-
Tell a friend
-
Topics
-
Posts
-
By உடையார் · பதியப்பட்டது
ஆயுதப் படைகளின் சித்திரவதைகளுக்கு அரசே பொறுப்பேற்க வேண்டும் : ஐ.நாவில் வலியுறுத்து 36 Views சிறிலங்காவின் சித்திரவதைகளுக்கான பொறுப்புக்கூறல் என்பது சர்வதேச வழக்கு மூலம் மட்டுமே அடைய முடியும் என்பதோடு, இதற்கு காரணமானவர்களை சர்வதேச நியாயாதிக்கத்தை பயன்படுத்தி, தண்டிப்பதற்கு முன்வருமாறு சர்வதேச நாடுகளை வேண்டுகிறோம் என ஐ.நா மனித உரிமைச்சபைக் கூட்டத் தொடரில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரியுள்ளது. சிறிலங்காவின் ஆயுதப்படைகளின் சித்திரவதைகளுக்கு அரசே பொறுப்பேற்க வேண்டும் என்ற நிலையில், உள்நாட்டு சட்டங்களில் உள்ள இறைமையின் அடிப்படையிலான விதிவிக்கு சட்டங்களில் திருத்தங்களைக் கொண்டு வந்து வழக்குத் தொடர அனுமதிக்க வேண்டும் என அனைத்து ஜனநாயக நாடுகளுக்கும் வேண்டுகோள் விடுக்கின்றோம் எனவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரியுள்ளது. ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளரது Nils Melzer ( torture and other cruel, inhuman or degrading treatment or punishment தொடர்பிலான அமர்வின் போது, ACCP அனுசரணையுடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமைகளும், தொகையான கொடுரங்கள், இனஅழிப்புக்கு எதிரான செயற்பாடுகளுக்கான அமைச்சர் மகிந்தன் சிவசுப்ரமணியம் அவர்கள் காணொளிப்பதிவின் ஊடாக உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சித்திரவதைகளைப் பயன்படுத்துவது இன்றும் நடைமுறையில் உள்ளதோடு, 2016ம் ஆண்டின் பிற்பகுதியில் கைது செய்யப்பட்டவர்களின் 80 வீதமான தமிழர்கள் கைதான பின்னர் சித்திரவதை மற்றும் உடல் ரீதியான கொடுமைகள் இழைக்கப்பட்டதாக புகார் அளித்துள்ளார்கள் என 2017ம் ஆண்டில் இலங்கைக்கு பயணம் செய்த ஐ.நா.வின் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் மனித உரிமைகளுக்கான முன்னாள் சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன் தெரிவித்துள்ளார். சிறீலங்கா பாதுகாப்புப் படைகள் தொடர்ந்து தன்னிச்சையான கைதுகள், நீதிக்கு புறம்பான படுகொலைகள், வலிந்து காணாமல் ஆக்குதல், காவலில் வைக்கப்பட்டோரை பாலியல் வல்லுறவுக்க உட்படுத்தல்,விசாரணையின்றி சித்திரவதை மற்றும் நீண்டகாலமாக தடுப்புக்காவலில் வைத்தல் உள்ளன என்பதோடு இவை அனைத்தும் தமிழர்களை விகிதாசாரமாக பாதிக்கிறது என்று தனது 2017ம் ஆண்டு The Freedom House அறிக்கையில் தெரிவித்துள்ளது. சித்திரவதை என்பது சிறீலங்காவில் இரத்தத்தில் ஊறி உள்ளது. சிறீலங்காவில் சித்திரவதை செய்பவர்களை தண்டிப்பது ஒரு கடுமையான பிரச்சினையாகவே இருந்து வருகிறது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அறிக்கைகளில் பலமுறை கூறியுள்ளது. இதனால் சித்திரவதைக்கு பொறுப்புக்கூறல் சர்வதேச வழக்கு மூலம் மட்டுமே அடைய முடியும். சர்வதேச நியாயாதிக்கத்தை பயன்படுத்தி, சிறீலங்காவின் அரசியல் மற்றும் இராணுவத் தலைவர்களைத் தண்டிப்பதற்கு முன்வருமாறு சர்வதேச நாடுகளை வேண்டுகிறோம். சிறிலங்காவிலும் மற்றும் பல நாடுகளிலும் சித்திரவதை அரசுகளினால் தான் திட்டமிடப்பட்டு நிறைவேற்றப்படுகின்றது. ஆகவே, தங்கள் ஆயுதப்படைகளால் செய்யப்பட்ட சித்திரவதைகளுக்கு அரசுகளே பொறுப்பேற்க வேண்டும். ஆகவே உள்நாட்டு சட்டங்களில் உள்ள இறைமையின் அடிப்படையிலான விதிவிக்கு சட்டங்களில் திருத்தங்களைக் கொண்டு வருவதன் ஊடாக, பாதிக்கப்பட்டவர்கள் வழக்குகளைத் தொடுத்து தமக்கான பரிகாரநீதியினை பெறுவதற்கு வழிகோல ஜனநாயக நாடுகளை வேண்டுகிறோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர் மகிந்தன் சிவசுப்ரமணியம் தனதுரையில் தெரிவித்திருந்தார். https://www.ilakku.org/?p=44114 -
By உடையார் · பதியப்பட்டது
வலிகாமத்தில் 3,300 ஏக்கர் காணி இன்னும் இராணுவக் கட்டுப்பாட்டில் – ஒக்லாண்ட் ஆய்வு அறிக்கை 112 Views “யுத்தம் முடியுவடைந்து 12 வருடங்கள் ஆகியுள்ளபோதிலும், வலிகாமம் வடக்கில் இன்னமும் 3,300 ஏக்கர் தனியார் காணிகளை இராணுவம் தன்வசம் வைத்துள்ளது” என அமெரிக்காவின் ஓக்லாண்ட் நிறுவனம் நேற்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மயிலிட்டியில் பல நூறு வருடங்களை பழைமையான வரசித்தி விநாயகர் ஆலயம் மற்றும் சென் மேரி தேவாலயம் ஆகியவை முற்றாக தரைமட்டம் ஆக்கப்பட்டு இராணுவ மாளிகை ஒன்று அவற்றின் மீது கட்டப்பட்டுள்ளது. இந்த ஆலயமும் தேவாலயமும் அங்கே இருந்தனவா என்ற அடையாளமே தெரியாத அளவுக்கு அவை தரைமட்டம் ஆக்கப்பட்டுள்ளதாக இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் சுமார் 400 பேருக்கு சொந்தமான 60 ஏக்கர் காணியும் இந்த பங்களாவுக்காக இராணுவத்தினரினால் அபகரிக்கப்பட்டுள்ளதாக இந்த அறிக்கை குறிப்பிடுகின்றது. இதேவேளை, வலிகாமத்தில் சில இடங்களை மீள குடியமர்வுக்காக இராணுவம் கடந்த ஆண்டுகளில் அனுமதித்துள்ளபோதிலும், அந்த பகுதிகள் தீவிர இராணுவமயமாக்கலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் இது அப்பகுதி மக்களின் சகஜ வாழ்க்கையினை மோசமாக பாதித்துள்ளதாகவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. காங்கேசன்துறை எல்லையுடனான தையிட்டி கிராமத்தில் கெமுனு விகாரை என்ற புதிய விகாரை ஒன்று அமைக்கபப்ட்டுள்ளது. அங்குள்ள இந்து கோவில் ஒன்றுக்கு சொந்தமான காணி ஒன்றிலேயே இந்த விகாரை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கெமுனு விகாரையில் இருந்து 1 கிலோ மீற்றர் தூரத்தில் 7 ஆவது பட்டாலியன் இராணுவ முகாம் அமைந்துள்ளது. இந்த 7 ஆவது பட்டாலியன் முகாமுக்கு பக்கத்தில் பிரபல்யமான ஊறணி அந்தோனியார் ஆலயமும் ஊறணி கனிஷ்ட வித்தியாலயமும் இருக்கின்றன. 7 ஆவது பட்டாலியன் முகாமில் இருந்து 1 கிலோ மீற்றர்கள் தொலைவில் இராணுவ பொலிஸாரின் முகாம் 15 ஏக்கர் தனியார் காணியில் அமைந்துள்ளது. இராணுவ பொலிஸ் முகாமில் இருந்து ஏறத்தாழ 500 மீற்றர்கள் தொலைவில் மிகவும் விசாலமான 10 ஆவது கள பொறியியலாளார்கள் தலைமையகம் இருக்கிறது. இதன் அளவு 2000 ஏக்கர்களுக்கும் அதிகமானது. இது மயியிலிட்டியில் மட்டும் 8 கிராம சேவையாளர் பிரிவுகளை ஆக்கிரமித்துள்ளது. சுமார் 200 வருடங்கள் பழைமையான மயிலிட்டி கலைமகள் வித்தியாலயம் இந்த முகாமை ஒட்டியபடி அமைந்துள்ளது. இந்த பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள் இந்த முகாம் வேலியில் அமைக்கப்பட்டுள்ள வாசல் வழியாகவே செல்லவேண்டும். யுத்தம் முடியுவடைந்து 12 வருடங்கள் ஆகியுள்ளபோதிலும், வலிகாமம் வடக்கில் இன்னமும் 3,300 ஏக்கர் தனியார் காணிகளை இராணுவம் தன்வசம் வைத்துள்ளது என்றும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது https://www.ilakku.org/?p=44106 -
By உடையார் · பதியப்பட்டது
சென்னையில் பிடிபடும் 80 சதவீத மீன்களில் பிளாஸ்டிக் துகள்கள் நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் கழிவுகளை கடலிலும், நீர் நிலைகளிலும் வீசிவிடுகிறோம். மழைகாலத்தில் ஆறுகள், நீரோடைகள் மூலமாக செல்லும் தண்ணீர், பிளாஸ்டிக் கழிவுகளை கடலுக்கு இழுத்து செல்கிறது. அவ்வாறு கடலுக்கு வரும் பிளாஸ்டிக் கழிவுகளை, மீன்கள் உணவு என கருதி சாப்பிட்டுவிடுகின்றன. இதனால் இப்போது பெரும்பாலான மீன்களின் உடலில் பிளாஸ்டிக் கழிவுகள் கலந்து இருப்பதை காண முடிகிறது. சென்னையில் பிடிபடும் மீன்கள் எப்படி இருக்கின்றன என்பது குறித்து சென்னையில் உள்ள தேசிய கடற்கரை மையம் சார்பில் ஆய்வு நடத்தப்பட்டது. பட்டினப்பாக்கம் பகுதியில் விற்கப்படும் பல வகை மீன்களை அவர்கள் ஆய்வு செய்தார்கள். அதில் மக்கள் விரும்பி சாப்பிடக்கூடிய பல வகை மீன்களின் உடல்களிலும் பிளாஸ்டிக் கழிவுகள் கலந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பாக கானாங்கெளுத்தி, கிழங்கா, சீலா, மஞ்சள் கொடுவாய், சிவப்பு கொடுவாய், சங்கரா, சுறா ஆகிய மீன்களில் 80 சதவீதம் அளவுக்கு பிளாஸ்டிக் துகள்கள் காணப்பட்டன. மீன்களின் செதில்கள், உடல்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தபோது அவற்றில் 5 மில்லி மீட்டர் அளவுக்கு குறைவான துகள்கள் அதிகமாக காணப்பட்டன. சில மீன்களில் 1.93 மி.மீட்டரில் இருந்து 2.03 மி.மீ. அளவுக்கு பிளாஸ்டிக் துகள்கள் இருந்தன. குறிப்பாக சிவப்பு, இளஞ்சிவப்பு நிற பிளாஸ்டிக் கழிவுகளையே உணவு என கருதி மீன்கள் அதிகமாக சாப்பிடுகின்றன. எனவே இந்த நிற பிளாஸ்டிக் கழிவுகள்தான் மீன்களில் அதிகமாக தென்பட்டன. இத்துடன் நீலம், பச்சை, வெள்ளை, ஊதா நிற பிளாஸ்டிக் துகள்களும் மீன்களின் உடலில் இருந்தன. நாம் துணி துவைக்கும் போது ஆடைகளில் உள்ள பைபர் துகள்களும் தண்ணீரில் கலந்து பின்னர் கடலுக்கு செல்கிறது. அவையும் மீன்களின் உடலில் காணப்படுகின்றன. இதே போல நாம் பயன்படுத்தும் அழகு சாதன பொருட்கள், பற்பசை, பேஸ் வாஷ் போன்றவற்றிலும் பைபர்கள் கலந்து இருக்கின்றன. அத்துடன் விஷத்தன்மை கொண்ட பொருட்களும் இவற்றில் அடங்கி உள்ளன. அவை மீன்களின் உடல்களில் கலந்து நமக்கு உணவாக வருகின்றன. எனவே இவற்றை சாப்பிட்டால் உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறுகின்றனர். ஆனால் எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்படும் என்பது தொடர்பாக மேலும் ஆய்வுகளை நடத்த வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர். பிளாஸ்டிக் கழிவுகள் நம் உடலில் கலக்கும் போது தசைகள் பாதிக்கப்படும். நரம்பு மண்டலங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு மூளையில் தாக்கத்தை ஏற்படுத்தும். இனப்பெருக்க பிரச்சனைகள் ஏற்படும். தைராய்டு பிரச்சனை, புற்றுநோய் போன்றவையும் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு. இதுதவிர பிளாஸ்டிக் துகள்கள் பல வகைகளில் நமது உடல்நலத்தை பாதிக்க செய்கின்றன. கடல்களில் கலக்கும் பிளாஸ்டிக் துகள்கள் பல்வேறு வகையிலும் ஆபத்தை ஏற்படுத்துகின்றன. எனவே மீன் இனம் அழியும் நிலை ஏற்படுகிறது. https://www.maalaimalar.com/news/topnews/2021/03/09111908/2428296/Tamil-News-microplastics-in-80-percent-fish-caught.vpf -
காரைநகர் டிப்போ பணியாளர்கள் 8பேர் உள்ளிட்ட 22 பேருக்கு கொரோனா March 9, 2021 யாழ்ப்பாணத்தில் மேலும் 22 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 8பேர், காரைநகர் இ.போ.ச சாலையில் பணியாற்றும் சாரதிகள், நடத்துனர்கள் மற்றும் காப்பாளர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் மேலும் கூறியுள்ளதாவது, “யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் 387 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர்.பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அவர்களில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 382 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர்.பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அவர்களில் 21பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சிற்றூழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர் ஏற்கனவே சுயதனிமைப்படுத்தப்பட்டவர். யாழ்ப்பாணம் மாநகர பொதுச்சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில், கார்கில்ஸ் கட்டடத் தொகுதியில் பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றுபவர். இலங்கை போக்குவரத்துச் சபையின் காரைநகர் சாலையைச் சேர்ந்த 90 பேரிடம் பி.சி.ஆர்.பரிசோதனை நேற்று (திங்கட்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. அவர்களில் 8 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் சாரதிகள் மூவர், நடத்துனர்கள் மூவர் மற்றும் காப்பாளர்கள் இருவர் அடங்குகின்றனர். ஊர்காவற்றுறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 9பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் ஊர்காவற்றுறை மெலிஞ்சிமுனை தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள். உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் இருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தபட்டுள்ளது. அவர்கள் இருவரும் ஏற்கனவே தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள்” என அவர் குறிப்பிட்டுள்ளார். #காரைநகர்_டிப்போ #பணியாளர்கள் #கொரோனா #கேதீஸ்வரன் #சாரதிகள் #நடத்துனர்கள் https://globaltamilnews.net/2021/157839/
-
By உடையார் · பதியப்பட்டது
தமிழர் சார்பில் அம்பிகையின் அறப் போராட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றி சிறீலங்கா யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இனப்படுகொலைக்கு உள்ளான மக்கள் சார்பில், குறிப்பாக தமிழர்கள் சார்பில், திருமதி அம்பிகை செல்வகுமார் பிரித்தானிய ஆரம்பித்த உணவு தவிர்ப்புப் போராட்டத்தின் விளைவாக, தமிழர் சார்பில் அவர் முன்வைத்த நான்கு கோரிக்கைகளையும் பிரித்தானிய தொழிற்கட்சி அங்கீகரித்துள்ளதுடன், உடன் நடவடிக்கை எடுக்குமாறு ஆளும் கட்சியை வலியுறுத்தியுள்ளது. தொழிற்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரிபன் கினோக் (Shadow Minister, Foreign and Commonwealth Affairs) அவர்கள் பிரித்தானியாவின் தலைமையில் மார்ச் 24 ஆம் திகதி ஐ.நா மனிதவுரிமைகள் பேரவையின் ஒப்புதலிற்காக தாக்கல் செய்யப்பட்டுள்ள சிறீலங்கா மீதான வரைவுத் தீர்மானம் தொடர்பில் தனது அதீத அதிருப்தியையும் வரைவுத் தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்ட விபரங்கள் தெளிவற்றதாகவும் போதுமானதாகவும் இல்லை எனவும் சுட்டிக்காட்டி ஆசியப் பிராந்தியத்திற்கான அமைச்சரிற்கு (Foreign and Commonwealth Office, UK) கடிதமொன்றை அனுப்பியுள்ளார். மேலும் அவர் வரைவுத்தீர்மானத்தில் பின்வரும் விடயங்களைக் கருத்தில் எடுக்குமாறு கேட்டுக்கொண்டார். 27 ஜனவரி ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களை உள்ளடக்கத்தவறியுள்ளதாகவும் சிறீலங்கா அரசாங்கம் மற்றும் இராணுவத்தின் நடவடிக்கைகளிற்கு உலகளாவிய அதிகார வரம்புக் கொள்கை பயன்படுத்தப்பட வேண்டும் என்பதனை உறுதிப்படுத்த பிரித்தானிய அரசு வரைவுத்தீர்மானத்தில் திருத்தம் மேற்கொள்ளுமா? எனவும் IIIM அவசியமானது என்ற உண்மைத்தன்மையை பிரதிபலிக்கும் வகையில் வரைவுத் தீர்மானத்தில் திருத்தம் செய்யுமாறு கேட்டுக்கொள்வதாகவும் ஐ.நா பாதுகாப்புக் குழுவிற்கான பிரித்தானிய அரசாங்கத்தின் அணுகுமுறை அதன் நிரந்தர உறுப்பினர்களில் இருவரின் வீட்டோ அதிகாரங்களினால் தீர்மானிக்கப்படக்கூடாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளதோடு சிறீலங்கா விடயத்தினை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்க வேண்டும் என்பதனை உள்ளடக்க தவறிவிட்டதாகவும் எனவே அதனை உள்ளடக்க வேண்டியும் சிறீலங்கா அதிகாரிகளின் அதிகரித்துவரும் அத்துமீறிய செயற்பாடுகளிலிருந்து மனித உரிமை ஆர்வலர்களை பாதுகாப்பதற்கான உறுதியான நடவடிக்கைகளிற்கு இந்தத்தீர்மானம் வழிவகுக்கின்றது என்பதனை உறுதிப்படுத்த பிரித்தானிய அரசாங்கம் என்ன நடவடிக்கைகளை எடுக்கும் எனவும் வரைவுத்தீர்மானத்தில் சிறீலங்கா அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலிற்கான கால எல்லை 18 மாதங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் இது ஏற்றுக்கொள்ள முடியாத நீண்ட காலமாக இருப்பதனால் 6 மாதங்களிற்குள் பொறுப்புக்கூறல் குறித்த அறிக்கையை கோருவதற்கு வரைவுத்தீர்மானத்தில் திருத்தம் மேற்கொள்ள பரிந்துரை செய்வதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளார். சிறீலங்காவில் நடந்த வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களிற்கும் தப்பிப்பிழைத்தவர்களிற்கும் பிரித்தானிய அரசாங்கம் கடன்பட்டுள்ளதாகவும் தற்போதைய வரைவினை மேலே முன்மொழியப்பட்ட மாற்றங்களை உள்ளடக்கி விரைவில் மாற்றியமைக்குமாறு கேட்டுக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். திருமதி. அம்பிகை செல்வகுமார் அவர்களின் உணவுத்தவிர்ப்புப்போராட்டம் 10 நாளை அடைந்திருக்கும் நிலையில், தமிழ்மக்கள், மனித உரிமை ஆர்வலர்கள் அனைவரும் ஒன்றிணைந்து வழங்கிய அழுத்தங்களே இந்த முன்னேற்றத்துக்கான காரணங்களாகும். இதனால் இது அவரின் அகிம்சைப்போராட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றி என கருதலாம். https://www.ilakku.org/?p=44129
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.