Archived

This topic is now archived and is closed to further replies.

தமிழ் சிறி

தீபாவளி, சிரிப்பு வெடிகள்.

Recommended Posts

நாளைக்கு ஏதோ பண்ணப்போகுது போல.....
கலர் கலரா மாவை உருட்டி வைச்சிருக்கு.... 
:grin:

DMRpmw5VQAAT_hF.jpg

Share this post


Link to post
Share on other sites
7 minutes ago, குமாரசாமி said:

நாளைக்கு ஏதோ பண்ணப்போகுது போல.....
கலர் கலரா மாவை உருட்டி வைச்சிருக்கு.... 
:grin:

DMRpmw5VQAAT_hF.jpg

நெல்லிக்காய் வேற முழிச்சுக் கொண்டிருக்கு.....!  tw_blush:

Share this post


Link to post
Share on other sites
15 hours ago, குமாரசாமி said:

நாளைக்கு ஏதோ பண்ணப்போகுது போல.....
கலர் கலரா மாவை உருட்டி வைச்சிருக்கு.... 
:grin:

DMRpmw5VQAAT_hF.jpg

விடிய எழும்பி... முகத்துக்கு  பூசுவதற்கு,  அரைத்து வைத்த மாவை பார்த்து,
குமாரசாமி அண்ணன்... "பலகார"  கனவில இருக்கிறார். :grin:  :D:

Share this post


Link to post
Share on other sites

 • Topics

 • Posts

  • இந்தச் செய்தியின் வடிவம் முழுமையானதல்ல.  1) ட்றம் இந்தியாவையும் இதற்குள் கொண்டுவரவேண்டும் என்று கூறியுள்ளாரே தவிர அவர் தனித்து முடிவெடுக்க முடியாது. 2) இரஸ்யா இந்தக் குழுவில் ஏற்கனவே உறுப்பினராக இருந்தது.  பின்னர் கிறீமியாவை தன்னுடன் இணைத்தபின் இரஸ்யாவை இடை நிறுத்தி வைத்துள்ளனர். தற்போது திரும்பவும் உள்ளே கொண்டுவரவேண்டும் என ட்றம் கூறியதற்கு கனடாவும் ப்ரிட்டனும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. 
  • திராவிடமும் தமிழ்தேசியமும் — திராவிட புரட்டு எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. - திருக்குறள் முதலில் திராவிடமென்றால் என்னவென்று தங்களை திராவிடர்கள் என்று சொல்லிகொள்பவரிடமே பெரும் குழப்பம் உள்ளது. திராவிடம் என்பது மொழிப்பெயரா ? அல்லது இனப்பெயரா? அல்லது இடப்பெயரா? மூன்றுமே ஒன்றுதான் என்பர் சிலர், மூன்றும் வெவ்வேறு என்பர் சிலர். வித்தியாசம் தெரியாமல் நாம் குழப்பிக்கொள்கிறோம் என சொல்பவரும் உண்டு. திராவிடம் என்றால் என்ன? இந்த திராவிட கட்சிகள் தங்கள் பெயரில் தாங்கி நிற்கும் திராவிடம் எதனைக் குறிப்பது? அதற்கான தேவையென்ன என ஆராய்ந்தால், சுழியத்தில் வந்தே முடியும். 1. திராவிட மொழிக் குடும்பம் ராபர்ட் கால்டுவெல் (1814-1891) என்கிற ஒரு மொழியியல் அறிஞர், கிபி 1856 ஆண்டு "திராவிட அல்லது தென்னிந்திய மொழிகளின் ஒப்பிலக்கணம்" (A Comparative Grammar of the Dravidian or South-Indian family of languages) என்னும் நூலை தன் ஆராய்ச்சியின் அடிப்படையில் எழுதுகிறார். தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுகு, கன்னடம், மற்றும் மலையாளத்தை பிரதானமாக கொண்டு அவற்றின் ஒலியமைப்பு, ஒப்பிலக்கிணத்தின் அடிப்படையில் வகைப்படுத்தினார். மற்ற இந்திய மொழிகளில் இருக்கும் சமஸ்கிருத கலப்பு, ஒலியமைப்பில் இவை வேறுபட்டுள்ளதால் அவ்வாறு வகைப்படுத்தினார். அவர் தெற்கு என குறிக்கும் 'திராவிட' என்கிற சொல்லையே  'மனுஸ்ருமிதி'யில் இருந்து தான் எடுத்திருக்கிறேன் எனவும் குறிப்பிடுகிறார். மேலும், திராவிட அல்லது தென்னிந்திய மொழிக்குடும்பத்தில், தமிழ், தெலுகு, கன்னடம், மலையாளம் மட்டுமல்லாமல், துளு மொழி (கர்நாடகம்), பிராகுயி மொழி (பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில்) இன்றும் பேசப்பட்டு வருகிறது. இந்த பிரதான மொழிகளிலிருந்து பல நூறு மொழிகள் பிரிந்து இன்றும் பயன்பாட்டில் உள்ளது. எனவே, தென்னிந்திய மொழிகள் அல்லது திராவிட மொழிகள் என குறிப்பிட்டதும் தவறு. திராவிட மொழிகள் தென்னிந்திய மொழிகளை மட்டும் குறிப்பதென்றால் வடக்கு, கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கு திராவிட மொழிகள் என பிரிக்கத்தேவை இருக்காது. ஆப்கானிஸ்தானும், பாகிஸ்தானும் திராவிட வரையரைக்குள் வருமோ? அப்படியென்றால் அவர்களும் திராவிடர்கள் தானே? ஏன் நான்கு மொழிகளுக்குள் சுருங்கிக்கொள்ளவேண்டும்? மேலும், இவர் செய்த இன்னொரு பிழை, தமிழ் மொழியையும் சேர்த்து 'மூல திராவட மொழி' (Proto Dravidian Language) என ஒன்று இருந்தது, அதிலிருந்து தான் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் எனப்பிரிந்தது எனச் சொன்னார். அந்த மூல மொழியே தமிழ்தான் என்பதை அவர் குறிப்பிடவில்லை. தமிழிலிருந்து முதலில் தோன்றிய மொழி தெலுங்கு, பிறகு தெலுங்கிலிருந்து பிரிந்தது கன்னடம், மீண்டும் தமிழிலிருந்து பிரிந்தது மலையாளம் என தற்போது, காலவரையறையின் படி நிருவப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 1812 ஆம் ஆண்டே, பிரான்சிஸ் ஒயிட் எல்லிஸ் (Francis Whyte Ellis) எனும் மொழியியல் அறிஞர், சமஸ்கிருத மொழியிலிருந்து தான் அனைத்து இந்திய மொழிகளும் வந்தன எனும் கூற்றை மறுத்தார், குறிப்பாக தென்னிந்திய (திராவிட) மொழிகளுக்கும் சமஸ்கிருதத்திற்கும் தொடர்பில்லையென நிருவினார், அதனடிப்படையிலேயே கால்டுவெல் தனது ஆராய்ச்சியை தொடர்ந்தார். இந்த மொழிக்குடும்ப அடிப்படையில் தான் சிலர் தங்களை திராவிடர் என்று சொல்லிக்கொள்கின்றனர். தமிழரும் திராவிடர் என்று அடையாளப்படுத்தப்படுகின்றனர். இது அவசியமற்றது, தமிழனைத தவிர வேறு எந்த மொழியைச் சேர்ந்தவனும் தன்னை திராவிடன் என சொல்லிக்கொள்ள மாட்டான். ஏனெனில் இவை அடிப்படையிலேயே தவறானது, அவரவர் அவரவருக்கான மொழி தேசிய அடையாளத்தோடு வாழும்போது, தமிழன் மட்டும் திராவிடன் ஆக்கப்பட்டான். அது வேற்றுமொழியாளர்களின் சூழ்ச்சியே! தமிழன் என்கிற அடையாளத்திற்குள் வரமுடியாமல் புதிதாக திராவிடம் என்கிற ஒன்றை உருவாக்கிவிட்டனர். இந்த திராவிட என்கிற சொல் முதலில் தமிழே கிடையாது. சமஸ்கிருதம் கலக்காததால் தமிழுக்கு தனித்தன்மையென சொல்லிவிட்டு அதற்கு சமஸ்கிருத்திலேயே பெயர் வைக்கும் அறிவை என்னவென்று சொல்வது? தமிழுக்குத்தான் தமிழ் என்கிற பெயர் இருக்கிறதே, அதையேன் திராவிடம் என சொல்லவேண்டும்? எனக்கேட்டால் தமிழ் தான் திராவிடம், திராவிடம் தான் தமிழ் என்று, குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயல்வர், 50 ஆண்டுகளுக்கு மேலாக அதில் வெற்றி பெற்றுமுள்ளனர். 2. பெரியாரின் திராவிடம் யார் சொல்லியிருந்தாலும் எங்கு படித்திருந்தாலும் நானே சொன்னாலும் உனது புத்திக்கும் பொது அறிவுக்கும் பொருந்தாத எதையும் நம்பாதே. - தந்தை பெரியார் அதிகாரத்திலும், காங்கிரஸ் கட்சியிலிருந்த பார்ப்பனிய ஆதிக்கத்திற்கு எதிராக எழுந்ததே வகுப்புவாரி பிரதிநிதித்துவமும் பார்ப்பனரல்லாதோர் அமைப்பும், அதன் காலக்கோடு கீழே தரப்பட்டுள்ளது. 1. 1909 இல் பி. சுப்ரமணியம், எம். புருசோத்தம் நாயுடு எனும் இரு வழக்கறிஞர்கள் “சென்னை பிராமணரல்லாதோர் சங்கம்” என்ற அமைப்பை உருவாக்கினர். ஆனால் மக்களிடையே இதனால் எவ்விதத் தாக்கமும் இல்லாததனால் இந்த அமைப்பு நீர்த்துப் போனது. 2. 1912 இல் சரவணப் பிள்ளை, ஜி. வீராசாமி நாயுடு, துரைசாமி நாயுடு, எஸ். நாராயணசாமி நாயுடு போன்ற பிராமணரல்லாதோர் தலைவர்கள் ”சென்னை ஐக்கிய சங்கம்” என்ற அமைப்பை உருவாக்கினர். நடேச முதலியார் இதன் செயலாளராக இருந்தார். 3. அக்டோபர் 1, 1912 இல் இவ்வமைப்பு புனரமைக்கப்பட்டு சென்னை திராவிடர் சங்கம் என்று பெயரிடப்பட்டது. 4. நவம்பர் 20, 1916 இல் பிராமணரல்லாதோரின் 30 முக்கிய தலைவர்கள் தியாகராய செட்டி மற்றும் டி. எம். நாயரின் தலைமையில், நடந்த கூட்டத்தில் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் உருவானது. இதன் அரசியல் பிரிவே நீதிக்கட்சி (ஜஸ்டிஸ் கட்சி). 5. நீதிக்கட்சி,1920–26, 1930–37 காலகட்டங்களில் ஆளுங்கட்சியாகவும்; 1926–30, 1937-44 வரை எதிர்கட்சியாகவும் செயல்பட்டது. 6. 1944 இல் பெரியாரின் தலைமையில் திராவிடர் கழகமாக மாறியது. 7.1949 இல் திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து, திராவிட முன்னேற்றக் கழகம் உருவாக்கினார் அண்ணா. 8. 1972 இல திமுகவிலிருந்து பிரிந்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உருவாக்கினார் எம்ஜிஆர். இதில் பங்கேற்ற, இயக்கம் உருவாக காரணமானவர்கள் யார் யாரென பார்த்தாலே, இது யாருக்கானது என தெரிந்துவிடும். அதிகாரத்தை முன்னேறிய பார்ப்பனரிடமிருந்து அதற்கு அடுத்தாக முன்னேறிய பார்ப்பனரல்லாதோரிடம் தருவது, பெறுவது தான் குறிக்கோள். குறிப்பாக தமிழரல்லாதோரிடம். தொடக்கத்தில், நீதிக்கட்சிக்கு பிராமணரல்லாத அனைத்து பிரிவினரின் ஆதரவு இருந்தாலும், பெரு முதலாளிகளின் ஆதிக்கம் நிலவி வந்ததால் தாழ்த்தப்பட்ட வகுப்பினரும், இஸ்லாமியரும் விலகினர். தனித்தமிழ் இயக்கங்களுக்கான தேவையும் வந்தது, மறைமலை அடிகள் அதனை தோற்றுவித்தார். இன்றைய தமிழ்நாடுடன், ஆந்திரா, கேரளா, கர்நாடக மாநிலங்களின் பெரும்பகுதி இணைந்திருந்து சென்னை மாகாணம், அப்போது உருவான திராவிட இயக்கங்கள், தமிழ்நாடாக, மொழிவாரி மாநிலமாக உருவெடுத்தப்பின்னரும் கூட, திராவிட இயக்கங்கள் தமிழ் இயக்கங்களாக மாறவில்லை. ஏனென்றால் அதை நடத்தியவர்கள் பெரும்பாலானவர்கள் தமிழரல்லாதவர். பெரியார் தமிழ் சமுதாயத்திற்கு செய்த தொண்டு மறுக்கமுடியாதது, அவர் போற்றுதலுக்குறியவர் என்பதில் மாற்றுக்கருத்தேயில்லை. ஆனால் அவர் விமர்சனத்திற்க்கு அப்பார்ப்பட்டவர் என்பது ஏற்புடையதல்ல. திராவிடத்தை மறுத்தாலே அது பார்ப்பனீயத்திற்கு ஆதரவானது என இவர்களே சொல்லிக்கொள்கிறார்கள். கடவுளை மறுத்தால், நீ சாத்தானை ஆதரிப்பவன் என பக்தர்கள் சொல்வது போல தான் இதுவும். பகுத்தறிவு பக்திமார்க்கமாகத் தான் மாறிவிட்டது இந்த திராவிடம். திராவிடர் என்றால் யார் எனக்கேட்டால், தந்தை பெரியார், "தமிழர்" என்றால் பார்ப்பானும் தன்னைத் தமிழனென்று கூறிக்கொண்டு, நம்முடன் கலந்துகொண்டு மேலும் நம்மை கெடுப்பார்ப்பான். திராவிடர் என்றால் எந்த பார்ப்பானும் தன்னை திராவிடன் என்று கூறிக்கொண்டு நம்முடன் சேர முற்ப்படமாட்டான்' எனச்சொல்கிறார். ஆனால், மேலே குறிப்பிட்டதுபோல, திராவிடம், திராவிடர் என்கிற சொல்லே சமஸ்கிருதத்திலிந்து தான் வந்தது. மேலும், 1947 ஆம் ஆண்டு என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்காவில் (Encyclopedia Britannica) திராவிடர்கள் என்றால் யார் என விவரிக்கப்பட்டுள்ளது. அதில், "தென்னாட்டில் வாழும் பிராமணர்களை குறிக்கும் சொல்லே திராவிடர் என்பதும், ஆனால் கெடுவாய்ப்பாக தற்போது தென்னாட்டில் வாழும் அனைத்து மக்களையும் குறிக்கும் சொல்லாக மாறிவிட்டது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு எடுத்துக்காட்டாக, கிரிக்கெட் வீரர் ராகுல் திராவிட், ஒரு பிராமண வகுப்பைச் சேர்ந்தவர். அவர் பெயரில் இருக்கும் திராவிட் என்பது தமது குடும்பப்பெயர் எனவும், பல தலைமுறைகளாக தொடர்ந்து வருகிறது எனவும் தெரிவித்துள்ளார். பெயருக்குப் பின்னால் திராவிட் என்று எந்த தமிழரும் போட்டுக்கொள்ள மாட்டார், ஏனெனில் அது ஒரு பிராமண சாதிப்பெயர். பிறகெப்படி திராவிடர் என்பது பார்ப்பனரல்லாதோரை குறிக்கும் ? தமிழ் இலக்கியங்கள் எதிலும் திராவிடம் என்கிற சொல்லே பயன்படுத்தப்படவில்லை எனக்கேட்டால், ஆதிசங்கரர், திராவிட சிசு என கூறியிருக்கிறார் எனச் சொல்கிறார்கள். அதுவும், தமிழிலில்லை, இருந்தாலும் பதில் சொல்லுவோம். ஆதிசங்கரர், திருஞானசம்பந்தரை தான் அப்படி குறிப்பிடுவதாகவும், வேறு சிலர், ஆதிசங்கரர், தன்னைத்தானே அப்படி சொல்லிக்கொள்கிறார் எனவும் குறிப்பிடுகின்றனர், எப்படி பார்த்தாலும் அது தவறே, ஏனெனில் இருவருமே பார்ப்பனர் தான், பிறகு பார்ப்பனரல்லாத தமிழர் எங்கிருந்து அங்கு வந்தார்கள்? தங்களை திராவிடர், திராவிடர் கட்சிகள் என சொல்லிக்கொள்பவர் எதனைச் சொல்கின்றனர்? பெயரே தவறாக இருக்கின்றதே? பார்ப்பன எதிர்ப்பு என்பதே, ஏதோ இந்த இயங்கங்கள் கண்டுபிடித்தது தான், என்பதுபோல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தப்பார்க்கின்றனர். பன்னெடுங்காலமாகவே பார்ப்பன எதிர்ப்பு என்பது தமிழ் வாழ்வியல் முறையில் இருந்துள்ளது. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமூலர், திருமந்திரம் என்னும் நூலில் "பேர் கொண்ட பார்ப்பான் பிரான் தன்னை அர்ச்சித்தால் போர் கொண்ட நாட்டுக்குப் பொல்லா வியாதியாம் பார் கொண்ட நாட்டுக்குப் பஞ்சமும் ஆம் என்றே சீர் கொண்ட நந்தி தெரிந்து உரைத்தானே." - திருமூலர் திருமந்திரம். பொழிப்புரை: தம் பெயரில் மட்டுமே (பிறப்பால்) பார்ப்பான்/ பிராமணன்/ அந்தணன் என்போர் எம்பிரானை அர்ச்சனை செய்யத் தகுதியற்றவர்கள். அப்படி அவர்கள் செய்தால் அந்த நாட்டுக்கும், அரசனுக்கும் தாங்கொணா வேதனைகளும், நாட்டு மக்களுக்கும் பொல்லாத வியாதிகளும், பஞ்சமும் வந்துசேரும் என்பதை தன்னாசானான சித்தபெருமான் நந்தீசர் உரைத்ததாகக் கூறுகிறார் திருமூலர். இதன் மூலம் திருமூலர் சொல்வது பிறப்பால் / பெயரால் யாரும் இறையை அர்ச்சிக்கும் தகுதியைப் பெறமாட்டார். மெய்யாக அறவழியில் நிற்கும் அனைவருக்கும் இறையை அர்ச்சிக்கும்(பூசிக்கும்) தகுதியுண்டு. அவர்களே ஈற்றில் இறையுடன் இரண்டறக் கலக்க வல்ல 'அறவாழி அந்தணர்' (சித்தர்/ஞானிகள்) ஆவார்கள். மேலும், ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருநாவுக்கரசர், திருமுறையில் "சாத்திரம் பலபேசும் சழக்கர்காள் கோத்திரமும் குலமும் கொண்டென் செய்வீர் பாத்திரம் சிவமென்று பணிதிரேல் மாத்திரைக்கு ளருமாற் பேறரே" (திருமுறை - 5:60:3) என பார்ப்பனீயத்தை சாடுகின்றார். மேலும், சிலப்பதிகாரத்தில்,வஞ்சிக் காண்டம்/26.கால்கோட் காதை, 27.நீர்ப்படைக் காதையில், சேரன் செங்குட்டுவன் வடநாடு நோக்கி படையெடுத்துச் சென்று, ஆரிய மன்னர்களை வென்று, கண்ணகிக்கு சிலைவடிக்க கல்லெடுத்து அதை ஆரிய மன்னன் கனக விசயன் தலையில் சுமக்கச்செய்து கொண்டுவந்தான் எனப்பாடல் உள்ளது. இது கற்பனை கதையாகவே இருக்கட்டும் ஆனால், இளங்கோவடிகளின் பார்ப்பன எதிர்ப்பு மிகத்தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த பார்ப்பனிய எதிர்ப்பு என்பது தமிழர்களுக்கு சங்க காலத்திலிருந்தே இருக்கின்ற ஒரு தொடர்ச்சி. பார்ப்பனீய எதிர்ப்பும், கடவுள் மறுப்பும் பேசிய பெரியார், ஆந்திராவிலோ, கர்நாடகத்திலோ பேசியிருந்தால் அவர் தனிமைப் படுத்தப்பட்டிருப்பார். ஏனெனில் தமிழர் மரபு என்பதே பகுத்தறிவு மரபு, பார்ப்பனீய எதிர்ப்பு மரபு. கடவுள் மறுப்பும், ஒர் கடவுள் என்கிற தத்துவமும் தமிழர் வரலாற்றில் நெடுங்காலமாக இருந்துள்ளது, அதனால் தான் அவர் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டார். 3. திராவிட நாடு (திராவிட நிலப்பரப்பு) 1940 இல் ஆரம்பித்து, 1944 இல் முழுவடிவம் பெற்றது திராவிட நாடு கோரிக்கை. திராவிடர் கழகத்தில் பெரும் தலைவர்களில் ஒருவராக இருந்த அண்ணா, 1949 இல் பெரியாருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால், திமுக ஆரம்பிக்கப்படுகிறது. தங்கள் கட்சியின் பெயரிலுள்ள திராவிட எனும் சொல்லில் 'ர்' கிடையாது, எனவே அது மக்களைக்கு குறிக்காது, அது இந்த மண்ணை, அதாவது நிலப்பரப்பை குறிக்கிறது என சொன்னார் அண்ணா. கட்சி ஆரம்பித்த சில காலத்திலேயே, பிராமணர்களை கட்சியில் சேர்த்துக்கொள்ளலாம் என ஆலோசித்தனர். அதன்படி பொதுச்செயலாளர் அண்ணா, பிராமணர்கள் திமுகவில் சேரலாம் என அறிவிக்கவும் செய்தார். அதனை ஆசைத்தம்பி எனும் திமுக தலைவர், தான் நடத்திவந்த 'தனியரசு' எனும் நாளேட்டில் செய்தியாக போட்டார், அண்ணாவை விமர்சிக்கும்வகையில் அண்ணாவின் படத்தை தலைகீழாகவும் போட்டார். பார்ப்பனருக்கெதிராக எப்படியெல்லாமோ பேசிவிட்டு இப்படி தலைகீழாக மாறிவிட்டாரே என குறிக்கும்படி அதனை செய்தார். பின் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கையாக, ஏ.வி.பி.ஆசைத்தம்பியை கட்சியை விட்டு ஒருவருடம் நீக்கி வைத்திருந்தனர். இந்த பார்ப்பன எதிர்ப்பு பேசிய திமுக தான், அமைச்சர் பதவிகளுக்காக, மத்தியில் பாஜக அரசை 6 வருடம் தாங்கிப்பிடித்திருந்தது. ஆரியம் திராவிடம் எனப்பேசிக்கொண்டு வந்தவர்கள் தற்போது இந்திய தேசியம் பேசுகின்றனர். இப்போது அவர்கள் ஆரிய திராவிடமும் பேசுவதில்லை, மண்ணைக்குறித்தும் பேசுவதில்லை, தமிழ் தான் திராவிடம் என புது முகமுடியுடன் வருகின்றனர். இனத்தால் திராவிடன், மொழியால் தமிழன், நாட்டால் இந்தியன் என, நடைமுறையில் யாரும் ஏற்றுக்கொள்ளமுடியாத புதிய தத்துவத்தை உதிர்க்கிறார் கருணாநிதி. இந்தியா என்ற நாடு தோன்றி 100 ஆண்டுகள் கூட இன்னும் முழுமையடையவில்லை, மொழி தேசியங்களின் உரிமைகள், சுயாட்சி நிலை நாட்டப்படும் என்பது தான் இந்திய அரசியலமைப்புச் சட்டம் சொல்கிறது. இந்திய ஒன்றியத்தின் சாரம்சம் அதுதான். ஆனால், இன அடையாள அழிப்பின் மூலம், இந்தியனாக்க முற்படுகின்றனர், இந்தி கற்க சொல்கின்றனர். தமிழ் மொழி உணர்வு பேசி வந்தவர்கள், ஆங்கிலத்தின் பயன்பாட்டை பேசுகின்றனர். தாய்மொழியில் கற்காத எவனும் முன்னேற முடியாது என்கிற அடிப்படை புரிதல், தெளிவு கூட இல்லாமல் இயக்கம் நடத்தி வந்துள்ளனர். ஹிந்திய ஏகாதிபத்தியத்திலிருந்து தமிழிரை காப்பாற்ற வேண்டியவர்கள், ஹிந்துத்துவாவிலிருந்து, மதவாத சக்திகளிடமிருந்து தமிழரை காப்பாற்ற வேண்டியவர்களை தமிழ் தேசியத்திற்கு எதிராக பேசுகிறார்கள். அதிலிருந்தே இவர்கள் யாருக்கானவர் என்பது எளிதில் புரிகிறதல்லவா? எப்படியும் தோற்றுவிடுவோம் என தெரிந்து ஓலமிட்டு ஓடுகின்றனர் திராவிடர்கள். உலகில் தோன்றிய முதன்மொழி தமிழ், அதன் பெயரை மாற்றுவதற்கு நீங்கள் யார்? உலகில் முதலில் தோன்றியவன் தமிழன்! அவன் அடையாளத்தை மாற்றுவதற்கு நீங்கள் யார்? உலகம் முழுதும் சாதி, மத வேறுபாடுகளைத் தாண்டி இணைவது மொழி தேசியத்தால் தான். நாம் வாழும் பகுதி, இந்த நாடு — தமிழ்நாடு, மக்கள் — தமிழர், மொழி — தமிழ், எனவே நாம் தமிழ்தேசிய இனத்தின் மக்கள், நமக்கான அரசியலே தமிழ் தேசிய அரசியல். முன்னேறிய நாடுகளின், ஒரு நாடு முன்னேற்றமடைவதற்கான அடிப்படையே மொழி தேசியம் தான். உலக வல்லாதிக்க, முன்னேறிய நாடுகளான ஸ்விட்சர்லாந்து, சீனா, ஜப்பான், ஜெர்மனி, கொரியா, பிரான்ஸ், பின்லாந்து, ஹாலாந்து, செக் குடியரசு, போலாந்து என அனைத்துமே மொழி தேசியத்தால் நிலைத்திருக்கும் நாடுகள் தான். இதனை பாசிசம் என்பவரோ,இனத்தூய்மைவாதம் என்பவரோ, பிரிவினை வாதம் என்பவரோ ஒன்று அடிப்படை புரியாதவராக இருக்கலாம், அல்லது தனக்கும், தமிழல்லாத தன் இனத்திற்கும் ஆபத்து என நினைத்திருக்கலாம். நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த இல்லாண்மை ஆக்கிக் கொளல். - திருக்குறள் ஒருவனுக்கு நல்ல ஆண்மை என்பது அவன் பிறந்த வீட்டையும் நாட்டையும் ஆளும் தன்மையைத் தனக்கு உரியதாக ஆக்கிக் கொள்வதே. -இரா.மணிமாறன் 07.02.2017 https://medium.com/@iManiMaaran/திராவிடமும்-தமிழ்தேசியமும்-பகுதி-2-62f8b1d24942
  • பையன்26: "அது கிருப‌ன் அண்ணா எழுத‌வில்லை , ந‌ந்த‌ன் அண்ணா எழுதின‌து , உற‌வுக‌ள் இந்த‌ திரியில் எழுதுவ‌தால் உங்க‌ளுக்கு ஏதாவ‌து உள் குத்து இருக்கா இருந்தா வெளிப்ப‌டையா சொல்லுங்கோ ,  இது உங்கள் கற்பனை வேறு ஒரு திரியில் யாழ் உற‌வுக‌ள் ஊரில் வீடு க‌ட்டின‌ ப‌ட‌ங்க‌ள் போட‌ அதில் வ‌ந்தும் தேவை இல்லாம‌ உங்க‌ளின் வ‌ம்ம‌த்தை க‌க்கி நீங்க‌ள் ," இதுக்கை உது தேவையா? Knowthyself: "அதை வண்மம் என்று எடுத்தால் என்ன செய்ய, கடவுளே!"   Knowthyself: "எனது கருத்து, சீமான் ஒரு எழிமையான தலைவன் அல்ல, முற்று முழுதாக நம்ப ஏலாது, சீமானால், விசர் கதைகள் கதைக்காமல் அரசியல் செய்தாலும் இலங்கையில் ஒரு ஆணியையும் புடுங்க ஏலாது, தமிழ் நாட்டில் கொஞ்ச மாற்றத்தை கொண்டு வருவார் என நம்பிகிறேன். பெரிய தலைவனாவதற்குரிய தகுதியை இழந்துகொண்டு வருகிறார் அல்லது இழந்துவிட்டார், இது அவரின் நீண்ட கால தந்திரமாகக்கூட இருக்கலாம், கிடைச்சதோடமெல்லமா மறலாம், அத்துடன் துனிந்தாள் மாதிரித்தெரியவில்லை. இப்போதைக்கு சீமானும் எங்களுக்கு தேவை."   பையன்26: "இந்த‌ திரியில் எழுதுற‌ என‌க்கே அதிக‌ம் வேர்க்க‌ வில்லை , உங்க‌ளுக்கு தான் அதிக‌ம் வேர்க்குது , இதில் வேற‌ கூலிக்கு மார் அடிப்ப‌து போல் எழுதுறிங்க‌ள் , இதா உங்க‌ளின் ப‌ன்பு , இது உங்கள் கற்பனை. எனது கருத்தை இங்கு வைக்கமுடியாதா? "இதில் வேற‌ கூலிக்கு மார் அடிப்ப‌து போல் எழுதுறிங்க‌ள்" இது என்ன ப‌ன்பு? இந்த‌ திரியை திசை திருப்ப‌ தான் இப்ப‌டியான‌ கேவ‌ல‌மான‌ க‌ருத்தை ப‌திவுடிறீங்க‌ள் , அண்ண‌ன் சீமானின் பெருமைக‌ளை உற‌வுக‌ள் ப‌ல‌ர் எடுத்து சொல்லுவ‌து உங்க‌ளால்   அத‌ பொறுத்து கொள்ள‌ முடியாம‌ல் இருக்கு ," நாங்களும் சீமான் ரசிகன்தான், இந்த context இல் முரன்படுகிறேன்!    
  • உலக சுற்றுச்சூழல் தினம்: ஆர்டிக் பகுதியில் 20,000 டன் எண்ணெய் கசிந்ததால் மாபெரும் அச்சுறுத்தல் AFP இன்று உலக சுற்றுச்சூழல் தினம். இந்த நாளில் இப்படி ஒரு மோசமான செய்தியைப் படிக்க நீங்கள் விரும்ப மாட்டீர்கள். ஆர்டிக் பகுதியில் உள்ள ஆறு ஒன்றில் சுமார் 20,000 டன் டீசல் கசிந்ததை அடுத்து அவசரநிலையை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்.  கடந்த வெள்ளியன்று ரஷ்யாவின் நோரில்ஸ்க் நகரத்துக்கு அருகிலுள்ள மின்னுற்பத்தி நிலையத்தில் இருக்கும் எரிப்பொருள் தொட்டி சேதமடைந்தபோது இந்த கசிவு ஏற்பட்டுள்ளது.  இதையடுத்து மின்னுற்பத்தி நிலையத்தின் இயக்குநர் வியாசெஸ்லாவ் ஸ்டாரோஸ்டின் ஜூலை 31 வரை காவலில் எடுக்கப்பட்டுள்ளார். ஆனால் அவர் மேல் வழக்கு ஏதும் பதிவு செய்யப்படவில்லை.  உலகின் மிகப் பெரிய நிக்கல் மற்றும் பல்லேடியம் தயாரிப்பாளரான நோரில்ஸ்க் நிக்கல் நிறுவனத்தின் துணைநிறுவனத்துக்கு சொந்தமானதே இந்த மின்னுற்பத்தி நிலையம்.    இதுகுறித்து விசாரித்து வரும் சிறப்பு குழு, சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்தியதற்காகவும், இந்த கசிவு குறித்து அதிகாரிகளிடம் இரண்டு நாட்கள் தாமதமாக தகவல் அளித்த அலட்சியத்திற்காகவும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது.  எரிப்பொருள் வைக்கப்பட்டிருந்த இடத்தின் தரைக்கடியில் ஏற்பட்ட விரிசலே இந்த எண்ணெய் கசிவுக்கு காரணம் என நம்பப்படுகிறது. நிலத்தடி உறைபனி மண்டலத்தில், அதாவது இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு தொடர்ந்து குளிர்ச்சியாக இருக்கும் மண்டலத்தில் இருக்கும் இந்த பகுதியில் தற்போது வெப்பம் வாட்டி வருகிறது.  இவ்வளவு பெரிய விபத்து குறித்த தகவல் அதிகாரிகளுக்கு மிகவும் காலதாமதமாக தெரிந்ததையடுத்து அதிபர் புதின் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.  சம்பந்தப்பட்ட அமைச்சகத்துக்கு தகவல் கொடுக்கும்முன், மின்னுற்பத்தி நிலைய நிர்வாகம் இரண்டு நாட்களாக இந்த கசிவை சமாளிக்கும் பணியை மேற்கொண்டதாக அவசரநிலைக்கான அமைச்சர் யெவ்ஜெனி ஜினிச்செவ் புதினிடம் விளக்கம் அளித்துள்ளார்.  விபத்து நடந்த இடத்திலிருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவு வரை சென்ற எண்ணெய், அங்குள்ள அம்பர்னயா நதியை சிவப்பு நிறமாக மாற்றியது.  AFP இந்த விவகாரம் தொடர்பாக காணொளி காட்சி வழியாக நடத்தப்பட்ட கூட்டத்தில், மின்னுற்பத்தி நிலையத்தின் நிர்வாகம் மீது அதிபர் புதின் விமர்சனங்களை முன்வைத்தார்.  "சம்பவம் நிகழ்ந்ததை அரசு முகமைகளுக்கு தெரிவிக்க ஏன் இரண்டு நாட்கள் ஆனது? நாங்கள் சமூக வலைதளங்களின் மூலம்தான் அவசர நிலையை அறிய வேண்டுமா?" என்று மின்னுற்பத்தி நிறுவனத்தின் தலைவர் செர்கெய் லிபினிடம் அவர் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.  மூக ஊடகங்களில் பகிரப்பட்ட தகவல் மூலமே இந்த எண்ணெய் கசிவு குறித்து தனக்கு தெரியவந்ததாக அந்த பிராந்தியத்தின் ஆளுநர் அலெக்ஸாண்டர் அஸ் புதினிடம் விளக்கமளித்தார்.  இந்த கசிவு சுமார் 350 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பை மாசுபடுத்தி இருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.  ஆனால் நோரில்ஸ்க் நிக்கல் நிறுவனமோ, இந்த விபத்து குறித்து சரியான நேரத்திலும் விதத்திலும் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தப்பட்டதாக தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.  AFP அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்த கசிவை சுத்தம் செய்ய மேலும் சில படைகள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளன.  இது நவீன ரஷ்ய வரலாற்றில் இரண்டாவது பெரிய விபத்து என்று நம்பப்படுவதாக உலக வனவிலங்கு நிதியத்தின் நிபுணர் அலெக்ஸி நிஷ்னிகோவ் ஏஃப்பி செய்தி முகமையிடம் தெரிவித்தார்.  இந்த கசிவின் அளவு மற்றும் அந்த ஆறு அமைந்துள்ள அமைப்பையும் பார்க்கும்போது இதை சுத்தம் செய்வது கடினம் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  இந்த சம்பவத்தை 1989இல் அலாஸ்காவில் நடந்த எக்ஸான் வால்டிஸ் பேரழிவோடு கிரீன்பீஸ் என்னும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் ஒப்பிடுகிறது.  ஆர்டிக் பகுதியில் இதுபோன்ற ஒரு விபத்து ஏற்பட்டது இல்லை என்கிறார் ரஷ்ய சுற்றுச்சூழல் கண்காணிப்பு நிறுவனத்தின் துணை தலைவர் ஓலேக் மிட்வோல்.  இதை சுத்தம் செய்ய 100 பில்லியன் ரூபல் செலவாகும் எனவும் ஐந்து முதல் 10 வருடம் ஆகலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.  Getty Images நோரில்ஸ்க் நிக்கல் நிறுவனம் எண்ணெய் கசிவு பிரச்சனையில் சிக்குவது இது முதல்முறையல்ல. 2016இல் இது போன்றதொரு சம்பவம் நடந்ததற்கு அந்த நிறுவனமே பொறுப்பேற்று கொண்டது.  இந்த நிலையில், நிலப்பரப்பில் கசிந்துள்ள எண்ணெய்யை எரித்து அப்புறப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ரஷ்யாவின் இயற்கை வள பாதுகாப்புத்துறை அமைச்சர், அந்த எண்ணெயை நீர்க்க செய்யலாம் என கூறியுள்ளார்.      https://www.bbc.com/tamil/science-52936024
  • மகிந்த ராஜபக்ஸ மக்களின் நாயகன்; ஒரு மக்கள் சக்தி: சம்பந்தன் புகழ் மாலை மகிந்த ராஜபக்ச தான் வகித்த ஒவ்வொரு பதவியிலும் மக்களின் அன்பையும், ஆதரவையும் பெற்று, மக்களின் நாயகனாக விளங்கினார். அவர் மக்களுக்கு ஒரு மாபெரும் சக்தியாக விளங்கினார். தீர்க்கப்படாமலுள்ள இனப்பிரச்சனையை தீர்க்கவல்ல பலமிக்க தலைவர் அவர்தான் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் புகழ்மாலை சூட்டியுள்ளார். மஹிந்த ராஜபக்சவின் 50 ஆண்டு அரசியல் பூர்த்தியை முன்னிட்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் இரா.சம்பந்தன் அனுப்பியிருந்த வாழ்த்து செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, கௌரவ மகிந்த ராஜபக்ஷ தனது அரசியல் வாழ்க்கையில் ஐம்பது (50) ஆண்டுகளைப் பூர்த்தி செய்துள்ளமை தொடர்பாக அவருக்குப் பாராட்டுத் தெரிவிப்பதோடு, எனது உளமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதில் நான் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். இக்காலப்பகுதியில் அவர் ஓர் அரசியல்வாதியாக, ஒரு பாராளுமன்ற உறுப்பினராக, ஓர் அமைச்சராக, எதிர்க்கட்சித் தலைவராக, பிரதம மந்திரியாக, நாட்டின் சனாதிபதியாக சாத்தியமான ஒவ்வொரு பதவியிலும் இலங்கைக்குச் சேவையாற்றியுள்ளார். தான் வகித்த இவ்வொவ்வொரு பதவியிலும் அவர் தனிச் சிறப்புடன் விளங்கியதோடு, நாட்டு மக்களின் அன்பையும் நம்பிக்கையையும் வென்றெடுத்தார். அவர் அடிப்படையில் தன்னை நம்பிய, தன்னால் வழிநடத்தப்படுவதற்கு விரும்பிய சாதாரண மக்களின் ஒரு தலைவராகத் திகழ்ந்தார். தான் வகித்த பதவிகளிலெல்லாம் அவர் அடிப்படையில் மக்களின் ஒரு நாயகனாகவே திகழ்ந்தார். மக்கள் அவரை மதித்தார்கள். அவர் மக்களை மதித்தார். அவர் மக்களுக்கு ஒரு மாபெரும் சக்தியாக விளங்கினார். மறுபுறத்தில் மக்களே அவரது பெரும் சக்தியின் மூலமாக விளங்கினர். இதுவே எந்தவொரு அரசியல் தலைவரினதும் பலம்மிக்க பண்பாகும். மகிந்த ராஜபக்ஷவிடம் இப்பண்பு மிகப் பெருமளவில் நிறைந்து காணப்பட்டது. அதுவே அவரது அரசியல் வெற்றிக்குத் திறவுகோலாகத் திகழ்ந்தது. இது ஏற்றுக் கொள்ளபடவேண்டிய ஒன்று. இலங்கை மக்களின் சார்பாக, குறிப்பாக பாராளுமன்றத்தில் நான் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் மக்களின் சார்பாக அவருக்கு எமது உளமார்ந்த வாழ்த்துக்களையும் வெற்றிகரமானதோர் அரசியல் எதிர்காலத்திற்கான எமது நல்வாழ்த்துக்களையும் நான் தெரிவித்துக்கொள்கிறேன். ஒரு நாடு என்ற வகையில் இலங்கை தீர்க்கப்படாத பாரதூரமான பல பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளது. நாட்டின் அதி உன்னத சட்டமாக அமையும் புதியதோர் அரசியலமைப்பு நாட்டிற்கு மிக முக்கியமாகத் தேவைப்படுகிறது. நீண்டகாலமாக மக்கள் சிந்தனையிலிருந்துவரும் மாற்றங்களை உள்ளடக்கி புதியதோர் அரசியலமைப்பை உருவாக்குவதற்கு இலங்கை மக்கள் கடந்த பல தசாப்தங்களாக தமது தேசிய ஜனநாயகத் தீர்ப்புகளில் ஆணை வழங்கியுள்ளனர். அதுகுறித்து பெருமளவு கருத்தொருமைப்பாடும் நிலவுகிறது. இவ் அவசரமானதும் கட்டாயமானதுமான தேவையை நிறைவேற்றுவதற்கு மக்கள் ஆதரவுபெற்ற ஒரு பலமிக்க தலைவர் தேவை. சந்தேகத்திற்கிடமின்றி கௌரவ மகிந்த ராஜபக்ஷ அந்த நிலையில் இருக்கிறார். அந்தப் பணியை ஏற்று நிறைவேற்றுவதன்மூலம் கௌரவ ராஜபக்ஷ மேலும் பாரிய உச்சத்திற்கு உயர்ந்தெழ வேண்டும். அது அவரை ஒரு சிறந்த இராஜதந்திரி என்ற மட்டத்திற்கு உயர்த்துவதோடு, அவருக்கு வெறுமனே தேசிய அங்கீகாரத்தை மாத்திரமின்றி சர்வதேச அங்கீகாரத்தையும் மதிப்பையும் வழங்கும். இந்த விடயத்தில் எமது முழுமையான ஆதரவு அவருக்கு உண்டு. நீதி, சமத்துவம் மற்றும் கௌரவம் ஆகியவற்றின் அடிப்படையில் நேர்மையானதும் நிரந்தரமானதுமான ஒரு தீர்வினைக் கொண்டு வந்த ஒரு தலைவராக அவர் இலங்கை வரலாற்றில் தனக்கெனஓர் இடத்தைப் பெறுவார். கௌரவ மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்   http://www.samakalam.com/செய்திகள்/மகிந்த-ராஜபக்ஸ-மக்களின்/