Jump to content

மத விழாக்களின் அவசியம்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

மத விழாக்கள் / பண்டிகைகள் பற்றிய விழிப்புணர்வு என்ற பெயரில் முகநூல் போன்ற சமூகவலைத்தளங்களில்  அடிக்கடி பல தேவையற்ற விவாதங்களைக் காணக்கூடியதாக இருக்கிறது. அண்மையில் கூட நவராத்திரி விழா பற்றி மிக கீழ்தரமாக கேலி செய்தும் சில பதிவுகள் உலாவந்தன. 

மக்களை நெறிப்படுத்தும் நோக்கில் தான் எந்த ஒரு மதமும் தோற்றுவிக்கப்பட்டது என்பது பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. மத விழாக்கள், சடங்குகள் தேவை தானா என்ற கேள்விக்குப் பதிலாக இன்னொரு கேள்வியை நாம் கேட்கலாம். 
இன்று அதிகரித்துள்ள சமூகப் பிரச்சினைகள் பலவற்றை எண்ணி வருந்தும் நாம், அதற்கான மூல காரணங்கள் பற்றி உற்று நோக்குவதில்லை. போதைப்பொருள் பாவனை, பாலியல் கொடுமைகள், மதுவுக்கு அடிமையாதல் இப்படி இன்னும் ஏராளமான பல பிரச்சினைகளை நமது சமூகம் ஏன் எதிர் நோக்குகின்றது? இதற்கு பல காரணங்கள் இருப்பினும், ஆன்மீக மற்றும் உளவியல் ரீதியாக சிந்தித்தால் இதற்கான விடைகிடைக்கும். தன்னை முழுமையாக உணர்ந்து கொள்வதும், தான் பழகும் மனிதரும் தம்மைப் போல் ஒரு பிறவிகள் தாம் என்பதை மனதில் வைத்து அன்பு பகிர்தலும் ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியமான ஒன்று. ஆயினும், இதை நாம் எல்லோரும் அநேகமான பொழுதுகளில் மறந்துவிடுவதன் பெருக்கமான விளைவுகளே மேற்குறிப்பிட்ட சமூகப்பிரச்சினைகள். 

இனி, மத விழாக்கள் பற்றிப் பார்ப்போமானால், விரதங்கள் உடல், மன ரீதியான ஒழுக்கத்தையும், கூட்டுப்பிரார்த்தனைகள் நாம் எல்லோரும் ஒன்றே என்ற உணர்வையும், உணவுப்பொருள் பிரசாதங்கள் பகிர்தல் அன்பின் பரிமாற்றமாகவும், இசை, நடனம் போன்ற கலைகள் தனிமனிதனாகவும், குழுவாகவும் சேர்ந்து கொண்டாடி மகிழ்வதன் சிறப்பையும் உணர்தும். சுருங்கச் சொன்னால், ஆன்மீகத்துடன் கலை, கலாசார நற்பண்புகளை கலந்து உருவாக்கப்பட்டவைதான் மதங்கள்.  இவற்றை கேலிசெய்து ஒதுக்குவது  விளைவும் இன்றுள்ள சமூக பிரச்சினைககளுக்கு ஒரு காரணமாகும். அத்துடன், மதம் என்பது ஒரு கருவி, அதை நல்ல வழியில் பயன்படுத்தினால் மட்டுமே நல்விளைவுகளைத் தரும்! அதைத்தவறாகப் பயன்படுத்தினால் மதத்தின் தவறல்ல; அது நமது தவறு.

பகிர்வின எல்லாம் அன்புப் பரிமாற்றமாகவும், பெறுவன எல்லாம் அன்பை உணர்ந்த திருப்தியுடனும் அமையட்டும்! ???

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, யாயினி said:

தொடர்ந்து மல்லிகை வாசம் வீச வாழ்த்துக்கள்.

நன்றி யாயினி. தொடர்ந்து பகிரவும், கருத்திடவும் மிக்க ஆர்வம். நேரமிருக்கும் போதெல்லாம் கண்டிப்பாக செய்வேன். :)

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • வவுனியாவில் இராணுவத்தின் துப்பாக்கி சூட்டில் இருவர் காயம்! வவுனியா – ஓமந்தை பகுதியில் இராணுவத்தின் துப்பாக்கிசூட்டிற்கு இலக்காகி இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று (புதன்கிழமை) காலை 4 மணிக்கு இடம்பெற்றுள்ளது. ஓமந்தை காட்டுப் பகுதியில் இருந்து சட்டவிரோதமாக மரங்களை கடத்திச் சென்ற வாகனத்தை வீதியில் கடமையில் நின்றிருந்த இராணுவத்தினர் மறித்துள்ளனர். எனினும் வாகனம் நிற்காமல் சென்றதையடுத்து அதன் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக இராணுவத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் சேமமடு பகுதியைச் சேர்ந்த பிரசாத், சஜீவன் ஆகியோர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட மரம் ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். http://athavannews.com/வவுனியாவில்-இராணுவத்தின/
  • ஜனாசா நல்லடக்க விடயத்தில் அரசாங்கத்தின் தான்தோன்றித்தனம் ஏற்புடையதல்ல- ரெலோ ஜனாசா நல்லடக்கம் குறித்து முஸ்லிம் தலைவர்களுடன் பேசியே  தீர்மானிக்க வேண்டும் எனவும் அரசாங்கத்தின் தான்தோன்றித்தனமான செயற்பாடு ஏற்புடையதல்ல என்றும் ரெலோ கண்டனம் வெளியிட்டுள்ளது. அத்துடன், முஸ்லிம் மக்களினுடைய ஜனாசா நல்லடக்கம் பற்றிய விடயத்தைத் தொடர்ந்தும் சர்ச்சைக்குரியதாகவே அரசாங்கம் ஆக்கிவருவது கண்டனத்துக்குரியது என அக்கட்சி குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக ரெலோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜனாசா விடயத்தில் முஸ்லிம் மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவது போல பாசாங்கு காட்டி அதைத் தொடர்ந்தும் நிறைவேற்றாது கேள்விக்குறியாக வைத்திருக்கின்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். அரசாங்கம் தாங்கள் நினைத்த இடங்களில் தங்கள் வசதிக்கு ஏற்ப முஸ்லிம் மக்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய முற்படுவது அடிப்படை மனித உரிமை மீறிய செயலாகும். இரணைதீவிலே நல்லடக்கம் செய்ய முற்படுவதும் இதைத் தெளிவாக வெளிப்படுத்துகிறது. மாறாக முஸ்லிம் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி  ஜனாஸாக்களை எங்கு அடக்கம் செய்யப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை எட்டுவதே அந்த மக்களுடைய கோரிக்கையை கௌரவமான முறையில் நிறைவேற்றுவதாக அமையும். ஏற்கனவே, மன்னாரில் நல்லடக்கம் செய்ய முற்பட்டு அது வெற்றியளிக்காமல் போன நிலைமையிலே மீண்டும் இரணைதீவைத் தெரிந்தெடுத்திருப்பது இன முறுகலை தோற்றுவிக்கின்ற நடவடிக்கையாகவே நாங்கள் கருதுகிறோம். மேலும், இந்த முடிவு சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு பெரும் அசெளகரியங்களை ஏற்படுத்தும் நடவடிக்கையாகும். ஒரு முஸ்லிம் இறந்து 24 மணித்தியாலங்களுக்கு ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் என்பதே அவர்களுடைய பிரதான கோரிக்கையாக அமைந்திருக்கிறது. பொது இடங்களைத் தெரிந்தெடுத்து அங்கு நல்லடக்கம் செய்ய முற்படுகின்ற போது, நாட்கணக்கில் அல்லது வாரக்கணக்கில் இழுத்தடிப்பை ஏற்படுத்துவதோடு அந்தக் குடும்பங்கள் குறித்த இடங்களுக்குச் சென்று தமது முறையைப் பின்பற்றுவது இலகுவான காரியமாக இருக்கப்போவதில்லை. இப்படியான, இழுத்தடிப்பு செய்வதையும் மற்றவர் கலாசார முறைகளை அரசாங்கமே தீர்மானிப்பதையும் தவிர்த்து, குறித்த இனத் தலைவர்களோடு பேச்சுவார்த்தையை நடத்தி நாடு முழுவதும் ஜனாஸா நல்லடகத்துக்கான பொது விதிமுறையைக் கையாள்வதன் மூலமே இதற்கு நிரந்தரத் தீர்வை வழங்குவதோடு அந்த மக்களுடைய கோரிக்கையை நிறைவேற்றுவதாக அமையும். தவிர, இப்படியான நடவடிக்கைகளால் முடிவுகள் எட்டப்படாது. ஆகவே, அரசாங்கம் பாசாங்கு செய்வதைவிட சரியான தீர்வினை முஸ்லிம் தலைவர்களுடன் கலந்தாலோசித்து முன்னெடுப்பதே இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை கொடுக்கும். இதற்கு அரசு ஆவன செய்ய வேண்டும். http://athavannews.com/ஜனாசா-நல்லடக்க-விடயத்தில/
  • பிரித்தானியாவில் வீட்டின் விலை அதிகரிப்பு: நேஷன்வையிட் தகவல்! பிரித்தானியாவில் வீட்டின் விலை அதிகரித்துள்ளதாக நேஷன்வையிட் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது. சராசரி மதிப்பு 231,068 பவுண்டுகளை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வருடத்திற்கு முன்பு இருந்த விலையை விட 6.9 சதவீத உயர்வை கண்டுள்ளது. இது ஜனவரி மாதத்தில் 6.4 சதவீதமாக இருந்தது. ‘இந்த அதிகரிப்பு ஒரு ஆச்சரியம்’ என்று நேஷன்வைட்டின் ரோபர்ட் கார்ட்னர் கூறினார். ஏனெனில் முத்திரை வரி விடுமுறை முடிவடைவதற்கு முன்பே விலை வளர்ச்சி குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த விடுமுறை மார்ச் 31ஆம் திகதி முடிவடைய உள்ளது, இருப்பினும் அது நீடிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளிவந்தன. முத்திரை வரி விடுமுறை என்பது ஜூலை முதல் இங்கிலாந்து மற்றும் வடக்கு அயர்லாந்தில் உள்ள அனைத்து சொத்து விற்பனையிலும் முதல், 500,000 பவுண்டுகள் வரி நிறுத்தப்பட்டுள்ளது. இந்த வார வரவு செலவு திட்டத்தில் முத்திரை கட்டணத்தில் ஏதேனும் மாற்றங்கள் குறித்த அறிவிப்பு வரலாம். http://athavannews.com/பிரித்தானியாவில்-வீட்டி/
  • ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதித்தது அமெரிக்கா எதிர்க்கட்சி உறுப்பினர் அலெக்ஸி நவல்னியை கொலை செய்ய முயன்றதை அடுத்து ரஷ்யர்கள் மற்றும் அந்நாட்டு நிறுவனங்கள் மீது அமெரிக்கா இன்று பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. அதன் பிரகாரம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக ஜோ பைடன் நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் எதிர்க்கட்சி உறுப்பினர் அலெக்ஸி நவல்னியை சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும் என்ற ஜோ பைடனின் கோரிக்கையையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். http://athavannews.com/அலெக்ஸி-நவல்னியை-கொலை-செ/
  • புண்ணியம் இதுவென்று உலகம் சொன்னால், அந்த்ப் புண்ணியம் கண்ணனுக்கே...! போற்றுவார் போற்றலும்....தூற்றுவார் தூற்றலும், போகட்டும் கண்ணனுக்கே....! காண்டீபம் எழுக...! உன் கை வண்ணம் எழுக...! களமெலாம் சிவக்க வாழ்க....!!!
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.