Jump to content

தலித்தியமும் தமிழ் தேசியமும்


Recommended Posts

வல்லரசுகள் ஆயுதத்தையும் பயன் படுத்துகின்றன, ஆனால் ஆயதம் மட்டும் தான் அங்கு பயன்படுகிறது என்றில்லை. Stick and Carrot approach.

இந்து சமயத்தைப் போற்றுவதை டக்கிளஸ் என்ற கிருமியின் செயற்பாடு போன்று சித்தரிப்பது, போராட்டத்திற்கு ஆதரவானவர்கள் எல்லாம் பெரியாரில் அன்பு மிக்கவர்கள் என எழுந்த மானத்தில் எடுத்து விடுவது, யாழ் களத்தில் தமக்கெதிராகக் கதைப்பவர்கள் எல்லாம் ஏதோ ஒரு உளவு நிறுவத்திற்காக இங்கு பணியாற்றுபவர்கள் என மாயை உருவாக்குவது, கள மட்டுறுத்துனர்களிற்கு தமக்கு எதிரானவர்களைப் போராட்டத்தின் பெயரில் கண்காணிக்கும் படி மிக மிகத் தாழ்மையாக வேண்டுவது போன்றனவும் இவர்களது கையிருக்கும் ஆயதங்கள்.

வெளியே பறைசாற்றாவிட்டாலும் தமது தகமைகளில் தமக்குள்ளே திருப்தி உடையவர்களும், தாயக போராட்டத்திற்கான தமது ஆதரவு நிலை மற்றும் பங்களிப்பு தொடர்பாக தளம்பல்களோ சந்தேகங்களோ இல்லாதவர்களும் தான் மேற்படி கூட்டத்தினரின் அடாவடித் தனம் பற்றி கதைக்கிறார்கள். அதனால் தொடர்ந்து கூட்டம் கூட்டமாகா வருவோரிடம் வாங்கியும் கட்டுகிறார்கள்.

ஐயா தாங்கள் இந்து மதத்தின் மேன்மை பற்றி பேசுகின்றீர்கள்.அந்த மேன்மை எப்படிப்பட்டதென்பதற்கு எனது குடும்பத்தில் நடந்த சில ஊதாரணங்களை குறிப்பிடுகிறேன்

எனக்கு இப்போ 30 வயது.நான் 14 வயதில பிரான்சுக்கு வந்தனான்.நான் பிறக்க போதெ அப்பா ஒரு போராளியாக இருந்தவர்.நான் போராட்டத்துக்கூடாக பேராளிகளொடு தான் வளர்ந்தனான்.1984 லில் இருந்து 1987 வரையில நான் தமிழ் நாட்டில தான் படிச்சனான்.என்னுடைய தாத்தா சாதியத்தை ஒழிக்க ஆயுதப் போராட்டம் நடத்தியவர்களில் ஒருவர்.என்னுடைய அப்பாவும் சாதியத்துக்கு எதிரான போராட்டத்தில பங்கெடுத்துத்தான் பிறகு தேசிய விடுதலைப் போராட்டத்துக்கு வந்தவர்.எனது அப்பா படிக்கத் தொடங்கின காலத்தில எங்கட ஊர் பள்ளிக் கூடத்தில் அவை வாங்கில்லை இருக்கேலாது.எங்கடை தேசத்தின் குரல் அன்டன் பாலசிங்கம் அந்தக்காலத்தில என்ரை அப்பப்பாவின்ரை சினேகிதர். 1962 ம் அண்டு அவர் சொல்லி என்ரை அப்பா வாங்கில்லை எறி இருந்ததுக்காக கதிர்காமர் வாத்தியார் எண்டவர் எங்கடை சாதிப்பேரைச் சொல்லி …….நாயே வாங்கில்லை இருந்து படிக்கிற அளவுக்கு பெரியாளாகிவிட்டியா ? என்று கூறி அப்பாவை தலைமயிரில பிடிச்சுத் தூக்கி சுவரிலை மோதி அடிச்சவர். மண்டை உடைஞ்சு இரத்தம் வழிய வந்த கோபத்தில அப்பா தன்ரை சிலேட்டை தூக்கி அந்தக் கதிர்காமர் வாத்தியாருக்கு எறிஞ்சு போட்டார்.அந்த வாத்தியார் அப்பாவை தூக்கி சுவரிலை மோதி அடிச்சது குற்றம் இல்லையாம்.வாத்தியாருக்கு சிலேட்டை தூக்கி எறிஞ்சது தான் குற்றமாம்.வாத்தியாரை அடித்த குழப்படிக்கார பொடியன் என்று சேட்டிபிக்கட்டில எழுதி பள்ளிக் கூடத்தில இருந்து வெளியேற்றிப்போட்டினம்.

என்ரை அப்பப்பா அன்ரன் பாலசிங்கம் அவர்களை கூட்டிக்கொண்டு எத்தினையோ பள்ளிக் கூடங்களிலை இடங்கேட்டவர் வாத்தியாரை அடிச்ச பொடியனுக்கு இடங் கொடுக்க எல்லோரும் மறுத்துவிட்டார்கள். கடைசியா பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் கல்லூரியில் தான் அவர் 5 ம் வகுப்பு வரை படிச்சவர்.

1964 ம் ஆண்டு பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் சேருவதற்கு நடந்த அனுமதிப் பரீட்சையில் என்ரை அப்பாவுக்கு அவயின்ரை அடிப்படை

புள்ளியை விட 35 புள்ளி அதிகமா கிடைச்சது. ஆனால் அந்த நேரம் என்னை அப்பப்பா வல்லிபுரக் கோவிலுக்குள்ள போறதுக்கு நடந்த போராடத்துக்கு தலைமை தாங்கினதால் ஏற்பட்ட கோபத்தினால் ஒரு கல்வி அதிகாரி கொடுத்த அழுத்தத்தால் அப்பாவை ஹாட்லிக் கல்லூரியில சேர்க்க மறுத்திட்டினம். இதை எதிர்த்து என்ரை அப்பப்பா பருத்தித்துறை நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் தேச வழமைச்சட்டத்தின் கிழ் ஒரு பிள்ளயை பாடசாலையில் சேர்க்க மறுக்கும் உரிமை பாடசாலை அதிபருக்கு உள்ளது என்ற தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த வழக்கின் அடிப்படையிலே தான் 1967 ம் ஆண்டு சிறீலங்கா நாடாளுமன்றத்தில் சமூகக் குறைபாடுகள் திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டு அதுவரை பிறப்பு அத்தாட்சிப்பத்திரத்தில் குறிப்பிடப்படடு வந்த சாதி என்ற பதம் நீக்கப்பட்டு அதற்குப்பதிலாக தேசிய இனம் என்ற பதம் புகுத்தப்பட்டது.தந்தையின் தொழில் கட்டாயமாக பதியப்பட வேண்டும் என்ற அவசிம் இல்லை என்றும் கூறப்பட்டது.

1963 ம் ஆண்டு அப்பப்பா எனது அப்பாவை தமிழ் தாத்தா கந்தமுருகேசனார் நடத்திய திண்ணைப் பள்ளிக் கூடத்துக்கு தமிழ் படிக்க அனுப்பினார்.அங்கே கந்த முருகேசனார் எனது அப்பாவை தூக்கி தனது மடியில் இருத்திவிட்டார்.எப்படி சாதி குறைந்த ஒருவனை அவர் தனது மடியில் தூக்கி இருத்தி பாடஞ்சொல்லிக் கொடுக்கலாம் என்று வெகுண்டெழுந்த பெருமக்கள் கூட்டம் தங்கள் பிள்ளைகளை அவரிடம் பாடம் கற்க அனுப்பு மறுத்தவிட்டது.ஆனால் அவர் எவர் வந்தாலும் வராவிட்டாலும் எனது அப்பாவுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பேன் என்று உறுதியாக இருந்ததால் ஆத்திரமடைந்த அந்தக் கூட்டம் ஒரு நாள் பாடசாலை முடிந்து எனது அப்பா தனியே வந்த போது அவரது புத்தகங்களையும் பறித்து உடுப்புக்களையும் கழட்டி மண்ணெண்ணை ஊற்றி எரித்துவிட்டு வீதியலே நிர்வாணமாக அடித்து விரட்டியது.

1965 ம் ஆண்டு எனது அத்தை பிறந்த போது இணுவில் ஆஸ்பத்திரிக்கு முன்பாக இருந்த ஒரு கடையில் அப்பப்பா அப்பாவையும் கூட்டிக்கொண்டு போய் உள்ளேஇருந்து சாப்பிட்ட குற்றத்துகாக ஒரு லோட்டு விறகை ஒரு நாள் முழுவதும் கொத்த வைத்தார்கள்.அவர் கொத்தும் விறகை எனது அப்பா பொறக்கி அடுக்க வெண்டும்.குடிக்கத் தண்ணீர் கூடக் கொடுக்காமல் அடித்து உதைத்து வேலை செய்வித்தார்கள்.மற்றவர்களுக

Link to comment
Share on other sites

  • Replies 89
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இந்த யாழ் களத்திலே அண்மைக்காலமாக இந்துத்துவத்தை நியாயப்படுத்தவது பெரியாரை தூற்றுவது ஆகிய இரண்டு விடயங்கள் நடந்த வருகின்றன. தலித்தியம் பேசுபவர்கள் புலி எதிர்ப்பை அதனுடன் இணைப்பதைப் போல இந்துத்துவத்தை நியாயப்படுத்த பெரியாரை தூற்றும் பிரிவினர் தமிழ் தேசிய ஆதரவு என்ற விடயத்தையும் தங்களது கரத்தியலுடன் இணைக்கின்றார்கள். தலித்தியத்தை தாயகத்துக்கு இறக்குமதி செய்யும் நினைக்கும் பிரிவினர் தமிழ் தேசியம் என்பதே மேல்தட்டுப்பிரிவினரின் நலன்களுக்காக அடித்தட்டு மக்களை ஓடுக்குவது என்று கூறிவருவதற்கு சாட்சி செல்வதைப் போலவே இந்துத்துவ ஆதரவு மற்றும் பெரியார் எதிர்ப்பு என்பவற்றை முதன்மைப்படுத்துபவர்களுடைய எழுத்துக்கள் இருக்கின்றன.

உங்களின் கண் பார்வை தொடர்பான பரிசோதனையைத் தாங்கள் கட்டாயம் செய்ய வேண்டும் என்றே நம்புகின்றேன். அல்லது மோகனிடம் யாழ்களத்தில் நடந்தது பற்றி செவிவழியே அறிந்து கொள்ள முயற்சிக்கலாம். யாழ்களத்தில் இந்து மதத்தை நியாயப்படுத்த வேண்டிய சம்பவங்களும், பெரியாரைத் தூற்ற வேண்டிய சம்பவங்களும் ஏன் வந்தன என்பது பற்றியோ, அல்லது அவ்வாறு செய்யத் தூண்டியவர்கள் யார் என்பது பற்றியோ, சிறிதும் அறியாமல் எழுந்தமானத்துக்கு கதைப்பது சரியாகப்படவில்லை. இன்று, நேற்று அல்ல பல ஆண்டுகளாக, விடுதலைப்போராட்டம் என்பது இந்து மதத்துக்கு எதிரானது என்றும், திராவிடக் கொள்கை தான் தமிழ் தேசியம் என்றும் நிறையப் பேர் வியாக்கியானம் கொடுத்து வந்திருந்தனர்.

வெறுமனே இங்கே இந்து மதத்தைத் திட்டிக் கொண்டிருந்தால், நாங்கள் அதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருப்போம் என்று யாரும் கருதக் கூடாது. எல்லோர் வீட்டிலும் உப்புப் போட்டுத்தான் சமைப்பார்கள் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். இங்கே பெரியார் பற்றிய விமர்சனம் வைக்கின்றபோதே சொல்லிவிட்டுத் தான் விமர்சிக்கப்பட்டது. எம் மனதை நீங்கள் நோகடித்தால், உங்களின் மனதை நாங்களும் நோகடிப்போம் என்று. ஆனால் இக்களத்தில் பெரியார் பற்றிய விமர்சனங்கள் கடந்த 6 மாத காலப்பகுதிக்குள் தான் வைக்கப்பட்டிருந்தன. அதற்கு முதல் மற்றவர்கள் என்ன செய்தார்கள் என்பதையும் களநிர்வாகியிடம் கேட்டறியுங்கள்.

எந்தவொரு மனிதனுக்கும் எவ்வழிபாட்டு முறையையும் வழிபட உரிமையிருக்கின்றது. அந்த உரிமையை பிராமணருக்கும் சரி, உங்களுக்கும் சரி தடுக்க உரிமை கிடையாது. தமிழர் மதம் என்று ஆரியரால் ஆக்கிரமிக்கப்பட்ட பிரிவினை மீட்பதில் எமக்கு நிறையவே உடன்பாடு உண்டு. ஆனால் அதைச் சாத்தியப்படுத்த உங்களால் எவ்வாறு முடியும்? உங்களின் செயற்றை என்பது இந்துமத அழிப்பு என்ற சிந்தனையில் இருக்கின்றபோது உங்களை நாங்கள் எப்படி நம்புவது? அதனால் தான் சொல்கின்றோம். மதச் சீர்திருத்தங்களை உள்ளிருந்து செய்கின்றபோது தான் எடுபடுமே, தவிர, வெளியால் இருந்து செய்வதால் அல்ல.

அதை விட உங்களின் அது பற்றிய அத்திவாரமே ஆட்டம் காணுகின்ற நிலையில் தான் இருக்கின்றது. அங்கே இந்துக்கள் மட்டும் தான் தமிழர்களா? மற்றவர்களை உள்வாங்கவில்லையா? தமிழ் மதம் எவ்வகை வழிபாடு? எமக்கு முன்னர் ஆரிய வழிபாட்டோடு நின்று தமிழ் மதத்தையும், தமிழையும் வளர்த்தவர்களையும் என்ன செய்யப் போகின்றீர்கள் என்ற கேள்விக்கு உங்களிடம் பதில் இல்லை. இப்படிப்பட்ட நிலையில் அத்திவாரமே பிரச்சனைக்குரியதாக இருக்கின்றபோது, இத்தங்குமிடத்தை விட்டு எப்படி நாங்கள் வெளியால் வருவது?

1982 ல் இருந்து 1987 வரை தமிழகத்தின் பட்டி தொட்டி கிராமமெங்கும் பரப்புரைக்காக நான் சென்றபோது பெரியார் என்ற அந்த மனிதர் ஏற்படுத்திய தாக்கத்தை நேரில் கண்டிருக்கிறேன். பெரியார் என்ற மனிதர் இல்லை என்றால் தமிழகத்தின் குப்பனும் சுப்பனும் கட்டியுள்ள கோவணத்தையம் பறிகொடுத்த நிலையில் அம்மணமாகத்தான் இருந்திருப்பார்கள். எங்களுடைய தளத்தில் இருந்துகொண்டு பெரியாரை தூற்றுவதற்கும் விமர்சிப்பதற்கும் இப்போது என்ன தேவை வந்தது என்று எனக்குத் தெரியவில்லை. பெரியாரும் அவரது திராவிடர் கழகத்தினரும் ஈழத்தமிழர்களக்கு ஏதாவது தீங்கிளைத்திருக்கிறார்களா?

ஆமாம். இந்தத் தகவல் நானும் அறிந்த விடயம் தான். இந்தியாவில் பெரியார் பரப்புரை செய்யாத இடங்களில் குப்பனும், சுப்பனும் இப்போதும் அம்மணமாகத்தான் இருக்கின்றார்கள். மேலும் தமிழ்நாட்டைத் தவிர, அனைத்து மாநிலங்களும் எல்லோரும் அம்மணக்கட்டைகளாகத் தான் திரிகின்றார்கள். இப்படியிருக்கின்ற போது தான் உறைக்கின்றது! பெரியார் ஜேர்மனியில் போய் நிர்வாணக்கும்பல்களோடு தரிந்ததை, ஏன் இந்த குப்பனும், சுப்பனுடனும் சேர்ந்து செய்திருக்க கூடாது? அதற்கும் ஏற்றத் தாழ்வு பார்க்கப்பட்டதா?

எங்களுடைய தளததில் இருந்து கொண்டு.......... என்று கேட்பதை அப்படியே திருப்பிக் கேட்கலாம் என நினைக்கின்றேன். எம் தளத்தில் பார்ப்பாணக் கொடுமையில்லை. கோவிலில் பார்பாணிகளின் ஆதிக்கமும் இல்லை. அப்படியிருக்க பெரியார் கொள்கையை நாங்கள் ஏன் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டிய தேவை வந்தது? இங்கே, யாழ்களத்தில் நம்மவர்களுக்குள் அக்கொள்கையை பரப்ப முயல்கின்றவர்களையும், பார்ப்பாணி அடிவருடி என்று இந்துமதத்தைப் பற்றிக் கதைச்சால் திட்டகின்றவர்களையும் நீங்கள் "நறுக்" என்று நாலு வார்த்தை கேளுங்கள். முடியுமா?

ஜாதி தொடர்பாக விமர்சனங்கள் வேண்டும் என்கின்றீர்கள், மூடி வைத்துப் பயனில்லை எனறு வேறு சொல்கின்றீர்கள் ஆனால் பொது வாழ்வில் நுழைந்த பெரியார் பற்றி விமர்சனமே கூடாது என்று சொல்வது நியாயமாகத் தெரிகின்றதா? அதிலும், சோ, ராம் போன்ற ஓரிரண்டு பேருக்காக, ஒட்டுமொத்த பிராமணர்களையே திட்டுவது நியாயம் என்று கருதுகின்றீர்களா?

சாதியம் அழிக்கப்படவேண்டும் என்பதில் ஒட்டுமொத்த உடன்பாடு உண்டு. ஆனால் அது எவ்வாறு அழிக்கலாம் என்பது பற்றி ஒட்டுமொத்த தெளிவான சிந்தனை தான் முதலில் அவசியம். சாதியம் அழிக்கின்றோம் என்று எம் பாராம்பரியக் கலைகளை அழிவடைய வைக்கின்ற நிலையை உருவாக்க கூடாது. எம் கலைகள் குடும்பத் தொழிலாக, இருப்பதால் தான் அவ்வாறன நிலையை அடைந்தது என நம்பலாம். மிருதங்கம் வாசிப்பதோ, அல்லது பரதம் ஆடுவதோ, இன்றைக்கு பரம்பரைகளைத் தாண்டி, பொதுவாக நிற்பதால் அது ஜாதி வட்டத்துக்குள் வரவில்லை. அப்படிப் பரம்பலடைதல் நிலை ஊக்குவிக்கப்பட வேண்டியதாகும்.

திருமணத்துக்கு சாதி பார்த்தால் எவ்வாறு மாற்ற முடியும் என்று தெரியவில்லை. யாரையும் கட்டாயப்படுத்தவும் முடியாது. இவரைத் தான் திருமணம் செய் என்றோ, சம்பந்தம் செய்கின்றபோது சாதி பார்க்காமல் இருக்கின்றார்களோ என்று அறியவும் முடியாது. இப்படியான வேளைகளில் குறித்த சிந்தனையுள்ளவர்கள் தானாக மாறும்வரை நம்மால் ஒன்றுமே செய்ய முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தங்களை மேதவிகள் என்று நினைத்துக் கொள்பவர்களுக்கு, நேரடியாக கதைக்கத் துணிவில்லாமல், "இந்துவின் மைந்தர்கள்" என்ற பாணியில் கதையளக்கின்றனர். ஆனால் குறித்த கருத்துக்கு பதிலளிக்கத் தெரியாவிட்டால் மூஞ்சியைத் திருப்பிக் கொண்டு பேசுவது போன்ற "வன்வே"க் காரர்கள் நாம் அல்லவே!

இங்கே உள்ள போக்கிரித்தனம் அவருக்கு வெறுப்பைத் தருகின்றது என்பது ஆச்சரியமானது ஒன்றே. ஒரு காலத்தில் எதற்கெடுத்தாலும் இந்து மதத்தைச் சார்ந்தவர்களை வசைபாடிக் கட்டுரை இணைத்த அவருக்கா இப்படி ஒரு சோதனை? பரந்துபட்ட வாசிப்பு என்று அவரிடம் மட்டும் ஏதோ இருக்கின்றதாக நினைக்கின்றார் போலும். எதற்கெடுத்தாலும், விடுதலைப்புலிகளின் முடிந்தமுடிவு இது தான் என்று எக்கருத்தையும் திசை திருப்பி முடிக்கின்ற வேலையைத் தானே பல தடவை காண முடிந்தது. தன்னால் தான், இக்களத்தில் இப்படியான விவாதங்கள் உருவாகக் காரணம் என்று மனதில் உள்ள சஞ்சலமே, பொடியாரின் கட்டுரை இணைத்தவுடன், இவரைப் பதிலளிக்க தூண்டியிருக்கும் என நம்பலாம்.

ஆனாலும், இப்போது தான் தனிநபர் தாக்குதலும், விதண்டவாதமும் நடப்பதாக இவர் கருதும் விதம் ஆச்சரியமளிக்கின்றது. ஒரு காலத்தில், இவரும், மற்றோருவரும், களத்தில் எப்பகுதியில் கருத்து எழுதினாலும், துரத்தித்துரத்தி அடிபட்ட விதத்தால் எத்தனை பேர் எரிச்சலடைந்திருப்பார்கள் என்பதை இவர் அறியமாட்டார் போலும்.

இப்போது ஏனோ தேசியவிடுதலைப் போராட்டத்திற்கு பெரியார் பற்றிய எதிர்கருத்துக்கள், பாதிப்பை ஏற்படுத்தி வருவதாகக் கண்ணீர் வடிப்பவருக்கு, முதலில் ஏன் அந்தப் பொறுப்புணர்ச்சி வரவில்லை. சொல்லப்போனால், அது காரணமல்ல. இவர்களின் இந்து மத எதிர்பு வாதங்களுக்கு முட்டுக்கட்டை வந்தவுடன், அதை முடிக்கப் பாவிப்பது தான் தேசிய வாதம்.

இங்கே என்னுமொருவர் பெரியாரை ஆதரித்து விமர்சித்தார். ஆனால் அவர் தான் மறுபக்கம் இந்தியா இராணுவம் என்ன செய்தது என்று, இராணுவத்தை விமர்சிப்பதை விட, இந்திய நாட்டை அதிகமாக விமர்சித்தார். அப்போது எல்லாம் இவர் எங்கு போய் ஒளிந்து கொண்டார்? அவை எல்லாம் பிரச்சாரப் பொருளாக இருக்க மாட்டாதா?

டக்ளஸ் தேவானந்தா இந்து மதகுருமார்களை விலைக்கு வாங்குவதாக் கதை விடுவது எல்லாம் இந்து மத எதிர்ப்பால் தான் உண்டானதே தவிர, அங்கே மதகுருமார்களால் டக்ளஸ் என்ன புடுங்க முடியும் என்ற விளக்கமில்லை. கோவில்களில் மணியடிப்பதையும், மந்திரம் ஓதுவதையும் தவிர வேறு எவ்விதத்திலும் மதகுருமார்களின் பணி எமக்குள் அமைவதில்லை. அங்கே, அவர்கள் சொற்பொழிவுகள் ஆற்றுவதுமில்லை. இதை விடுத்து, வேறு காரணங்களை மதகுருமார்கள் மீது இவர்கள் அழுத்தம் செய்தாலும், அது மதகுருமார்கள் மட்டும் தான் என்றில்லை. பணத்திற்கு விலை போகும் அனைவராலும் செய்யக் கூடிய ஒன்று.

டக்ளஸ் தேவானந்தா அபிவித்து அமைச்சாராக இருந்தபோது, கோவிலுக்கு மட்டும் காசு கொடுத்து விலைக்கு வாங்கவில்லை. அவன் சனசமூக நிலையங்கள், பள்ளிக்கூடங்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், என்று பல தரப்பில் பிச்சை கொடுத்தான். ஏன் சென்ற தேர்தலில் பலருக்கு துவிச்சக்கரவண்டிகள் கூடக் கொடுத்தான். இவர்களின் பொங்கி எழுதல் இவை பற்றி இருக்கமாட்டாதா? நல்லாத் தான் பூச்சாண்டி காட்டுகின்றார்.

பதிலளிக்கத் தெரியாவிட்டால் கைக்கொள்ளும் விதங்கள்,

1. அது விதண்டாவாதம் என்று தப்பித்துக் கொள்வது.( சிறிரங்கன் போட்ட ரொஸ் எனக்கு ஞாபகமிருக்கு. சம்பந்தப்பட்டவருக்கு?? )

2. தமிழக உறவைப் பாதிக்கும் எண்டு பூச்சாண்டி காட்டுவது.

3. எதிரிகளோடு, இந்து மதத்தை இணைத்துக் கதைத்து, அதை ஆதரித்து கதைக்கவிடாமல் செய்வது.

இவர்கள் தாங்கள் பரந்தபட்ட அறிவைக்(??) காட்டிக் கொள்வது, இதில் ஒன்றாகத் தான் இருக்கும். இதையும் மீறிப்போனால், நீ துரோகி, அவன் அடிவருடி என்ற தனிநபர் தாக்குதலுக்கும் பஞ்சமிருக்காது. இப்படியான விதாண்டாவாதிகள், ஏதோ தங்களின் அறிவு குறித்து மயக்கத்தில் இருக்கின்றார்கள்.

எனவே, சும்மா விளங்கமில்லாத பின்நவீனத்துவம், முன்நவீனத்துவம், கருத்தியல், கோட்பாடு என்று வார்த்தைக்கு வார்த்தை ஏமாற்றும் சொற்களைப் போட்டு ஏமாற்றுவதில் இருந்து தவிர்க்க வேண்டும். சும்மா இப்படி எழுதினால் அறிவாளிகள் என்று சனம் நினைக்கும் என்று இப்ப ஒரு ப்சானாகப் போய் விட்டது என்ன?

தமிழ் தேசியம் மீது இவர்களுக்குப் பற்றிருந்தால், எமக்குள் பொருத்தமில்லாத பகுத்தறிவு என்ற மாயை விதைப்பதையும், இந்து மதத்தைச் சாடுவதையும் முதலில் இவர்களும், இவர்கள் கூட்டாளிகளும் நிறுத்தக் கற்றுக் கொள்ளவேண்டும். அதற்குப் பிறகு தான், தமிழ் தேசியத்தினைப் பற்றிக் கதைக்க இவர்களுக்கு வக்கிருக்கின்றது.

காலத்துக்கு காலம், அங்கே பிரச்சனை, இங்கே பிரச்சனை என்று ஏதாவது விமர்சனம் செய்வது தான் இவர்களின் பிழைப்பு. சிறிய விடயங்களைக் கூடப் பிரமாண்டமாகத் விபரித்து, தாங்கள் உயிர், மூச்சு எல்லாம் இதற்காகத் தான் செலவளிப்பது போலப் படம் காட்டினால், அதற்குப் பெயர் தான், மாக்கிச சிந்ததந்தம். நவீன, பின்னத்துவ கோட்பாட்டில், கருத்தியலையும் தேசியம் என்று சமூக ஏற்றத்தாழ்வின் பாதையில் வெள்ளாள சமூகத்தின் குறுந்தேசியம்..... என்று கதைத்து வந்தாலே நோயாளர் காவு வண்டிக்கு கூட காத்திராமல் சாகடித்துவிடலாம்.

சமூகத்தில் உதவாத பகுத்தறிவு என்ற ஜாதி வெறியை இம்மியளவும் போக்காத சித்தந்தத்தை பெரியாரின் கல்லறையில் வைத்து விட்டு, வந்தாலே, தமிழ் தேசியப் போராட்டம் தன்பாட்டில் போகும். இந்துத்துவம் சிறிலங்கா அரசுக்கு உதவுகின்றது என்ற பூச்சாண்டியும் அப்போது தேவைப்படாது.

நல்ல பிள்ளை நாடகமும் தேவைப்படாது.

----------------------------------------------------------------------------------

இளங்கோவும், சபேசனும் செய்ததை இவர் ஏற்றுக் கொண்டிருப்பாரானால், தன்னை அறிவாளி என்று காட்டுகின்ற விதத்துக்கு ஒரு துளியும் இவருக்குப் பொருத்தமில்லை. பெரியாரைப் பற்றிச் சொன்னால் அவதூறு, சிவனைப் பற்றிச் சொன்னால் விமர்சனம் என்று ஏமாற்று வேலைகள். வெறுமனே புராணக்கதைகளை மட்டும் படித்து விட்டு, தங்களைப் பரந்துபட்ட அறிவாளிகள் என்று ஆயிரம், ஆயிரம் ஆண்டுகளாகப் போற்றி வந்த ஒரு மதத்தை எழுந்தமானத்துக்கு விமர்சிப்பது எவ்வளவு கீழ்தரம்.

இந்திய மக்களிடம் இருந்து பிரிக்க அவர்கள் பற்றி விமர்சனம் செய்யக் கூடாது என்று சிந்தித்திருந்தால், " ஏழையின் வீட்டில்..." என்ற தலைப்பில் இந்தியாவை மட்டமாக விமர்சித்த இளங்கோவிற்கு, இந்தியாவோடு நெருக்கமாக இருக்க வைக்கின்ற உணர்வு இருக்கின்றதா?

சிவன் முனி பத்தினிகளைக் கெடுத்தான் என்றும், சரஸ்வதி நாக்கில் இருக்கின்றாள் என்றால், அவள் மலம் கழிப்பது உன் நாக்கில் தானா என்று விதண்டாவாதம் கதைக்கின்ற போக்கிரிகள், தங்களைப் புத்திசாலி என்று தலைக்கணத்தோடு இருக்கின்றார்கள் போலும். இவர்கள் குடும்பத்தினரை இதயத்தில் வைத்துப் பாதுகாப்பதாகச் சொன்னால், இவர்கள் குடும்பத்தினர் என்ன இவர் நெஞ்சிலா மலம் கழிக்கின்றார்கள்.

தாங்கள் செய்வது எல்லாம், சூது. மற்றவர்களைப் பார்த்து அறிவுரைக்கு மட்டும் குறைச்சலில்லை.

அதுவும், இம்மதத்தைச் சார்ந்தவர் என்பதால் விமர்சிக்க உரிமை உண்டு என்று விதண்டாவாதம் வேறு. அதே பகுத்தறிவும் தமிழருக்குள் தோன்றியது என்பதால், அது பற்றி விமர்சிக்க உரிமை எமக்கும் உண்டு.

--------------------------------------------------------------------------

யாழ்களத்தில் தற்போதில்லாத ஆருரனைப் பற்றி விமர்சனம் செய்ய எவருக்கும் அருங்கதையில்லை. அவர் தனித்து தளம் அமைத்தது, தன் உணர்வுகளை வெளிப்படுத்த, இங்கே சிலர் தடையாக இருந்ததால் தான். மற்றும்படி, இவர்களைப் போல மட்டமான விதண்டாவாதங்களை வைத்து அவர் கருத்தெழுதுவதில்லை. வரலாற்று ஆதாரங்களை காட்டுகின்ற அவரோடு நேரடியாகக் கதைக்கத் துப்பில்லாதவர்கள் தான், அவர் வராத யாழ்களத்தில் அவரைப் பற்றி மட்டமாக எழுத முனைகின்றார்கள். சீ... இதுவும் ஒரு பிழைப்பு!

Link to comment
Share on other sites

ஐயா தூயவன் எனக்கு இந்து மதத்தின் மீது அடக்க முடியாத கோபம்.என்னுடைய வயது தான் உமக்கும் இருக்கலாம்;. நான் தாழ்ந்த சாதியில பிறக்கிறதுக்கு போன ஜென்மத்தில் செய்த பாவம் தான் காரணம் எண்டு இந்துக்கள் தான் சொல்லுகினம். நாங்கள் கரவன் கூட்டம் எண்டு பிரான்ஸ் அரசாங்கத்தட்டை போய் சொல்லுகினம்.இதை பார்த்துக் கொண்டு நாங்கள் சூடு சொரணை இல்லாமல் வாயை மூடிக் கொண்டு இருக்கோணும்.அது தான் இதுதெல்லாம் எங்கடை தலைவிதி எண்டு சொல்லிப் போட்டியளே.

Link to comment
Share on other sites

ஐயா தூயவன் எனக்கு இந்து மதத்தின் மீது அடக்க முடியாத கோபம்.என்னுடைய வயது தான் உமக்கும் இருக்கலாம்;. நான் தாழ்ந்த சாதியில பிறக்கிறதுக்கு போன ஜென்மத்தில் செய்த பாவம் தான் காரணம் எண்டு இந்துக்கள் தான் சொல்லுகினம். நாங்கள் கரவன் கூட்டம் எண்டு பிரான்ஸ் அரசாங்கத்தட்டை போய் சொல்லுகினம்.இதை பார்த்துக் கொண்டு நாங்கள் சூடு சொரணை இல்லாமல் வாயை மூடிக் கொண்டு இருக்கோணும்.அது தான் இதுதெல்லாம் எங்கடை தலைவிதி எண்டு சொல்லிப் போட்டியளே.

நவம்,

தயவு செய்து ஒரு முறை அமைதியாக ஆத்திரப்படாமல் திறந்த மனதோடு இதைக் கேளுங்கள்.

சாதி ஒழிக்கப்படவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்திற்கே இடமில்லை என எத்தனை தடவை நாங்கள் திருப்பத்திருப்பச் சொன்னாலும், நாங்கள் கடவுள் பற்றிக் கதைக்கிறோம் என்ற ஒற்றைக் காரணத்திற்காக நாங்கள் சொல்வதை நீங்கள் ஏற்றுக் கொள்ள மறுக்கிறீர்கள். இன்னமும், சாதியத்தின் கொடுமைகளை எங்களிற்கு நீங்கள் தொடர்ந்து சொல்வதன் மூலம் தான் எங்களையும மாற்றி நாங்களும் சாதியத்தை எதிர்ப்பவர்களாக மாற்றப்படமுடியும் என்ற கோணத்திலேயே தான் உங்களின் பதிவுகள் தொடர்ந்தும் அமைகின்றன. என்னைப் பொறுத்த வரை இது விரயமாகும் சக்தி.

இப்போ, நீங்களே சொன்னது போல், எப்போவாவது சோகத்தின்,கோபத்தின், விரக்தியின் விளிம்பில் எதிரியின் அடையாளமாகப் பௌத்த சமயத்தைக் குழப்பி நாங்கள் எடுத்து, அதன் மேல் கோபப்படுவது உண்மை தான். ஆனாலும் கூட எங்களது தலைவரோ அல்லது நாங்கள் எவரோ எப்போதுமே பௌத்த சமயம் முற்றாக அழிக்கப்படவேண்டும் என்றோ அனைவரும் அம்மதத்தை விட்டொழிக்க வேண்டும் என்றோ கேட்டதில்லை. ஏனெனில் எங்களின் துன்பத்;திற்கு அது காரணமில்லை என்பதும் நீங்களே கூறியது போல் அதிலும் பல நல்ல விடயங்களும் உள்ளன என்பதும் எமக்குத் தெரியும். இன்னும் சொல்லப்போனால், நீங்கள் சொன்னீர்கள் சாதிவெறியர்கள் எல்லாம் சைவ சமயத்துள் சரணடைந்திருப்பதாக நீங்கள் கருதுவதால் தான் மதத்தை நீங்கள் வெறுக்கிறீர்கள் என்று. சரி விவாதத்திற்காக அப்பிடியே வைத்துக் கொள்வோம். இப்போது பாருங்கள், எங்களைத் துன்புறுத்தும் அழிக்கும் ஒவ்வொரு சிறீலங்கா இராணுவத்தினனும் சிங்கள மக்களில் இருந்து தான் வருகிறாhர்கள் என்ற போதும், எங்களின் இயக்கமோ நாங்களோ இன்னமும் சிங்கள மக்களை அழிக்கப்பட வேண்டிய பீடைகளாக ஒருபோதும் பார்;ப்பதில்லை. காரணம் பிரச்சினை எங்கே எதனால் வருகிறது என்பதனைப் பகுத்து ஆழமாக அறியும் ஆற்றல், அது பெரியார் விசுவாசிகளோ இல்லையோ என்பதற்கெல்லாம் அப்பால், தமிழர்களாகிய எங்கள் அனைவரிற்கும் உள்ளது. நம்மை விட நமது தலைமைக்கு அது அபரிமிதமாக உள்ளது. உணர்ச்சிவசப்பட்டு கிராமம் கிராமமாகச், றுவான்டோ போலோ செரலியோன் போன்றோ நாங்கள் செய்வதில்லை. ஏனெனில் எந்த இக்கட்டான சூழலிலும், அது அந்தக் கிபிர்கள் வள்ளிபுனத்தில் எமது குருத்துக்களைக் கருக்கிய அந்த நொடிப்பொழுத்தாகத் தான் இருப்பினும் கூட, அறிவிற்கு இடங்கொடுத்து விடயங்களைப் பகுத்து அறிந்து நடக்கும் தன்மை நமது தலைமைக்கு உள்ளது.

சாதி ஒழிப்புப் போராட்டத்தில் மட்டும் ஏன் நாங்கள் இந்த அரிய திறமைகளை கைவிட்டு விடுகின்றோம?. எதற்காக உணர்ச்சி வசப்பபட்டு மதம் ஒழிக்கப்படவேண்டும் எனக் கத்துகிறோம்?

முதலில், கடவுள் நம்பிக்கை உடையவர்கள் எல்லாம் கெட்டவர்கள் என்ற குறுகிய சிந்தையில் இருந்து நாம் அனைவரும் மீள வேண்டும். அதற்கும் மேலால் கடவுள் நம்பிக்கையை ஒழித்தால் சாதியம் ஒழியும் என நாம் சிந்திப்பது சரிதானா என்பதனை எமது சமூகம் பற்றி எமக்குள்ள அறிவை வைத்து நாம் அனைவரும் ஆராய வேண்டும்.

சிலரின் பிழையான புரிதல்களிற்குச் சமயம் காரணம் அல்ல.இன்று உலகில் இஸ்லாமை சில மனங்குழம்பிய மடையர்கள் பாவிப்பதால் குர்றானையே எரிக்க வேண்டும் என ஒரு போதும் இந்த ஆக்கிரமிப்பே உருவான அமெரிக்கா கூடக் கேட்பதில்லை. மொத்தத்தில் பாம்பிருக்கும் என்பதற்காகக் காட்டைக் கொழுத்தக் கூடாது என்பதே உலகார்ந்த ஏற்றுக் கொள்ளல்.

உங்களின் பதிவில் கூறப்பட்டுள்ள உங்களின் குடும்பத்தினர் மீதான ஈனச் செயலைச் செய்தவர்கள் பற்றி நாங்கள் நோக்கின், அங்கு கூட ஒரு தவறான கல்வி இலாகா அதிகாரி, தவறான கல்லூரி அதிபர், தவறான சட்டமும் கோட்டும், இயங்காத காவல் துறை, சரியான தலைமை அற்ற அறியாமை மிக்க மக்கள் கூட்டம் முதலியனவும் உங்களின் குடும்பத்திற்கு நடந்த அநீதிக்குக் கருவிகளாக, காரணமாக இருந்திருக்கின்றன. மேற்குறிப்பிட்ட அனைத்துக் காரணிகளும் மத விசுவாசம் என்ற ஒரே காரணத்திற்காக மட்டும் தான் அப்படி நடந்து கொண்டார்கள் என நாங்கள் நினைப்பது ஆபத்து. அப்படியான சிந்தனை சாதி ஒழிப்பு என்ற இலக்கைத் தான் மந்தப்படுத்தும். ஏனெனில் மேற்படி நபர்களின் செயற்பாடு, மத போதனை என்பதற்கப்பால், ஒரு சிலரின் சுயநலன் பேண் செயற்பாடாக்கூட அமைகிறது. நாங்கள் ஆராய்ந்து பார்ப்பின் இந்து மதம் செய்யாதே என்று சொல்லுகின்ற பஞ்சமா பாதகங்களையும் தயங்காது செய்கின்ற மக்கள் (உங்களின் குடும்பம் மீதான ஈனச் செயல்களைப் புரிந்தவர்கள் நாளாந்தம் தத்தமது வாழ்வில் பஞ்சமா பாதகங்களில் எத்தனையைச் செய்தார்கள் என்பதனை உங்கள் குடுப்பத்தார் மூலம் கேட்டறிந்து பாருங்கள். அடித்துச் சொல்லுகிறேன் பலவற்றை அவர்கள் செய்திருப்பர். கடவுளிற்குப் பயமென்றால், பஞ்சமா பாதகங்களைச் செய்யும் தைரியம் எங்கிருந்து வந்தது?) மதம் சொன்னதாக நீங்கள் சொல்லுகின்ற சாதியத்தை மட்டும் ஏன் பிடித்துத் தொங்குகின்றர்கள்? ஏனெனில் அங்கு அது அவர்களிற்குச் சாதகமாக இருக்கிறது. எனவே இது சில தனி நபர்களின் குணவியல் தொடர்பானது. ஓரு பகுத்தறிவு வாதியான உங்களிற்கு இத்தனை விளக்கமாக நான் சொல்லத் தேவையில்லைத் தான் இருந்தாலும் எனது மனத் திருப்திக்காகச் சொல்லி உள்ளேன்.

இனி, சில மக்களின் உளவியல் பற்றி ஒரு உதாரணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த ஒட்டுக் கு ழுக்கள் சொல்கின்றன மக்கள் புலிகளை ஆதரிப்பது புலிகளின் மீதுள்ள பயத்தினால் மட்டுமே என்று. அத்தோடு அவர்கள் சொல்கிறார்கள் இந்தப் பயமானது இலகுவில் நீக்கப்படக்கூடிய ஒன்றல்ல என்றும் அதற்காகத் தான் தாங்கள் தொடர்ந்தும் போராடுகிறோம் என்றும். இனி ஒரு பெரியார் விசுவாசி மதம் பற்றி இங்கே குறிப்பிட்டதைப் பாருங்கள். அவர் கூறுகிறார் மக்கள் ஏன் சில மத நம்பிக்கைகளையும் நடைமுறைகளையும் கொண்டிருக்கின்றார்கள் என்பதற்கு ஒற்றைக் காரணம் அவர்கள் கொண்டிருக்கும் கடவுள் பயம் மட்டுமே என்று. மேலும் அவர் கூறுகிறார் கடவுள் பயம் என்பது இலகுவில் அழிக்கப்படக் கூடியதல்ல என்றும் அதனால் தான் சிந்திக்கத்தெரியாத இந்த அப்பாவி மக்களிற்காகத் தான் தன்னை பகுத்தறிவாளன் எனப் பிரகடனப் படுத்த வேண்டி இருக்கின்றது என்று.

மேலிரு விடயங்களையும் நீங்கள் ஆ ழ நோக்கினீர்கள் என்றால் இருவருமே மக்கள் கையாலாகதவர்கள் அவர்களிற்காக அவர்களின் பெயரில் தாம் தான் செயற்படுகிறோம் என்கிறார்கள். ஆனால் அவ்வாறு மக்களைக் கையாலாகா மூடர்களாகச் சித்திரிப்பதனால் மேற்படி இருவரதும் நிலைகள் உடனடியாக உயர்கின்றனவல்லவா: ஒருவர் ஏலாத மக்களிற்காகப் போராடும் தியாகி மற்றையவர் சிந்திக்கத் தெரியாத சடங்களிற்காகச் சிந்திக்கும் சிந்தனையாளன். ஆக, மக்கள் கையாலாகதவர்களாகச் சித்திரிக்கப்படவேண்டிய ஒரு தேவை அங்கு அவர்களிற்கு இருப்பதனை நீங்கள் காண்கிறீர்களல்லவா. ஆனால் உங்களிற்கும் தெரியம் எனக்கும் தெரியும் பயத்திற்காகவாக நாங்கள் புலிகளை ஆதரிக்கின்றோம். இனி உங்களிற்குத் தெரியாத ஒரு விடயம், பயத்திற்கா நான் கடவுளை நம்பவுமில்லை. மேற்படி இரண்டகத் தன்மை தான் நாங்கள் சில வேளைகளில் சிலரோடு முரண்படுவதற்கான காரணமாக அமைகிறது.

சமூக மேம்பாடு என்பது இன்றியமையாதது. அதை ஏற்படுத்துவது என்பது பன்முகப்பட்ட நடவடிக்கைகளாலும், தன்னலமற்ற திறமையான சீரிய சிந்தனை உடைய ஒரு தலைமையினாலும் நன்கு திட்டமிடப்பட்டு மக்களால் உணர்வு பூர்வமாக ஏற்படுத்தப்படவேண்டியது. தமிழர்களாகிய எங்களிற்கு அவ்வாறான ஒரு தலைமை கிடைத்துள்ளது, அந்தத் தலைமை ஆயிரமாயிரம் சமூகச் சிற்பிகளைச் செதுக்கியுள்ளது. எனவே கவலையை விடுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மதிப்பிற்குரிய ஐயா சிவா சின்னப்பொடி அவர்களுக்கு.

தங்களின் இந்தப் பதிவு மிகவும் அற்புதமானது. குறிப்பிட்டு சொல்லுவதற்கு எதுவும் இல்லாமல் அனைத்து வரிகளும் ஆழம் நிறைந்தவை.

இதில் பெரியார் கொள்ளையாளர்களின் நோக்கம் என்ன என்று ஒரு கேள்வியும் எழுப்பியிருந்தீர்கள்

ஒரு பெரியாரிஸ்ட் என்ற வகையில் இதற்கு பதிலளிக்க விரும்புகிறேன்.

சாதிகளற்ற மத அடிப்படைவாதம் அற்ற தமிழ்த் தேசியத்தையே நாங்கள் விரும்புகின்றோம். தமிழீழத்தின் மீது எங்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது. ஆனால் புலம் பெயர்ந்த சமூகத்தில் நம்மவர்கள் இன்றளவும் சாதி அடையாளங்களை பேணுவது வியப்பையும் வேதனையையும் தருகிறது. சற்று எண்ணிப் பார்ப்போம். தமிழீழ மக்கள் தங்கள் விடுதலைக்கு எவ்வளவு விலைகளை கொடுத்திருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது நமக்குள் இன்னமும் இவற்றைக் கட்டிக் காப்பது இழிவல்லவா!

சாதிய நஞ்சு பெற்றவர்களிடம் இருந்து பிள்ளைகளுக்கு தொற்றுகிறது என்பதை இன்றைய புலம் பெயர்ந்த எனது உறவினர்கள் நண்பர்களிடையே நான் கண்கூடாக கண்ட உண்மை. எனது நண்பன் தான் உயிருக்கு உயிராய் காலித்த பெண்ணை பெற்றவர்களின் வற்புறுத்தல்களால் கைவிட்ட கதையும் உள்ளது. அந்தப் பெண் உயர் கல்வி கற்றவர். நான் கேட்கிறேன் யாரும் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். மரம் ஏறும் தொழில் செய்பவர்கள் நளவர் என்றால் அந்தப் பெண் மரமா ஏறுகிறாள். அவள் படித்தது சட்டம். அதற்குப் பின் அவளை அப்படி இழிவு செய்வது எவ்வளவு கீழ்தரமான செயல். இன்று நாம் எல்லோரும் எல்லாவிதமான தொழில்களையும் செய்கிறோம். அப்படியென்றால் இந்தச் சாதி இல்லாமல் போயிருக்க வேண்டுமே. ஏன் இல்லை. அதனால்தான் இந்து மதத்தையும் அதன் தமிழ் வடிவமான சைவத்தையும் எதிர்க்கிறோம்.

நமது நாடு இரத்தத்தில் மிதக்கும் போது கோவிலுக்காக பணத்தை இறைக்கிறார்களே! ஏன் அந்தப் பணத்தை நலிவுறும் நம் தமிழ் உறவுகளுக்கு கொடுக்கக் கூடாதா.

அடுத்து புலத்தில் இந்துத்துவம் படுவேகமாக வளர்ந்து வருகிறது. கீதையின் அந்த வாக்கியம் இன்று பெரும்பாலான வீடுகளில் தொங்குகிறது. ஏன் நமது புறநானுறு திருக்குறள் தத்துவங்களை வீட்டில் தொங்கவிடக்கூடாதா! இது போன்று பல உள்ளன.

தமிழர்களை எதுவும் பிரிக்கக் கூடாது. அவர்களுக்குள் எந்த ஏற்றத் தாழ்வுகளும் இருக்கக் கூடாது. அந்தத் தமிழ்த் தேசியத்தை மனிதநேயத்துடன் வளர்த்தெடுப்போம்

பெரியாரின் பேராண்டிகளாக இதைத்தாம் விரும்புகிறோம்

Link to comment
Share on other sites

விடுதலைப்புலிகள் மீதான நம்பிக்கையையும் முடநம்பிக்கையையும் ஒப்பிடுவது கண்டிக்கத்தக்கது.

கடவுள் பயம் என்று சொல்வதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன்.

நான் இதுவரை பேசிய பெரும்பாலான தமிழர்கள் ஆலயங்களில் தமிழில் பூசை செய்யப்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள். அழிந்து போய்விட்ட ஒரு மொழியில் வழிபாடு நடப்பதில் அவர்களுக்கு உடன்பாடு இல்லை.

ஆனால் அதை மாற்றுவதற்கு குரல் கொடுப்பதற்கு யாரும் தயாராக இல்லை. அதைப் பற்றி பேசுவதற்கு கூட தயங்குகிறார்கள். இதற்கு "கடவுள் பயம்" காரணம் இல்லாமல், வேறு என்ன காரணம்?

Link to comment
Share on other sites

மதிப்பிற்குரிய ஐயா சிவா சின்னப்பொடி அவர்களுக்கு.

சாதிகளற்ற மத அடிப்படைவாதம் அற்ற தமிழ்த் தேசியத்தையே நாங்கள் விரும்புகின்றோம். தமிழீழத்தின்

தமிழர்களை எதுவும் பிரிக்கக் கூடாது. அவர்களுக்குள் எந்த ஏற்றத் தாழ்வுகளும் இருக்குக் கூடாது. அந்தத் தமிழ்த் தேசியத்தை மனிதநேயத்துடன் வளர்த்தெடுப்போம்

பெரியாரின் பேராண்டிகளாக இதைத்தாம் விரும்புகிறோம்

மதமே அற்ற தேசியம் என்ற நிலையில் இருந்து மத அடிப்படைவாதமற்ற தேசியமென்ற நிலைக்கான மாற்றம் மிகவும் பாராட்டப்படவேண்டியது. மகிழ்ச்சி தருகின்றது.

தமிழர்களாக ஒன்று பட்டு ஒரே உயர்விற்கு அனைவரும் உழைப்போம்!

Link to comment
Share on other sites

விடுதலைப்புலிகள் மீதான நம்பிக்கையையும் முடநம்பிக்கையையும் ஒப்பிடுவது கண்டிக்கத்தக்கது.

கடவுள் பயம் என்று சொல்வதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன்.

நான் இதுவரை பேசிய பெரும்பாலான தமிழர்கள் ஆலயங்களில் தமிழில் பூசை செய்யப்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள். அழிந்து போய்விட்ட ஒரு மொழியில் வழிபாடு நடப்பதில் அவர்களுக்கு உடன்பாடு இல்லை.

ஆனால் அதை மாற்றுவதற்கு குரல் கொடுப்பதற்கு யாரும் தயாராக இல்லை. அதைப் பற்றி பேசுவதற்கு கூட தயங்குகிறார்கள். இதற்கு "கடவுள் பயம்" காரணம் இல்லாமல், வேறு என்ன காரணம்?

ஆத்திரப்படாமல் சற்று நிதானமாக, திறந்த மனதோடு பதிவைத் திருப்பிப் படித்தால், விடுதலைப் புலிகளை மூடநம்பிக்கையோடு யாராவது தெரியாமலேனும் எங்கேனும் ஒப்பிட்டிருக்கிறார்களா? இல்லையே, மாறாக மக்களை மருட்ட விளையும் இருசாராரின் குணவியல்பும் அவர்கள் கையாழும் இருவெறு உத்திகள் பற்றியுமல்லவா பேசப்பட்டிருக்கிறது என்பது புலனாகும்.

மேலும் கடவுள் பயம் அவ்வளவு இருந்தால் பஞ்சமா பாதகங்களை அன்றாடம் செய்ய மக்களிற்கு எங்கிருந்து தைரியம் வருகிறது, அப்பிடின்னா நெசத்தில கடவுள்க்கு பயப்பிடீல்லிய போன்ற கேள்விகளும் பிறக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொருவன்.

தாங்கள் வேலைப் பழு மத்தியில் நின்று, இவர்களுக்குப் பதில் எழுதுகின்றீர்கள் என்று சொன்னீர்கள். உண்மையில் தெளிவாகப் பதில் கொடுப்பதை இட்டுப் பாராட்டுகின்றேன். ஆனால், இவர்கள் எதை எடுத்தாலும், கடைசியில் இந்து மதம் தான் காரணம் என்று கொண்டு போய் முடிப்பார்கள்.

சொல்லப் போனால் தீர்வு என்பது இவர்களுக்குப் பிரச்சனையல்ல. எப்படியாவது இந்து மதத்தைத் திட்டித் தீர்த்தால் போதும் என்பது தான் இவர்கள் சிந்தனை. காலையில் வயிற்றில் ஏதும் பீரச்சனை என்றால், 5 வயதில் முருகன் கோவில் பிரசாதம் தான் உண்டது இதற்குக் காரணம் என்று எங்கையும் போய்ச் சொடிவார்கள்.

அதனால், அடிமட்ட விவாதங்களுக்குப் பதிலளிக்காதீர்கள். கருத்துள்ள விவாதங்களை மட்டும் கணக்கெடுங்கள். மட்டமானவற்றை விவாதிக்கத் தான், பரந்துபட்ட வாசிப்பற்ற நாங்கள் இருக்கின்றோமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாதிக்கு இந்துமதமே காரணானது என்று வைத்துக்கொண்டாலும் இந்து மதத்தை ஒழித்தால் சாதி ஒழியாது. இப்ப சாதியை காவித் திரிபவர்களுக்கு அது ஒரு நம்பிக்கை. அவர்களுக்கு அதன் மூலங்கள் தெரியாது. இந்து மதத்தை ஒழித்தாலும் சாதி ஒழியாது.

நானும் அவ்வப்போது கேட்டுக்கொண்டு தானிருக்கிறேன். சாதி எண்ணக் கருவை இல்லாதொழிக்க செயற்பாட்டுத் தீர்வு என்ன என.. யாருமே கண்டுக்கிறாங்களில்லைப்பா..

Link to comment
Share on other sites

இன்னுமொருவன்!

நீங்கள் "கடவுள் பயம்" என்று நான் சொல்வதையும் இனஎதிரிகள் "புலிகள் பயம்" என்று சொல்வதையும் ஒப்பிடுவது தவறு.

வேண்டுமென்றால் தமிழ் மக்கள் பல ஆண்டுகளாக சிங்கள ஆட்சியாளர்கள் மீது கொண்டிருந்த பயத்துடன் ஒப்பிட்டுக் கொள்ளுங்கள்.

நீங்கள் பஞ்சமாபாதகங்கள் பற்றிக் கேட்டிருந்தீர்கள். பஞ்சமாபாதகங்களை ஏதாவது ஒரு விளக்கம் சொல்லிக் கொண்டு எமது மக்கள் செய்வார்கள். அதிலும் கொலை, களவு போன்றவற்றை பெரும்பாலானவர்கள் செய்வதில்லை. பொய் பேசுதல், மது மாமிசம் அருந்துதல் போன்றவற்றை பெரும்பாலானோர் செய்வார்கள்.

ஆனால் பஞ்சமாபாதகங்கள் வேறு, தெய்வக்குற்றங்கள் வேறு.

எமது மக்களின் பயம் என்பது தெய்வக்குற்றம் சம்பந்தப்பட்டது. நாம் பேசுகின்ற விடயங்களை எமது மக்கள் "பஞ்சமாபாதகங்கள்" என்று கருதுவதில்லை. அவர்களுடைய பார்வையில் நாம் பேசுவதும், செய்வதும் தெய்வக் குற்றம்.

கல்லுக்கு பாலூற்றாதே என்று சொல்வது தெய்வகுற்றம். சமஸ்கிருதத்தில் பூசை செய்யாதே என்பது தெய்வக் குற்றம். இப்படித்தான் எமது மக்களின் சிந்தனை இருக்கிறது. இதைத்தான் நான் கடவுள் பயம் என்று சொல்கிறேன்.

தமிழில் வழிபாடு செய்ய வேண்டும் என்பதை பெரும்பாலான தமிழர்கள் மனதளவில் ஏற்றும் இந்த "தெய்வக்குற்றத்திற்கு" அஞ்சியே வாய்மூடி இருக்கிறார்கள்.

அப்படி இல்லை என்றால், எதற்காக இன்று வரைக்கும் பெரும்பாலான சைவ ஆலயங்களில் தமிழில் பூசை நடைபெறவில்லை?

அப்படி தமிழ்நாட்டில் ஒரு சில ஆலயங்களில் செய்வதற்கு கூட பகுத்தறிவாளர்கள் சட்டம் போட வேண்டி இருக்கிறதே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடவுள் இல்லை எண்டு வாதிடுபவர்கள் கடவுளைப்பற்றியே அதிகம் நினைப்பவர்கள் அதைப்போல்தான் இதுவும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாதிக்கு இந்துமதமே காரணானது என்று வைத்துக்கொண்டாலும் இந்து மதத்தை ஒழித்தால் சாதி ஒழியாது. இப்ப சாதியை காவித் திரிபவர்களுக்கு அது ஒரு நம்பிக்கை. அவர்களுக்கு அதன் மூலங்கள் தெரியாது. இந்து மதத்தை ஒழித்தாலும் சாதி ஒழியாது.

நானும் அவ்வப்போது கேட்டுக்கொண்டு தானிருக்கிறேன். சாதி எண்ணக் கருவை இல்லாதொழிக்க செயற்பாட்டுத் தீர்வு என்ன என.. யாருமே கண்டுக்கிறாங்களில்லைப்பா..

காவடி சார் சாதி என்பது ஒரு எண்ணக்கரு என்றதை ஏற்றுக்கொண்டு விளக்கம் கேட்டதற்கு உங்களைப் பாராட்ட வேண்டியது கடமை.

சாதியம் என்ற எண்ணக்கரு சமூகத்தில் பல வடிவங்களினூடு புகுத்தப்பட்டுள்ளது.

1. முதன்மையானது பாரம்பரியமான தொழில் பாகுபாட்டால்..

உதாரணத்துக்கு இன்ன தொழில் தான் உயர்ந்தது என்பது போன்ற பாகுபாடுகள்.

2. கடைப்பிடிக்கப்படும் சில சமூக ஒழுங்குகளால் -

சில மக்கள் குழுக்களிடமிருக்கும் உணவுப் பழக்கங்கள், நடைமுறைகள். பழகும் முறைகள் இப்படி..!

3. மனிதர்கள் வகுத்துக்கொண்ட சந்ததி வழிமுறைகளைக் காக்க முனைவதால்.

நான் இன்ன வழியில் வந்தனான் என்று சந்ததி பிரிப்பதும் காவுவதும்.

4. அறிவியல் ரீதியற்ற சமூகப் பார்வைகள்.

சாதி என்பதற்கான அடையாளத்தை மனதில் உள்ள எண்ணக்கருதான் வழங்குகிறதே தவிர மானிடர்கள் அல்ல.

5. பொருளாதாரப் பாகுபாடுகள்..!

பொருளாதார அடிப்படைகள் பலவீனமானவர்களை பொருளாதார பலம் கொண்டவர்கள் தரம் தாழ்த்தி நோக்குதல்.

இவற்றில் ஈழத்தைப் பொறுத்தவரை இந்து மதத்தின் அல்லது மதரீதியான தாக்கம் மிகச் சொற்பமானது.

இந்தத் தளங்கள் அனைத்தினூடும் சாதிய எண்ணக்கருவுக்கான மாயைக் காரணிகளை அர்த்தமற்றவை என்று நிறுவும் போதும் மக்களின் நடத்தைகள் பொருளாதார நிலைகள் வாழ்வியல் நிலைகள் சம தளத்துக்கு நகரும் போதும் சாதி என்ற எண்ணக்கருவுக்கான மாயைக் காரணிகள் அழிக்கப்பட்டு விடும்.!

சாதி மட்டுமல்ல இன்னும் பல மனிதப்பாகுபாடுகள் மாயைக் காரணிகளை மையமாக வைத்து வளர்க்கப்பட்டும் வருகின்றன. சில அநேக அங்கீகாரங்களுடன் நிகழ்கிறது. தமிழர்கள் மத்தியில் இன்றும் தான் டாக்டர் தான் இஞ்சினியர் தான் படித்தவன் என்ற செருக்கோடு அலையும் நிலை இருக்கிறது. டாக்டர் என்பது சமூக அந்தஸ்தல்ல. தனி மனித புளுகுக்கல்ல. அது சேவை வழங்கலுக்கான அறிவூட்டலின் வெளிப்பாடு. அதை சேவை வழங்கலோடு மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும். துறை சார் கல்விகளின் அடிப்படையில் மனிதப்பாகுபாடுகளையும் அதனடிப்படையில் உயர்வு தாழ்வுகளையும் மாயைக் காரணிகள் கொண்டு தமிழர்கள் இன்றும் காவுகின்றனர். இது ஒரு உதாரணம். இப்படிப் பல பலப்பல வடிவங்களில் விதைக்கப்பட்டிருக்கிறது.

அண்மையில் பழைய மாணவர் ஒன்று கூடல் என்று போட்டி போட்டுக் கொண்டு யாழ் நகரின் முன்னணிப் பாடசாலைகள் சங்கங்கள் அமைப்பதும் அவற்றில் ஒன்றை மற்றது பெரிதாகக் காட்ட நினைப்பதும் சர்வசாதாரணமாக நிகழ்கிறது. இதற்காகவா பழைய மாணவர் சங்கங்கள் அமைக்கப்படுகின்றன. நான் சென் ஜோன்ஸ்.. நீ காட்லி என்று இரு வேறு பெற்றோர் கூட அவர்களின் பிள்ளைகளின் முன்னாள் அடிபடுவதைக் காண முடிகிறது. அது இப்போ புகலிடத்திலும் தன்ர பிள்ளை நல்ல தரமான பள்ளியில் படிக்குது உன்ர பிள்ளை அப்படியில்ல லோக்கல் ஸ்கூல் என்ற நிலை சர்வசாதாரணமாக வளர்ந்து வருகிறது. இவைதான் பாகுபாட்டுக்கான அடிப்படை எண்ணக்கருக்களை குழந்தைகள் மத்தியில் விதைத்து மனிதர்களை பாகுபாட்டிட்டுக் காட்ட விளைகிறது. தனிமனித திறமை வெளிப்படுவதற்கும் பாடசாலையின் தரத்துக்கும் தொடர்பில்லை என்பதை பாடசாலையை விட்டு விரட்டப்பட்ட லிங்கன் ஜனநாயகம் போதித்ததையும் பாடசாலை விட்டு விரட்டப்பட்ட எடிசன் உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி ஆனதையும் பாடசாலைக் கல்வியை தேசத்தின் கொடுமை கண்டு நிறுத்தி போராட வெளிக்கிட்ட உலகப் புகழ்பெற்ற ஒழுக்கமும் கட்டுப்பாடும் உள்ள விடுதலை அமைப்பை நடத்தும் பிரபாகரனும் தாங்களே மேலாணவர்கள் என்ற மமதையில்லாது வாழ்ந்தது.. வாழ்ந்து வருவது காட்டுகிறது. ஆனால் பாடசாலையில் இருந்து புகுத்தப்படும் பாகுபாட்டு எண்ணக்கருக்களில் இருந்து பல வடிவங்களிலும் தமிழர்களை மட்டுமன்றி உலகெங்கும் மனிதர்களுக்கு பரப்பப்படும் பாகுபாட்டு போலிக்காரணிகளே மனித எண்ணங்களில் பாகுபாட்டை விதைக்கின்றன. அதற்கான அறிவியல் மற்றும் சமூகவியல் காரணங்கள் எதுவுமே இல்லை என்பதை மனிதர்கள் தங்களின் சுய ஏற்றத்தாழ்வுகளை வெளிப்படுத்தி சமூக அந்தஸ்தைக் கட்டிக்காக்கவென்று இனங்காண முடிந்தும் அதைச் செய்ய மறுக்கின்றனர்.

இந்த அடிப்படை நிலைகளில் மாற்றம் ஏற்படும் போது மனிதப்பாகுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் பலவீனப்படும் போது அதற்கான எண்ணக்கருக்களும் அழிக்கப்படும்..! அதை விடுத்து மனித வாழ்வியலுக்கு அவசியமான கோட்பாடுகளை சிந்தனைகளை போதிக்கும் மதங்களின் உண்மையான வடிவத்தை நோக்காது செருகல்களைக் காட்டி மதங்களையும் மனிதப்பாகுபாட்டுக்கான காரணிகளாக இனங்காணுவது தவறு. எல்லா மதங்களும் அன்பையும் மனித ஒழுக்கம் வாழ்வியலைத்தான் போதிக்கின்றன. அதன் வடிவங்கள் மட்டுமே வேறுபடுகின்றன. அவரவர் தமக்கு விரும்பிய வடிவில் அவற்றை அறிந்து கொள்ள பூரண சுதந்திரம் உண்டு. ஆனால் அவற்றின் மூலம் மனிதப்பாகுபாடுகளை வளர்க்கவோ நிறுவவோ முயல்வது தவறான செயலாகும். கண்டிக்கத்தக்கதே. அது மதங்களின் தவறல்ல மதங்களின் பெயரால் மனிதர்கள் செய்யும் தவறு. பாடசாலைகளின் பெயரால் மனிதர்கள் செய்வது போன்றது.

ஆண் பெண் பாகுபாடு என்பது இதனுடன் தொடர்பு படுத்தப்பட முடியாதது. அங்கு தெளிவான அறிவியல் மற்றும் சமூகவியல் பாகுபாடு உண்டு. ஆண்களுன் தேவைப்பாடுகள் பெண்களினதில் இருந்து சில சந்தர்ப்பங்களில் வேறுபடுவது போல பெண்களுக்கும் உண்டு. அங்கு புரிந்துணர்வு என்ற மன ஒருகு நிலை மட்டுமே சமூகச் சம நிலைக்குள் ஆணையும் பெண்ணையும் மனிதன் என்ற நிலையில் சமநிலைப்படுத்த முடியும். அது உரிமைச் சமநிலையாக இருக்கும். அந்த நிலைக்குப் போக விரும்பும் ஆணும் பெண்ணும் கொண்ட சமூகம் ஏன் மற்றைய விடங்களில் மட்டும் மாயைக் காரணிகளைக் காட்டி பாகுபட்டு நிற்க முனைகிறது. காரணம் ஒரு கட்டத்தில் ஆணோ பெண்ணோ சமூக ஏற்றத்தாழ்வை நிறுவுவதன் மூலம் தன்னை முன்னிலைப்படுத்த முயல்வதால் என்றே எண்ணத்தோன்றுகிறது. அப்படியான எண்ணங்களை மனித சமூகத்தில் உள்ள ஒவ்வொரு தனி மனிதனும் தானாக சிந்தித்துக் களையும் போது மனித சமத்துவம் என்பது இயல்பானதாக மாறும். இயற்கையில் மற்றைய உயிரினங்களில் உள்ளபடி. எந்தக் காகமாவது ஊர் நிறம் இனம் சாதி மதம் என்று அடிபடுகுதா. ஆனால் ஆணுக்குப் பெண்ணும் பெண்ணுக்கு ஆணும் என்ற இனவிடைப் போட்டியும் உணவுப் போட்டியும் இருப்பிடப் போட்டியும் இருக்கும். ஆனால் மனிதன் அதைக் கூட தனக்கே உரித்தான ஆறாம் நிலையான பகுத்தறிவின் மூலம் தீர்க்க முடியும் எனும் போது மனிதனே அதிகம் பாகுபாடு அற்றவனாக இருந்திருக்க வேண்டும். ஆனால்.........???! அதற்கான காரணங்களுக்கு ஒவ்வொரு தனி மனிதனும் சொந்தக்காரன் என்று சிந்திக்கும் போது அனைத்து பாகுபாட்டு ஏற்றத்தாழ்வின் அழிவுகளும் சேதங்களும் மனித சமூகத்தை அடையாமல் காக்க முடியும். ஆனால் இதை நடைமுறைச் சாத்தியமாக்குவது என்பது ஒன்றும் இலகுவான பணியல்ல. காரணம் மனிதப்பாகுபாட்டுக்கான எண்ணக்க்கருக்கள் ஆழ வேரூண்றி விட்டுள்ளன. அவற்றைப் படிப்படியாக தனி மனிதர்கள் ஒவ்வொருவரையும் சிந்திக்க அறிவூட்டுவதன் மூலமே அகற்ற முடியும்..! :P :)

Link to comment
Share on other sites

இன்னுமொருவன்!

நீங்கள் "கடவுள் பயம்" என்று நான் சொல்வதையும் இனஎதிரிகள் "புலிகள் பயம்" என்று சொல்வதையும் ஒப்பிடுவது தவறு.

வேண்டுமென்றால் தமிழ் மக்கள் பல ஆண்டுகளாக சிங்கள ஆட்சியாளர்கள் மீது கொண்டிருந்த பயத்துடன் ஒப்பிட்டுக் கொள்ளுங்கள்.

quote]

சபேசன்,

சொல்லப்பட்ட கருத்தைப் நான் புரிய மாட்டேன் என்று நீங்கள் அடம்பிடித்தால் அது புரியாமலே தான் இருக்கும். நான் சொன்னது ஒட்டுக் குழுக்கள் தங்களை நியாயப்படுத்துதற்காக அவ்வாறான ஒரு கற்பிதத்தைச் செய்கிறார்கள் என்பது. திரும்பவும் சொல்கிறேன் மக்களின் நம்பிக்கை பற்றி இங்கு நான் கதைக்கவில்லை. மக்களின் பெயரில் சந்தர்ப்ப வாதிகள் எவ்வாறான கற்பிதங்களைச் செய்கிறார்கள் என்பது தான் நான் சொல்வது.

Link to comment
Share on other sites

சாதிக்கு இந்துமதமே காரணானது என்று வைத்துக்கொண்டாலும் இந்து மதத்தை ஒழித்தால் சாதி ஒழியாது. இப்ப சாதியை காவித் திரிபவர்களுக்கு அது ஒரு நம்பிக்கை. அவர்களுக்கு அதன் மூலங்கள் தெரியாது. இந்து மதத்தை ஒழித்தாலும் சாதி ஒழியாது.

நானும் அவ்வப்போது கேட்டுக்கொண்டு தானிருக்கிறேன். சாதி எண்ணக் கருவை இல்லாதொழிக்க செயற்பாட்டுத் தீர்வு என்ன என.. யாருமே கண்டுக்கிறாங்களில்லைப்பா..

5 இல வளையாதது 50 இல வளையாது என்று. சாதிகள் இல்லை முற்பிறப்பு பாவம் புண்ணியத்தில இந்தப் பிறப்பில குறைந்த சாதியில் பிறக்கினம், பின் தள்ளப்பட்டவர்களாக இருப்பினம், அடிப்படை வாழ்கைக்கு அவலப்படுவினம், இவற்றின் பெயரால் அவர்களின் அடிப்படை உரிமைகள் மறுப்பது பிழை என்பவற்றை சிறு வயதில் இருந்து பாடசாலையில் நன்கு திட்டமிட்ட பாடவிதானங்்கள் மூலம் படிப்பீக்க வேண்டும். அதாவது எதிர்காலச் சந்ததியை சரியான வழியில் வழர்த்தெடுப்பதை செய்ய வேண்டும். அந்த வகையில் புலம்பெயர்ந்த சமூகத்து எதிர்காலச் சந்ததிகள் சரியாக வழர்த்தெடுக்கப்படுகிறார்கள

Link to comment
Share on other sites

இன்னுமொருவன்!

நீங்கள் சொல்வது எனக்குப் புரிகிறது. ஒட்டுக்குழுக்கள் சொல்கின்ற அதே காரணத்தை நானும் சொல்கிறேன் என்று சொல்கிறீர்கள்.

ஓட்டுக்குழுக்கள் சொல்கின்ற காரணம் தவறானது என்று சரியான முறையில் நிறுவ முடியும்.

அப்படி நான் சொன்ன "கடவுள் பயம்" (தெய்வக் குற்றம்) என்பதும் தவறு என்று நீங்கள் நிறுவுங்கள்.

அதற்கு நான் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்

ஈழத்தமிழர்களில் பார்ப்பன சாதி அதிகாரத்தில் இல்லை. ஆயினும் தமிழர்கள் இன்னும் எதற்காக தமிழில் பூசை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்யவில்லை?

Link to comment
Share on other sites

இன்னுமொருவன்!

ஈழத்தமிழர்களில் பார்ப்பன சாதி அதிகாரத்தில் இல்லை. ஆயினும் தமிழர்கள் இன்னும் எதற்காக தமிழில் பூசை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்யவில்லை?

சபேசன்,

நேற்றைய எனது இறுதிப் பதிவில் உங்களுடைய இந்தக் கேள்விக்கும் பதில் சேர்த்துத் தான் பதிவிட்டேன். சுமார் பத்து நிமிடங்கள் வரை அந்தப்பதிவு அப்படியே இருந்தது. பின்னர் ஏனோ அந்தப் பதிவின் கடுமை தேவை தானா? என்றொரு கேள்வி எனக்குள் எழுந்தது. அதனால் அப்பகுதியை நானே எடுத்து விட்டேன்.

இப்போதும் நீங்கள் எந்த நோக்கத்தில் இந்தக் கேள்வியைத் திருப்பத்திருப்பக் கேட்கின்றீர்கள் என்பது புரிந்திருந்தும், விவாதம் நீங்கள் எதிர் பார்க்கும் கோணத்தில் நகர்வதில் எனக்கு உடன்பாடு இல்லை என்ற போதிலும், பதிலெழுதாது விட்டு விட்டால் பதிலில்லாமல் பம்முகிறார்கள் பாருங்கள் என நீங்கள் பகுக்தறிந்து விடும் நிலை இருப்பதனால் ஒரு சிறு பதிவு.

முதலில் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா பாணியில்இந்து மதத்தை ஆரும் பின்பற்றக் கூடாது என்று மொட்டையாகச் சொன்னீர்கள். எடுபடவில்லை. பின்னர் சந்திரிக்கா பாணியில் சாதிய ஒழிப்பிற்கான இந்து மத ஒழிப்பு என்று முனை திறந்தீர்கள். அதுவும் எடுபடவில்லை. இப்போ சமஸ்கிர அநியாயம் என்று இன்னுமொரு முறை பழைய ஒரு முனையினைத் திருப்பத் திறக்க முயல்கிறீர்கள ;(பழய முனை தான் ஆனால் சில சமயம் உங்களிற்கு ஏதேனும் புது ஆயதம் ஆரேனும் கொடுத்திருப்பார்கள், முயற்சிக்கத் துடிக்கிறீர்கள்).

உங்களது இந்தக் கேள்விக்கான விடையாக, மதத்தைப் பின்பற்றுவோர் என்ன விளக்கம் கொண்டிருக்கின்றார்கள் என்பதனை உங்களிற்குச் சொல்வதற்குப் பதிலாக, பின்வரும் பதிலை அளிக்க விரும்புகின்றேன்:

சக மனிதர்களின் சுதந்திரத்தைப் பாதிக்காத வரையில் எந்த மதத்தை வேண்டுமானாலும் எவரும் என்ன காரணத்திற்காகவேனும் பின்பற்றலாம், இது ஒவ்வொருவருடைய அடிப்படைச் சுதந்திரம் என்பதனை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் மதிக்கின்றோம் என நீங்கள் கூறியிருக்கின்றீர்கள். எனவே, உங்களது சுதந்திரம் பாதிக்கப்படாத வரையில், நீங்கள் போகாத கோவிலிற்குள் சக மனிதர்களின் சுதந்திரம் பாதிக்கப்படாதவகையில் கோவிலிற்குப் போவோர் என்ன செய்கின்றார்கள் என்பதனை விளக்க வேண்டியது அவசியம் அற்றது. ஒரு விடயத்தை நீங்கள் ஏன் இவ்வாறு செய்கிறீர்கள் என்று புரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன் விளக்கம் தர முடியுமா என ஆரேனும் கேட்டால் அதற்கு விளக்கம் கொடுப்பது நாகரீகம். ஆனால் இந்த விடயத்தை 'இதற்காகத் தான் நீங்கள் இவ்வாறு செய்கிறீர்கள் என நான் திடமாக முடிவெடுத்துள்ளதோடு நீங்கள் செய்வது பிழை எனவும் நான் தீமானித்து, அதைக் கண்டித்து உங்களுடன் வாதிடுகிறேன், எங்கே எனது தர்க்கத்தை எதிர் கொள்ளுங்கள் பார்ப்போம்' என வருவோரிற்கு பதில் சொல்வதா இல்லையா என்பது வேறுவிடயம்.

என்னைப் பொறுத்த வரை விவாதங்கள் ஆக்கபூர்வமாக இருக்க வேண்டும். அர்த்தமற்ற விவாதங்களால் விவாதம் என்ற சொல்லின் மீதே பிறரிக்கு அருவருப்பு வரும் வகையில் நாம் நடந்து கொண்டால் எவரிற்கும் பலனில்லை. எனவே இந்த விவாதம் ஒரு வட்டத்தில் திருப்பத்திருப்ப அரைத்த மாவை அரைக்க முனைவதனால் இதை இத்தோடு நிறுத்தி வேறு விடயங்களைப் பற்றிக் கலந்துரையாடலோமோ எனப் படுகின்றது. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

Link to comment
Share on other sites

இன்னுமொருவன்!

நான் ஒரு போதும் எந்தக் கருத்தையும் மொட்டையாக சொன்னதில்லை.

இந்து மதத்திற்கு எதிரான கருத்துக்களை சொல்கின்ற ஒவ்வொரு முறையும், அதற்கான காரணங்களை விளக்கி சொல்லி உள்ளேன்.

அப்படி நான் மொட்டையாக எதாவது ஒரு கருத்தை சொல்லி இருந்தால், எனக்கு சுட்டிக் காட்டுங்கள்.

சரி! உங்களுடைய விருப்பப்படியே கேட்கிறேன்.

ஐயா! அழகிய தமிழ் மொழி இருக்க, செத்துப் போன சமஸ்கிருதத்தில் ஏன் ஐயா பூசை செய்கிறீர்கள்? எனக்கு இது விளங்கவில்லை. எனக்கு இதை தயவு செய்து விளக்க முடியுமா ஐயா? (என்னை காதி பூச் செருகி விபுதி அணிந்து பய பக்தியோடு நிற்கும் ஒரு பக்தனாக கருதி விளக்கம் தரவும்)

Link to comment
Share on other sites

இன்னுமொருவன்,

என்னைப் பொறுத்தவரை தமிழர்கள் கொண்டிருக்கும் கடவுள் பக்த்தி, பயம் என்பவற்றின் மீதான வெறுப்பு கோவத்திற்கான காரணங்கள் பின்வருவன.

-1- தமக்கு ஒரு பிரச்சனை சவால் என்று வரும் பொழுது அது பற்றிய சுய தேடல் தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ள தயார்படுத்தல், சுயமுயற்சி என்பவற்றிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விட பல வழிகளில் கடவுளில் பொறுப்பைக் கொடுத்துவிடும் அது சம்பந்தமாக ஏதாவது பிராயச்சித்தம் என்று வீணடிக்கும் பழக்கம்.

-2- ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டு இன்னல்களை அனுபவிக்கும் பொழுது அதை எதிர்த்து போராடி ஒரு தீர்வைப் பெற வேணம் என்பதை விட அதற்கு முற்பிறப்பு பாவ புண்ணியம், சாத்திரம் போன்றவற்றால் வியாக்கியானங்கள் ஆறுதல்கள் தேடும் கோழைத்தனம் சோம்போறித்தனம். இவை சம்பந்தமாக நேர்த்திக்கடன் பிராயச்சித்தம் என்பவற்றின் பெயரால் நேரத்தையும் வளங்களையும் விரையம் செய்வது.

எமது தேசியம் எதிர்கொள்ளும் இந்த வரலாற்று முக்கியத்துவம் மிக்க காலகட்டத்தில் தமிழர்களின் பெருமளவு மனித வளம் பொருளாதார வளம் இந்த மூடநம்பிக்கைகளிலும் (மதம் என்பது தனிமனித உரிமை என்றாலும்) அதன் பெயரால் தவறான வழிகளில் வியாக்கியானங்களை ஆறுதல்களை பெற முயற்சிப்பதிலும் விரையமாகிறது.

அத்தோடு கோயிலுக்கு உள்ள வரக்கூடாது போன்ற சாதியம் சம்பந்தப்பட்ட விடையங்களில் மதம் சம்பந்தப் பட்டிருக்குத்தான். ஆனால் எனது இந்து மத வெறுப்பிற்கு மிகமுக்கியமாக ஈழத் தமிழர்கள் கொண்டுள்ள இந்து மத நம்பிக்கை மீதான வெறுப்புக்கு காரணம் மதத்தின் பெயரால் நம்மவர்கள் விரையமாக்கும் பொருளாதாரம். அதுபோக பிரச்சனைகள் சவால்கள் என்று தனமனித வாழ்விலோ அல்லது ஒட்டுமொத்த இனத்திற்கோ தேசியத்திற்கோ என்று வரும் பொழுது அதை தன்னம்பிக்கையோடு தாமே பொறுப்பெடுத்து பகுத்தறிவோடு சிந்தித்து திட்டமிட்டு தயார்ப்படுத்தி எதிர்கொள்ள வேண்டும் என்;பதை விட கடவுளிற்கு பொறுப்பு கொடுப்பதில் தான் நம்மவர்கள் முன்னுக்கு நிக்கிறார்கள்.

இந்த தன்னம்பிக்கையை உருவாக்கும் பகுத்தறிவுச் சிந்தனை எமது இனம் விடுதலை அடைய சுதந்திரமாக ஒரு நாடு அமைக்க நம்மவர்கள் எல்லோரிடமும் (குறைந்தபட்சம் பெரும்பான்மையானவர்களிடம்) வேண்டும். ஒரு தேசியத்திற்கும் அதற்கான ஒரு சுதந்திர நாட்டிற்கும் பலம் என்பது அந்த தேசியத்தில் ஒன்று பட்டு நம்பிக்கை வைத்திருக்கும் மக்கள்.

மக்கள் என்பது வெறும் எண்ணிக்கையாக மந்தைகளாக இருந்தால் எண்ணிக்கை எந்தளவாக இருந்தாலும் பலமாகிவிட முடியாது. மக்களிடம் இருக்கக் கூடிய ஆற்றல் என்பதை ஒற்றுமையாக தேவைகளிற்கு ஏற்ப ஆரோக்கியமான வழியில் ஒன்று குவித்தால் தான் அது பலமாக இருக்கும். இதை தான் எண்ணிக்கையில் குறைந்த யுhதர்கள் சாதித்தார்கள். அவர்கள் கூட தமது மதம் என்ற அடையாளத்தை விட்டுக் கொடுக்காது பாதுகாக்கிறார்கள். ஆனால் மதம் தமது பிரச்சனைகளை சவால்களை தீர்க்கும் என்று இருக்கவில்லை அப்படியான சிந்தனை சிறு அளவில் இருந்திருந்தால் கூட இன்று இஸ்ரேல் என்று ஒரு நாடு இருக்காது. அனால் பலஸ்தீனர்கள் எல்லாத்துக்கும் அல்லா அல்லா என்றார்கள் இண்டைக்கும் அவர்களுடைய ஒப்பாரி தொடர்கிறது.

இதையே தான் தமிழர்கள் செய்கிறார்கள். பெரும்பான்மையானவர்கள் தேசியத்திற்கு ஆதரவு (அல்லது எதிர்பாவது இல்லை) என்கிறார்கள் ஆனால் தேசியத்தை விட இந்து மதத்தின் பெயரால் நடக்கும் பல்வேறு விடையங்களிற்கு தமது பணத்தில் நேரத்தில் அதிக அளவை செலவிடுகிறார்கள். எம்மவர்கள் மத்தியில் மதம் அல்லது கடவுள் நம்பிக்கை கொடுக்கும் தவறான சிந்தனைகள் மனவோட்டங்கள்:

-1- எதிரி பற்றி அல்லது சிறீலங்கா பற்றி சாத்திரம் பார்த்து ஆதங்கப்படுவது திருப்த்திப்படுவது.

-2- எமது கடந்த அவலங்களிற்கு மாதவின் கண்ணில் இரத்தம் வடிகிறது என்று விளக்க முற்படுவது அல்லது எதிர்வு கூறுவது.

-3- பாதுகாப்பு தீர்வு வேண்டி நேர்த்திக்கடன் புhசைகள் அருச்சனைகள் உபயங்கள் செய்வது.

-4- "கடவுள் விடார்" என்று ஒருவித நம்பிக்கையோடு இருப்பது பிற்பாடு "கடவுளிற்கு கண்ணில்லையோ" என்று ஆதங்கப்படுவது.

இந்த இரண்டு மனநிலைக்கும் இடைப்பட்ட காலத்தில் தவறான நம்பிக்கையில் மனித வளம் விரையமடிக்கப்படுகிறது. அதனால் இழப்புகளும் எமக்கு அதிகரிக்கிறது எதிரிக்கு சாதகமாகிறது.

எந்த ஒரு இனமே தேசியமோ இன்று தமிழர்கள் கொண்டுள்ள மோட்டுத்தனமான கடவுள் நம்பிக்கையோடும் மிலேச்சத்தனமான மூடநம்பிக்கைகளோடும் எதிர்ப்புகளை வென்று சுதந்திரம் அடைந்ததாக வரலாறு இல்லை. இல்லை சில உதாரணங்களை குறிப்பிட முடியும் என்றாலும் அவற்றிற்கான பின்னணியை ஆழமாக ஆய்வு செய்தால் அது பனிப்போர்காலத்து 2 துரவ உலக ஒழுங்கின் உதவியால், ஒரு எஜமானிடம் இருந்து இன்னொரு எஜமானிற்கு கீழ் போனதாக அல்லது இவற்றோடு இயற்கை வளம் கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த இருப்பு போன்றவற்றின் இணைந்த காரணங்களாகத்தான் வரலாறு இருக்கிறது.

சீனா வில் கமியுhனிசம் இல்லாது அதன் புhகோள இருப்பில் தன்னை இவ்வாறு கட்டிக்காக்க முடிந்திருக்குமா? அதன் மக்கள் வெறும் எண்ணிக்கையில் பலம் என்று இருக்காது யதார்த்தத்தில் பலமாக தேவையான வடிவங்களில் தேவையான நேரத்தில் மாறியிருப்பார்களா? சீனா இன்று கண்டிருக்கும் வழர்ச்சியை பலத்தை எதிர்ப்புகள் மத்தியில் சாதித்திருக்க முடியுமா?

அதுபோலவே தமிழர்கள் பெயரளவில் புலம்பெயர்ந்தவர்களாக எண்ணிக்கையில் இருந்தால் அது பலமாகாது. அவர்கள் என்னத்தில் நம்பிக்கை வைத்து எவ்வாறு தமது நேரம் மற்றும் பொருளாதார வளங்களை பயன்படுத்துகிறார்கள் என்பது ஒன்றே அவர்கள் யதார்த்தத்தில் பலம் தேவையான அளவு பலத்தை தேவையா தருணத்தில் சேர்க்கிறார்களா இல்லையா என்பதை தீர்மானிக்கும். இன்று போல் இரண்டு விரலால் தேசியம் என்ற தேரை இழுப்பதாக் காட்டிக் கொண்டு மிச்ச பலம் முழுவதையும் போட்டிக்கு கருங்கல்லு சிலைகள் இறக்குமதி செய்து கோயில் கட்டி இறக்குமதி செய்த தேர்களை இழுப்பதற்கு செலவிடுவது தேசிய விடுதலைப் போராட்டம் என்ற தேரை இந்த இறுதிக் கட்டத்தில் சர்வதேச எதிர்ப்புகளை வென்று வெற்றிகரமாக இழுத்து முடிக்க உதவாது.

இதனால் தான் எமது தனிமனித உரிமையான மதம் என்ற நம்பிக்கை பற்றிய நம்மவர்களின் நடத்தை பற்றி விமர்சனங்கள் வருகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னைப் பொறுத்தவரை ...

இன்றைக்கு தமிழர்களில் எவ்வளவு ஒரு மூடத்தனமான ஒரு பக்திமானும் என்னைப் பொறுத்தவரை யதார்த்தவாதிகளே!

ஒரு கதை:

கனடாவில் ஒரு ஆங்கிலேய தம்பதிக்கு ஒரே சூலில் 6 குழந்தைகள் பிறந்தன. எல்லாம் குறித்த காலத்திற்கு முன்பே பிறந்ததால் அவை உயிர்வாழ இரத்த மாற்றம் வேண்டியிருந்தது. ஆனால் அவர்களின் சமய நம்பிக்கையின் படி அவர்கள் அதை மூர்க்கமாக எதிர்த்தார்கள. விளைவு, இரு குழந்தைகள் இறக்க எஞ்சியவற்றில் சிலவற்றை அவற்றின் பாதுகாப்பு நிமித்தம் அரசு வலுக்கட்டாயமாக பிடுங்கவேண்டியதாயிற்று.

எங்கள் தமிழரில் ஒரு பயங்கர மூட சாமிநம்பிக்கை கொண்ட ஒரு பூசாரியாகட்டும், பக்தனாகட்டும் ஒரு ஆபத்தென்று வந்தால் அடக்கமாக வைத்தியர் சொன்னதை கேட்கும் நிலை பெரும்பாலும் உள்ளது.

எனவே,

எமது மக்களை ஒன்று படுத்த வழி, இடையறாத தேசியம் தொடர்பான விழிப்புணர்வூட்டலே. இதற்கு ஊடகங்களை எவ்வாறெல்லாம் பயன்படுத்துவது என்றரீதியில் சிந்திக்க வேண்டும்.

ஒரு வலுவான காரணமில்லாமல் பகுத்தறிவுப் போர்வையில் காலங்காலமாக பின்பற்றப்படும் இந்த மூடப்பழக்கங்களை எதிர்கொள்வோமானால் பலன்கிட்டுமா என்பது சந்தேகமே.

மேலும் இங்கு கல்விபயிலும் இளைய சமூகம் எந்தவித மூடத்தனமான நம்பிக்கையற்ற யதார்த்த வாதிகளாகவுள்ளனர். எமது தேவை அவர்களையும் தேசியத்துடன் ஒன்று திரட்டலே.

யாருக்குத் தெரியும், தேசியத்தின் பேரில் நாங்கள் சனத்தை ஒன்று படுத்த, ஒரு பக்க விளைவாக (by product), மூர்க்கத்தனமான சாமிப்பித்தம் அகலக் கூடும்.

Link to comment
Share on other sites

காவடி அடிக்கடி சாதி ஒழிப்பிற்கு வழி என்ன என்று கேட்டிருந்தார்.

என்னுடைய கருத்தை சுருக்கமான முறையில் சொல்ல முயற்சிக்கிறேன்.

ஈழத்தமிழர் மத்தியில் இரண்டு வர்ணங்களும், பல சாதிகளும் உண்டு.

பார்ப்பனர், சூத்திரர் என்று இரண்டு வர்ணங்களும், சூத்திரர் என்ற வர்ணத்திற்குள் வேளாளர், கரையார், பறையர் என்பது போன்ற பல சாதிகளும் உண்டு.

சூத்திரர் என்ற வர்ணத்திற்குள் சாதியை ஒழிப்பது பற்றியே நாம் அதிகமாக பேசி வருகிறோம்.

ஒரு பேச்சிற்கு சூத்திர வர்ணத்திற்குள் உள்ள சாதியை ஓரளவு ஒழித்து விட்டோம் என்று வைத்துக் கொள்வோம்

இப்பொழுது பார்ப்பனர் என்றும் பார்ப்பனர் அல்லாதோர் (சூத்திரர்) என்றும் இரண்டு வர்ணங்கள் அல்லது சாதிகள் இருக்கும்.

இந்த நிலையில் பார்ப்பனர்கள் மட்டும் மதம் சர்ந்த சில உரிமைகளை அனுபவித்துக் கொண்டு இருப்பார்கள்.

அப்பொழுது அதைக் காரணம் காட்டிக் கொண்டு அதிகாரம் பறிக்கப்பட்ட வேளாளர்கள் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறுவார்கள்.

சாதி என்பது மீண்டும் உயிர் பெறும்.

அதனால்தான் சாதி பற்றி பேச்சு வருகின்ற போது, நாம் இந்து மதம் குறித்தும், பார்ப்பனியம் குறித்தும் பேச வேண்டி இருக்கிறது.

சாதியை ஒழிப்போம் என்று சொல்பவர்களில் எத்தனை பேர் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவதை ஆதரிக்கிறீர்கள்?

அனைத்து மக்களும் கல்வி அறிவு பெற்று, அத்துடன் தொழில் நுட்ப வளர்ச்சியினால் அனைத்து தொழில்களையும் செய்கின்ற போது (உதாரணம்: இயந்திரம் மூலம் கள் இறக்குதல்) "சாதி" என்பது வலுவிழந்து விடும்.

ஆனால் பார்ப்பனர் மட்டும் பரம்பரை பரம்பரையாக அர்ச்சகர் ஆகின்ற உரிமையை கையில் வைத்திருப்பர். இந்த இடத்தில் சாதியின் அனைத்து விதமான கோட்பாடும் இயங்கிக் கொண்டிருக்கும்.

ஆகவே சைவ சமயப் பெரியோர்கள் எல்லோரும் சேர்ந்து சைவத்தை சீhதிருத்துங்கள்.

"அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்" என்றும் அத்தோடு அர்ச்சகர் ஆவதற்கான வழிமுறைகளையும் (பிறப்புத் தவிர்ந்த) உருவாக்குங்கள். மற்றைய சாதியினர் அர்ச்சகர் ஆவதை ஊக்குவியுங்கள்.

அனைத்து சாதியினரும் சைவர்கள் மிகப் புனிதமாகக் கருதுகின்ற கோயிற் கருவறைக்குள் நுழைந்து பூசை செய்கின்ற நிலை வந்த பின்பு, "சாதி" என்பது அர்த்தம் இழந்து போகும். கருவறைக்குள் நுழைந்த பிற்பாடு மற்றைய அறைகளுக்குள்ளும் செல்வதை யார் தடுப்பார்?

அனைத்து சாதியினரையும் "ஐயா! ஐயா!" என்று அழைக்கின்ற நிலை வரும்

பெரும்பான்மையான சைவர்கள் சாதியை கைவிட்ட பின்பு, சிறுபான்மைக் கிறிஸ்தவர்கள் அதை பிடித்து தொங்கிக் கொண்டிருக்க மாட்டார்கள். அவர்களும் இயல்பாகவே சாதியை கைவிட்டு விடுவார்கள்.

ஆகவே இதை உடனடியாகச் செய்யுங்கள். சைவத்தின் விதிமுறைகளை இலகுவாக்கி, எல்லோருக்கும் கோயிற் கருவறையை திறந்து விடுங்கள்.

இது எனக்கு தோன்றுகின்ற ஒரு வழி. இந்த வழி வெற்றி பெறுகிறதோ இல்லையோ, இதை முயன்று பார்ப்பதானால், யாருக்கம் எந்த ஒரு தீங்கும் இல்லை. ஆனால் எத்தனை சைவர்கள் இதற்கு தயாராக இருக்கிறீர்கள்?

மற்றைய வழி தமிழர்கள் மத்தியில் விஞ்ஞான அறிவு வளரும் வரை சில நூறு ஆண்டுகள் காத்திருப்பது. இந்த இரண்டையும் தவிர சர்வாதிகாரம் என்கின்ற ஒரு வழியும் உண்டு. ஆனால் அது புலம்பெயர்ந்த நாடுகளுக்கு பொருந்தாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குறுக்காலை போவான்,

-1- எதிரி பற்றி அல்லது சிறீலங்கா பற்றி சாத்திரம் பார்த்து ஆதங்கப்படுவது திருப்த்திப்படுவது.

-2- எமது கடந்த அவலங்களிற்கு மாதவின் கண்ணில் இரத்தம் வடிகிறது என்று விளக்க முற்படுவது அல்லது எதிர்வு கூறுவது.

-3- பாதுகாப்பு தீர்வு வேண்டி நேர்த்திக்கடன் புhசைகள் அருச்சனைகள் உபயங்கள் செய்வது.

-4- "கடவுள் விடார்" என்று ஒருவித நம்பிக்கையோடு இருப்பது பிற்பாடு "கடவுளிற்கு கண்ணில்லையோ" என்று ஆதங்கப்படுவது.

இந்த இரண்டு மனநிலைக்கும் இடைப்பட்ட காலத்தில் தவறான நம்பிக்கையில் மனித வளம் விரையமடிக்கப்படுகிறது. அதனால் இழப்புகளும் எமக்கு அதிகரிக்கிறது எதிரிக்கு சாதகமாகிறது.

இவையெல்லாம் மக்களின் இயலாமையின் வெளிப்பாடுகளே! தங்களது சக்திக்குட்பட்டு தங்களால் எதுவுமே செய்ய முடியாத நிலையிலேயே மக்கள் இப்படியான மார்க்கத்தை நாடுகிறார்கள். இந்த விடயத்தில் அவர்களை பெரிதாக குறை கூற முடியுமா? இதில் சந்தோசப்பட ஒரு விடயம் இருக்கிறது. அதாவது தம் இன மக்களின் துயரத்தில் இவர்களும் துயரப்படுகிறார்கள் என்பதே அது.

தமது இந்த கவலையை எவ்வாறு ஆக்கபூர்வமாக வெளிப்படுத்துவது என்று இந்த மக்களுக்கு ஒரு நல்ல தலமைத்துவமும் வழிகாட்டலும் தேவை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பி! விரைவில் 4000 கருத்துக்களை அடைவதற்கு வாழ்த்துகிறேன்

எண்ணிக்கை எழுதுவதில் வாழ்த்துவது எல்லாம் இந்த கறுப்பிக்கு பிடிக்காதுங்கோ சபேசன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.