Archived

This topic is now archived and is closed to further replies.

தமிழ் சிறி

தீபாவளி, சிரிப்பு வெடிகள்.

Recommended Posts

நாளைக்கு ஏதோ பண்ணப்போகுது போல.....
கலர் கலரா மாவை உருட்டி வைச்சிருக்கு.... 
:grin:

DMRpmw5VQAAT_hF.jpg

Share this post


Link to post
Share on other sites
7 minutes ago, குமாரசாமி said:

நாளைக்கு ஏதோ பண்ணப்போகுது போல.....
கலர் கலரா மாவை உருட்டி வைச்சிருக்கு.... 
:grin:

DMRpmw5VQAAT_hF.jpg

நெல்லிக்காய் வேற முழிச்சுக் கொண்டிருக்கு.....!  tw_blush:

Share this post


Link to post
Share on other sites
15 hours ago, குமாரசாமி said:

நாளைக்கு ஏதோ பண்ணப்போகுது போல.....
கலர் கலரா மாவை உருட்டி வைச்சிருக்கு.... 
:grin:

DMRpmw5VQAAT_hF.jpg

விடிய எழும்பி... முகத்துக்கு  பூசுவதற்கு,  அரைத்து வைத்த மாவை பார்த்து,
குமாரசாமி அண்ணன்... "பலகார"  கனவில இருக்கிறார். :grin:  :D:

Share this post


Link to post
Share on other sites

  • Topics

  • Posts

    • இமாலய எல்லைப்பகுதியில் படைகளை குவித்து படை தனது வலிமையினை முறுக்கிக் காட்டும் சீனாவின் நடவடிக்கையையும் கண்டிப்பதோடு, ஹொங்கொங் மீது சீனா திணிக்க முனையும் பாதுகாப்புச் சட்டத்தை கண்டிப்பதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது. சீனாவின் இந்த திணிப்பு எதிரான போராடத்தில் ஈடுபட்டு வருபவர்களுக்கு தனது தோழமையினை வெளிப்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளது.இது தொடர்பில் நாடுகடந்த அரசாங்கம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,ஹொங்கொங் தொடர்பில் 'பாதுகாப்பு' என்ற பெயரில் ஒருதரப்பாகச் சட்டமியற்றும் சீனாவின் திட்டத்தைக் அனைத்துலக சமூகத்துடன் இணைந்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கண்டிக்கிறது. சீன நாடாளுமன்றத்தால் கடந்த மே 28ம் நாள் ஒப்புதலளிக்கப்பெற்ற இச்சட்டமானது ஹொங்காங் மக்களின் பேச்சுரிமை, ஒன்றுசேரும் உரிமை, தகவல் உரிமை ஆகிய அடிப்படை உரிமைகளை மீறுவதாகும் என்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஆழ்ந்த கவலை கொள்கிறது.ஹொங்கொங்கில் சீனாவுக்கு எதிரான subversion   (அரசுக்கு எதிரான ), பிரிவினை, தீவிரவாதம் ஆகியவற்றைத் தடுக்கவும் தண்டிக்கவும் இந்தச் சட்டம் தேவைப்படுவதாக சீனா கூறிக் கொண்ட போதிலும், இவை போன்ற பாதுகாப்புச் சட்டங்கள் எனப்படுகிறவை ஒடுக்குமுறைக் கருவிகளே தவிர வேறல்ல என்பதை ஈழத்தமிழர்கள் இலங்கைத் தீவில் நன்கறிவார்கள்.1997ம் ஆண்டு ஹொங்கொங்கை சீனாவிடம் பிரித்தானியா ஒப்படைத்த போது, சீனம் ஏற்றுக் கொண்ட சீன-பிரித்தானியப் பிரகடனத்தால் உத்தரவாதமளிக்கப் பெற்ற ஹொங்கொங்கின் தன்னாட்சியை, சீனாவின் பாதுகாப்புச் சட்டம் சட்மென்பது, ஹொங்கொங்கின் தன்னாட்சி இறைமையினை பெரிதும் அழித்து விடும் என்று ஒஸ்திரேலியாவும், பிரித்தானியாவும், கனடாவும், அமெரிக்காவும். தெரிவித்துள்ள கவலையை ஈழத் தமிழர்களாகிய நாங்களும் பகிர்ந்து கொள்கிறோம்.இன்னும் வரையப்படாத ஹொங்கொங்குக்கான பாதுகாப்புச் சட்டத்துக்கு, ஹொங்கொங் நாடாளுமன்றத்திலிருந்து ஒப்புதல் கேட்பதைத் தவிர்த்து ,மாறாக உரிமைகளைக் கட்டுப்படுத்தும் இந்தச் சட்டத்தை ஹொங்கொங் மக்கள் மீது ஒருதரப்பாகத் திணிக்கவுமான சீனாவின் திட்டம், ஹொங்கொங்கில் இப்போதுள்ள ஆட்சிமுறையை மீறுவதாகும். ஹொங்கொங்கின் தன்னாட்சியைப் பாதுகாக்கும் இந்த ஆட்சி முறை பேச்சுவழக்கில் 'ஒரு நாடு இரு ஆட்சிமுறை ' ( "one country, two systems") என்று அழைக்கப்படுகிறது.   ஹொங்கொங்கில் ஜனநாயகக் போராளிகள், குறிப்பாக மாணவர்கள் 2014 ( "Umbrella Movement"  )'குடை இயக்கத்தை' 2019ம் ஆண்டு இரண்டாம் முறை நிகழ்த்திக் காட்டிய போது உலகின் கவனம் ஈர்த்தார்கள். ஹொங்கொங் நீதியமைப்புக்கும் சீனாவின் நீதியமைப்புக்குமான அடிப்படைப் பிரிவுக் கோட்டை அழித்து விட்டிருக்கக் கூடிய இந்த சட்டத்தை (ஹொங்கொங்கில் இருந்து சீனாவுக்கு கொண்டு விசாரணை செய்வதற்கு வழிகோலும் சட்டம்) இயற்ற சீனம் வகுத்த திட்டத்தை இந்தப் போராட்டம்தான் முறியடித்தது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அப்போது தோழமை உணர்வில் ஹொங்கொங் போராட்டக்காரர்களின் கரங்களைப்பிடித்து நின்றது. இப்போதும் அதே தோழமை உணர்விலும் முறையே எல்லோரதும் உரிமைப் போராட்டங்களின் தோழமை நெருக்கத்திலும் அவர்களின் கரங்களைப்பிடித்து நிற்கிறது. இதேவேளை இமாலயத்தில் எல்லையருகே இந்தியத் துருப்புகளுடனான சீனாவின் படைக்குவிப்பு கெடுபிடியையும் (military adventurism) இந்த நேரத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கண்டிக்கிறது. குறிப்பாக உலகம் கொவிட்-19 நோயால் பெரும் நெருக்கடியினை சந்தித்கொண்டிருக்கும் இவ்வேளையில் இராணுவ முன்னெடுப்புக்களுக்கு இடமே இல்லை எனத் தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், இன்றைய தேவை ஒத்துழைப்பும் மனிதநேயச் செயலுமே எனத் தெரிவித்துள்ளது. இணைப்பு இல்லை மின்னஞ்சலில் வந்தது.
    • அட இலகுவான சொல், இதை யோசிக்கவில்லை 
    • நளினி, முருகன் விடயத்தில் மனிதாபிமானத்துடன் நடவுங்கள் -தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் தெரிவிப்பு நளினி, முருகன் விவகாரத்தில் தமிழக அரசு மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ளவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை பெற்றவர்கள் நளினி, முருகன். அண்மையில் இலங்கையில் வசித்து வந்த முருகனின் தந்தை மரணமடைந்தார். அவரது இறுதிசடங்கை ‘வாட்ஸ்-அப்’ வீடியோ கோலில் பார்க்க அனுமதி கேட்ட முருகனின் கோரிக்கையை தமிழக அரசு நிராகரித்தது. இந்தநிலையில் இலங்கையில் உள்ள முருகனின் தாயாரிடமும், லண்டனில் உள்ள முருகனின் சகோதரியிடமும், நளினியும், முருகனும் ‘வாட்ஸ்-அப்’ வீடியோ கோலில் பேச அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றில் நளினியின் தாயார் பத்மா(வயது 80) ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி என்.கிருபாகரன், ஆர்.ஹேமலதா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான தலைமை அரசு குற்றவியல் வக்கீல் ஏ.நடராஜனிடம், ‘வாட்ஸ்-அப்’ வீடியோ கோலில் பேச இவர்களை அனுமதிப்பதில் அரசுக்கு என்ன சிரமம் உள்ளது?‘ என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு தலைமை குற்றவியல் வக்கீல், ‘கொரோனா வைரஸ் காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஊரடங்கு காலத்தில் உறவினர்களுடன் வீடியோ கோலில் பேச கைதிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால், இவர்கள் விவகாரத்தில் வெளிநாடுகளில் உள்ளவர்களுடன் பேச அனுமதி கேட்கின்றனர். வெளிநாட்டில் உள்ளவர்களுடன் பேச அனுமதிக்க வேண்டும் என்றால், மத்திய அரசின் ஒப்புதலை பெற வேண்டி உள்ளது. வேண்டுமென்றால், தொலைபேசியில் பேச அனுமதி அளிக்கலாம். வீடியோ காலில் பேச அனுமதிக்க முடியாது‘ என்று வாதிட்டார். மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் எம்.ராதாகிருஷ்ணன், ‘வீடியோ கோலில் பேச சிறை விதிகளின் படி முருகனுக்கும், நளினிக்கும் உரிமை உள்ளது. அந்த உரிமையை பறிக்கக்கூடாது‘ என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், ‘ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற நளினி, முருகன் உள்பட 7 பேரை முன்கூட்டியே விடுதலை செய்வது என்று தமிழக அரசு தீர்மானம் இயற்றியுள்ளது. விடுதலை செய்ய முடிவு எடுத்து விட்டு, தற்போது உறவினர்களுடன் பேச அனுமதிக்க முடியாது என்ற அரசின் நிலைப்பாட்டில் முரண்பாடு உள்ளது. ஏற்கனவே முருகனின் தந்தையின் இறுதிசடங்கை வீடியோ கோலில் பார்க்க அனுமதி வழங்க அரசு மறுத்துள்ளது. நளினி, முருகன் விவகாரத்தில் தமிழக அரசு மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும்‘ என்று கருத்து கூறினர். பின்னர், விசாரணையை நாளை(வியாழக்கிழமை) தள்ளிவைப்பதாகவும், அதற்குள் விரிவான பதில் மனுவை தமிழக அரசு தாக்கல் செய்யவேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். https://www.ibctamil.com/india/80/144536?ref=home-imp-parsely  
    • விலையுயர்ந்த விவாகரத்து - உலக பணக்காரர்கள் வரிசையில் இடம்பிடித்த பெண்   உலகில் மிகவும் விலையுயர்ந்த விவாகரத்து அமேசான் நிறுவன அதிபர் ஜெஃப் மற்றும் மெக்கென்சி பெசோஸ் விவாகரத்து ஆகும். தனது பங்குகளில்  4 சதவீத பங்குகளை மெக்கன்சிக்கு வழங்கினார். அதன்மூலம் மெக்கென்சி இப்போது 48 பில்லியன் டாலர் சொத்துக்களைக் கொண்டு, உலகின் 4-வது பணக்கார பெண்மணி ஆக உள்ளார்.   இதேபோல், சீனாவிலும் ஒரு விலை உயர்ந்த விவகாரத்து சமீபத்தில் நடைபெற்று உள்ளது. அதன் விவரம் வருமாறு: சீனாவின் காங்டாய் உயிரியல் தயாரிப்புகள் நிறுவனத்தின் தலைவர் டு வீமின். இவரது மனைவி யுவான். இருவரும் பிரிந்து விட்டனர். தற்போது டு வீமின் தனது தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்தின் 161.3 மில்லியன் பங்குகளை தனது முன்னாள் மனைவி யுவானுக்கு மாற்றியுள்ளார். இதன் மதிப்பு 320 கோடி அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார். ரூ.24 ஆயிரம் கோடி)  இருக்கும் என கூறப்படுகிறது. இதையடுத்து, மே 29 அன்று தாக்கல் செய்யப்பட்ட தகவலின்படி, யுவான் உலகின் பணக்காரர்களின் வரிசையில் சேர்ந்து உள்ளார். யுவான் சீனாவின் சர்வதேச வணிக மற்றும் பொருளாதார பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர் ஆவார். 49 வயதான யுவான் தற்போது நேரடியாக பங்குகளை வைத்திருக்கிறார். ஷென்சென் நகரில் வசிக்கும் டு வீமின் மே 2011 மற்றும் ஆகஸ்ட் 2018 க்கு இடையில் காங்டாயின் இயக்குநராக பணியாற்றினார். அவர் இப்போது துணை பெய்ஜிங் மின்ஹாய் பயோடெக்னாலஜி நிறுவனத்தின் துணை பொது மேலாளராக உள்ளார். கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்காக ஒரு தடுப்பூசியை உருவாக்கும் திட்டத்தை நிறுவனம் அறிவித்தபோது, காங்டாய் பங்குகள் கடந்த ஆண்டில் இரு மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளன. டுவின் நிகர சொத்து மதிப்பு முன்னாள் மனைவிக்கு பங்குகளை கொடுப்பதற்கு முன்பு 650 கோடி டாலர்களாக இருந்தது. தற்போது அது சுமார் 301 கோடி டாலராக குறைந்துள்ளது. 56 வயதான டு வீமின் சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தார். கல்லூரியில் வேதியியல் படித்த பிறகு, 1987-ம் ஆண்டில் ஒரு கிளினிக்கில் பணிபுரியத் தொடங்கினார். 1995-ம் ஆண்டில் ஒரு பயோடெக் நிறுவனத்தில் விற்பனை மேலாளராக ஆனார். காங்டாய் 2004-ம் ஆண்டில் நிறுவப்பட்டு, அதன்பின்   மின்ஹாய் நிறுவனத்தை வாங்கியது, மேலும் அதன் ஒருங்கிணைந்த நிறுவனத்தின் தலைவராக டு வீமின் உள்ளார்.   https://www.maalaimalar.com/news/topnews/2020/06/03032607/1575534/New-Female-Billionaire-Emerges-From-Expensive-Divorce.vpf