Jump to content

படிக்கத் தெரிந்த சிங்கம் மற்றும் ஏழு தலை நகரம் - சிறுவர் நாவல்


Recommended Posts

singam.jpg

எஸ்.ரா கதை சொல்லி கேட்பது ஒரு சுவாரஸ்யம். சுவாரஸ்யம் என்பதைவிட ஒரு மயக்கம் கொடுத்துவிடும். பிரசாத் ஸ்டுடியோ வாசலில் ஒருமுறை சந்தித்தபோது படிக்கத் தெரிந்த சிங்கத்தின் ஒன் லைனைரை கூறினார். குழந்தைகள் தினசரிகளை வாசிக்க வைக்க ஒரு சிறார் நாவல் என்றார். எஸ்.ரா செய்யப்போகும் மாயத்திற்காக காத்திருந்தேன். விறுவிறு வாசிப்பு. எட்டு வயது முதல் 12 வயது குழந்தைகளுக்கான புத்தகமாக வந்துள்ளது. அதைவிட சிறிய குழந்தைகளுக்கு வாசித்தும்காட்டலாம்.

ஒரு தினசரியில் வரும் பல்வேறு செய்திகளில் முக்கியத்துவத்தை ஒரு கற்பனைக்கதை மூலம் காட்டில் அமர்ந்து கதையில் போக்கினை கவனிக்க வைக்க முயல்கின்றார். வாவ் என்ற சிங்கம் எப்படி செய்தித்தாள் வாசிக்க ஆரம்பிக்கின்றது, அதைப்பற்றிய செய்தி செய்தித்தாளில் வர என்ன முயற்சிகள் செய்கின்றது, கடைசியாக எப்படி செய்தி வந்தது என்பதெ கதை. இடையில் நிறைய குட்டி குட்டி கதாபாத்திரங்கள்வாத்தியார், எலி, கழுதை, யாழினி என்று.

இந்த புத்தக கண்காட்சியில் தவர விடக்கூடாத சிறார் புத்தகம்.

வெளியீடு : டிஸ்கவரி புக் பேலஸ்
பக்கம் : 48
விலை : ரூபாய் 30/-

http://www.sramakrishnan.com/?p=5526

 

 

ஏழு தலை நகரம் – மகிழ்விக்கும் கற்பனை

 

seven.gif

உலக இலக்கியம், உலக சினிமா,பயண அனுபவங்கள் என எஸ்.ராவின் அனுபவ தேடல்கள் பலவற்றுள் இருந்து வேறுபட்டு குழந்தைகளுக்கான மிகுந்த கற்பனை,தந்திரங்கள்,மாயாஜாலங்கள் நிறைந்தது இந்நாவல்.

இரும்புக்கை மாயாவி” ,”வேதாள கதைகள்” ,”சிந்துபாத்” என சிறு பிராயத்தில் படித்த கதைகளை மீண்டும் நினைவில் கொண்டும் இந்நாவலின் கதையாடல் முற்றிலும் ஒரு புதிய அனுபவம். குழந்தைகளுக்கான வாசிப்பு வெளிகள் முற்றிலும் சுருங்கிய இன்றைய சூழலில் ஆனந்த விகடனின் இம்முயற்சி பாராட்டுதலுக்குரியது

தற்கால நிகழ்வாகவே சொல்லப்படும் இந்நாவலின் கதையாடல் எங்கோ அமைந்திருக்கும் மாய தந்திரங்களும் விடை தெரியா ரகசியங்களும் கொண்ட “ஏழு தலை நகரத்தை” சுற்றி வருகிறது.அந்நகரின் பெரும் மாயையை கருதப்படும் “கண்ணாடிகார தெரு” வை பற்றிய வர்ணனைகளோடு தொடங்குகிறது கதை.ஒரே போன்ற அமைப்பு கொண்ட வீடுகளை எதிரெதிரே கொண்ட அவ்வீதியில் யார் நுழைந்தாலும் அவர்கள் வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் அவர்களின் வயதி இருமடங்காகும் எனவும்,அவ்வீதியில் வசிப்போர் யாவும் மாய உலகத்தார் எனவும் உலவும் செய்திகளால் ஏழு தலை நகர மக்கள் அதனுள் செல்ல பீதியுற்றுள்ளனர்.

நாவலின் நாயகன் அசிதன் சாகசம் புரியும் சிறுவனாக காட்ட படாமல் சராசரி சிறுவர்களை போல நட்சத்திரங்களோடும்,பறவைகளோடும் பேசி மகிழ்ந்து பாடத்தை வெறுப்பவனாக வருகிறான்..பல்வேறு இன பறவைகளை சேகரித்து வைக்கும் அசிதனின் தாத்தாவிடம் மானீ என்னும் அறிய வகை புத்திசாலி பேசும் பறவை கிடைக்கின்றது.அசிதனுக்கு உற்ற நண்பனாய் விளங்கும் மானீ பேசும் பாங்கு சிரிப்பை வரவழைக்க கூடியது..மானீயோடு அசிதனுக்கு கிடைக்கும் மற்றொரு நண்பன் அவ்வீட்டில் உலாவரும் எலி.

கண்ணாடிகார தெருவில் இருந்த வெளிவரும் சிறகு முளைத்த சிறுவன் “பிகா” மாநீயோடும் அசிதனோடும் நட்பு கொண்டு தினமும் இரவில் அவர்களை பார்க்க வருகிறான்,அவீதியை சேர்ந்த ஒருவை கண்ட மகிழ்ச்சியில் அசிதன் எப்படியாவது அதனுள் செல்ல பெரு விருப்பம் கொள்கிறான்.இந்நிலையில் இரும்பு மனிதன் ஒருவனால் நெடிய மரம் ஒன்றில் சிறை வைக்கப்படும் பிகாவை கதை சொல்லிகள் மூவரின் துணை கொண்டு அசிதன் காப்பாற்றுவதோடு கதை முடிகிறது.கதை நிகழும் காலத்தை கதையோடு பொருத்திப்பார்க்க முடியவில்லை மேலும் கதையின் முடிவு குழப்பமுற்றதாய் உள்ளது.இவ்விரு குறைகளை நீக்கிப்பார்த்தால் இது சந்தேகம் இல்லாமல் சிறுவர்களை மகிழ்விக்கும் மாயாஜால நாவலே.

நகரும் ரயில்வே பிளாட்பாரம்,பேசும் நூலகம்,விசித்திர கதைகள் சொல்லும் கதைசொல்லிகள்,அவர்களின் பேசும் மீன்,குரங்கு,மானியின் பார்வையில் நடக்கும் நட்சத்திர குள்ளர்களுக்கும் வான் விலங்குகளுக்கும் நடைபெறும் போர்,பெரும் பழம் கொண்ட இரும்பு மனிதன்,தினமும் ஒரு வண்ணம் பெரும் எழுதலை நகரத்தின் தெருக்கள்,கேள்வி கேட்கும் மஞ்சள் நாய் என திகட்ட திகட்ட மாயாஜாலங்களுக்கு குறைவின்றி வந்துள்ள இந்நாவல் குழந்தைகள் படித்து கற்பனை செய்து மகிழ ஏற்றது.

http://www.sramakrishnan.com/?p=3871

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.