Jump to content

திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுக்கு போட்டியாக கொண்டாட்ட நிகழ்வுகளும்


Recommended Posts

திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுக்கு போட்டியாக கொண்டாட்ட நிகழ்வுகளும்

IMG_3974.jpg
குளோபல் தமிழச் செய்தியாளர்

திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்ற இடங்களுக்கு மிக அருகில் கொண்டாட்ட நிகழ்வுகளும் இன்றைய தினம் யாழில்.ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன.

யாழ்.பல்கலைகழக வளாகத்தினுள் மாணவர்களின் ஏற்பாட்டில் , நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக நடைபெற்றன. அதேநேரம் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்ற இடத்திற்கு மிக அருகில் உள்ள யாழ்.பல்கலைகழக கைலாசபதி கலையரங்கில் சர்வதேச திரைப்பட விழா நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

பல்கலைகழக வளாகத்தினுள் சிவப்பு மஞ்சள் கொடி கட்டி திலீபனின் நினைவு நாளை மாணவர்கள் அனுஸ்டிக்கும் போது , சர்வதேச திரைப்பட விழாவை முன்னிட்டு விழா குழுவினால் பல்கலைகழக வளாகத்தினுள் அலங்காரங்கள் செய்யப்பட்டு உள்ளான.

யாழ்.பல்கலைகழகத்தினுள் திலீபனின் திருவுருவபடம் வைத்து உண்ணா நோன்பிருந்து திலீபன் உயிர் நீத்த 26ஆம் திகதி வரையில் அஞ்சலி செலுத்த மாணவர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். அதே கால பகுதியில் இன்று முதல் எதிர்வரும் 20ஆம் திகதி வரையில் சர்வதேச திரைப்பட விழாவை முன்னிட்டு தினமும் கைலாசபதி கலையரங்கில் திரைப்படங்கள் காட்சி படுத்தப்படவுள்ளன.

அதேவேளை இன்றைய தினம் நல்லூர் பின் வீதியில் பருத்துத்துறை வீதியில் அமைந்துள்ள திலீபனின் நினைவுத்தூபியில் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன.

அதேநேரம் நினைவுத்தூபிக்கு முன்பாக உள்ள இடத்தில் காப்புறுதி நிறுவனம் ஒன்றின் கொண்டாட்ட நிகழ்வுகள் இடம்பெற்றன.

thileeban.jpg

IMG_3918.jpgIMG_3927.jpgIMG_3928.jpgIMG_3931.jpgIMG_3934.jpgIMG_3936.jpgIMG_3940.jpgIMG_3942.jpgIMG_3945.jpgIMG_3949-1024x768.jpgIMG_3973.jpg

http://globaltamilnews.net/archives/41242

Link to comment
Share on other sites

திலீபனின் நினைவேந்தலை குழப்பும் வகையில் நிகழ்வு

வடமாகாண சபை உறுப்பினர் ஆனோல்ட்டும் பங்கேற்பு

 

நல்­லூர் பின்­வீ­தி­யில் அமைந்­துள்ள தியாக தீபம் திலீ­ப­னின் நினை­வுத் தூபி­யில் நேற்று நினை­வேந்­தல் நிகழ்வு நடை­பெற்ற சம­நே­ரத்­தில், தென்­னி­லங்கைக் காப்­பு­றுதி நிறு­வ­னத்­தின் நிகழ்­வும் நடை­பெற்­றது.

திலீ­ப­னின் நினை­வேந்­த­ லைக் குழப்­பும் வகை­யில் நடை­பெற்ற அந்த நிகழ்­வில், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் இ.ஆனோல்ட்­டும் பங்­கேற்­றி­ருந்­தார்.

இந்­தி­யா­வுக்கு எதி­ராக அகிம்சை ரீதி­யில் போராடி வீரச்­சா­வ­டைந்த தியாக தீபம் லெப்.கேணல் திலீ­ப­னின் 30ஆவது ஆண்டு நினை­வு­நாள் தமி­ழர் தாயக மண்­ணில் நேற்று உணர்­வெ­ழுச்­சி­யு­டன் கடைப்­பி­டிக்­கப்­பட்­டது.

நல்­லூ­ரில் திலீ­ப­னின் நினை­வுத் தூபி அமைந்­துள்ள இடத்­தி­லும் நினைவு நாள் நிகழ்வு நடத்­தப்­பட்­டது.

இந்த நிகழ்வு நடை­பெற்­ற­போது, நினை­வுத் தூபிக்கு எதி­ராக உள்ள பிர­தே­சத்­தில் தென்­னி­லங்­கை­யைச் சேர்ந்த காப்­பு­றுதி நிறு­வ­னத்­தின் நிகழ்வு இடம்­பெற்­றது. மிகப் பெரிய சத்­த­து­டன் அந்த நிகழ்வு நடை­பெற்­றது.

தியாக தீபத்­தின் நினை­வு­நாள் உரை ஆரம்­பித்­த­போது, காப்­பு­றுதி நிறு­வ­னம் இலங்­கை­யின் தேசிய கீதத்­தைப் பெரும் சத்­தத்­து­டன் ஒலிக்­க­விட்­டுள்­ளது.

திலீ­ப­னின் நினைவு நாளைக் குழப்­பும் வகை­யில் அந்த நிறு­வ­னத்­தின் செயற்­பாடு அமைந்­தி­ருந்­தாக, நினை­வேந்­த­லில் கலந்து கொண்ட பல­ரும் சுட்­டிக்­காட்­டி­னர்.

காப்­பு­றுதி நிறு­வ­னத்­தின் நிகழ்­வில், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் இ.ஆனோல்ட்டே கலந்து கொண்­டி­ருந்­தார்.

http://newuthayan.com/story/29070.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நவீனன் said:

இந்­தி­யா­வுக்கு எதி­ராக அகிம்சை ரீதி­யில் போராடி வீரச்­சா­வ­டைந்த தியாக தீபம் லெப்.கேணல் திலீ­ப­னின் 30ஆவது ஆண்டு நினை­வு­நாள் தமி­ழர் தாயக மண்­ணில் நேற்று உணர்­வெ­ழுச்­சி­யு­டன் கடைப்­பி­டிக்­கப்­பட்­ட

அதே இந்தியா இன்று தனது  படையினருக்கு சிறிலன்காவில் அழகான பல நினைவுத்தூபிகளை சிறிலங்கா அரச ஆதரவுடன் அமைத்துள்ளது.ஆனால் எங்களால் ஒரு நினைவுத்தூபியை கூட அமைக்க முடியவில்லை.....நாங்கள் பூர்வீக குடிகள்..இருந்தும்.

Link to comment
Share on other sites

திலீ­ப­னின் நினை­வு­கள் பரு­வ­கால நினை­வு­களா?

 

எம்­ம­வர்­க­ளின் சமூக வலைத் த­ளங்­களை மீண்­டும் ஒரு கலக்­குக் கலக்கி வரு­கி­றார் திலீ­பன். திலீ­ப­னின் ஒளிப்­ப­டங்­கள், அவர் தொடர்­பான விட­யங்­கள் ஈழத்து இளை­ஞர்­க­ளின் சமூக வலைத்­த­ளங்­க­ளில் தற்­போது கொட்­டிக் கிடக்­கின்­றன.

வீர வணக்­கங்­க­ளும் தாரா­ள­மா­கவே செலுத்­தப்­ப­டு­கின்­றன. தவ­றில்லை. ஆனால் நாம் பரு­வ­கா­லத்­தில் எண்­ணி­விட்­டுக் கடந்து போகும் விட­யங்­க­ளாக ஈழத்து நாய­கர் க­ளின் நினை­வு­கள் மாறி­யுள்­ளன என்பது­தான் வேதனை.

இன்­னும் தெளி­வா­கச் சொல்ல வேண்­டு­மா­யின், ஒவ்­வொரு வரு­டத்­தின் மார்ச் மாதம் வந்­தால் ஐ.பி.எல். ஆர்ப்­பாட்­டம் எம்மை ஆட்­கொள்­ளும்.

அது­போல் செப்­ரெம்­பர் வந்­தால் திலீ­ப­னின் அந்தப் போ­ராட்­டம் நினை­வு­ க­ளுக்கு வந்து, வந்த வேகத்­தில் சென்­றும் விடு­கி­றது. திலீ­பன் உணவு ஒறுப்­புப் போராட்­டம் நடத்தி உயி­ரி­ழந்த நாள்­க­ளில் மட்­டும்­தான் அவர் நினை­வு­கூ­ரப்­ப­டத் தகு­தி­யா­ன­வரா? ஏனைய நாள்­க­ளில், நல்­லூர் வீதி­யைப் பயன்­ப­டுத்­தும் போது­கூட திலீ­ப­னின் நினை­வு­கள் எம்­மில் பல­ருக்கு வரு­வ­தே­யில்லை.

அது ஏன்? நல்­லூர் திரு­விழா கடந்த மாதம் நடை­பெற்­றது. வழக்­கம்­போல் லட்­சோப லட்­சம் பக்­தர்­கள் திரண்­ட­னர். தின்­பண்­டக் கடை­கள், புட­வைக் கடை­கள் ஆகி­ய­வற்­றால் வீதி­கள் நிறைந்து வழிந்­தன.

எத்­த­னையோ பேர் திலீ­ப­னின் நினை­வி­டத்­தில் அமர்ந்­து­கொண்டு குளிர்­பா­னம் அருந்­திக் கொண்­டி­ருந்­தார்­கள். பலர் கால­ணி­க­ளு­டன் நினை­வி­டத்தை ஏறி­மி­தித்து தாண்­டிச் சென்­ற­னர்.

இதன்­போது திலீ­ப­னின் நினை­வ­லை­க­ளும் அவ­ரின் வர­லாற்­றுப் போராட்­ட­மும் எங்கு சென்­றி­ருந்­தன. எனின் திலீ­பன் என்­ப­வன் பரு­வ­லா­கத்­துக்கு மட்­டு­மா­ன­வனா?

http://newuthayan.com/story/29063.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • எத்தனையோ தேசங்களுக்கு போயிருக்கேன்.. என் தாயக பூமியில் தான் கடற்கரை முள்ளு வேலிக்குள் அடைபட்டுக்கிடக்குது காண்கிறேன். உங்களுக்கு அதன் வலி புரிய வாய்ப்பில்லை. உக்ரைனுக்கு நீலிக்கண்ணீர் வடிக்கிறீங்க. அப்பவே விளங்கிட்டுது இப்படி கருத்து வருமுன்னு. கண்டுகொள்ளவதில் பயனில்லை. ஏனெனில்.. எல்லாத்தையும் சகித்துப் போகிற.. கூட்டத்துக்குள் நீங்கள் வந்து கனகாலம். 
    • இராணுவத்தின் நிர்வாகத்தின் கீழ் ஒட்டுசுட்டான் ஓட்டு தொழிற்சாலை – புனரமைப்பையும் ஆரம்பித்தனா் March 29, 2024     ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை இராணுவ சமூக சேவையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. அத்துடன், அந்தத் தொழிற்சாலையை புனரமைக்கும் பணிகளில் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு சென்ற இராணுவத் தளபதி லெப். ஜெனரல் விக்கும் லியனகே பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். இதன் போது, ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலைக்கும் சென்று அங்கு முன்னெடுக்கப்படும் புனரமைப்பு பணிகளையும் பார்வையிட்டார். இந்தத் தொழிற்சாலையை கடந்த பெப்ரவரி 15ஆம் திகதி முதல் புனரமைப்பு பணிகள் இடம்பெற்று வருகின்றன. கூழாமுறிப்பில் அமைந்துள்ள இந்த ஓட்டுத் தொழிற்சாலை உள்நாட்டு போர் காரணமாக கடந்த 1983ஆம் ஆண்டு முதல் செயலிழந்து காணப்பட்டது. எனினும், 2009ஆம் ஆண்டின் பின்னர் இந்தத் தொழிற்சாலையை மீண்டும் இயக்க மாறி மாறி வந்த அரசாங்கங்கள் உறுதியளித்தன. ஆனால், அவை எதுவும் நடக்கவில்லை. இந்த நிலையிலேயே, இலங்கை பீங்கான் கூட்டுத்தாபனம் தொழிற்சாலையை இராணுவ சமூக சேவையின் கீழ் வழங்கியுள்ளது. இதைத் தொடர்ந்தே தொழிற்சாலையை புனரமைக்கும் பணிகளில் இராணுவம் ஈடுபட்டுள்ளது. “நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும் உள்நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் அந்தப் பகுதி மக்களின் நலனை மேம்படுத்தவும் இந்த தொழிற்சாலை புதுப்பிக்கப்படுகிறது” என்று இராணுவம் தெரிவித்துள்ளது.   https://www.ilakku.org/இராணுவத்தின்-நிர்வாகத்த/
    • பிளவை நோக்கிச் செல்லும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன ஜனாதிபதி தேர்தலில்  கட்சியின் வேட்பாளரை நிறுத்தவேண்டும் என ஒரு தரப்பினரும் ஜனாதபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவேண்டும் என மற்றைய தரப்பினரும்  உறுதியாக நிற்பதன் காரணமாக ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன பிளவுபடும் நிலை உருவாகியுள்ளதாக டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் ராஜபக்ச குடும்பத்திற்கு ஆதரவான தரப்பினர் கட்சி தனது சொந்தவேட்பாளரை நிறுத்தி தேர்தலில் போட்டியிடவேண்டும் என  தெரிவித்துள்ளனர். கட்சியின் நிறைவேற்றுகுழுவின் கூட்டத்தில் இந்த கருத்து வெளியாகியுள்ளது - எனினும் தேர்தல் திகதி அறிவிக்கப்படாததால் இது குறித்து கட்சி இன்னமும் தீவிரமாக ஆராயவில்லை. இதேவேளை அரசாங்கத்தில் அமைச்சரவை பதவிகளை வகிக்கும்  பொதுஜனபெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் அவருக்கே ஆதரவளிக்கவேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளனர். R   https://www.tamilmirror.lk/செய்திகள்/பிளவை-நோக்கிச்-செல்லும்-ஸ்ரீலங்கா-பொதுஜனபெரமுன/175-335341
    • முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு ! (புதியவன்) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல். மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!  
    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.