Jump to content

சார்.. ! இந்த ரோடு தாம்பரம் போகுங்களா ?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

20620919_1159984770770065_21681578371722

“சார் ! இந்த ரோடு தாம்பரம் போகுங்களா ?"

வார்த்தை பாதியும், வறுமை மீதியுமாய் வந்து சேர்ந்த வார்த்தைகள் சட்டென என்னை திரும்பி பார்க்க வைத்தது, கெச்சலான தேகம், உழைத்து உழைத்தே உள்ளே போன கண்கள், அடி பைப்புகளில் துவைத்து கட்டியே அழுக்கேறிய வேட்டி சட்டை, கையில் ஒரு பிளாஸ்டிக் பை சகிதம் ஒரு பெரியவர் நின்றிருந்தார்.

மறுபடியும் ஒரு முறை கேட்டார், "தம்பி இந்த ரோடு தாம்பரம் போவுமுங்களா ?”

“ஐயா, இது கோயம்பேடு ரோடு, ரைட் சைடு போகுது பாருங்க, அதான் கிண்டி, தாம்பரம் ரோடு, எதித்தாப்ல போய் நில்லுங்க, தாம்பரம் பஸ் வரும் ! " சரி என தலையாட்டிவிட்டு, எதிர்புற ரோட்டில் நுழைந்து, பஸ் ஸ்டாப்பில் நிற்காமல் கிண்டியை நோக்கி விறு விறு வென நடக்க துவங்கினார், "அய்யா ! அடுத்த பஸ்ஸ்டாப் ரொம்ப தூரம், இங்கயே நில்லுங்க ! என நான் சொல்ல சொல்ல, "இல்ல தம்பி நான் நடந்தே போய்டுவேன்" என வேகத்தை குறைக்காமல் அதே விறுவிறு நடையை தொடர்ந்தார்.

‘அட, பெருசு சொன்னா கேக்கிறாரா பாரு!' என சலித்து நின்ற என்னை, என் மனசாட்சி மைக்ரோ நொடியில் வெளியே வந்து உலுக்கி அவர் வறுமையை மூளையில் உறைக்க வைத்தது.

குற்ற உணர்வுடன் அவரை துரத்தி பிடித்தி “பஸ் காசு தரேன், பஸ்ல போங்க” என்றேன், என்ன நினைத்தாரோ என்னவோ
“ஏமாத்திட்டாங்க தம்பி, நல்லா ஏமாத்திட்டானுக! அதான் நடந்தே ஊருக்கு போறேன்" என்றார்.

“யாரு ஏமாத்தினாங்க ?, எங்க தாம்பரமா உங்க ஊரு”

“இல்ல தம்பி, காஞ்சிபுரம் !“

ஒரு நிமிடம் ஆடிப்போய், அதிர்ச்சி விலகாமல் கேட்டேன், "இப்போ காஞ்சீபுரத்துக்கா நடந்து போறீங்க !"

"ஆமாந்தம்பி, காஞ்சிபுரத்தில் ஒரு ஓட்டல்ல க்ளீனிங் வேலை பாத்துட்டு இருந்தேன், இங்க செகுயூரிட்டியா வாய்யா, 8000 சம்பளம்னாங்க, அதாங்க 6 நாளுக்கு முன்னாடி தெரிஞ்சவர் கொணாந்து இங்க விட்டார். ரோகினி, ராகினி தியேட்டர்ல டூட்டி போட்டாய்ங்க, போனப்புறம் தான் தெரிஞ்சது, அது 24 மணி நேரம் வேலை தம்பி, 18 மணி நேரத்துக்கு மேல நின்னே இருக்கணும், நைட்டு இரண்டாவது ஆட்டம் முடிஞ்சவுடன் ரெண்டு மணிக்கு மேல தியேட்டர் படிக்கட்ல படுத்துக்கலாம், ஐஞ்சு மணிக்கு க்ளீனிங் ஆளுக வந்ததும் மறுபடியும் வேலை ஆரம்பிச்சுரும், உடம்பு வலி முடியல தம்பி, அப்படியே பிச்சு திங்குதுங்க, ஒரு நாள் பூரா வேலை பாக்க முடியலைங்க சார், டூட்டி மாத்தி விட முடியுமான்னு கேட்டேன், வேலை கிடையாது, கெளம்புன்னுட்டாங்க, ஐஞ்சு நாலு உழைச்ச காசையாவது கொடுங்கனு கேட்டா, போட்ட சோத்துக்கு எல்லாம் சரியா போச்சுன்னு சொல்லிட்டாங்க தம்பி, அதான் ஊருக்கே போய் பழைய வேலையே பாக்கலாம்னு கெளம்பிட்டங்க" என அவர் சொல்லிமுடித்தவுடன் ஆத்திரமும், பரிதாபமுமாக “ஐயா, அவனுகள விடுங்க, ஒரு நிமிஷம் இருங்க பஸ் காசு தரேன் பஸ்ல போங்க" என்று பணத்தை எடுத்தேன்.

“அட விடுங்க தம்பி, இதே வேகத்தில் போன நைட்டு பன்னெண்டு மணிக்கு முன்ன ஊருக்கு போய்டுவேன், ஒரு நா பேரனுக்கு உடம்பு சரியில்லைன்னு வேண்டிக்கிட்டு திருப்பதிக்கு 10 மணி நேரத்தில போயிருக்கேன், இதல்லாம் சாதாரணமுங்க, என்ன நா பூரா நின்னு உழைச்ச காசை ஏமாத்திட்டானுக, அதாங்க தாங்க முடியல என மறுபடியும் நடையை தொடர, விடாப்பிடியாய் இழுத்து பிடித்து கையில் இருந்த இருநூறை அவர் கையில் திணித்தேன். ஒரு நிமிடம் என்னை உற்று பார்த்தவர் நான் எதிர்பாரா நொடியில் சடாரென காலில் விழ எத்தனித்தார்.

“அட என்னங்கய்யா இது !” என அதிர்ந்து போய், அரையடி நகர்ந்து அவரை தோளை பிடித்து தூக்க கண்களில் கண்ணீருடன் கை கூப்பி நின்றார்.

“ஐயா, இதுக்கு ஏன் அழுவறீங்க!, போகும் போது சாப்பிட்டு போங்க என்றேன்,”

கண்ணை துடைத்துக்கொண்டே சில அடி நகர்ந்தவர், திரும்பி வந்து, “பணம் தந்தத்துக்கு அழுவல தம்பி, காலைல ஒருத்தர்கிட்ட, சார் வேலைல இருந்து விரட்டிட்டாங்க சார்னேன், சில்லறை இல்லப்பானு சொல்லிட்டார். அப்பத்தான் புரிஞ்சது, இந்த ஊர்ல உதவினு கேட்டாலே பிச்சைக்காரனு நினைச்சுக்குவாங்கன்னு, ஆனா கேட்காமலியே புடிச்சு நிறுத்தி நீங்க காசு தந்தீங்களா, அதான் அடக்க முடியாம அழுதுட்டேன், அது சரி, நீங்க எந்த ஊர் தம்பி ? "

அவர் கேட்டவுடன் பழக்கதோஷத்தில் கோயமுத்தூர்ங்க என் சொல்ல எத்தனித்தவன் ஒரு நொடி யோசனைக்கு பின், அவர் கையை பிடித்து தீர்க்கமாக சொன்னேன், “நானும் சென்னை தாங்க !"

நண்பர் அனுப்பிய முகநூல் இணைப்பு

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாடு ஒரு மாநிலம்  தமிழ்நாடு தனிநாடு இல்லை  தமிழ்நாடு வெளிநாட்டு கொள்கையில் 1% கூட. இதுவரை பங்களிப்புகள் செய்யவில்லை   செய்ய முடியாது  தமிழ்நாடு இந்தியா மத்திய அரசாங்கத்தினால் ஆளப்படுகிறது  தமிழ்நாட்டில்,.சீமான் கமல்   விஐய்.  ஸ்டாலின் உதயநிதி   நெடுமாறன். வைகோ      கருணாநிதி  எம் ஜி” ஆர்    அண்ணா,.......இப்படி எவர் முதல்வர் பதவியில் இருந்தாலும்   வெளிநாட்டுத்தமிழராகிய. இலங்கை தமிழருக்கு 1% கூட பிரயோஜனம் இல்லை    தமிழ்நாட்டில் 7 கோடி தமிழனும் தமிழ் ஈழம்  மலர வேண்டும் என்று ஆதரித்தாலும்.  தமிழ் ஈழம்  கிடைக்காது  எனவே… ஏன் குதிக்க வேண்டும்???  இந்த சீமான் ஏன் குதிக்கிறார??  என்பது தான் கேள்வி??  ஆனால்  சீமான்  தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம்  முதல்வராக வரலாம்”   தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்யலாம்    எங்கள் ஆதரவு 100% உண்டு”   கண்டிப்பாக ஆதரிப்பேன் ஆனால்  இலங்கை தமிழருக்கு  அது செய்வேன் இது செய்வேன்   என்று  ஏமாற்றக்கூடாது 😀
    • பகிர்வுக்கு நன்றி ஏராளன் ........!   🙏
    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.