Jump to content

ட்ராவலேட்டர்..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ட்ராவலேட்டர் (Travelator)

சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு (காமராஜர் முனையம்) முனையத்திற்கும், வெளிநாட்டு (அண்ணா முனையம்) முனையத்திற்கும் இடையேயான தூரத்தை பயணிகள் சிரமமின்றி அடைய 'ட்ராவலேட்டர்' அமைக்கும் பணி பல வருடங்களுக்குப் பின், வடிவமைப்பு அங்கீகரிக்கப்பட்டு பணிகள் துவங்கியுள்ளன. இவ்வசதி மக்கள் பாவனைக்கு வந்தபின் பயணப்பொதிகளுடன் இறங்கும் பயணிகள், அதிக சிரமமின்றி இரு முனையங்களுக்கும் சென்று வரலாம்..

வெளிநாடுகளில் சர்வதேச விமான நிலையங்கள், பெரும்பாலும் நிலத்தடி தொடருந்துகளை முனையங்களுக்கிடையே இயக்கிவரும் வேளை, ஏழைக்கேற்ற எள்ளுருண்டையான இந்த 'ட்ராவலேட்டர்'களை மத்திய அரசிடமிருந்து சென்னை விமான நிலையம் பெற, பல வருடங்கள் காத்திருக்க வேண்டியதாயிற்று..

 

2009020761551001

'ட்ராவலேட்டர்' மாதிரி வடிவமைப்பு

 

18THAIRPORT

நிறுத்தப்பட்ட 'ட்ராவலேட்டர்'களின் கூண்டுப் பாதை

 

airport_2.jpg

தற்பொழுது 'ட்ராவலேட்டர்' அமைக்கும் பணி துவக்கம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது பாவனைக்கு வரும் போது சென்னை விமானநிலையம் எந்தக் கதியில் இருக்குமோ?

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ராசவன்னியன் said:

ட்ராவலேட்டர் (Travelator)

சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு (காமராஜர் முனையம்) முனையத்திற்கும், வெளிநாட்டு (அண்ணா முனையம்) முனையத்திற்கும் இடையேயான தூரத்தை பயணிகள் சிரமமின்றி அடைய 'ட்ராவலேட்டர்' அமைக்கும் பணி பல வருடங்களுக்குப் பின், வடிவமைப்பு அங்கீகரிக்கப்பட்டு பணிகள் துவங்கியுள்ளன. இவ்வசதி மக்கள் பாவனைக்கு வந்தபின் பயணப்பொதிகளுடன் இறங்கும் பயணிகள், அதிக சிரமமின்றி இரு முனையங்களுக்கும் சென்று வரலாம்..

வெளிநாடுகளில் சர்வதேச விமான நிலையங்கள், பெரும்பாலும் நிலத்தடி தொடருந்துகளை முனையங்களுக்கிடையே இயக்கிவரும் வேளை, ஏழைக்கேற்ற எள்ளுருண்டையான இந்த 'ட்ராவலேட்டர்'களை மத்திய அரசிடமிருந்து சென்னை விமான நிலையம் பெற, பல வருடங்கள் காத்திருக்க வேண்டியதாயிற்று..

 

2009020761551001

'ட்ராவலேட்டர்' மாதிரி வடிவமைப்பு

 

18THAIRPORT

நிறுத்தப்பட்ட 'ட்ராவலேட்டர்'களின் கூண்டுப் பாதை

 

airport_2.jpg

தற்பொழுது 'ட்ராவலேட்டர்' அமைக்கும் பணி துவக்கம்.

 

அது சரி சென்னை எப்பவும் பெருகி செல்லும் நம்ம மதுரை விமான நிலையம் என்ன பாவம் செய்தது வன்னியன் சார் ?

மதுரையில் பன்னாட்டு விமான நிலையம் அமைந்தும் சுங்க சாவடியை திறக்க மறுக்குதே உங்க டெல்லி சேட்டனுக்கு அவ்வளவு பயமா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, பெருமாள் said:

அது சரி சென்னை எப்பவும் பெருகி செல்லும் நம்ம மதுரை விமான நிலையம் என்ன பாவம் செய்தது வன்னியன் சார் ?

மதுரையில் பன்னாட்டு விமான நிலையம் அமைந்தும் சுங்க சாவடியை திறக்க மறுக்குதே உங்க டெல்லி சேட்டனுக்கு அவ்வளவு பயமா ?

விளை பொருட்களை சேமித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய குளிரூட்டப்பட்ட கிடங்கு அமைக்கும் பணி முடிவடையாததால் பொருட்கள் ஏற்றுமதி செய்வதில் சிரமம் உள்ளது.. ஆனால் நான்கு வெளிநாடுகளுக்கு(அமீரகம், மலேசியா, இலங்கை, சிங்கப்பூர்) விமான சேவை உள்ளதால் பயணிகளுக்கான சுங்க அதிகாரிகள் முனையம் அங்கே இருப்பதாக அறிந்தேன்.

21314400_1598872243497301_87799643649332

Madurai airport gets custodianship for international cargo handling

Madurai: Madurai airport will become an international terminal in every sense by April 2017, when it will start handling international cargo as the Department of Central Excise and Customs on Thursday issued custodianship for the same to Airports Authority of India.

Announcing this, Airport Director V.V. Rao said a few infrastructure facilities, including security measures, needed to be put in place before international cargo movement was allowed from Madurai airport.

.....

.....

However, Mr. Rao said efforts would be taken up to put up cold storage facility at the earliest.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/Madurai-airport-gets-custodianship-for-international-cargo-handling/article16834925.ece

Link to comment
Share on other sites

  • 4 months later...
  • கருத்துக்கள உறவுகள்

 

02FEBSTS01TravG4N3HJA1M3jpgjpg

 

கடந்த நான்கு மாதங்களாக சென்னை பன்னாட்டு விமான முனையத்திற்கும், உள்நாட்டு விமான முனையத்திற்கும் இடையே இணைக்கும் தானியங்கி நகரும் நடை மேடை (ட்ராவலேட்டர்) அமைக்கும் பணி பெரும்பாலும் முடிவுற்று இம்மாத இறுதிக்குள் மக்கள் பாவனைக்கு திறக்கப்படும் என செய்தி வெளியாகியுள்ளது.

இதன் ஒரு பகுதியின் நீட்சி சென்னை விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்தையும் இணைக்கிறது.

 

மேலதிக செய்திகளுக்கு கீழே சொடுக்கவும்..

இந்து

Edited by ராசவன்னியன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்த  திராவிட  கட்சியால்,  இந்த... ட்ராவலேட்டர் வந்தது.. வன்னியன் சார். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, தமிழ் சிறி said:

எந்த  திராவிட  கட்சியால்,  இந்த... ட்ராவலேட்டர் வந்தது.. வன்னியன் சார். :)

இத்திட்டம் ஏழு வருடங்களுக்கு முன் போடப்பட்டது..

மத்திய அரசு ஜவ்வாக இழுத்தடித்து, இப்பொழுதான் முடிவிற்கு வந்திருக்கிறது..

ஒரு முனையத்திலிருந்து மற்றொரு முனையத்திற்கு இதுவரை பேட்டறி கார்கள் தான் இயங்கி வந்தன. பயணப்பொதிகளை தூக்கிகொண்டு அலைவது மிக சிரமமாக இருக்கும். இனி வருகை தளம் வந்தவுடன் மின் தூக்கி மூலம் மேலே ஏறி ட்ராவலேட்டர் மூலம் இரு முனையத்திற்கும், மெட்ரோ ரயில் நிலையத்திற்கும் எளிதாக செல்லலாம்.

இதில் திராவிடக் கட்சிகளின் பங்கு ஏதும் இல்லை, தமிழ் சிறி..!

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3.10.2017 at 10:11 PM, ஈழப்பிரியன் said:

இது பாவனைக்கு வரும் போது சென்னை விமானநிலையம் எந்தக் கதியில் இருக்குமோ?

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 5 பேர், உரை

  • Haha 1
Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

'அந்தா வருது, இந்தா வருது'ன்னு இழுத்தடித்து, ஒரு வழியா 'ட்ரவலேட்டரை' திறந்துவிட்டார்கள்..! :innocent::)

 

walk2.jpg

 

 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • தமிழ்நாடு ஒரு மாநிலம்  தமிழ்நாடு தனிநாடு இல்லை  தமிழ்நாடு வெளிநாட்டு கொள்கையில் 1% கூட. இதுவரை பங்களிப்புகள் செய்யவில்லை   செய்ய முடியாது  தமிழ்நாடு இந்தியா மத்திய அரசாங்கத்தினால் ஆளப்படுகிறது  தமிழ்நாட்டில்,.சீமான் கமல்   விஐய்.  ஸ்டாலின் உதயநிதி   நெடுமாறன். வைகோ      கருணாநிதி  எம் ஜி” ஆர்    அண்ணா,.......இப்படி எவர் முதல்வர் பதவியில் இருந்தாலும்   வெளிநாட்டுத்தமிழராகிய. இலங்கை தமிழருக்கு 1% கூட பிரயோஜனம் இல்லை    தமிழ்நாட்டில் 7 கோடி தமிழனும் தமிழ் ஈழம்  மலர வேண்டும் என்று ஆதரித்தாலும்.  தமிழ் ஈழம்  கிடைக்காது  எனவே… ஏன் குதிக்க வேண்டும்???  இந்த சீமான் ஏன் குதிக்கிறார??  என்பது தான் கேள்வி??  ஆனால்  சீமான்  தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம்  முதல்வராக வரலாம்”   தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்யலாம்    எங்கள் ஆதரவு 100% உண்டு”   கண்டிப்பாக ஆதரிப்பேன் ஆனால்  இலங்கை தமிழருக்கு  அது செய்வேன் இது செய்வேன்   என்று  ஏமாற்றக்கூடாது 😀
    • பகிர்வுக்கு நன்றி ஏராளன் ........!   🙏
    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.