Jump to content

இதழில் கதை


Recommended Posts

இதழில் கதை

 

கணவன் யார் மீதோ பயங்கர கோபமாக சண்டைக்கு புறப்படுகிறான் என்பதை புரிந்துகொள்கிறாள் மனைவி. அவன் சட்டையை மாட்டிக்கொண்டு மேலிருந்து பொத்தான்களை பொருத்த இவள் மேலிருந்து கழற்ற ஆரம்பிக்கிறாள்.
"என்ன செய்கிறாய்.."கோபமாக
"எங்கே புறப்பட்டு விட்டீர்கள் "அவன் கண்களை வாஞ்சையோடு நோக்கியவாறு கேட்கிறாள்
"வெளியே ஒரு வேலை இருக்கிறது"
"எனக்கு தெரியும் சண்டைக்கு போகிறீர்கள்.."
"ம் என்னையே சீண்டி பார்க்கிறார்கள் அவர்களை அடித்தால்தான் மனம் ஆறும்"

"நீங்கள் வீர்ர்தான் ஆனால் அடித்தால் பகை வளரும் வஞ்சம் வைத்து காத்திருப்பார்கள் என்னிலோ குழந்தையிலோ கூட பகைமையை காட்ட முனைவார்கள்"

"தொட்டுவிடுவார்களா உன்னையோ பிள்ளையையோ"

"என் பேச்சை கேளுங்கள்"

"சொல்லு"

"உங்களின் இந்த அதிரடியால் என்ன கிடைக்கும்"

"எனக்கு மன அமைதி கிடைக்கும்"

அவனை கட்டிலுக்கு இழுத்து செல்கிறாள் கட்டிலில் அமர்ந்து அவன் தலையை தன் மடியில் தாங்கிகொள்கிறாள்

"கண்களை மூடுங்கள் "

தலையை கோதி அவன் நெற்றியில் அழுத்தமான நீளமான முத்தத்தை வைக்கிறாள்

"என் முத்தம் தராத அமைதியை அவர்கள் இரத்தம் தந்துவிடுமா?.."

அவனிடம் பதில் இல்லை

"எதிரிகளுக்கு மன்னிப்பை விட பெரிய தண்டனை வழங்கமுடியாது அல்லவா.."

"எனக்கு எதிரியாகும் தகுதி கூட அவர்களுக்கு இல்லை"

"அப்படியானால் அவர்களுடன் சண்டைக்கு சென்று ஏன் உங்கள் தகுதியை குறைத்து கொள்கிறீர்கள்"

கழுத்தை கட்டிக்கொண்டு காதில் சொன்னாள்

"குடும்பஸ்தனுக்கு தேவை வரவேண்டியது அன்பும் ஆசையும்தான் கோபமும் வேகமும் அல்ல"

அவனிடம் பதிலில்லை

பதிலை கேட்க வாய் அருகே காதை கொண்டு செல்லவேண்டும் .அவள்
இனி கேட்கமுடியாது அவள் உதடுகள்
விடுதலை பெறும்வரை.

அண்ணனாலும் அம்பை விடு என்ற கிருஷ்ண உபதேசத்தை போற்றுகின்ற உலகம் அறிவதில்லை எத்தனை வீடுகளில் அன்பால் பெண்பால் நிறுத்தி வைத்துவிடுகிறாள் சண்டையை என்று.
 
04/10/2017

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கருத்தான கதை விகடகவி ,கன நாட்களுக்கு பின் இங்கு கண்டது சந்தோசம்.....!  tw_blush:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு கருத்துள்ள கதை. இப்படியானால் எங்கும் இன்பமே. ஆனால் யார் கேட்பார்கள்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.