Jump to content

எம்மக்களின் அவலங்களை வெளிக்கொணராத ததேஊக்கள்!


Recommended Posts

கொழும்பில் பிரித்தானிய ஹரோவாசி கடத்தல் - பிரித்தானிய அமைச்சருக்கு சவால் விடும் "சர்வாதிகார மகிந்த குடும்பக்கும்பல்".

பிரித்தானியாவில் ஹரோ மேற்கை வதிவிடமாகக் கொண்ட சிவபாதம் சிவசொரூபன் எனும் வர்த்தகர், கடந்த ஒரு மாதங்களுக்கு முன் கொழும்பு வெள்ளவத்தையில் வைத்துக் இலக்கத்தகடற்ற வெள்ளை வானில் வந்த சிங்களப் புலனாய்வுத்துறையினருடன் சேர்ந்தியங்கும் கருணா ஒட்டுக்குழுவால் கடத்தப்பட்டு, பின் சிங்கள விசேட அதிரடிப்படையால் பொறுப்பேற்கப்பட்டு, காணாமல் போன சம்பவமானது, பிரித்தானியா அரசின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சரும், பிரித்தானிய அரசின் இலங்கை விவகாரங்களுக்குப் பொறுப்பானவரும், ஹரோ மேற்கைப் பிரதிநிதித்துவம் செய்யும் மாண்புமிகு திரு கரத் தோமஸ் அவர்களுக்கு சவால் விடும் வகையில் நிகழ்ந்திருப்பதாக தெரிகிறது.

இக்கடத்தல் தொடர்பாக நெருப்புக்கு கிடத்த உறுதியான தகவல்களின்படி, இக்கடத்தல் நாடகமானது பிரித்தானியாவில் இயங்கும் தமிழ் ஒட்டுக்குழுக்களினாலேயே திட்டமிடப்பட்டதாக தெரிகிறது. இக்கடத்தப்பட்ட வர்த்தகர் இலங்கைக்கு செல்வதற்கு சில நாட்களுக்கு முன்பாக, பிரித்தானியா ஈஸ்ராம் பகுதியிலுள்ள ஒரு மதுபான விடுதியில் "பவுடர்" தீபன் என்றழைக்கப்படும் பிரபல போதைவஸ்து கடத்துனரும், ஒட்டுக்குழு உறுப்பினருமான யோகராஜா தீபன் என்பவருடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதாகவும், அப்போது "பவுடர்" தீபனினால் சிவபாதம் சிவசொரூபனுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக, சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றார்கள்.

இச்சம்பவத்தின் பின் பிரித்தானியாவில் ஹரோவை தளமாக கொண்டியங்கும் ஒட்டுக்கும்பலின் கூலிகளினாலேயே, கொழும்பில் மகிந்த குடும்பக் கும்பலுக்காக ஆட்கடத்தல்கள், கொலைகள் செய்துவரும் கருணா ஒட்டுக்கும்பலின் முக்கியஸ்தகரான பிள்ளையான் மூலம், குறிப்பிட்ட வர்த்தகர் கொழும்பு சென்றவுடன் கடத்தப்பட்டதாகவும் அறிய முடிகிறது.

கொழும்பில் பல காலமாக வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் சிவபாதம் சிவசொரூபன், மகிந்தவின் ஆட்சியிலுள்ள திரு ஆறுமுகம் தொண்டமான் போன்ற அமைச்சர்களுக்கு நெருக்கமானவர் என்றும் அறிய முடிகிறது.

கடத்தப்பட்ட சிவபாதம் சிவசொரூபனை விடுவிப்பதற்காக, அமைச்சரான ஆறுமுகம் தொண்டமான், சிறிலங்காவின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை தொடர்பு கொண்டதாகவும், அப்போது மகிந்தவினால் கடத்தப்பட்ட சிவபாதம் சிவசொரூபன், சிறிலங்கா விசேட அதிரடிப்படையினரின் காவலிலுள்ளதாகவும், அவரை கடந்த மாதம் 18ம் திகதி விடுதலை செய்வதாகவும் உறுதியளிக்கப்பட்டதாம். சிவபாதம் சிவசொரூபன் கடந்த மாதம் 18ம் திகதி விடுவிக்கப்படுவார் என்ற நம்பிக்கையில் அவரது நண்பர்கள், கொழும்பிலிருந்து லண்டனுக்கு சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் பிரயாணத்திற்கான விமானச்சீட்டும் வாங்கியதாகவும் அறிய முடிகிறது.

ஆனால் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்தவினால் உறுதியளிக்கப்பட்டும், சிவபாதம் சிவசொரூபன் விடுவிக்கப்படாத நிலையில், அவரது நிலை குறித்த அச்சம் குடும்பத்தினர் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது.

பிரான்ஸ் பிரஜையான திருமதி சிவசொரூபன், மனிதாபிமான ரீதியில் தனது கணவரை விடுதலை செய்ய உதவுமாறு பிரித்தானிய அரசு, பிரான்ஸ் அரசு, பல சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள், பிரித்தானியாவிலுள்ள இலங்கை தூதரகம் என்பவற்றை தொடர்பு கொண்டதாக தெரிய வருகிறது. பிரித்தானியாவிலுள்ள சிறிலங்காவின் தூதரகத்துடன் பல முறை தொடர்பு கொண்ட போதும், அவர்கள் திருமதி சிவசொரூபனின் கோரிக்கையைக் கூட செவிமடுக்க மறுத்ததாகவும் தெரிய வருகிறது.

பிரித்தானியாவில் ஹரோவை நீண்ட காலமாக வதிவிடமாகக் கொண்ட வர்த்தகரான சிவபாதம் சிவசொரூபன், பிரித்தானியாவில் பதவியில் இருக்கும் தொழிற்கட்சியின் நீண்ட கால ஆதரவாளரவார். இவர் கடத்தப்பட்டதானது, ஹரோ மேற்கு பாராளுமன்ற உறுப்பினரும், பிரித்தானிய அமைச்சருமான மாண்புமிகு கரத் தோமஸ் அவர்களுக்கு இலங்கை அரசால் நேரடியாக விடுக்கப்பட்ட சவால் என்று, ஹரோவில் வாழும் ஈழத்தமிழ் மக்கள் நோக்குகிறார்கள். கடத்தப்பட்ட சிவபாதம் சிவசொரூபனை விடுவிப்பதற்கான சில முயற்சிகளை இராஜதந்திர ரீதியில் அமைச்சர் கரத் தோமஸ் மேற்கொண்டிருப்பதாகவும், அவை எந்த அளவிற்குப் பயனளிக்கப் போகின்றதென்பது கேள்விக் குறியே.

பிரித்தானியா ஹரோவில் ஏறக்குறைய 20% இற்கு மேற்பட்ட ஈழத்தமிழர்கள் வசிப்பதாகவும், உறுதியான தொழிற்கட்சி ஆதரவாளர்களான அவர்கள், கடந்த தேர்தல்களில் பிரித்தானியாவில் பல பகுதிகளில் தொழிற்கட்சி படுதோல்வியடைந்த நிலையிலும், ஹரோவில் தொழிற்கட்சியின் வெற்றிக்கு உதவியவர்கள் என்பதும், பல தமிழ் உள்ளூராட்சி உறுப்பினர்களையும் கொண்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

சிறிலங்கா அரசினால் கடத்தப்பட்ட சிவபாதம் சிவசொரூபன், பிரித்தானிய அமைச்சரான மாண்புமிகு கரத் தோமஸ் அவர்களின் முயற்சியால் விடுவிக்கப்படாமலும், அவரது உயிருக்கு ஆபத்து ஏதும் ஏற்படும் நிலை தோன்றுமாயின், எதிர்காலத்தில் ஹரோவில் வாழும் ஈழத்தமிழ் மக்களின் தொழிற்கட்சி தொடர்பான ஆதரவு பாரியளவில் வீழ்ச்சியடையலாம் என சில உள்ளூர் தமிழ் கவுன்ஸிலர்கள் அச்சம் தெரிவித்திருக்கிறார்கள். இதேவேளை சில ஹரோ வாழ் ஈழத்தமிழ் மக்கள், கடத்தப்பட்ட சிவபாதம் சிவசொரூபனை விடுவிப்பதற்கான உதவுமாறு கோரி, கொன்ஸவேட்டிவ் கட்சியின் ஆதரவை நாடியிருப்பதாகவும் தெரிய வருகிறது.

Web : Tamilenews.com

Tuesday, 06 Mar 2007

Link to comment
Share on other sites

இந்த கடத்தப்பட்ட லண்டனை வதிவிடமாக கொண்டவரின் விடுதலையானது மனிதாபிமான பிரட்சனை மட்டுமல்ல, சிறிலங்கா அரசிற்கு பாரிய அரசியல் நெருக்கடிகளை மேற்குலகால் ஏற்படுத்தக் கூடியது!!!

நாளுக்கு நாள் இலங்கையில் தமிழ் மக்கள், சிங்களப் படைகளால் கடத்தப்பட்டும், காணாமல் போவதுமாக பெருக்கெடுத்திருக்கும் இந்நேரத்தில், புலத்திலுள்ள தமிழ் மக்களும் சிங்களப்படைகளின் இலக்கு உள்ளக்கப்பட்டதை கூறும் சம்பவமும் கூட!!!

ஆனால் எம் ததேஊக்கள், இக்கடத்தல் நடைபெற்று பல வாரங்களாகியும் இதனை வெளிக்கொணரவில்லை!!! ஏன்?????????

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.