Jump to content

தலித்தியமும் தமிழ் தேசியமும்


Recommended Posts

ஆம் சிறீலங்காவின் சனத்தொகை 19-20 மில்லியன் என்று கூறப்படுகிறது. அதன் பொருளாதாரம் 25 பில்லியன் டொலர்கள் என்று அண்மைய மதிப்பீடுகள் சொல்லுது.

தமிழீழத்தைப் பொறுத்தவரை ஒரு வருடத்திற்கு சில பத்து மில்லியன்கள் என்ற அளவில் தொடர்ச்சியாக சில வருடங்களிற்கு திரட்டுவதே பெரிய விடையம்.

கொழும்புத் துறைமுகத்தை கட்டுப்படுத்த வேண்டும் போன்ற கருத்துகளை எழுதுபவர்கள் மீது இடி விழ.

Link to comment
Share on other sites

  • Replies 89
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாதியை ஒழிப்போம் என்று சொல்பவர்களில் எத்தனை பேர் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவதை ஆதரிக்கிறீர்கள்?

தமிழகத்தில் அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என சட்டம் கொண்டு வந்திருக்கிறார்களாமே.. இங்கே புலத்தில் கோயில்களில் வரும் வருமானத்தைக் கண்டு சொந்தமாய்க் கோவில் கட்டி நானே அர்ச்சகர் ஆகலாம் என்று இருக்கிறேன். ட்ரைவ் த்றூ முறையில் அர்ச்சனை செய்யும் முறையையும் பரிசீலிக்கிறேன்.

Link to comment
Share on other sites

இன்றைக்கு வடகொரியா தன்மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத்தடைக்கு அணுகுண்டு வெடிச்சு சவால் விட்டதைப்போலவும், ஈரான் தன் மீது வரக்கூடிய அழுத்தங்களுக்கு ஒரு பிடியாக எண்ணையை கொண்டிருப்பதையும் போல எங்களுக்கும் ஏதாவது இருக்கா (கொழும்புத்துறைமுகத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதைத் தவிர ?)

ஐயா இங்கே புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து நாங்கள் எல்லோரும் சேர்ந்து மாதா மாதம் கொழும்புக்கு எவ்வுளவு காசு அனுப்புகின்றோம் என்பதை நினைத்துப்ப்பாருங்கள்.இந்தக

Link to comment
Share on other sites

தமிழகத்தில் அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என சட்டம் கொண்டு வந்திருக்கிறார்களாமே.. இங்கே புலத்தில் கோயில்களில் வரும் வருமானத்தைக் கண்டு சொந்தமாய்க் கோவில் கட்டி நானே அர்ச்சகர் ஆகலாம் என்று இருக்கிறேன். ட்ரைவ் த்றூ முறையில் அர்ச்சனை செய்யும் முறையையும் பரிசீலிக்கிறேன்.

உதவிக்கு ஆள் தேவையென்றால் என்னையும் கூப்பிடும். நான் நன்றாக பஞ்ஞாமிர்தமும், வெள்ளை, சர்க்கரைப் பொங்கலும் செய்வேன். தாளக் கட்டுடன் நன்றாக மணியும் அடிப்பேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
ஐயா இங்கே புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து நாங்கள் எல்லோரும் சேர்ந்து மாதா மாதம் கொழும்புக்கு எவ்வுளவு காசு அனுப்புகின்றோம் என்பதை நினைத்துப்ப்பாருங்கள்.இந்தக
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது போக,

கொழும்பிலை எங்கட ஆக்கள் வீடுகளை கட்டிவிடுகிற வேகத்தைப் பார்க்கவேண்டுமே. எனக்குத்தெரிந்த ஒரு கணவன்மனைவி (இருவரும் டொக்டர் ஆக 15 வருடத்திற்கு மேல் வேலை செய்கிறார்கள்) வீடுவாங்கினார்கள். அவர்களுக்கே ஒரு அப்பார்ட்மென்ரை தங்கள் சொந்தக்காசில் வாங்கமுடியவில்லை. இந்த லட்சணத்தில் அங்கு வீடுவங்குபவர்களுக்கு காசு எங்கிருந்து போகிறது என்பது இரகசியமல்ல. வீடுகட்டிவிற்கும் சில தமிழ் ஒப்பந்தக்காரர்களுக்கு அரசின் பரிசும் பதக்கமும் கூடக்கிடைத்ததாம் அதிகவீடுகள் கட்டியமைக்காக. அடேயப்பா!

நாளைக்கு எல்லாரும் கலைபட்டு வரும்போது வீடுகளையும் தூக்கிக்கொண்டா வரமுடியும்? நாங்கள் கடனட்டையிலை சிங்களவனுக்கு வீடுகட்டிக்குடுக்கும் சோகத்தை என்னவென்று சொல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது போக,

கொழும்பிலை எங்கட ஆக்கள் வீடுகளை கட்டிவிடுகிற வேகத்தைப் பார்க்கவேண்டுமே. எனக்குத்தெரிந்த ஒரு கணவன்மனைவி (இருவரும் டொக்டர் ஆக 15 வருடத்திற்கு மேல் வேலை செய்கிறார்கள்) வீடுவாங்கினார்கள். அவர்களுக்கே ஒரு அப்பார்ட்மென்ரை தங்கள் சொந்தக்காசில் வாங்கமுடியவில்லை. இந்த லட்சணத்தில் அங்கு வீடுவங்குபவர்களுக்கு காசு எங்கிருந்து போகிறது என்பது இரகசியமல்ல. வீடுகட்டிவிற்கும் சில தமிழ் ஒப்பந்தக்காரர்களுக்கு அரசின் பரிசும் பதக்கமும் கூடக்கிடைத்ததாம் அதிகவீடுகள் கட்டியமைக்காக. அடேயப்பா!

நாளைக்கு எல்லாரும் கலைபட்டு வரும்போது வீடுகளையும் தூக்கிக்கொண்டா வரமுடியும்? நாங்கள் கடனட்டையிலை சிங்களவனுக்கு வீடுகட்டிக்குடுக்கும் சோகத்தை என்னவென்று சொல்ல.

வெள்ளவத்தையில் நான் அறிந்த வகையில் 3 அறை வீடு, 1 கோடியும், (சிலதுகள் 1 கோடி, 20 வரை) 2 அறை வீடு 70 வரையிலும் போகின்றன. புலத்தில் இருந்து வீடு வாங்குகின்றபோது, நிச்சயமாக அந்நியவருவாயாகத் தான் சிறிலங்காவிற்கு இருக்கும். இதனாலும், பொருளாதாரரீதியான வருவாய் சிறிலங்காவிற்குக் கிடைக்கின்றது. மத்திய கிழக்கு சென்று, அனுப்பும் பணத்தை விட, நம்மவர்கள் சிறிலங்கா அரசிற்குச் செய்யம் பொருளாதார உதவி தான் அதிகம்.

சண்டே ரைம்சின் ஒரு கணிப்பின் படி, ( சில மாதங்களுக்கு முன் வந்தது) வெள்ளவத்தையில் தற்போது, 36 வரையிலான கட்டடங்கள் கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன.( முடிந்தவை கணக்கில் இல்லை) கொட்டேனாவில் 18 வரையிலான தொடர்மாடிக் குடிமனைகள் கட்டப்படுகின்றன. நம்மமையறியாமலே எவ்வளவு தூரம் சிறிலங்கா அரசிற்கு உதவி செய்கின்றோம் பாருங்கள்.

இந்த நேரத்தில் கொழும்பில் வீடு வாங்குவது அவசியமா?

Link to comment
Share on other sites

வெள்ளவத்தையில் நான் அறிந்த வகையில் 3 அறை வீடு, 1 கோடியும், (சிலதுகள் 1 கோடி, 20 வரை) 2 அறை வீடு 70 வரையிலும் போகின்றன. புலத்தில் இருந்து வீடு வாங்குகின்றபோது, நிச்சயமாக அந்நியவருவாயாகத் தான் சிறிலங்காவிற்கு இருக்கும். இதனாலும், பொருளாதாரரீதியான வருவாய் சிறிலங்காவிற்குக் கிடைக்கின்றது. மத்திய கிழக்கு சென்று, அனுப்பும் பணத்தை விட, நம்மவர்கள் சிறிலங்கா அரசிற்குச் செய்யம் பொருளாதார உதவி தான் அதிகம்.

சண்டே ரைம்சின் ஒரு கணிப்பின் படி, ( சில மாதங்களுக்கு முன் வந்தது) வெள்ளவத்தையில் தற்போது, 36 வரையிலான கட்டடங்கள் கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன.( முடிந்தவை கணக்கில் இல்லை) கொட்டேனாவில் 18 வரையிலான தொடர்மாடிக் குடிமனைகள் கட்டப்படுகின்றன. நம்மமையறியாமலே எவ்வளவு தூரம் சிறிலங்கா அரசிற்கு உதவி செய்கின்றோம் பாருங்கள்.

இந்த நேரத்தில் கொழும்பில் வீடு வாங்குவது அவசியமா?

இங்கே புலம்பெயர்ந்த நாடுகளில் எங்களுடைய மக்கள் 10 மணித்தியாலம் 12 மணித்தியாலம் என்று வேலை செய்து கொழும்புக்கு அனுப்பிற காசு சிறீலங்கா அரசுக்கு மட்டும் உதவி செய்யவில்லை. உறவுகளையும் பாசத்தையும் அறுக்கிற வேலையையும் அது செய்யுது.

இது என்னுடைய அப்பாவின் நண்பர் ஒருவரின் கதை. இதை நீங்கள் படிச்சுப் பார்த்தியள் என்றால் ஒரு பக்கம் எங்கடை போராளிகளும் ஒரு பகுதி மக்களும் நாட்டுக்காக அளப் பெரிய தியாகம் செய்ய இன்னொரு பகுதி எப்படி பணப்பேய்களா சுயநலவாதிகளா வாழுகினம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.

தாயகத்தில வடமராட்சி பகுதியை சேர்ந்த ரகு எண்;ட பெயர் கொண்ட அந்த அண்ணா 1978 ம் ஆண்டு இங்கே பிரான்சுக்கு வந்தவராம். அவருக்கு 2 அக்காமாரும் ஒரு தங்கச்சியும் இருக்கினமாம்.வீட்டை ஈடுவைச்சு கடன்பட்டு பிரான்சுக்கு வந்த அவர் தங்க இடமில்லாமல் பாக்கில படுத்து சந்தையில குப்பைத் தொட்டியில போடுற பழங்ளை பொறுக்கிச் சாப்பிட்டு 1 வருசம் சரியா கஷ்டப்பட்டவராம்.பிறகு 14 பொடியள் தங்கின ஒரு சின்ன றூமிலை போய் தங்கிருந்து தெருக் கூட்டி குப்பை அள்ளுற வேலை செய்து ரெஸ்ரோண்டில கோப்பை கழுவி தான் நல்ல உடுப்புப் போடாமல் நல்ல சாப்பாடு சாப்பிடாமல் மிச்சம்பிடிச்சு 5 வருசத்திலை தான் பட்ட கடனையும் அடைச்சு 2 அக்காமாருக்கு சீதணம் குடுத்து கலியாணமும் செய்து வைச்சவர்.1987 ம் ஆண்டு அவற்றை அப்பா அம்மாவை ஊரிலை இருக்கேலாது எண்டு சொல்லி கடைசித் தங்கச்சியையும் கூட்டிக்கொண்டு கொழும்புக்கு வந்திட்டினம்.வெள்ள வத்தையில வீடு வாடகைக்கு எடுத்திருக்கிறதா சொல்லி செலவுக்கு மாதம் 30 அயிரம் ரூபா வேணும் எண்டும் சொல்லியிருக்கினம். அப்பா அம்மா சகோதரங்கள்ளை நல்ல அன்பு வைத்திருந்த அந்த அண்ணா அவை சந்தோசமா இருக்கோணும் எண்டதுக்காக மாதம் 40 ஆயிரம் ரூபா அனுப்புறவராம் அந்த நேரம் பிரான்சில ஒரு மாத சம்பளமே அவ்வளவு தானாம்.1990 ம் ஆண்டு கடைசித் தங்கச்சிக்கும் கனடாவில ஒரு மாப்பிளை பார்த்து கலியாணம் செய்து வைச்சவராம்.1992 ம் ஆண்டு வரையில அவருக்கு விசா கிடைக்கவில்லையாம் .1993 ம் ஆண்டு ஜனவரி மாதம் தான் ஒரு மாதிரியா அவருக்கு இமிக்கிரண்ட் விசா கிடைச்சதாம்.

15 வருசமா அப்பா அம்மாவை பாக்கதாத அவர் திடீரென்று செல்லாமல் கொள்ளாமல் போய் கொழும்பில இறங்கி அவைக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க வேணும் என்று நினைத்தாராம்.1993 ம் ஆண்டு எப்பரல் மாதம் 10 திகதி கொழும்பில போய் இறங்கி விடடுக்கு ரெலிபோன் எடுக்க அப்பா தானாம் கதைத்தவர். தான் கொழும்புக்கு வந்த விசயத்தை செல்ல அவர் முதல்லை நம்பவில்லையாம்.பிறகு இந்த அண்ணா தான் வந்திருக்கிறது உண்மையெண்டு சொல்ல ‘நீ ஏன் இப்ப இங்iகெ வந்தனி இஞ்ச பெரிய பிரச்சனை உன்னை அரஸ்ட் பண்ணிப்போடுவாங்கள் கொண்டபோய் சுட்டுப் போடுவாங்கள்’ எண்டு அவர் பேசத் தொடங்கீட்டாராம்.இந்த அண்ணாவுக்கு ஒரு மாதிரியா போயிட்டதாம்.15 வருசம் பாhக்காத பிள்ளயை பார்க்கப்போறமே என்ற சந்தேசம் இல்லால் இவர் ஏன் இப்படி பேசுறார். உண்மையிலே பிரச்சனையோ என்று குழம்பிப் போன அவர் ஒரு ரக்சி பிடிச்சுக் கொண்டு வீட்டுக்கு போனாராம்.அங்கே அம்மா ஒடி வந்து கட்டிப்பிச் கொஞ்சி அன்போடை வரவேற்றாலும் அவற்றை அப்பாவின் வரவேற்பில் பதட்டமும் செயற்கைத் தனமும் தெரிஞ்சதாம். 2 நாள் அவரை வெளி எங்கையும் போக விடமால் வீட்டுக்குள்ளேயே மறிச்சு வச்சிருந்தினமாம்.3 ம் நாள் அவற்றை அப்பா விட்டில இல்லாத நேரம் வெளியில் பேப்பர் வாங்க அவர் கடைக்கு வந்த போது அவரோடை படிச்ச ஊர் பொடியன் கண்டிட்டாராம்.

ஏன்னடா ரகு எப்ப வந்தனி உனக்கென்ன அக்காமாருக்கும் தங்கச்சிக்கும் கலியாணம் செய்து குடுத்திட்டாய்.அப்பா அம்மாவுக்கு வெள்ளவத்தையில் வீடு வாங்கிக்குடுத்திட்டாய் என்று அவன் சொன்னதும் இவருக்கு அதிர்ச்சியாக போய்விட்டதாம் சொந்;த வீடு வாங்கினத மறைச்சு வாடகை வீட்டில இருக்கிறம் எண்டு ஏன் தன்னட்டை பொய் சொல்லோணும் என்று அவருக்கு ஆத்திரம் வந்ததாம்.

இவருக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை என்று தெரிந்ததும் ‘என்னடப்பா 36 வயதாகியும் இன்னம் கலியாணம் செய்யாமல் இருக்கிறாய்? உன்ரை கொப்பர் தானே வெளிநாட்டில இருக்கிற பொடியளுக்கெல்லாம் பொம்பிளை பாhத்தக் குடுக்கிறார். உனக்கொரு பொம்பிளை பார்க்கிறதுக்க என்ன? ஏன் உனக்கு விருப்பமில்லையே? பிரான்சில ஆரையும் செட்டப் பண்ணி வைச்சிருக்கிறியோ’ என்று அந்த சிநேகிதன் கேட்டதும் இவருக்கு இன்னும் அதிர்ச்சியாகப் போய் விட்டதாம்.

கோபத்தோடை வீட்டுக்கு போன அவர் காசுக்காக சொந்த வீடு வாங்கினதை பெத்த பிள்ளையட்டை மறச்ச நீங்கள் பெத்த பிள்ளைக்க கலியாணம் செய்து வைச்சால் வாறவள் உங்களுக்கு காசு ஆனுப்ப விடமாட்டாள் என்று கீழ்த்தரமாக எண்ணின நீங்கள் எல்லாம் மனிசரா என்ற பேசிப் போட்டு நான் இனி உங்கடை கண்ணிலேயே முழிக்கமாட்டன் என்ற சொல்லிப் போட்டு ரிக்கட்டை மாத்திக் கொண்டு அன்றைக்கே பாரிசுக்கு வெளிக்கிட்டிட்டாராம். இங்கே வந்து என்னுடைய அப்பாவிடமும் ஏனய தனது நண்பர்களிடமும் இந்த துரோகத் தனத்தை செல்லிச் சொல்லp அழுத அவர் இது நடந்த ஒரு கிழமையில் ரயினிலை விழுந்து தற்கொலை செய்து கொண்டிட்டார். எவ்வளவு கொடுமை பாருங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னுமொரு விடயம் இது இங்கு வெளிநாடுகளில் நம்மவர் செலவுகள்பற்றியது.

இப்போது இங்கு குடும்பமாக வாழுவோரிற்கு பலவிதமான செலவுகள் பலவிதமான காரணங்களால் வருகிறது. ஒரு கதைக்கு காம்பிங் ஐ எடுத்துக்கொள்வோம். காம்பிங் என்பது மேலைநாடுகளில் வாழுவோரிற்கு சர்வசாதரணமான ஒன்று. விடுமுறைக்காலங்களில் (அல்லது விடுமுறை எடுத்து) இப்படி ஏதாவது செய்யாவிட்டால் மனவழுத்தம் போன்ற கடுமையான பிரச்சனைகள் கூட இவர்களுக்கு வந்துவிடும். எமவர் குழந்தைகள் பள்ளிக்கூடங்களில் அவர்களுடன் சேர்ந்து படிக்கிறார்கள். ஒரு விடுமுறை முடிந்து பள்ளிக்குப் போகும் போது ஆசிரியர் எல்லரையும் தங்கள் விடுமுறையை எவ்வாறு கழித்ததாக வகுப்பில் பேசும் படியோ அல்லது கட்டுரை வரையும் படியோ கூடக் கேட்கலாம். இப்படிப்பட்ட பல காரணங்களாலும் தான் இங்கு செலவு பெருகுகிறது. பலர் ஒரு பொருளாதாரத்திட்டம் இன்மையால் பொருளாதாரச் சிக்கல்களில் மாட்டிக்கொள்வது கண்கூடு.

ஆக எம்மவருக்கு இங்கு தேவைப்படுவது பொதுவான ஒரு பொருளாதார அறிவுரையே. அதாவது அதிகமாக கடன் வைத்திருப்பவர்கள் கடனிலிருந்து மீளுவது எபடி என்ற அறிவுரையும் மற்றும் வருமானத்திற்கேற்றவாறு எவ்வாறு திறமையாக (smart) செலவுசெய்து பொருளாதார நிறைவு பெறுவது போன்ற அறிவுரைகளுமே. இவற்றிற்காக இங்கு பல புத்தகங்கள், வெப்சைற்றுகள், ரீவி நிகழ்ச்சிக்ள் உள்ளன. நாம் செய்யவேண்டியது இவற்றை சேகரித்து அவற்றிலுள்ள விடயங்களை தொகுத்து அந்த விடயங்களை எம்மவருக்குரியதாக கருத்துக்களை மாற்றி (உதாரணமாக தாயகத்திற்கு பணம் அனுப்புவது என்பது எம்மவருக்கேயுரிய ஒரு பிரச்சனை அதை எவ்வாறு கையாள்வது? போன்ற) பின்னர் அவற்றை கண்கவர் ஊடக பொருளாக மாற்றி வழங்கவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெள்ளவத்தையில் நான் அறிந்த வகையில் 3 அறை வீடு, 1 கோடியும், (சிலதுகள் 1 கோடி, 20 வரை) 2 அறை வீடு 70 வரையிலும் போகின்றன. புலத்தில் இருந்து வீடு வாங்குகின்றபோது, நிச்சயமாக அந்நியவருவாயாகத் தான் சிறிலங்காவிற்கு இருக்கும். இதனாலும், பொருளாதாரரீதியான வருவாய் சிறிலங்காவிற்குக் கிடைக்கின்றது. மத்திய கிழக்கு சென்று, அனுப்பும் பணத்தை விட, நம்மவர்கள் சிறிலங்கா அரசிற்குச் செய்யம் பொருளாதார உதவி தான் அதிகம்.

சண்டே ரைம்சின் ஒரு கணிப்பின் படி, ( சில மாதங்களுக்கு முன் வந்தது) வெள்ளவத்தையில் தற்போது, 36 வரையிலான கட்டடங்கள் கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன.( முடிந்தவை கணக்கில் இல்லை) கொட்டேனாவில் 18 வரையிலான தொடர்மாடிக் குடிமனைகள் கட்டப்படுகின்றன. நம்மமையறியாமலே எவ்வளவு தூரம் சிறிலங்கா அரசிற்கு உதவி செய்கின்றோம் பாருங்கள்.

இந்த நேரத்தில் கொழும்பில் வீடு வாங்குவது அவசியமா?

இந்தத்தரவின்படி,

சராசரியாக ஒரு வீடு ஒரு கோடி என அனுமானிப்போம் (1 லட்சம் அமெரிக்க டொலர்). வழமையாக ஒரு கட்டடத்தில் 30 வீடுகள் இருக்கும் (ஒவ்வொரு மாடியிலும் 5 வீடுகள் படி 6 மாடிகள்).

எனவே,

ஒரு கட்டடத்திற்கு 30 லட்சம் அமெரிக்க டொலர் (3 மில்லியன் அமெரிக்க டொலர்)

தற்போது கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் 54 கட்டடங்களுக்கும் 162 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவுசெய்யப்படுகிறது.

அதாவது, வருடத்திற்கு 150 மில்லியன் அமெரிக்க டொலரானது ரியல் எஸ்டேட் செக்ரரில் எம்மவரால் பம்ப் பண்ணப்படுகின்றது. இது தவிர வேறும்பலவிதமான முதலீடுகள் கொழும்பில் எம்மவரால் மேற்கொள்லப்படுகின்றன. உதாரணம் வணிகம், விமானத்துறை, சுற்றுலா போன்றன.

சிங்களவன் பேசாமல் தனது யுத்த செல்வுகளுக்கு எங்கட புலம்பெயர்ந்த உறவுகளிடமே கடனா வாங்கலாம். தங்கட முதலை பாதுகாக்க குடுத்தாலும் குடுப்பினம்.

சர்வதேச சமூகம் மட்டும் தான் பிள்ளையையும் கிள்ளித்தொட்டிலையும் ஆட்டுறதெண்டு நினைக்கக்கூடாது கண்டியளோ.

ஓமோம் அது சரி. நாங்களும் இப்ப சர்வதேசம் தானே?!

Link to comment
Share on other sites

எனக்கு தெரிந்த 3பேர் கொழும்பில் தமது பிளட்டுகளை கடந்த 2 மாதத்தினுள் விற்றுவிட்டார்கள். 2002 உடன்படிக்கைக்கு பின்னர் வெள்ளவத்தை தெகிவளைப் பகுதியில் வேண்டி வைத்திருந்தார்கள்.

ஆனாலும் அதிலுள்ள கவலையான விடையம் இந்த 3வரிடமும் வேண்டியவர்கள் தமிழர்கள் தானாம்.

Link to comment
Share on other sites

முதலில் உங்கள் பாதங்களில் விழுந்து ஒரு மன்னிப்பு. என்னால் இப்படி ஒரு சோகத்தொடர் போவதற்கு. தெரியாமல் சும்மா பழக்கதுவசத்தில ஈழவனுக்கு எழுதினன். என்னை நவம் இரண்டாம் தடவை கண் கலங்க வைத்துவிட்டீயள். நான் நானாக கதக்கவில்லை என் உடலில் உள்ள பரம்பரை கூர்ப்பு செய்தவேலை.

என்னை புரிந்துகொள்ள ஆயிரம் கதைகள் சொல்லாம். உண்மையிலேயே எனக்கு பணக்காரர்களை காட்டக்கூடாது. நான் ஒரு 5 பைசா சீதனம் வேண்டிய ஒரு ஆள். 16 வயதினில் காதலிலித்த பெடியன். காதலித்த குற்றத்திற்காக என்னை ஒதுக்கி வைத்த பெற்றார். ஏழைப்பெண்ணாகிலும் அம்புக்கு கட்டுப்பட்டு

அவளை தூக்கி எறிந்துவிட்டு குமார் பொண்ணம்பலத்தின் சகோதரியின் மகளை பெருத்த சீதனத்துடன் கட்டச்சொல்லி அடம்பிடித்த என் பெற்றார். சீதனமாக வெள்ளவத்தை இராமகிரிஸ்ணா ரோட்டில் ஏகப்பட்ட வீடுகள் சொத்து. ஒரு கோட்டலும் பீச் ஓரத்தில் தாரம் என்று சொன்னவை. அப்ப வேண்டாம் என்று ஒரு தலைப்பட்சமாக பெற்றாரை எதிர்த்து கல்யாணம் செய்தவன். என் வாழ்க்கையில் ஒரு பனக்காரன் எப்படி ஒரு ஏழைத்தொளிலாலியை கொடுமைப்படுத்துவான் என்பதை எனிதான் எழுதப்போகிறேன். மீண்டும் வருகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி சைவம் இவ்வளவு காலமும் கோமாவிலையே இருந்தனீர்? :3d_039:

Link to comment
Share on other sites

இங்கேரும் குமாரசுவாமி ( உமது பெயர் ஒரு முருகக்கடவுளின் பெயராக உமது அம்மா அப்பா வைத்திருக்கிறார்கள் அதைக்காப்பாற்றவாவது கொஞ்சம் அறிவினை பாவிக்கப்பாரும்) நான் ஏன் வந்தேன் எதற்காக அப்படிக்கதைத்தேன் ஏன் மீண்டும் வந்தேன் என்பதுதான் இங்க முக்கியம்.

பீக்கு முந்தின குசு மாதிரி நுனிப்புல்லு மேஞ்சு போட்டு வாந்தி எடுக்கக் கூடாது எதையும். நான் சாதியினை எடுத்ததற்காக சாதி என்ற பெயரில் நடக்கும் அக்கிரமங்களுக்கு நான் ஆதரவு என்பதல்ல கோமாவில் இருக்க. உங்கள் மனங்கள் இப்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கு. ஆகவே வெளிநாடுகளிலும் சாதி அமைப்பினை பிழையான் வழியில் கொண்டு போக விடக்கூடாதென்பது இப்ப கடைசியாக நீங்க ஒரு பத்து பேர் கடைப்பிடிக்க நினச்சிருக்கிறீயள். அதுதான் என் நோக்கம்.

ஆனாலும் சாதிக்கலப்பு திருமணங்கள், பணக்கார ஏழை திருமண விடையங்கள் என்று இன்னும் விரிவடைந்து எமது இனம் அழிந்து கொண்டு போக உடைந்தையாக இருக்கும் நஞ்சுகளை இதில வந்து எழுதிரதாலையோ, அல்லது நீங்கல் ஒரு 10 பேர் கடைப்பிடிப்பதாலோ நிற்பாட்ட முடியாது. ஆகவே ஒரு சமூகத்தில் ஏன் சாதிகள் உருவாக்கப்பட்டன. இன்று ஒரு தொழிற்சாலையில் இயந்திரத்தில் வேலை பார்க்கும் ஒருவன் தன் அறிவினை விருத்தி செய்து மேலும் படித்து முன்னேறி ஒரு பொறியலாலராக வர இடமிருக்குது என்றால், அதற்காக் ஒரு தொழிற்சாலை தொடங்கப்படும் போது அந்த இயந்திரத்தில் வேலைபார்ப்பவரை பொறியியலாராக போட்டால் தொழிற்சாலையினை இழுத்ட்து மூடவேண்டியதுதான். ஏன் பிழையான் இடத்துக்கு பிழையான் ஆளினை நியமித்தா இப்படித்தான். ஆக்வே சமூகம் என்பதினை மேல் சொன்னவற்றுடன் ஒப்பிட்டுப்பார்த்தால் உமக்கு விளங்கும். ஒரு சமூகத்தினுள் பல தொழில் துறை அடிப்படையில், மூளைசாலிகளை ஒரு வேலை செய்ய விட்டு,மனதினை கட்டுப்படுத்தி நல்லவனாக வாழ ஒரு சமயம் தேவை என்று கருதி வேதம் படித்தவர்களினை ஒரு சாதியாகவும், சமூகத்திற்கு பணம் திரட்ட வர்த்தக சமுதாயமும், கடின மான தொழிக்களை செய்ய உடல் பலம் உள்ளவர்களையும், சண்டைக்கு என்று தனிய வெறு சிலரையும் சமூகம் செழித்து வளரசாதியமைப்பு உருவாக்கப்பட்டது. ஆகவே தமிழர் இதுனூடு வளர்ந்த வளர்ப்பு சரியில்லை. கஸ்டப்பட்டவன் குடிச்சு சீரழிந்தான். தானும் படிச்சு முன்னுக்கு வர எல்லோரும் சிந்திக்கவில்லை.அதே நேரம் பணம் உழைக்கபோணவன் அரசியல் போல ஏழைகலை காக்க வேன்டிய பொருப்பினை செய்ய வேலை செதவறினான். தொழிற்சாலைகள் போட்டு ஏழைகளின் வாழ்க்கைதரத்தினை உயர்த்த இவர்களுக்கு சமுதாயத்தில் ஒரு வேலை காலம் கால்மாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனல் இவர்களும் செய்யவில்லை. கஸ்டத்தினால் ஏழைகளுக்கும் கூலித்தொழிலை விட்டா வேறு நிலைமையில்லை என்று இருந்தது. ஆகவே யாரோ விட்ட தவறு காலம் காலமாக நடைபெற்றுக்கொண்டு வருகிறது. உள்நாட்டிலே இவர்களின் அடிமூலத்தினை திருத்தியிருக்கவேன்டும். திருத்தவில்லை ஆகவே இவர்களும் திருந்தவில்லை. இதனால் எனிமேல் ஒருத்தராலும் நிப்பாட்டமுடியாது. எனவே இந்த போராட்ட நிலைமைகளினை வைத்து எல்லா மக்களையும் சமமாக மதிக்கும் கலையை எல்லோரும் வளர்க்க பாடுபடவேன்டும். இப்ப பாரும் நான் இம்முறை நல்லவனாக இருந்து ஏதேனும் யாழ்கலத்திற்கு செய்வோம் என்று வந்தேன். அனால் நீரோ திரத்தி திரத்தி என்னோடு தனகிறீர். இது அந்த கால தேங்காய்களவெடுக்க திறந்த வீட்டிக்குள்ள வந்து ஏறி பிடுங்கியிட்டு போற அடாத்து செயல்களை செய்யிற மாதிரி எனக்குப்படுகுது இப்ப நான் உம்ம பற நx நாxx என்று பேசக்கூடாது என்று எப்படி நீர் எதிபார்ப்பீர். ஆக முதல் மற்ரவனுக்கு தொந்தரவு செய்யக்கூடாது என்று முதலில் நீர் திருந்தும் பிறகு சமுதாயம் அதில ஒரு ஆள் ஆன நானும் திருந்தப்பார்க்கிறன் :angry:

Link to comment
Share on other sites

சாதியமும் புலிகளும் என்ற தலைப்பில் 91ம் ஆண்டு தை மாத விடுதலைப்புலிகள் ஏட்டில் வந்த ஒரு கட்டுரையை இந்த இணைப்பில் வாசியுங்கள் புலிகளின் சாதியம் பற்றிய கருத்தை இக்கட்டுரை தொட்டு செல்கிறது

http://www.viduthalaipulikal.com/file/docs/2005/08/20-09.pdf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.