் உள்ளோம். அதனை நோக்கியே எமது திட்டங்களும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வேளையில் கல்வியில் உயர் தரத்தில் உள்ள ஒரு சமுகத்திற்குப் பலம் சேர்க்க வேண்டிய இந்த ஆறு மாணவர்களின் இழப்பும் ஜீரணிக்க முடியாததாகும்.

இவவிழப்புக்கள் அவர்கள் சார்ந்த குடும்பங்களுக்கு மட்டுமின்றி தமிழ் சமுக்ததிற்கும் பேரிழப்பாகும். இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வரும் அலட்சிய மனோபாவமும் இவ்வாறான இழப்புக்களுக்கு ஒரு காரணமாகும். எதிர் காலத்தில் இத்தகைய இழப்புக்கள் எதுவும் நடைபெறாவண்ணம் பெற்றோர், பொறுப்புணர்வுடனும், எச்சரிக்கையுடனும் வழிகாட்டி வளர்க்கவேண்டும் என்ற பணிவான வேண்டுகோளை இவ்வேளையில் விடுப்பதுடன் பாதுகாப்பற்ற இத்தகைய கேளிக்கை நிகழ்வுகளில் எவரும் ஈடுபட வேண்டாம் என்றும் இளைஞர்களைத் தயவுடன் கேட்டுக் கொள்கின்றேன்.

தமது பிளளைகளின் இன்னுயிர்களை இழந்து வாடும் பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினருக்கும், நல்ல மாணவர்களை, நண்பர்களை இழந்து வாடும் பாடசாலைச் சமூகத்திற்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இவைபோன்ற துயரமான சம்பவங்கள் இனிமேலும் நிகழாதிருக்க விழிப்புறுக என இளைஞர்களை மீண்டும் வினயமாக வேண்டிக் கொள்கின்றேன். 
ஆறு இளைஞர்களினதும் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றேன்.

கலாநிதி க.சர்வேஸ்வரன் 
கல்வி,பண்பாட்டலுவல்கள்,விளையாட்டு,மற்றும் இளைஞர் விவகார அமைச்சர்.
வடக்கு மாகாணம்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/Parents-need-to-be-cautious-about-children

Link to comment
Share on other sites

மண்டைத்தீவில் உயிரிழந்த மாணவர்களில் மூவரின் இறுதிக்கிரியைகள் நடைபெற்றன

 


மண்டைத்தீவில் உயிரிழந்த மாணவர்களில் மூவரின் இறுதிக்கிரியைகள் நடைபெற்றன
 

யாழ்ப்பாணம் – மண்டைத்தீவில் படகு கவிழ்ந்ததில் உயிரிழந்த 6 மாணவர்களில், மூவரின் இறுதிக்கிரியைகள் இன்று நடைபெற்றன.

யாழ்ப்பாணம் – அத்தியடி பகுதியைச்சேர்ந்த, கோணேஸ்வரன் பிரவீனின் பூதவுடல் அன்னாரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

20 வயதான பிரவீன், யாழ். பெரியபுலம் மகா வித்தியாலயத்தின் மாணவராவார்.

கோம்மையன் மணல் இந்து மயானத்தில் அன்னாரின் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

இதேவேளை, உரும்பிராய் கிழக்கைச் சேர்ந்த லிங்கநாதன் ரஜீவின் இறுதிக்கிரியைகளும் இன்று இடம்பெற்றன.

18 வயதான ரஜீவ், யாழ். பரியோவான் கல்லூரியின் மாணவராவார்.

பிற்பகல் 1 மணிக்கு இறுதிக்கிரியைகள் இடம்பெற்று, உரும்பிராய் இளங்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

சண்டிலிப்பாயைச்சேர்ந்த 17 வயதான புலேந்திரன் தனுஷனின் இறுதிக்கிரியைகளும் இன்று நடைபெற்றன.

யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்டைத்தீவு பகுதியில் வள்ளம் கவிழ்ந்ததில் 6 மாணவர்கள் நேற்று முன்தினம் உயிரிழந்தனர்.

வள்ளம் கவிழ்ந்ததில் உயிரிழந்த ஏனைய மூவரின் இறுதிக்கிரியைகள் நாளை (31) இடம்பெறவுள்ளன.

உயிரிழந்த மாணவர்களின் உடல்களிலிருந்து சில மாதிரிகள் மேலதிக பரிசோதனைகளுக்காக எடுத்துச்செல்லப்பட்டதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் நேற்று தெரிவித்திருந்தார்.

உயிரிழப்பதற்கு முன்னர் அவர்கள் ஏதேனும் உட்கொண்டார்களா என்பதை பரிசோதனை முடிவுகளின் பின்னரே உறுதிப்படுத்த முடியும் எனவும் வைத்தியர் குறிப்பிட்டிருந்தார்.

 

http://newsfirst.lk/tamil/2017/08/109987/

Link to comment
Share on other sites

On 8/29/2017 at 10:14 AM, நவீனன் said:

குறித்த சமயம் அம் மாணவர்கள் மது அருந்தியிருந்ததால் அதிக மதுமயக்கத்தில் இருந்தனர்.  இந்நிலையில், மாணவர்கள் 7 பேரும் கடற்கரைப் பகுதியில் இருந்த படகொன்றையெடுத்து கடலுக்கள் சென்றுள்ளனர்.

இவர்கள் குடித்திருந்ததாக முதல்கட்ட வைத்தியஅறிக்கையில் இனம் காணப்படவில்லை!

வீரகேசரி எப்படி கண்டுபிடித்தார்கள்?

On 8/29/2017 at 2:18 AM, போல் said:

அனுபவமில்லாதவர்கள் சென்ற இந்த படகு விபத்தும், அனுபவம் குறைந்த படகோட்டியால் இயக்கிய சில கிழமைகளுக்கு முன்னர் நடந்த விபத்தும் மாணவர்களின், இளைஞர்களின் செல்பி மோகத்தால் நடந்த விபத்துகள் என தப்பியவர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது.   

படகின் சமநிலையைப் பேணாத போது, படகு சரியத் தொடங்கும் போது, பயத்தால் அங்குமிங்கும் ஓடுவதால் படகு கவிழ்வதை தவிர்க்க முடியாத சூழல் ஏற்படும். பெரும்பாலான விபத்துக்கள் இவ்வாறே ஏற்படுகின்றன.

இதுபோன்ற நிலைமைகளில் அனுபவமிக்க படகோட்டிகள் இருந்தால், அவர்கள் இயந்திரத்தின் வலு மூலம் சமநிலையைப் பேணி சமாளித்துவிடுவார்கள்!

முன்பு நாங்கள் நீச்சல் பழகுவதில் இருந்த ஆர்வம் இப்போதைய இளைஞர்களிடம் இல்லை.

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.