Jump to content

''அதிரடி தாக்குதல் நடக்குது...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

''அதிரடி தாக்குதல் நடக்குது விடுதலை ஈழம் பிறக்குது....||

தீயாய் எழுந்து

தீங்குகள் எரி

கயவர் என அறிந்தால்

காவு எடு...

ஈழத் தாய் ஈன்ற- நீ

ஈழ மகனென்றால்

இன்னல் துடை

இரும்பு கரம் அறு....

போர் வாளெடுத்து

போருக்காய் வந்த

பகை வாளை

பந்தாடு.....

நீ

காவிய தாய் மகனெ;னறால்

கலங்கம் துடை

''புலம் பெயர்ந்து வந்தாயாயினும்

புலியாகி எழு.......''

சிறும் பம்பாகி - பகை

சீறி வந்தால்

சிரச் சேதம் செய்.....

உன் தமிழை உரையாடி

உன்னோடு உறவாடி

உள்ளிருந்து உளவெடுத்து

உன்னை உதைப்பானாயின்- அவனை

வெட்டி எறி- உலகிருந்து

வெற்றிட மாக்கு.....

போலியென நீ அறிந்தால்

பொறுக்கியாய் இரு

கயவன் அவனே தான்

களுத்தை அறு.....

''வந்த நாடதுவே

சொநத் நாடென்று வாயடித்தால்

வாதடு...உண்மை எடுத்தாடு.- அவர்

உள்ளம் மாற்று....''

''பங்களிப்பு இல்லையாயினும்

பங்களியாய் இரு என்று

பக்குவமாய் நீ சொல்லு

பகுத்தறிவை நீ ஊட்டு.....''

தலையணைக்குள் முகம் புதைத்து

தாய் மண் நினைவுகளை

கனவாய் காண். என்று

கட்டளை இடு....

எம் தமிழர் இன்னல்களை

எடுத்தியம்பு

எரிமலையாய் பொங்கு...

கூடு விட்டு வந்தோமென்று

குமுறி அழுவதை நிறுத்து

நாட்டுக்கு நல் உதவிகளை

நாளும் வளங்கு.....

சாவுகள் தொடருதென்று

சலிக்காதே பகை - உயிர்

காவெடுக்க புலி களம் பாயுமென்று

அடித்து சொல்லு

அவன் தமிழன் என்று மொழி....

''பாய வந்த புலிகள்

படுக்கவில்லையென்று

பறையடி.....''

தமிழர் தேசமெங்கும்

தலை விரித்தாடும்

இன்னல் இனியும் அங்கு

இருக்காதென்று செப்பு....

உலகத் தமிழினமே

உயிர்த்தெழு என்று

உரக்க கூவு....- இது

விடுதலையின் காலமென்று

விடை சொல்லு.....

நாடோடி வாழ்வதை

நறுக்கி எறி

எங்கள் ஈழ வீடு குந்த

இன்றே எழு.

இனியும் என்ன கலக்கம்...???

அந்தோ பார் அதிரடி

தாக்குதல் நடக்குது

இந்தோ பார்

விடுதலை ஈழம் பிறக்குது....!!!

-வன்னி மைந்தன் -

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

''பங்களிப்பு இல்லையாயினும்

பங்களியாய் இரு என்று

பக்குவமாய் நீ சொல்லு

பகுத்தறிவை நீ ஊட்டு.....''

அருமையான ஆக்கம், தொடரட்டும் ....

பாங்குடனே பரவட்டும் பகுத்தறிவு தீ

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.