Jump to content

பிடித்த பாடல் வரிகள்


Recommended Posts

தனி ஒருவனுக்குள்ளே உள்ளே, ஒரு பிரபஞ்ஜமே மறைந்திருக்குமா??

இவன் மனவெளி ரகசியம், அதை நாசா பேசாதா??

க்ரகங்களை கைப்பந்தாட விரும்பிடுவானே, கருங்குளிக்குள்ளே சென்று திரும்பிடுவானே...

--இது ஒரு வில்லனைப் பற்றிய பாடல் என்றாலும் பிரபஞ்சம் பிச்செறிஞ்ஜேன் என்ற வைரமுத்துவின் வரிகள் ஞாபகத்துக்கு வருகிறது...

Link to comment
Share on other sites

பால் போலே கள்ளும் உண்டு

நிறத்தாலே ரெண்டும் ஒன்று,

நானென்ன கள்ளா பாலா?

நீ சொல்லு நந்தலாலா, 

"உனக்கென்ன மேலே நின்றாய்

ஓ நந்தலாலா"...

இது போன்ற குழப்பம் அவ்வபொழுது மனதில் தோன்றி மறையும் பொதுவான ஒன்று என யூகிக்கிறேன்...

Link to comment
Share on other sites

தொல்லைகள கூட்டினாலும், நீ தூரம் நின்னும் தாங்கல

கட்டிலிடும் ஆசையால என் கண்ணு ரெண்டும் தூங்கல

உன கண்டதும் மனசுக்குள்ள எத்தன கூத்து

சொல்லவும் முடியவில்லை சூட்டையும் ஆத்து.

--பெண் ஆனண நோக்கி பாடும் பாடலாக அமைந்திருக்கும்... சமீபத்தில் வந்த பாடல்களில் சிறந்த ஒரு பாடலாக பெரும்பாலானவர்களின் வாய்களில் முணுமுணுக்க செய்திருக்கும்...

Link to comment
Share on other sites

  • 2 weeks later...


எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் தாமரை எழுதிய இந்த வரிகளையும் கேட்டுப் பாருங்களேன்...

மறு வார்த்தை பேசாதே!
மடிமீது நீ தூங்கிடு!
இமை போல நான்காக்க..
கனவாய் நீ மாறிடு !
.....
மறந்தாலும் நான் உன்னை 
நினைக்காத நாளில்லையே ..!
பிரிந்தாலும் என் அன்பு..
ஒருபோதும் பொய்யில்லையே !

.....
இதழ் என்னும் மலர்கொண்டு.. 
கடிதங்கள் வரைந்தாய்!
பதில் நானும் தருமுன்பே 
கனவாகி கலைந்தாய் ..!

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
On 28/09/2017 at 12:37 PM, ஆதித்ய இளம்பிறையன் said:


எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் தாமரை எழுதிய இந்த வரிகளையும் கேட்டுப் பாருங்களேன்...

மறு வார்த்தை பேசாதே!
மடிமீது நீ தூங்கிடு!
இமை போல நான்காக்க..
கனவாய் நீ மாறிடு !
.....
மறந்தாலும் நான் உன்னை 
நினைக்காத நாளில்லையே ..!
பிரிந்தாலும் என் அன்பு..
ஒருபோதும் பொய்யில்லையே !

.....
இதழ் என்னும் மலர்கொண்டு.. 
கடிதங்கள் வரைந்தாய்!
பதில் நானும் தருமுன்பே 
கனவாகி கலைந்தாய் ..!

நிச்சயம் கேட்போம்...

அதிலும் கவிஞர் தாமரை எந்தவித விரசமுமில்லாமல் எழுதும் தூய தமிழ் பாடல்கள் தனி சிறப்பு...

தற்போது அவ்வபொழுது முணுமுணுக்கும் பாடல் போகன் படத்தில் வரும் செந்தூரா...

Link to comment
Share on other sites

கடும் பனி பொழிவில் ஒற்றை தமிழனாக வலம் வந்த வேளையில் மனதிற்கு இதம் தந்த பாடல்...

கடல் மூழ்கிய தீவுகளை 

கண்பார்வைகள் அறிவதில்லை

அது போலே உன்னில் மூழ்கிவிட்டேன்...

இது நடந்தது 2010 டிசம்பர் மாதத்திற்கு முன்பு... இப்பொழுதும் இந்த பாடலை கேட்கும் பொழுது, நடு இரவில் பனிப் பொழிவிற்கு நடுவில் அமைந்திருக்கும் பங்கரின் நுனியில் நின்று கொண்டு பனிப் பொழிவை ரசித்த படியாக உள்ள உணர்வுகள் மனதை நெருடிவிட்டு செல்கிறது...:118_bust_in_silhouette:

Link to comment
Share on other sites


பெ: கைகள் ஏந்தி வந்தேன்.. கவனம் இல்லையா
கண்ணில் ஈரம் கண்டும் கருணையில்லையா
: பாலைப் போலக் கள்ளும் வெள்ளையில்லையா
பருகிப் பார்க்கச் சொன்னால் பாவம் இல்லையா
பெ: நான் இன்று சீதையென்று தீக்குளிப்பேன் உன்னாலே
பெண் பாவம் சாபம் என்று காண வேண்டும் பின்னாலே
: போதும் போதும் பெண்ணே.. புன்னகை என்பது காதலின் பல்லவி...

கண்ணில் ஈரம் கண்டும் கருணை இல்லையா, எனும் பொழுது அமலாவின் முக பாவனையை பார்க்க வேண்டுமே!!! மிடில...

வாணி ஜெயராமின் குரலும் சேர்ந்து கொண்டு மனதிற்க்குள் சங்கு சக்கரம் உடுர எஃபெக்ட்...

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

கங்கா நதியை காணும் பொழுது உண்மை விளங்குது

இங்கே குளிக்கும் மனிதன் அழுக்கில் கங்கை கலங்குது

சில பொல்லா மனங்கள் பாவக் கறையை நீரில் கழுவுது

இந்த முட்டாள் தனத்தை எங்கே சொல்லி நானும் அழுவது

--வினாயகர் பதிகத்தை படித்த படி ரயிலில் பயணம்"ஒருவர்", விபத்து' தாய் குழந்தை உயிரிழப்பு' விசாரித்து தெரிந்து கொண்டாகி விட்டது... தேவையான முறைகளை இஞ்சின் ட்ரைவர் முடித்த பிறகு 25 நமிடம் கழித்து ரயில் கிளம்பியதும், மருபடியும் வநாயகர் பதிகம் படித்து முடித்து முத்தமிட்டு தன் சட்டை பையில் வைத்துக் கொண்டார்...

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

ஆடி அடங்கும் பூமியில, நாம வாடி வதங்க தேவையில்ல

ஒருவாட்டி வரும் வாழ்க்க, துணிவோமே அத ஏற்க்க

சிரிப்போமே நந்தவனம் போல, அதுபோதும் இந்த உயிர் வாழ (???)

போகும் வர இந்த காதல் நம்ம காக்குமுன்னு நெனச்சா வெலகும் வேதன...

-- ஒட்டு மொத்த மனித குலத்திற்க்குமாய் எடுத்துக் கொள்ளவும்... 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

காற்றில் வரும் கீதமே,
என் கண்ணனை அறிவாயா…..

காற்றில் வரும் கீதமே,
என் கண்ணனை அறிவாயா…..

அவன் வாய்க் குழலில் அழகாக
அமுதம் ததும்பும் இசையாக
மலர்ந்தாய்… நடந்தாய்…
அலைபோல் மிதந்து…

காற்றில் வரும் கீதமே,
என் கண்ணனை அறிவாயா…

பசு அறியும் அந்த சிசு அறியும்
பாலை மறந்து அந்த பாம்பறியும்

வருந்தும் உயிருக்கு……..
ஒரு மருந்தாகும்..
இசை அருந்தும் முகம்
மலரும் அரும்பாகும்
இசையின் பயனே
இறைவன் தானே…

காற்றில் வரும் கீதமே,
என் கண்ணனை அறிவாயா….

ஆதார ஸ்ருதி அந்த
அன்னை என்பேன்
அதற்கேற்ற லயம்
எந்தன் தந்தை என்பேன்

ஸ்ருதிலயங்கள் தன்னைச்
சுற்றும் ஸ்வரங்கள் எல்லாம்
உறவாக அமைந்த நல்ல
இசைக் குடும்பம்

திறந்த கதவு என்றும் மூடாது
இங்கு சிறந்த இசை
விருந்து குறையாது
இதுபோல் இல்லம்
எது சொல் தோழி…

காற்றில் வரும் கீதமே,
என் கண்ணனை அறிவாயா…..

அவன் வாய்க் குழலில் அழகாக
அமுதம் ததும்பும் இசையாக
மலர்ந்தாய்… நடந்தாய்…
அலைபோல் மிதந்து…

Link to comment
Share on other sites

நீ இட்ட பிம்பம் நிழலா நிலவா என்று..மண் தொட்ட கையில் ஒளியா?
உன் மௌனச் சத்தம் அசையா இசையா என்னில்
மென் கொக்கிப் போடும் விசையா..?
உந்தன் வானவில் சிரிப்பினை நிறம் பிரிப்பேன்
இவன் காகித இதழ்களில் நகல் எடுப்பேன்
சின்ன ஞாபகக் குமிழியில் உன்னை அடைப்பேன்..

 

 

 

Link to comment
Share on other sites

உன் உள்ளம் நான் காண என்னாயுள் போதாது
என் அன்பை நான் சொல்ல உன் காலம் போதாது..

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

பருவமே புதிய பாடல் பாடு

பருவமே புதிய பாடல் பாடு

இளமையின் பூந்தென்றல் ராகம்

இளமையின் பூந்தென்றல் ராகம்

பருவமே 

புதிய பாடல் பாடு


பூந்தோட்டத்தில் ஹோய் காதல் கண்ணம்மா
பூந்தோட்டத்தில் ஹோய் காதல் கண்ணம்மா

சிரிக்கிறாய் ஹோ ஹஹோ ரசிக்கிறான் ராஜா
சிவக்கிறாள் ஹோ ஹஹோ துடிக்கிறாள் ராணி

தீபங்கள் போலாடும் பார்வை சேரும்

பருவமே 

புதிய பாடல் பாடு


தேனாடும் முல்லை நெஞ்சில் என்னவோ
தேனாடும் முல்லை நெஞ்சில் என்னவோ

அழைக்கிறான் ஹோ ஹஹோ நடிக்கிறான் தோழன்
அணைக்கிறான் ஹோ ஹஹோ தவிக்கிறாள் தோழி

காலங்கள் பொன்னாக மாறும் நேரம்

பருவமே 

புதிய பாடல் பாடு இளமையின் 

பூந்தென்றல் ராகம்

பருவமே
புதிய பாடல் பாடு

 

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

வசந்தமே அருகில் வா

நெஞ்சமே உருகவா

வேண்பனி வீசிடும் மேகங்களே

சிந்திடும் மோகன ராகங்களே

உலா வரும், நிலா தொடும்

காதல் ராஜ வீதியில்

கானம் பாடி ஊர்வலம்

--அமரன்

Link to comment
Share on other sites

பால் போலவே, வான் மீதிலே

யார் காணவே நீ காய்கிறாய்

நாளை இந்த வேளை பார்த்து ஓடிவா நிலா

இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா.

--வாலி.

Link to comment
Share on other sites

ஆளப் போரான் தமிழன் உலகம் எல்லாமே

வெற்றி மகன் வழி தான் இனிமே எல்லாமே 

வீரன்னா யாருனு இந்த நாட்டுக்கே அவன் சொன்னானே

வாயில்லா மாட்டுக்கும் அட நீதிய அவன் தந்தானே

சொல்லி சொல்லி சரித்திரத்தில் பேர் பொரிப்பான்

நெஞ்சில் அள்ளி காற்றில் நம்ம தேன் தமிழ் தெளிப்பான்

மின்னும் உலக மேடை அங்க தமிழப் பாட

பச்சத் தமிழ் உச்சிப் புகழ் ஏறி சிரிக்கும்

வாராயோ வாராய் நீ அன்பா வந்தா ஒளிக் கொடுப்போம்

வாராயோ வாராய் நீ வம்பா வந்தா சுளுக்கெடுப்போம்

 

அன்பக் கொட்டி எங்க மோழி அடித் தளம் போட்டோம்

மகுடத்த தரித்திர "ழ"கரத்த சேர்த்தோம்

தலைமுறை கடந்துமே விரிவென பார்த்தோம்

உலகத்தின் முதல் மொழி உசுரெனக் காத்தோம்

நாள் நகர மாற்றங்கள் நேரும் உன் மொழி சாயும் என்பானே

பாரிளைய தமிழனும் வருவான் தாய் தமிழ் தூக்கி என்பானே

கடைசித் தமிழனின் இரத்தம் எழும் வீழாதே...

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • 1 month later...

பொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்
பொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்
அட எண்ணம் மீறுது வண்ணம் மாறுது கண்ணோரம்
பொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்

மழை பூக்களே ஒதுங்க இடம் பார்க்குதே
மலர் அம்புகள் உயிர் வரைக்கும் தாக்குதே
மழை செய்யும் கோளாறு  கொதிக்குதே பாலாறு
மழை செய்யும் கோளாறு கொதிக்குதே பாலாறு
இது பாடலால் இசைக்கும் காமன் பூஜக்கு நேரமா
இது பாடலால் இசைக்கும் காமன் பூஜக்கு நேரமா
இந்த ஜோடிவண்டுகள் கோடு தாண்டிடுமா

………..பொன்வானம் பன்னீர்……………

தங்க தாமரை மலர்ந்த பின்னும் மூடுமோ
பட்டு பூங்கொடி படற இடம் தேடுமோ
மலர்கணை பாயாதோ மது குடம் சாயாதோ
மலர்கணை பாயாதோ மது குடம் சாயாதோ
இந்த வெள்ளை மல்லிகை தேவ கன்னிகை தானமா
இந்த வெள்ளை மல்லிகை தேவ கன்னிகை தானமா
மழை காமன் காட்டில் பெய்யும் காலம்மம்மா…

………….பொன்வானம் பன்னீர்………………

Link to comment
Share on other sites

  • 1 month later...

நமக்கென பல போர்கள் இருக்கையில்

வெளியிருந்தொரு விண்கல் வருவதா?...

அதை உடைத்திடு, கதவடைத்திடு,. பின் நாம் போரிடுவோம்...

மொழி, மத, இன பேதம் இருக்கையில்

நமை அழித்திட வானம் விழுவதா?,

அதை தடுத்திடு கதை முடித்திடு, பின்னே நாம் அழிவோம்...

--  பல நாய்கள் தனக்கென விசுவாசம் காட்ட முயன்ற நாயை படை கொண்டு எதிர்க்க வருகையில் அந்த நாய் தன் மரபணுவை தாங்கி நிற்பவளுக்கு பாசாங்கு மிரட்டல் விட, தன் மரபணு திரும்பெதிற்கையின் பலத்தை கொண்டு படை கொண்டு வந்த நாய்களை மிரள ஓடச் செய்தது...

நிற்க...

பாடம் கண்ட தான், நள்ளிரவில் கையும் காலும் மூக்கும் கொண்டு ஆட வந்த காரணம் என்ற பாடல் வரிகளுக்கு அர்த்தம் காண முனைப்பில் இருக்கையில், நாயின் கூக்குரலுக்கு பதிலளிக்கும் வகையில் புறம் வருகையில் படை கொண்டு வந்த நாய்களுக்கு அஞ்சி புகலிடம் தேட தன் வீட்டிற்குள் புக முடியாத இடைவெளியில் நுழைய முயன்ற நாயை வேலியின் பக்கத்தில் இருந்த தடியை எடுத்து மிரட்டுவது போலொரு  செய்ககையை   புறிய,  அடுத்த நொடியில் உள் புக முயன்றது, காவல் நாயை பொல்  செயற்கையாக நிலத்தை முகற்ந்து செல்ல படை கொண்டு வந்தவைகள் கலைந்து சென்றன...

Link to comment
Share on other sites

  • 5 months later...

எங்கேயோ திக்கு திசை

காணாத தூரம் தான்

எம்மாடி வந்ததென்ன 

என் (நம்) வாழ்க்கை ஓடந்தான்

காவேரி தீரம்விட்டு கால்கள் வந்ததடி

காணாத சோகமெல்லாம் கண்கள் கண்டதடி...

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

காதல் என்பது நேரச் செலவு

காமம் ஒன்றே உண்மை துறவு

நேசம் பாசம் போலி உறவு 

எல்லாம் கடந்து மண்ணில் உலவு

யாருடன் கழிந்தது இரவு

அதை ஞாபகம் கொள்பவன் மூடன்

"அணியும் நாற்றம் கொண்டே

அவளின் பெயரை சொல்பவன் போகன்"

--பிரதமருக்கு இப்படி இருந்தால் தான் பிடிக்கிது...

Link to comment
Share on other sites

  • 1 year later...

இந்த பாடல் தற்பொழுது என் காதுகளில் வரிசையாக வந்த பாடல்களில் நிலை கொண்டுள்ள பாடல்... கவிப்பேரரசு வைரமுத்து வின் மெய் வண்ணத்தில்...

நொறுங்கும் உடல்கள்

பிதுங்கும் உயிர்கள்

அழுகும் நாடு

அழுகின்ற அரசன்

பழம் தின்னும் கிளியோ

பிணம் தின்னும் கழுகோ

தூதோ முன்வினை தீதோ

களங்களும் அதிர

களிறுகள் பிளிற

சோழம் அழைத்து போவாயோ

தங்கமே எம்மை தாய்மண்ணில் சேர்த்தால்

புரவிகள் போலே புரண்டிருப்போம்

ஆயிரம் ஆண்டுகள் சேர்த்த கண்ணீரை

அருவிகள் போலே அழுதிருப்போம்

அதுவரை அதுவரை ஓ......

தமிழர் காணும் துயரம் கண்டு

தலையை சுற்றும் கோலே அழாதே

என்றோ ஒருநாள் விடியும் என்றே

இரவைச் சுமக்கும் நாளே அழாதே

நூற்றாண்டுகளின் துருவை தாங்கி

உறையில் தூங்கும் வாளே அழாதே

எந்தன் கண்ணின் கண்ணீர் கழுவ

என்னோடழும் யாழே அழாதே...

 

Link to comment
Share on other sites

  • 6 months later...

என் வாழ்க்கை என்னும் கோப்பையில், இது என்ன பானமோ!!!

பருகாமலே ருசி ஏறுதே, இது என்ன ஜாலமோ!!!...

Link to comment
Share on other sites

  • 10 months later...

களத்திற்கு கடைசியாக விஜயம் செய்து பத்து மாதங்கள் தான் ஆகிறது...

ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஓடிவிட்டதாக உணர்வு...

Link to comment
Share on other sites

ஓம் பைர ருத்ராய மஹா

ருத்ராய கால

ருத்ராய கல்பாந்த

ருத்ராய வீர

ருத்ராயருத்ர

ருத்ராய கோர

ருத்ராய அகோர

ருத்ராய மார்தாண்ட

ருத்ராய அண்ட

ருத்ராய ப்ரமாண்ட

ருத்ராய சண்ட

ருத்ராய பிரசண்ட

ருத்ராய தண்ட

ருத்ராய சூர

ருத்ராய வீர

ருத்ராய பவ

ருத்ராய பீம

ருத்ராய அதல

ருத்ராய விதல

ருத்ராய சுதல

ருத்ராய மஹாதல

ருத்ராய தசாதல

ருத்ராய தலாதல

ருத்ராய பாதாள

ருத்ராய நமோ நமஹ: 

அண்டப்ரமாண்ட கோட்டி

அகில பரிபாலனா
பூரணா ஜகத்காரனா சத்யதேவ தேவப்ரியா
வேத வேதார்த்த சாரா யக்ஞ யக்ஞொமயா
நிஷ்சலா துஷ்ட நிக்ரஹா சப்தலோக சௌரக்ஷனா
சோம சூர்ய அக்னி லோச்சனா ஷ்வேதரிஷப வாஹணா
சூலபாணி புஜங்க பூஷணா திரிபுர நாச நர்த்தனா
ப்யோமகேஷ மஹாஸேன ஜனகா
பஞ்சவர்த்த பரஸுஹஸ்த நமஹ:
ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்
பஜே ஹம்
ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்
பஜே ஹம் 

இது நான் கடவுள் இயக்குனர் பாலா இயக்கிய படமாகும்...

--சமக்கிருதம் அதை சுத்தமாக ஏறெடுத்தும் பார்த்ததில்லை எனினும் ஒட்டுமொத்தமாக புரியவில்லை என்று கூற இயலாது... தடிமன் செய்ய பட்ட வார்த்தைகளை தவிர மற்றவை சுத்தமாக புரியவில்லை எனலாம்... ஆனால் இரண்டையும் கலந்து கேட்கும் பொழுது சிவனை பற்றிய பாடல் என்றும் அவனை பற்றி ஆக்ரோஹஷமாகவும் பாடுவதை உணர்ந்து மகிழ்ச்சியில் திளைக்க முடிகிறது... கண்டிப்பாக இந்த குறிப்பிட்ட பாடலில் இசைஞானின் பங்கை தவிர்க்க இயலாது...

மனித மனது புரிந்தும் புரியாத ஒன்றை கேட்கும் பொழுது இயல்பாகவே அதை எத்தனை முறை கேட்டாலும் அதன் சுவை குறையாது... ஒன்றை முழுவதுமாக புரிந்து கொண்டால் அதை மறுபடி மறுபடி கேட்க கேட்க பழக பழக பாலும் புளிக்கும் என்ற ரீதியில் புளித்துவிடும்...

இது மனிதர்களுக்கு...

"என்னை பழித்தாலும் தமிழில் பழித்து பாடு" என்று கடவுள் நிலையை அடைந்தவன் சொல்வதாக எங்கோ படித்ததாக ஞாபகம்...

அல்லது கடவுளுக்கு மனிதர்கள் தன் (மனித) நிலையில் இருக்கும் புரிந்தும் புரியாமல் பாடும் பாடலில் தான் மனித பார்வையில் பார்த்து விருப்பு வெறுப்பு கொள்வாரா...!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.