Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

"மோடியே எனது மணவாளன்” போராட்டம் நடத்தும் சாந்தி சர்மா!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

"மோடியே எனது மணவாளன்” போராட்டம் நடத்தும் சாந்தி சர்மா!  vil-roulelangue.gif

Om-Shanti-Sharma.jpg

 

'பிரதமர் நரேந்திர மோடியைதான் திருமணம் செய்வேன்' என ஜந்தர் மந்தரில் ஒரு மாதமாக ஜெய்ப்பூரை சேர்ந்த பெண் ஒருவர் போராட்டம் நடத்தி வருகிறார்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு நாடு முழுவதும் அதிகமான ரசிகர்கள் மற்றும் ஆர்வலர்கள் உருவாகி உள்ளனர். அவர்களில் சிலர் அவரை தனிப்பட்ட முறையில் சந்தித்து பேச காத்திருப்பவர்கள் மத்தியில், மோடியின் மீது அதிக காதல் பாசம் கொண்ட ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரை சேர்ந்த 40 வயதுடைய 'ஓம் சாந்தி சர்மா' என்ற பெண், பிரதமர் மோடியைதான் திருமணம் செய்வேன் என ஜந்தர் மந்தரில் கடந்த செப்டம்பர் 8-ஆம் தேதி முதல் மோடி புகைப்படம் மற்றும் வாசகம் அடங்கிய பேனருடன் ஒரு மாதமாக போராட்டம் நடத்தி வருகிறார்.

ஓம் சாந்தி சர்மா பேசுகையில், “எனக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது. ஆனால், திருமணம் நீண்ட நாள் நீடிக்கவில்லை. நான் இப்போது தனிமையில் இருக்கிறேன். அதுபோல, அவரும் (மோடி) என்னைப் போல் தனிமையில் இருக்கிறார். என்னை திருமணம் செய்துக்கொள்ள சம்மதம் என பலரும் அணுகுகிறார்கள், ஆனால் பிரதமர் நரேந்திர மோடியை திருமணம் செய்துகொண்டு அவருக்கு சேவையாற்ற விரும்புகிறேன்,”என தெரிவித்தார்.

மேலும் “பிரதமர் நரேந்திர மோடியும் தனியாக இருந்து அதிகமான வேலையை செய்து வருகிறார். நான் அவரை சந்திக்க அனுமதிக்கப்பட மாட்டேன் என்று எனக்குத் தெரியும், ஆனால் அவருக்கு உதவி தேவை என்பது எனக்கு தெரியும், அவருக்கு சேவையாற்ற நானும் விரும்புகின்றேன்” என குறிப்பிட்டுள்ளர்.

“இங்குள்ள மக்கள் என்னைப் பார்த்து சிரிக்கிறார்கள், மோடிஜியை திருமணம் செய்ய நான் விரும்பவில்லை என்று அவர்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன், ஏனென்றால் அவரிடம் எனக்கு ஒன்று இருக்கிறது, பெரியவர்களை மதிக்க வேண்டும் என சிறு வயதிலிருந்தே சொல்லி கொடுத்திருக்கின்றனர்.

நான் மோடியை மதிக்கிறேன். எங்கள் கலாச்சாரம், குழந்தை பருவத்தில் இருந்து பெரியவர்களுக்கு மரியாதை கொடுத்து, அவற்றின் வேலையில் அவர்களுக்கு உதவி செய்யவே விரும்புகின்றேன். பார்ப்பவர்கள் எல்லாம் மனநோயாளி என நினைத்து சிரிக்கின்றனர். ஆனால், என் மனநிலை நன்றாக உள்ளது. பணத்துக்காக நான் அவரை திருமணம் செய்துகொள்ள நினைக்கவில்லை!” என தெரிவித்துள்ளார்.

சாந்திக்கு தனது முதல் திருமணத்தில் 20 வயதுடைய மகள் உள்ளார். அவளது எதிர்காலத்தைப் பற்றி அவர் கவலை கொள்ளவில்லை, ஜெய்ப்பூரில் தனக்கு நிறைய நிலம் மற்றும் பணம் இருப்பதாகக் கூறுகிறார்.

மோடிக்கு சில பரிசுகளை வழங்குவதற்காக நிலங்கள் சிலவற்றை விற்பனை செய்யவும் திட்டமிட்டுள்ளதாகவும், மோடி இங்கு வந்து என்னை சந்திக்கும் வரையில் போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியை திருமணம் செய்துகொள்ளவதற்காக போராட்டம் நடத்தி வரும் சாந்தி, ஜந்தர் மந்தரில் தங்கி குர்துவாஸ் மற்றும் கோவில்களில் சாப்பிட்டு வருகிறார்.

ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதிக்க கூடாது என்ற பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவினால் வேறு இடத்திற்கு மாற்றுவதைப் பற்றி சாந்தி சர்மா கவலை கொண்டுள்ளதாக தெரிகிறது.

“என்னை அரசு இங்கிருந்து அகற்றுமா, அகற்றினால் நான் என்ன செய்வேன் என்று எனக்குத் தெரியாது, ஒரு மாதமாக போராட்டத்திற்கு இவ்விடம் மிகவும் வசதியாக இருந்தது” என கூறியுள்ளார்.

தினமணி

 

குறிப்பு:

வட இந்தியர்களே இப்படித்தானா...?  ஏதோ ஆகிவிட்டது..! :grin:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இதே போன்ற செய்திக்கு 'தற்ஸ்தமிழி'லில் ஒரு வாசகர் அளித்துள்ள கருத்து இது..

Untitled.png

Edited by ராசவன்னியன்
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ராசவன்னியன் said:

இதே போன்ற செய்திக்கு 'தற்ஸ்தமிழி'லில் ஒரு வாசகர் அளித்துள்ள கருத்து இது..

Untitled.png

நித்தியானத்தாவை.... டெல்லிப் பக்கம் அனுப்பி விட்டால்,  
நம்மூரில்.... கலகலப்புக்கு, பஞ்சம் ஏற்பட்டு விடுமே...   :grin:

Link to post
Share on other sites
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.