Jump to content

80களில் இருந்த தொடர்பு முறை !


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

80களில் இருந்த தொடர்பு முறை !

 

Mohamed Nizous

80களின் தொடக்கத்தில் இருந்த தொடர்பு

முறை தம்பிமார் அறிந்தால் நம்ப மாட்டார்கள்.

கட்டாரில் வேலை செய்ய கடல் தாண்டிப் போனமகன்

ஆபத்து ஏதுமின்றி அங்கு போய்ச் சேர்ந்தாரென்று

செய்தி தபாலில் வர செல்லும் ரெண்டு வாரம்.

ஓரத்தில் கலர் கலராய் உள்ள எயார் மெய்லை

ஊருக்குள் கொண்டு வரும் ஆரைப் பற்றை போஸ்ட்மேனை

தூரத்தில் கண்டதுமே துள்ளி ஓடிச் சென்று எம்புள்ள கடிதம் இருக்காப்பா

எனக் கேட்டு அன்புள்ள தாய்மார்கள் ஆதங்கப் படுவார்கள்

ஊரு விட்டு ஊரு சென்று உழைக்கின்ற வாப்பாமார் சேருகின்ற

பணத்தை செல்லங்களுக்கு அனுப்ப போஸ்ட் ஒபிஸ் சென்று

போர்ம் நிரப்பி பணம் கொடுப்பார். மணி ஓடர் கொண்டு வரும் மணி ஓசை

கேட்டு குடும்பத்தில் சந்தோசம் குற்றாலமாய்க் கொட்டும்.

தந்தி ஒன்று கண்டாலே தலை சுற்றும் மனம் பதறும்.

யாரு மெளத்தோ ! என்ன பிரச்சினையோ! அவசரமாய் செய்தியினை அனுப்பி இருக்காங்க.

அண்ண நீங்களே அதப் படிச்சு சொல்லுங்க தபால் கார

அண்ணயிடம் தவிப்போடு கூற ஏம்மா பயப்படுறீங்க.

இண்டவியுக்கு வா என்று பிள்ளைக்கு வந்து இருக்கு பீயோன் பால் வார்ப்பார்.

போணிருக்கும் வீடு என்றால் பொதுவாகப் பெரும் வீடு.

காண்பதற்கே அரிது கதைப்பதென்றால் கனவு.

இருபத்தைந்து வருடங்கள் இருக்கின்றேன் டெலிகொம்மில்.

ஏ. எல். எடுக்கும் வரை இவன் போணைத் தொடவேயில்லை.

பொழுது போகாத பொடியன்களும் பிள்ளைகளும் எழுதுவார் கடிதங்கள்

இதன் பெயர் பேனா நட்பு. பேனா நட்பு

சில நேரம் பே நாய் எனும் ஏச்சில் வீணாய் முடியும்

ஆனாலும் பலர் தொடர்வார்

இருக்கின்ற ரேடியோவில் எப் எம் இயங்காது.

சிற்றலை வரிசையிலே சற்றுத் தெளிவின்றி இலங்கை வானொலி இல்லங்களில் ஒலிக்கும்

தினபதி, கேசரி தினமும் செய்தி தரும்.

சிந்தாமணி, மஞ்சரி சிறப்பிதழ் ஞாயிறில்.

விகடன் , குமுதம் வேண்டிப் படிக்க மாட்டார். வாசிக சாலையில் வாசித்து முடிப்பார்.

தொலைக்காட்சி லேசாக தூறத் தொடங்கியது.

ரூபவாஹினிக் கொக்கை ரொம்ப நேரம் காட்டிய பின் புள்ளிகள் மத்தியில் வெள்ளை கருப்பு செய்தி வரும்.

இப்போது எல்லாமே இமீடியற்றாய் கிடைக்கிறது ஆனாலும்

அன்று ஆவலாய் கவர் உடைத்து வாசித்த வாசித்து வரிகளைப் பாடமிட்டு நேசித்த அந்த சுகம் நெற்றில் கிடைக்கவில்லை…!

முழு விபரம்: http://www.akuranatoday.com/news/?p=175885 .

 

 

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அன்றைய கால தொடர்புகளை மீட்டும் அழகான கவிதை....!

எயார் மெயிலில் குருவி முத்திரைகள்

விரல் விட்டு சுழற்றும் சுழற்றும் தொலைபேசி 

குரலைப் பதிவு செய்து அனுப்பும் கேசட் 

விரைந்து வரும் தந்தி 

இரு குமிழிலும் ஐந்து கட்டைகளிலும் உலகை வீட்டுக்குள் இழுத்து வரும் ஏரஸ் ரேடியோ 

எல்லாம் அருமை.....! 

பகிர்வுக்கு நன்றி கொழும்பான்.....!  

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

எம் இளமைக்கால நினைவுகளை மீட்டு வந்த நல்லதொரு கவிதை. இத்தனை வேகமாக தொழில்நுட்பம் வளர்ந்துவிடுமென்று அப்பொழுது நாம் கற்பனைகூட செய்யவில்லை. அந்தநாட்களில் தபால்காரனின் வருகைக்காக காத்திருப்பதே சுகம்தான். அந்த றேடியோப்பெட்டி ஒலி ஒளி நாடாக்கள் எல்லாமே வேகமாய் மறைந்து விட்டாலும் எம் நினைவுகளின் அடித்தளத்தில் நிலைத்து நிற்கின்றன. கவிதைப் பகிர்வுக்கு நன்றகள் கொழும்பான்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

 அருமை.....! 

பகிர்வுக்கு நன்றி கொழும்பான்..

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kavallur Kanmani said:

எம் இளமைக்கால நினைவுகளை மீட்டு வந்த நல்லதொரு கவிதை. இத்தனை வேகமாக தொழில்நுட்பம் வளர்ந்துவிடுமென்று அப்பொழுது நாம் கற்பனைகூட செய்யவில்லை. அந்தநாட்களில் தபால்காரனின் வருகைக்காக காத்திருப்பதே சுகம்தான். அந்த றேடியோப்பெட்டி ஒலி ஒளி நாடாக்கள் எல்லாமே வேகமாய் மறைந்து விட்டாலும் எம் நினைவுகளின் அடித்தளத்தில் நிலைத்து நிற்கின்றன. கவிதைப் பகிர்வுக்கு நன்றகள் கொழும்பான்.

உண்மை கண்மணி அக்கா. இந்த உலகம் தோன்றிய  காலத்தில் இருந்து.... கடந்த 30 - 40 வருடத்தில்,
ஏற்பட்ட மாற்றங்கள் யாரும் எதிர் பார்க்க முடியாதவை. 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: Text

எல்லாம்...போச்சு.  :)

Kein automatischer Alternativtext verfügbar.

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • ஜெயலலிதாவின் சிலையுடன் அருங்காட்சியகத்தைத் திறந்து வைத்தார் முதல்வர்! மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 73ஆவது பிறந்த நாளான இன்று, ஜெயலலிதாவின் சிலையுடனான அறிவுசார் பூங்காவையும், அருங்காட்சியகத்தையும்  முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்துள்ளார். இந்நிகழ்வில், துணை முதல்வர் ஓ.பன்னீர்ச்செல்வம், அமைச்சர்கள், செய்தித்துறை இயக்குநர் பாஸ்கர பாண்டியன் மற்றும் உயரதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த அறிவுசார் பூங்காவில் ஜெயலலிதாவின் ஆறு அடி உயர மெழுகுச் சிலை அமைக்கப்பட்டுள்ளதுடன் ஜெயலலிதாவிடம் பள்ளி மாணவியொருவர் மடிக்கணினி பெறுவது போன்று சிலையானது தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனைவிட, அருங்காட்சியகத்தில் எட்டு அடி உயர மெழுகுச் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடம் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். சமாதி வளாகத்தில் உள்ளது. பீனிக்ஸ் பறவை வடிவத்தில் அழகிய கட்டமைப்புடன் அமைக்கப்பட்டுள்ள இந்த நினைவிடத்தை கடந்த மாதம் 27ஆம் திகதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார். இந்த நினைவிட வளாகத்தில் அறிவுசார் பூங்காவும் மற்றொரு புறம் டிஜிற்றல் அருங்காட்சியகமும் கட்டப்பட்டுள்ளது. அதில், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு, அவர் செய்த சாதனைகள், மக்களுக்குச் செய்த சேவைகள், காணொளி மற்றும் ஒலி வடிவப் பிரிவு, ஜெயலலிதாவின் உரைகள், சிறுகதைகள், புகைப்படங்கள் என்பன அமைக்கப்பட்டு வந்தன. இந்த பணிக்காக ஜெயலலிதா நினைவிடம் கடந்த 27ஆம் திகதியில் இருந்து மூடப்பட்டிருந்தது. இந்நிலையில், அருங்காட்சியகம் மற்றும் அறிவுசார் பூங்காவின் பணிகள் முழுமையாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து இன்று திறக்கப்பட்டுள்ளது. http://athavannews.com/ஜெயலலிதாவின்-சிலையுடன்-அ/
  • அமெரிக்காவில் 3ஆவது கொரோனா தடுப்பூசிக்கு அங்கீகாரம் ஜோன்சன் அண்ட் ஜோன்சன் (Johnson & Johnson) மருந்து நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசிக்கு அமெரிக்க மருந்து தரக்கட்டுப்பாட்டு ஆணையமான FDA அங்கீகாரம் அளித்துள்ளது. 44 ஆயிரம் பேருக்கு பல்வேறு நாடுகளில் இந்த தடுப்பு மருந்து பரிசோதிக்கப்பட்டதில் எந்தவிதப் பின்விளைவுகளும் ஏற்படாததால் மருந்து பாதுகாப்பானது என்று உறுதி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்ட நிலையில், மூன்றாவது தடுப்பூசியாக ஜோன்சன் அண்ட் ஜோன்சன் தயாரிப்பு மருந்தை அவசர கால சிகிச்சைகளுக்குப் பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மார்ச் இறுதிக்குள் சுமார் 2 கோடி டோஸ்கள் தயாரிக்கப்பட்டு உலகின் பல நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக அந்நிறுவனத்தின் வர்த்தகப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேநேரம், உடனடியாக 40 இலட்சம் டோஸ்கள் ஏற்றுமதிக்கு தயாராக இருப்பதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். http://athavannews.com/அமெரிக்காவில்-3ஆவது-கொரோ/
  • அணுசக்தி மையங்களில் ஐ.நா. கண்காணிப்பதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையை அமுல்படுத்தியது ஈரான்! ஐ.நா.வின் சர்வதேச அணுசக்தி அமைப்பு (ஐஏஇஏ), தங்கள் நாட்டு அணுசக்தி நிலையங்களில் மேற்கொண்டு வரும் கண்காணிப்பைக் கட்டுப்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளை ஈரான் உத்தியோகபூர்வமாக அமுல்படுத்தத் தொடங்கியுள்ளது. அணுசக்தி ஒப்பந்தத்தின்படி தங்கள் நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகள் விலக்கிக்கொள்ளப்படாவிட்டால், ஐஏஇஏ-வுடனான தங்களது ஒத்துழைப்பு நிறுத்தப்படும் என்ற எச்சரிக்கையை இதன் மூலம் ஈரான் வெற்றிகரமாக வெளிப்படுத்தியுள்ளது. எனினும், சர்வதேச கண்காணிப்பாளர்களுக்கு எத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்பது குறித்து விரிவான விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை. ஐ.நா. கண்காணிப்பாளர்களுக்கு அணுசக்தி மையங்களின் கண்காணிப்பு கெமரா பதிவுகளை அளிப்பதற்குத் தடை விதிக்கும் தீர்மானம் ஈரான் நாடாளுமன்றத்தில் கடந்த டிசம்பர் மாதம் நிறைவேற்றப்பட்டது. தங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள எண்ணெய் ஏற்றுமதி தடை மற்றும் சர்வதேச வங்கிப் பரிவர்த்தனைத் தடையை நீக்குவதற்கான நடவடிக்கைகளை அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள ஐரோப்பிய நாடுகள் மேற்கொள்ளாவிட்டால், ஐஏஇஏ-வுக்கு கண்காணிப்பு கெமரா பதிவுகள் அளிப்பது நிறுத்தப்பட வேண்டும் என்று அந்தத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தநிலையில் இதுதொடர்பான தாமதம் காரணமாக, அணுசக்தி மையங்களின் கண்காணிப்பு கெமரா பதிவுகளை கையளிக்கப் போவதில்லை என ஈரான் தெரிவித்துள்ளது. http://athavannews.com/அணுசக்தி-மையங்களில்-ஐ-நா/
  • தற்கொலையைத் தடுக்க தனித்துறையை உருவாக்கியது ஜப்பான்! ஜப்பானில் தற்கொலையைத் தடுக்க வேண்டும் என்பதற்காக ‘தனிமை’ எனும் தனித்துறை உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் இதற்கு டெட்சுஷி சாகாமோட்டோ என்பவரை அமைச்சராக ஜப்பான் அரசாங்கம் நியமித்துள்ளது. இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘சமூக தனிமை மற்றும் தனிமைப்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கும் மக்களுக்கிடையிலான உறவுகளைப் பாதுகாப்பதற்கும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’ என கூறினார். கொரோனா நோய்த் தொற்று பரவலால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பு, வேலை வாய்ப்பின்மை மற்றும் சமூக தனிமைப் படுத்தல் காரணமாக, கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குத் தற்கொலை செய்துகொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக ஜப்பான் பெண்கள் இந்தப் பிரச்னையால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வேலை இல்லாமலும், உரிய வயதடைந்தும் திருமணம் செய்துகொள்ள முடியாமல் தனிமையிலேயே வாழ்ந்து, அதீத மன அழுத்தத்தில் தவித்து வருகிறார்கள். http://athavannews.com/தற்கொலையைத்-தடுக்க-தனித்/
  • இனிய... பிறந்தநாள் வாழ்த்துக்கள், நெடுக்ஸ்.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.