• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
ராசவன்னியன்

ஆளைக்கொல்லும் ஆன்லைன் விளையாட்டு.. குழந்தைகளை பாதுகாப்பது எப்படி.?

Recommended Posts

 

ஆளைக்கொல்லும் ஆன்லைன் விளையாட்டு.. குழந்தைகளை பாதுகாப்பது எப்படி?

 

31-1504168111-kids245.jpg     31-1504168211-mobile356-600.jpg

 

சென்னை: உயிரை குடித்து வரும் 'ப்ளூவேல்' கேம்களின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் தனது குழந்தை ஆன்ட்ராய்டு போனிலேயே மூழ்கிகிடக்கிறார் என்று பெருமை பேசுவதை பெற்றோர் நிறுத்திவிட்டு அவரது உயிரை காக்க முயற்சியுங்கள். அன்றைய காலகட்டங்களில் ஆண், பெண் என இருபாலருக்கும் தனித்தனி விளையாட்டுகள் விளையாடப்பட்டு வந்தன. ஆண்களுக்கு வீரம் கலந்து விளையாட்டுகளும், பெண்களின் உடல் அமைப்புக்கு ஏற்ற வகையிலான விளையாட்டுகளும் இருந்தன. உதாரணமாக, ஆண்களுக்கு ஜல்லிக்கட்டு, கபடி, கம்பு சுற்றுதல், சிலம்பம், மாடு பிடித்தல் உள்ளிட்ட விளையாட்டுகளும், பெண்களுக்கு கல்லாட்டம், ஸ்கிப்பிங், தாயம், பரமபதம், பல்லாங்குழி உள்ளிட்ட விளையாட்டுகளும் இருந்தன.

பயத்தின் காரணமாக
இன்றைய காலகட்டங்களில் கடத்தல் உள்ளிட்ட காரணங்களுக்காக குழந்தைகளை வெளியே விளையாட அனுப்பதில்லை. அதிலும் குழந்தையையும் விட்டு வைக்காத இந்த பாலியல் தொந்தரவு உள்ளிட்டவற்றால் பெண் குழந்தைகளை வெளியே விளையாட அனுப்புவதற்கே பெற்றோர் அச்சப்படுகின்றனர்.

மேற்கத்திய கலாசாரம்
இதனால் உட்கார்ந்த இடத்தில் விளையாடும் விளையாட்டுகளான வீடியோ கேம்ஸகளை விளையாடி வந்தனர். தற்போது படுத்துக் கொண்டே விளையாடும் அளவுக்கு ஆன்ட்ராய்டு போன்களை கையில் எடுத்தால், கீழே வைக்காத அளவுக்கு குழந்தைகள் அதில் மூழ்கிவிடுகின்றனர்.

பெற்றோர் கண்காணிப்பு குறைவு
இதுபோல் தனியாக குழந்தைகளிடம் செல்போன் கொடுத்துவிட்டு விளையாட வைப்பதால் குழந்தைகள் தவறான ஆபாச தளங்களுக்கு செல்லும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இதனால் அதுபோன்ற சைட்டுகள் குழந்தைகளின் கண்களில் படாதபடி ஃபையர் வால் போட்டு பெற்றோர் பாதுகாத்தனர். அரசும் இதுகுறித்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

வந்துவிட்டது எமன்
இதனால் நிம்மதி பெருமூச்சு விட்ட பெற்றோருக்கு உயிரை குடிக்கும் எமனாக ப்ளூவேல் விளையாட்டுகள் வந்துள்ளது குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை. குழந்தைகள் என்ன விளையாடுகிறார்கள் என்பதை கூட கண்காணிக்க இயலாத நிலையில் இன்று பணத்துக்காக ஆளாய் பறந்து வருகின்றனர்.

 

31-1504168016-blue-whale-game-challengin     31-1504157504-vignesh-blue-whale-suicide

 

விபரீதம்
இதனால் தனிமையில் உள்ள குழந்தைகள் ப்ளூவேல் போன்ற உயிரை மாய்த்தும் கொள்ளும் விளையாட்டுகளில் மூழ்கிவிடுகின்றனர். இது தெரியாமல் தன் பிள்ளையிடம் ஆன்ட்ராய்டு போனை கொடுத்துவிட்டால் போதும் மணிக்கணிக்கில் அதில் மூழ்கிவிடுவான். எல்லாம் ஆப்ஷன்களும் அவனுக்கு தெரியும் என்று பெருமையடித்துக் கொள்கின்றனர்.

பெருமை பேசுவதை நிறுத்துங்கள்
பெருமை பேசுவதை நிறுத்திவிட்டு பெற்றோர் எந்த விளையாட்டை விளையாடுகின்றனர் என்பதை கவனிக்க வேண்டும். இந்த விளையாட்டை முற்றிலுமாக தடை செய்ய முடியாத நிலையில் பெற்றோர் தான் குழந்தைகளை பாதுகாக்க வேண்டும். குழந்தைகளின் நடவடிக்கைகளில் ஏற்படும் மாற்றங்களை உணர வேண்டும்.

கண்டுபிடித்தால்
இந்த ப்ளூவேல் கேம் என்பது முழுக்க முழுக்க குழந்தைகளை மூளைசலவை செய்து அடிமையாக்கும் விஷயமாகும். இதனால் மனமுடைந்த குழந்தைகள் நிச்சயம் நோட்டு புத்தகங்களில் ப்ளூவேல் படத்தை வரைந்தோ அல்லது வார்த்தையால் எழுதியோ வைத்திருப்பர். இதை கவனிக்க வேண்டும். மேலும் வழக்கத்துக்கு மாறாக அதிகாலை எழுந்தால் விசாரிக்க வேண்டும். ஒரு வேளை உங்கள் பிள்ளை ப்ளூவேல் கேம் விளையாடுவது குறித்து தெரிந்தால் அவர்களிடம் விளையாட கூடாது என்று சத்தியம் வாங்குவதை கைவிடுங்கள்.

மருத்துவரிடம்
நல்ல மருத்துவரிடம் கொண்டு போய் கவுன்சலிங் கொடுக்கத் தவற வேண்டாம். கவுன்சலிங் கொடுத்தபிறகும், குழந்தையுடனேயே இருக்க வேண்டியது அவசியம். மேலும் எந்த பிரச்சினையாக இருந்தால் தன்னிடம் சொல்ல வேண்டும். யார் மிரட்டினாலும் தன்னிடம் சொல்ல வேண்டும் என்பதை பெற்றோர் குழந்தைகளுக்கு தைரியம் கொடுங்கள்.

தைரியம் கொடுங்கள்
உங்கள் தைரியமே அவர்களுக்கு நல்ல மருந்தாக இருக்கும். அப்படியே உங்க வங்கிக் கணக்கில் உள்ள பணங்களை எடுத்துவிடுவதாக அவர்கள் மிரட்டினாலும் சம்பாதித்துக் கொள்ளலாம். ஆனால் குழந்தை போனால் என்ன செய்ய முடியும் என்பதை நினைத்து பாருங்கள். காசு, பணத்தை விட நீ தான் பெரிது என்று குழந்தையிடம் சொல்லுங்கள். உங்கள் கண்காணிப்பில் வெளியே விளையாட அனுமதி கொடுங்கள். இதை ஒவ்வொரு பெற்றோரும் செய்தால் ப்ளூவேல் கேம் விளையாடுவதை தடுத்துவிடலாம்.

தற்ஸ்தமிழ்

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this  

  • Topics

  • Posts

    • அமெரிக்காவில் இரண்டு இலட்சம் பேரை கொரோனா காவுகொள்ளலாம்- ஆய்வில் அதிர்ச்சி          by : Litharsan அமெரிக்காவில் தீவிரமாகப் பரவிவரும் கொரோனா வைரஸிற்கு அங்கு, ஒரு இலட்சம் முதல் இரண்டு இலட்சம் பேர் வரை உயிரிழக்கக் கூடும் என அதிர்ச்சியளிக்கும் ஆய்வு வெளியாகியுள்ளது. வெள்ளை மாளிகையின் கொரோனா தடுப்புப் பிரிவைச் சேர்ந்த மூத்த தொற்று நோய் நிபுணர் ஒருவர் இதனை தெரிவித்துள்ளார். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்காவின் தேசிய நோய்களுக்கான ஆய்வு இயக்குநரகத்தின் மூத்த அதிகாரியான அந்தோனி ஃபாவுசி, பத்து இலட்சத்துக்கும் அதிகமான கொரோனா பாதிப்புகள் ஏற்படலாம் என்றும் ஒன்று முதல் இரண்டு இலட்சம் பேர் வரை உயிரிழப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளார். இவ்வாறு கூறிய அவர் மரணம் என்பதை திரும்பப் பெறுவதாக கூறினார். பல இலட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள் என்பதுடன் தமது அச்சத்தை வெளியிடுவதாக அவர் தெரிவித்தார். இதேவேளை, அமெரிக்காவில் கொரோனா தொற்றுநோய்க்கு அடுத்த இருவாரங்களில் மரண எண்ணிக்கை உச்சக்கட்டத்தை எட்டும் என அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். வொஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சமூக விலகல் உத்தரவை ஏப்ரல் 30 வரை நீடிப்பதாகவும் அறிவித்தார். இறப்பு விகிதம் அடுத்த இருவாரங்களில் உச்ச நிலைக்குச் செல்லும் எனக் கூறிய அவர், ஜூன் முதலாம் திகதிக்கு பின்னர் விடிவு பிறக்கும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். உலக நாடுகளில் அதிக எண்ணிக்கையிலானோரை கொரோனா வைரஸ் பாதித்துள்ள நாடாக அமெரிக்கா பதிவாகியுள்ளது. அந்நாட்டில் நேற்று ஒரேநாளில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு ஒன்றரை இலட்சத்தை நெருங்குகிறது. மேலும், நேற்று மட்டும் 264 பேர் மரணித்த நிலையில் மொத்த மரணம் 2 ஆயிரத்து 484 ஆகக் கூடியுள்ளதுடன் தீவிர சிகிச்சையில் மூவாயிரம் பேர் வரை உள்ளமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/அமெரிக்காவில்-இரண்டு-இலட/
    • உயர்தரப் பரீட்சை ஒத்திவைக்கப்படாது – கல்வி அமைச்சு          by : Jeyachandran Vithushan 2020 ஆண்டுக்கான உயர்தர பரீட்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை 2019 ஆம் ஆண்டு நடைபெற்று முடிந்த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் ஏப்ரல் 30 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உயர்தர பரீட்சை ஒத்திவைக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் ஒரு சில தரப்பினரால் வதந்திகள் பரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/உயர்தரப்-பரீட்சை-ஒத்திவை/
    • உலகப் பிறழ்நிலையை சாதகமாக்கி அசட்டைத் துணிவுடன் தமிழர்கள் மீது தொடரும் தாக்குதல்- துரைராசசிங்கம்          by : Litharsan சர்வதேசப் பொறிமுறையை இலங்கைக்கு எதிராக தாமதிக்காது செயற்படுத்த வேண்டும் என்ற செய்தியை மிருசுவில் படுகொலை குற்றவாளியின் விடுதலை வெளிப்படுத்துவதாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார். அத்துடன், கொரோனாவினால் உலகமே இயல்பான இயங்குநிலையில் இல்லாததைச் சாதமாக்கிக் கொண்டு அசட்டைத் துணிவுடன் தான் நினைத்ததையெல்லாம் ஜனாதிபதி செய்ய முடியும் என்று காட்டுகின்ற ஒரு அபாய விளக்கு இதுவென அவர் குறிப்பிட்டுள்ளார். மிருசுவில் படுகொலை தொடர்பாக தண்டனை வழங்கப்பட்டவரை ஜனாதிபதி பொது மன்னிப்பில் விடுதலை செய்துள்ளமை குறித்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில், “சிறுவர், சிறுமிகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எட்டுப் பேர் மிருசுவிலில் வன்கொலை செய்யப்பட்டார்கள். உடலங்கள் மலக்குழியில் இட்டு மறைக்கப்பட்டன. இது தொடர்பாக லெப்டினன் கேணல் சுனில் ரட்நாயக்க உட்பட ஆறு பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு அதில் ஐந்து பேர் விடுதலை செய்யப்பட்டதோடு சுனில் ரட்நாயக்கவுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. இந்த வழக்கு உயர் நீதிமன்றத்துக்கு மேன்முறையீடு செய்யப்பட்டு பிரதம நீதியரசர் உள்ளிட்ட ஐந்து நீதியரசர்களால் உறுதிப்படுத்தப்பட்டது. இந்நிலையிலே மரண தண்டனையை எதிர்நோக்கியிருந்த மேற்படி குற்றவாளி இலங்கை ஜனாதிபதியால் பொதுமன்னிப்பின் பேரில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். நமது நாடு உட்பட மொத்த உலகும் கொரோனா வைரஸ் பீதியிலும், துக்கத்திலும் ஆழ்ந்திருக்கின்ற இந்த சந்தர்ப்பத்திலே இச்செய்தி தமிழ் மக்களுக்கு மட்டுமல்லாது நீதி நிலைநிறுத்தப்பட வேண்டும் என்பதில் அக்கறையுள்ள அனைவருக்கும் அதிர்ச்சியாகும்.  சர்வதேச மன்னிப்புச் சபை உள்ளிட்ட மனித உரிமை நிறுவனங்கள் இந்த விடுதலை குறித்து அதிர்ச்சி வெளியிட்டுள்ளன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இராணுவ வீரராக இருந்து இராணுவ சிற்றதிகாரியாகப் பதவியுயர்ந்து பின்னர் பாதுகாப்புச் செயலாளராகவும் இருந்தவர். இராணுவத்தினர் ஒவ்வொருவரும் இறுக்கமான ஒழுக்க விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதும், கடமையின் போதும் அல்லது முகாமில் இருக்கும் போதும் வரம்பு மீறிச் செயற்படுமிடத்து இராணுவச் சட்டத்தின் மூலமாகவே அவ்வாறு செயற்பட்டவருக்குத் தண்டனை வழங்குகின்ற நடைமுறையும் உண்டு. அந்த நடைமுறை சுனில் ரட்நாயக்க உட்பட ஏனைய ஐந்து பேர் தொடர்பாகவும் கையாளப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு அது கையாளப்படாதமையினால், அதையும் மீறி உயர்நீதிமன்றம் வரை சென்று கையாளப்பட்ட விடயமாகும். இவ்விடயங்கள் போர்க்குற்றம் தொடர்பாக உள்நாட்டுப் பொறிமுறைகள் பொருத்தமானதல்ல என்பதை உறுதிப்படுத்துவதாய் அமைகின்றன. ஒட்டுமொத்தமாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் தனது சர்வதேசம் தழுவிய செயற்பாட்டுப் பொறிமுறையை இலங்கை அரசாங்கத்துக்கு எதிராகத் தாமதியாது செயற்படுத்த வேண்டும் என்கின்ற செய்தியையே இந்த கொலையாளி விடுதலை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. தாமதிக்கின்ற ஒவ்வொரு கணமும் தமிழ் மக்கள் மீது தொடர்ச்சியான, வெளிப்படையான தாக்குதல்கள் இடம்பெறும். உலகமெல்லாம் மிகக் கொடுமையான ஒரு நோய் தொடர்பாக கவனம் செலுத்தியும், இயல்பான இயங்குநிலை இல்லாத நிலையிலும் இருக்கின்ற இந்தச் சூழ்நிலையிலே ஜனாதிபதியின் செயற்பாடானது மிகவும் கொடுமையானதும், பயங்கரமானதுமாகும். இன்னொருவகையில் உலகப் பிறழ்நிலையை சாதமாக்கிக் கொண்டு அசட்டைத் துணிவுடன் தான் நினைத்ததையெல்லாம் ஜனாதிபதி செய்ய முடியும் என்று காட்டுகின்ற ஒரு அபாய விளக்காக இச் செயற்பாடு அமைகின்றது. இச் சூழ்நிலையிலே மனித உரிமை ஆணையமும் ஐக்கியநாடுகள் சபையும் இவ்விடயம் தொடர்பில் விரைந்து செயற்படுவது இன்றியமையாததொன்றாகும் என்று தெரிவித்தார். http://athavannews.com/உலகப்-பிறழ்நிலையை-சாதகமா/
    • 6 ‍ மான் குட்டியே புள்ளி மான் குட்டியே
    • சித்த ஆயுர்வேதம் மட்டக்களப்பு அறிமுகம். 2019ம் ஆண்டு பதிவுசெய்யப்பட்ட காணொளி இது. https://youtu.be/QVNlnqtfz90 https://youtu.be/QVNlnqtfz90