Sign in to follow this  
Newsbot

தமிழகத்தில் சில நாட்களில் ஆட்சி மாற்றம் ஏற்படும்.... எப்படி என்பது சஸ்பென்ஸ்- ஸ்டாலின்

Recommended Posts

சென்னை: தமிழகத்தில் சில நாட்களில் ஆட்சி மாற்றம் ஏற்படப்போகிறது என்று திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். சேலத்தில் எம்.எல்.ஏ. ராஜேந்திரன் இல்ல திருமண விழாவில் பங்கேற்று பேசிய திமுக செயல்தலைவர் ஸ்டாலின், அரசுக்கு எதிராக கடுமையான கருத்துக்களை முன் வைத்தார். ஆட்சிக்கு எதிராக 40 எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். ஆனாலும் கொல்லைப்புறமாக திமுக ஆட்சி அமைக்காது. மக்களின் வாக்குகளைப் பெற்றே ஆட்சி அமைப்போம். திமுகவிடம் 89 எம்.எல்.ஏக்கள் எனும் பந்து இருக்கிறது. திமுகவிடம் இருக்கும் பந்தை என்ன செய்யப் போகிறோம் என்பது சஸ்பென்ஸ். ஜனநாயக முறையில் மக்களின் வாக்குகளைப் பெற்றே ஆட்சி அமைப்போம். திமுக கூட்டணியின் 98 எம்.எல்.ஏக்கள் என்பது 117 ஆகாதா? 200 ஆகவும் மாறும் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார். ஆட்சி மாற்றம் வரும் என்று கூறும் ஸ்டாலின் அதை எப்படி ஏற்படுத்துவோம் என்று கூறாமல் சஸ்பென்ஸ் ஆக வைத்து விட்டு சென்றுவிட்டார்.

http://tamil.oneindia.com/news/tamilnadu/assembly-poll-tamil-nadu-soon-mk-stalin-294453.html

Share this post


Link to post
Share on other sites

'ஓரிரு நாள்களில் ஆட்சி மாற்றம்' - பகீர் கிளப்பும் மு.க.ஸ்டாலின்

 

3%283%29_14366.jpg.

சேலம் மத்திய மாவட்டச் செயலாளரும், சேலம் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.,வுமான பனமரத்துப்பட்டி ராஜேந்திரனின் புதல்வி கார்த்திகாவிற்கும், ரகுநாத்திற்கும் நடைப்பெற்ற திருமண நிகழ்ச்சியில் தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியதோடு தமிழகத்தில் ஓரிரு நாள்களில் ஆட்சி மாற்றம் ஏற்படும் எனப் பரபரப்பை கிளப்பியிருக்கிறார்.  

இந்தத் திருமணத்திற்கு ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், ஸ்டாலின் சகோதரி செல்வி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் ஏ.வ.வேலு, பொன்முடி, பொங்களூர் பழனிசாமி சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் வந்திருந்தார்கள். சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் ராஜா வரவில்லை.

 

நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், ''பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் முதலில் இளைஞர் அணி உறுப்பினராக இருந்து மாவட்ட இளைஞரணி பொறுப்பாளராகி பிறகு மாநில இளைஞரணி பொறுப்புக்கு வந்து சட்டமன்ற உறுப்பினராகி தற்போது மாவட்டச் செயலாளர் வரை உயர்ந்திருக்கிறார். என்றைக்கும் தலைவரின் தொண்டனாகவும், என் ஆரூயிர் சகோதரனாகவும் இருந்து வருகிறார்.

அவரைப் பாராட்டுவது என்னைப் பாராட்டுவதற்கு சமம். அன்பு, எளிமை மிக்க மனிதர். அதிர்ந்து பேச மாட்டார். உரத்த குரலில் பேசி பார்த்ததில்லை. அவர் சட்டசபையிலும், பொதுக்கூட்டத்திலும் பேசியதைப் பார்த்து ரசித்திருக்கிறேன். அப்படிப்பட்டவரின் மகளின் திருமண விழாவிற்கு நான் கலந்துகொள்ளுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். வெளிப்படையாகச் சொன்னால் இந்தத் திருமண நிகழ்ச்சியில் நான் வரவேற்புரை அல்லது நன்றியுறை ஆற்ற வேண்டும். என்னை வாழ்த்துரை வழங்க சொல்லி விட்டார்கள்.

தந்தை பெரியார் முதன் முதலில் இந்த மாவட்டத்தில்தான் சீர்த்திருத்த திருமணம் செய்து வைத்தார். 1967 அண்ணா முதன் முதலில் சீர்திருத்த திருமணத்திற்கு சட்ட வரைவு கொடுத்து முதல் கையெழுத்தைப் போட்டார். இது சீர்த்திருத்த திருமணம் மட்டுமல்ல சுயமரியாதை திருமணம், தமிழ் முறைப்படி செய்யக்கூடிய திருமணம் அதனால்தான் நான் எப்படி வாழ்த்துகிறேன் என்பது மணமக்களுக்கும் தெரிகிறது. உங்களுக்கும் தெரிகிறது. இத்திருமணத்தை நடத்தி வைக்கின்ற நானும் உணருகிறேன்.

மணமகள் பெயருக்குப் பின்பும், மணமகன் பெயருக்குப் பின்பும் அவர்கள் படித்து வாங்கிய பட்டம் இருக்கிறது. இந்தப் பட்டம் பெற பாடுபட்டது திராவிட இயக்கம். திராவிட இயக்கம் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் நம்மால் படித்திருக்க முடியுமா? அப்படிப்பட்ட  திராவிட இயக்கத்தை அழிக்க சிலர் நினைக்கிறார்கள். யாராலும் இந்த இயக்கத்தைத் தொடக்கூட முடியாது.

தமிழ்நாட்டில் நிலவும் இந்த அசாதாரண சூழ்நிலையில் நான் தலைநகரில் இருக்க வேண்டும் எனப் பலரும் சொன்னார்கள். ஆனாலும், நான் இங்கு வந்திருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தும். ஆனால், நான் வரவில்லை என்றால்தான் ஆச்சர்யம். இங்கு பேசும் போது வழக்கறிஞர் பிரிவு தலைவர் தமிழ்மணி 89 எம்.எல்.ஏ-க்கள் 118 எம்.எல்.ஏ-க்களாக மாறாதா என்றார். தலைவர் கலைஞர் எங்களைக் குறுக்கு வழியில் உள்ளே போகச் சொல்லவில்லை. மக்களால் நாங்கள் உள்ளே போக வேண்டும் என்பதையே விரும்புகிறோம். 118 எம்.எல்.ஏ-க்கள் அல்ல 200 எம்.எல்.ஏ-க்களாக மாறும்.

19 எம்.எல்.ஏ-க்கள் கவர்னரைச் சந்தித்து தற்போது இருக்கும் முதல்வருக்குத் தங்களுடைய ஆதரவு இல்லை என்று மனு கொடுத்து இருக்கிறார்கள். நேற்று இந்திய கம்யூனிஸ்ட், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகளும் கவர்னரிடம் மனு கொடுத்து விட்டு வெளியே வந்து பேட்டிகொடுக்கும் போது அவர்கள் சொல்லுகிறார்கள் நாங்கள் கவர்னரிடம் மனு கொடுக்கும் போது அவர்களின் உட்கட்சி பிரச்னையில் நான் எப்படித் தலையிட முடியும் என்றாராம்.

ஓ.பன்னீர்செல்வம் 10 எம்.எல்.ஏ.,வோடு கவர்னரைச் சந்தித்து மனு கொடுத்த உடனே எப்படி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தீர்கள். 19 மட்டுமல்ல அந்த அணியில் 21 லிருந்து படிப்படியாக 40 வரை சேரும் என்று கூறுகிறார்கள். 89 பந்துகள் இருக்கின்றன. அந்தப் பந்துகளும் தாக்கும்.

அதற்காக இன்னும் எவ்வளவு நாள்கள் பொறுமையாக இருப்பீர்கள் என்கிறார்கள். இது எங்கள் சுயநலத்தினால் அல்ல. மக்களின் பொதுநலத்தை கருத்தில் கொண்டு இன்னும் ஓரிரு மாதங்கள் அல்ல ஓரிரு நாள்களிலேயே ஆட்சி மாற்றம் நிச்சயம் வரும். நிச்சயம் திருமணம் என்றால் பாயாசம் இருக்கும். தி.மு.க., திருமணம் என்றால் அரசியல் இருக்கும்'' என்றார்.
 

 

 
 
 

http://www.vikatan.com/news/tamilnadu/100890-tamilnadu-to-face-big-political-changes-in-few-days-says-mkstalin.html

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • இலங்கையில் ஜனாதிபதிகளை தீர்மானிக்கின்ற சக்திகளாக சிறுபான்மையினர் முக்கிய பங்களிப்பைச் செய்து வந்த நிலையில், சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலிலே சிங்கள மக்கள் ஒன்றிணையப் போகிறார்கள் என்பதையும், அந்த ஒன்றிணைவு 50 சதவீதத்தைத் தாண்டிச் செல்லப்போகிறது என்பதையும் முஸ்லிம் அரசியல் தலைமைகள் அனுமானிக்கவில்லையா என்கிற கேள்வி எழுவதாக, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அரசியல்துறை தலைவர் கலாநிதி எம்.எம். பாஸில் தெரிவித்தார். இலங்கையின் 7ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக, கடந்த சனிக்கிழமை நடத்தப்பட்ட தேர்தலில், சிங்கள மக்களின் அமோக ஆதரவுடன் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளார். தமிழர்களும், முஸ்லிம்களும் இணைந்து பெரும்பான்மையான வாக்குகளை வழங்கிய ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாஸ, இந்த தேர்தலில் தோல்வியடைந்துள்ளார். இவ்வாறான சூழ்நிலையில், முஸ்லிம் மக்களின் அரசியல் குறித்து, எதிர்காலத்தில் அவர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பது பற்றியும், கலாநிதி பாஸில் உடன் பிபிசி தமிழ் பேசிய போதே, அவர் மேற்கண்ட விடயங்களைக் கூறினார். "தேர்தலுக்குப் பின்னரான தற்போதைய சூழ்நிலையை மிகக் கவனமாகப் புரிந்து கொண்டு, முஸ்லிம் தலைவர்கள் ஒன்றிணைந்து, தமது சமூகத்துக்காக பெரும்பான்மை மக்களின் ஆதரவுள்ள அரசியல் தலைமைகளோடு ஒத்திசைந்து போவது பற்றி யோசிக்க வேண்டும்" எனவும் அவர் இதன்போது வலியுறுத்தினார். தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் அரசியல்துறைத் தலைவர் பாஸில் உடன் பேசியபோது, அவர் தெரிவித்த கருத்துக்களை தொகுத்து வழங்குகின்றோம். "இலங்கை முஸ்லிம்களை பொறுத்த வரை, அவர்களின் அரசியல் போக்கு, மிக முக்கியமான மாற்றம் மற்றும் சிக்கல்களுக்குள் அகப்பட்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.   முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் சவால்கள் சுதந்திரத்துக்குப் பின்னர் இலங்கையில் தமிழ் மக்கள் எவ்வாறான எதிர்ப்பு அரசியல் நிலைமைகளை - சிங்கள பெரும்பான்மை சமூகத்திலிருந்து எதிர் நோக்கினார்களோ, அதனை ஒத்த மாதிரியான நிகழ்வுகள், யுத்தத்துக்குப் பின்னரும் இடம்பெற்று வருவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. அரசியல், சமூக, பொருளாதார ரீதியாக எழுச்சியடைய முற்பட்ட தமிழ் சமூகமானது, பெரும்பான்மை சிங்கள சமூகத்தின் அரசியல் ரீதியான செயற்பாட்டின் ஊடாக, சிறுமைப்படுத்தப்பட்ட ஒரு சூழ்நிலை தென்பட்டிருக்கிற வேளையிலே, முஸ்லிம் சமூகம் தன்னை ஒழுங்கமைத்துக் கொண்டு எழுச்சியடைந்து வருகிறது. ஆனால், தற்போது அந்த சமூகமும், இலங்கையின் அரசியல் வரலாற்றில் மீளவும் ஒரு சவாலுக்கு உட்பட்டுள்ளது. முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்த வரைக்கும், யுத்தத்திற்கு பின்னர் அவர்களுடைய அரசியல், சமூக, கலாசார மற்றும் பொருளாதார ரீதியில் பல்வேறு சவால்கள் ஏற்பட்டுள்ளன. அவர்கள் குறித்து எதிர்ப்புப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவர்களுடைய அரசியல், சமூக, பொருளாதார இருப்புக்கள் அழிவுக்குட்படுத்தப்படுகின்ற சூழ்நிலைகள் தோன்றியிருக்கின்றன. அதேவேளையில், கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலானது, முஸ்லிம் சமூகத்துக்கு பாரிய சவாலை ஏற்படுத்தியிருக்கிறது. முஸ்லிம்களின் இருப்பின் மீதும், அவர்களின் சுதந்திரமாக வாழ்வுரிமை மற்றும் மனித உரிமைகள் மீதும் பல பாதிப்புக்களை ஏற்படுத்தியிருக்கிறது. இவ்வாறான சூழ்நிலையில்தான், இலங்கையினுடைய ஏழாவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் நடந்து முடிந்துள்ளதோடு, அதில் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெற்றுள்ளார்.   சிங்கள சமூகத்தின் ஒன்றிணைவு பொதுஜன பெரமுன கட்சி சார்பில் போட்டியிட்ட கோட்டாபய ராஜபக்ஷ 52.25 வீத வாக்குகளை பெற்றிருக்கிறார். மற்றைய ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ 41.99 வீத வாக்குகளை மட்டும் பெற்றிருக்கின்றார். இந்த நிலைவரமானது இந்த நாட்டினுடைய சிறுபான்மையினர் பற்றிய மிக முக்கியமான செய்தியை சொல்ல வருகிறது. இலங்கையில், முஸ்லிம்களுடைய அரசியல் இருப்பு கேள்விக்குட்படுத்தப்பட்டிருக்கிறது. அதில் மிக முக்கிய அம்சமாக, சிங்கள தேசிய வாதத்தின் மீள் எழுச்சி இடம்பெற்றிருக்கிறது. சிங்கள மக்களோடு வாழ்கிற முஸ்லிம்கள் சார்பாக விடப்பட்ட தவறுகள் இதற்குப் பங்களித்திருக்கலாமென்றும் பார்க்கப்படுகிறது. தற்போது 52 வீதத்தையும் தாண்டிய வெற்றியினை கோட்டாபய ராஜபக்ஷ பெற்றிருக்கும் நிலையில், இலங்கை முஸ்லிம்கள் இந்த தேர்தலில் வழிநடத்தப்பட்டமை குறித்தும் நாங்கள் மிக கவனமாகப் பார்க்க வேண்டியிருக்கிறது. சிங்கள பெரும்பான்மை மக்கள், பல விடயங்களுடாக ஒன்றிணைக்கப்பட்டார்கள். சிறுபான்மையினருக்கு எதிரான கருத்துப் பிரச்சாரங்களின் ஊடாகவும், எதிர்ப்பு பிரச்சாரத்தின் ஊடாகவும், அந்த ஒழுங்கமைப்புகள் இடம்பெற்றன. மேலும் ஏப்ரல் 21ஆம் தேதி நடந்த பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர், சிங்கள மக்கள் மத்தியில் பாதுகாப்புப் பற்றிய ஒரு அச்சம் ஏற்பட்டதோடு, பலம் வாய்ந்த அரசியல் தலைவர் ஒருவரின் தேவையும் வலியுறுத்தப்பட்டது. இந்தச் சூழ்நிலை ஏற்படுத்துவதற்கு தேசிய சூழல், சர்வதேசத்தின் தலையீடு போன்றன பின்னணியில் இருந்திருக்கலாம் என்கிற பார்வையும் உள்ளது. இதன் அடிப்படையில் சிங்களச் சமூகம் ஒன்றிணைந்திருக்கின்ற வேளையிலே, முஸ்லிம் அரசியல் தலைவர்கள் மிகக் கவனமாகச் சிந்தித்து, தமது சமூகத்தை வழி நடத்தியிருக்க வேண்டும் என்கிற கருத்து உள்ளது.   கவனிக்கத் தவறிய விடயங்கள் அந்த வகையில் பார்க்கின்ற போது, சிங்கள மக்களின் ஒன்று திரண்ட செயற்பாட்டினை, முஸ்லிம் தலைவர்கள் அனுமானித்துக் கொள்ளவில்லையா, அல்லது விளங்கிக் கொள்ளவில்லையோ என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன. இலங்கையில் ஜனாதிபதிகளைத் தீர்மானிக்கின்ற சக்திகளாக சிறுபான்மையினர் முக்கிய பங்களிப்பைச் செய்து வந்திருக்கின்றனர். ஆனால் இந்தத் தேர்தலிலே சிங்கள மக்கள் ஒன்றிணையப் போகிறார்கள் என்பதையும், அந்த ஒன்றிணைவு 50 வீதத்தைத் தாண்டிச் செல்லப் போகிறது என்பதையும் முஸ்லிம்களை வழிநடத்தி வரும் - முஸ்லிம் அரசியல் தலைமைகளான ரஊப் ஹக்கீமும், றிசாட் பதியுதீனும் அனுமானிக்கவில்லையா என்கிற கேள்வி எழுகிறது.   பலமிழந்த சிறுபான்மையினர் 1990களிலே அப்போதைய ஜனாதிபதி பிரேமதாஸவுடன் முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் இணைந்திருந்த காலம் மற்றும் ஜனாதிபதி சந்திரிக்காவுடன் அஷ்ரப் இணைந்திருந்த காலங்களில் ஜனாதிபதிகளைத் தீர்மானிக்கின்ற சக்தியாக சிறுபான்மையின மக்கள் இருந்து வந்துள்ளார்கள். 2015ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் இதனை மிகத் தெளிவாகக் கண்டோம். ஆனால், கோட்டாபய ராஜபக்ஷ வெற்றியீட்டியுள்ள இந்தத் தேர்தல் முடிவானது, சிறுபான்மையினரின் ஆதரவில்லாமலேயே, ஜனாதிபதியொருவரை பெரும்பான்மை இனத்தவர்கள் தெரிவு செய்வதற்கானதொரு நிலையினை ஏற்படுத்தியிருக்கின்றது. வடக்கு, கிழக்குக்கு வெளியே உள்ள முஸ்லிம்கள் ஆங்காங்கே கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களித்திருந்தாலும் கூட, வடக்கு, கிழக்கிலே தமிழர்களுடன் ஒன்றிணைந்து வாழ்கின்ற முஸ்லிம்கள், பெரும்பாலும் தமது வாக்குகளை சஜித் பிரேமதாஸவுக்கு வழங்கினர். இதன் காரணத்தினால், முஸ்லிம்களுடைய பங்குபற்றுதல் இல்லாமலேயே சிங்கள ஜனாதிபதியொருவரை சிங்கள சமூகம் தெரிவு செய்திருக்கிறது. இந்த ஜனாதிபதி ஆட்சி முறைமை சிறுபான்மையினருக்கு சாதமானது என்று சொல்லப்பட்ட போதிலும், அது இன்று கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளது. முஸ்லிம்களின் முக்கியத்துவம் இழக்கப்பட்டிருக்கிற தற்போதைய சூழ்நிலையில், ஜனாதிபதி தேர்தலிலே முஸ்லிம்களின் பேரம் பேசும் சக்தியும் கேள்விக்குரியதாக மாறியுள்ளதோடு, அது தேவையில்லை என்கிற சூழ்நிலையினையும் இந்தத் தேர்தல் முடிவு வெளிக்காட்டியிருக்கிறது.   செய்ய வேண்டிவை என்ன? எனவே, முஸ்லிம் தலைமைகள் மீண்டும் மிகக் கவனமாகச் சிந்தித்து, தங்கள் அரசியல் செயல்முறைமையினை கொண்டு நடத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது. இங்கு இரண்டு வகையான செய்திகளை என்னால் சொல்ல முடியும். ஒன்று முஸ்லிம் சமூகத்துக்கானது. மற்றையது முஸ்லிம் சமூகத்தை வழிநடத்தும் அரசியல் தலைமைகளுக்கானது. முஸ்லிம் சமூகம் மிகவும் அவதானத்துடன் கவனமாகச் சிந்தித்து பெரும்பான்மைச் சமூகத்தோடு இந்த நாட்டிலே ஒன்றித்துச் செயற்பட வேண்டும் என்கிறதொரு செய்தி சிங்களப் பெரும்பான்மையினரால் முஸ்லிம்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது. எனவே, அவர்களோடு ஒற்றுமையாக வாழ்வதற்குரிய வழிமுறைகளை முஸ்லிம்கள் தேட வேண்டும். இந்த நாட்டின் இனத்துவ வீதாசாரப் புள்ளி விவரத்தின் படி, 74 வீதத்தினர் சிங்களவர்களாக இருக்கின்றனர். அதன் காரணத்தினால் சிறுபான்மையினர் அரசியலில் பெரும் செல்வாக்கினை தொடர்ந்தும் செலுத்த முடியாத நிலைமை இருப்பதனாலும், முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைககள் அதிகரித்துக் காணப்படுவதனாலும், முஸ்லிம்கள் ஒத்தியங்கிப் போய் தங்களின் வாழ்க்கையினையும் தம்முடைய எதிர்கால சமூகத்தின் வாழ்க்கையினையும் நிலைப்படுத்துவதற்கான தேவையினைத் தேட வேண்டியுள்ளது. அடுத்து நான் கூறும் செய்தி, இந்த ஜனாதிபதி தேர்தல் முடிவுகளுக்கிணங்க முஸ்லிம் அரசியல் தலைமைகள் ஒன்றிணைந்து, மிக முக்கியமான ஒரு விடயத்தைக் கவனத்திற்கொள்ள வேண்டும் என்பதாகும். அதாவது எதிர்காலத்தில் முஸ்லிம் சமூகத்தை எப்படி வழிநடத்துவது என்பதாகும். பெரும்பான்மை மக்களுடன் ஒன்றிணைந்து செயற்படக் கூடிய அரசியல் நடவடிக்கைகளை, எதிர்காலத்தில் முஸ்லிம் தலைமைகள் எடுப்பதன் ஊடாகத்தான், முஸ்லிம் சமூகத்தைப் பாதுகாக்க முடியும். இந்த நிலையில், அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை கவனமாகப் பரிசீலித்து, அதன் அடிப்படையிலான ஒரு ஆட்சியினைச் செய்யவுள்ளதாக தற்போது மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார். இதனூடாக நாம் விளங்கிக் கொள்வது என்னவென்றால், நாடாளுமன்றத்தில் மூன்றிரலின்டு பெரும்பான்மை ஆதரவினை அவர்கள் திரட்டிக் கொள்ளப் போகிறார்கள். ஏற்கனவே அரசியலமைப்பின் 18ஆவது திருத்தத்தை நாடாளுமன்றத்தின் மூன்றிலிரண்டு பெரும்பான்மையின் ஊடாகத்தான் மஹிந்த ராஜபக்ஷ நிறைவேற்றினார். அதன்போது முஸ்லிம்களின் உதவியும் அவர்களுக்குத் தேவைப்பட்டது. எனவே, தற்போதைய சூழலை மிகக் கவனமாகப் பயன்படுத்திக் கொண்டு, முஸ்லிம் தலைவர்கள் ஒன்றிணைந்து, தமது சமூகத்துக்காக பெரும்பான்மை மக்களின் ஆதரவுள்ள அரசியல் தலைமைகளோடு ஒத்திசைந்து போகக் கூடிய நடவடிக்கைகள் குறித்து யோசிக்க வேண்டும். மியான்மர் மற்றும் தாய்லாந்து போன்ற பல நாடுகளில் முஸ்லிம்களுக்கு எதிரான பௌத்த தேசியவாதச் செயன்முறைகளும், பௌத்தத்தை மீள் புனர் நிர்மாணம் செய்வதற்கான மீள் எழுச்சிகளும் இடம்பெறுகின்றன. இந்தச் சூழ்நிலையில் முஸ்லிம்கள் - பௌத்தத்தின் ஆதிக்கத்துக்குட்பட்டு சின்னாபின்னப்பட்டு வருகின்றனர். இலங்கையிலும் அதே சூழ்நிலை உருவாகியிருக்கின்ற இந்தச் சந்தர்ப்பத்திலே, முஸ்லிம்களும் முஸ்லிம் தலைவர்களும் மிக நிதானமாகச் செயற்பட்டு, தேசிய அரசியலில் பெரும்பான்மையினத்தவரோடு ஒத்துப் போகக் கூடியவாறான செயற்பாடுகளில் கவனம் செலுத்துதல் அவசியமாகும். https://www.bbc.com/tamil/sri-lanka-50461611
    • Pri, சம்பந்தன் காலத்தில் வாழ்ந்திருக்ககிறேன். நீங்கள் குறிப்பிடுவது மிகையானது. அது உங்கள் தவறல்ல. நீங்கள் கேட்டதைத்தான் எழுதியிருக்கிறார்கள் என்பதை தெளிவுபடுத்தியிருக்கிறீர்கள். யாழ் களத்தின் 20வது ஆண்டுப் பதிவில் ‘கடன் வாங்கி களியாட்டம்’ என்ற பத்தியை எழுதியிருக்கிறேன். அன்றைய சண்டியர்கள் அதில் இருக்கிறார்கள். நேரம் இருந்தால் பாருங்கள்.  
    • புதிய ஜனாதிபதி கோட்டாப ராஜபக்‌ஷவின் பதவியேற்பு விழா, பிரமாண்டமான முறையில், வரலாற்று முக்கியத்துவமிக்க அநுராதபுரம் ருவான்வெலி மகாசாயவில் இன்று (18) நடைபெற்றது. இதில், ஜனாதிபதி வேட்பாளரும், கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வும் பங்கேற்றிருந்தார். http://www.tamilmirror.lk/செய்திகள்/ஹஸபலலஹவம-பஙகறறர/175-241166
    • துட்டகைமுனுவால் எல்லாளனை வெற்றி கொண்ட பின் அவரால் கட்டப்பட்ட இடமே ருவன்வெலிசாய. இதில் சிருபான்மை தேசிய இனங்களால் வெறுத்து ஒதுக்கப்பட்டு பெரும்பான்மை இனத்தால் தெரிவு செய்யப்பட்ட சனாதிபதி பதவி ஏற்கும் இடமாக தெரிவு செய்ததில் இருந்து தொடங்குகின்றது கோத்தாவின் ஆட்சி...
    • Generally, the stock index is reflection of a country's political and economical status. And as such, it is perceived the investors have been welcoming the win by GR.