Jump to content

மத விழாக்களின் அவசியம்


Recommended Posts

மத விழாக்கள் / பண்டிகைகள் பற்றிய விழிப்புணர்வு என்ற பெயரில் முகநூல் போன்ற சமூகவலைத்தளங்களில்  அடிக்கடி பல தேவையற்ற விவாதங்களைக் காணக்கூடியதாக இருக்கிறது. அண்மையில் கூட நவராத்திரி விழா பற்றி மிக கீழ்தரமாக கேலி செய்தும் சில பதிவுகள் உலாவந்தன. 

மக்களை நெறிப்படுத்தும் நோக்கில் தான் எந்த ஒரு மதமும் தோற்றுவிக்கப்பட்டது என்பது பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. மத விழாக்கள், சடங்குகள் தேவை தானா என்ற கேள்விக்குப் பதிலாக இன்னொரு கேள்வியை நாம் கேட்கலாம். 
இன்று அதிகரித்துள்ள சமூகப் பிரச்சினைகள் பலவற்றை எண்ணி வருந்தும் நாம், அதற்கான மூல காரணங்கள் பற்றி உற்று நோக்குவதில்லை. போதைப்பொருள் பாவனை, பாலியல் கொடுமைகள், மதுவுக்கு அடிமையாதல் இப்படி இன்னும் ஏராளமான பல பிரச்சினைகளை நமது சமூகம் ஏன் எதிர் நோக்குகின்றது? இதற்கு பல காரணங்கள் இருப்பினும், ஆன்மீக மற்றும் உளவியல் ரீதியாக சிந்தித்தால் இதற்கான விடைகிடைக்கும். தன்னை முழுமையாக உணர்ந்து கொள்வதும், தான் பழகும் மனிதரும் தம்மைப் போல் ஒரு பிறவிகள் தாம் என்பதை மனதில் வைத்து அன்பு பகிர்தலும் ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியமான ஒன்று. ஆயினும், இதை நாம் எல்லோரும் அநேகமான பொழுதுகளில் மறந்துவிடுவதன் பெருக்கமான விளைவுகளே மேற்குறிப்பிட்ட சமூகப்பிரச்சினைகள். 

இனி, மத விழாக்கள் பற்றிப் பார்ப்போமானால், விரதங்கள் உடல், மன ரீதியான ஒழுக்கத்தையும், கூட்டுப்பிரார்த்தனைகள் நாம் எல்லோரும் ஒன்றே என்ற உணர்வையும், உணவுப்பொருள் பிரசாதங்கள் பகிர்தல் அன்பின் பரிமாற்றமாகவும், இசை, நடனம் போன்ற கலைகள் தனிமனிதனாகவும், குழுவாகவும் சேர்ந்து கொண்டாடி மகிழ்வதன் சிறப்பையும் உணர்தும். சுருங்கச் சொன்னால், ஆன்மீகத்துடன் கலை, கலாசார நற்பண்புகளை கலந்து உருவாக்கப்பட்டவைதான் மதங்கள்.  இவற்றை கேலிசெய்து ஒதுக்குவது  விளைவும் இன்றுள்ள சமூக பிரச்சினைககளுக்கு ஒரு காரணமாகும். அத்துடன், மதம் என்பது ஒரு கருவி, அதை நல்ல வழியில் பயன்படுத்தினால் மட்டுமே நல்விளைவுகளைத் தரும்! அதைத்தவறாகப் பயன்படுத்தினால் மதத்தின் தவறல்ல; அது நமது தவறு.

பகிர்வின எல்லாம் அன்புப் பரிமாற்றமாகவும், பெறுவன எல்லாம் அன்பை உணர்ந்த திருப்தியுடனும் அமையட்டும்! ???

Link to comment
Share on other sites

8 minutes ago, யாயினி said:

தொடர்ந்து மல்லிகை வாசம் வீச வாழ்த்துக்கள்.

நன்றி யாயினி. தொடர்ந்து பகிரவும், கருத்திடவும் மிக்க ஆர்வம். நேரமிருக்கும் போதெல்லாம் கண்டிப்பாக செய்வேன். :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.