Jump to content

எனது சிறு பயணமொன்று..... லிடோ டி ஜேசலோ(இத்தாலி)


Athavan CH

Recommended Posts

இது ஒன்றும் பயண அனுபவமோ அல்லது பயணக் கட்டுரையோ அல்ல, இப்படி ஒரு இடம் இருக்கிறது இங்கு போய் வந்தேன் என உங்களுக்குச் சொல்வது தான் நோக்கம் .

map.png


இம்முறை வசந்த கால விடுமுறைக்கு இத்தாலியின் கடற்கரை நகரங்களில் ஒன்றான ஜேசலோவிற்கு ஒர் ஐந்து நாள் பயணம் போய் வந்தோம். பயணத்திற்கான நோக்கம் பெரிதாக ஒன்றுமில்லை வீடு , வேலை, மன அழுத்தங்கள் எல்லாவற்றையும் மறந்து சில நாட் கள் ஒய்வெடுப்பது தான் நோக்கம்.எனது வேலை இடத்து நண்பன் ஒருவர் ஐந்தாறு தடவைகள் ஜேசலோவிற்கு சென்று வந்தது ஜேசலோவினை தெரிவு செய்தமைக்கான காரணமாக இருந்தது அத்துடன் எனது வீட்டிலிருந்து 600 km தூரத்திலிருந்ததும் ஒரு காரணம்

எமது  வீட்டிலிருந்து காரில் பயணம் 600km தூரம் ஏறத்தாள 7 மணித்தியாலப் பயண நேரம். சிறுவர்களுடன் பயணம், கடைசி மகளுக்கு 1 வயது, எப்படியும் பால் குடுக்க , பம்பர்ஸ் (நப்பி) மாற்ற என இரண்டு மூன்று தரிப்புகள் எடுக்க வேண்டி வரும், போக்குவரத்து நெரிசலும் ஒரு பெரிய பிரச்சனையாக வாய்ப்பு உள்ளது. எனவே பயண நேரம் 9 மணி நேரமாக இருக்கும் எனத் திட்டமிட்டு காலை 4 மணிக்கு புறப்படுவதாகத் திட்டமிட்டோம், பயணத்திற்கு முதல் நாள் காருக்கு ஓயில், தண்ணீர், ரயரின் காற்றழுத்தம் எல்லாம் சரி பார்த்துக்கொண்டேன் . இத்தாலி யில்  பெருந்தெருக்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டும் பணமாகச் செலுத்தலாம், ஆனால் விடுமுறை காலங்களில் நீண்ட வரிசையில்  நிற்க வேண்டி வரும் என எனது வேலைத்தள இத்தாலி நண்பன் எச்சரிக்க ,கார்ட்டில் செலுத்த முடிவெடுத்தேன்,  எல்லா இடங்களிலும் கடனட்டை பாவிக்க விருப்ப மில்லாததால் . இங்கே TCS  இல்  இத்தாலி பெருந்தெருக்களுக்கு கட்டணம் செலுத்த வியாகாட்(VIA CARD) என ஒன்று விற்பதாக அறிந்து 50 யூரோவிற்கு ஒரு வியாகாட் வாங்கிக் கொண்டேன்.

திட்ட மிட்ட படியே காலை 4 மனிக்கு புறப்படக்கூடியதாக இருந்தது மனைவி தான் பாவம் அதிக வேலைச் சுமை நான் 11.00 மணிக்குப் படுக்கச் செல்ல , அவர் தான் கடைசி நேர ஒழுங்குகளை யெல்லாம் பூர்த்தி செய்து 12.00மணிக்குப் படுத்து 2.30  மணிக்கு எழும்பி பிரசாக பானெல்லம் அவனில் போட்டு தேனீர் போட்டு என்னை 3.15 க்கு எழுப்ப  நான் குளித்து  தேனீர் குடித்து பான் எல்லாம் ஒரு கட்டு கட்டி மனைவியுடன் சேர்த்து பிள்ளைகளிருவரையும் தயார் படுத்தி காரில் ஏற 4.15 ஆகியது

கார் புறப்பட  இரண்டு திட்டங்கள்  மனதில் ஓடியது   சுவிசின் டொச்  மொழி மாநிலங்களையும் சுவிசின் இத்தாலி  மொழி மாநிலமான டிச்சினோ (Ticino ) வையும் பிரிக்கும் அல்ப்ஸ் மலைகுகையான 17 Km நீளமான "கொட்டார்ட்"  குகையையும் ,  சுவிஸ் - இத்தாலி போடரினையும் எந்தவித போக்குவரத்து நெரிசலும் இல்லாமல் கடப்பது , என்பதே அது

மனைவியும் இரு  பிள்ளைகளும் காரில் பின்னாலேயே இருக்க நான் தனியே முன்னே . மனைவியும் , கடைசி மகளும் கார் புறப்பட்டு 10 நிமிடத்திலேயே நித்திரைக்குச் செல்ல  மூத்த மகள் என்னுடன் கதைத்துக் கொண்டே வந்தா. அவருடன் கதைத்துக்கொண்டே  காரும் சுவிஸ் கிராமங்களை மெல்லிருட்டில் கடந்து கொண்டிருந்தது..., நேரமும் 5.00 மனியை நெருங்க சூரிய கதிர்களும் வெளியே கசியத்தொடங்கின சற்றே காரின் வேகத்தைக் கூட்டி ஹைவேயைத் தொட்டு "கொட்டார்ட்"  குகையை நெருங்க டிரபிக்கும் கூடியிருந்தது .

55300225_588x368_web.jpg

கொட்டார்ட் குகை  17 km நீளமானது தரையிலுள்ள வாகனப்போக்குவரத்திற்கான குகைகளில் உலகிலேயே நான்காவது நீளமானது (முதலாவது நீளமான குகை(24.5 km) நோர்வேயிலுள்ளது) கொட்டார்ட் குகை யினுள் இரு வழிப் பாதை மாத்திரமே உள்ளது போக ஒன்று வர ஒன்று , ஹைவே யில் இரண்டு ட்ரெக்கில் வரும் வாகனங்கள் குகைக்கு வெளியே நிறுத்தப்பட்டு ஒரு ட்ரெக்கினூடகவே உள்ளே அனுமதிக்கப்படும் இதனால் குகைக்கு வெளியே ட்ரபிக் அதிகமாகும் விடுமுறை கால மென்றால் சொல்லத் தேவையில்லை

0.45534700_1464853261.jpg?itok=MGjJwuVl

கொட்டார்ட் குகை

எவ்வளவு முயற்சி செய்தும் ட்ரபிக்கில் மாட்ட வேண்டி வந்து விட்டது .  மெதுவாக உருண்டு கொண்டிருந்த கார்  இப்போது  நிற்க வேண்டி வந்து விட்டது. வீட்டிலிருந்து புறப்பட்டதுக்கு  2 மணித்தியாலம் கழித்து முதன் முதலில் கார் நிற்கிறது. மெதுவாக காரின் முன் பக்க ஜன்னல்கள் இரண்டையும் திறக்கின்றேன் அல்ப்ஸ் மலைகளினூடே தவழ்ந்து வந்த மெல்லிளங் குளிர் காற்றலைகள் என் முகத்தில் அறைந்து களைப்பை அள்ளிச் செல்கின்றன....,

அதிக நேரம் எடுக்கவில்லை ஒரு அரை மணித்தியாலமே டிரபிக்கில் நிற்க வேண்டி வந்தது. ... இப்போது மெதுவாக ஊரத் தொடங்கிய கார் வேகம் பிடித்து 80 km/h இல் "கொட்டார்ட்"  குகையினுள் நுழைகிறது இனி 17  km  தூரத்திற்கு குகை தான்.... குகையின் அரைவாசித் தூரம் கடந்ததும் சுவிஸ் சின் டொச் மொழி மாநில எல்லை முடிந்து சுவிஸ் இத்தாலி மொழி மாநில எல்லை வரவேற்கிறது.... குகை முடிந்து சிறிதுதூரம் செல்ல 80 km/h வேக எல்லை முடிய , காரும் சுவிஸ் ஹைவேயின் அதி கூடிய வேக மான 120 km/h இனைத்தொடுகிறது..  இடையில் ஒர் ஹைவே எரிபொருள் நிலையம் தென்பட  ஒரு எஸ்பிரசோ குடித்தால் நல்லா இருக்குமென மனம் நினைக்க ...., சுவிஸ் எல்லையை விரைவில் கடக்க வேண்டும் என்ற நிலையில்  அடுத்த 100 km இனையும் நிற்காமல் ஓடுவதென முடிவெடுத்து நான் வேகம் பிடிக்க மற்றய பெரும்பாலான கார்கள் வேகம் குறைத்து ட்ரக் மாற்றி ரெஸ்டுரன்டை நோக்கி நகர்ந்தன.... ,அவை பெரும் பாலும் ஜேர்மனி,நெதர்லாந்து, பெல்ஜியம் கார்களாகவே காணப்பட்டன.....,  அவர்கள் சில வேளை அதிகாலை ஒருமணி, இரன்டு மணிக்கு வெளிக்கிட்டிருப்பார்கள் அவர்களுக்கு ஒரு பிரேக் தேவைப் பட்டிருக்கும்,

இப்போது காலை சூரிய வெளிச்சம் நன்கு பரவியிருக்க சுவிஸ் நாட்டின் ஒரெயொரு இத்தாலி மொழி பேசும் மாநிலமான டிச்சினோ இதமாக சூரியக்குளியல் செய்து கொண்டிருந்தது  ஹைவேயில் அதிகளவில் வாகனங்கள் காணப்பட்டாலும் எல்லா வாகனங்களும் 120 km/h இலேயே போய்கொண்டிருந்தன இது மிகவும் ரசிக்கக் கூடியதாக இருந்தது.  சுவிசிலுள்ள ஹைவே களில் டிச்சினோவிலுள்ள இந்த A2 ஹைவேயும் நல்ல அழகானது இரண்டு பக்கமும் கம்பீரமாய் நிற்கும் அல்ப்ஸ் மலைகளினூடு பயணிப்பது ஒரு இனிமையான அனுபவம்

switzerland-2584423_960_720.jpg

 

Autobahn A2, Valle Leventina

 

மகளுக்கும் நான் இடையிடேயே டிச்சினோ மாநிலத்தைப் பற்றிக் கூறிக்கொண்டே வந்தேன். இடையிடயே விழித்த மனைவி இப்போது நன்கு விழித்தெழுந்து தனது கால்களை hand break க்கு மேலால் முன்னால் நீட்டி லாவகமாக இருந்து கொண்டு இயற்கையை ரசித்துக் கொண்டே சிறிது சிறிதாக செய்து கொண்டு வந்த சான்ட் விச்சுகளை பரிமாறினா எனக்கும் பசி யெடுக்க ஒவ்வொரு வாய்க்கும்  ஒவ்வொரு சான்ட் விச்சுகளை அனுப்பி கொண்டிருந்தேன் ,

டிச்சினோ மாநில தலை நகரான பெலின்சோனா வினை கார் கடந்து சென்று கொண்டிருந்தது காலைக் கதிரவனின் கதகதப்பில் பெலின்சோனா பள்ளத்தாக்கு பளபளத்துக் கொண்டிருந்தது. அதனழகு என்னை வசியம் செய்து இடம் கிடைத்தால் காரை ஒரம் கட்டி சில நிமிடம் நின்று ரசிக்கச் சொன்னது ஆனால் ஹைவேயில் அதற்கான இடமும் இல்லை , எனக்கு நேரமும் இல்லை மனம் ரசனையில் இருக்க காரின் வேகமும் இயல்பாகக் குறைய வீதியும் சற்று ஏற்றமாக ஏறிக்கொண்டே போக  PS குறைந்த எனது கார் சற்று சிரமப்பட கியரை 4க்கு மாற்றி முடியாமல் போக 3 க்கு மாற்றி வேகம் எடுத்து  டிச்சினோ மாநிலத்தின் பெரிய நகரான அழகிய லுகானோவைக் கடந்து கொண்டிருந்தது சுவிசில் எனக்குப் பிடித்த நகரம் எது எனக் கேட்டால் லுகானோ எனத்தான் சொல்வேன் அவ்வளவு ரம்மியமானது அது .

1280px-Castelgrande_Bellinzona.JPG

பெலின்சோனா (Bellinzona)

switzerland-2361939_960_720.jpg

 

01-006-lugano-inverno_crop01.jpg

லுகானோ(Lugano)

இப்போது கார் சுவிசின் எல்லைப்பபுர நகரான கியாசசோவினை அடைந்திருந்தது.பெரிதாக வாகன நெரிசல் இருக்கவில்லை  கஸ்டம்சினூடாக 20 km/h  கார் ஊர்ந்து கொண்டிருந்தது , கியாசோ   கஸ்டம் அதிகாரிகளும் பொலிசும் கொஞ்சம் கடுமையானவர்கள் மோசமான இத்தாலி மாபியாக்களை கையாள்பவர்கள், மற்றும் எல்லை கடக்கும் சட்டவிரோத குடியேறிகளையும் சமாளிப்பவர்கள்...., ஆனால் என்னை போகச் சொல்லி கையசைத்தார்கள் கூடவே மகளுக்கும் கையசைத்து bye சொன்னார்கள் ,
மிகவும் மகிழ்ச்சியாகவே சுவிசுக்கு ஒரு bye சொல்லி இத்தாலிக்குள் நுழைந்தோம் ....., பெரிதாக வாகன நெரிசலுக்குள் சிக்காமல் வந்தது மிகப்பெரிய நிம்மதியாக இருந்தது 5 நிமிட ஓட்டத்தில் இத்தாலியின் கோமோ பிரதேசத்தில் முதலாவது எரிபொருள் நிலையம் மற்றும் ரெஸ்டுரன்ட்  வர எனது காரும் அதனை நோக்கி சென்றது.... உள்ளே போனால் கார் விட இடமில்லை எல்லாம் நிறைந்து வழிந்தது பல கார்கள் தரிப்பிடம் தேடி அலைந்து கொண்டிருக்க ஒரு ஜேர்மன் இலக்கமுடைய BMW  இன் பின்னே வெள்ளை லைட் தெரிய என் முகத்திலும் லைட் எரிய இப்போது எனது கார் அந்த இடத்தில், காரை அணைத்து,  hand break ஐ இழுத்து , நான் கீழிறங்க எனது குட்டி மகளும் கண் விழிக்க எல்லாம் நலமே ....., 

கடைசி மகளையும் Bagஐயும்நான் தூக்க மனைவி  பெரிய மகளை அணைத்த படி ரெஸ்டுரன்டினுள் நுழைய உள்ளே ஒரே சனக்கூட்டமும், கபே கப்புகளின் சத்தமும் பணியாளர்களின் இத்தாலி மொழி உரையாடலும் மனதுக்கு ஒரு வித கிளர்ச்சியைக் கொடுத்தது.... பாத்ரூம் சென்று முகத்தில் குளிர் தண்ணீரை அடித்து தலைக்கும் கொஞ்சம் தேய்த்து வெளியே வந்து சில வினாடி காத்திருக்க  மனைவியும் பிள்ளைகளை கூட்டிச் சென்று பம்பர்ஸ் எல்லாம் மாற்றி வந்தார். காரினுள் சாப்பிட்டதால் பெரிதாக பசி இல்லை ஏதாவது குடிப்போம் என முடிவெடுக்க , இல்லை பிள்ளைக்கு முதலில் பால் குடுக்க வேண்டும் என மனைவி சொன்னா(அது தான் தாயுள்ளம் ) நீங்களும் பெரிய மகளும் ஏதாவது குடியுங்கோ நான் பால் குடுத்திட்டு வாறன் என அவா சொல்ல பால் போத்தலினுள் பால் கரைத்தால் ,பால் சூடு ஆற கொஞ்சம் நேரம் எடுக்கும் போல இருக்கவே நான் நேரம் போகிறது என மனைவியை அவசரப்படுத்த நாம் எல்லாரும் கோபி குடிக்க முடிவெடுத்து ஒரு லத்தே மக்கியாத்தோவும் (எனக்கு), இரண்டு ஓவல் மாட்டினும்  வாங்கி குடித்து முடிக்கவும் .சிறிய மகளின் போச்சி பால் ஆறவும் சரியாக இருந்தது.  நான் காரில் போய் மகளுக்கு பால் குடுக்கிறேன் நீங்கள் இருவரும் ஒரு 10நிமிடம் கழித்து வாங்கோ எனக்கூறி விட்டு மனைவி சிறிய மகளுடன் சென்று விட்டா, நான் மீண்டும் ஒரு எஸ்பிரசோ வினை வாங்கிக் குடித்து விட்டு செல்ல ,  மகளும் பால்குடித்து ரெடியாக இருந்தா அவாவைத்தூக்கி முதுகில் மேல்நோக்கி சில தடவைகள் தடவி ஏவறை (birth) எடுக்கச் செய்து maxi cosi  இனுள் இருத்தி பெல்ட் போட்டு விட்டு , பின்னால் சென்று காரைத்திறந்து எனது bag இனுள் ரீசேட் ஒன்றை எடுத்து மாற்றிக் கொண்டேன், இப்போது புத்துணர்வு   இன்னம் கொஞ்சம் கூடியிருந்தது .

நான் காரை ஸ்டார்ட் செய்து பின்னோக்கி நகர்த்தி திருப்பவம் இன்னுமொருவர் முகமெல்லாம் பல்லாகா எனது இடத்தில் கொண்டு வந்து தனது காரை விட்டு எனக்கு நன்றி சொன்னார் ( பாவம் அதிக நேரம் இடம் தேடி அலைந்திருப்பார் போலும்) ரெஸ்டுரன்டின் அருகிலேயே இருந்த எரிபொருள் நிலையத்தினுள் ஒரு புல் டாங் பெற்றோல் அடித்து விட்டு , காரை இத்தாலி ஹைவேயில் ஏற்றுகின்றேன் , மனதிற்குள் பயணத்திட்டம் ஓடுகிறது இனி மிலானோ( Milan ) நோக்கிச் சென்று அங்கிருந்து வெனிஸ் (Venice) நகரை நோக்கிச் செல்லும் ஹைவே யினுள் ஏறி ஜேசலோ exit எடுக்க வேண்டும் மிலானோ ஒரு 50km  , அங்கால ஒரு 300 km ஒடினால் போதும்...

கிடைக்கும் நேரத்தினைப் பொறுத்து மிகுதியை தொடர்கிறேன்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள்....ஆதவன்..!

வாசிக்க மிகவும் நன்றாக உள்ளது!

துணைவியாரை பின் சீட்டுக்கு அனுப்பி விட்டுக்...காரோட்டியது தான் எனக்கு மிகவும் பிடித்த பகுதி!

அதனுள்....மிகப்பெரிய 'இராசதந்திரம்' புதைந்திருக்கின்றது என்பது இதை வாசிக்கும் பலருக்கும் ...உடனே புரியாது என்று நினைக்கிறேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுரையாளர் தனது பயணத்தை விபரிக்க விதம்.....  கட்டுரையை  சோர்வு இல்லாமல் வாசிக்கத்  தூண்டுகின்றது.
பகிர்விற்கு... நன்றி ஆதவன்.

Link to comment
Share on other sites

ஐரோப்பாவின் அழகை சில வேளைகளில் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.ஆதவன் முயற்சி செய்துள்ளார். தொடருங்கள். வாசிக்கும் ஆவலை தூண்டியுள்ளீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பயணக் கட்டுரையின் ஆரம்பமே அசத்தலாக இருக்கு ஆதவன், படங்களும் பிரமாதம் தொடருங்கள்......!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, புங்கையூரன் said:

தொடருங்கள்....ஆதவன்..!

வாசிக்க மிகவும் நன்றாக உள்ளது!

துணைவியாரை பின் சீட்டுக்கு அனுப்பி விட்டுக்...காரோட்டியது தான் எனக்கு மிகவும் பிடித்த பகுதி!

அதனுள்....மிகப்பெரிய 'இராசதந்திரம்' புதைந்திருக்கின்றது என்பது இதை வாசிக்கும் பலருக்கும் ...உடனே புரியாது என்று நினைக்கிறேன்!

நான் நேர்மாறு மனிசி பக்கத்தில இருக்கோணும்., நித்திரைச்சாமிக்கு வேறு தெரிவில்லை:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ் மிகவும் பெரிய தேசம், நந்தன்!

சிட்னியிலிருந்து மெல்பேனுக்கோ...அல்லது பிரிஸ்பனுக்கோ போறதெண்டால்...சராசரி...ஆயிரம் கிலோமீட்டர் வரையும் ஓட வேணும்! அனேகமாக குறைந்த அளவு..வேகம்...110 கிலோ மீற்றர் என்றாலும்...நூற்றி இருபது..அல்லது நூற்றி இருபத்தைந்தில் ஓடினால் தான் நேர காலத்துக்குப் போய்ச் சேரலாம்!

பக்கத்தில இருந்தால் ...ஸ்பீடோ மீட்டரைப் பாத்த படியே ...அப்பா...அப்பா...எண்டு ஒரே அலுப்பு!

அவை சொல்லுற வேகத்தில ஓடினால்...பின்னால வாறவன் எங்கட காருக்கு மேலால ...ஏறிப் போயிருவான்!

அது தான்...சனத்தைப் பின் சீற்றில விடுகிற ....இராச தந்திரம்!

நம்மிட்டக் கார் பழகினதுகள்...நமக்கே படிப்பிக்க வெளிக்கிட்டால்...பொல்லாத விசர் தா வரும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடரட்டும் ஆதவன் அட சின்ன வயசுக்காரராயா நீங்கள்  ஹாஹா:unsure:

14 hours ago, நந்தன் said:

நான் நேர்மாறு மனிசி பக்கத்தில இருக்கோணும்., நித்திரைச்சாமிக்கு வேறு தெரிவில்லை:grin:

இந்தாழுக்கு வேற பிரச்சினை  இருக்கு  ஆளை அனுப்புங்கய்யா அந்தப்பக்கம்  எப்ப பாரு:10_wink: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆதவனின் பயணக் கட்டுரை அருமையாக உள்ளது. படங்களும் மிக அழகு. தொடருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 25.9.2017 at 5:04 AM, புங்கையூரன் said:

தொடருங்கள்....ஆதவன்..!

வாசிக்க மிகவும் நன்றாக உள்ளது!

துணைவியாரை பின் சீட்டுக்கு அனுப்பி விட்டுக்...காரோட்டியது தான் எனக்கு மிகவும் பிடித்த பகுதி!

அதனுள்....மிகப்பெரிய 'இராசதந்திரம்' புதைந்திருக்கின்றது என்பது இதை வாசிக்கும் பலருக்கும் ...உடனே புரியாது என்று நினைக்கிறேன்!

அதையேன் பேசுவான்!!!! இவையளை முன் சீற்றிலை இருந்தினமெண்டால் கிட்டத்தட்ட ஒரு பொலிஸ்காரனை பக்கத்திலை இருத்தினதுக்கு சமம்.

கையாலை ஸ்ரேறிங் பிடிக்கிறது மட்டும் நான்.....மற்றும்படி வாயாலை கிளச் அமத்துறது....கியர் போடுறது....பிரேக் பிடிக்கிறது எல்லாம் அவையள்தான்.......சில நேரத்திலை திடீரெண்டு தேவையில்லாமல் அப்பா எண்டு கத்துவினம்......அந்தநேரத்திலை நாங்கள் சடண் பிரேக் போடாமல் நிதானமாய் ஓடணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/09/2017 at 9:14 AM, புங்கையூரன் said:

அவுஸ் மிகவும் பெரிய தேசம், நந்தன்!

சிட்னியிலிருந்து மெல்பேனுக்கோ...அல்லது பிரிஸ்பனுக்கோ போறதெண்டால்...சராசரி...ஆயிரம் கிலோமீட்டர் வரையும் ஓட வேணும்! அனேகமாக குறைந்த அளவு..வேகம்...110 கிலோ மீற்றர் என்றாலும்...நூற்றி இருபது..அல்லது நூற்றி இருபத்தைந்தில் ஓடினால் தான் நேர காலத்துக்குப் போய்ச் சேரலாம்!

பக்கத்தில இருந்தால் ...ஸ்பீடோ மீட்டரைப் பாத்த படியே ...அப்பா...அப்பா...எண்டு ஒரே அலுப்பு!

அவை சொல்லுற வேகத்தில ஓடினால்...பின்னால வாறவன் எங்கட காருக்கு மேலால ...ஏறிப் போயிருவான்!

அது தான்...சனத்தைப் பின் சீற்றில விடுகிற ....இராச தந்திரம்!

நம்மிட்டக் கார் பழகினதுகள்...நமக்கே படிப்பிக்க வெளிக்கிட்டால்...பொல்லாத விசர் தா வரும்!

 

On 27/09/2017 at 10:34 AM, குமாரசாமி said:

அதையேன் பேசுவான்!!!! இவையளை முன் சீற்றிலை இருந்தினமெண்டால் கிட்டத்தட்ட ஒரு பொலிஸ்காரனை பக்கத்திலை இருத்தினதுக்கு சமம்.

கையாலை ஸ்ரேறிங் பிடிக்கிறது மட்டும் நான்.....மற்றும்படி வாயாலை கிளச் அமத்துறது....கியர் போடுறது....பிரேக் பிடிக்கிறது எல்லாம் அவையள்தான்.......சில நேரத்திலை திடீரெண்டு தேவையில்லாமல் அப்பா எண்டு கத்துவினம்......அந்தநேரத்திலை நாங்கள் சடண் பிரேக் போடாமல் நிதானமாய் ஓடணும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆதவன் நீங்கள் மட்டுமல்ல நாங்களும் உங:களுடன் சேர்ந்து பயணம் செய்த மாதிரியே இருக்கிறது.

அது சரி வாகனத்தை ஓட்டிக் கொண்டு எப்படி படங்கள் எடுத்தீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/25/2017 at 2:10 AM, Athavan CH said:

55300225_588x368_web.jpg

கொட்டார்ட் குகை  17 km நீளமானது தரையிலுள்ள வாகனப்போக்குவரத்திற்கான குகைகளில் உலகிலேயே நான்காவது நீளமானது (முதலாவது நீளமான குகை(24.5 km) நோர்வேயிலுள்ளது) கொட்டார்ட் குகை யினுள் இரு வழிப் பாதை மாத்திரமே உள்ளது போக ஒன்று வர ஒன்று , ஹைவே யில் இரண்டு ட்ரெக்கில் வரும் வாகனங்கள் குகைக்கு வெளியே நிறுத்தப்பட்டு ஒரு ட்ரெக்கினூடகவே உள்ளே அனுமதிக்கப்படும் இதனால் குகைக்கு வெளியே ட்ரபிக் அதிகமாகும் விடுமுறை கால மென்றால் சொல்லத் தேவையில்லை

0.45534700_1464853261.jpg?itok=MGjJwuVl

கொட்டார்ட் குகை

 

இயற்கைக்கு சவாலான உயரமான மலைகளைக் குடைந்து, இந்தக் குகை அமைந்தவிதம் பற்றி சில தடவை யூ டுயூபில் பார்த்து ரசித்துள்ளேன்..

பல தொழிற்நுட்ப பணியாளர்களின் கடின உழைப்பால் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.. அவர்களுக்கு பாராட்டுக்கள்.. !

you-did-it-congratulations.png?w=820&h=3

On 9/25/2017 at 2:10 AM, Athavan CH said:

 

Autobahn A2, Valle Leventina

 

1280px-Castelgrande_Bellinzona.JPG

 

01-006-lugano-inverno_crop01.jpg

மிக ரம்மியமான, மனதை கொள்ளை கொள்ளும் அழகு..! படங்களுக்கு நன்றி..!!

ஒரு திரைப்படத்தின் சுவாரசியத்தை முதல் பத்து நிமிடங்களிலேயே கணித்து விடலாம்.. நமது மனதிலும் முத்திரை பதித்துவிடும்..

படங்களின் அழகிற்கு இணையாக ஆதவனின் திறமையான எழுத்து நடையும் கட்டுரையை தொடர்ந்து வாசிக்க எதிர்பார்ப்பை தூண்டுகிறது..

 

Link to comment
Share on other sites

இத்தாலி ஹைவேகள் 3 ட்ரக்குகளைக் கொண்டது அதி கூடிய வேகம் 130 km/h, சுவிஸ் ஹைவேகளைப் போலவே இங்கும் பல நாட்டுக் கார்களைக் காண்கிறேன் ஜேர்மன், பிரான்ஸ், மெல்ஜியம், நெதர்லாந்து, போலந்து .... ஏன் டென்மார்க், நோர்வே கார்களையும் காணக்கூடியதாக உள்ளது, சுவிசை விடக் கொஞ்சம் வித்தியாசமாக அதிகளவில் GB கார்களைக் காண்கிறேன்

இத்தாலி ஒரு அழகான நாடு, அதிகளவு சுற்றுலா பயணிகள் செல்லும் நாடுகள் வரிசையில் ஐரோப்பாவில் பிரான்ஸ், ஸ்பயினுக்கு அடுத்ததாக மூன்றாவது இடத்தில் வரும் நாடு. உலகின் முன்னனி உணவுக் கலாச்சாரத்தைக் கொண்டது இத்தாலியின் மிலான், ரோம் போன்ற நகரங்கள் உலகின் ஆடை அலங்கார( fashion world) வரைபடத்தில் தவிர்க்க முடியாத நகரங்கள், சிறந்த இயந்திர தொழில் நுட்ப ஆற்றல் கொண்ட நாடு உலகப் புகழ் பெற்ற பராரி(ferrari), லம்போர்கினி (lamborghini) போன்ற கார்களினதும், டுகாட்டி (ducati) ,ஜிலேரா(gilera) போன்ற மோட்டார் சயிக்கிள்களினதும் தாயகம் மற்றும் பல தொழிற்சாலை இயந்திரங்களை உற்பத்தி செய்யும் நாடு எனினும் ஊழல் ஆட்சிகளாலும், ஒழுங்கற்ற திட்டங்களினாலும் சரிவைச் சந்திக்கும் நாடு

800px-Autostrada_A7_Italia_01.jpg

இத்தாலி ஹைவே

சிறிது தூரம் ஹைவேயில் செல்ல கட்டணம் செலுத்துமிடம் வருகிறது....... எதிர்பார்த்த படியே கூட்டம் கும்மி யடிக்க சிறிது தாமதத்தின் பின்னர்  கட்டணம் கட்டி வெளியேறுகிறேன், மிலானோவை அண்மித்ததும் மீண்டும் ஒர்முறை கட்டணம் கட்டுகிறேன். இப்போது மிலானோபிரதேசத்தில் , மிலானோ இத்தாலியின் இரண்டாவது பெரிய நகரம் இத்தாலியின் வர்த்தக தலை நகரம். அழகிய மிலான் டொமோ பேராலயம் உள்ளது,  சொப்பிங் போகலாம் மற்றபடி பார்க்க பெரிதாக இடங்கள் இல்லை என நினைக்கிறேன்.

milan-6.jpg

மிலான் டொமோ பேராலயம் (Milan Cathedral , Mailänder Dom )

(படம்:cheapflightslab.com/direct-return-flights-from-new-york-to-milan-italy)

இத்தாலியில் கணிசமான இலங்கையர்கள் வசிக்கிறார்கள் பெரும் பாலும் சிங்களவர்கள்.  மிலானோ , ரோம், ஜெனோவா, நாப்போலி , பலோர்மோ என பரவலாக இலங்கையர் வாழ்கிறார்கள் பெரும் பாலும் சிங்களவர்கள் அதிலும் பலர் நீர் கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் , இதனால் தான் நீர்கொழும்பை குட்டி இத்தாலி  என அழைக்கின்றனர் போலும். இத்தாலியில் உள்ள தமிழர்கள் பெரும்பாலும் அதிக தூரத்திலுள்ள சிசிலியா தீவினுள் (பலோர்மோ நகரை அண்டி) போய் அடைந்து விட்டார்கள் என்ன காரணம் எனத் தெரியவில்லை.

515000_Italien.jpg

இப்போது ஒரு சில  ஹைவே சந்திப்புக்கள் வர எனக்குரிய சரியான வெனேச்சியா நோக்கிய  ஹைவே யினை தேர்ந்தெடுக்க சற்று சிரமப்பட்டு , சில வளைவுகளில் கீழே போய் , பின்னர் மேலே வந்து ஒருவாறு மிலானோ ஹைவே நெரிசலில் இருந்து வெளியேறி வெனேச்சியாவுக்குரிய ஹைவேயினுள் வருகிறேன் இப்போது 3வது கட்டணத் தரிப்பிடத்தில் ரிக்கற் எடுக்கிறேன் . இனி ஒரு 250 க்குநொச்டொப் ஓட்டம் தான். ஜேசலோ exit எடுக்கும் போது ரிக்க்கெற்றை போட்டு காசு கட்டினால் போதும்.

இப்போது சூரியன் மெதுவாக தனது மென்நிலையிலிருந்து வன்நிலைக்கு மாறுகிறார், வெளிச்சம்  கூடிக்கொண்டு வர , வெப்பமும் மெதுவாகக் கூடுகிறது. இப்போது காரின் AC யும் வேலைசெய்யத் தொடங்க என் மூக்கின் மேல் குளிர் கண்ணாடியும் அமர்ந்து கொள்கிறது.  வீதியில் வாகனங்களும் அதிகரித்து காணப்படுகிறது பெருமளவில் wohnwagen (caravan)களும் காணப்படுகின்றன, இத்தாலி camping க்கும் ஒரு பெயர்போன இடம், ஜேசலோவில் மட்டும் 3000 பேருக்கு camping வசதியுள்ளதாக வாசித்தேன்.

இப்போது சற்றுத் தாகமெடுக்கவே

மனைவியிடம் orange juice கேட் கிறேன்,  மனைவி cool bag இலிருந்து பெட்டியெடுத்து அதில் ஒரு ஸ்ரோவினை வைத்து தருகிறா அமிர்தமாக இறங்குகிரது...., cool bag இனுள் வேறு என்ன இருக்கிறது என் கிறேன் , அப்பிளும், பியர்சும் வெட்டி box  இல் போட்டுள்ளேன் என்றார் அப்பிளைத் தாங்கோ என்றேன், cool bag இப்போது  free யாக இருந்த முன் சீட்டிற்கு இடம் மாறுகிறது, இதுக்குள்ள உங்களுக்கு தேவையானதெல்லாம் இருக்கிறது, சும்மா என்னை தொந்தரவு பண்ணாமல் எடுத்துச் சாப்பிடுங்கோ...., ok , good night என்று விட்டு duty க்கு போய் விட்டா , பாவம் அவர் இரவும் நித்திரை இல்லை, நித்திரை கொள்ளட்டும். மூத்த மகளும் நித்திரைக்கு போய்விட்டா அது தான் கொஞ்சம் கவலை , அவா விழித்திருந்தால் அப்பா, அப்பா என கனக்க கேள்விகள் கேட்டுக் கொண்டே வருவா எனக்கும் நேரம் போவது தெரியாது....., பாவம் பிள்ளை தூங்கட்டும் காலையில் வெளிக்கிட்டதிலிருந்து என்னுடன் கதைத்துக் கொண்டே வந்தவா......எல்லோரும் உறக்கதிற்கு செல்ல  இளையராஜாவை உதவிக்கு அழைக்கிறேன் இளையராஜா hits இசைத்தட்டு உள்ளே போக மீண்டும் உற்சாகம் பிறக்கிறது

இத்தாலி ஹைவே யில் உள்ள Autogrill ரெஸ்டுரண்ட்  பிரசித்தமானது , நல்ல இத்தாலி சாப்பாடுகளும், கபே களும் மிகவும் நல்லா இருக்கும் என நண்பன் சொல்லியிருந்தார் , எனக்கும் இந்த ஹைவே இல் stop எடுப்பது மிகவும் பிடிக்கும், விடுமுறைக் காலங்களில்  உள்ளே போனால்  பல்வேறு நாடுகளிலிருந்தும் உல்லாச பயணிகள் வருவார்கள்  சுறுசுறுப்பான ,மகிழ்ச்சியான மனிதர்களை காணலாம் அதுவே ஒரு புத்துணர்வைத் தரும் . இப்போது ஒரு பெரிய Autogrill ரெஸ்டுரண்ட் வந்தது உள்ளே போகும் ஐடியா இல்லை பின்னால் எல்லோரும் நித்திரை ,சிறிய மகளின் பால் நேரமும் இது இல்லை,  அவா எழும்பி அழும் போது பால் குடுக்க ஒருமுறை நிறுத்தினால் போதும் என மனதில் நினைத்துக் கொண்டே  வேகமெடுக்கிறேன்

italian-fast-food-autogrill-16.jpg

 

p01hvpfv.jpg

 

p01hvplc.jpg

 

p01hvp96.jpg

Autogrill ரெஸ்டுரண்டின் வெளிப்புற ,உட்புற தோற்றம் , (படம் : dalluva.com ,bbc.com/autos/story/20131001-road-food-italy)

சில ஹைவே சந்திப்புகளை கடந்து செல்கையில் சிறிய மகளின் முனகல் கேட்டு சிறிது நேரத்தில் அழுகையாக அது மாற்றங்காணவும் ஒரு சிறிய ஹைவே  ரெஸ்டுரண்ட் ஒன்று வரவும் சரியாக இருந்தது..... ஒரம் கட்டி உள்ளே போனால் கார் விட இடமில்லை ஒரு ஒரமாக காரை நிறுத்தி பாலைகரைத்து மகளுக்கு கொடுத்து விட்டு, மீண்டும் ஜேசலோ நோக்கி வேகமெடுத்தேன் ...... பின்னால் இருந்தவர்கள் மூவரும் மீண்டும் தமது கடமையைத் தொடர்ந்த்தார்கள்.

ஹைவேயின் இரு பக்கங்களும் பெரும்பாலும் சிறு நகரங்களும், குடியிருப்புக்களுமே காணப்பட்டன, டொஸ்கானா போல் ஒரு அழகிய இடம் வந்தால் எப்படியிருக்குமென மனம் எண்ணியது , டொஸ்கானா புளோரன்ஸை தலைநகராகக் கொண்ட இத்தாலியின் ஒரு பிராந்தியம் (Region)  மிகவும்  அழகான பிரதேசம் , இந்த பிரதேசத்திற்குள் தான் பிசா/பைசா சாய்ந்த கோபுரம் வருகிறது. உங்களுக்கு இயற்கை காட்சிகளை ரசிப்பதில் விருப்பம் இருந்தால் கூகிளில் Toskana (ஆங்கிலத்தில்Tuscany) எனக் கொடுத்து படங்களைப் பாருங்கள்.சிலிர்த்துப் போவீர்கள்.....!

Toskana

 

Tuscany-landscape.jpg

டொஸ்கானாவின் படங்கள் சில miriadna.com/preview/tuscany-landscape

குளிர் கண்ணாடியினூடாக இத்தாலியின் பெருந்தெரு கண்முன்னே விரிய .....இளையராஜாவின் இசயில்"தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல் கேட்டாலும் போதும்......" பாடல் உயிரை வருட....,  cool bag box இலிருந்து அப்பிள் ஒன்றைக் கடிக்கிறேன் gala அப்பிளின் வாசனை நாசித்துவாரங்களை தென்றலாய் வருட , அதன் சுவை அமிர்தமாக உள்ளிறங்க தெய்வீக ராகம் பாடலின் இடையிசை முடிந்து தழுவாத தேகம் ஒன்று தணியாத மோகம் கொண்டு.... என இளசின் இசை செவிப்பறைகளில் அருவியாய் பாய ஆகா அற்புதம் ஆனந்தம், பேரானந்தம் ,பரமானந்தம் , பரம பேரானந்தம் ........... போங்கப்பா வர்ணிக்கத் தெரியவில்லை.....,
இந்தப்பயணத்தின் போது இளையராஜாவின் பாடல்கள் தன்னை ஒரு படி மேலே என்னுள் நிலை நிறுத்தியது என்றால் மிகையாகாது.... ஆரம்பத்தில் நான் பெரிதாக இளையராஜா பாடல்களைக் கேட்பதில்லை , ஆங்கில pop music , fast music தமிழ் பாடல்கள் தான் எனது தேர்வு...., பிதாமகன் படத்தின் இளங்காற்று வீசுதே பாடல் மூலம் இளையராஜா படிப்படியாக என்னுள் ஊடுருவி முழுமையாகக் கட்டிப் போட்டுவிட்டார் இப்போது அவர் கட்டவிழ்த்து விட்டாலும் எனக்குப் போக விருப்பமில்லை அதனுள் கட்டுண்டு கிடக்கவே மனம் விரும்புகிறது ..... , இப்போதும் pop music பிடிக்கும் ஆனால் இளையராஜாவை ரொம்பப் பிடிக்கும்.... (யோவ் பயணக் கட்டுரையில் இளசு வைப் பற்றி எழுத வைக்காதையுங்கோ..... அதுக்குத்தான் களத்தில் சசிவர்ணம், இசை,ரகுநாதன்..... என பல ஜாம்பவான்கள் இருக்கினம் )

இப்போது ஹைவே சந்தி ஒன்று வர (Padua என நினைக்கிறேன்) , பல வாகனங்கள் பிரிந்து வெளியேற எனது பாதை சற்று வாகனங்கள் குறைந்து வெளிக்கிறது, பாடல்கள் தரும் உற்சாகத்தில் கண் முன்னே சற்று வெறுமையான ஹைவே .... மனமோ ஒடு மச்சி ஒடு......,  130 , 140 ஆகி 145 ஆகி 150 km/h ஆக..... வேண்டாம் கடந்த மாதம் தான் சுவிஸ் பொலிசுக்கு 250 பிராங் அழுதது (அது நான் கட்டிய இரண்டாவது 250 தண்டம்) நினைவுக்கு வரவே காலை மெதுவாக வெளியில் எடுக்கவும் , மனைவி பின்னாலிருந்து ஏனப்பா வீட்டில ஏதும் காசு அடிக்கிற மெசின் வைச்சிருக்கிறீங்களோ என குரலெழுப்பவும் சரியாக இருந்தது....

cool box இலிருந்த பொருட் களும் தீர்ந்து கொண்டு வர  GPS (navi) இல் போகவேண்டிய தூரமும் நன்கு குறைந்திருந்தது. ஜேசலோ exit இட் வர பணம் கட்டி ஹைவே யிலிருந்து வெளியேறுகிறேன். இப்போது பின் சீட்டும் கலகல எல்லோரும் விழித்து விடடனர் , இன்னும் ஒரு 25km கள்,  கிராமங்கள் ஊடாகப் பயணிக்கிறேன்  சில பழைய கட்டிடங்களைக் கடந்து செல்கிறேன் இப்போது ஒரு பெரிய camping பிரதேசம் வருகிறது, மிகவும் அழகாக இருக்கிறது , தூரத்தில் இரண்டு கட்டிடங்களின் நடுவே நீல நிறத்தில் கடல் மினுமினுக்க உள்ளூர உற்சாகம் தொற்றிக் கொள்கிறது . சில அழகான கட்டிடங்கள் கடந்து செல்கின்றன அவற்றில் ristorante, pizzeria கள் என போர்டுகள் தெரிகின்றன, மிகவும் புதிய பிரதேசம் ஒன்றில் நன்கு பழகிய ஒருவரைக் காண்பது போல lidl கடையின் விளம்பரம் கண்ணில் படுகிறது   (இவர்கள் ஒரு இடத்தையும் விட்டு வைக்க மாட்டார்கள் போல)

வீதியின் இரண்டு பக்கமும் பைன் மரங்கள் வரிசையாக வரவேற்க ஜேசலோவினுள் நுழைகிறோம்  அழகிய கடற்கரை நகரம் எமது வருகையைப் பதிவு செய்கிறது படிப் படியாக நெரிசல் கூடிக் கொண்டு போகும் வீதிகளினூடாகப் பயணித்து எமது Hotel  இருந்த தெருவை அடைகிறோம்.

கிடைக்கும் நேரத்தினைப் பொறுத்து மிகுதியை தொடர்கிறேன்.....

கருத்திட்ட கள உறவுகளுக்கும் , பச்சையிட்ட கள உறவுகளுக்கும் மிக்க மிக்க நன்றி உங்கள் ஊக்கம் தான் இதை எழுதத் தூண்டுகிறது, ஆனால் இப்படி நீளும் என நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்க வில்லை எழுத்தனுபவம் புதிது என்பதால்  editing இல் கனக்க பிரச்சனை.

(இந்த கட்டுரை அணைத்திலும் வந்த வர இருக்கின்ற படங்கள் அணைத்துமே நானெடுத்தவை அல்ல , எல்லாம் இணையத்தில் பெறப்பட்டவை)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Athavan CH said:

----குளிர் கண்ணாடியினூடாக இத்தாலியின் பெருந்தெரு கண்முன்னே விரிய .....இளையராஜாவின் இசயில்"தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல் கேட்டாலும் போதும்......" பாடல் உயிரை வருட....,  cool bag box இலிருந்து அப்பிள் ஒன்றைக் கடிக்கிறேன் gala அப்பிளின் வாசனை நாசித்துவாரங்களை தென்றலாய் வருட , அதன் சுவை அமிர்தமாக உள்ளிறங்க தெய்வீக ராகம் பாடலின் இடையிசை முடிந்து தழுவாத தேகம் ஒன்று தணியாத மோகம் கொண்டு.... என இளசின் இசை செவிப்பறைகளில் அருவியாய் பாய ஆகா அற்புதம் ஆனந்தம், பேரானந்தம் ,பரமானந்தம் , பரம பேரானந்தம் ........... போங்கப்பா வர்ணிக்கத் தெரியவில்லை.....

-----உங்கள் ஊக்கம் தான் இதை எழுதத் தூண்டுகிறது, ஆனால் இப்படி நீளும் என நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்க வில்லை எழுத்தனுபவம் புதிது என்பதால்  editing இல் கனக்க பிரச்சனை.

ஆதவன்... உங்களிடம்  நீண்ட கட்டுரையை, இவ்வளவு திறமையாக  எழுதும் ஆற்றலை கண்டு ஆச்சரியப்  பட்டு  போனேன்.:)
உங்கள் பயணக்  கட்டுரையில்... இடைச்செருகலாக,  போகும் போது நடந்த விடயங்களையும் நகைச் சுவையாக  குறிப்பிடுவது கட்டுரைக்கு மேலும் சிறப்பு சேர்க்கின்றது.
அதிலும்... அந்த போங்கப்பா.. என்ற செல்லச்  சிணுங்கல்..ஓகோ.. ரகம். :grin:
யாழ். களத்தில்  புதிய எழுத்தாளர் உருவாக்கி விட்டார்  என்பதை... உங்கள் கட்டுரையின் மூலம் நிரூபித்து விட்டீர்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாவ்.....நல்ல நகைச்சுவையாக எழுதிக் கொண்டு வருகின்றீர்கள் இயல்பு மாறாமல்.தொடருங்கள்......!  tw_blush:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

சற்று ஒடுக்கமான தெருவில் அருகே  ஒரு ஒரமாக காரை நிறுத்தி  இறங்குகின்றேன் தெரு கலகலக்கிறது, கும்பல் கும்பலாக மக்கள், கடற்கரை நோக்கிச் செல்பவர்களும், வருபவர்களும், நீச்சலுடையில் பெரிய பாக்() இனை தோளில் சுமந்த படி கன்னியரும், வித விதமான வடிவங்களில் காற்று மிதப்புகளுடன் ஒடித்திரியும் சிறுவர்களும், அவர்களைக் கட்டுப்படுத்தும் பெற்றோர்களின் குரலும் , குழந்தைகள் வண்டில்களுமாக தெருவே  உற்சாகமாக காட்சியளிக்க , எனது களைப்புகள் அணைத்தும் பறக்க என் மனமும் ஒரு  பொருத்தமான இடத்திற்குத் தான்  வந்திருப்பதாக எண்ணிக்கொள்கிறது....

இன் உள்ளே  செல்ல ரிசப்சனில் ஒரு உற்சாக வரவேற்பு தருகிறார்கள், அவர்களுக்குத் தெரியும் தமது விருந்தினர்கள் பெரும்பாலும் ஒரு நீண்ட கார் பயணத்தினூடே இங்கே வருவார்கள் என்று, எனது பெயரை உறுதிப்படுத்தி  உடனடியாக எனக்குரிய கார் பார்க் தருகிறார்கள் ,  தொடர்ந்து எமக்குரிய அறையில் எம்மைக் கூட்டிச் சென்று விட்டுகிறார்கள். பெரிய அறை எதிர்பார்த்ததைவிட மிகவும் நன்றாகவே இருந்தது ,  அணைவருக்கும் பசியெடுக்க ஒரு காக்கா குளியல் எடுத்துவிட்டு , கீழே வந்து தெருவிற்கு வருகிறோம் ,  அப்பகுதி மிகவும் அழகாக இருக்கிறது ,   சூரியன் தக தகக்க மிகவும் அழகான பல பெரிய பைன் மரங்கள் குடைபிடிக்க , என் மனம் சாப்பிட இடம் தேட இரண்டு பெரிய hotel  களின் நடுவே செல்லும் ஒரு சிறிய நடை பாதையூடாக சென்று கடற்கரையை அடைகிறோம் , பெரிய கடல் கண்முன்னே விரிய மக்கள் கூட்டம் ஆர்ப்பரிக்க ,உற்சாகம் கரை புரண்டோட,  கடற்கரை மணலிலேயே இருந்த ஒரு சிறிய imbiss (சாப்பாட்டுக்கடை) இல் மெனுவைப் பார்த்து அங்கேயே சாப்பிட முடிவெடுக்கிறோம் , அது ஒரு சிறிய கடையாக இருந்தாலும் உள்ளே 6 பேர் வேலை செய்தது ஆச்சரியமாக இருந்தது. இரண்டு பிட்சாவும் எனக்கு ஒரு பேர்கரும் வாங்கி பெரிய நிழற்குடையின் கீழ் கதிரையில் அமர்ந்து கடற்கரை மணல் கால்களில் தவழ , காற்று இதமாக வருட , பெரிய பேர்கர் உள்ளே போய் முடிய ,  எதிர்பார்த்த படியே மகளினதும் மனைவியினதும் மிகுதி பிட்சா துண்டுகள் என்னை நோக்கி வர  வயிறு அவற்றுக்கும் ஒரு welcome போடுகிறது.

இப்போது முழுமயாக உற்சாகம் தொற்றிக்கொள்ள.... கடலில் போய் காலை நனைத்து விட்டு வருகிறோம்  , கடும் வெய்யில் மதிய நேரம் வெளியில் நிற்க முடியாது,  நகரத் தெருக்களுக்குள் நுழைந்து கடைகளை பார்க்கின்றோம், மகள் தனக்குத் தேவையான மணல் விளையாட்டு சாமான் களை beach store ஒன்றில் வாங்கிக் கொள்கிறா,

(மகள்) அம்மா இந்தாங்கோ நீங்கள் தூக்குங்கோ,

(மனைவி ) அப்பாட்ட கொடுங்கோ ....

(நான்) நான் எப்படி தூக்கிறது  நான் ஏற்கனவே (சிறிய மகளுடன்) kinderwagen  (stroller) தள்ளுறன்

( மனைவி) யார் இப்ப உங்களைத் தூக்கச் சொன்னது தோளில் கொழுவுங்கோ ...

இப்போது எனது வலது தோளில் பெரிய beach bag தொங்குகிறது.....,

இப்போது மனைவியும் மகளும் கைவீசம்மா கைவீசு கடைக்குப் போகாலாம் கைவீசு........,

M8_ljesolo_record.jpg

ஜேசலோ நகரம்(metropolitano.tv/jesolo-dei-record/)

ஜேசலோ நகரம் மிக அழகாக இருக்கிறது , ஒரு வருடத்திற்கு 6 மில்லியன் சுற்றுலா பயணிகள் வரும் நகரம், 15 km நீளத்திற்கு கடற்கரை முழுவதும் பரவியிருக்கிறது,  நகரத்தில் பைன் மரங்கள் அதிகம் காணப்படுகின்றன , வீதியின் இரு மருங்கிலும் பைன் மரங்கள் அழகாக காட்சியளிக்கின்றன ..., இந்த பைன் மரங்கள் ஜேசலோவின் அடையாளங்களில் ஒன்று, சில சிறிய  hotel கள் பைன் மர தோப்புகளில் புதைந்து கிடக்கின்றன... , hotel களின் கார் தரிப்பிடங்கள் நிறைந்து வழிகின்றன பெரும்பாலும் ஜேர்மனிய கார்கள், தொடர்ந்து ஆஸ்திரிய, சுவிஸ் கார்கள் ஆங்காங்கே GB யும், உலகில் அமெரிக்கருக்கு அடுத்தபடியாக அதிகளவில் சுற்றுலா செல்பவர்கள் ஜேர்மனியர், பெரும்பாலான நாடுகளின் சுற்றுலாத் துறையே ஜேர்மனியரில் தான் தங்கியுள்ளது என்றால் மிகையாகாது ., ஐரோப்பிய சுற்றுலா தளங்கள் எல்லாம் இவர்களின் ஆதிக்கம் தான். ஜேசலோவும் விதிவிலக்கல்ல, இங்கே ஆஸ்திரிய, சுவிஸ் காரரும் அதிகளவில் காணப்பட்டதால் ஜேசலோ நகரமே டொச் மயம்தான், எங்குபார்த்தாலும் டொச் மொழி உரையாடல் தான் , hotel, கடைகளில் எல்லாம் டொச்சும், ஆங்கிலமும் தாராளமாக கதைக்கிறார்கள்.ஆஸ்திரியாவிற்கு மிகவும் அருகில் ஜேசலோ இருப்பதனால் அதிகளவிலான ஆஸ்திரியா சுற்றுலா பயணிகள் காணப்படுகிறார்கள்.

pineta-jesolo.jpg

சில சிறிய  hotel கள் பைன் மர தோப்புகளில் புதைந்து கிடக்கின்றன....

தெருக்கள் எங்கும் ரெஸ்டுரன்டுகள் அதிகளவில் காணப்படுகிண்றன  , தனியாக பார்களோ, டிஸ்கோக்களோ காணப்படவில்லை, இந்நகரம் முழுக்க முழுக்க பிள்ளைகளுடன் வரும் குடும்பங்களையே குறிவைக்கிறது (என வாசித்திருந்தேன்) .அது தான் நல்லது பார்ட்டி நகரங்கள் என்றால் இரவிரவாக விழித்து ,பகலில் தூங்கும் . பார்ட்டி பிரியர்களுக்கு என்றால் இத்தாலியில் ரிமினி (Rimini) கடற்கரை  நகரம் நல்ல தெரிவாக இருக்கும்.

27693317.jpg

வீதியின் இரு மருங்கிலும் பைன் மரங்கள் ....

hotel-jesolo-notte.jpg

அழகிய மாலைநேரக் கடற்கரை

கடைத்தெருக்களைச் சுற்றிவிட்டு  வந்து

சிறிது ஒய்வெடுத்துவிட்டு மாலை நேரம் மீண்டும் கடற்கரைக்குச் செல்கிறோம் மிகவும் இதமாக இருக்கிறது , கடற்கரைக்கும்  hotel களுக்கும் இடையில் அழகிய நடைபாதை அமைத்துள்ளார்கள் நான் நினைக்கிறேன் இந்த நடைபாதை 10 km  க்கு மேலாகா கடற்கரை முழுவதும் நீண்டு செல்கிறது என ...., மிகவும் இனிமையான சூழலில் மனைவி , பிள்ளைகளுடன் கதைத்துக் கொண்டே நீண்ட தூரம் மெதுவாக நடந்து செல்கிறோம். நேரம் , தூரம் எதுவுமே தெரியவில்லை. பசியெடுக்கவே அருகிலுள்ள கடைத்தெருவுக்குள் நுழைந்து பெரிய பிட்சேரியா ஒன்றினுள் நுழைகிறோம், மிகவும் பரபரப்பாக இருக்கிறது ,ஒரு இருபத்தைந்து பணியாளர்கள் இருப்பார்கள் பாருக்கு அருகில் அமர்ந்து இருந்த படியால் பார் பணியாளருடன் ஏனைய பணியாளர்கள் அடிக்கடி ஓடர் செய்து கொண்டே இருந்தார்கள் ,  இத்தாலிக்கு வந்த பின்னர் முதன்முதலாக இத்தாலிமொழி உரையாடல்களைத் தொடர்ச்சியாகக் கேட்கிறேன் ...., இத்தாலி மொழி மிகவும் இனிமையாக இருக்கிறது, ஒவ்வொரு சொற்களும் துண்டு துண்டாக விழுகிறது , டொச் மொழியில் உள்ள "ஸ்" உச்சரிப்புகள் இத்தாலியில் இல்லை, ஐரோப்பிய மொழிகளிலே கற்பதற்கு மிகவும் இலகுவான  மொழி  இத்தாலிமொழியெனக் கேள்விப்பட்டுள்ளேன். இத்தாலிகாரர் கதைக்கும் போது கண், கை எல்லாவற்றாலும் கதைப்பார்கள் இது அவர்களின் இயல்பு அவர்களுடன் பழகியவர்களுக்கு இது நன்கு தெரியும். நல்லதோர் இரவுணவின் பின் அறைக்குத் திரும்புகின்றோம்.

Immagine-014.jpg

கடற்கரைக்கும்  hotel களுக்கும் இடையில் உள்ள அழகிய நடைபாதை (campingparkdeidogi.com/?lang=de)

 

Jesolo01.jpg

நாமிருந்த கடற்கரைப்பகுதி

ஒவ்வொரு நாள் காலையும் 6 மணிக்கு கடற்கரை நடைபாதைக்குச் சென்று சிறிது நேரம் ஓடிவிட்டு அறைக்கு வர மனைவி பிள்ளைகளும் தயாராக இருப்பார்கள் , அவர்களுடன் சென்று காலையுணவை முடித்து ஒரு 8.30 மணியளவில் எல்லோரும் ( பெட்டி ,படுக்கைகளுடன்)கடற்கரைக்குச் செல்வோம். மனைவியும் , சிறிய மகளும் எமக்குரிய நிழற் குடையில் தரிக்க , நானும் பெரிய மகளும் கடற்கரையில் நடக்கும் உடற்பயிற்சி நிகழ்ச்சிக்கு செல்வோம்.  கையைச் சுற்றி கழுத்தைச் சுற்றி சிறிது சிறிதாக ஆரம்பிக்கும் உடற்பயிற்சி நிகழ்வு  படிப்படியாகக் கூடி லத்தினோ மியூசிக் போட்டு சும்பாவில் (zumpa) முடியும். உடற்பயிற்சி செய்யும் போது இடையிடையே கடல் அலைகள் காலை தழுவிச் செல்லும் . பயிற்சி முடிய கடலுக்குள் சிறிது நேரம் விழுந்து எழும்பி வந்து, நான் சிறிய மகளைப் பொறுப்பெடுக்க மனைவியும் , மகளும் கடலுக்கு போவார்கள், நானும் சிறிய மகளும்  ஒரு 2 மணித்தியாலம்  நிழற் குடையின் கீழ் அடிப்போம் பாருங்கள் ஒரு நித்திரை ஆகா , ஆகா ...., இறுதியில் மனைவி முகத்தில் ஊற்றும் கடல் நீருடன்  நித்திரை முடிவுக்கு வரும் . மதியம் 11.30 மணியளவில் hotel திரும்பி மதிய உணவை முடித்து, hotel lobby யில் அமர்ந்து சிறு ஓய்வு , பின்னர் அறைக்குச் சென்று சிறு ஓய்வு, மாலை மீண்டும் எல்லோரும்  கடற்கரை  நடைபாதையில் நடை , மாலை உணவு......, இப்படியே அந்த 5 நாட்களும் மிகவும்  ஓய்வாகவும் இனிமையாகவும், மகிழ்சியாகவும் அமைந்தது.

Link to comment
Share on other sites

map-italy-illustration-vector-21798356.j

இந்த பயணத்தின்போது நாம்  வீடு , வேலை, மனச்சுமை என்பவற்றிலிருந்து விடுபட்டு எங்காவது ஒரு வாரம் போய் ஓய்வாக இருந்துவிட்டு வருவோம் எனத் தான் திட்டமிட்டோம், இடங்கள் சுற்றி பார்ப்பதனை (sightseeing ) பிரதானமாகக் கொள்ளவில்லை, எனினும் இரு திட்டங்கள் மனதளவில் இருந்தன , சிறிய மகளுடன் கஷ்ட்டம் என்ற படியால் அவற்றைத் தவிர்த்துவிட்டோம்.  எனது வேலைத்தள நண்பர்கள் ஜேசலோ வுடன் சேர்த்து வேறு சில சிறு பயணங்களையும் மேற்கொண்டிருந்தனர் அவர்களின் அனுபவங்களையும் சேர்த்து சில தகவல்களை இங்கு தருகின்றேன்.

வெனிஸ் நகரம் (Venice / Venedig)

venezia-5-motivi-incanto-isole-01-boscol

அழகிய வெனிஸ் நகரம்

ஜேசலோ செல்பவர்கள் தவிர்க்க கூடாத ஒரு இடம் உலகப் புகழ் பெற்ற அழகிய வெனிஸ் நகரம் . ஜேசலோவிலிருந்து 42 km தொலைவிலேயே உள்ளது, காரில் செல்வதை விட  ஜேசலோ துறைமுகதிலிருந்து இயக்கப்படும் சிறிய கப்பல்களில் செல்வதே சிறந்தது. காலையில் சென்று மாலை / இரவில் திரும்பலாம் இருவழிப் பயணக்கட்டணம் 17 uro தான் பயணச்சீட்டினை நகரம் முழுவதும் காணப்படும் Tabacchi எனப்படும் சிறிய கடைகளில் வாங்கலாம். இந்தப் பயணச்சீட்டு நீங்கள் hotel இலிருந்து துறைமுகம் செல்லவும் பாவிக்கலாம்.

வெனிஸ் நகரத்தில் பொருட்கள் அதிக விலை , எனவே நீங்கள் போகும் போதே சாண்ட்விச்சுகள், குடிநீர் ஆகியவற்றை வாங்கிச் செல்லுங்கள், வெனிஸில் வாங்க வேண்டியேற்பட்டால் முற்பகுதியில் வாங்காமல் சற்று உள்ளே சென்று வாங்குங்கள்.

எமது hotel இல் ஒரு படத்தில் " மனிதனுடன் கலந்துவிட்ட கடல்"என வெனிஸ் நகரை வர்ணித்திருந்தனர் , உண்மையும் அது தான் மிகவும் அழகானது, எப்படியும் எமது கள உறவுகளில் ஒரு சிலராவது வெனிஸ் நகருக்குச் சென்றிருப்பார்கள் என நினைக்கிறேன். (வெனிஸ் செல்வதும் எமது பயணத்திட்டதிலிருந்தது)

venezia-5-motivi-percorsi-acqua-01-bosco

அழகிய வெனிஸ் நகரம்

 

ஸ்லோவேனியா போஸ்டோயானா குகை (Postojna Cave) மற்றும் தலைநகர் லுபியானா(Ljubljana)

7-day-trips.jpg

லுபியானா நகரம்

கிழக்கு ஐரோப்பாவின் அழகான நாடுகளில் ஒன்று ஸ்லோவேனியா, இது ஜேசலோவின் அருகிலேயே உள்ளது மேலே படத்தினைக் கவனிக்கவும் , படத்தில் ஜேசலோ குறிக்கப்படவில்லை வெனிசை (Venice) கருத்திலெடுக்கவும் அமெரிக்காவின் முதற் பெண்மணி( திருமதி ட்ரம்ப்) ஸ்லோவேனியா நாட்டைச் சேர்ந்தவர் என்பதனால் இந்நாடு இப்போது வெகு பிரபலம்.  தலைநகர் லுபியானா ஜேசலோவிலிருந்து 220 தொலைவிலேயே உள்ளது ,  புகழ் பெற்ற நிலக்கீழ் குகையான " போஸ்டோயானா" குகையும் ஜேசலோவிலிருந்து லுபியானா செல்லும் வழியிலேயே உள்ளது . போஸ்டோயானா குகை மிகவும் அழகானது, குகையினுள் சிறிய ரயிலில் அழைத்துச் செல்வார்கள்  கீழே சமர் காலங்களிலும் வெப்பனிலை 9 பாகையாக இருப்பதனால் , போகிறவர்கள் ஜக்கற் கொண்டு போக வேண்டும், குகையினுள் செல்ல ஒருவருக்கு அனுமதிக் கட்டணம் 40 uro கள் அழகிய குகை அனுபவத்தினை முடித்துக் கொண்டு மீண்டும் திரும்பலாம் அல்லது தலைநகர் லுபியானா சென்று ஒரு இரவு அங்கு தங்கி அச்சிறிய நகரைத் கண்டுகளித்துத் திரும்பலாம். எனது நண்பர் City Hotel Ljubljana  இல் தங்கியிருந்தார் மிகச் சிறந்த Hotel என எனக்குச் சிபாரிசு செய்தார் விலையும் அதிகமில்லை என்றார்.

 

postojna-cave-002-slovenia.jpg

போஸ்டோயானா குகை (Postojna Cave)

Attractions-postojnska-jama.jpg?14793936

போஸ்டோயானா குகை (Postojna Cave)இணையத்தளம்:  https://www.postojnska-jama.eu/en/

காணொளி youtube.com/watch?v=CW6XmnLG3_0&t=2s//

 

Lubiana-Slovenia.jpg

லுபியானா நகரம்


குறிப்பு: ஸ்லோவேனியாவுக்கு காரில் செல்பவர்கள் ஹைவேக்கு ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும் , இல்லாவிடில் அபராதம் கட்டவேண்டும், ஸ்லோவேனியா எல்லையில் அதனை வாங்க முடியாது, எல்லைக்கு முதலில் வரும் இத்தாலிய ஹைவே எரிபொருள் நிரப்பு நிலயங்களில் அதனை வாங்கி ஒட்டிக்கொள்ளவும்

Gardaland

1a09d43a9a39442fb1121efe8ff7b46d.jpg?aut

Gardaland உம் "Europa-Park" , "disneyland " போல் ஒரு மிகச்சிறந்த விளையாட்டுப் பூங்கா, மிலானோ(milan) விலிருந்து ஜேசலோ செல்லும் வழியில் 137km தூரத்திலுள்ளது, பிள்ளைகளுடன் செல்பவர்களுக்கு மிகச் சிறந்த இடம். எனது வேலைத்தள நண்பர்கள் இருவர் Europa-Park க்கும் Gardaland க்கும் சென்றவர்கள் அவர்களிடம் கேட்டேன் எது சிறந்தது என்று , இருவரும் சொன்னார்கள் "Gardaland" என்று.

Gardalandஐ அனுபவிப்பதற்கு ஒரு நாள் போதாது இரு நாள் தேவை எனச் சொன்னார்கள்,  Europa-Park ஐ விட பெரிதாக இருக்கலாம் என்றும் சொன்னார்கள். Gardaland இத்தாலியின் சுற்றுலா மையங்களில் ஒன்றான gardasee ( Lake Garda) பிரதேசத்திலிருப்பதால் தாராளாமாக குறைந்த விலையில் Hotel கள் எடுக்கலாம். Gardaland park இன் உள்ளும் Hotel உள்ளது.(இதுவும்   எமது பயணத்திட்டதிலிருந்தது)

Gardaland இன் இணையத்தளம்

https://www.gardaland.it/en/

NOVENTA DI PIAVE DESIGNER OUTLET

Chic-Outlet-Shopping.jpg

"NOVENTA DI PIAVE DESIGNER OUTLET" எனப்படும் outlet  கடடைத்தொகுதி ஜேசலோவிலிருந்து 22 km தூரத்திலுள்ளது .ஜேர்மனியிலுள்ள "Outlet Metzingen" போல் பெரிதாக இல்லாவிடிலும் , நல்ல மார்க் உடுப்புகள் குறைந்த விலையில் வாங்கலாம் என நண்பர்களால் கூறப்பட்டது.

இணையத்தளம்

https://www.mcarthurglen.com/it/noventa-di-piave-designer-outlet/en/

மிலானோ(Milan) விலும் "IL CENTRO"எனும் shopping center உள்ளது , சுவிசுடன் ஒப்பிடும் போது உடுப்புகள் மிகவும் மலிவானது , எனது நண்பர் சுவிசிலிருந்து இந்த shopping center க்கென வருடத்தில் ஒரு நாள் என்றாலும் போவார்

இணையத்தளம்

https://www.centroilcentro.it/?lang=eng

 

 

                                                                                                                                    முற்றும்.

(மேலும் தகவல்கள் ஏதும் நினைவுக்கு வரின் பதிவிடுகின்றேன்)

Link to comment
Share on other sites

நான் ஒவ்வொரு தடவையும் இந்த திரியின் தலைப்பை வாசித்து வீட்டு இது இன்னொரு தளத்தில் இருந்து வெட்டி எடுத்த கட்டுரை என நினைத்து வாசிக்காமல் கடந்து சென்று இருந்தேன். இப்ப தான் ஆதவன் எழுதும் பயண கட்டுரை என கண்டு கொண்டேன்

புதிதாக எழுதும் ஒருவரின் கட்டுரை மாதிரி தெரியவில்லை. தொடருங்கள் ஆதவன்

மற்றது, போன வருசம் சிங்கன் தனக்கு ஒரு தேவதை பிறந்தது பற்றி மூச்சே காட்டாமல் இருந்து இருக்கின்றார். பெண் பிள்ளைகள் இயற்கை அப்பாக்களுக்கு கொடுக்கும் ஆசீர்வாதங்கள். வாழ்த்துக்கள்  ஆதவன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Athavan CH said:

கிழக்கு ஐரோப்பாவின் அழகான நாடுகளில் ஒன்று ஸ்லோவேனியா, இது ஜேசலோவின் அருகிலேயே உள்ளது மேலே படத்தினைக் கவனிக்கவும் , படத்தில் ஜேசலோ குறிக்கப்படவில்லை வெனிசை (Venice) கருத்திலெடுக்கவும் அமெரிக்காவின் முதற் பெண்மணி( திருமதி ட்ரம்ப்) ஸ்லோவேனியா நாட்டைச் சேர்ந்தவர் என்பதனால் இந்நாடு இப்போது வெகு பிரபலம். 

US president Donald Trump with ex-wife Ivana trump

Who are the Trump family? A guide to Tiffany, Eric, Ivanka, Donald Jr and Barron

அமெரிக்காவில்  இப்போது... இரண்டு முதல் பெண்மணிகள் உள்ளார்கள். :)
அதில் (கருணாநிதி சொல்லுற மாதிரி)   மனைவியா... துணைவியா....  ஸ்லோவேனியா நாட்டை  சேர்ந்தவர்? :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 24.10.2017 at 2:37 AM, நிழலி said:

நான் ஒவ்வொரு தடவையும் இந்த திரியின் தலைப்பை வாசித்து வீட்டு இது இன்னொரு தளத்தில் இருந்து வெட்டி எடுத்த கட்டுரை என நினைத்து வாசிக்காமல் கடந்து சென்று இருந்தேன். இப்ப தான் ஆதவன் எழுதும் பயண கட்டுரை என கண்டு கொண்டேன்

புதிதாக எழுதும் ஒருவரின் கட்டுரை மாதிரி தெரியவில்லை. தொடருங்கள் ஆதவன்

மற்றது, போன வருசம் சிங்கன் தனக்கு ஒரு தேவதை பிறந்தது பற்றி மூச்சே காட்டாமல் இருந்து இருக்கின்றார். பெண் பிள்ளைகள் இயற்கை அப்பாக்களுக்கு கொடுக்கும் ஆசீர்வாதங்கள். வாழ்த்துக்கள்  ஆதவன்

ஆதவனின்...  பயணக்  கட்டுரையின் தலைப்பு பலரை குழப்பி விட்டது என நினைக்கின்றேன் நிழலி.
அதிலும்...  "லிடோ டி ஜேசலோ"  என்ற நகரத்தின் பெயரை,     பலர் ஒரு மனிதர் என நினைத்து, அவரின் கட்டுரையாக இருக்கலாம் என ஆரம்பத்தில் நானும் நினைத்தேன். 

"எனது சிறு பயணமொன்று.....  ஆதவன் CH"  என்று தலைப்பை போட்டிருந்தால்  பலரும்  வாசித்திருப்பார்கள்.
இனியும்... காலம் கடந்து விடவில்லை. ஆதவன் விரும்பினால், நிர்வாகத்திடம் சொல்லி மாற்றலாம். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் பயண அனுபவங்களுடன் மேலும் சிலரின் குறிப்புகளையும் சேர்த்து தந்தது பயனுள்ளதாக இருந்தது, பகிர்வுக்கு நன்றி ஆதவன்......!  tw_blush:

Link to comment
Share on other sites

On 9/25/2017 at 5:04 AM, புங்கையூரன் said:

தொடருங்கள்....ஆதவன்..!

வாசிக்க மிகவும் நன்றாக உள்ளது!

துணைவியாரை பின் சீட்டுக்கு அனுப்பி விட்டுக்...காரோட்டியது தான் எனக்கு மிகவும் பிடித்த பகுதி!

அதனுள்....மிகப்பெரிய 'இராசதந்திரம்' புதைந்திருக்கின்றது என்பது இதை வாசிக்கும் பலருக்கும் ...உடனே புரியாது என்று நினைக்கிறேன்!

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி புங்கையூரன். அந்த "மிகப்பெரிய இராசதந்திரம்"  புத்தனின் வீடியோவால் பரகசியமாகிவிட்டது tw_blush:.

மனைவி மாரை மட்டும் ஒரேயடியாக குறை சொல்லமுடியாது புங்கை , நாங்களும் கொஞ்சம் லொள்ளு தான் .......

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடைசி இடத்தில் ஆர்சிபி; தவறு நடந்தது எங்கே? கேப்டன் கூறுவது என்ன? பட மூலாதாரம்,SPORTZPICS ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வீடியோ கேம்ஸிஸ் கிரிக்கெட் பார்த்த, விளையாடிய உணர்வு ஆர்சிபி, சன்ரைசர்ஸ் இடையிலான ஆட்டத்தின்போது ரசிகர்களுக்கு ஏற்பட்டிருக்கக்கூடும். 38 சிக்ஸர்கள், 43 பவுண்டரிகள், ஒரே போட்டியில் 549 ரன்கள், 4 பந்துவீச்சாளர்கள் 50 ரன்களுக்கு மேல் வாரி வழங்கிய சோகம், அதிகபட்ச ஸ்கோர் என நேற்றைய ஐபிஎல் டி20 ஆட்டத்தில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளை பட்டியலிடலாம். ஆட்டத்தைப் பார்க்க வந்த ரசிகர்களுக்கு கழுத்துவலி கூட வந்திருக்கலாம். ஏனென்றால், கிட்டத்தட்ட 40 ஓவர்களில் 9 ஓவர்களில் வெறும் சிக்ஸர், பவுண்டரிகளாகவே அடிக்கப்பட்டது. மிகச்சிறிய மைதானமான சின்னசாமி ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்கள் எப்படி வீசினாலும் பேட்டை நோக்கித்தான் வந்தது என்பதால் பேட்டர்கள் கருணையற்றவர்களாக மாறினர். யாருக்கு எப்படி பந்துவீசுவது எனத் தெரியாமல் ஆர்சிபி பந்துவீச்சாளர்களும், சன்ரைசர்ஸ் பந்துவீச்சாளர்களும் திணறி நின்றதைக் காண முடிந்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் குவித்தது. 288 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 262 ரன்கள் சேர்த்து தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் சன்ரைசர்ஸ் அணி 6 போட்டிகளில் 4 வெற்றி, 2 தோல்வி என 8 புள்ளிகளுடன் 4வது இடத்துக்கு முன்னேறியது. நிகர ரன்ரேட்டிலும் பெரிய ஸ்கோர் அடித்தும் பெரிய முன்னேற்றமில்லாமல் 0.502 ஆக இருக்கிறது. டி20 போட்டிகளில் 250ரன்களுக்கு மேல் அதிகமுறை அடித்த அணி என்ற பெருமையை சன்ரைசர்ஸ் அணி நேற்று பெற்றது. ஆர்சிபி அணியைப் பொருத்தவரை இவ்வளவு பெரிய ஸ்கோரை அடித்தும் தோல்வி அடைந்த முதல் அணியாக மாறிவிட்டது. 7 போட்டிகளில் ஒரு வெற்றி, 6 தோல்விகள் என 2 புள்ளிகளுடன் ஆர்சிபி அணி கடைசி இடத்தில் நீடிக்கிறது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தொடக்கத்திலேயே அதிரடி காட்டிய ஹைதராபாத் வீரர்கள் சன்ரைசர்ஸ் அணிக்கு மிகப்பெரிய ஸ்கோரை அமைத்துக் கொடுத்தவர்களில் முக்கியமான பேட்டர் டிராவிஸ் ஹெட் 102 (41பந்துகள், 8சிக்ஸர், 9பவுண்டரி). ஏற்கெனவே ஆஸ்திரேலிய அணிக்கு டெஸ்ட் சாம்பியன்ஷிப், உலகக் கோப்பையை வென்றதில் முக்கிய பங்கு வகித்த ஹெட், நேற்றைய ஆட்டத்தில் முதல் சதத்தைப் பதிவு செய்து ஆட்டநாயகன் விருது வென்றார். 39 பந்துகளில் சதம் அடித்து, அதிவேக சதம் அடித்த 4வது பேட்டர் என்ற பெயரை ஹெட் பதிவு செய்தார். சன்ரைசர்ஸ் அணிக்காக அதிவேகமாக சதம் அடித்த முதல் பேட்டர் என்ற பெயரை ஹெட் பெற்றார். இதற்கு முன் வார்னர் 43 பந்துகளில் சதம் அடித்திருந்தார். மற்றொரு பேட்டர் ஹென்ரிச் கிளாசன் அசுரத்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த சீசன் முழுவதும் பந்துவீச்சாளர்களுக்கு சிம்மசொப்னமாக திகழ்ந்துவரும் கிளாசன் 31 பந்துகளில் 67 ரன்கள்(7சிக்ஸர், 2 பவுண்டரி) அடித்து ஆட்டமிழந்தார். இது தவிர மார்க்ரம் 32(17பந்துகள், 2சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள்), அப்துல் சமது37(10 பந்துகள் 3 சிக்ஸர்கள், 4பவுண்டரிகள்) என ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த 4 பேட்டர்கள் அடித்த ஸ்கோர்தான் மற்றவகையில் பெரிதாக எந்த பேட்டரும் ஸ்கோர் செய்யவில்லை.   பட மூலாதாரம்,SPORTZPICS சன்ரைசர்ஸ் கேப்டன் கூறியது என்ன? சன்ரைசர்ஸ் கேப்டன் கம்மின்ஸ் கூறுகையில் “ நானும் பேட்டராக இருந்திருக்கலாம் என நினைக்க வைக்கிறது. மும்பைக்கு எதிரான ஆட்டத்துக்குப் பிறகு இப்போது மீண்டும் பெரிய ஸ்கோர் அடித்துள்ளோம். போட்டி பேட்டர்கள் ராஜ்ஜியமாகமாறி வருகிறது. இந்த ஆடுகளத்தை படிக்க நானும் முயற்சித்தேன். எங்கள் ஆட்டம் மகிழ்ச்சியாக இருக்கிறது. 4 வெற்றிகள் பெற்றுள்ளோம். பேட்டர்களுக்கு முழுசுதந்திரம் அளித்துள்ளோம். அதனால்தான் பெரிய ஸ்கோர் வருகிறது” எனத் தெரிவித்தார் ஆர்சிபி கொடுத்த பதிலடி ஆர்சிபி அணியிலும் கேப்டன் டூப்பிளசிஸ் 28 பந்துகளில் 62 ரன்கள்(4சிக்ஸர், 7பவுண்டரி), விராட் கோலி 42 (2சிக்ஸர், 6பவுண்டரி), தினேஷ் கார்த்திக் 35 பந்துகளில் 85(7சிக்ஸர், 5 பவுண்டரி) என விளாசினர். இதில் ஆர்சி அணியில் நடுவரிசை பேட்டர்கள் ரஜத் பட்டிதார், வில் ஜேக்ஸ், சவுகான் ஆகிய மூவவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்காமல் தங்களின் பங்களிப்பை வெளிப்படுத்தி இருந்தால், ஆர்சிபி அணி ஒருவேளை வென்றிருக்கலாம். சன்ரைசர்ஸ் அடித்த ஸ்கோருக்கு தாங்கள் எந்த விதத்திலும் சளைத்தவர்கள் இல்லை என்று ரீதியில்தான் கடைசி நேரத்தில் தினேஷ் கார்த்திக் ஆக்ரோஷமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES நிகழ்த்தப்பட்ட சாதனைகள் இந்த ஆட்டத்தில் சில சுவையான சம்பவங்கள் நடந்துள்ளன. ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு அணி சேர்த்த அதிகபட்ச ஸ்கோரான 287 ரன்களை சன்ரைசர்ஸ் அணி பதிவு செய்தது. இதற்கு முன் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக இந்த சீசனில் 277 ரன்கள் சேர்த்ததுதான் சாதனையாக இருந்தது, தன்னுடைய சாதனையை அந்த அணியை முறியடித்தது. ஆடவர் டி20 போட்டியில் சேர்க்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். ஓட்டுமொத்தமாக நேற்றைய ஆட்டத்தில் 549 ரன்கள் சேர்க்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டது. இதற்கு முன் ஹைதராபாத்தில் இந்த சீசனில் நடந்த மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் இடையிலான ஆட்டத்தில் ஒட்டுமொத்தமாக 523 ரன்கள் சேர்க்கப்பட்டதுதான் அதிகபட்சமாக இருந்தநிலையில் அந்த சாதனை முறியடிக்கப்பட்டது. ஆர்சிபி அணிக்கு எதிராக நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி 22 சிக்ஸர்களை விளாசி, ஒரு இன்னிங்ஸில் ஒரு அணிக்கு எதிராக அடிக்கப்பட்டஅதிகபட்ச சிக்ஸர்களைப் பதிவு செய்தது. இதற்கு முன் 2013-இல் புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக ஆர்சிபி 21 சிக்ஸர்களை அடித்த நிலையில் அதை சன்ரைசர்ஸ் முறியடித்துவிட்டது. இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் சேர்ந்து 38 சிக்ஸர்களை விளாசின. டி20 போட்டியில் அதிக பட்சமாக 262 ரன்கள் சேர்த்தும் தோல்வி அடைந்த முதல் அணி என்ற பெயரை ஆர்சிபி பெற்றது. இதற்குமுன் 2023ம் ஆண்டில் செஞ்சூரியனில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 258 ரன்களை மேற்கிந்தியத்தீவுகள் சேர்த்தும் தோல்வி அடைந்ததுதான் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. ஆர்சிபி அணியில் பந்துவீச்சாளர்கள் டாப்ளி(68), யாஷ் தயார்(51), லாக்கி பெர்குஷன்(52), விஜயகுமார்(64) என 4 பந்துவீச்சாளர்கள் 50 ரன்களுக்கு மேல் வாரி வழங்கினர். ஒரு போட்டியில் 4 பந்துவீச்சாளர்கள் 50 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்தது இதுதான் முதல்முறை. சன்ரைசர்ஸ் அணியில் நேற்று மட்டும் 4 பேட்டர்கள் ஒரு சதம் பார்ட்னர்ஷிப்பும் உள்பட, 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஐபிஎல் வரலாற்றில் இது 2வது முறையாக நடக்கிறது. இதற்கு முன் 2008-இல் ஆர்சிபிக்கு எதிராக கொல்கத்தா அணியின் 4 பேட்டர்கள் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர்.   பட மூலாதாரம்,SPORTZPICS ஆர்சிபி இதயத்தை உடைத்த ஹெட் ஆர்சிபி அணி நேற்றைய ஆட்டத்தில் முறையான சுழற்பந்துவீச்சாளர்கள் இல்லாமல் களமிறங்கியது. டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா என இரு இடதுகை பேட்டர்கள் களத்துக்கு வந்ததும் பகுதிநேர சுழற்பந்துவீச்சாளரான ஜேக்ஸை பந்துவீசச் செய்து சோதிதித்துப் பார்த்தது. முதல் இரு ஓவர்கள் மட்டும் பொறுமை காத்த ஹெட், அபிஷேக் அடுத்தடுத்த ஓவர்களில் பவுண்டரி, சிக்ஸர்களாக அடிக்கத் தொடங்கினர். எந்தப் பந்துவீச்சாளர் பந்துவீசினாலும் ஹெட், அபிஷேக் பேட்டிலிருந்து பவுண்டரி, சிக்ஸர்களாக பறந்தன. ஆர்சிபிக்காக முதல்முறையாக களமிறங்கிய பெர்குஷன் 5-ஆவது ஓவரில் ஹெட் சிக்ஸர்களாக விளாசி 18 ரன்களையும், யாஷ் தயால் ஓவரில் பவுண்டரி, சிக்ஸர் என 20 ரன்களையும் சேர்த்தார். 20 பந்துகளில் ஹெட் அரைசதம் அடித்தார். பவர்ப்ளே ஓவரில் சன்ரைசர்ஸ் 76 ரன்கள் சேர்த்தது. பவர்ப்ளேயில் சன்சைர்ஸ் சேர்த்த 3வது அதிகபட்ச ரன்களாகும். இதற்குமுன் மும்பை அணிக்கு எதிராக 81 ரன்கள், சிஎஸ்கேவுக்கு எதிராக 77ரன்களும் சேர்த்திருந்தது. 7.1 ஓவர்களில் சன்ரைசர்ஸ் அணி 100 ரன்களை தொட்டது. அபிஷேக் சர்மா 34 ரன்களில் டாப்ளே பந்துவீச்சில் பெர்குஷனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு ஹெட், அபிஷேக் 108 ரன்கள் என வலுவான அடித்தளம் அமைத்தனர். கிளாசன் சிக்ஸர் மழை 2-ஆவது விக்கெட்டுக்கு கிளாசன் களமிறங்கி ஹெட்டுடன் சேர்ந்தார். முதல் 5 பந்துகளில் 3 ரன்கள் சேர்த்து மெதுவாகத் தொடங்கிய கிளாசன், அதன்பின் வாண வேடிக்கை நிகழ்த்தினார். டி20 போட்டிகளில் ஆபத்தான பேட்டராக கருதப்படும் கிளாசன், ஆர்சிபி பந்துவீச்சாளர்களை நேற்று வதம் செய்தார். பெர்குஷன், யாஷ் தயால் ஓவரில் சிக்ஸர்களும், பவுண்டரிகளும் கிளாசன் பேட்டிலிருந்து பறந்தன. மறுபுறம் டிராவிஸ் ஹெட்டும் சிக்ஸர், பவுண்டரி மழை பொழிந்து, 39 பந்துகளில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார். டிராவிஸ் ஹெட் 102 ரன்கள் சேர்த்தநிலையில் பெர்குஷன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 2வது விக்கெட்டுக்கு இருவரும் 57 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அதிரடியாக ஆடிய கிளாசன் 23 பந்துகளில் அரைசதம் அடித்தார். 14.1 ஓவர்களில் சன்ரைசர்ஸ் அணி 200 ரன்களைத் தொட்டது. கிளாசன் 67 ரன்கள் சேர்த்தநிலையில் பெர்குஷன் பந்துவீ்ச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். இந்த கிளாசன், ஹெட் ஆகிய இரு பேட்டர்களும் ஆட்டமிழந்து சென்றபின் ஆர்சிபி பந்துவீச்சாளர்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர். கடைசி நேரத்தில் களமிறங்கிய அப்துல் சமது, மார்க்ரம் இருவரும் சூப்பர் கேமியோ ஆடி ஸ்கோரை உயர்த்தினர். கடைசி இரு ஓவர்களில் மட்டும் இருவரும் 46 ரன்களைக் குவித்தனர்.   பட மூலாதாரம்,GETTY IMAGES கடைசி வரை போராடியது பெருமை ஆர்சிபி கேப்டன் டூப்பிளசிஸ் கூறுகையில் “இது முறையான டி20 ஆடுகளம். இன்று சேர்த்த ரன்களை பார்த்தால் வேடிக்கையாக இருக்கிறது. அதுவே சாதனையாக மாறிவிட்டது. இந்த ஆடுகளத்தில் 270 ரன்கள்கூட சேஸிங் செய்யக்கூடியதுதான். இந்த ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்கள் பந்துவீசுவது கடினம். பாவம் பந்துவீச்சாளர்கள் பல நுணுக்கங்களை பயன்படுத்தி வீசியும் பயன் இல்லை. பேட்டர்கள் பக்கமே ஆட்டம் தொடர்ந்து போவது கடினம்தான். வித்தியாசமாக சந்திக்க வேண்டும். எங்கள் பேட்டிங்கில் சில தவறுகள் உள்ளன. அதை சரிசெய்வோம். பவர்ப்ளேக்குப்பின் நாங்கள் தவறுகளைத் திருத்த வேண்டியுள்ளது. ஆனால் கடைசிவரை எங்கள் வீரர்கள் போராடியது பெருமையாக இருந்தது. பந்துவீச்சைப் பொருத்தவரை பந்துவீச்சாளர்கள் எப்போதும் மனதை உற்சாக வைத்திருக்கவேண்டும்” எனத் தெரிவித்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபிக்கு நம்பிக்கை அளித்த தினேஷ் கார்த்திக் ஆர்சிபியும் பதிலடி கொடுக்க முயன்று, விக்கெட்டுகளை இழந்திருந்த தருணத்தில் தினேஷ் கார்த்திக் களமிறங்கி, அரங்கில் இருந்த ரசிகர்களுக்கு தனது பேட்டால் விருந்தளித்தார். லாம்ரோருடன் சேர்ந்து 59 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த டிகே, சன்ரைசர்ஸ் பந்துவீச்சை துவம்சம் செய்தார். உனத்கட், மர்கண்டே வீசிய 13 மற்றும் 14வது ஓவர்களில் மட்டும் தினேஷ் கார்த்திக், லாம்ரோர் சேர்ந்து 46 ரன்கள் சேர்த்தனர். டிகே அடித்த ஷாட்களால் ரன்ரேட்டும் வேகமாக உயர்ந்தது, ரசிகர்களுக்கும் ஆர்சிபி வென்றுவிடும் என்ற நம்பிக்கை வந்தது. 23 பந்துகளில் டிகே அரைசதம் அடித்தார். லாம்ரோர் 19 ரன்னில் கம்மின்ஸ் பந்துவீச்சில் போல்டாகினார். அடுத்துவந்த ராவத்துடன் சேர்ந்து தினேஷ் கார்த்திக் வெளுத்துவாங்கினார். அனுஜ் ராவத்துடன் சேர்ந்து 7-வது விக்கெட்டுக்கு 63 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த தினேஷ் கார்த்திக் 83 ரன்னில் நடராஜன் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். தினேஷ் கார்த்திக் களத்தில் இருந்தவரை ஆர்சிபி ரசிகர்களுக்கு வெற்றி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையோடு காத்திருந்தனர். ஆனால் அவர் வெளியேறியபின், ரசிகர்களும் கலையத் தொடங்கினர். தினேஷ் கார்த்திக் கடைசிவரை போராடியும், ஆர்சிபி 25 ரன்களில் தோற்றது. https://www.bbc.com/tamil/articles/cj5l2j16y69o
    • எதிர்த்தும் பெற தெரியாது. சேர்ந்தும் பெற தெரியாது.  இரண்டையும் விட சுலபமான வழி என்ன என்பதை நீங்கள் கூறலாமே!    அல்லது நீங்கள்  கூறலாமே!   
    • "வாலிபத்தில் தவற விட்டவைகளை  ... " ஏன் அனுபவித்ததாக இருக்கக் கூடாது?      
    • டிசம்பர் 2014 இல், ஓக்லாண்ட் இன்ஸ்டிடியூட் [Oakland Institute] ஒரு கள ஆய்வு இலங்கையின் வடக்கு கிழக்கில் நடத்தியது. போரின் பின் அதன் நிழலும், போருக்குப் பிந்தைய இலங்கையில் நீதிக்கான போராட்டம் பற்றியது அது [The Long Shadow of War: the Struggle for Justice in Postwar Sri Lanka,] பருந்து போல நிறைந்த இராணுவ சூழலில் மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் மற்றும் துயரங்கள் பற்றியது அது. அத்துடன் பல வழிகளில்  அரசாங்க நிறுவனங்கள், அரசின் ஆசீர்வாதத்துடனும் பாதுகாப்புடனும்  செயல்படுத்தப்பட்ட தீவிரமான நில அபகரிப்பு மீது முக்கிய கவனம் செலுத்தியது.  வடக்கு மற்றும் கிழக்கில் பல்வேறு உத்திகள் மூலம் அரசாங்கம் கையாளும் தந்திரங்களையும் அடக்குமுறைகளையும்  2015 ஆண்டு தங்கள் அறிக்கை மூலம் அம்பலப்படுத்தியது அதில் நில அபகரிப்பு மற்றும் இராணுவமயமாக்கல் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு மற்றும் அதன் தொடர்ச்சியான பயன்பாட்டை வெளிப்படுத்தியது.  நீர்ப்பாசனத் திட்டங்கள் மற்றும் வன்முறை போன்ற நில அபகரிப்புக்கான பழைய உத்திகளுடன் புதிதாக  புத்த கோவில்கள் அமைத்தல், தொல்பொருள் உருவாக்கம் உள்ளிட்ட புதிய முறைகள், பாதுகாப்புகள், உயர் பாதுகாப்பு வலயங்கள் மற்றும் சிங்களமயமாக்க சிறப்பு பொருளாதார வலயங்கள் என பல வழிகளில்  வடக்கு மற்றும் கிழக்கு - தமிழர்களின் பாரம்பரிய தாயகம் - கட்டாயத்தால் பறிப்பட்டுக்கொண்டு இருப்பதை எடுத்துக்காட்டியது. கொழும்பில் எந்த தமிழரும் நிலத்தை அபகரித்து குடியேறவில்லை. அது சிங்களவரின் பாரம்பரிய நிலமும் அல்ல. இலங்கையின் மன்னர் ஆட்சியை எடுத்துக்கொண்டால்,       Anuradhapura period (377 BCE–1017) Polonnaruwa period (1056–1232) Transitional period (1232–1505) இங்கு Jaffna Kingdom , Kingdom of Gampola , Kingdom of Kotte , Kingdom of Sitawaka , & Vanni Nadu என் நாம் அறிகிறோம்  The Kingdom of Kandy was a monarchy on the island of Sri Lanka, located in the central and eastern portion of the island. It was founded in the late 15th century and endured until the early 19th century. Initially a client kingdom of the Kingdom of Kotte, Kandy gradually established itself as an independent force during the tumultuous 16th and 17th centuries, allying at various times with the Jaffna Kingdom, the Madurai Nayak dynasty of South India, Sitawaka Kingdom, and the Dutch colonizers to ensure its survival. / கண்டி இராச்சியம் சேனாசம்பந்தவிக்கிரமபாகு என்பவனால் உருவாக்கப்பட்டது (1467- 1815)  கொழும்பு வை எடுத்துக்கொண்டால்  பதினாறாம் நூற்றாண்டுக்கு முந்திய காலப்பகுதியில் கோட்டை அரசின் ஒரு பகுதியாகவும், இந்தியத் தமிழர் மற்றும் இசுலாமிய வர்த்தகர்களின் ஒரு தளமாகவும் விளங்கிய இவ்விடம், பொ.ஊ. பதினாறாம் நூற்றாண்டுக்குப் பின்னர், போர்த்துக்கேயரின் வரவுக்குப் பின்னரே முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. அதாவது இங்கு சிங்களவர் பெரிதாக இருக்கவில்லை . இது உங்களுக்கு ஆச்சரியமாகக் கூட இருக்கலாம் , ஆனால் அதுவே உண்மை . இந்தியத் தமிழர் மற்றும் இசுலாமிய வர்த்தகர்களின் பேச்சு மொழி அதிகமாக தமிழே! 2001 சனத்தொகை கணக்கெடுப்பின்படி கொழும்பு நகர மக்கள் தொகையியல் இன அடிப்படையில் பின்வருமாறு காணப்படுகிறது. இல    இனம்    சனத்தொகை    மொத்த % 1    சிங்களவர்    265,657    41.36 2    இலங்கைத் தமிழர்    185,672    28.91 3    இலங்கைச் சோனகர்    153,299    23.87 4    இலங்கையின் இந்தியத் தமிழர்    13,968    2.17 5    இலங்கை மலேயர்    11,149    1.73 6    பறங்கியர்    5,273    0.82 7    கொழும்புச் செட்டி    740    0.11 8    பரதர்    471    0.07 9    மற்றவர்கள்    5,934    0.96 10    மொத்தம்    642,163    100 இதில் நீங்கள் கவனிக்க வேண்டியது 2001 இல் கூட சிங்களவரை விட [41.36] மற்றவர்களின் கூட்டுத்தொகையே கூட! Traveller Ibn Battuta who visited the island in the 14th century, referred to it as Kalanpu. Arabs, whose prime interests were trade, began to settle in Colombo around the eighth century AD mostly because the port helped their business by the way of controlling much of the trade between the Sinhalese kingdoms and the outside world. It was popularly believed that their descendants comprised the local Sri Lankan Moor community, but their genetics are predominantly South Indian [தென் இந்தியர் - ஆகவே தமிழே அங்கு கூடுதலாக பேசப்பட்டுள்ளது]  இதை ஒருக்கா முழுமையாக பாருங்கள். அதைத்தான், இலங்கை அரசு இன்று பின்பற்றுகிறது போல புரிகிறது. Israel’s Occupation: 50 Years of Dispossession  [amnesty international அறிக்கை]   Since the occupation first began in June 1967, Israel’s ruthless policies of land confiscation, illegal settlement and dispossession, coupled with rampant discrimination, have inflicted immense suffering on Palestinians, depriving them of their basic rights.    THE WORST THING IS THE SENSE OF BEING A STRANGER IN YOUR OWN LAND AND FEELING THAT NOT A SINGLE PART OF IT IS YOURS. Raja Shehadeh, Palestinian lawyer and writer     நன்றி 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.