Jump to content

அதிகரிக்கும் சிறுநீரக நோய்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அதிகரிக்கும் சிறுநீரக நோய்

[07 - March - 2007

நாளைய தினம் உலக சிறுநீரக தினமாகப் பிரகடனம் செய்யப்பட்டிருக்கிறது. அபிவிருத்தியடைந்துவரும் நாடுகள் பலவற்றில் சிறுநீரக நோய் பரவலாகக் காணப்படுகின்றதெனினும், மக்கள் மத்தியில் அது தொடர்பான விழிப்புணர்வு மிகவும் குறைவாகவே இருக்கிறது. சர்வதேச சிறுநீரகவியல் சங்கத்தின் இணை அமைப்பாக விளங்கும் இலங்கை சிறுநீரகவியல் மற்றும் உறுப்புமாற்று சிகிச்சை சங்கம் சிறுநீரக நோய் தொடர்பாக இலங்கையர்கள் மத்தியில் விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்குடன் பாரிய பிரசார இயக்கமொன்றை ஆரம்பிக்கவிருக்கிறது. சிறுநீரக நோயைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் செய்தியைப் பரப்புவதற்கான சுவரொட்டி இயக்கம் முன்னெடுக்கப்படவிருக்கிறது.

`சிறுநீரக நோய் பெரும் எண்ணிக்கையானோரை பாதிக்கும் ஒரு பொதுவான நோயாக இருக்கின்றபோதிலும், அது இன்னமும் வெளியில் தெரியாத ஒரு பிரச்சினையாக இருக்கிறது. சிறுநீரக நோய் தடுக்கப்படக்கூடியது என்ற செய்தியை மக்களுக்கு உணர்த்துவதற்கே நாம் முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறோம்' என்று இலங்கை சிறுநீரகவியல் மற்றும் உறுப்புமாற்றுச் சிகிச்சை சங்கத்தின் தலைவரான டாக்டர் சூல ஹேரத் கூறுகிறார். முன்கூட்டியே பரிசோதனைகளைச் செய்துகொள்ள வேண்டியது முக்கியமானதாகும். மிகவும் எளிமையான சிறுநீர் மற்றும் இரத்தப் பரிசோதனைகளைச் செய்து நோய் இருக்கிறதா இல்லையா என்பதை நிர்ணயித்துக்கொள்வதன் மூலமாக வாழ்நாள் பூராவுமான அவலத்தையும் அந்த நோயின் விளைவான மரணத்தையும் தவிர்த்துக்கொள்ள முடியும்.

பெரும்பாலான அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் வயது வந்தவர்களைப் பொறுத்தவரை, பத்துப்பேரில் ஒருவரிடம் சீர்படுத்த முடியாத சிறுநீரக நோய்க்கான அறிகுறி இருப்பதாகவும் 35 பேரில் ஒருவருக்கு பாரதூரமான சிறுநீரக நோய் இருப்பதாகவும் தெரிய வந்திருக்கிறது என்று சிறுநீரகவியல் நிபுணர் டாக்டர் ஏ.எல்.எம்.நஸார் கூறுகிறார். சிறுநீரகங்கள் பெருமளவு சேம ஒதுக்கீட்டைக் கொண்டிருப்பதால் அதீத பளுவுக்கு மத்தியிலும் அவை தொடர்ந்து செயற்பட்டுக்கொண்டிருக்கும். அதனால் தங்களது சிறுநீரகச் செயற்பாடு சுமார் 80-85 சதவீதம் வீழ்ச்சி காணும்வரை மக்கள் சிறுநீரக நோயை உணருவதில்லை. சிறுநீரக நோய்க்கான பிரதான காரணிகள் நீரிழிவும் உயர் இரத்த அழுத்தமுமாகும். சிறுநீரக அழற்சி, வீக்கம் மற்றும் சிறுநீர்க் கால்வாய்த் தடங்கல் ஆகியவையும் சிறுநீரக நோய் ஏற்படுவதற்கு ஏதுவாகும். இலங்கை சனத்தொகையில் 14 சதவீதத்துக்கும் அதிகமானோர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.