Sign in to follow this  
புங்கையூரன்

மண்ணிழந்த நாள்

Recommended Posts

Jaffna%20Exodus%203.jpg

 

சிறகு முளைக்கும் முன்னரே...,

இறக்கை விரிக்க வைத்த நாள்!

 

பொத்திப் பொத்திப்..,

பிள்ளை வளர்த்தவர்கள்...,

பெற்ற மனசுகளை இறுக்கிய நாள் !

 

எங்கு போனாலும் பரவாயில்லை..,

இங்கு மட்டும் வேண்டாம்  ராசாக்கள் ...!

எங்காவது தூர தேசம் போய் விடுங்கள் !

 

நாங்கள் உயிரோடு இருந்தால்....

நாளைக்கு எங்களுக்கு...,

கொள்ளி போட வந்து விடுங்கள்!

 

காணியை விற்றார்கள்,

கழுத்தில் கிடந்ததை விற்றார்கள்!

கைகளில் கிடந்ததை விற்றார்கள்!

காதுகளில் கிடந்ததையும் விற்றார்கள்!

 

நாளைய நம்பிக்கைகளை,

எஜன்சிகளிடம் கையளித்தார்கள்!

 

உலகப் படத்தையே காணாதவர்கள்..,

சில நாட்களுக்குள்...,

உலகம் முழுவதையுமே..,

உள்ளங் கையில் வைத்திருந்தார்கள்!

 

இன்றோ....,

கோவில்கள், கும்மாளங்கள்,

கும்பாபிஷேகங்கள்,,,,,,

கறிப் பாட்டிகள்...,சாறிப் பாட்டிகள்,

கொண்டாட்டங்கள்....எனக்,

கொடி கட்டிப் பறக்கிறார்கள்!

 

இடைக்கிடை....,

சந்திப்புகளின் போது...,

பியருக்குக் சொட்டைத் தீனியாய்..,

பாரைக் கருவாட்டுப் பொரியலாய்,

கருவேப்பிலைக் கொத்தாய்,

கறுத்தக் கொழும்பான் மாம்பழமாய்,

யாழ்ப்பாண நினைவுகள்...,

அவர்களுடன் வாழ்கின்றன!

 

கொஞ்சம் போரடித்தால்....,

ஊர்ப்பக்கம் ஒரு முறை..,

எட்டிப்பார்த்து......,

சோர்ந்து போன ஈகோக்களைக்,

கொஞ்சம் நிமிர்த்திய திருப்தியுடன்..,

நீட்டிய வால்களை ...,

மீண்டும் சுருட்டிக் கொள்வார்கள்!

 

பீஜித் தீவில் ...,

மொரிசியஸ் தீவில்...,

தென்னாபிரிக்காவில்...,

மலேசியாவில்...சிங்கப்பூரில்,

தமிழர்கள் வாழ்வது போல...,

அமெரிக்காவில்....கனடாவில்...,

இங்கிலாந்தில்....அவுஸ்திரேலியாவிலும்,

தமிழர்கள் வாழ்வார்கள்!..

 

 

Edited by புங்கையூரன்
  • Like 6
  • Thanks 2

Share this post


Link to post
Share on other sites
On 31.10.2017 at 2:50 AM, புங்கையூரன் said:

பொத்திப் பொத்திப்..,

பிள்ளை வளர்த்தவர்கள்...,

பெற்ற மனசுகளை இறுக்கிய நாள் !

 

எங்கு போனாலும் பரவாயில்லை..,

இங்கு மட்டும் வேண்டாம்  ராசாக்கள் ...!

எங்காவது தூர தேசம் போய் விடுங்கள் !

 

நாங்கள் உயிரோடு இருந்தால்....

நாளைக்கு எங்களுக்கு...,

கொள்ளி போட வந்து விடுங்கள்!

 

காணியை விற்றார்கள்,

கழுத்தில் கிடந்ததை விற்றார்கள்!

கைகளில் கிடந்ததை விற்றார்கள்!

காதுகளில் கிடந்ததையும் விற்றார்கள்!

 

நாளைய நம்பிக்கைகளை,

எஜன்சிகளிடம் கையளித்தார்கள்!

 

உலகப் படத்தையே காணாதவர்கள்..,

சில நாட்களுக்குள்...,

உலகம் முழுவதையுமே..,

உள்ளங் கையில் வைத்திருந்தார்கள்!

 

இன்றோ....,

கோவில்கள், கும்மாளங்கள்,

கும்பாபிஷேகங்கள்,,,,,,

கறிப் பாட்டிகள்...,சாறிப் பாட்டிகள்,

கொண்டாட்டங்கள்....எனக்,

கொடி கட்டிப் பறக்கிறார்கள்!

 

இடைக்கிடை....,

சந்திப்புகளின் போது...,

பியருக்குக் சொட்டைத் தீனியாய்..,

பாரைக் கருவாட்டுப் பொரியலாய்,

கருவேப்பிலைக் கொத்தாய்,

கறுத்தக் கொழும்பான் மாம்பழமாய்,

யாழ்ப்பாண நினைவுகள்...,

அவர்களுடன் வாழ்கின்றன!

 

கொஞ்சம் போரடித்தால்....,

ஊர்ப்பக்கம் ஒரு முறை..,

எட்டிப்பார்த்து......,

சோர்ந்து போன ஈகோக்களைக்,

கொஞ்சம் நிமிர்த்திய திருப்தியுடன்..,

நீட்டிய வால்களை ...,

மீண்டும் சுருட்டிக் கொள்வார்கள்!

 

பீஜித் தீவில் ...,

மொரிசியஸ் தீவில்...,

தென்னாபிரிக்காவில்...,

மலேசியாவில்...சிங்கப்பூரில்,

தமிழர்கள் வாழ்வது போல...,

அமெரிக்காவில்....கனடாவில்...,

இங்கிலாந்தில்....அவுஸ்திரேலியாவிலும்,

தமிழர்கள் வாழ்வார்கள்!..

புங்கையூரான்.... உங்கள் ஒரு கவிதையில்,  
முதல் பாதியில்... பெரும்  சோகத்தையும்,
மறு  பாதியில்... அந்த நிலைமையை மறந்த திமிர்த்தனத்தையும்....
வெளிப்படுத்தியமை... பலரையும் ஓரளவு  சிந்திக்க வைத்திருக்கும்  என்பதில் ஐயமில்லை.
நல்லதொரு  ஆக்கத்திற்கு... நன்றி புங்கை.
 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

உலகப் படத்தையே காணாதவர்கள்..,

சில நாட்களுக்குள்...,

உலகம் முழுவதையுமே..,

உள்ளங் கையில் வைத்திருந்தார்கள்!

 

இது என்னவோ உண்மைதான், ஆனால் இவ்வளவு விலை கொடுத்து இதை பெற்றிருக்க வேண்டாமோ என்று தோன்றுகிறது ....!

மிக நேர்த்தியான கவிதை புங்கை.....!  tw_blush:

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

உள்ளதை உண்மைய பறைசாற்றும் கவிதை. tw_thumbsup:

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
On 10/31/2017 at 2:50 AM, புங்கையூரன் said:

 

பீஜித் தீவில் ...,

மொரிசியஸ் தீவில்...,

தென்னாபிரிக்காவில்...,

மலேசியாவில்...சிங்கப்பூரில்,

தமிழர்கள் வாழ்வது போல...,

அமெரிக்காவில்....கனடாவில்...,

இங்கிலாந்தில்....அவுஸ்திரேலியாவிலும்,

தமிழர்கள் வாழ்வார்கள்!..

 

 

100 % உண்மை

நன்றி புங்கை அருமையான கவிதை .

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
On 10/30/2017 at 9:50 PM, புங்கையூரன் said:

Jaffna%20Exodus%203.jpg

 

பீஜித் தீவில் ...,

மொரிசியஸ் தீவில்...,

தென்னாபிரிக்காவில்...,

மலேசியாவில்...சிங்கப்பூரில்,

தமிழர்கள் வாழ்வது போல...,

அமெரிக்காவில்....கனடாவில்...,

இங்கிலாந்தில்....அவுஸ்திரேலியாவிலும்,

தமிழர்கள் வாழ்வார்கள்!..

 

 

எங்கு வாழ்ந்தாலும் தாய் மண்ணையும் மக்களையும் மறக்காமல் வாழ வேண்டும்.

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • உந்த நிலைபாட்டால காலம் தான் கடந்து போகுது. அவங்களுக்கு நிவாரணம் கிடைச்சபாடில்லை.
    • உலகம் தற்போது இரண்டு Pandemic (பண்டமிக்)ளை சமாளித்து வருகின்றது. ஒன்று மருத்தவ ரீதியான CoVID19 Pandemic மற்றையது அதன் விளைவாக வருகிற Economic impact of Pandemic உலகபொருளாதார மந்த நிலை மற்றும் தொடர் மந்த நிலை ( Economic depression). காரணம், இன்றைய உலகப்பொருளாதாரம் ஒரு சங்கிலி பின்னல். ஒன்று சரிந்தால் சில நாடுகள் ஆடுகள். பல நாடுகள் ஆட்டம் கண்டால், உலக பொருளாதாரம் படுக்கும் 😔.  பெரும்பாலும் இந்த பொருளாதார தாக்கமும் கொரோனா, அதன் பரவல், கட்டுப்படுத்தல் மற்றும் தடுத்தல், போலவே கணித்துச் சொல்ல முடியாத அளவுக்கு பெரும் நெருக்கடி நிலை ஒன்றுக்கு நம்மை இட்டுச் செல்லும்.‌"இப்போதைய வணிக நிலையை கணிக்க, பொருளாதார விளைவுகளை எதிர்வு கூற, நிதி நிலையின் உண்மையான மற்றும் எதிர்கால விளைவுகளை புரிந்து கொள்ள நமக்கு இன்னும் காலம் வேண்டும்" என்று கூறுகிறார் பொருளாதார நிபுணர் ஷில்லர். அவர் சொல்லுவது போல "வைரஸும் பொருளாதாரமும் வேறுபட்டவைகள், ஆனால் அவைகள் இன்று பிரிக்க முடியாத இரட்டையர்கள் போல மாறி இருக்கின்றன". இது தான் உண்மை. இவை நாமெல்லாம் அனுபவிக்கப் போகும் நெருக்கடியை கட்டியம் கூறுகின்ற வசனங்கள்.தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலை குறித்த கருத்துக்களுக்கெல்லாம் மகுடம் வைத்தாற் போல "இது போல் வேறு எந்த நெருக்கடியும் இல்லை”என்று சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா வே கவலைப் படுகிறார். "சர்வதேச நாணய நிதியத்தின் வரலாற்றில் இது போல உலகப் பொருளாதாரம் ஸ்தம்பிக்கப்படுவதை ஒரு போதும் நாங்கள் கண்டதில்லை,". "இது இதற்கு முன் ஏற்பட்ட "பெரும் மந்த நிலை நெருக்கடியை" (Great Depression)ஐ விட மோசமானது." என்று அழுது புலம்புகிறார், சூடமேற்றி சத்தியமும் செய்கிறார். "இது போல வெறொன்று இல்லை" என்பதே இங்கே ஹேலைட்.The Great Depression "பெரும் மந்தநிலை" என்பது இதற்கு முன் உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட மிகப்பெரும் பொருளாதார மந்த நிலையாகும், இது 1930 களில் அமெரிக்காவில் தொடங்கினாலும் பெரும்பாலான உலக நாடுகளில் 1929 இல் தொடங்கிய‌ இதன் தாக்கம் 1930 களின் பிற்பகுதி வரை நீடித்ததாக வரலாறு சொல்கிறது. இதுவே இரண்டாம் உலக மகா யுத்தத்திற்கு வழி சமைத்தது என கூறுபவர்களும் உள்ளார்கள். தனிநபர் வருமானம், வரி வருவாய், இலாபங்கள் மற்றும் பொருட்கள் சேவைகளின் விலைகள் போன்ற சர்வ பொருளியல் அம்சங்களும் பாரிய அளவில் வீழ்ச்சியை சந்தித்தன. சர்வதேச வர்த்தகம் 50% க்கும் மேலாக சரிந்தது. அமெரிக்காவில் மட்டும் வேலையின்மை 23% ஆக அதிகரித்தது. சில நாடுகளில் இது 33%தை தொட்டு நின்றது. அதாவது உலக மக்கள்  கையில் மூன்றில் ஒருவர் வேலையில்லாதவராக இருந்தார்! பயிர் விளைச்சல் விலைகள் சுமார் 60% வீழ்ச்சியடைந்ததால் விவசாய சமூகங்களும், கிராமப்புறங்களும் கூட இதனால் பாதிக்கப்பட்டன. இப்படி உலக பொருளாதாரம் இதற்கு முன்னரும் பின்னரும் பெரும் பின்னடைவைச் சந்தித்தது இல்லை எனும் அளவிற்கு அதன் தாக்கம் இருந்தது. ஆனால் வரலாறு எப்போதும் தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறது. மீண்டும் மீண்டும் சம்பவங்களை மீட்டிப் பார்த்துக் கொள்கிறது.
    • சைனீஸ்காரங்க பரப்பின வைரஸ் தொற்று கணக்கில வராது. அவங்களும் ராஜபக்ஸாக்களும் ஒன்னுக்குள்ள ஒன்னு ஆச்சே!
    • திருமணம் என்பது பொறுப்பு, சமூகக் கடமை என்பதை பெற்றவர்கள்தான் பிள்ளைகளுக்கு புரிய வைக்க வேண்டும். திருமணத்திற்கு முந்திய காதல்  என்பது மகிழ்ச்சியை , இன்பத்தை மட்டும் இலக்காகக் கொண்டது என்பதையும் திருமணம் இன்பம் துன்பம் பொறுப்பு மூன்றையும் சமனாகக் கொண்டது என்கின்ற வேறுபாட்டை பிள்ளைகளுக்கு ஊட்டவேண்டும்.