யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
Athavan CH

எனது சிறு பயணமொன்று..... லிடோ டி ஜேசலோ(இத்தாலி)

Recommended Posts

On 24.10.2017 at 10:39 AM, Athavan CH said:

ivanka16-49567.jpg

  Ivanka Trump இரண்டாவது மனைவி (துணைவியார்) சிறியர்

அது சரி ரம்புக்கு எத்தனை மனைவியர்?  :grin:
(எதுக்கும் கேட்டு வைப்பம் பிறகு பிரயோசனப்படும்)

Share this post


Link to post
Share on other sites

பதிவு நன்றக உள்ளது. நல்ல எழுத்து நடையும் அழகிய படங்களும் சிறப்பு. நீங்கள் பயணப்பட்ட இடங்களுக்கு போக வேண்டும் போல் உள்ளது. 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
On 9/25/2017 at 5:14 AM, தமிழ் சிறி said:

கட்டுரையாளர் தனது பயணத்தை விபரிக்க விதம்.....  கட்டுரையை  சோர்வு இல்லாமல் வாசிக்கத்  தூண்டுகின்றது.
பகிர்விற்கு... நன்றி ஆதவன்.

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி தமிழ் சிறி, இறுதியில் ஒருவாறு என்னை அடையாளம் கண்டு கொண்டீர்கள்.

Share this post


Link to post
Share on other sites
On 9/25/2017 at 6:02 AM, nunavilan said:

ஐரோப்பாவின் அழகை சில வேளைகளில் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.ஆதவன் முயற்சி செய்துள்ளார். தொடருங்கள். வாசிக்கும் ஆவலை தூண்டியுள்ளீர்கள்.

உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி நுணா , உண்மை தான் நுணா ஐரோப்பா மிகவும் அழகானது , ஐரோப்பா கண்டம் வட அமெரிக்காவுடன் ஒப்பிடும் போது மிகச் சிறிய கண்டம் , பல் நாட்டு பல மொழி கலாச்சாரத்தினைக் கொண்டது.பல நாடுகள் , சிறிய சிறிய நாடுகள் , பல சிறிய , நடுத்தர , பெரிய நகரங்கள் ...., இயற்கை எழில் என ஒரு பூலோக சொர்க்கம் . உலகிலேயே அதிகளவு சுற்றுலா பிரயாணிகள் செல்லும் நாடான பிரான்ஸை தன்னகத்தே கொண்டது , எனக்கு ஐரோப்பாவில் மிகவும் பிடித்த விடயங்களிலொன்று  அதன் நகரங்கள் தான் , ஒவ்வொரு long weekend க்கும் ஒவ்வொரு நகரங்களுக்கு போய் வரலாம்  மிகக் குறைந்த விலையில் இப்போது விமான பயணங்களும் சாத்தியம்,  மிகச்சிறந்த புகையிரத இணைப்புச் சேவைகளும் உள்ளன , இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது கார் . booking.கொம் இல் ஒரு குறைந்த விலை hotel  ஐ புக் பண்ணிவிட்டு வெளிக்கிட வேண்டியது தான்.எனது வேலைத்தள நண்பர்கள் தமது அனுபவத்தில் கட்டாயம் போக வேண்டிய நகரங்கள் என எனக்கு சிபார்சு செய்த நகரங்களே ஒரு இருபைந்தைத் தாண்டும் அவற்றில் சில....

London ,Paris, Amsterdam, Barcelona, Rome, Vienna, Madrid, Seville, Berlin, Valencia, Munich, Nürnberg, Prag, Budapest, Dresden , stockholm, Venice, Florence, Naples,  Bordeaux, Nice, Monaco , Edinburgh ,  Innsbruck , Salzburg , st petersburg.....

 

 

 

  • Like 2

Share this post


Link to post
Share on other sites
On 9/25/2017 at 11:30 PM, suvy said:

பயணக் கட்டுரையின் ஆரம்பமே அசத்தலாக இருக்கு ஆதவன், படங்களும் பிரமாதம் தொடருங்கள்......!  tw_blush:

 

On 10/7/2017 at 8:34 PM, suvy said:

வாவ்.....நல்ல நகைச்சுவையாக எழுதிக் கொண்டு வருகின்றீர்கள் இயல்பு மாறாமல்.தொடருங்கள்......!  tw_blush:

 

On 10/25/2017 at 6:36 PM, suvy said:

உங்களின் பயண அனுபவங்களுடன் மேலும் சிலரின் குறிப்புகளையும் சேர்த்து தந்தது பயனுள்ளதாக இருந்தது, பகிர்வுக்கு நன்றி ஆதவன்......!  tw_blush:

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சுவி அண்ணா, நான் ஒவ்வொரு பகுதி எழுதியதும் , அதற்கு நீங்கள் எழுதும் பின்னூட்டங்கள் எனக்கு மிகப் பெரிய உற்சாகத்தினைத் தந்தன.

நான் எனது பயணத்தினை முடித்து வந்த பின்னர் எனது நண்பர் ஒருவர் தனது பயணத்தினைப் பற்றி கூறினார் , அவர் சுவிசிலிருந்து இத்தாலியின் துறைமுக நகரான ஜெனோவா (Genoa) (அமெரிக்காவைக் கண்டு பிடித்த கொலம்பஸின் சொந்த ஊர்) சென்று பின்னர் மொனாக்கோ(Monaco), நைஸ் (Nice /Nizza) , கான்ஸ் (Cannes) எல்லாம் சென்று வந்தார் , மிகவும் நல்ல பயணம் எனக் கூறினார் , மொனாக்கோவில்  நல்லதொரு யாழ் உணவகம் ஒன்று தாயகம் எனும் பெயருடன் இயங்குவதாக குறிப்பிட்டார் , (உணவகத்தினுள் பெரிய தேசியத் தலைவரின் படம் ஒன்று இருந்ததாகவும் குறிபிட்டிருந்தார்) அடுத்த வருடம் வேறு பயணங்கள் எதுவும் போகாவிடில், நண்பனின் பயணப்பாதையில் பயணிப்பதாக  உத்தேசம் , நீங்கள் பாரிசிலிருந்து வெகு தொலைவில் இருப்பதாக  எங்கோ குறிப்பிட்ட நினைவு, நீங்கள் நான் வரும் பக்கம் இருந்தால் தயாராக இருங்கள் ஒரு கோப்பியாவது சேர்ந்து குடிப்போம் .

தாயகம் உணவகத்தினைப் பற்றி இணையத்தில் தேடினேன் , நல்லா எழுதியிருக்கிறார்கள்

https://www.tripadvisor.com/ShowUserReviews-g1096027-d2261098-r179509236-Thayagam-Beausoleil_French_Riviera_Cote_d_Azur_Provence_Alpes_Cote_d_Azur.html

 

On 9/26/2017 at 1:24 AM, யாயினி said:

பகிர்வுக்கு நன்றி ..தொடருங்கள்.

உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி யாயினி ( ஒருவாறு பகலவனை எடிட் செய்து ஆதவன் என மாற்றி விட்டீர்கள்)

On 9/26/2017 at 3:09 PM, தனிக்காட்டு ராஜா said:

தொடரட்டும் ஆதவன் அட சின்ன வயசுக்காரராயா நீங்கள்  ஹாஹா:unsure:

 

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி தனிக்காட்டு ராஜா , உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி தனிக்காட்டு ராஜா  பெரிதாக ஒன்றும் சின்ன வயதில்லை எனது profile இல் சரியான வயதினேயே குறிப்பிட்டுள்ளேன் .

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, Athavan CH said:

 

உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி யாயினி ( ஒருவாறு பகலவனை எடிட் செய்து ஆதவன் என மாற்றி விட்டீர்கள்)

 

ம்ம்ம்..??sorry.

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் ஆதவன் 
மிகவும் ரசிக்கக்கூடிய உரை நடையில் சின்ன சின்ன விடயங்களையும் அழகுற எழுதியிருக்கிறீர்கள்!!
படங்கள் மிகவும் அருமை. படங்களோடு படங்களாக அப்படியே உங்கள் உங்கள் குடும்ப Selfi இணைத்துவிடுங்கள். 

Edited by Sasi_varnam
  • Like 1

Share this post


Link to post
Share on other sites

உங்கள் கட்டுரையின் முதல் பகுதி மட்டுமே வாசித்துவிட்டு மேலே இருந்த குறிப்பை எழுதியிருந்தேன்.
மொத்த கட்டுரையும் பிரம்மாதம் ஆதவன். 
நிறைய பயனுள்ள தகவல்களோடு கட்டாயம் போய்  பார்க்கவேண்டும் என்ற உணர்வு மேலோங்கி நிட்கின்றது.
உங்கள் குடும்பத்தோடு சேர்ந்து ..உங்கள் பக்கத்துக்கு சீட்டில் இருந்து பயணம் செய்த அனுபவம் எனக்கு!! 

ஜெசெலோ , மிலான் , லுபியானா என 
வாயிட்குள் புகாத பெயர் கொண்ட ஊர்களில்
உயிருக்குள் புகும் எங்கள் இசைஞானி இசை.

பயணக்கட்டுரை எழுதாவிட்டாலும் உங்கள் வாராந்த "குரோசரி" மளிகைக்கடை அனுபவங்களையாவது எழுதுங்கள்.
உங்கள் அடுத்தவருட பயணக்கட்டுரை வரும் வரை பொறுத்திருப்பது கடினம்.

சிறு குறிப்பு : படத்தில் இருந்த அழகிய பெண் 
Ivanka Trump "இவான்கா" ட்ரம்பின் மகள். 
முதல் மனைவியின் பெயர் Ivana "இவானா".  Ivana + Trump = Ivanka Trump (ட்ரம்பின் 'விதை' நெல்லில் வளர்ந்த நல்லதொரு அறுவடை ) tw_wink:

Edited by Sasi_varnam
  • Like 2

Share this post


Link to post
Share on other sites
On 10/24/2017 at 10:39 AM, Athavan CH said:

ivanka16-49567.jpg

  Ivanka Trump

தவறான தகவலுக்கு மன்னிக்கவும்  Ivanka Trump  அமெரிக்க அதிபரின் முதல் மனைவியின் மகளாவார், தவறைச் சுட்டிக்காட்டிய சசிவர்ணத்திற்கு மிக்க நன்றி.

Share this post


Link to post
Share on other sites
On 9/26/2017 at 11:27 PM, Kavallur Kanmani said:

ஆதவனின் பயணக் கட்டுரை அருமையாக உள்ளது. படங்களும் மிக அழகு. தொடருங்கள்

உங்கள் கருத்துக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி கண்மனி அக்கா.

 

On 9/28/2017 at 2:41 PM, ஈழப்பிரியன் said:

ஆதவன் நீங்கள் மட்டுமல்ல நாங்களும் உங:களுடன் சேர்ந்து பயணம் செய்த மாதிரியே இருக்கிறது.

அது சரி வாகனத்தை ஓட்டிக் கொண்டு எப்படி படங்கள் எடுத்தீர்கள்?

உங்கள் கருத்துக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி ஈழப்பிரியன்,படமெல்லாம் இணையத்தில் பெறப்பட்டவை, படமெடுப்பதில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை ஈழப்பிரியன்.

 

On 9/29/2017 at 4:32 AM, ராசவன்னியன் said:

 

இயற்கைக்கு சவாலான உயரமான மலைகளைக் குடைந்து, இந்தக் குகை அமைந்தவிதம் பற்றி சில தடவை யூ டுயூபில் பார்த்து ரசித்துள்ளேன்..

பல தொழிற்நுட்ப பணியாளர்களின் கடின உழைப்பால் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.. அவர்களுக்கு பாராட்டுக்கள்.. !

you-did-it-congratulations.png?w=820&h=3

மிக ரம்மியமான, மனதை கொள்ளை கொள்ளும் அழகு..! படங்களுக்கு நன்றி..!!

ஒரு திரைப்படத்தின் சுவாரசியத்தை முதல் பத்து நிமிடங்களிலேயே கணித்து விடலாம்.. நமது மனதிலும் முத்திரை பதித்துவிடும்..

படங்களின் அழகிற்கு இணையாக ஆதவனின் திறமையான எழுத்து நடையும் கட்டுரையை தொடர்ந்து வாசிக்க எதிர்பார்ப்பை தூண்டுகிறது..

 

உங்கள் பின்னூட்டத்திற்கும்  ஊக்கத்திற்கும் மிக்க நன்றி ராசவன்னியன்.

Share this post


Link to post
Share on other sites
On 11/3/2017 at 11:35 PM, Athavan CH said:

உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி நுணா , உண்மை தான் நுணா ஐரோப்பா மிகவும் அழகானது , ஐரோப்பா கண்டம் வட அமெரிக்காவுடன் ஒப்பிடும் போது மிகச் சிறிய கண்டம் , பல் நாட்டு பல மொழி கலாச்சாரத்தினைக் கொண்டது.பல நாடுகள் , சிறிய சிறிய நாடுகள் , பல சிறிய , நடுத்தர , பெரிய நகரங்கள் ...., இயற்கை எழில் என ஒரு பூலோக சொர்க்கம் . உலகிலேயே அதிகளவு சுற்றுலா பிரயாணிகள் செல்லும் நாடான பிரான்ஸை தன்னகத்தே கொண்டது , எனக்கு ஐரோப்பாவில் மிகவும் பிடித்த விடயங்களிலொன்று  அதன் நகரங்கள் தான் , ஒவ்வொரு long weekend க்கும் ஒவ்வொரு நகரங்களுக்கு போய் வரலாம்  மிகக் குறைந்த விலையில் இப்போது விமான பயணங்களும் சாத்தியம்,  மிகச்சிறந்த புகையிரத இணைப்புச் சேவைகளும் உள்ளன , இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது கார் . booking.கொம் இல் ஒரு குறைந்த விலை hotel  ஐ புக் பண்ணிவிட்டு வெளிக்கிட வேண்டியது தான்.எனது வேலைத்தள நண்பர்கள் தமது அனுபவத்தில் கட்டாயம் போக வேண்டிய நகரங்கள் என எனக்கு சிபார்சு செய்த நகரங்களே ஒரு இருபைந்தைத் தாண்டும் அவற்றில் சில....

London ,Paris, Amsterdam, Barcelona, Rome, Vienna, Madrid, Seville, Berlin, Valencia, Munich, Nürnberg, Prag, Budapest, Dresden , stockholm, Venice, Florence, Naples,  Bordeaux, Nice, Monaco , Edinburgh ,  Innsbruck , Salzburg , st petersburg.....

 

 

 

நல்லதொரு அருமையான ஆக்கம் உங்களுடனே நாங்களும் பயணிப்பது போன்ற எழுத்துக்கள் .

உங்கள் பயண லிஸ்ட்டில்  லண்டன் :14_relaxed: இங்கு வரும் நம்ம நண்பர்கள் எல்லோரும் சொல்வது கொழும்பு கோட்டை பகுதி தெருக்கள் போன்று இருக்கிறது எண்டு அதுவும் சமர் வெயில் கொளுத்தும் காலம்களில் சொல்லவே வேண்டாம் ரியல் கொட்டேனா என்பார்கள் (சாக்கடைகள் சில இடங்களில் மணக்க தொடங்கும் ) ஆனாலும் எங்களுக்கு புகுந்த வீடு சொர்க்கம்தான் .

Share this post


Link to post
Share on other sites
On 10/24/2017 at 2:37 AM, நிழலி said:

நான் ஒவ்வொரு தடவையும் இந்த திரியின் தலைப்பை வாசித்து வீட்டு இது இன்னொரு தளத்தில் இருந்து வெட்டி எடுத்த கட்டுரை என நினைத்து வாசிக்காமல் கடந்து சென்று இருந்தேன். இப்ப தான் ஆதவன் எழுதும் பயண கட்டுரை என கண்டு கொண்டேன்

புதிதாக எழுதும் ஒருவரின் கட்டுரை மாதிரி தெரியவில்லை. தொடருங்கள் ஆதவன்

மற்றது, போன வருசம் சிங்கன் தனக்கு ஒரு தேவதை பிறந்தது பற்றி மூச்சே காட்டாமல் இருந்து இருக்கின்றார். பெண் பிள்ளைகள் இயற்கை அப்பாக்களுக்கு கொடுக்கும் ஆசீர்வாதங்கள். வாழ்த்துக்கள்  ஆதவன்

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி நிழலி ,  சும்மா எழுத வெளிக்கிட்டது தலைப்பைப் பற்றியெல்லாம் பெரிதாக யோசிக்கவில்லை நிழலி. தேவதை பிறந்தது மிகப் பெரிய சந்தோசம். அதை யாழில் பகிர்ந்திருக்கக் கூடிய நிலமை அப்போதிருக்கவில்லை, நெருங்கிய நண்பர்களோ , உறவினர்களோ இங்கு எனக்கு இல்லை...., மனைவி வைத்தியசாலையில், மூத்த மகள் பாடசாலை என தனியே சுற்றிச் சுழல்வதிலேயே நேரம் போய்விட்டது.  இப்ப மட்டும் என்னவாம்  கொஞ்ச நேரம் வீட்டில் சும்மா இருந்தா காணும், மனைவி குட்டி தேவதையையும் சாப்பாட்டையும்  தந்து , சாப்பாட்டை தீத்துங்கோ என விட்டு விடுவா.....,  அம்மாவிடம் எனறால் கமுக்கமா சாப்பிடுவினம் , அப்பாவிடம் என்றால் ஒரே விளையாட்டுத்தான் , எவ்வளவு தான் முகத்தை இறுக்கமாக வைத்து உறுக்கினாலும் அவர்களைப் பொறுத்தவரையில் அப்பா என்பவர் காமெடி பீஸ் தான் ஒரு பயமும் இல்லை , ஒருவாறு யூடியுப்பில் குழந்தைப் பாடல்களைப் போட்டு கஸ்ட்டப்பட்டு சாப்பாடு தீத்திக் கொண்டு இருந்தால் , மனைவி வந்து பார்த்து விட்டு  " உங்கள்ட்ட பிள்ளைக்கு சாப்பாடு தீத்த தந்தனானோ பிள்ளையிண்ட முகத்தில பெயின்ற் அடிக்க தந்தனானோ என" ஒரு நக்கல்ஸ் ஒன்று விடுவா பாருங்கோ....., ஒருவாறு கூத்தாடி , கும்மியடிச்சு சாப்பாட்டை தீத்தி முடிக்க , 7 வயது கிழவி தனது பிளேட்டை கொண்டுவருவா அப்பா எனக்கும் தீத்தி விடுங்கோ  என .....
ஏதோ நிழலி  வெண்கலக் கடையினுள் யானை புகுந்தது போல ஒரே கலகலவாக வீடும் வாழ்க்கையும் போகுது....tw_blush:

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு