• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
  • ×   Pasted as rich text.   Paste as plain text instead

      Only 75 emoji are allowed.

    ×   Your link has been automatically embedded.   Display as a link instead

    ×   Your previous content has been restored.   Clear editor

    ×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Topics

  • Posts

    • இவை பொய்யாக இருக்க வேண்டியதில்லை  ஆனால் இவை எல்லாம் எந்த ஆய்வும் இன்றி வெறுமெனே உங்களால் நம்பப்படுவபவை  இந்த கோணத்தில் இன்னமும் யாரும் எந்த ஆய்வையும் செய்யவில்லை. கெமர் அரசுகளின் ஆற்றல்கள் கேள்விக்குள்ளானவை .........  எல்லாம் தமிழ் எதிலும் தமிழ் என்பது ஒரு மாதிரியான பொய் பரப்புரை என்றால்  நீங்கள் செய்வதும் அந்தமாதிரி ஒன்றுதான். தென்கொரியாவிற்கு ஒரு தமிழ் பெண் அயோத்தியா என்று சென்று இருக்கிறாள்  அவள் கொரியாவில் முதன்மை அடைந்து பல மாற்றங்களை அங்கு செய்து கொரியர்கள்  மரியாதைக்குரியவள் ஆகி இருக்கிறாள். பின்னாளில் அவள் அயோத்தி இந்தியாவில் இருந்து  வந்ததாக ஆய்வு செய்து சொல்லிக்கொண்டு இருந்தார்கள். ஆனால் கொரியர்கள் நிறைய தமிழ் சொற்களை தமது மொழியில் கலந்து வைத்து இருக்கிறார்கள்  அது எவ்வாறு என்று ஆராய தொடங்கும்போதுதான் அயோத்தியா பாண்டிய பேர் அரசின் வழி  வந்தவள் அவள் ஒரு தமிழச்சி என்பதை கண்டறிய கூடியதாக இருந்த்தது. அயோத்தியா தமிழா கிந்தியா என்ற ஆய்வு கொரியர்களுக்கும் வெள்ளைக்காரனுக்கும் தேவை அற்றது  அதை அவர்கள் செய்யப்போவதில்லை சொல்லப்போவதும் இல்லை. அதுபோல விடைகள் இல்லாத பல கேள்விகள்  அங்கோர்வார்டில் இருக்கிறது. வெள்ளைக்கார உலகுக்கு முதன்முதலில் தமிழர்கள் என்று ஒரு கூட்டம் செல்வ  செழிப்புடன் ஆடம்பரமாகவும் (பாண்டிய ராஜ்ஜியம்) மிகவும் அழகாகவும்  வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள்   என்று மார்கோ போலோ கூறியபோது  அவர் கேலி செய்யப்பட்டார் ..... அவர் ஒரு கோமாளி என்று பட்டம் சூட்டப்படார். இன்றுவரை சேர்க்கஸிலும்  சினிமாவிலும்  கோமாளிகளை மார்கோ போலோக்கள் என்றுதான் அழைக்கிறோம்.  காரணம் ரோமர்களுக்கு முன்னராகவே மிகவும் நாகரீகமாக வாழ்ந்தவர்கள் பாண்டியர்கள். அந்த உண்மையை  மேற்கு உலகம் புத்தகங்களில் ஏற்றுக்கொண்டாலும்  மனங்களில் ஏற்றுக்கொள்ள போவதில்லை.     
    • உங்களைப் போல் நேரில் போய்ப் பார்கக எனக்கு இன்னும் வாய்ப்பு அமையவில்லை Tulpen நாசிகளின்  Auschwitz வதை முகாமில் இருந்தவர்களை,  ரஷ்யா செம்படைகள் விடுவித்த 75 வது  வருட நினைவு நாளை இன்று நினைவு கூர்ந்தார்கள். அதைத் தொலைக் காட்சியில் பார்த்தேன்   Auschwitz வதை  முகாமில் இருந்த 200 பேர்வரையிலானவர்கள் அந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்கள். வயதுகள் 90ஐத் தாண்டி இருந்தாலும், அந்த நினைவு நாளில், மெல்லிய நீலம், வெள்ளை கலந்த யூதர்களின் கொடியின் நிறத்திலான துண்டுகளை கழுத்தில்  கட்டிக் கொண்டு கதிரையில் அவர்கள் அமைதியாக அமர்ந்திருந்தார்கள். அவர்களின் மனதுக்குள் சோகங்கள் நிறைந்திருந்ததை அவர்களது பேச்சு வெளிப்படுத்தியது. வதை முகாமிற்கு கொண்டு போனதன் பின்னர் தாய்,தந்தை, உடன்பிறப்புகள் என்று ஒவ்வொருவராகப் பிரிந்து போனது, பின்னர் அவர்களை வாழ்நாள் முழுவதுமே காண முடியாமல் தவித்தது என்று அவர்கள் கதை கதையாகச் சொன்னார்கள். 94 வயதான Lewin தனது கதையைச் சொல்லத் தொடங்கு முன்னரே மெலிதான குரலில் "முதலில் நான் எனது கண்ணீரை மறைத்துக் கொள்கிறேன்" என்று சொல்லிவிட்டே ஆரம்பித்தார். “Warschau வில் பிறந்தேன். என்னுடை மூன்று சகோதரர்களுடன் சந்தோசமாக இருந்தேன். 1942இல் என்னையும் எனது ஒரு சகோதரனையும் இரும்பு ரெயில் பெட்டியில் அடைத்து Auschwitzக்கு  கொண்டு வந்தார்கள். அங்கே பல மணித்தியாலங்கள் ஓய்வின்றி கட்டாயவேலை செய்ய வேண்டியிருந்தது. அப்படி வேலை செய்து கொண்டிருக்கும் போது ஒருநாள்  நான் கேட்ட ஒரு செய்தி எனக்குப் பெரும் அதிர்ச்சியைத் தந்தது. அந்தச் செய்தி இன்றும் என்னைத் துரத்திக் கொண்டே இருக்கிறது. என்னுடைய சகோதரனை சுட்டுக் கொன்று விட்டார்கள் என்பதே அந்தச் செய்தி. ஒரு காரணமும் இல்லாமல் ஏன் அவனைச் சுட்டார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் காணாமல் போனவர்களது பெயர்ப் பட்டியலில்தான் அவனது பெயர் இன்றும் இடம் பெற்றிருக்கிறது. நான் இருந்த வதை முகாமிற்கு கொண்டு வரப் படுபவர்களில் அனேகமானோர் எரிவாயு (gas chamber) மூலமாகக் கொல்லப் பட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த இடத்தை Sauna என்றுதான் சொல்வார்கள். அதை death sauna என்று சொல்வதுதான் மிகப் பொருத்தமாக இருக்கும். ஒரு மில்லியனுக்கு மேலானவர்கள் கொல்லப்பட்ட அந்த வதை முகாமில்1945இல் விடுவிக்கப் பட்டவர்களில் நானும் ஒருவன். நிலக்கரி ரெயிலில் எங்களை Buchenwaldக்கு கொண்டு வந்தார்கள். என்னால் அவ்வளவு சுலபமாக இயல்பு வாழ்க்கைக்குள் வந்து விட முடியவில்லை. ஆனாலும் வாழத் தொடங்கினேன். அந்த கடினமான காலங்களின் வலிகள் இன்றும் என்னைத் தொடர்கின்றன. எனது பெற்றோரைக் கொன்று விட்டார்கள் என்று அறிந்தேன். எனது சகோதரி? அவளுக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. பலநாள் தேடினேன். கிடைக்கவில்லை” அந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்த்த பொழுது, ஒரு விடியல் வருமா? நாளை எங்களது சோகங்களும் இப்படியான ஒரு நிகழ்வில் பகிரப்படுமா? என்ற கேள்விகள் எனக்குள் எழுந்தன.
    • கொரோனா வைரசை முன்கூட்டியே கணிக்கத் தவறி விட்டோம் - உலக சுகாதார அமைப்பு கொரோனா வைரசை கணிக்கத் தவறி விட்டோம் என்று உலக சுகாதார அமைப்பு முதன் முறையாக ஒப்புக்கொண்டுள்ளது. கொரோனா வைரஸ் குறித்து கடந்த வாரம் உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக நாடுகள் பதற்றம் கொள்ளத் தேவையில்லை, இது மிதமான நிலையிலேயே உள்ளது என்று கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் பாதிப்பை கணிக்கத் தவறியதாக கூறி தவறை ஒப்புக்கொண்டுள்ளது. இதற்காக உலக நாடுகளிடம் அந்த அமைப்பு மன்னிப்பு கோரி உள்ளது. மேலும் சீனாவுக்கு வெளியே 15 நாடுகளில் 62 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது என்பதையும் அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. https://www.polimernews.com/dnews/98519/கொரோனா-வைரசை-முன்கூட்டியேகணிக்கத்-தவறி-விட்டோம்---உலகசுகாதார-அமைப்பு