Jump to content

தலித்தியமும் தமிழ் தேசியமும்

Recommended Posts

தலித்தியமும் தமிழ் தேசியமும்

தலித்தியம் என்ற ஒரு சொல்லை இப்போது ஈழத் தமிழ்ப்பரப்பில் அறிமுகப்படுத்தும் ஒரு முயற்சி நடக்கிறது. அதை அறிமுகப்படுத்துபவர்கள் புலி எதிர்ப்பையும் அதோடு இணைப்பதால் பலருக்கு அந்தச் சொல்லைக் கேட்டதும் இயல்பான ஒரு கோபமும் எரிச்சலும் வருகிறது. இந்தக் கோபத்தையும் எரிச்சலையும் வெளிப்படுத்துபவர்கள் தலித்தியம் என்ற அந்தச் சொல் குறிக்கும் அர்த்தத்தை புரிந்தகொண்டு அதை வெளிப்படுத்தவில்லை. அந்தச் சொல்லை தங்களது புலி எதிர்ப்புச் செயற்பாட்டுக்கு பயன்படுத்துவோரை வைத்தே இந்தக் கோபமும் எரிச்சலும் வருகிறது. தலித் என்பது இந்திய பெருநிலப்பரப்பில் சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களுக்கான ஒரு பொது அடையாளமாக இதைக் கொள்கிறார்கள். இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் இந்த மக்களை 'ஹரிஜனம்' (ஹரி என்பது விஷ்ணு) என்று மகாத்மா காந்தி பெயர் சூட்டி அழைத்தார். அதாவது கடவுளின் குழந்தைகள் என்பது இதன் பொருளாகும். ஆனால் இந்து மதத்திலுள்ள வர்ணக் கோட்பாடே சாதியத்துக்கு அடிப்படையாக இருக்கிறது என்ற கருதிய இந்த மக்களுடைய அமைப்புக்கள் இந்த மதக்குறியீட்டுச் சொல்லால் தாங்கள் அழைக்கப்பட்டவதை மறுத்து தலித்துக்கள் என்று தங்களை அழைத்துக்கொண்டார்கள்.

தெற்கே கன்னியாகுமரி கடற்கரையோரத்திலிருந்து வடக்கே இமயமலைக் சாரலிலுள்ள குக்கிராமங்கள் வரை இந்திய பெரு நிலப்பரப்பெங்கும் பரந்து வாழும் ஒடுக்கப்பட்டமக்களும் (சாதியத்தால்)தங்களை தலித்துக்கள் என்று அழைக்கிறார்கள். அவர்களுக்குரிய அரசியல் கோட்பாடு தலித்தியம் எனப்படுகிறது.

இந்தியாவை பொறுத்தவரை அங்குள்ள மக்களுக்குரிய பிரதான முரண்பாடாக சாதிய முரண்பாடே இருக்கிறது. இந்திய தேசியம் என்பது இந்த முரண்பாட்டை கட்டிக்காக்கின்ற அமைப்பாகவே இருக்கிறது.இன்றைக்கும் சாதி குறைந்தவரை மலம் உண்ண வைப்பதும் உயிரோடு எரிப்பதும் உணவகங்களில் தனித் தட்டு தனிக் குவளை வைத்து தனிமைப்படுத்துவதும் தமிழகக் கிராமங்களில் இன்று வரை தொடர்கிறது. இந்த நிமிடம் வரையில் தமிழகம் மட்டும் அல்லாமல் இந்திய சமூகம் முழுவதுமே சாதியச் சமூகமாக பிளவுபட்டுப் போய்கிடக்கிறது. தீண்டாமை என்பது வெளிப்படையாகவே இருக்கிறது. இன்று வரை சாதியக் கலப்பு எற்பட்டுவிடும் என்பதற்காக காதல் திருமணங்களை ஏற்றுக் கொள்ளாத மனப்பான்மையும் காதல் என்றால் தீண்டத் தகாத ஒன்று என்ற சிந்தனையும் மக்கள் மத்தியிலே இருக்கிறது.

கட்சி அரசியலுக்காகவும் அதிகாரவர்க்க நலன்களுக்காவும் சாதியம் கட்டிக் காக்கப்படுவதோடு ஒடுக்கு முறையும் சாதிக் கலவரங்களும் திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றன. அதிகாரத்தை கையில் வைத்துள்ள மேல்தட்டு வர்க்கம் அடித்தட்டு மக்கள் மீது திணிக்கும் அடக்குமுறைக்கு எதிராக அந்த மக்கள் சாதி அமைப்புக்களின் கீழ் அணி திரள்வது அங்கு தவிர்க்க முடியாததாகிறது. இல்லையென்றால் தஞ்சாவூர் மாவட்டம் கீழ் வெண்மணியில் நிகழ்ந்து போல அவர்கள் குடும்பம் குடும்பமாக எரித்துக் கெல்லப்பட்டு விடுவார்கள்.இது இந்திய தழிழக நிலப்பரப்பக்குரிய முரண்பாட்டின் தன்மையும் கள நிலமையும ஆகும்.

இதை நாங்கள் அப்படியே கொப்பியடித்துக் கொண்டு வந்த எங்களுடைய நாட்டிலே பொருத்த முடியாது. ஈழத் தமிழர்களை பொறுத்தவரை சாதிய முரண்பாடு என்பது அடிப்படை முரண்பாடாகும் அது இப்போது பிரதான முரண்பாடாக இல்லை. இப்போது சிறீலங்கா விமானப்படை எமது தாயகத்தின் மீது குண்டுபோடும் போது சாதி பார்த்துக் குண்டு போடுவதில்லை. சிறீலங்கா படையினர் எறிகணைத்தாக்குதல் நடத்தும் போது இது உயர்சாதிக்காரர் வாழும் இடம். இது சாதி குறைந்தவர்கள் வாழும் இடம் என்றெல்லாம் பார்த்து தாக்குதல் நடத்துவதில்லை. சிறீலங்கா அரசினதும் அதை இயக்குகின்ற பௌத்த சிங்கள பேரின வாதிகளினதும் இலக்கு ஒட்டுமொத்த தமிழினத்தையும் அழித்து அல்லது அடக்கி தமது மேலாண்மை நிலைநாட்டுவதாகும். ஈழத் தமிழ் மக்களைப் பொறுத்தவரை இன்று பிரதான முரண்பாடாக இருப்பது இன முரண்பாடாகும்.

தலித்தியத்தை எமது தளத்தக்கு இறக்குமதி செய்ய நினைப்பவர்கள் தங்களது செயலை வலுப்படுத்துவதற்காக ஈழப் போராட்டம் என்பதே மேட்டுக் குடியினரின் போராட்டம் என்று சித்தரிக்க முனைகிறார்கள். தமிழீழ தேசியத் தலைவரையும் விடுதலைப்புலிகளையும் மேட்டுக்குடியினரின் நலன்களை பாதுகாப்பவர்களாக சித்தரிக்க விளைகிறார்கள். தமிழ் தேசியவாதத்தக்கு சிந்தைனைக்கு வடிவம் கொடுத்தவர் ஆறுமுக நாவலர் என்றும் சிறீலங்கா அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தவர்கள் யாழ்ப்பாண மேட்டுக்குடி இளைஞர்களே என்றும் நிறுவி அதன் மூலம் தமிழீழ விடுதலைப்போராட்டம் அடித்தட்டு மக்களுக்கு எதிரானது அது அதிகாரவர்கக்த்தின் மேலாண்மையை நிலை நிறுத்தவே நடக்கிறது. அதனால் சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் எல்லாம் தலித்துக்கள் என்று அடையாளத்துக்குள் ஒன்றிணைய வேண்டும் என்ற இவர்கள் வாதிடுகின்றனர்.

முதலாவதாக இலங்கையில் இருந்த சாதியால் ஒடுக்கப்பட்ட மக்கள் 'ஹரிஜன்கள்' என்ற பொது இந்துத்துவ அடையாளத்தால் அழைக்கப்படவும் இல்லை அவ்வாறு அவர்கள் ஒரு மத அடையாளத்தின் கீழ் ஒருபோதும் ஒன்றுபட்டுப் போராடவும் இல்லை. யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருந்த ஒடுக்கப்பட்ட மக்கள் பஞ்சமர்கள் என்று குறிப்பிடப்பட்டாலும் பொது அரசியல் வழக்காக சிறுபான்மைத் தமிழர்கள் என்றே அழைக்கப்பட்டார்கள். தீண்டாமையின் வீச்சு 1970 களுக்கு முன்னர் இருந்ததைப் போல இப்போது இல்லை. அதேபோல அடிமை குடிமை முறையும் இப்போது இல்லை. ஓடுக்குபவனை திருப்பி அடிக்க திராணியற்று அல்லது உரிமையற்று எல்லாம் தலைவிதி என்று சொல்லிக்கொண்டிருந்த சமூகம் இப்போது தாயகத்தில் இல்லை. இந்தியவில் தலித் தலித்தியம் என்ற சொல்லுருவாக்கத்துக்கு அடிப்படையாக களயதார்த்தம் ஈழத்தில் இல்லை. ஈழத் தமிழர்களான எங்களைப் பொறுத்த வரை நாங்கள் தமிழர்கள் என்ற பொது அடையாளத்துக்குள் நின்று எங்களுக்கு எதிரான அடககு முறைகளுக்கும் ஒடுக்கு முறைகளுக்கும் எதிராகப் போராடுவதே இன்றைய தேவையாகும்.

ஆறுமுகநாவலர் தமிழ்தேசியவாதத்துக்கு அடித்தளம் இட்டவர் என்று கூறுவதன் மூலம் அவர் சாதிய மேலான்மையை நிலை நிறுத்தியவர் என்று நிறுவி அதனால் தமிழ் தேசியம் என்பதே அதை நிலைநிறுத்துவதை அடிப்படையாகக் கொண்டது எனறு காட்ட முற்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தேசிய சிந்தனை என்பது ஒரு சமூகத்துக்குள் இருக்கும் அனைத்து முரண்பாடுகளையும் களைந்து அந்த சமூகத்தை ஒரே இனம் என்ற அடிப்படையில் ஒன்றுபட வைப்பதாகும். ஆனால் ஆறுமுக நாவலரோ சாதி பார்த்ததன் மூலம் தமிழினத்தை பிளவுபடவைத்தார். ஐரோப்பியர்களின் வருகையால் பிடி தளர்ந்து போன சாதிகட்டமைப்பை சற்சூத்திரக் கோட்பாடு என்ற ஒன்றைக் கொண்டு வந்து இறுக்கமாக்கினார். ஆங்கிலக் கல்வி கற்று பைபிளை அனைவரும் படித்துப் புரிந்து கொள்ளக் கூடிய இலகு தமிழில் மொழிபெயர்த்துக் கொடுத்து கிறீஸ்தவ மதமாற்றத்துக்கு ஆரம்பத்தில் மறைமுகமாக துணைபோன அவர் அடுத்தட்டு மக்கள் மதம்மாறி ஆங்கிலக்கல்வி கற்று வளர்ச்சியடைவது தனது சமூக மேலாண்மையை பாதிக்கும் என்று உணர்ந்து கொண்டதும் கிறீஸ்தவமத எதிர்ப்பை முதன்மைப்படுத்தினார். சைவ மேன்மையை வலியுறுத்திய அவர் கிறிஸ்த்தவ மதமாற்றத்தை தடுத்து நிறுத்தி தமிழ் மக்கள் அனைவனையும் ஒரே இனம் ஒரே மதத்தவர் என்ற அடிப்படையில் ஒன்றிணைக்கும் தேசியச் சிந்தனை உடையவராக இருந்திருந்தால் அவர் தான் உருவாக்கிய சைவப்பிரகாச வித்தியாசாலைகளில் தமிழர்கள் என்ற அடிப்படையில் எந்தவித வித வேறுபாடுமின்றி அனைவருக்கும் கல்வி கற்கும்வாய்ப்பை கொடுத்திருப்பார். ஒரு சமூகத்தின் உயிர்நாடியாகவும் தேசிய அடையாளமாகவும் இருப்பது கிராமியக் கலைகளாகும். அந்தக் கலைகளின் நிகழ்களங்களாக ஆலயங்களே இருப்பது வழக்கமாகும். ஆனால் ஆறுமுக நாவலரோ இழிசனர்களர்கள் என்று தான் கருதிய ஒடுக்கப்பட்ட மக்களால் நடத்தப்படும் இந்தக் கலைகள் ஆலயங்களின் புனிதத்தை கெடுப்பதாக கூறி அவற்றை ஆலங்களில் நிகழ்த்தக் கூடாதென்று தடை செய்ததன் மூலம் இன்னொரு விதத்திலும் தமிழ் தேசிய உருவாக்கத்துக்கு இடையூறு செய்தார். ஆறுமுக நாவலர் சிறந்த தமிழ் அறிஞர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அவர் தமிழுக்கு செய்த நன்மை 30 வீதம் என்றால் தமிழ் சமூகத்துக்கு செய்த தீமை 70 வீதமாகும். எனவே ஆறுமுக நாவலரில் இருந்தே தமிழ் தேசியவாதம் தோற்றம் பெற்றது என்று கூறுவது எற்புடையதல்ல. அவ்வாறே தமிழுர்களுடைய உரிமைப்போர் யாழ்ப்பாண மேல்தட்டு பிரிவினரால் அவர்களுடைய வர்க்க நலன்களுக்காக ஆரம்பிக்கப்பட்டது என்று கூறுவதும் வரலாற்றை திரிக்க வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு முன்வைக்கப்படும் ஒரு கூற்றாகும்.

குடாநாட்டில் சாதி ரீதியாக ஓடுக்ப்பட்ட மக்கள் தாங்கள் குடியிருந்த நிலைத்தை தங்களுக்கு சொந்தமாக்குவதற்கும் புதிய நிலங்களை வாங்குவதற்கும் 1892ம் ஆண்டும் 1904 ம் ஆண்டும் நடந்திய நில உரிமைப் போராட்டங்களும் 1910 ம் ஆண்டும் 1920ம் ஆண்டும் நடத்திய கல்வி கற்கும் உரிமை மற்றும் மேலாடை அணியும் உரிமை கல்வீடு கட்டும் உரிமை என்பவற்றுக்காக நடத்திய போராட்டங்களும் 1935 மற்றும் 1960 களில் நடந்த தீண்டாமை ஒழிப்பப் போராட்டங்களே தமிழ் தேசிய சிந்தனையின் உருவாக்கத்திற்கான அடிப்படைகளாகும். ஒரு சமுகம் எதிர்கொள்ளும் அக-புற முரண்பாடுகளின் ஐக்கியமும் போராட்டமும் தான் அந்த சமூகத்தை அடுத்த கட்டத்தை நோக்கி தள்ளுகிறது என்பது இயங்கியல் விதியாகும். இந்த வகையிலேயே தமிழ் சமூகம் முதலில் தனக்குள் இருந்த அகமுரண்பாட்டுகளுக்கு எதிராக போராடி அதன் அடுத்த கட்டமாக தன் மீது புற நிலையில் இருந்து திணிக்கப்பட்ட பௌத்த சிங்கள பேரினவாதத்தக்கு எதிராக தற்போது போராடுகிறது.

சிறீலங்கா அரசு தமிழ் மக்களுடைய விடுதலை உணர்வை சிதைப்பதற்கும் தமிழ்தேசிய ஒருமைப்பாட்டை கலைப்பதற்கும் பிரதேசவாதம் சாதியம் ஆகிய நட்பு முரண்பாடுகளை பகை முரண்பாடுகளாக மாற்றும் முயற்சியில் திட்டமிட்ட ஈடுபட்டு வருகிறது. இதற்காக ஒரு பெரிய கருத்தில் போரையே அது தொடுத்திருக்கிறது. அதன் ஒரு அங்கம் தான் விடுதலைப்புலிகள் ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தினரின் நலன்களுக்காக மட்டும்தான் போராடுகிறார்கள் என்று சித்தரிக்க முயல்வதாகும். புலம் பெயர்ந்த தமிழ் சமூகம் போராட்டத்தின் ஆதார சக்தியாக ஒன்ற திரள்வவதை தடுப்பதற்கான வேலைத் திட்டத்தையும் சிறீலங்கா அரசு செய்துவருகிறது.

இந்த யாழ் களத்திலே அண்மைக்காலமாக இந்துத்துவத்தை நியாயப்படுத்தவது பெரியாரை தூற்றுவது ஆகிய இரண்டு விடயங்கள் நடந்த வருகின்றன. தலித்தியம் பேசுபவர்கள் புலி எதிர்ப்பை அதனுடன் இணைப்பதைப் போல இந்துத்துவத்தை நியாயப்படுத்த பெரியாரை தூற்றும் பிரிவினர் தமிழ் தேசிய ஆதரவு என்ற விடயத்தையும் தங்களது கரத்தியலுடன் இணைக்கின்றார்கள். தலித்தியத்தை தாயகத்துக்கு இறக்குமதி செய்யும் நினைக்கும் பிரிவினர் தமிழ் தேசியம் என்பதே மேல்தட்டுப்பிரிவினரின் நலன்களுக்காக அடித்தட்டு மக்களை ஓடுக்குவது என்று கூறிவருவதற்கு சாட்சி செல்வதைப் போலவே இந்துத்துவ ஆதரவு மற்றும் பெரியார் எதிர்ப்பு என்பவற்றை முதன்மைப்படுத்துபவர்களுடைய எழுத்துக்கள் இருக்கின்றன.

இந்துவத்தை அடிப்படையாகக் கொண்ட சனாதன மதம் என்பது வேறு தமிழர் மதம் என்பது வேறு என்பதை முதலில் நாங்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஒவ்வொரு சமூகமும் தனக்கென்று ஒரு மெய்யிலை கொண்டிருப்பதைப் போலவே தமிழ் சமூகமும் தனக்கென்று தனித்துவமான மெய்யிலை கொண்டிருக்கிறது. தமிழர் மெய்யில் எப்படி பார்ப்பணிய மெய்யிலால் ஆக்கிரமிக்கப்பட்டது என்பதை ஆராயுங்கள். தமிழ் சமூகத்தில் இருந்த ஓதுவார்கள் அல்லது அந்தணர்களும் வர்ணக் கோட்பாட்டையும் அதன் சாராம்சமான புனிதம் தீட்டு என்பவற்றையும் தங்களது சடங்காசாரங்களாக் கொண்டுள்ள பார்ப்பணியர்களும் ஒன்றல்ல என்பதை உணருங்கள்.

சிவன் கந்தன் கண்ணன் காளி ஐயனார் முதலான தமிழ் கடவுள்கள் எப்படி பார்பணியக் கடவுள்களாக மாற்ப்பட்டார்கள் என்பதை ஆராயுங்கள். தமிழ்நாட்டிலுள்ள தமிழ் கோவிலான சிதம்பரத்தில் தேவாரம் திருவாசகம் பாடுவதற்கு நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்ற அந்தக் கோவில் தீட்சதர்களுடைய மனோபாவம் என்ன என்பதை விவாதியுங்கள். இந்து மதத்தின் மேன்மை சிறப்பு என்பதைபற்றி எல்லாம் மதம் என்ற ஒரு தனியான தலைப்பின் கீழ் ஆராயுங்கள். இந்து மதத்தில் உள்ள வர்ணக் கோட்பாடு சரியா தவறா என்பதை விவாதியுங்கள். தயவு செய்து அதை விடுத்து தமிழ் தேசியம் என்பது இந்து மதத்தை அடிப்படையாகக் கொண்டது என்று அதனுடன் இணைத்து பேசுவதற்கு முற்படாதீர்கள். இந்துமத மேன்மைக்காவே விடுதலைப் போராட்டம் நடக்கிறது என்ற எதிரிகளின் பிரச்சாரத்துக்கு துணைபோகாதீர்கள். தமிழ் தேசியம் என்பது அனைத்து தமிழ் மக்களுக்கும் பொதுவானது பாரபட்சம் காட்டதது. பிறப்பால் தொழிலால் மக்களை இழிவுபடுத்தாதது என்பதை உங்கள் பேச்சிலும் எழுத்திலும் செயலிலும் காட்டுங்கள். அடுத்து பெரியார் பற்றி எழுதுகின்றவர்கள் உங்களுடைய நோக்கம் என்ன என்பதை தயவு செய்து வெளிப்படையாகச் சொல்லிவிடுங்கள். பெரியார் என்ன செய்தார் அவர் சரியா பிழையா என்ற விவாதிப்பதற்கு செலவழிக்கும் நேரத்ததை எபபடி புலம்பெயர்ந்த தமிழ் மக்களை தமிழ்தேசியத்தின் பால் ஒன்றிணைப்பதற்கு என்ன செய்யலாம். அடையாளம் இழந்து தெருவுக்கு வரும் இளைஞர் கூட்டத்தை நெறிப்படுத்துவதற்கு என்ன செய்யலாம் என்றெல்லாம் ஏன் சிந்திக்கக் கூடாது.

தமிழகத்திலே 1982 ல் இருந்து இன்று வரை தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தன்மையை பௌத்த சிங்கள பேரினவாதிகள் தமிழ் மக்களுக்கு இழைக்கும் அநீதிகளை தமிழகத்தின் பட்டி தொட்டிக் கிராமங்கள் எல்லாம் எடுத்துச் சென்று பிரச்சாரம் செய்தவர்கள், இன்றும் செய்து வருபவர்கள் பெரியாரின் திராவிடர் இயக்கத்தினராகும். தேசியத் தலைவருக்கு தோள் கொடுத்தில் இருந்து தமிழகத்தில் விடுதலப்புலிகள் இயக்கத்துக்கான பரப்புரையை தங்கள் சொந்தப் பரப்பபுரையாக வீடுவீடாக எடுத்துச் சென்று செய்தவர்கள் திராவிடர் கழகத்தினர். இன்று வரை தமிழகம் முழுவதும் குறைந்தது திராவிடர் கழகத்தின் 10 இலட்சம்தொண்டாகள் பல்வேறு நெருக்கடிகளுக்கும் தடைகளுக்கும் மத்தியிலும் உண்மையான தமிழ்தேசிய ஆதரவை கட்டிக்காத்து வருகிறார்கள்.

இன்றைக்கு தமிழகத்திலும் சரி இந்தியாவிலும் சரி தமிழ்தேசியத்துக்கு எதிராக இருப்பவர்கள் யார் ? அதை நசுக்குவதற்கு முனைபவர்கள் யார் என்று பார்த்தீர்கள் என்றால் அத்தனைபேருமே பார்ப்பணிர்கள் என்பதை கண்டு கொள்வீர்கள். 'சோ' இராமசாமயில் இருந்து 'இந்து' ராம் சுப்பிரமணியம் சுவாமி மற்றும் ரோவை - சவுத் பிளாக் எனப்படும் வெளியுறவுத்துறை கொள்கை வகுப்பு பிரிவை ஆக்கிரமித்திருக்கும் பர்ர்ப்பணர்கள் தான் என்பதை கண்டு கொள்வீர்கள்.

1982 ல் இருந்து 1987 வரை தமிழகத்தின் பட்டி தொட்டி கிராமமெங்கும் பரப்புரைக்காக நான் சென்றபோது பெரியார் என்ற அந்த மனிதர் ஏற்படுத்திய தாக்கத்தை நேரில் கண்டிருக்கிறேன். பெரியார் என்ற மனிதர் இல்லை என்றால் தமிழகத்தின் குப்பனும் சுப்பனும் கட்டியுள்ள கோவணத்தையம் பறிகொடுத்த நிலையில் அம்மணமாகத்தான் இருந்திருப்பார்கள். எங்களுடைய தளத்தில் இருந்துகொண்டு பெரியாரை தூற்றுவதற்கும் விமர்சிப்பதற்கும் இப்போது என்ன தேவை வந்தது என்று எனக்குத் தெரியவில்லை. பெரியாரும் அவரது திராவிடர் கழகத்தினரும் ஈழத்தமிழர்களக்கு ஏதாவது தீங்கிளைத்திருக்கிறார்களா?

ஆனால் இந்த பெரியர் எதிர்ப்பு என்பது புலம் பெயர்ந்த தலித்தியவாதிகள் தங்கள் செயல்களை நியாயப் படுத்துவதற்கும் தமிழனத்துரோகிகள் தமிழகத்திலுள்ள தமிழ் தேசிய ஆதரவுதத் தளத்தை சிதைப்பதற்கும் தான் பயன்படும் என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

அடுத்து இன்றைக்கு புலம் பெயர்ந்த நாடுகளிலே 90 வீதமான தமிழ் மக்கள் சாதியத்தை கட்டிக்காக்கிறார்கள். தங்கள் பிள்ளைகளுக்கு சாதிப் பெருமைகளை வீட்டிலேயே சொல்லிக் கொடுக்கிறார்கள். தங்கள் பிள்ளகைள் சாதி விட்டு சாதி திருமணம் செய்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்கள். புலம் பெயர்ந்த தமிழ் இளையோரில் ஒரு குறிப்பிட்ட சத விகிதத்தினர் நன்றாகப் படிக்கிறார்கள் என்றால் அதை விட ஒரு மடங்கு அதிகமான பகுதியினர் சீரழிந்து போகிறார்கள். இதுதான் யதார்த்தம் என்று செல்கின்ற போது இல்லை அப்படிக் கிடையாது என்று சொல்வதன் மூலம் நாங்கள் யாரை காப்பாற்ற நினைக்கிறோம்? யாரை ஏமாற்ற நினைக்கிறோம்?

சீரழிந்த போகிற இந்த இளைஞர் கூட்டத்தை பார்த்து ஊத்தையங்கள். காவாலியள் பொறுக்கிகள் என்று சர்வ சாதாரணமாகச் சொல்லகிறோம். ஆனால் அவர்கள் இவ்வாறு தெருவுக்கு வருவதற்கு என்ன காரணம் என்று நாங்கள் ஆராயத் தயாரில்லை. அவர்களை சமூகப் பொறுப்புள்ளவர்களாக மாற்றுவதற்கு என்ன செய்யலாம் என்றும் யாரும் சிந்திப்பதில்லை. எங்களைப் பொறுத்தவரை அவர்கள் திருந்தாத கேசுகள் என்று கூறி ஓதுக்கிவிடுகிறோம்.1998 ம் அண்டு பாரிஸ் நகரத்தில் நான் நேரடியாக இறங்கி தகவல் திரட்டியதில் 116 இளைஞர்கள் சாதியத்தால் பாதிக்கப்பட்டு படிப்பை கைவிட்டு பெற்றோரை பிரிந்து தெருவுக்கு வந்ததை கணக்கெடுத்திருக்கிறேன். புலம்பெயர்ந்த நாடுகளில் குறிப்பாக பாரிஸ் போன்ற பெரு நகரங்களில் பெற்றோருக்கம் பிள்ளைகளுக்கமான முரண்பாடு அதிகரிப்பதற்கும் அவர்கள் அடையாளம் இழந்து போவதற்கும் சாதியம் முக்கியமான காரமாக இருக்கிறது. இதற்கு நூற்றுக் கணக்கான உதாரணங்களை என்னால் கூறமுடியும். அடுத்து தமிழ் சமூகத்திடம் உள்ள ஒரு பொதுவான குணாம்சம் என்னவென்றால் 'நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்' என்று பிடிவாதம் பிடிப்பது. யதார்த்ததை புரிந்த கொள்ள மறப்பது. அல்லது புரிந்தும் புரியாத மாதிரி நடிப்பது.

தயவு செய்து இந்தப் பிரச்சனையை ஆக்க பூர்வமாக விமர்சிப்பதற்கு முன்வாருங்கள். நிறைய தேடல்களை செய்யுங்கள். நிறைய நூல்களை படியுங்கள். ஆக்கபூர்வமான கருத்துக்களை முன் வையுங்கள். தயவு செய்து இந்தப் பிரசச்னையில் விதண்டாவாதம் செய்ய முற்படாதீர்கள்.

சிவா சின்னப்பொடி

Link to comment
Share on other sites

  • Replies 89
  • Created
  • Last Reply

இந்தக் காலகட்டத்திற்குத் தேவையான அதி முக்கியமான கட்டுரையை மிகப்பொறுமையுடன் எழுதி உள்ளீர்கள்.

எனக்கு இங்கு சிலர் செய்யும் போகிரித்தனத்தால் யாழ்க் களத்தில் எழுதுவது என்பதே வெறுப்பைத் தரும் விடயமாகி விட்டது.

பரது பட்ட வாசிப்பும் இல்லை, ஏன் ,எதற்கு என்று ஆராயவும் மாட்டார்கள், விவாதம் என்றால் விதண்டா வாதமும்,கருதுக்களைச் சொல்ல வருபவர்கள் மீதான தனி நபர் தாக்குதல்களும் தான் இங்கு சிலருக்குத் தெரிந்த கருத்தாடல்.

அறிவென்பது வாசிப்பதாலும் சொல்லபடும் விடயங்களைக் கிரகித்துக் கொள்வதாலும் வருவது.இந்த தேடல் இன்றி விடயம் கூற வருபவர்களைப் பார்த்து மன நோயாளர் என்று கூறுவதனால் இவர்கள் என்னதைச் சாசாதிக்கப் போகிறார்கள்.இவர்களுக்கு அனா ஆவான்னாப் படிப்பதைப் போல பொறுமையாக எழுத உங்களைப் போன்றவர்களாலையே முடியும்.ஒரு வேளை நீங்களும் நேரடியாகக் கருத்தாட வந்ததல் உங்களுக்கும் மன நோயாளர் பட்டம் கட்டி விடுவார்கள், இங்குள்ள மாமேதைகள்.இவ்வாறான போக்கிரித் தனமான கருதாடல்களை ஏற்றுக்கொண்டு எவர் தான் இங்கு எழுத வருவார்கள்?

இங்கே நாவலர் பற்றி எழுதுபவர்கள் நான் பார்த்த அளவில் 'இந்துவின் மைந்தர்கள்'.இவர்கள் பாடசாலையில் தமக்கு புகுத்தப்பட்டதை இங்கு ஒப்புவிக்கின்றனர்.சுய பார்வையோ வாசிப்போ இன்றி இன்னும் பாடசாலைக் கல்வியியே ' நிலையான உண்மை' என்று நம்புபவர்கள்.

இவர்களிடம் எழுதி என்னத்தைக் காணப்போகிறோம் என்ற சலிப்பே மிச்சுகிறது.

ஆனால் தேசிய விடுதலைப்ப் போராட்டத்திற்கு இவர்களின் இந்தத் தான் தோன்றித் தனமான எழுதுக்கள் பெருத்த பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.ஏனெனில் யாழ்க் களத்தில் வரும் கருத்துக்கள் புலம் பெயர் ஈழத் தமிழர்களின் கருதுக்களாக வெளியில் பார்க்கப்படுகிறது.பலருக்கு இவை உபயோகமான பிரச்சார மூலப்பொருட்களாக இருக்கின்றன.

மேலும் தமிழ் நாட்டில் நிறப்பிரிகை குழுவினரால், உட்புகுத்தப்பட்ட பின் நவீனத்துவம் என்னும் கோட்பாடு, தேசியம் என்பது ஒற்றைப் படையாக பாசிசத்தை நோக்கியே செல்லுமென்றும், அது தலித்துக்கள் போன்ற உட் பிரிவினரின் உரிமைகளை மறுக்கும் என்ற கோட்பாட்டில் இருந்தே, சோப சக்தி முதல் ,பல புலி எதிர்ப்பாளர்கள் தங்கள் அரசியற் கருத்தை ஏற்படுத்தி உள்ளனர்.இவர்கள் இதன் மூலம் தமக்கான அரசியற் தளத்தை தமிழ்னாட்டிலும் ஈழத்திலும் ஏற்படுத்த முனைகின்றனர்.இவர்களின் கருதியலுக்கு நாவலரின் சைவ வேளாள நிலை பெருதும் உதவியதாக இருக்கிறது.அதனால் தான் நான் இங்கு பலகாலமாகவே தமிழத் தேசியம் என்பது சாதிய மத அடையளங்களைத் தாண்டியது என்று எழுதி வருகிறேன்.அரசியற் சதிகளை முறையடிப்பதற்கு, கருத்துயல் ரீதியான பிரச்சாரங்களே முன் வைக்கப்பட வேண்டும் ,அதன் மூலமே இவற்றை நாம் தோற்கடிக்கலாம்.வெறுமனே கண்ணைக் மூடிக் கொண்டு இருப்பதாலோ அல்லது தூற்றல்களை எழுதுவதாலோ முறையடிக்க முடியாது.

பின் நவீனதுவம் என்னும் கருதியலையும், தேசியமென்பது, எல்லோரையும் ஒற்றுமைப் படுத்தும் ஒரு கோட்பாடாக, சமூக ஏற்றத் தாள்வுகளைக் களையக் கூடிய ஒரு கோட்பாடாகக் கட்டியமைப்பதே எமக்கான விடுதலையைப் பெற்றுத் தரும்.சைவ வேளாளத்தை முன் நிலைப்படுத்தும் குறுந் தேசிய வாதம் பிரிவினைகளை உண்டு பண்ணி, தமிழத் தேசிய விடுதலைப் போரை உள் இருந்தே கொன்று விடும்.இதனையே வெகு சாமர்த்தியமாக் சில சக்திகள் முன் நகர்த்தி வருகின்றன.ஒரு புறத்தில் டக்கிளசு இந்துக்கோவில்களிப் புனரமைப்பதிலும், கோவில் அட்சகர்களை விலைக்கு வாங்குவதாவும் இருக்க இன்னொரு புறத்தில் சோபா சக்தி வகையறாக்கள் 'தலித்தியம்'என்ற பேரில் தமிழ் நாட்டில் இருக்கும் தலித்திய அமைப்புக்களை நோக்கியும், பெரியாரின் திராவிட அரசியற் சித்தாந்தை ஏற்றிருக்கும் சக்திகளை நோக்கியும் நகர்வுகளை மேற்கொண்டுள்ளனர்.இதன் பிரதிபலிப்புக்கள் புலத்திலும், ஈழத்திலும் எதிரொலிக்கும்.எம்மை வெல்ல ஆயுதங்களை அன்றி இவ்வாறான போக்குக்களையே இப்போது எதிரிகள் பெரிதும் நம்பி உள்ளனர்.

இவற்றை அறியாத இங்கு சிலரும் இணயத்தில் ஆருரன் என்பவர்களும் வெகுவாகவே இவர்களின் பிரச்சாரத்தை வலுப்படுத்தக் கூடிய வகையில் பொறுப்புணர்வு அற்று எழுதி வருகின்றனர். இவற்றைக் கூற விளைபவர்களுக்கு இங்கு கொடுக்கப்படும் பட்டம் தான் மன நோயாளர்.உண்மையான மன நோயாளர் தயவு செய்து சிந்திக்கவும்.உங்கள் சைவ வேளாளக் கருத்தியல்களை 'இந்துவின் வாசற் படியில் ' வைத்துவிட்டு வருவதே நீங்கள் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டாத்திற்குச் செய்யும் மிகப் பெரிய உதவியாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இருவரது அறிவுறுத்தலுக்கும் நன்றி.

Link to comment
Share on other sites

சைவ வேளாளக் கருத்தியல்களை 'இந்துவின் வாசற் படியில் ' வைத்துவிட்டு வருவதே நீங்கள் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டாத்திற்குச் செய்யும் மிகப் பெரிய உதவியாக இருக்கும்.

சொல்லுங்க சொல்லுங்க எவர் கேற்க போறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்னையது யதார்த்த உலகுக்குள் உள்ள மாற்றங்களை சரியாக இனங்காணத் தவறியது.

பின்னையது வழமையான வசைபாடல்களின் சில திருத்தம்.

ஆக அட்வைஸ் ஆசாமிகள் பெருகிவிட்ட நிலையது.

தமிழ் தேசியம் தலித்தியம் சாதியம் என்ற அடிப்படைகளுக்கு அப்பால் வடிவமிடப்பட்டுள்ள ஒன்று. போர்க்களத்தில் தலித்திய சாதிய வேறுபாடுகளுக்கு அப்பால் மக்களும் போராளிகளும் இணைந்துள்ள நிலையில் இன்னும் 50 ஆண்டுகளுக்கு முன்னர் இறங்கி சிலர் காவுவதே முன்னையதன் வெளிப்பாடு.

உலகில் மனிதப் பாகுபாடுகளைக் களைய பல தளங்களில் மனித எண்ணக்கரு மாற்றம் நிகழ வேண்டிய தருணத்தில் இலை கொட்டி அழிந்து கொண்டிருக்கும் ஈழத்து சாதிய சமூகப்பாகுபாட்டுக்கு தண்ணீர் ஊற்றும் செயற்பாடும் அதற்கு அங்கீகாரம் தேடுவதற்கான நோக்கமுமே தமிழ் தேசிய சாயப் பூச்சும்...! இன்று போறவன் வாறவன் எல்லாம் தமிழ் தேசியத்தை உச்சரிச்சிட்டால் அது விடுதலைப்புலிகளின் அங்கீகாரம் பெற்றவை என்ற நிலை உருவாக்கப்பட்டு வருகிறது. தமிழ் தேசியத்தை கருணாவும் உச்சரிக்கலாம் மகிந்தவும் உச்சரிக்கலாம். அதன் செயற்பாட்டு தாக்கத்தை சமூகத்தில் நிறுவக் கூடியது விடுதலைப் புலிகளும் போராட்டமும் மட்டுமே..! யாழ் கள வெட்டிப் பேச்சுக்களும் பெயர் தேடும் கட்டுரைகளும் அல்ல..! :lol::lol::rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இணயத்தில் ஆருரன் என்பவர்களும் வெகுவாகவே இவர்களின் பிரச்சாரத்தை வலுப்படுத்தக் கூடிய வகையில் பொறுப்புணர்வு அற்று எழுதி வருகின்றனர்

அவர் பிரபாகரன் கோயிலில் தாலிகட்டியதையும் வற்றாப்பளைக்கு பொங்கியதையும் வைத்து தமிழ்த்தேசியம் எண்டது இந்துத்துவம் என்று நிறுவிய விண்ணர் எல்லோ..

தமிழ்த் தேசியத்தையும் இந்துத்துவத்தையும் பிரித்துப் பார்த்தாலே பாதிப் பிரச்சனை தீர்ந்து விடும்.

Link to comment
Share on other sites

ஐயா தமிழகத்திலுள்ள தமிழ் தேசிய ஆதரவுத் தளத்தை அழிப்பதற்கு சிலர் இங்கே வந்து தூண்டில் போடுகின்றார்கள்.தயவு செய்த அவதானமாய் இருங்கள்.இங்கே எழுகின்ற ஒருவருடைய எழுத்து பாணியில் ஈபிடிபியின் பத்திரிகைளிலும் இணையத் தளங்களிலும் வந்திருப்பதை நான் அவதானித்திருக்கிறேன.இந்த நபர்எல்லாவிடயத்திலும் திட்டமிட்டு பொரியாரை இழுத்து கடித்தக் குதறுவதிலெயே குறியாக இருக்கிறார். இவருடைய நோக்கம் தமிழகத்தில் இருக்கக் கூடிய திராவிடர் கழகம் பெரியார் திராவிடர்கழகம் என்பனவற்றின் ஆதரவை சீர் குலைப்பதாக இருக்கலாம் ஏனென்றால் தமிழகத்தில் டக்ளசின் பருப்பு வேகாமல் இருப்பதறகு இந்த இரண்டு கட்சிகளுமே காரணமாகும். எனவே தமிழ் தேசியத்தின் நலன் கருதி இப்படியான நபரை இனங்கண்டு அவருடைய எழுத்தை கண்காணித்து அதன் நோக்கத்தை புரிந்து கொண்ட பின்னரே களத்தில் இணைப்பதற்கு கள நிர்வாகம் அனுமதி கொடுக்க வெண்டும் என்பதே எனது தாழ்மையான வேண்டுகோளாகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டுமொரு சிவா சின்னப்பொடியின் நல்லதோர் கட்டுரைக்கு நன்றி..

சமூகத்தில் என்ன நடக்கின்றது என்பதையே இணையமூடாகத்தான் அறிந்து கொள்ளும் பலர், தெருவில் இறங்கிச் சேவைகள் செய்பவர்களைவிட தங்களுக்கு அதிகம் தெரியும் என்று நினைக்கின்றனர்.. யதார்த்தத்திற்குப் புறம்பான கற்பனை உலகை யதார்த்தமாக நினைக்கும் இம்மாதிரியானவர்களால் எமது சமூகத்திற்கும் போராட்டத்திற்கும் நன்மை பயக்கக் கூடிய எதையும் செய்யமுடியாது..

புலம்பெயர் சமூகத்திற்கு முக்கியமாகத் தேவைப்படுவது இளையோரை விழிப்புணர்வுக்கு உள்ளாக்கக்கூடிய கருத்துக்களை பரப்பத் தேவையானவர்களே.. தமிழ் சமூகத்தைத் தவிர்த்து அநேகமாக எல்லா சமூகங்களிலும் இப்படியான அமைப்புக்கள் உள்ளன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திமுக.. அதிமுக காலங்களிலதான் டக்கிளஸ் இந்தியா போய் பதுங்கி இருந்து பிரேமதாசாவிடம் பத்திரமாக வந்து சேர்ந்தார். :lol::lol: இதில யாரை சார் நம்புறது. பாருங்க நீங்களே டக்கிளசின்ர பத்திரிகையை ஏதோ ஒரு தேவைக்காக வாங்கிப் படிச்சிட்டுத்தான் இருக்கிறீங்க. அந்த தேவை என்ன சார்..??! உறுதியான கொள்கை உள்ளவனுக்கு எதுக்கு சார் அடுத்த இடத்தில மேய்சல்..!

பெரியாரை மெச்சினால் தான் ஆதரவு என்றால் அந்த ஆதரவு ஈழத்தமிழர்களுக்கு எதுக்கு. அதால ஈழம் கிடைத்து உலக அங்கீகாரம் கிடைத்திடுமா என்ன..?! ஏன் இந்திய மத்திய அரசு சிறீலங்காவுக்கு வழங்கும் உதவியைத் தானும் நிறுத்திடுமா..?! ஏதோ உள்ளூராட்சி மாநிலத் தேர்தல் என்று உரக்கக் கத்திட்டு அடங்கிட வேண்டியதுதான். அப்புறம் கதிரை பிடிச்ச உடன பல்டி அடிதான். போதாக்குறைக்கு கொடுக்க மாட்டம் என்று சொல்ல வைச்சிட்டு ரகசியமா கப்பல் கூட கொடுக்கிறீனம். ஆயுதம் கூட தமிழகத்தில் இருந்து சிங்களத் துறைமுகங்களுக்குப் போகுது. இதுதான் ஆதரவின் வெளிப்பாடா..??! :P :rolleyes::lol:

யாருக்கு சொல்லுறீங்களோ தெரியல்ல. உந்த பாணி பணியாரக்கதைகளைப் பரப்பிட்டு இருக்காம சரக்கிருந்தா கருத்தில சொல்லுங்க. எடுக்கிறவன் எடுத்துக்குவான் தேவையின் படி. :lol::lol:

மீண்டுமொரு சிவா சின்னப்பொடியின் நல்லதோர் கட்டுரைக்கு நன்றி..

சமூகத்தில் என்ன நடக்கின்றது என்பதையே இணையமூடாகத்தான் அறிந்து கொள்ளும் பலர், தெருவில் இறங்கிச் சேவைகள் செய்பவர்களைவிட தங்களுக்கு அதிகம் தெரியும் என்று நினைக்கின்றனர்.. யதார்த்தத்திற்குப் புறம்பான கற்பனை உலகை யதார்த்தமாக நினைக்கும் இம்மாதிரியானவர்களால் எமது சமூகத்திற்கும் போராட்டத்திற்கும் நன்மை பயக்கக் கூடிய எதையும் செய்யமுடியாது..

புலம்பெயர் சமூகத்திற்கு முக்கியமாகத் தேவைப்படுவது இளையோரை விழிப்புணர்வுக்கு உள்ளாக்கக்கூடிய கருத்துக்களை பரப்பத் தேவையானவர்களே.. தமிழ் சமூகத்தைத் தவிர்த்து அநேகமாக எல்லா சமூகங்களிலும் இப்படியான அமைப்புக்கள் உள்ளன.

தமிழ் சமூகத்துக்கு தேவையில்ல. அது நல்லாவே இருக்குது..! நாசம் பண்ணுற அமைப்புக்களை ஏன். இளையோர் உந்தக் கண்றாவிகளுக்கு இடமளிக்கும் நிலையில் இல்லை. உது இரண்டும் கெட்டானுங்கள் தங்களைப் போலவே உலகமும் பிரண்டு பிரண்டு உருளுது என்று நினைக்கிறதன் விளைவு. இளையோர் தான் இவர்களுக்கு விழிப்புணர்வூட்டும் அமைப்புக்களை ஆரம்பிக்க வேண்டும். :P :lol:

Link to comment
Share on other sites

தலித்தியமும் தமிழ் தேசியமும்

இந்த யாழ் களத்திலே அண்மைக்காலமாக இந்துத்துவத்தை நியாயப்படுத்தவது பெரியாரை தூற்றுவது ஆகிய இரண்டு விடயங்கள் நடந்த வருகின்றன. தலித்தியம் பேசுபவர்கள் புலி எதிர்ப்பை அதனுடன் இணைப்பதைப் போல இந்துத்துவத்தை நியாயப்படுத்த பெரியாரை தூற்றும் பிரிவினர் தமிழ் தேசிய ஆதரவு என்ற விடயத்தையும் தங்களது கரத்தியலுடன் இணைக்கின்றார்கள். தலித்தியத்தை தாயகத்துக்கு இறக்குமதி செய்யும் நினைக்கும் பிரிவினர் தமிழ் தேசியம் என்பதே மேல்தட்டுப்பிரிவினரின் நலன்களுக்காக அடித்தட்டு மக்களை ஓடுக்குவது என்று கூறிவருவதற்கு சாட்சி செல்வதைப் போலவே இந்துத்துவ ஆதரவு மற்றும் பெரியார் எதிர்ப்பு என்பவற்றை முதன்மைப்படுத்துபவர்களுடைய எழுத்துக்கள் இருக்கின்றன.

இந்துவத்தை அடிப்படையாகக் கொண்ட சனாதன மதம் என்பது வேறு தமிழர் மதம் என்பது வேறு என்பதை முதலில் நாங்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஒவ்வொரு சமூகமும் தனக்கென்று ஒரு மெய்யிலை கொண்டிருப்பதைப் போலவே தமிழ் சமூகமும் தனக்கென்று தனித்துவமான மெய்யிலை கொண்டிருக்கிறது. தமிழர் மெய்யில் எப்படி பார்ப்பணிய மெய்யிலால் ஆக்கிரமிக்கப்பட்டது என்பதை ஆராயுங்கள். தமிழ் சமூகத்தில் இருந்த ஓதுவார்கள் அல்லது அந்தணர்களும் வர்ணக் கோட்பாட்டையும் அதன் சாராம்சமான புனிதம் தீட்டு என்பவற்றையும் தங்களது சடங்காசாரங்களாக் கொண்டுள்ள பார்ப்பணியர்களும் ஒன்றல்ல என்பதை உணருங்கள்.

சிவன் கந்தன் கண்ணன் காளி ஐயனார் முதலான தமிழ் கடவுள்கள் எப்படி பார்பணியக் கடவுள்களாக மாற்ப்பட்டார்கள் என்பதை ஆராயுங்கள். தமிழ்நாட்டிலுள்ள தமிழ் கோவிலான சிதம்பரத்தில் தேவாரம் திருவாசகம் பாடுவதற்கு நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்ற அந்தக் கோவில் தீட்சதர்களுடைய மனோபாவம் என்ன என்பதை விவாதியுங்கள். இந்து மதத்தின் மேன்மை சிறப்பு என்பதைபற்றி எல்லாம் மதம் என்ற ஒரு தனியான தலைப்பின் கீழ் ஆராயுங்கள். இந்து மதத்தில் உள்ள வர்ணக் கோட்பாடு சரியா தவறா என்பதை விவாதியுங்கள். தயவு செய்து அதை விடுத்து தமிழ் தேசியம் என்பது இந்து மதத்தை அடிப்படையாகக் கொண்டது என்று அதனுடன் இணைத்து பேசுவதற்கு முற்படாதீர்கள். இந்துமத மேன்மைக்காவே விடுதலைப் போராட்டம் நடக்கிறது என்ற எதிரிகளின் பிரச்சாரத்துக்கு துணைபோகாதீர்கள். தமிழ் தேசியம் என்பது அனைத்து தமிழ் மக்களுக்கும் பொதுவானது பாரபட்சம் காட்டதது. பிறப்பால் தொழிலால் மக்களை இழிவுபடுத்தாதது என்பதை உங்கள் பேச்சிலும் எழுத்திலும் செயலிலும் காட்டுங்கள். அடுத்து பெரியார் பற்றி எழுதுகின்றவர்கள் உங்களுடைய நோக்கம் என்ன என்பதை தயவு செய்து வெளிப்படையாகச் சொல்லிவிடுங்கள். பெரியார் என்ன செய்தார் அவர் சரியா பிழையா என்ற விவாதிப்பதற்கு செலவழிக்கும் நேரத்ததை எபபடி புலம்பெயர்ந்த தமிழ் மக்களை தமிழ்தேசியத்தின் பால் ஒன்றிணைப்பதற்கு என்ன செய்யலாம். அடையாளம் இழந்து தெருவுக்கு வரும் இளைஞர் கூட்டத்தை நெறிப்படுத்துவதற்கு என்ன செய்யலாம் என்றெல்லாம் ஏன் சிந்திக்கக் கூடாது.

சிவா சின்னப்பொடி

ஏந்த ஒரு வழர்ச்சியடைந்த சமூகத்திலும் மதச்சுதந்திரம் என்பது மக்களின் ஒரு அடிப்படைச் சுதந்திரமாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. ஒரு உதாரண தேசமாகத் தமிழ் ஈழம் மலரவேண்டும் என விரும்பும் தமிழர்களிற்கு "ஆரியக் கடவுளரைக் கும்பிடல் ஏற்கமுடியாதது”” முதலாய வாதங்கள் தொடாந்தும் எரிச்சல் ஊட்டும். இந்த வாதங்கள் மக்களின் அடிப்படைச் சுதந்திரங்களையே கேள்விக் குறியாக்கும் ஆரோக்கியமற்ற தன்மை உடையன.

யாரோ கூறுகின்றார்கள் என்பதற்காகத் தமது கடவுளரை யார் எவ்வாறு எதிலிருந்து எதற்கு மாற்றினார்கள் என்று ஆராய வேண்டிய தேவை மக்களிற்கு இல்லை. தமது உளவியலில் தமது நம்பிக்கை தற்போது பலன் தருகிறதா என்பதை முடிவு செய்ய வேண்டியவர்கள் மக்கள். கடவுள் நம்பிக்கையினை அனைவரும் ஒரே விதமாகத் தான் பாhக்க வேண்டும் என்று நினைப்பது ஒருவகையில் கடிவாளமிடப்பட் சிந்தனை.

ஏவ்வாறு இந்தியாவின் தலித்தியம் கொப்பியடித்து ஈழத்தில் ஒட்டபட முடியாதுவோ அதே போல் தான் இந்து சமய பின்பற்றலும. ஈழத்தின் இந்து மத வழிபாடு தேவாரம் முதலியவற்றோடு பின்னிப் பிணைந்துள்ளது. இதை எதிர்க்கும் நோக்கமோ அதிகாரமோ எந்தப் பு+சகரிற்கும் ஈழத்தமிழர் கொடுக்கவில்லை.

இந்து மதத்தைப் பின்பற்றும் ஈழத்தமிழர்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை நேசிக்கும் உரிமை அற்றவர்கள் என்று கூற எவரிற்கும் உரிமையில்லை. மேலும், நான் பார்த்த வரை தற்போதய விவாதங்களில் யாழ் களத்தில் எவருமே “தமிழ் தேசியம் என்பது இந்து மதத்தை அடிப்படையாகக் கொண்டது" என்று கூறவில்லை. எங்கிருந்து வருகிறது இந்த உதாரணம்?

பேரியார் சரியா பிழையா என்று விவாதிப்பதற்கு பெரியாரை எதிர்ப்பவர்கள் ஒன்றும் நேரத்தை விரும்பி வீணாக்கவில்லை. பெரியார் விசுவாசிகள் என்று தம்மைக் கூறிக் கொள்ளும் சிலர் எழுந்தமானத்தில் மற்றையோரை மடையராக்க விழைவதனால் தான் இந்த முனையில் எதிர் விவாதங்ககள் தேவைப் படுகின்றன. இந்த பெரியார் விசுவாசக் கூட்டத்திற்கும் ஏதேனும் அறிவுரை கூறலாமே? ஊங்கள் இத்தனை நீளக் கட்டுரையில் ஏன் இவர்களிற்கு மட்டும் ஒன்றும் கூறாது விட்டுவிட்டீர்கள். இவர்கள் தப்பிற்கு அப்பாற்பட்ட சென்மங்கள் என்பதா உங்களின் மறைமுகக் கருத்து?

கடவுள் நம்பிக்கை உடையோரை வாங்கு வாங்கு என்று வாங்கி விட்டு, அத்தகைய திட்டல்களிற்கு ஆதாரமாகப் பெரியாரின் பெயரைப் பாவித்து விட்டு, அதற்கு எதிராக ஆராவது விவாதம் செய்தால் மட்டும் தமிழகத்தில் 10 லட்சம் பெரியார் தொண்டர்கள் யாழ் களத்தைப் படித்தபடி உள்ளார்கள் நீங்கள் பெரியாரை விமர்சிப்பதால் தாயக விடுதலைக்குப் பங்கம் விளைவிக்கின்றீர்கள் எனறு கூறுவது, சற்று வஞ்சகத் தனமாகப் படுகிறது.

தமிழீழத் தேசியப் போராட்டத்திற்கு தோள் கொடுக்கும் அனைவரும், அவர் எக்கட்சி எச்சாதி எம்மொழி என்பதற்கப்பால் ஈழ மக்களால் என்றென்றும் நன்றி பாராட்டப்படுவர்.

பேரியாரை விமர்சிக்க வேண்டிய தேவையை உருவாக்கிக்க கொண்டு தொடர்ந்தும் அடம் பிடிப்பவர்கள் பெரியார் விசுவாசிகள்.

சில பெரியார் விசுவாசிகள் செய்து கொண்டிருப்பதைப் போல, கிடைக்கும் அனைத்துச் சந்தர்ப்பங்களையும் தமது இந்துமத எதிர்ப்பு எண்ணங்களை மற்றையவர் மீது திணிக்கக் கூடிய சந்தர்ப்பமாகப் பயன் படுத்தி ஒவ்வொரு விவாதத்திற்குள்ளும் இந்து மத எதிர்ப்பினை இணைக்காது அவை அவை அவைக்குரிய தனிய பக்கங்களில் விவாதிக்கப்பட வேண்டும் என்பதில் எனக்கு பு+ரண உடன்பாடு உள்ளது.

Link to comment
Share on other sites

அவர் பிரபாகரன் கோயிலில் தாலிகட்டியதையும் வற்றாப்பளைக்கு பொங்கியதையும் வைத்து தமிழ்த்தேசியம் எண்டது இந்துத்துவம் என்று நிறுவிய விண்ணர் எல்லோ..

தமிழ்த் தேசியத்தையும் இந்துத்துவத்தையும் பிரித்துப் பார்த்தாலே பாதிப் பிரச்சனை தீர்ந்து விடும்.

.

இந்த ஆருரன் என்ற வெங்காயம் யாழ்களத்தில் முதல் இப்படி தான் எயிட்ஸை பரப்பும் போது அதுக்கு போகன் அண்ணா அடிஅக்டி தடுப்பு ஊசி போட்டு கொண்டு இருந்த போது தான் அந்தநோயாளி தனியே உணர்வுககளை வெலீகொண்டுவர தொடங்கியதூ ஒரு சொறிபிடிச்ச கருத்துகளம்.

அப்போதே இந்த களத்தை பற்றியாழில் எழுதினவர்கள் அதுக்கு மூக்கில் கோவம் வந்து தான் இங்கால வராமல் விட்டது........

அந்ட்த களம் ஆதர்வௌ மாதிரி காட்டி கொண்டு போராட்டத்துகு எதிர்ப்பு இதை நான் சொன்னால்

சாத்தான் என்று என்னை கரிச்சு கொட்டுகிறார்கள்.

பழைய யாழில் இருக்கு மோகன் அண்ணாவிடம் இனைப்பு இருந்தால் பாருங்கள்.....

Link to comment
Share on other sites

எனக்கு இங்கு சிலர் செய்யும் போகிரித்தனத்தால் யாழ்க் களத்தில் எழுதுவது என்பதே வெறுப்பைத் தரும் விடயமாகி விட்டது.

பரது பட்ட வாசிப்பும் இல்லை, ஏன் ,எதற்கு என்று ஆராயவும் மாட்டார்கள், விவாதம் என்றால் விதண்டா வாதமும்,கருதுக்களைச் சொல்ல வருபவர்கள் மீதான தனி நபர் தாக்குதல்களும் தான் இங்கு சிலருக்குத் தெரிந்த கருத்தாடல்.

விவாதம் என்று வந்தால் விதண்டாவாதம் செய்கிறது,போராட்டம் என்று வந்தால் காட்டிக்கொடுக்கிறது, வேலை என்று வந்தால் கூட இருந்தே குழி பறிக்கிறது, திருமணம் என்று வந்தால் சாதி பார்க்கிறது.இப்படி எங்கட பெருமைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். நாய் வாலை நிமிர்த்த முடியுமா ஐயா?

Link to comment
Share on other sites

இருவரது அறிவுறுத்தலுக்கும் நன்றி.

எங்கடை சழுகத்தில உள்ள மிகப் பெரிய குறைபாடு வாசிப்பு பழக்கம் இல்லாதது.எந்த வொரு விடயத்திலும் தேடலோ ஆளமான வாசிப்போ இல்லாமல் நுணிப்புல் மேய்ந்து போட்டு வந்து தங்களை புத்தி ஜீவிகளாக காட்டிக் கொள்கிற போலித் தனமும் அதை நியாயப்படுத்திற திமிர் தனமும் தான் எங்களுடை இனத்தின் முன்னேற்றத்துக்கு தடையாக இருக்கிறது. இந்த மனோபாவம் நாங்களும் வளராமல் மற்றவையையும் வளர விடாமல் தடுக்குது.

என்னுடைய 14 வயதில் என்னுடைய அப்பா ராகுல சாங்கிருத்தியாயன் என்ற வங்களா மொழி அறிஞர் எழுதிய வால்காவில் இருந்து கங்கை வரை என்ற நூலை படிக்கத் தந்தார். அதுக்குப் பிறகு எங்கல்ஸ் எழுதிய குடும்பம் தனிச் சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம் என்ற நூலை படிக்கத் தந்தார்.அதுக்குப் பிறகு மீண்டும் ராகுல சாங்கிருத்தியாயன் எழுதிய இந்து தத்துவவியல் பௌத்த தத்துவவியல் இஸ்லாமிய தத்துவவியல் ஐரோப்பிய தத்துவவியல் என்ற நூல்கள் அடங்கிய தொகுப்பை தந்தார்.ஆரம்பத்தில் இவற்றைப் படிக்கிறது கஷ்டமாக இருந்தாலும் பிறகு இந்த நூல்;கள் எனக்குள் ஒரு தேடலையும் இன்னும் நிறையப்படிக்க வேண்டும் நிறைய விடயங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தையும் தூண்டின.

சமூகங்கள் மதங்கள் குடும்ப உறவுகள் பற்றிய பார்வையைத் தரும் இந்த நூல்கள் தமிழில் இருக்கின்றன. உங்களுக்கு விருப்பம் இருந்தால் தமிழகத்தில் யாரும் நண்பர்கள் இருந்தால் அவர்களிடம் சொல்லி வாங்கிப் படிக்கப்பாருங்கள்

Link to comment
Share on other sites

ஏந்த ஒரு வழர்ச்சியடைந்த சமூகத்திலும் மதச்சுதந்திரம் என்பது மக்களின் ஒரு அடிப்படைச் சுதந்திரமாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. ஒரு உதாரண தேசமாகத் தமிழ் ஈழம் மலரவேண்டும் என விரும்பும் தமிழர்களிற்கு "ஆரியக் கடவுளரைக் கும்பிடல் ஏற்கமுடியாதது”” முதலாய வாதங்கள் தொடாந்தும் எரிச்சல் ஊட்டும். இந்த வாதங்கள் மக்களின் அடிப்படைச் சுதந்திரங்களையே கேள்விக் குறியாக்கும் ஆரோக்கியமற்ற தன்மை உடையன.

யாரோ கூறுகின்றார்கள் என்பதற்காகத் தமது கடவுளரை யார் எவ்வாறு எதிலிருந்து எதற்கு மாற்றினார்கள் என்று ஆராய வேண்டிய தேவை மக்களிற்கு இல்லை. தமது உளவியலில் தமது நம்பிக்கை தற்போது பலன் தருகிறதா என்பதை முடிவு செய்ய வேண்டியவர்கள் மக்கள். கடவுள் நம்பிக்கையினை அனைவரும் ஒரே விதமாகத் தான் பாhக்க வேண்டும் என்று நினைப்பது ஒருவகையில் கடிவாளமிடப்பட் சிந்தனை.

ஏவ்வாறு இந்தியாவின் தலித்தியம் கொப்பியடித்து ஈழத்தில் ஒட்டபட முடியாதுவோ அதே போல் தான் இந்து சமய பின்பற்றலும. ஈழத்தின் இந்து மத வழிபாடு தேவாரம் முதலியவற்றோடு பின்னிப் பிணைந்துள்ளது. இதை எதிர்க்கும் நோக்கமோ அதிகாரமோ எந்தப் பு+சகரிற்கும் ஈழத்தமிழர் கொடுக்கவில்லை.

இந்து மதத்தைப் பின்பற்றும் ஈழத்தமிழர்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை நேசிக்கும் உரிமை அற்றவர்கள் என்று கூற எவரிற்கும் உரிமையில்லை. மேலும், நான் பார்த்த வரை தற்போதய விவாதங்களில் யாழ் களத்தில் எவருமே “தமிழ் தேசியம் என்பது இந்து மதத்தை அடிப்படையாகக் கொண்டது" என்று கூறவில்லை. எங்கிருந்து வருகிறது இந்த உதாரணம்?

பேரியார் சரியா பிழையா என்று விவாதிப்பதற்கு பெரியாரை எதிர்ப்பவர்கள் ஒன்றும் நேரத்தை விரும்பி வீணாக்கவில்லை. பெரியார் விசுவாசிகள் என்று தம்மைக் கூறிக் கொள்ளும் சிலர் எழுந்தமானத்தில் மற்றையோரை மடையராக்க விழைவதனால் தான் இந்த முனையில் எதிர் விவாதங்ககள் தேவைப் படுகின்றன. இந்த பெரியார் விசுவாசக் கூட்டத்திற்கும் ஏதேனும் அறிவுரை கூறலாமே? ஊங்கள் இத்தனை நீளக் கட்டுரையில் ஏன் இவர்களிற்கு மட்டும் ஒன்றும் கூறாது விட்டுவிட்டீர்கள். இவர்கள் தப்பிற்கு அப்பாற்பட்ட சென்மங்கள் என்பதா உங்களின் மறைமுகக் கருத்து?

கடவுள் நம்பிக்கை உடையோரை வாங்கு வாங்கு என்று வாங்கி விட்டு, அத்தகைய திட்டல்களிற்கு ஆதாரமாகப் பெரியாரின் பெயரைப் பாவித்து விட்டு, அதற்கு எதிராக ஆராவது விவாதம் செய்தால் மட்டும் தமிழகத்தில் 10 லட்சம் பெரியார் தொண்டர்கள் யாழ் களத்தைப் படித்தபடி உள்ளார்கள் நீங்கள் பெரியாரை விமர்சிப்பதால் தாயக விடுதலைக்குப் பங்கம் விளைவிக்கின்றீர்கள் எனறு கூறுவது, சற்று வஞ்சகத் தனமாகப் படுகிறது.

தமிழீழத் தேசியப் போராட்டத்திற்கு தோள் கொடுக்கும் அனைவரும், அவர் எக்கட்சி எச்சாதி எம்மொழி என்பதற்கப்பால் ஈழ மக்களால் என்றென்றும் நன்றி பாராட்டப்படுவர்.

பேரியாரை விமர்சிக்க வேண்டிய தேவையை உருவாக்கிக்க கொண்டு தொடர்ந்தும் அடம் பிடிப்பவர்கள் பெரியார் விசுவாசிகள்.

சில பெரியார் விசுவாசிகள் செய்து கொண்டிருப்பதைப் போல, கிடைக்கும் அனைத்துச் சந்தர்ப்பங்களையும் தமது இந்துமத எதிர்ப்பு எண்ணங்களை மற்றையவர் மீது திணிக்கக் கூடிய சந்தர்ப்பமாகப் பயன் படுத்தி ஒவ்வொரு விவாதத்திற்குள்ளும் இந்து மத எதிர்ப்பினை இணைக்காது அவை அவை அவைக்குரிய தனிய பக்கங்களில் விவாதிக்கப்பட வேண்டும் என்பதில் எனக்கு பு+ரண உடன்பாடு உள்ளது.

இன்னுமொருவன்,

ஒவ்வொரு வருக்கும் தாம் விரும்பும் மதத்தைப் பின் பற்ற எவ்வளவு உரிமை இருக்கிறதோ அதே போல் தாம் விரும்பும் மததைப்பற்றி விமர்சிக்கவும் எவருக்கும் அதே உரிமைகளும் இருக்கின்றன.இங்கே கருத்துச் சுதந்திரமும் வழி பாடுச் சுதந்திரமும் எல்லோருக்கும் ஒன்றே.பெரியாரின் கொள்கைகளை கூறுபவர்கள் இந்த மதம் தடை செய்யப்பட வேண்டும் என்று எங்காவது கூறி இருகிறார்களா? அவர்களின் கருதாடல்கள் எல்லாம் இந்த மதம் இன்ன இன்ன சொல்கிறது அதனை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா எங்கிற வகையில் தான் இருக்கிறது.அவர்கள் கூறுவதில் பிழை இருந்தால் நீங்களும் அந்தப்பிழைகளை ஆதாரபூர்வமாக மறுதலிக்கலாம்.அதை விட்டு விட்டு அவர்களுக்கு அவர்கள் கருத்தைச் சொல்ல முடியாது என்று சொல்வது தான் கருத்துச் சுதந்திரத்தை மறு தலிக்கும் செயல்.

உலகில் எங்கும் போன்றே தமிழ் ஈழதிலும் எந்த மதத்தையும் வழி படும் சுதந்திரம் இருக்கும்,அதே போல் எந்த மததிற்கும் விசேட அந்தஸ்து கொடுபடாது, ஆட்சி அதிகாரத்திற்கும் மததிற்கும் எந்தச் சம்பந்தமும் இருக்காது.ஒரு மததைப் பின் பற்றுவதும் விடுவதும் அவர் அவர் சொந்த விருப்பு வெறுப்புகளின் பாற்பட்டது.ஆனால் ஒரு மதம் ஏற்றத் தாழ்வுகளை இன்னொரு மனிதனின் உரிமயில் தலை இடும் வன்ணம் நிகழ்த்துமாயின் அதனைத் தடை செய்வது அந்த அரசின் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் கடமையின் பாற்பட்டதாகும்.உதாரணத்திற்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டில எல்லாரும் தமிழீழத்துக்கு கொள்கை வகுப்புச் செய்யும் அளவுக்கு தமிழீழம் கிடக்குது போல.

மதச் சுதந்திரம் பற்றி ஏற்கனவே யாழ் களத்தில் விபரிக்கப்பட்டு அதை அப்போது ஒற்றைக்காலில் நின்று மதங்களற்ற தமிழீழம் உருவாக்குவோம் என்றவர்கள் இன்று மதச் சுதந்திரம் அளிக்க முன்வந்திருப்பதானது தமிழீழக் கொள்கை வகுப்பாளர்கள் என்று கற்பனையில் வாழ்ந்து கொண்டிருப்போரில் ஏற்பட்ட நல்ல மாற்றம்.

இப்ப போதாக்குறைக்கு கோயிலுக்க போகப்படாது கிணற்றில குதிக்கப்படாது என்று சட்டம் போடுறவைக்கு எதிரா சட்டம் வரணுமாம். பாவங்கள் கோயில் நிர்வாகங்களுக்கு இவை தொடர்பான அறிவுறுத்தல்கள் 1980 களின் பிற்பகுதிகளில் வழங்கப்பட்டு தகுந்த மாற்றங்களும் பெறப்பட்டிருப்பதானது ஏலவே ஈழத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தமிழீழக் கொள்கை வகுப்பாளர்களுக்கு தமிழீழத்தில என்ன நடக்குது நடந்தது என்ற எந்தப் பார்வையுமே இல்லைப் போல இருக்கே..!

ஐநா விதிகளின் கீழ் அனைத்து மனிதனுக்கும் தான் விரும்பும் மதத்தை பின்பற்ற உரிமை உண்டு. அரசுகள் அதற்கான அனுமதிகளை வழங்க வேண்டும். தேசிய மதங்களை பிரகடனப்படுத்துவதும் விடுவதும் அவ்வவ் நாடுகளின் அரசுகளின் விருப்பம். ஆனால் அவர்கள் அடிப்படை மத உரிமைகளை மறுதலிக்க முடியாது. மத ரீதியான அடையாளங்களை பின்பற்றவும் உரிமை உண்டு. ஆக மனித உரிமைகளை மீறாத மதச் சுதந்திரம் என்பது எங்கும் இருக்கும். இருக்க வேண்டும். அது மதத்தைப் பின்பற்ற விரும்புவர்களுக்கு உள்ள உரிமையை பாதுகாக்கும். இதை ஏலவே இங்கு குறிப்பிட்டு வாதத்திட்டு முடிந்த பின்னர் அப்போ மதங்கள் அற்ற தேசம் என்றவர்கள் இப்போ மதச் சுதந்திரம் அளித்து தமிழீழக் கொள்கை வகுத்துள்ளனர். ஏலவே விடுதலைப் புலிகள் மும்மதங்களுக்கும் கெளரவம் அளிப்பதை சுட்டிக்காட்டிய போது அதை விமர்சித்தவர்கள் இப்போ அதை மதச் சுதந்திரமாகவாவது இனங்கண்டிருப்பதானது எமது கருத்துக்கள் கவனம் பெறுகின்றன என்பதை நிரூபித்துள்ளன. :P :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சின்னப்பேடியின் கட்டுரைக்கு நன்றிகள். இருந்தபோதிலும் அவர் வெறுமனே இந்து மதத்தை மட்டுமே சாடுவதை உணர முடிகின்றது தவிர, பகுத்தறிவு என்றவர்களில் உள்ள குறைகளை இம்மியளவும் விமர்சிக்கத் துணியவில்லை. பெரியார் திராவிடகழகம், தமிழீழத்தை ஆதரிக்கின்ற என்ற விதத்தில் விமர்சிக்க கூடாது என்ற நோக்கமாகவும் இருக்கலாம்.

ஹரிஜனம் என்று சொல்கின்ற சொல் வர்ணக் கோட்பாட்டில் அமைந்தது என்றால், தலித் என்று சாதி அடிப்படையில் பிரித்ததும் வர்ணக் கோட்பாடு என்று தானே வாதிடுகின்றீர்கள். அப்படிப்பட்ட தலித் என்ற சொல்லை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் ஹரிஜனம் என்ற சொல்லை ஏற்கமுடியாது என்பதன் அர்த்தம் தான் என்னவோ? ஆக சொல்லப் போனால் " நீ தலித்! நீ தாழ்த்தப்பட்டவன்" என்று மக்களுக்குள் தொடர்ந்து எண்ணங்களை வளர்ப்பதன் மூலம், அங்கே அம்மக்களை முன்னேற விடாமல் தடுக்கின்ற வேலையே நடக்கின்றது.

இன்றும் கூட வசதிவாய்ப்புமற்று ஒரு வேளைச் சாப்பாட்டிற்கு வழியில்லாமல் நீங்கள் சொல்கின்ற தலித் மக்கள் அவதிப்படுகின்றார்கள். அப்படியிருக்கின்றபோது, ஒடுக்கப்பட்ட மக்கள் தலித்தியம் என்ற அரசியல்கோட்பாட்டினுள் ஒன்றிணைந்து இருப்பது நீங்கள் கூறுவதில் உண்மையில்லை. தலித்தியம் கதைப்பவர்கள், தங்களுடைய மக்களை வைத்து வியாபாரம் செய்பவர்கள் தான். அங்கே அவர்களுக்கு சமூக அக்கறையிலும் பார்க்க, தங்களின் வயிற்றை நிரப்பிக்கொள்ளும் வழியாகவே அதைப் பாவிக்கின்றார்கள்.

இன்றைக்கு, பிஹாரில் லல்லுப்பிரசாத் யாதவ்வைப் பாருங்கள், அவர் பல ஆண்டுகளாக பதவியில் இருக்கின்றார். ஆனால், இன்று வரை அம்மக்களின் அடிப்படை விடயங்களுக்கு ஒரு விதத் தீர்வு கூட காணப்படவில்லை. ஏன் என்றால் அம்மக்களுக்கான வளர்ச்சி கிடைத்தால், இவர்களின் வாழ்வு அரசியல் சூனியமாகும் என்பதே. இந்தத் தலித் என்ற சொல்லை இப்படியான அரசியலால் என்றைக்குமே அழிக்க முடியாது.

இவர்களின் தலித் என்ற அரசியலால் என்ன செய்ய முடிந்தது? , மலம் அள்ளுகின்ற மக்கள் மலம் அள்ளிக் கொணடு தான் இருக்கின்றார்கள். சமூக அந்தஸ்து மறுக்கப்பட்ட மக்கள், சமூக அந்தஸ்து அற்றுத் தான் இருக்கின்றார்கள். அதனால் தான் சொல்கின்றோம். அவர்களுக்குள் தாங்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்ற உணர்வை வளர்க்க கூடாது என்று. யாழ்பாணத்தில் கோவில் மிதிப்பு நடந்தபோது நீங்கள் இருந்திருக்க கூடும். அது போன்ற சமூக எழுச்சியே நான் கேட்பது. எமக்கு ஏன் உரிமையில்லை என்று அனைத்து மக்களிடமும் உணர்வைத் தூண்ட வேண்டியதே, அம்மக்களின் மீதான அடக்குறைகள் பற்றிய சிந்தனை மாற வைக்க உதவும்.

அன்றைக்கு யாழ்பாணத்தில் அவ்வாறு நடந்தபோது, அனைத்து ஆலயக்கதவுகளும் எப்படித் திறந்தன? இன்று கோவில்களுக்குள் போக முடிந்ததல்லவா? ஏன் இவ்வாறு சமூக எழுச்சியை மக்கள் மனதில் ஊக்குவிக்க முடியாது? ஆனால் நிச்சயமாக அதற்கு இந்தத் தலித்தியம பேசுகின்றவர்களோ, பகுத்தறிவு பேசுகின்றவர்களோ உடன்படமாட்டார்கள். மக்களை அவ்வாறு நடக்கவிடாமல் இழுத்துக் கொண்டிருப்பவர்கள் இவர்கள் தான். இம்மக்களைத் தாழ்த்தப்பட்டவர்களாக, வைத்திருக்க வேண்டும் என்றும் ஆசைப்படுபவர்களும் இவர்கள் தான்.

இன்றைக்கு ஒவ்வொரு சந்தியிலும், ஒவ்வொரு பிரிவினரும், தங்கள் தங்களுக்கு என்று கோவில் அமைக்கின்றார்கள் என்றால், அங்கே சாதியைத் தாண்டி இந்துமதத்தில் அனைவரும் மதப்பற்றாளர்களாக இருக்கின்றார்கள் என்பது தான் அர்த்தம். இந்தியா, இலங்கை என்று இந்து மதம் பரவியிருந்த அனைத்து இடங்களிலும் பார்த்தாலே தெரியும். அனைத்து இடங்களிலும், மரங்கள், வீதியோரங்களில் கடவுள் வழிபாடுகள் நடக்கின்றன. கோவிலுக்குள் மட்டுமல்லாமல், வீதிகளிலும் அவரையும் வழிபடலாம் என்று உருவாகிய நிலையை வர்ணக் கோட்பாட்டால் தடுக்கவில்லை. எனவே மேலே நீங்கள் சொன்னவாறு, ஹரிஜனம் என்பது மதப்பெயர் என்பதால் தான் தலித் மக்கள் ஏற்பதில்லை என்று சொன்ன கருத்து தவறானது. அங்கே ஏற்கமறுத்தது தலித் பெயரால் அரசியல் செய்தவர்கள்.

காலத்துக்கு காலம் ஒவ்வொரு அடக்குமுறைகள் வரலாறுகளில் இருந்திருக்கின்றன. ஜரோப்பாவின் ,இருண்டகாலம் எனப்பட்ட 900ம் ஆண்டுகளில் கூட குறித்த சமுதாயத்தினர் அடக்குறைக்கு உள்ளாக்கப்பட்டனர். கறுப்பினத்தவரை, அமெரிக்கா அடிமையாகக் கொண்டு சென்றிருந்தது. ஏன் இந்தியரை அடிமைகளாக பிரித்தானியர் நாடுநாடாகக் கொண்டு சென்றனர். ஆனால் இன்று அடிமைகள் என்று அவர்கள் இல்லை. ஏனென்றால் அடிமைகளாக்கியவர்களும், அடிமையாவர்களுக்கும் உள்ள ஒற்றுமைப்படுத்தல், புரிந்துணர்வின் அடிப்படையில் தான் இது சாத்தியமானது. ஆனால் இன்றைய தலித்தியம், பார்ப்பாணத்துவம் என்ற வாதங்கள் என்றைக்குமே, தமிழனுக்குள் ஒற்றுமை வராமல், தொடர்ந்து கொண்டிருக்கப் போகின்ற நிலைமையைத் தான் இது ஊக்குவிக்கும். இதனால் தான் என்னுமொரு எதிரி உட்புக வாய்ப்பை ஏற்படுத்துகின்றது. இந்தப் பிரச்சனைக்கு தர்மகத்தாவாகிய பெரியார் மீது வெறுப்பு ஏற்படவும் இதுவும் ஒரு காரணம்.

மறுபக்கத்தில் குழப்பகரமான இந்தப் பகுத்தறிவுவாதிகள், இந்துமதத்தைப் பார்ப்பானிகளிடம் சொத்து என்ற நிலையில் ஒதுக்கி வைத்துவிட்டு, பெரியார் காலத்தில் இருந்து தமிழினின் வரலாற்றை ஆரம்பிக்கப் பார்க்கின்றார்கள். இப்படியான செயற்பாட்டால் என்ன விளைவு ஆகும் என்று பார்த்தால், தமிழன் வரலாற்றை எடுத்துக் காட்டும், அனைத்து அடையாளங்களும் மதக் கோட்பாட்டால் தான் ஆனது. தமிழ்நாட்டில் உள்ள தமிழனின் வரலாற்றைச் சொல்வதற்கு, எவ்விதமான அரண்மனைகளும் தமிழ்நாட்டில் இல்லை. ஆனால் இருப்பவை ஆலயங்கள் மட்டும் தான். அவ்வாறே பாடல்களை எடுத்தாலும், அங்கே பக்திப் பரவசம் தான் மேலோங்கியிருக்கின்றது. நாளைக்கு தமிழனின் வரலாற்று அடையாளங்கள் எல்லாம் பார்ப்பாணிக்குரியது என்று கொண்டு போய்த் தான் இந்த நிலை விடப்போகின்றது.

----------------------------------------------------------

ஆறுமுக நாவலர் பற்றி விமர்சனம் செய்திருந்தீர்கள். ஜரோப்பியர் வருகையால் தளர்ந்து போயிருந்த ஜாதிக் கோட்பாடுகள் என்று திரிக்கின்றீர்கள். போத்துக்கேயர் தங்களின் மதப்பிரச்சாரத்தைப் பலப்படுத்த பாவித்த முதல் விடயமே, இந்த ஜாதிக் கோட்பாடு தான். முதலில் மீனவசமூகத்தில் இப்படியான சிந்தனைகளைப் பரப்பித் தான் அவர்கள் தங்களின் மதக்கோட்டை வலுவூட்டிக் கொண்டார்கள். ஏன் இன்றைக்கு எதிரிகள் தமிழரைப் பிரிக்க எடுத்திருப்பதே ஜாதிக் கோட்பாடு தான். இந்து மதத்தில் உள்ளவர்கள் பெற்ற பலனைத் தவிர, வெளியார் பெற்ற பலன்கள் தான் இதில் அதிகம். ஆறுமுகநாவலர் சாதியை வலுவூட்டியிருப்பின், வெள்ளாள, பிராமண சமுதாயம் தவிர, அனைத்து பிற தரப்பினரும் அல்லவா, கிறிஸ்தவ மதத்தில் மாறியருக்க வேண்டும். பைபிளை அவர் மொழி மாற்றிக் கொடுத்தார் என்பது உண்மை தான். ஆனால், அங்கே ஆங்கிலமொழியின் ஆதிக்கத்தில் இருந்து தமிழைக் காப்பாற்றும் நோக்கம் தான் இருந்தது.

ஒருவனின் செயற்பாட்டை, தங்களுக்கு ஏற்றவிதத்தில் விமர்சிக்கலாம் என்பதற்கு உங்களின் இக்கருத்து தான் சான்று. இவ்வாறன செயலைத் தான் போராட்டத்தை விமர்சிப்பவர்களும் செய்கின்றார்கள். அடுத்த தட்டு மக்கள் ஆங்கிலம் படிக்கின்றார்கள் என்றால், அவருக்கு தங்கள் தட்டு மக்களுக்கும் ஆங்கிலத்தை முன்னிலைப்படுத்துவது கஸ்டமான காரியமல்ல. தம் தட்டு மக்களுக்கு கிறிஸ்தவத்தைப் பரப்பி, அவர்களை முன்னிலைப்படுத்தல் கஸ்டமானதல்ல. அதன் மூலம் அவர் தன் தட்டு மக்களுக்கு உள்ள சமூக மேலாண்மையைக் காப்பாற்றியிருக்க முடியும். தவிர, மொழி என்பது சமூக அந்தஸ்து என்றால் தமிழில் இத்தனை காலமும் பேசிய இப்பிரிவுகளும் சமூக அந்தஸ்து இல்லாமலா இருந்தார்கள். எனவே உங்களின் விளக்கம் மற்றவர்களை மடையர்கள் ஆக்கும் தொனி கொண்டது.

பிரச்சனை என்னவென்றால், இப்படி சைவத்தையும், தமிழழையும், ஒரு சேர காப்பாற்றிய விதம் உங்களுக்குப் பிடிக்கவில்லை. அல்லது போத்துக்கேயரால் இந்து ஆலயங்கள் தகர்க்கப்பட்டதை மீட்டு, ஆறுமுகநாவலர் திரும்பிக் கட்டி சைவத்தை மேலோங்கச் செய்ததும் உங்களுக்குப் பிடிக்கவில்லை. இந்த நேரங்களில் அயோத்தி இடிக்கப்பட்டதைப் பற்றிக் கதைக்கின்றவர்கள், சைவக்கோவில்களை அன்னியர் இடித்தது பற்றி கிஞ்சித்தும் கவலை கொள்வதில்லை.

----------------------------------------------------------

இறுதியில் இந்து மதம் ஆதரிப்பது என்பது சிங்கள அரசின் சதித் திட்டம் என்ற கணக்கில் முடிக்கின்றீர்கள். இப்படியான சிந்தனைகள் எமக்கு புதிதல்ல ஜயா! விடுதலைப் போராட்டம் குறுகிய தரப்பினருக்கானது என்று திரிக்க எவரும் முய்றபடவில்லை. ஆனால் அந்தக் குறுகிய தரப்பினரும், விடுதலைப்போராட்டத்தில் இருக்கின்றார்கள் என்ற உண்மையைத் தான் நாங்கள் சொல்கின்றோம். மனைவியைக் கோவிலுக்கு அரிச்சனைக்கு அனுப்பி விடடு, நான் நாத்திகன் என்று ஏமாற்றிக் கொள்கின்ற போக்கு நமக்கிடையே இல்லை.

பலருக்குள்ள குழப்பம் என்னவென்றால் நாடு மதச்சார்பற்றது என்பதற்கும், தங்களின் தனிப்பட்ட விருப்பத்துக்கும் உள்ள வேறுபாட்டைக் காணத் தெரியாமல் இருப்பது. இன்றைக்கு புஸ் தான் கிறிஸ்தவமதத்தில் உள்ள பற்றை மறைப்பதில்லை. அவ்வாறே, எந்த நாட்டுத் தலைவர்களும் மறைப்பதில்லை. ஆனால் தமிழனுக்குள் உள்ள முட்டாள்தனமே, தங்களை மதப்பற்றாளர் இல்லை என்று காட்டிக் கொள்வது. என் விருப்பம் வேறு நாட்டின் விருப்பம் வேறு என்ற புரிதலை எப்போது இந்தக் குறுகிய வட்டத்தில் இருந்து விடுதலை பெற்றுப் பார்க்கப் போகின்றீர்கள்.

இங்கே இந்துசமயத்தை ஆதரிப்பவர்கள் மட்டும் தான் விடுதலைப்போரை இணைத்துக் கதைக்கவில்லை. எதிர்ப்பவர்களும் விடுதலைப்போராட்டத்தின் முடிந்த முடிவு இது தான் என்று கொண்டு போய் முடிப்பார்கள். யாழ்களத்தில் பழைய கருத்துக்களைப் பாருங்கள். தமிழீழமும், மாக்கிச சிந்ததந்தமும் என்று விடுதலைப் போராட்டத்தை முடிச்சுப் போடடிருப்பார்கள். அவ்வாறே தலைவர் சின்னவயதில் தான் கலியாணம் கட்டினவர். அது தான் கோவிலில் போய்க் கட்டினவர். இப்போது அப்படியில்லை என்று விமர்சிக்கின்ற பெரியார் பக்தர்களும் இங்கிருக்கின்றார்கள். (அப்போது தலைவருக்கு 30 வயது, கூட இருந்த பாலா அண்ணா கூட ஒன்றும் தெரியாதவர் என்று தான் இவர்களின் நினைப்பு) என்ன செய்வது நாங்கள் செய்வது மட்டும் தான் உங்களுக்குத் தெரியும். நீங்கள் போட்டிருக்கின்ற கண்ணாடி அப்படியாச்சே!

இந்துவத்தை அடிப்படையாகக் கொண்ட சனாதன மதம் என்பது வேறு தமிழர் மதம் என்பது வேறு என்பதை முதலில் நாங்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஒவ்வொரு சமூகமும் தனக்கென்று ஒரு மெய்யிலை கொண்டிருப்பதைப் போலவே தமிழ் சமூகமும் தனக்கென்று தனித்துவமான மெய்யிலை கொண்டிருக்கிறது. தமிழர் மெய்யில் எப்படி பார்ப்பணிய மெய்யிலால் ஆக்கிரமிக்கப்பட்டது என்பதை ஆராயுங்கள்

இவ்வாறன மெய்யியல் பற்றி நிறையக் கதைக்க விரும்பினீர்கள் என்றால் உங்களுக்கு ஒன்று சொல்கின்றேன். ஏன் இந்து மதத்தில் இருக்கின்றவர்களை மட்டும் அவ்வாறு தமிழர் மெய்யியலுக்கு வரச் சொல்கின்றீர்கள். தமிழர்களாகவே கணிக்கின்ற கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள், பறங்கியர்கள், மதப்பற்றே இல்லாதவர்கள், மக்கிச, கம்னூசிய சித்தந்தவாதிகள் போன்றவர்களை ஏன் இம்மதத்தில் இழுப்பதில்லை? அவர்களைத் தமிழர்களே இல்லை என்று முடிவு கட்டிவிட்டீர்களா? நீங்களே இப்படிப் பிரிவினைவாதியாக இருக்கின்றபோது, நாங்கள் என்ன செய்வது? வெளிப்படையாகச் சொல்லப் போனால், இவ்வாறன உங்களின் நடவடிக்கைகளும் எங்களுக்கு அச்சத்தை ஊட்டுகின்றன. உங்களின் தெரிவு என்பது, இந்து சமயத்தில் இருந்து பற்றாளர்களை வெளியேற்றுவது மட்டுமே என்பதை உணர்கின்றோமே தவிர, தமிழர் பற்றிய எவ்வித நோக்கமும் கிடையாது என்பதையே ஆணித்தரமாக நம்புகின்றோம்.

தமிழ் தேசியம் இந்து மதத்தை உள்ளடக்கவில்லை என்று நீங்கள், ( என்ன பதவி நிலையோ) சொல்வதன் மூலம், அம் மதம் மீதான பற்றுள்ளவர்களை புறம்தள்ளுவதற்கு நீங்கள் முயற்சிக்கின்றீர்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இது கூடச் சிங்கள அரசின் சதியால் என்று எமக்கும் விமர்சிக்க அதிக நேரம் எடுக்காது. இங்கே பலர் பிரச்சாரம் செய்வது போல, விடுதலைப் போராட்டம் பெரியார் வழி என்பது போன்றும், மக்கிச சித்தாந்தம் என்பது போன்றும், மதப்பற்றுள்ளவர்களுக்கு கதைக்க உரிமையில்லை போன்றதுமான விமர்சனங்களைத் தகர்த்து, இந்து மதப் பற்றுள்ளவர்களுக்கும், விடுதலைப் போராட்டத்தில் உரிய பங்குள்ளவர்கள் என்பதைக்காட்டவே இவ்வாறன விவாதங்கள் அவசியமானதே தவிர, இந்து மதத்தைக் காப்பாற்றத் தான் விடுதலைப் போராட்டம் என்று யாரும் சொல்லியதில்லை. அவ்வாறன விளக்கத்தையும் கொடுக்கவில்லை.

இந்துமதம் மட்டுமல்ல, அனைத்து மதப்பிரிவுகளுக்கும் தமிழீழம் இடங்கொடுக்கும் என்பதில் மாற்றுக் கருத்தை நாம் கொண்டிக்கவில்லை. அதை வரவேற்கினறோம். இங்கே நான் இந்து சமயம் என்பதால் தான் அதைப் பற்றிய விமர்சனத்துக்கு பதிலளித்தேனே தவிர, நாஸ்திகக் கொள்கை என்று மற்றய மதங்களையும் சாடினால் அவற்றுக்கும் நிச்சயம் பதிலளிப்போம். பெரியார் பற்றிய விமர்சனங்கள் இங்கே யாழ்களத்தில் கொண்டு செல்ல வேண்டி ஏற்பட்டதே, இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள், காட்டுமிராண்டிகள், வெறியர்கள் என்று இக்களத்தைப் பலர் பாவித்ததால் தான். யாழ்களம் தொடங்கி வரும் மாதத்தோடு 9 வருடங்கள் ஆகின்றது. இந்த 9 வருடங்களாக இந்து மதத்தைச் சீண்டும் கட்டுரைகள் இடப்பட்டன.

அதைப் பற்றி நிர்வாகமும் கவலைப்படவில்லை. மற்றவர்களும் கவலைப்படவில்லை. ஆனால் நாங்கள் பதிலுக்குக் கதைத்தவுடன், உடனே தமிழக உறவை உடைக்கப்பார்க்கின்றோம் என்று வாயை மூட வைக்கின்ற நிலையைச் சிலர் செய்கின்றனர். ஏன் தமிழ்நாட்டில் இந்துமதப் பற்றாளர்களே கிடையதா? அவ்வாறனவர்களின் ஆதரவு உங்களுக்கு வேண்டாம் என்று நினைக்கின்றீர்களா?

மிகுதி தொடரும்.

Link to comment
Share on other sites

இன்னுமொருவன்,

ஒவ்வொரு வருக்கும் தாம் விரும்பும் மதத்தைப் பின் பற்ற எவ்வளவு உரிமை இருக்கிறதோ அதே போல் தாம் விரும்பும் மததைப்பற்றி விமர்சிக்கவும் எவருக்கும் அதே உரிமைகளும் இருக்கின்றன.இங்கே கருத்துச் சுதந்திரமும் வழி பாடுச் சுதந்திரமும் எல்லோருக்கும் ஒன்றே.பெரியாரின் கொள்கைகளை கூறுபவர்கள் இந்த மதம் தடை செய்யப்பட வேண்டும் என்று எங்காவது கூறி இருகிறார்களா? அவர்களின் கருதாடல்கள் எல்லாம் இந்த மதம் இன்ன இன்ன சொல்கிறது அதனை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா எங்கிற வகையில் தான் இருக்கிறது.அவர்கள் கூறுவதில் பிழை இருந்தால் நீங்களும் அந்தப்பிழைகளை ஆதாரபூர்வமாக மறுதலிக்கலாம்.அதை விட்டு விட்டு அவர்களுக்கு அவர்கள் கருத்தைச் சொல்ல முடியாது என்று சொல்வது தான் கருத்துச் சுதந்திரத்தை மறு தலிக்கும் செயல்.

உலகில் எங்கும் போன்றே தமிழ் ஈழதிலும் எந்த மதத்தையும் வழி படும் சுதந்திரம் இருக்கும்,அதே போல் எந்த மததிற்கும் விசேட அந்தஸ்து கொடுபடாது, ஆட்சி அதிகாரத்திற்கும் மததிற்கும் எந்தச் சம்பந்தமும் இருக்காது.ஒரு மததைப் பின் பற்றுவதும் விடுவதும் அவர் அவர் சொந்த விருப்பு வெறுப்புகளின் பாற்பட்டது.ஆனால் ஒரு மதம் ஏற்றத் தாழ்வுகளை இன்னொரு மனிதனின் உரிமயில் தலை இடும் வன்ணம் நிகழ்த்துமாயின் அதனைத் தடை செய்வது அந்த அரசின் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் கடமையின் பாற்பட்டதாகும்.உதாரணத்திற்க

Link to comment
Share on other sites

நான் பகுத்தறிவின் பெயரால்தான் இந்து மதத்தை எதிர்க்கிறேன். பெரியாரை எனக்குப் பிடிக்கும் என்பதால் நான் இந்து மதத்தை எதிர்க்கவில்லை. பெரியார் சொன்னவைகளை காரணம் காட்டியும் நான் இந்து மதம் பற்றி பேசியதில்லை.

ஆனால் இந்தக் களத்தில் என்ன நடக்கிறது?

உதாரணமாக

இந்து மதம் குறித்து நான் ஒரு கருத்தை வைக்கிறேன்.

அதற்கு பதில் கருத்து வைப்பதற்கு யாருக்கும் இங்கு துப்பில்லை.

உடனடியாக சம்பந்தமில்லாமல் பெரியார் மீது தாக்குதலை தொடங்குவார்கள்.

இதுதான் இங்கே சில மாதங்களாக நடக்கிறது.

கருத்துக்கு சரியான பதில் கருத்து வைப்பதற்கு இவர்கள் பழக வேண்டும்.

பெரியார் பற்றி அவருடைய எதிரிகள் எழுதிய புத்தகங்களை படிப்பதை விட, இந்து மதத்தைப் பற்றி படித்து எமக்கு பதில் சொல்வதுதான் சரியாக இருக்கும்.

Link to comment
Share on other sites

நானறிந்த வரை உலகில் எந்த மக்களும் இன்னார் தான் பகுத்தறிவின் ultimate authority என்று எவரையும் இதுவரை ஏற்றுக் கொள்ளவில்லை. இன்னாரின் பகுத்தறிவுக்கு ஒரு விடயம் இவ்வாறு பட்டால் அது விவாதத்திற்கு அப்பாற்பட்டது என்றும் ஏதும் இல்லை.

ஓருவர் தன்னை அறிவாளி என நினைத்துக் கொண்டால், தனக்கு மக்கள் ஏன் சில விடயங்களைச் சிலவாறு நம்புகிறார்கள் செய்கிறார்கள் என்று புரியாவிடின், ஒன்றில் ஒதுங்கியிருக்கப் பழக வேண்டும், அல்லது தன்போன்ற சிந்தனை உடையவர்களின் புத்தகங்களை மட்டுமே படித்து தனது கருத்துக்களை மட்டுமே மீழ மீழ மனதிருத்தும் வகையில் படிக்காது திறந்த மனத்தோடு தேடலிற்காகப் படிக்கோணும்( புடிப்பு என்பது புத்தகப் படிப்பாகத் தான் இருக்கவேண்டும் என்றுமில்லை). ஆல்லாவிடின் பெரிய அளவில் ஏன் தான் கூறுபவற்றை மக்கள் ஏற்க மறுக்கிறார்கள் என்பது அவரிற்குத் தொடர்ந்தும் புரியாமல் தான் இருக்கும்.

Link to comment
Share on other sites

மக்கள் ஏன் ஏற்க மறுக்கிறார்கள் என்பதற்கான காரணம் எனக்கு தெளிவாகத் தெரியும்.

கடவுள் பயம்.

இது இருக்கும் வரை, எந்த உண்மையையும் மக்கள் ஏற்றுக்கொள்வது மிகக் கடினமாகத்தான் இருக்கும்.

இந்தக் கடவுள் பயத்தை உடைப்பது என்பது மிகக் கடினம்.

சிலருடைய மனதிற்கு சில விடயங்கள் விளங்கினாலும், கடவுள் பயத்தால் அடங்கிப் போய் விடுவார்கள்.

அதற்காக உண்மையை சொல்லாது இருக்க முடியுமா?

பூமி உருண்டை என்பதை பெரியளவில் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதற்காக, அதை ஆராய்ந்தவர்கள் அப்படியே விட்டுவிட்டார்களா? பூமி உருண்டை என்பதை சில நூறு வருடங்கள் கழித்து நிருபிக்கவில்லையா?

Link to comment
Share on other sites

மீண்டும் மீண்டும் திணிப்பு திணிப்பு என்று கூறுகிறீர்கள்,சிந்தனைத் திணிப்பு என்றால் என்ன?ஒருவர் நீ நான் சொல்வதின் படி செய் என்று உங்கள் விருப்பத்திற்கு மாறாக செய்வது தான் திணிப்பு.ஒருவர் தனது சிந்தனையை உங்களிடம் எக்காலத்திலும் திணிக்க முடியாது.அவர் சொல்வது நியாயமாக இருக்குமிடத்து அதனை நீங்கள் ஏற்றுக்கொள்ளப்போகிறீர்கள் அது உங்கலுக்குச் சரியானதாகத் தெரியாத விடத்து நிராகரிக்கப் போகிறீர்கள்.இங்கே திணிப்பு திணிப்பு என்று எதைச் சொல்ல விழைகிறீர்கள்.

பெரியார் செய்தது இருக்கின்ற நம்பிக்கைகளை பகுத்து அறிவு கொண்டு கேள்விக் குள்ளாக்கியது தான்.அவர் சமுதாயத்தில் பிற் போக்கான நிலையில் இருந்த மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

அதையே தான் இங்கும் சபேசனும் இளங்கோவும் செய்கிறார்கள்.அவர்கள் சொல்பனவற்றிற்கு பதில் சொல்ல முடியாது சம்பந்தா சம்பந்தமற்று அவர்கள் மேல் தனி நபர் தாக்குதல் மேர் கொள்வதுவும், பெரியாரை வசை பாடுவதும், பொய்களை ஆதரமற்றுக் கூறுவதும் தான் நடக்கிறது.

இதற்கு அடிப்படைக் காரணம் அவர்களுடன் வாதடுவதற்கு இவர்களிடம் சரக்கோ தேடலோ வாசிப்போ இல்லை என்பது தான்.

ஆற்றமையின் வெளிப்படு தான் இங்கு நடப்பது.விவாதம் அல்ல.

பெரியாரை விமர்சிக்க வேண்டாம் என்று அவர்கள் சொன்னதாக் நான் பார்க்கவில்லை, அவதூறுகளை ஆதரமற்று எழுத வேண்டாம் என்று தான் கேட்டுக் கொள்ளப்பட்டது.மாற்றாக இங்கு ஒருவர் பெரியாரை ஒருமையில் விழிப்பதுவும் இன்னொருவர் அவன் இவன் என்று எழுதுவதும் தான் நடந்து வருகிறது.கடைசியாக சபேசனும் இளங்கோவும் மன நோயாளிகள் எங்கிற பாணியில் ஒருவர் எழுதுகிறார்.அவரும் இவை பற்ரி எனக்கு அவ்வளவாகத் தெரியாது ஆன இவை பற்றி எழுதுபவர்கள் மன நோயாளிகள் என்று எழுதுகிறார்.அவர் அவ்வாறான ஒரு கூற்றை எழுதுவதற்கு அவருக்கு என்ன ஆதாரம் இருக்கிறது?

விவாதம் என்றால் என்ன என்று அறியாதவர்களுடன் விவாதம் செய்து எனது நேரத்தை வீணாக்க நான் விரும்பவில்லை, அதனலையே நான் இங்கு அதிகம் இப்போது எழுதுவதில்லை.உங்களை மன நோயாளி என்று எழுதும் ஒருவருக்கு நீங்கள் ஏன் தெரியாததைச் சொல்லிக் கொடுக்க வேணும்?

Link to comment
Share on other sites

மீண்டும் மீண்டும் திணிப்பு திணிப்பு என்று கூறுகிறீர்கள்,சிந்தனைத் திணிப்பு என்றால் என்ன?ஒருவர் நீ நான் சொல்வதின் படி செய் என்று உங்கள் விருப்பத்திற்கு மாறாக செய்வது தான் திணிப்பு.ஒருவர் தனது சிந்தனையை உங்களிடம் எக்காலத்திலும் திணிக்க முடியாது.அவர் சொல்வது நியாயமாக இருக்குமிடத்து அதனை நீங்கள் ஏற்றுக்கொள்ளப்போகிறீர்கள் அது உங்கலுக்குச் சரியானதாகத் தெரியாத விடத்து நிராகரிக்கப் போகிறீர்கள்.இங்கே திணிப்பு திணிப்பு என்று எதைச் சொல்ல விழைகிறீர்கள்.

எனது பதிலில் ஒன்றை மட்டும் நீங்கள் வாசித்ததாக ஏற்றுக் கொள்வதாலும் மற்றைவற்றைப் புறக்கணித்திருப்பதாலும், நீங்கள் வாசித்ததாக ஒத்துக் கொண்டதற்கு மட்டும் பதிலளிக்கிறேன்.

ஓருவன் தனக்கு கடவுள் நம்பிக்கையால் உளவியல் நம்பிக்கை உள்ளது என்று சொல்ல, இல்லை இல்லை எங்கள் பகுத்தறிவில் உனது மதத்தில் எல்லாம் பூதாகரமாகத் தான் தெரிகிறது. எனவே நீ உனது நம்பிக்கையால் உனக்கு உளவியல் நன்மை உள்ளது என்ந உனது சிந்தனையை நீ நாங்கள் சொல்வது போல் மாற்றிக் கொள். ஏங்கே எங்களோடு சேர்ந்து சொல்லு பாக்கலாம்: கடவுள் கெட்ட வார்த்தை.

இதைத்தான் திணிப்பு முயற்சி என்கிறேன். உண்மைதான் இதை எல்லோரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

மற்றது முதற்தடவையாக சிந்தணைத் திணிப்பு என்ற கருத்தை நான் சொல்லித் தான் கேள்விப் பட்டது போல் நீங்கள் முழிப்பதால் கூறுகிறேன், இன்றைக்கு நேற்றல்ல சிந்தனைத் திணிப்பென்பது அமெரிக்கா பிரித்தானியா போன்ற உலக சத்திகளாலும் இதர பேரரசுகளாலும் காலாதிகாலமாக நடந்து வருகிறது. உதாரணத்திற்கு, எனக்கு நீல சட்டை பிடிக்காது என்றால், அது எனது பெறுமதி என்றால், எவ்வாறாவது எல்லோரையும் நீலச் சட்டை அணிதல் அசிங்கம் என நான் ஏற்றுக் கொள்ள வைப்பேனேயாயின், பின்னர் எவரை எப்போதெல்லாம் நான் அவர் நீலச் சட்டை அணிந்ததாக குற்றஞ் சுமத்துகிறேனோ அப்போதெல்லாம் அவர் தான் அவ்வாறு செய்யவில்லை எனத் தான் வாதிடுவாரே தவிர, நீலச் சட்டை அணிவது எனது உரிமை என அவரது சிந்தனை அமையாது. அதாவது உலக வல்லரசுகள் தமது பெறுமதிகளின் அடிப்படையில் மற்றையோரை சிந்திக்க வைக்க முனைவது தான் வல்லரசுகள் காலாதிகாலமாகச் செய்யும் தந்திரம், ஏனெனில் அவர்களது பெறுமதியில் அவர்களைப் போல் எவரும் பலமாக இருக்க முடியாது.

அமெரிக்கா இந்த உத்தியை சோவியத்தின் வீழ்ச்சிக்குப் பயன்படுத்தியது தாராளமாக ஆவணப்படுத்தப் பட்டுள்ளது நேரம் கிடைத்தால் வாசித்துப் பாருங்கள். இப்போது அமெரிக்கா இதை சீனாவிலும் அப்பப்போ முயற்சிக்கிறது. ஏன் அவ்வளவு தூரம் எங்களின் போராட்டத்தில் இந்த உத்தி இந்த மேற்கின் சக்திகளால் எவ்வளவு தூரம் பாவிக்கப்படுகின்றது என்பதனை முடிந்தால் ஆராய்ந்து பாருங்கள்.

Link to comment
Share on other sites

இங்கே விவாதிக்கப்படும் விடயங்கள் கலாச்சாரம் சம்பந்தப்பட்டவை. தனது விடுதலைக்கு போராடும் ஒரு சமூகம் கலாச்சாரம் என்ற இந்த விடயத்தை எப்படிக் கையாள வேண்டும் என்பதை இந்த கட்டுரை விளக்குகிறது. அதனால் இந்த பகுதியிலேயே இதை இணைக்கிறேன்.ஆர்வமுள்ளவர்கள் படித்துப் பாருங்கள்

விடுதலையும் கலாச்சாரமும்

நன்றி : உன்னதம் (சிற்றிதழ்)

ஆகஸ்டு - செப். 2001

அமில்கார் கப்ரால்

தமிழாக்கம் : பிரமிள்

ஒரு மக்கள் சமூகம் மீது அன்னியர்கள் அடக்குமுறை ஆட்சி நடத்தும் போது வெறும் பொருளாதாரச் சுரண்டலை மட்டும் செய்வதில்லை. பொருளாதாரச் சுரண்டலை தீவிரமாக நடத்துவதற்காக மக்கள் சமூகத்தின் கலாச்சார வாழ்வை அடக்குமுறையாளர்கள் திட்டமிட்டு நசுக்கி இருக்கிறார்கள் என்பது வரலாறு பகரும் உண்மை. அடக்கப்பட்ட மக்கள் சமூகத்தினுள் கலாச்சார ரீதியாக இயங்கக் கூடியவர்களை ஒழித்துக் கட்டுவதன் மூலம் தான் அடக்குமுறையாளர்கள் தங்கள் ஆட்சியை உறுதிப்படுத்துகின்றனர்.

மக்களின் கலாச்சார வாழ்வினை அழிப்பதற்கும், வீரியமிழக்க வைப்பதற்கும், முடக்குவதற்குமே அடக்குமுறையாளர்கள் ஆயுதத்தினைப் பிரயோகிக்கிறார்கள். ஏனெனில் ஒரு உறுதியான உள்நாட்டுக் கலாச்சார வாழ்வு இருக்குமிடத்தில் அந்நிய ஆட்சி நிரந்தரமடைய முடியாது.

ஒரு மக்கள் சமூகம் அடக்கப்படும் போது அம்மக்களின் உணர்வுகள் வளர்ந்து வந்து ஒரு குறிப்பிட்ட திருப்பு முனையில் கலாச்சார வடிவான எதிர்ப்பாகத் திரள்கிறது. இதனை உடைத்தெறிய முடியாது. இந்த கலாச்சார எதிர்ப்பே அரசியல் விழிப்பாகவும், பொருளாதாரச் சுரண்டலுக்கு எதிரான இயக்கமாகவும், ஆயுத எதிர்ப்பாகவும் தோற்றம் கொள்கிறது.

அடக்குமுறையாளர்கள் ஒரு மக்கள் சமூகத்தின் மீது தங்கள் ஆட்சியை நிலைகொள்ளச் செய்ய பின்வருவனவற்றுள் ஒன்றைத்தான் தெரிவு செய்யலாம்.

1. அடக்கப்பட்ட மக்கள் அனைவரையும் ஒழித்துக் கட்டுதல். இதனால் கலாச்சார எதிர்ப்பு பிறக்க இடமில்லாமல் செய்யலாம்.

2. அடக்கப்பட்ட மக்களின் கலாச்சார வாழ்வுக்குப் பங்கம் வராதவாறு ஆதிக்கம் செய்தல் அதாவது சுரண்டலை எதிர்க்காத வகையில் அடக்கப்பட்டவர்களது கலாச்சாரத்தை இசைய வைத்தல்.

இவற்றுள் முதலாவது முறைதான் சரித்திரத்தில் நடந்துள்ளது. இரண்டாவது முறை எங்குமே இன்றுவரை நடந்ததில்லை. மனித வர்க்கத்தின் அநுபவத்தில் இந்த இரண்டாவது முறை நடைபெற முடியாததொன்று. ஒரு சமூகத்தின் கலாச்சாரத்தைப் பேணியபடி, அந்தச் சமூகத்தின் பொருளாதார அரசியல் வாழ்வினை அடக்கி ஆள்வது முடியாத காரியம்.

ஆனால் அடக்குமுறையாளர்கள் அடக்கப்பட்டவர்களை தங்கள் இனத்தினராக மாற்றலாமென எண்ணுவதுண்டு. இது நடைமுறையில் எப்படி என்று பார்த்தால், ஏறத்தாழ வன்முறை மூலம் மக்களின் கலாச்சாரத்தினை மறுப்பதாகவே இது அமையும். ஆனால் அவ்விதம் ஒரு மக்களின் கலாச்சாரத்தினை எளிதாக செயலிழக்க வைக்க முடியாது என்பதனால் இந்தக் கருத்துக்கு அர்த்தமில்லை. ஆப்ரிக்கா, கலாச்சாரம் இல்லாத ஒரு கண்டம் என போர்த்துக்கீஸர்கள் கூறிய கருத்து இதற்கு உதாரணம்.

இயற்கையிலேயே கறுப்பர்கள் குறைவுபட்ட மனிதத்தன்மை உள்ளவர்கள் என்ற சித்தாந்தம் கூட இத்தகையதுதான். இதன்படி இயற்கையே கறுப்பு வெள்ளையானது என்றாகும். உலகின் மிகக் குரூரமான முறை மூலம் தென்னாப்பிரிக்காவின் சிறுபான்மை வெள்ளையர்கள் கறுப்பர்களை அடிமைகளாக வைத்துள்ளனர். இந்த சித்தாந்த நாடகத்தை ஏகாதிபத்தியவாதிகள் ஆடுவதே ஒன்றை மறைப்பதுக்குத்தான் அது அடக்கப்பட்ட மக்களுக்கு ஒரு கலாச்சாரம் இருக்கிறது என்ற உண்மையாகும்.

மாறுதலுக்கு இடம் விடும் சமூகமாயினும் சரி மாற முடியாத சமூகமாயினும் சரி கலாச்சாரம்தான் அதன் ஜீவநாடி. சமூகத்தில் எல்லாவித உறவுகளையும் கலாச்சாரமே தீர்மானிக்கிறது. அடக்கப்பட்ட சமூகத்தின் சரித்திரத்தையும் இதர அம்சங்களையும் ஒரு இலட்சியம் வழி நடத்தினால் அந்த இலட்சியம் அந்த சமூகத்தின் கலாச்சாரத்துக்கே உரியது. அந்நிய ஆதிக்கத்தினை கலாச்சாரத்தின் மூலமே எதிர்ப்பதென்பதன் விளக்கம் இது.

கலாச்சாரம் கடந்தகால சரித்திரத்தின் விளைவு மட்டுமல்ல எதிர்கால சரித்திரத்தை நிர்ணயிக்கும் சக்தியாக விளங்குகிறது. தனது சமூகக் கட்டுமானத்துக்குள் நிலவும் குழுக்களின் உறவுகளையும் மனித உறவுகளையும் ஆள்வதன் மூலம் கலாச்சாரம் சரித்திரத்தையே ஆட்சி செய்கிறது.

இந்த உண்மையை புரிந்து கொள்ளாததால் பல அடக்குமுறைகள் தோல்வி கண்டுள்ளன. சில விடுதலை இயக்கங்களின் தோல்விகளுக்கும் இதுவே காரணம்.

தேசிய விடுதலையின் அம்சங்களை இனி கவனிப்போம். ஏகாதிபத்திய ஒடுக்குமுறைக்கு எதிரான இயக்கமே தேசிய விடுதலை இயக்கம். ஏகாதிபத்தியம் ஒரு மக்கள் சமூகத்தின் சுதந்திரமான உற்பத்தி முறை வளர்ச்சியை பிடுங்கி விடுகிறது. இந்த உற்பத்தி முறையே இயக்குகிறது. எனவே அம்மக்களின் இயற்கையான சரித்திர வளர்ச்சியை மறுப்பதாகவே ஏகாதிபத்திய சுரண்டல் அமைகிறது. இதுதான் ஏகாதிபத்தியத்தின் இலட்சணம்.

ஒவ்வொரு சமூகமும் இயற்கையை உற்பத்திச் சாதனமாக உபயோகிக்கிறது. இயற்கையுடன் சமூகமும் கொள்ளும் உறவு வேறுவகையானது. எனவே இந்த சமூகங்கள் தங்களுக்குள் கொள்ளும் உறவுகளிலும் வித்தியாசங்கள் ஏற்படுகின்றன. இது வர்க்க மோதலாக விளைகிறது. இது சரித்திரத்தையும் கலாச்சாரத்தையும் தீர்மனிக்கிறது.

மரத்தில் மலர் போன்று சரித்திரத்தினின்றும் மலர்வது கலாச்சாரம். சமூகமானது சூழ்நிலையையும் அதனால் அமைக்கப்பட்ட சமூகத்தின் தன்மயையும் வெளியிடுகிறது. ஏற்றத்தாழ்வுகளையும் மோதல்களையும் அறிய உதவுவது சரித்திரம். ஏற்றத்தாழ்வுகளை இணைத்தும் மோதல்களைத் தவிர்த்தும் சமூகத்தை இடைவிடாமல் புனருத்தாரணம் செய்வது கலாச்சாரம்.

சமூகத்தின் உயிரூட்டமான பொறுப்புணர்வுகளை பேணுவது கலாச்சாரம்தான். ஏகாதிபத்திய அடக்குமுறை ஒரு சமூகத்தின் சரித்திரத்தையும் கலாச்சாரத்தையும் சேர்த்தே அழிக்கிறது. இதனால் தேசிய கலாச்சாரங்களே தேசிய விடுதலை இயக்கங்களை உருவாக்கி ஊக்குவிக்கிறது. மக்களின் சமூக அரசியல் அம்சங்களினது நிலை எப்படியிருப்பினும் அவர்களது கலாச்சாரம்தான் விடுதலை இயக்கமாக வடிவெடுக்கிறது.

சரித்திரத்தினின்றும் ஒரு சமூகம் அன்னியப்படுத்தப்பட முடியாத உரிமையே தேசிய விடுதலையின் அஸ்திவாரம் ஆகும். எனவே ஒரு விடுதலை இயக்கத்தின் நோக்கம் ஏகாதிபத்தியவாதிகளால் பறித்தெடுக்கப்பட்ட இந்த உரிமையினை மீட்பதாகும். அதாவது தேசிய உற்பத்தி சக்திகளை விடுவிக்கும் இயக்கமே இது. ஆகவே தேசிய உற்பத்தி முறைகள் பரிபூரணமாக விடுதலை பெறுவதே தேச விடுதலை. உற்பத்தி சக்திகள் விடுபட்டதும் அந்த சமூகத்தின் கலாச்சாரத்துக்கு புதிய வளர்ச்சி ஏற்பட இடம் கிடைக்கிறது.

கலாச்சார விடுதலை என்பது அன்னிய கலாச்சாரத்தை முற்றாக நிராகரிப்பதல்ல. வளர்ச்சிக்கு வேண்டியவற்றை வெளியிலிருந்து சுவீகரித்து தேவையற்றவற்றை நீக்கி ஒரு தேசத்தின் கலாச்சாரத்தை வளர்த்தலாகும்.

அன்னிய அடக்குமுறை என்பது கலாச்சார அடக்குமுறை என்றால் அன்னியரிடமிருந்து விடுதலை பெறுவது கலாச்சார விடுதலை பெறுவதாகும். இதன்படி பார்த்தால் விடுதலை இயக்கம் என்பது கலாச்சார சக்தியின் அரசியல் அமைப்பு ஆகிறது. எனவேதான் மக்களது கலாச்சாரத்தினை உணர்ந்தவர்களாக விடுதலைப் போராளிகள் இருப்பது அவசியமாகிறது.

இயந்திர நுட்பமும் நிற வேறுபாடுகளும் கலாச்சார அறிகுறிகள் என்ற போலிக் கருத்துக்கள் மறைந்துவிட்டன. எல்லாவித மக்களிடம் கலாச்சார உணர்வு உள்ளதென்பது இன்று ஒப்புக் கொள்ளப்பட்ட விஷயம். மக்கள்தான் கலாச்சாரத்தின் படைப்பாளிகளும் சேமிப்பாளர்களும் என்பதனைப் போராளிகள் உணர்வது அவர்களது கடமை. மக்கள் அனைவரும் பொதுவான கலாச்சாரப் பண்பினை பிரதிபலிக்காது ஒரு பகுதியினரை மட்டும் விடுதலை இயக்கம் பிரதிபலிக்கக்கூடாது.

கலாச்சாரத்துக்கு ஒரு பொது அமைப்பு இருப்பினும் மக்களின் எல்லாப் பகுதியினரும் ஒரே தரத்திலான கலாச்சாரக்காரர்களாக இருக்க முடியாது. அவர்களிடையே வளர்ச்சி வேறுபாடு இருக்கும். ஒவ்வொரு சமூகப் பகுதியும் பொருளாதாரத்தினால் உருவாக்கப்பட்டாலும் அப்பகுதியை ஆள்வது ஒரு சமூகப் பிரிவினரே. விடுதலைப் போர்ப் பார்வையினை அவர்களது கலாச்சாரப் பண்பே தீர்மானிக்கிறது. இந்த இடத்தில்தான் கலாச்சாரம் தனது முழு விசேஷத் தன்மையையும் ஒரு தனிமனிதன் மூலம் வெளியிடுகிறது.

ஆப்ரிக்காவில் கிராமப்புறங்களிலிருந்து நகரங்கள் வரை பல்வேறு வடிவங்களில் கலாச்சாரம் வேறுபட்ட தன்மைகளை வெளியிடுகிறது. விடுதலை இயக்கங்கள் இந்த வேறுபாடுகளைக் கணக்கில் எடுத்து கொள்ள வேண்டும்.

சுரண்டலுக்காக ஏகாதிபத்தியவாதிகள் அடக்கப்பட்டவர்களிடையே கலாச்சார, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கியுள்ளனர். இதன் விளைவாக நகர்ப்புறத்தினரும் கிராமத்தின் குட்டி முதலாளிகளும் அன்னிய கலாச்சாரத்தினை ஏற்று தங்கள் சொந்த மக்களின் கலாச்சாரத்தை ஏளனப்படுத்தும் நிலை பிறக்கிறது. சுயநலத்திலிருந்து இந்த அந்நிய கலாச்சாரவாதிகள் அந்நியமாகின்றனர். விடுதலை இயக்கத்தில் இவர்களது நிலையினை இதுவே நிதானிக்கிறது. எனவே போர்க்காலத்தின் தியாகங்களும் அன்றாடப் பிரச்னையுமே இவர்களை மனம் திருப்ப வைக்க முடியும்.

இருந்தும் மனம் திரும்பாமலே சந்தர்ப்பவாதிகளாக விடுதலை இயக்கத்தினுள் சிலர் நுழையலாம். இவர்கள் தங்களது படிப்பறிவு, கருவிஞானம் ஆகியவற்றால் இயக்கத்தின் உயர்பதவிகளைக் கைப்பற்றக் கூடும். எனவே கலாச்சாரத் தளத்திலும் இது பற்றி தீவிர விழிப்பு அவசியம். எனிலும் அன்னிய மனோபாவாக்காரர்களாக அடக்குமுறையாளர்களினால் உருவாக்கப்பட்டவர்களிடமிருந

Link to comment
Share on other sites

எனது பதிலில் ஒன்றை மட்டும் நீங்கள் வாசித்ததாக ஏற்றுக் கொள்வதாலும் மற்றைவற்றைப் புறக்கணித்திருப்பதாலும், நீங்கள் வாசித்ததாக ஒத்துக் கொண்டதற்கு மட்டும் பதிலளிக்கிறேன்.

ஓருவன் தனக்கு கடவுள் நம்பிக்கையால் உளவியல் நம்பிக்கை உள்ளது என்று சொல்ல, இல்லை இல்லை எங்கள் பகுத்தறிவில் உனது மதத்தில் எல்லாம் பூதாகரமாகத் தான் தெரிகிறது. எனவே நீ உனது நம்பிக்கையால் உனக்கு உளவியல் நன்மை உள்ளது என்ந உனது சிந்தனையை நீ நாங்கள் சொல்வது போல் மாற்றிக் கொள். ஏங்கே எங்களோடு சேர்ந்து சொல்லு பாக்கலாம்: கடவுள் கெட்ட வார்த்தை.

இதைத்தான் திணிப்பு முயற்சி என்கிறேன். உண்மைதான் இதை எல்லோரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

மற்றது முதற்தடவையாக சிந்தணைத் திணிப்பு என்ற கருத்தை நான் சொல்லித் தான் கேள்விப் பட்டது போல் நீங்கள் முழிப்பதால் கூறுகிறேன், இன்றைக்கு நேற்றல்ல சிந்தனைத் திணிப்பென்பது அமெரிக்கா பிரித்தானியா போன்ற உலக சத்திகளாலும் இதர பேரரசுகளாலும் காலாதிகாலமாக நடந்து வருகிறது. உதாரணத்திற்கு, எனக்கு நீல சட்டை பிடிக்காது என்றால், அது எனது பெறுமதி என்றால், எவ்வாறாவது எல்லோரையும் நீலச் சட்டை அணிதல் அசிங்கம் என நான் ஏற்றுக் கொள்ள வைப்பேனேயாயின், பின்னர் எவரை எப்போதெல்லாம் நான் அவர் நீலச் சட்டை அணிந்ததாக குற்றஞ் சுமத்துகிறேனோ அப்போதெல்லாம் அவர் தான் அவ்வாறு செய்யவில்லை எனத் தான் வாதிடுவாரே தவிர, நீலச் சட்டை அணிவது எனது உரிமை என அவரது சிந்தனை அமையாது. அதாவது உலக வல்லரசுகள் தமது பெறுமதிகளின் அடிப்படையில் மற்றையோரை சிந்திக்க வைக்க முனைவது தான் வல்லரசுகள் காலாதிகாலமாகச் செய்யும் தந்திரம், ஏனெனில் அவர்களது பெறுமதியில் அவர்களைப் போல் எவரும் பலமாக இருக்க முடியாது.

அமெரிக்கா இந்த உத்தியை சோவியத்தின் வீழ்ச்சிக்குப் பயன்படுத்தியது தாராளமாக ஆவணப்படுத்தப் பட்டுள்ளது நேரம் கிடைத்தால் வாசித்துப் பாருங்கள். இப்போது அமெரிக்கா இதை சீனாவிலும் அப்பப்போ முயற்சிக்கிறது. ஏன் அவ்வளவு தூரம் எங்களின் போராட்டத்தில் இந்த உத்தி இந்த மேற்கின் சக்திகளால் எவ்வளவு தூரம் பாவிக்கப்படுகின்றது என்பதனை முடிந்தால் ஆராய்ந்து பாருங்கள்.

//எவ்வாறாவது எல்லோரையும் நீலச் சட்டை அணிதல் அசிங்கம் என நான் ஏற்றுக் கொள்ள வைப்பேனேயாயின்//

இறுதியில் நீலச்சட்டை அணிபவர் நீங்கள், அதனை அணியாம விடுவதுவும் அணிவதும் உங்கள் விருப்பம்.

//ஏனெனில் அவர்களது பெறுமதியில் அவர்களைப் போல் எவரும் பலமாக இருக்க முடியாது//

உண்மை தான் வெறும் கருதுக்களால் சிந்தனைகளால் ஒருவனிடம் அதனைத் திணித்து விட முடியாது.மாற்றாக வல்லருசுகள் வன் முறையால் தமது சிந்தனையை மற்றவர்களிடம் புகுத்துகின்றன.இங்கே களத்தில் நான் அறிந்தவரை சபேசனோ,இளங்கோவோ உங்கள் தலைக்கு மேல ஒரு துப்பாக்கியை வைத்து நான் சொல்வதை ஏற்றுக் கொள் என்று உங்களை நிர்ப்பந்திப்பதாகத் தெரியவில்லையே?

//எங்களின் போராட்டத்தில் இந்த உத்தி இந்த மேற்கின் சக்திகளால் எவ்வளவு தூரம் பாவிக்கப்படுகின்றது என்பதனை முடிந்தால் ஆராய்ந்து பாருங்கள்.//

உண்மை தான் மேற்குலகம் தனது நலங்களையே நாடும். நாமும் எமது நலங்களையே நாடுகிறோம்.மேற் குலகம் தனது சிந்தனையை எம் மீது திணிக்க சிறிலங்கா அரசிற்கு உதவிகளைச் செய்கிறது.இங்கும் சிந்தனை அல்லது கருதியல் திணிப்பு வன் முறையால் நிகழ்கிறது.இங்கே சபேசனும் இளங்கோவும் அவ்வாறான வன் முறையால் உங்கள் மேல் எந்த விதக் கருதுக்களையும் திணிக்க வில்லையே?

வல்லரசுகள் ஆயுதத்தையும் பயன் படுத்துகின்றன, ஆனால் ஆயதம் மட்டும் தான் அங்கு பயன்படுகிறது என்றில்லை. Stick and Carrot approach.

களத்தில் எவ்வாறு திணிப்பிற்கு உதவி நாடப்படுகிறது என்றால்:

எதிரான கருத்தை முன் வைப்பவர்களை கூட்டமாக பலபேர் சேர்ந்து, சிந்திக்கத் தெரியாதோர், வாசிப்புத் திறனில்லாதோர், நுனிப் புல்லு மேய்வோர், கடவுளிற்குப் பயந்து பிதற்றுவோர், தமிழ் தேசியத்திற்கும் போராட்டத்திற்கும் பங்கம் விழைவிப்போர், தமிழக ஆதரவு நிலையை மளுங்கடிப்போர் இப்படி பலவிதமான தூற்றல்கள். அது மட்டுமல்லாது தங்களின் இணையத்தள வாசிப்பு மீதான விமர்சனத்தையும் மறந்து இன்னோரன்ன இணையங்களில் இருந்து தமக்குச் சாதகமான கட்டுரைகளையும் உருவி ஒட்டி, பார்தீர்களா சிந்திக்கத் தெரிந்தவர்கள எவ்வாறு நம்மோடு உடன் படுகிறார்கள் என்ற வேடிக்கை வேறு.

நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ மேற்படி பிதற்ரல்களிற்குப் பயப்படும் சிலரும் இருக்கத் தான் செய்கிறாhர்கள். வல்லரசுகளின் ஆயுதம் போல இது இவர்களின் ஆயதம்.

இன்னும் சொல்வதானால் இந்து சமயத்தைப் போற்றுவதை டக்கிளஸ் என்ற கிருமியின் செயற்பாடு போன்று சித்தரிப்பது, போராட்டத்திற்கு ஆதரவானவர்கள் எல்லாம் பெரியாரில் அன்பு மிக்கவர்கள் என எழுந்த மானத்தில் எடுத்து விடுவது, யாழ் களத்தில் தமக்கெதிராகக் கதைப்பவர்கள் எல்லாம் ஏதோ ஒரு உளவு நிறுவத்திற்காக இங்கு பணியாற்றுபவர்கள் என மாயை உருவாக்குவது, கள மட்டுறுத்துனர்களிற்கு தமக்கு எதிரானவர்களைப் போராட்டத்தின் பெயரில் கண்காணிக்கும் படி மிக மிகத் தாழ்மையாக வேண்டுவது போன்றனவும் இவர்களது கையிருக்கும் ஆயதங்கள்.

இனி Carrot என்று பார்ப்போமேயானால், தமது கருத்தோடு ஒத்துப் போவோரைக் கூட்டமாகச் சேர்ந்து பாராட்டுவது, ஆகா ஓகோ என்பது. இது சிலரிற்கு எட இவர்களோடு பேசாமல் ஒத்துப் போனால் நமக்கும் நமது 15 minutes of fame கிடைக்கும் என எண்ணத் தோன்றுகின்றது.

வெளியே பறைசாற்றாவிட்டாலும் தமது தகமைகளில் தமக்குள்ளே திருப்தி உடையவர்களும், தாயக போராட்டத்திற்கான தமது ஆதரவு நிலை மற்றும் பங்களிப்பு தொடர்பாக தளம்பல்களோ சந்தேகங்களோ இல்லாதவர்களும் தான் மேற்படி கூட்டத்தினரின் அடாவடித் தனம் பற்றி கதைக்கிறார்கள். அதனால் தொடர்ந்து கூட்டம் கூட்டமாகா வருவோரிடம் வாங்கியும் கட்டுகிறார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.